MCQ Questions

உற்பத்தி 7th Social Science Lesson 8 Questions in Tamil

7th Social Science Lesson 8 Questions in Tamil

8. உற்பத்தி

1. நுகர்வோரின் பயன்பாட்டுக்காக, மூலப்பொருளையும், மூலப்பொருள் அல்லாதனவற்றையும் ஒன்றிணைத்து, ஒரு பொருளை உருவாக்கும் செயல் _________ எனப்படும்.

A) நுகர்வு

B) உற்பத்தி

C) இடைவினையாற்றல்

D) உள்ளீடு

விடை மற்றும் விளக்கம்

B) உற்பத்தி

(குறிப்பு: உற்பத்தி, ஒவ்வொருவரின் தேவைக்கேற்பச் சிறந்த சேவையையும் மதிப்பையும் அளிப்பதில் இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது.)

2. விளைபொருளாகிய பருத்தியைக் கொண்டு ஆடைகள் உருவாக்கப்படுவது எவ்வகையான பயன்பாடு?

A) இடப் பயன்பாடு

B) காலப் பயன்பாடு

C) வடிவப் பயன்பாடு

D) மூலப்பொருள் பயன்பாடு

விடை மற்றும் விளக்கம்

C) வடிவப் பயன்பாடு

(குறிப்பு: ஒரு விளைபொருளின் வடிவம் மாற்றப்படும்போது, அதன் பயன்பாடு மிகுதியாகிறது. இவ்வகைப் பயன்பாடு வடிவப் பயன்பாடு எனப்படும்.)

3. பொருளாதாரத்தில் __________ எனும் சொல், மாற்றத்தக்க மதிப்புடைய பொருள்களையும் சேவைகளையும் உருவாக்குவதைக் குறிக்கும்.

A) மூலதனம்

B) விற்பனை

C) உற்பத்தி

D) நுகர்வு

விடை மற்றும் விளக்கம்

C) உற்பத்தி

(குறிப்பு: பயன்பாட்டை உருவாக்குதலே உற்பத்தியாகும். பயன்பாடு என்பது, நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும்.)

4. பயன்பாடு அதன் இயல்பைப் பொருத்து எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விடை மற்றும் விளக்கம்

B) 3

(குறிப்பு: வகைகள் – வடிவப் பயன்பாடு, இடப் பயன்பாடு, காலப் பயன்பாடு)

5. இந்தியாவில் ________ பொருளாதார நிலை காணப்படுகிறது.

A) முதலாளித்துவ பொருளாதாரம்

B) காலனி ஆதிக்க பொருளாதாரம்

C) கலப்பு பொருளாதாரம்

D) தனியார் துறை பொருளாதாரம்

விடை மற்றும் விளக்கம்

C) கலப்பு பொருளாதாரம்

(குறிப்பு: கலப்பு பொருளாதாரத்தில் தனியார் துறை நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன.)

6. விளைபொருளான அரிசி தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படும்போது, அதன் தேவையும் பயன்பாடும் அதிகரிப்பது _________ பயன்பாடு.

A) இடப் பயன்பாடு

B) காலப் பயன்பாடு

C) வடிவப் பயன்பாடு

D) மூலப்பொருள் பயன்பாடு

விடை மற்றும் விளக்கம்

A) இடப் பயன்பாடு

(குறிப்பு: ஒரு விளைபொருள், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும் போது அதன் பயன்பாடு மிகுதியாகிறது. இவ்வகைப் பயன்பாடு இடப்பயன்பாடு எனப்படும்.)

7. ஒரு விளைபொருளை எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைக்கும்போது, அதன் பயன்பாடு மிகுகிறது. இது ________ பயன்பாடு எனப்படும்.

A) இடப் பயன்பாடு

B) காலப் பயன்பாடு

C) வடிவப் பயன்பாடு

D) மூலப்பொருள் பயன்பாடு

விடை மற்றும் விளக்கம்

B) காலப் பயன்பாடு

(குறிப்பு: நுகர்வோர்களால் ஆண்டு முழுவதும் பயன்படுத்தக்கூடிய உணவுப் பயிர்களான நெல், கோதுமை போன்றவற்றைச் சேமித்து வைப்பதால், அவற்றின் தேவையும் பயன்பாடும் மிகுதியாகின்றன. இது காலப்பயன்பாட்டிற்கு எடுத்துக்காட்டாகும்.)

8. இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை, நேரடியாகப் பயன்படுத்திச் செய்கின்ற செயல்பாடுகளுக்குட்பட்ட நிலையை __________ என்கிறோம்.

1. முதன்மை நிலை உற்பத்தி

2. இரண்டாம் நிலை உற்பத்தி

3. மூன்றாம் நிலை உற்பத்தி

4. வேளாண்மைத் துறை உற்பத்தி

A) 1, 4

B) 3,4

C) 1 மட்டும்

D) 4 மட்டும்

விடை மற்றும் விளக்கம்

A) 1, 4

(குறிப்பு: முதன்மை நிலையில் வேளாண்மைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால், இதனை வேளாண்மைத் துறை உற்பத்தி எனவும் கூறுவர்.)

9. கீழ்க்கண்டவற்றுள் முதன்மை நிலை உற்பத்தியில் அடங்காதது எது?

A) மீன் பிடித்தல்

B) சுரங்கத் தொழில்

C) எண்ணெய் வளங்களைப் பிரித்தெடுத்தல்

D) பருத்தித் தொழிற்சாலை

விடை மற்றும் விளக்கம்

D) பருத்தித் தொழிற்சாலை

(குறிப்பு: வேளாண்மையும் அதனுடன் தொடர்புடைய செயல்கள், வளங்களைப் பாதுகாத்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகள், பூமியின் மேற்பரப்பிலிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் இயற்கை வளங்களைப் பிரித்தெடுக்கின்றன.)

10. இரண்டாம் நிலை உற்பத்தியில் _________க்கு முதலிடம் அளிக்கப்படுகிறது.

A) போக்குவரத்து

B) ஏற்றுமதி

C) சேவை

D) தொழில்

விடை மற்றும் விளக்கம்

D) தொழில்

(குறிப்பு: முதன்மை நிலையின் உற்பத்திப் பொருள்களை மூலப்பொருள்களாகப் பயன்படுத்திப் புதிய உற்பத்திப் பொருள்களாக உருவாக்கும் செயல்பாட்டை இரண்டாம் நிலை உற்பத்தி என்கிறோம். என்கிறோம். இது தொழில்துறை உற்பத்தி எனவும் அழைக்கப்படுகிறது.)

11. கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் நிலை உற்பத்தியில் அடங்கும் தொழில்கள் எவை?

1. மாவிலிருந்து ரொட்டி தயாரித்தல்

2. இரும்புத் தாதுவிலிருந்து பயன்படக்கூடிய பொருள்களைத் தயாரித்தல்

3. பொறியியல் துறை சார்ந்த பணிகள்

4. போக்குவரத்து

A) அனைத்தும்

B) 1, 2

C) 1, 2, 4

D) 1, 2, 3

விடை மற்றும் விளக்கம்

D) 1, 2, 3

(குறிப்பு: நான்கு சக்கர வண்டிகள், ஆடைகள், இரசாயனப் பொருள்கள் போன்றவற்றைத் தயாரித்தலும், கட்டப் பணிகள் சார்ந்த தொழில்களும் இரண்டாம் நிலை உற்பத்தியில் அடங்கும்.)

12. மூன்றாம் நிலை உற்பத்தியில் _________க்கு முதலிடம் அளிக்கப்படுகிறது.

A) போக்குவரத்து

B) ஏற்றுமதி

C) சேவை

D) தொழில்

விடை மற்றும் விளக்கம்

C) சேவை

(குறிப்பு: முதன்மை நிலை, இரண்டாம் நிலைகளின் உற்பத்திப் பொருள்களைச் சேகரிப்பதும் பரிமாற்றம் செய்வதும் மூன்றாம் நிலை உற்பத்தியாகும். இது சேவைத்துறை உற்பத்தி எனவும் அழைக்கப்படுகிறது.)

13. கீழ்க்கண்டவற்றுள் சேவைத் துறை உற்பத்தியில் அடங்கும் நிறுவனங்கள் எவை?

