Book Back QuestionsTnpsc

இயக்க விதிகள் Book Back Questions 10th Science Lesson 1

10th Science Lesson 1

1] இயக்க விதிகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது.

(அ) பொருளின் எடை

(ஆ) கோளின் ஈர்ப்பு முடுக்கம்

(இ) பொருளின் நிறை

(ஈ) அ மற்றும் ஆ

2. கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது.

(அ) உந்த மாற்று வீதம்

(ஆ) விசை மற்றும் கால மாற்ற வீதம்

(இ) உந்த மாற்றம்

(ஈ) நிறை வீத மாற்றம்

3. கீழ்கண்டவற்றிள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது.

(அ) ஓய்வு நிலையிலுள்ள பொருளில்

(ஆ) இயக்க நிலையிலுள்ள பொருளில்

(இ) அ மற்றும் ஆ

(ஈ) சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்

4. உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு

(அ) கணத்தாக்கு விசை

(ஆ) முடுக்கம்

(இ) விசை

(ஈ) விசை மாற்ற வீதம்

5. விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது.

(அ) நீச்சல் போட்டி

(ஆ) டென்னிஸ்

(இ) சைக்கிள் பந்தயம்

(ஈ) ஹாக்கி

6. புவிஈர்ப்பு முடுக்கம் g ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.

(அ) cms-1

(ஆ) NKg-1

(இ) N m2 kg-1

(ஈ) cm2s-2

7. ஒரு கிலோகிராம் எடை என்பது _________ ற்கு சமமாகும்.

(அ) 9.8 டைன்

(ஆ) 9.8 x 104 N

(இ) 98 x 104 டைன்

(ஈ) 980 டைன்

8. புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.

(அ) 4 M

(ஆ) 2 M

(இ) M/4

(ஈ) M

9. நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?

(அ) 50% குறையும்

(ஆ) 50% அதிகரிக்கும்

(இ) 25% குறையும்

(ஈ) 300% அதிகரிக்கும்

10. ராக்கெட் ஏவுதலில் __________ விதிகள் பயன்படுத்தப்படுகிறது.

(அ) நியூட்டனின் மூன்றாம் விதி

(ஆ) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி

(இ) நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு

(ஈ) அ மற்றும் இ

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு _________ தேவை.

2. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் திடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன் நோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு ___________ மூலம் விளக்கப்படுகிறது.

3. மரபு ரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் ________ குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் __________ குறியிலும் குறிக்கப்படுகிறது.

4. மகிழுந்தின் சக்கரத்தின் சுழற்சி வேகத்தினை மாற்ற __________ பயன்படுகிறது.

5. 100 கி.கி. நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் __________ அளவாக இருக்கும்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. துகள் அமைப்பில் ஏற்படும் நேர்க்கோட்டு உந்தம் எப்போதும் மாறிலியாகும்.

2. பொருளொன்றின் தோற்ற எடை எப்போதும் அதன் உண்மையான எடைக்கு சமமாக இருக்கும்.

3. பொருட்களின் எடை நிலநடுக்கோட்டுப்பகுதியில் பெருமமாகவும், துருவப்பகுதியில் குறைவாகவும் இருக்கும்.

4. திருகு மறை (Screw) ஒன்றினை குறைந்த கைப்பிடி உள்ள திருகுக்கறடு (spanner) வைத்து திருகுதல், நீளமான கைப்பிடி கொண்ட திருகுக்குறடினை வைத்து திருகுதலை விட எளிதானதாகும்.

5. புவியினை சுற்றிவரும் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர், புவிஈர்ப்பு விசை இல்லாததால் எடையிழப்பை உணர்கிறார்.

பொருத்துக:

பகுதி I பகுதி II

(அ) நியூட்டனின் முதல் விதி – ராக்கெட் ஏவுதலில் பயன்படுகிறது

(ஆ) நியூட்டனின் இரண்டாம் விதி – பொருட்களின் சமநிலை

(இ) நியூட்டனின் மூன்றாம் விதி – விசையின் விதி

(ஈ) நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி – பறவை பறத்தலில் பயன்படுகிறது

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

(ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.

(இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு

(ஈ) கூற்று தவறானது. எனினும் காரணம் சரி.

1. கூற்று: வலஞ்சுழி திருப்புத்திறன்களின் மொத்த மதிப்பு, இடஞ்சுழி திருப்புதிறன்களின் மொத்த மதிப்பிற்கு சமமானதாக இருக்கும்.

காரணம்: உந்த அழிவின்மை விதி என்பது புறவிசை மதிப்பு சுழியாக உள்ளபோது மட்டுமே சரியானதாக இருக்கும்.

2. கூற்று: ‘g’ ன் மதிப்பு புவிப்பரப்பில் இருந்து உயர செல்லவும் புவிப்பரப்பிற்கு கீழே செல்லவும் குறையும்,

காரணம்: ‘g’ மதிப்பானது புவிப்பரப்பில் பொருளின் நிறையினைச் சார்ந்து அமைகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் : (விடைகள்)

1. பொருளின் நிறை, 2. உந்த மாற்றம், 3. அ மற்றும் ஆ, 4. விசை, 5.சைக்கிள் பந்தயம்

6. (NKg-1), 7. (98×104), 8. M 9. (300% அதிகரிக்கும்), 10. அ மற்றும் இ

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. விசை, 2. நிலைமம், 3. எதிர், நேர், 4. பற்சக்கரம், 5. 980 N

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக.

1. தவறு

சரியான விடை: புறவிசை செயல்படாத போது மட்டும் அமைப்பின் நேர்க்கோட்டு உந்தம் மாறிலி ஆகும்.

2. தவறு

சரியான விடை: பொருளின் தோற்ற எடை எப்போதும் உண்மை எடைக்கு சமமாக இருக்காது.

3. தவறு

சரியான விடை: பொருட்களின் எடை நிலநடுக்கோட்டு பகுதியில் குறைவாகவும், துருவப்பகுதியில் அதிகமாகவும் இருக்கும்.

4. தவறு

சரியான விடை: நீளமான கைப்பிடி கொண்ட திருக்குறடு வைத்து திருகுதல் குறைந்த கைப்பிடி உள்ள திருகுக்குறடு வைத்து திருகுதலை விட எளிது.

5. தவறு

சரியான விடை: புவியை சுற்றிவரும் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர் மிகமிக குறைந்த புவிஈர்ப்பு விசையால் எடையிழப்பை உணர்கிறார்.

பொருத்துக: (விடைகள்)

பகுதி I பகுதி II

(அ) நியூட்டனின் முதல் விதி – பொருட்களின் சமநிலை

(ஆ) நியூட்டனின் இரண்டாம் விதி – விசையின் விதி

(இ) நியூட்டனின் மூன்றாம் விதி – பறவை பறத்தலில் பயன்படுகிறது

(ஈ) நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி – ராக்கெட் ஏவுதலில் பயன்படுகிறது

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியான கூற்றினை தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.

2. கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!