Book Back QuestionsTnpsc

இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் Book Back Questions 10th Social Science Lesson 2

10th Social Science Lesson 2

2] இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

தங்க மதிப்பீட்டு அளவு என்பது ஒரு நாணயமுறை. இதில் ஒரு நாட்டினுடைய நாணயம் அல்லது காகிதப்பணம் தங்கத்தோடு நேரடித் தொடர்புடைய ஒரு மதிப்பினைப் பெற்றிருக்கும்.

பாசிஸம் என்பது தீவிர ஆதிக்க மனப்பான்மை கொண்ட அதிதீவிர தேசியவாதத்தின் ஓர் வடிவமாகும். சர்வாதிகார வல்லமையும் எதிர்ப்பை வன்முறை கொண்டு அடக்குவதும் சமூகத்தையும், பொருளாதாரத்தையும் வலுவான மத்திய அதிகாரத்தின் கீழ் வைத்திருப்பதும் இதன் பண்புகளாகும். இது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் ஐரோப்பாவில் முக்கியத்துவம் பெற்றது.

சமூக ஜனநாயகக் கட்சியானது ஜெர்மன் பொதுத் தொழிலாளர் கழகம் என்ற பெயரில் 1863 மே 23இல் லிப்சிக் நகரத்தில் நிறுவப்பட்டது. அதனை நிறுவியவர் பெர்டினன்ட் லாஸ்ஸல்லி என்பவராவார். 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியைச் சேர்ந்த ஜெர்மானிய மேட்டுக் குடியினர் ஒரு சோசலிசக் கட்சியின் இருப்பையே புதிதாக ஒன்றிணைக்கப்பட்ட ரெய்க்கின் (குடியரசு) பாதுகாப்புக்கும் உறுதிப்பாட்டிற்கும் ஒரு அச்சுறுத்தலாகக் கருதினர். எனவே பிஸ்மார்க் 1878 முதல் 1890 வரை இக்கட்சியைத் தடை செய்திருந்தார். 1945இல் ஹிட்லரின் மூன்றாவது ரெய்க்கின் (குடியரசின்) வீழ்ச்சியைத் தொடர்ந்து இக்கட்சி புத்தெழுச்சி பெற்றது. ஹிட்லரை எதிர்த்த கட்சி என்ற பெயருடன் வெய்மர் காலத்திலிருந்து செயல்படும் ஒரே கட்சி இதுவேயாகும்.

காலனிய நீக்கம் என்பது காலனியாதிக்க சக்திகள் காலனிகள் மீது கொண்டுள்ள நிறுவனம் மற்றும் சட்டம் சார்ந்த கட்டுப்பாடுகளைச் சொந்த தேசிய அரசுகளிடம் வழங்குவதாகும்.

ஹோ சி மின் 1890இல் டோங்கிங்கில் பிறந்தார். தனது 21ஆவது வயதில் அவர் ஐரோப்பா சென்றார். லண்டன் உணவு விடுதியொன்றில் சமையல் கலைஞராய்ப் பணியாற்றிய பின் அவர் பாரிஸ் சென்றார். பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாமின் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டினார். தினசரிகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் குறிப்பாக “விசாரணையில் பிரெஞ்சு காலனியாதிக்கம்” எனும் சிற்றேடு அவரை நன்கறியப்பட்ட வியட்நாமிய தேசியவாதி ஆக்கியது. 1921இல் ஹோ சி மின் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மாஸ்கோ சென்று புரட்சியின் நுட்பங்களைக் கற்றார். 1925இல் “புரட்சிகர இளைஞர் இயக்கம்” எனும் அமைப்பை நிறுவினார்.

தென்னாப்பிரிக்காவில் இனஒதுக்கல்: இன ஒதுக்கல் என்பதன் பொருள் தனிமைப்படுத்துதல் அல்லது ஒதுக்கி வைத்தல் என்பதாகும். இது 1947இல் தேசிய வாதக் கட்சியின் கொள்கையாயிற்று. 1950 முதல் வரிசையாகப் பல சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. ஒட்டுமொத்த நாடும் பல்வேறு இடங்களுக்கான தனித்தனிப் பகுதிகளாக பிரிக்கப்பட்டன. வெள்ளை இனத்தவருக்கும் வெள்ளையரல்லாத இனத்தவருக்கும் இடையில் திருமணங்கள் தடைசெய்யப்பட்டன. ஏறத்தாழ அனைத்துப் பள்ளிகளும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் வெள்ளையருக்கு வழங்கப்படும் கல்வியில் இருந்து மாறுபட்ட கல்வியை ஏனைய ஆப்பிரிக்கர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. பல்கலைக்கழகம் கல்வியும் பிரித்து வைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் வெள்ளை கறுப்பின மக்களுக்கிடையிலான அரசியல் சமத்துவம் என்பது மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும் கறுப்பின மக்களின் ஆட்சியைக் குறிக்கும் உண்மையின் அடிப்படையிலேயே இன ஒதுக்கல் உருவானது. நெல்சன் மண்டேலா அரசியல் வானில் பிரகாசிக்கத் தொடங்கிப் பொது மக்களின் பேராதரவைப் பெற்ற போது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சித் தடை செய்யப்பட்டு நெல்சன் மண்டேலா சிறை வைக்கப்பட்டார். உலக அளவிலான எதிர்ப்பலைகள் தென் ஆப்பிரிக்காவில் இனவாத ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர உதவியது. 1990இல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டு மண்டேலா 27 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் ஆப்பிரிக்க மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. தேர்தலில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பினக் குடியரசுத் தலைவரானார். இன ஒதுக்கல் கொள்கை ஒரு முடிவுக்கு வந்தாலும் ஆப்பிரிக்காவின் பொருளாதார மண்டல முழு ஆதிக்கமும் வெள்ளை இனத்தவரிடமே உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேறிகளின் வம்சாவளியினரே ஆப்பிரிக்கநேர்கள் என்றும் அழைக்கப்பட்ட போயர்கள் ஆவர். இவர்களது மொழி ஆப்பிரிக்கான்ஸ்.