1. வாணிகம் 2. காப்பீடு 3. போக்குவரத்து

4. சட்டம் 5. உடல்நலப் பாதுகாப்பு

A) அனைத்தும்

B) 1, 2, 4

C) 1, 3, 5

D) 1, 2, 4, 5

விடை மற்றும் விளக்கம்

A) அனைத்தும்

(குறிப்பு: வாணிகம், வங்கி, காப்பீடு, போக்குவரத்து, செய்தித் தொடர்பு, சட்டம், நிருவாகம், கல்வி, உடல் நலப் பாதுகாப்பு போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் சேவைத்துறை உற்பத்தி நிறுவனங்களாக விளங்குகின்றன.)

14. இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பவை ____________ துறை உற்பத்திகள் ஆகும்.

A) முதல் நிலை உற்பத்தி

B) இரண்டாம் நிலை உற்பத்தி

C) மூன்றாம் நிலை உற்பத்தி

D) வேளாண்மைத் துறை உற்பத்தி

விடை மற்றும் விளக்கம்

விடை: C) மூன்றாம் நிலை உற்பத்தி

15. மனிதனின் செயல்பாடுகள் _________ கூறுகளில் உள்ளடங்கியுள்ளன.

A) 2

B) 3

C) 4

D) 5

விடை மற்றும் விளக்கம்

A) 2

(குறிப்பு: மனித செயல்பாடுகள் பொருளை உற்பத்தி செய்தல், நுகர்தல் என்னும் இரு கூறுகளில் உள்ளடங்கியுள்ளன.)

16. ஒரு பொருளின் உற்பத்திக்கு உதவுகின்ற காரணிகள் கீழ்க்கண்ட எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

1. மூலதனம் 2. நிலம் 3. உழைப்பு

4. முதலீடு 5. வருமானம்

A) 1, 2, 3

B) 2, 3, 4

C) 1, 2, 5

D) 2, 3, 5

விடை மற்றும் விளக்கம்

B) 2, 3, 4

(குறிப்பு: உற்பத்தியின்போது, பொருள்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றம் செய்யப்படுகின்றன. உற்பத்திக்கு காரணமாக அமையும் உள்ளீட்டுப் பொருள்கள் யாவும் வெளியீட்டுப் பொருள்களாக மாற்றப்படுகின்றன.)

17. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கு தேவைப்படும் நான்காவதாக காரணி

A) சந்தை

B) உழைப்பு

C) இயற்கை

D) அமைப்பு

விடை மற்றும் விளக்கம்

D) அமைப்பு

(குறிப்பு: பண்டங்களும் பொருள்களும் தாமாகவே உற்பத்தி செய்ய முடியாது. இவற்றை உற்பத்தி செய்வதற்கு பொறுப்பு ஏற்கும் ஒரு காரணியே அமைப்பு அல்லது நிறுவனமாகும்.)

18. உற்பத்திக் காரணிகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?

A) 2

B) 3

C) 4

D) 5

விடை மற்றும் விளக்கம்

A) 2

(குறிப்பு: உற்பத்திக் காரணிகளை முதல்நிலை உற்பத்திக் காரணிகள் எனவும் மூலப்பொருள்களிலிருந்து பெறப்பட்ட உற்பத்திக் காரணிகள் எனவும் இரண்டாகப் பிரிக்கலாம்.)

19. கீழ்க்கண்டவற்றுள் முதல்நிலை உற்பத்திக் காரணிகளில் அடங்குபவை எவை?

1. நிலம் 2. உழைப்பு 3. முதலீடு 4. அமைப்பு

A) 1, 2

B) 2, 3

C) 1, 3

D) 1, 4

விடை மற்றும் விளக்கம்

A) 1, 2

(குறிப்பு: முதல்நிலை உற்பத்திக் காரணிகள் இரண்டும் இயற்கையின் கொடை. இவற்றின் துணையின்றி எந்தப் பொருள்களையும் நம்மால் உற்பத்தி செய்ய முடியாது.)

20. கீழ்க்கண்டவற்றுள் மூலப்பொருள்களிலிருந்து பெறப்பட்ட உற்பத்திக் காரணிகள் எவை?

1. நிலம் 2. உழைப்பு 3. முதலீடு 4. அமைப்பு

A) 1, 2

B) 2, 3

C) 1, 3

D) 3, 4

விடை மற்றும் விளக்கம்

D) 3, 4

(குறிப்பு: முதலீடு, அமைப்பு ஆகிய இரண்டு காரணிகளும் முதல்நிலை உற்பத்திக் காரணிகளுடன் ஒன்றிணைந்து செயல்படும்போது, மொத்த உற்பத்தியானது அதிகரிக்கிறது.)

