Book Back QuestionsTnpsc

உடல் நலமும், சுகாதாரமும் Book Back Questions 7th Science Lesson 6

7th Science Lesson 6

6] உடல் நலமும், சுகாதாரமும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

டெங்கு காய்ச்சல் வைரஸ் வகையைச் சேர்ந்த DEN – 1, 2 வைரஸ் (இது பிலெவி வைரஸ் வகையைச் சார்ந்தது), ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுக்களினால் டெங்கு பரவுகிறது. இது இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இந்த கொசுக்கள் இருக்கும் இடத்திலிருந்து அதிகபட்சமாக 50-100 மீட்டர் சுற்றளவைச் சுற்றி இருப்பவர்களுக்கு வரக்கூடியது.

தடுப்பூசி: ஒரு குறிப்பிட்ட வியாதிக்கெதிராக நோய்த் தடுப்பாற்றலை உருவாக்கி, அந்நோய்க்கெதிராகப் போராட நம் உடலைத் தயார் செய்தலே தடுப்பூசி போடுதலின் நோக்கமாகும். தடுக்கக் கூடிய நோய்களிலிருந்து பாதுகாக்க முன்கூட்டியே தடுப்பூசி (BCG, போலியோ, MMR) குழந்தைப் பருவத்திலேயே கொடுக்கப்படுகிறது.

லுகோடெர்மா தோலில் சில பகுதி அல்லது மொத்தப் பகுதியில் நிறமி (மெலனின் நிறமி) இழப்புகளால் ஏற்படும் ஒரு தொற்றா நோயாகும். இந்த நிலை அனைத்து வயது, பாலினம் மற்றும் இனத்தைப் பாதிக்கிறது. இதற்கு எவ்விதச் சிகிச்சையும் இல்லை, இது தொடுதல், உணவு பகிர்தல் மற்றும் ஒன்றாக உட்கார்வதால் பரவாது.

இரும்புச் சத்தை மாத்திரைகளாக வாய்வழியாக உட்கொள்ளலாம். ஊசிகளாக எடுப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான் என்பது எதைக் குறிக்கிறது.

(அ) சுகாதாரம்

(ஆ) உடல்நலம்

(இ) சுத்தம்

(ஈ) செல்வம்

2. தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் நல்லது தான்.

(அ) மகிழ்ச்சி

(ஆ) ஓய்வு

(இ) மனம்

(ஈ) சுற்றுச் சூழல்

3. நாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்.

(அ) திறந்த

(ஆ) மூடியது

(இ) சுத்தமான

(ஈ) அசுத்தமான

3. புகையிலை மெல்லுவதால் ஏற்படுவது

(அ) இரத்த சோகை

(ஆ) பற்குழிகள்

(இ) காசநோய்

(ஈ) நிமோனியா

4. முதலுதவி என்பதன் நோக்கம்

(அ) பணம் சேமிக்க

(ஆ) வடுக்களைத் தடுக்க

(இ) மருத்துவப் பராமரிப்பு தடுக்க

(ஈ) வலி நிவாரணம்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களை __________ என அழைக்கிறோம்.

2. நான் பச்சை நிறத்தில் குப்பைகளோடு இருக்கக்கூடிய பெட்டி. நான் யார்? ___________

3. கண் உலகினைக் காணப் பயன்படும் ___________ கருதப்படுகின்றன.

4. மயிர்க்கால்கள் முடியை மென்மையாக வைத்திருக்க ___________ உற்பத்தி செய்கிறது.

5. காசநோய் என்பது _________ பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. அனைத்து உணவுகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

2. சின்னம்மை லுகோடெர்மா என்றும் அழைக்கப்படுகிறது.

3. வயிற்றுப்புண் ஒரு தொற்றா நோய்.

4. ரேபிஸ் இறப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு அபாயகரமான நோயாகும்.

5. முதல் நிலை தீக்காயத்தில் முழுத்தோல் பகுதியும் சேதமடைகிறது.

பொருத்துக:

1. ராபிஸ் – சால்மோனெல்லா

2. காலரா – மஞ்சள் நிற சிறுநீர்

3. காசநோய் – கால் தசை

4. ஹெபடைடிஸ் – ஹைட்ரோபோபியா

5. டைபாயிடு – மைக்கோபாக்டீரியம்

ஒப்புமை தருக:

1. முதல் நிலைத் தீக்காயம்: மேற்புறத்தோல்:: இரண்டாம் நிலைத் தீக்காயம்: ____________

2. டைபாய்டு: பாக்டீரியா:: ஹெபடைடிஸ்: ______________

3. காசநோய்: காற்று:: காலரா: ______________

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. உறுதிப்படுத்துதல் (A): வாய் சுகாதாரம் நன்றாக உள்ளது.

காரணம் (R): நல்ல பற்கள் மற்றும் ஆரோக்கியமான திசுக்களால் சூழப்பட்ட ஈறுகள்.

(அ) A மற்றும் R இரண்டும் சரியானவை

(ஆ) A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை

(இ) A சரி R ஆனால் தவறானவை

(ஈ) A தவறு ஆனால் R சரியானவை.

2. உறுதிப்படுத்துதல் (A): சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.

காரணம் (R): உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல், மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன.

(அ) A மற்றும் R இரண்டும் சரியானவை

(ஆ) A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை

(இ) A சரி R ஆனால் தவறானவை

(ஈ) A தவறு ஆனால் R சரியானவை.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. உடல்நலம் 2. மனம் 3. சுத்தமான 4. பற்குழிகள் 5. வலி நிவாரணம்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. சமூகம் 2. மட்கும் குப்பை 3. சாளரங்களாகக் 4. எண்ணெய்

5. மைக்ரோபாக்டீரியம் டியூபர்குலேயெ

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக. தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக: (விடைகள்)

1. சரி

2. தவறு

சரியான விடை: சின்னம்மை வாரிசெல்லா என்று அழைக்கப்படுகிறது.

3. சரி

4. சரி

5. தவறு

சரியான விடை: முதல் நிலை தீக்காயத்தில் தோலின் வெளிப்புற அடுக்கு(மேல்புறத்தோல்) மட்டும் சேதமடைகிறது.

பொருத்துக: (விடைகள்)

1. ரேபிஸ் – ஹைட்ரோபோபியா

2. காலரா – கால் தசை

3. காசநோய் – மைக்கோபாக்டீரியம்

4. ஹைபடைடிஸ் – மஞ்சள்நிற சிறுநீர்

5. டைபாயிடு – சால்மோனெல்லா

ஒப்புமை தருக: (விடைகள்)

1. உட்தோல் டெர்மிஸ் 2. வைரஸ் 3. உணவு (அ) நீர்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து. சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!