டாலர் ஏகாதிபத்தியம்: இச்சொல் தொலை தூர நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்வதன் மூலம் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவும், தக்க வைத்துக் கொள்ளவும், அமெரிக்கா பின்பற்றியக் கொள்கையை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

(அ) ஜெர்மனி

(ஆ) ரஷ்யா

(இ) போப்

(ஈ) ஸ்பெயின்

2. யாருடைய ஆக்கிரமிப்போ மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?

(அ) ஹெர்மன் கோர்ட்ஸ்

(ஆ) பிரான்சிஸ்கோ பிசாரோ

(இ) தௌசெயின்ட் லாவெர்ட்யூர்

(ஈ) முதலாம் பெட்ரோ

3. பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டனர்?

(அ) ஆங்கிலேயர்

(ஆ) ஸ்பானியர்

(இ) ரஷ்யர்

(ஈ) பிரெஞ்சுக்காரர்

4. லத்தீன் அமெரிக்காவுடன் “அண்டை நாட்டுடன் நட்புறவு” எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?

(அ) ரூஸ்வெல்ட்

(ஆ) ட்ரூமன்

(இ) உட்ரோவில்சன்

(ஈ) ஐசனோவர்

5. உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?

(அ) ஐரோப்பா

(ஆ) லத்தீன் அமெரிக்கா

(இ) இந்தியா

(ஈ) சீனா

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சமூக ஜனநாயகக் கட்சியை நிறுவியவர் ___________

2. நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர் ____________

3. வியட்நாம் தேசியவாதிகள் கட்சி ____________ இல் நிறுவப்பட்டது.

4. நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை ____________ என அழைக்கப்பட்டது.

5. தென்னாப்பிரிக்க ஒன்றியம் ___________ ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.

6. ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா ____________ ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

7. போயர்கள் ___________ என்றும் அழைக்கப்பட்டனர்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. i) முதல் உலகப்போரின் போது ஆஸ்திரியாவை தெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட வைப்பதே இத்தாலியின் முக்கியக் கடமையாக இருந்தது.

ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தே ஜெர்மனி பாசிசத்தைக் கைக்கொண்டது.

iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாளில் ஏற்பட்டது.

iv) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

(அ) i, ii ஆகியவை சரி

(ஆ) iii சரி

(இ) iii, iv ஆகியவை சரி

(ஈ) i, ii, iii ஆகியவை சரி

3. கூற்று: தற்காப்புப் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தியப் பொருளாதார தேசியம் எனும் புதிய அலையால் உலக வணிகம் பாதிக்கப்பட்டது.

காரணம்: அமெரிக்கா, கடன்பட்ட நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்ய விருப்பமில்லாமல் இருந்ததனால் இந்நிலை உண்டானது.

(அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி

(ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

(இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு

(ஈ) காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருந்தவில்லை.

3. கூற்று: 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாடு காலனியாதிக்க சக்திகள் ஆப்பிரிக்காவைத் தங்களின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தது.

காரணம்: ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்.

(அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி

(ஆ) கூற்று சரி ஆனால் காரணம் சரியான விளக்கமல்ல

(இ) கூற்று காரணம் ஆகிய இரண்டுமே தவறு

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் கூற்றுடன் பொருந்தவில்லை.

பொருத்துக:

1. டிரான்ஸ்வால் – ஜெர்மனி

2. டோங்கில் – ஹிட்லர்

3. ஹின்டன்பர்க் – இத்தாலி

4. மூன்றாம் ரெய்க் – தங்கம்

5. மாட்டியோட்டி – கொரில்லா நடவடிக்கைகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. போப் 2. ஹெர்மன் கோர்ட்ஸ் 3. ஸ்பானியர் 4. ரூஸ்வெல்ட்

5. லத்தீன் அமெரிக்கா

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. பெர்டினண்ட் லாஸ்ஸல்லி 2. ஜோசப் கோயபெல்ஸ் 3. (கி. பி. 1927) 4. கெஸ்டபோ

5. (27) 6. ஆப்பிரிக்க நேர்கள்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. i, ii, iii ஆகியவை சரி

2. கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

3. கூற்று, காரணம் இரண்டுமே சரி

பொருத்துக: (விடைகள்)

1. டிரான்ஸ்வால் – தங்கம்

2. டோங்கிங் – கொரில்லா நடவடிக்கைகள்

3. ஹின்டன்பர்க் – ஜெர்மனி

4. மூன்றாம் ரெய்க் – ஹில்டன்

5. மாட்டியோட்டி – இத்தாலி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!