21. இயற்கை வளங்கள் அனைத்தையும் அல்லது இயற்கை மனிதனுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கும் கொடை அனைத்தையும் குறிக்கும் உற்பத்திக் காரணி

A) நிலம்

B) உழைப்பு

C) முதலீடு

D) நிறுவனம்

விடை மற்றும் விளக்கம்

A) நிலம்

(குறிப்பு: நிலப்பரப்பு, நீர், காற்று, கனிம வளங்கள், காடுகள், ஆறுகள், ஏரிகள், கடல்கள், மலைகள், தட்பவெப்பநிலை, காலநிலை ஆகிய அனைத்தும் நிலம் என்ற சொல்லுக்குள் அடங்குகின்றன.)

22. குறிப்பிட்ட நிலப்பகுதி அமைந்துள்ள இடத்தில் கிடைக்கும் __________ யைப் பொருத்து, நிலத்தின் வடிவம் மாற்றமடைகிறது.

A) உழைப்பு

B) மூலதனம்

C) வளங்கள்

D) கல்வி

விடை மற்றும் விளக்கம்

C) வளங்கள்

(குறிப்பு: (எ.கா) வேளாண்மை செய்யும்போது விளை நிலமாகவும் மனை விற்பனை செய்யும்போது, வீட்டு நிலமாகவும் மாறுகிறது.)

23. கூற்று 1: நிலம் என்ற உற்பத்திக் காரணியைப் பெறுவதற்கு மனிதன் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை.

கூற்று 2: நிலம் மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடங்குவதற்கு முன்பே தோன்றியதாகும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

விடை மற்றும் விளக்கம்

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

(குறிப்பு: நிலமானது மனித உழைப்பினால் உருவானதன்று.)

24. கூற்று: நிலத்தின் அளிப்பு என்றென்றும் மாறாததாக, அழிவுற்றதாக உள்ளது.

காரணம்: மனிதன் மேற்கொள்ளும் முயற்சியால் நிலத்தின் அளவை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி

D) கூற்று, காரணம் இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

C) கூற்று, காரணம் இரண்டும் சரி

(குறிப்பு:நிலத்தின் செழிப்பை உயர்த்த முடியுமே தவிர, அதன் அளவை மாற்றமுடியாது.)

25. பண்டங்களை உற்பத்தி செய்திட _________முக்கியக் காரணியாகும்.

A) மூலதனம்

B) உழைப்பு

C) நிலம்

D) ஆற்றல்

விடை மற்றும் விளக்கம்

C) நிலம்

(குறிப்பு: மனிதன் செய்கின்ற எந்த ஓர் உற்பத்திப் பொருளுக்கும் நிலமே அடிப்படையாக அமைகிறது.)

26. கூற்று 1: மனிதனால் அழிக்க முடியாத ஆற்றல்கள் சிலவற்றை நிலம் கொண்டுள்ளது.

கூற்று 2: எங்கெல்லாம் நிலத்தின் மதிப்பு குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் பற்றாக்குறையைப் பொறுத்தே உற்பத்தி செய்யும் பொருள் சந்தையில் விலை பெறுகிறது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

விடை மற்றும் விளக்கம்

விடை: D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

27. “வேலையினால் ஏற்படும் துன்பத்தைக் கருதாமல் கைமாறு எதிர்பார்த்து முழுமையாகவோ, பகுதியாகவோ உடல் அல்லது மனதால் பயன்கருதி மேற்கொள்ளும் முயற்சியே உழைப்பு” என உழைப்பிற்கு விளக்கமளித்தவர் யார்?

A) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

B) ஆடம்ஸ்மித்

C) ஆல்பிரட் மார்ஷல்

D) ஆபிரகாம் லிங்கன்

விடை மற்றும் விளக்கம்

C) ஆல்பிரட் மார்ஷல்

(குறிப்பு: உற்பத்தியில் மனித உழைப்பு ஓர் உள்ளீடாகும்.)

28. செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடான ‘செல்வ இலக்கணம்’ யாருடையக் கோட்பாடு?

A) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

B) ஆடம்ஸ்மித்

C) ஆல்பிரட் மார்ஷல்

D) ஆபிரகாம் லிங்கன்

விடை மற்றும் விளக்கம்

B) ஆடம்ஸ்மித்

(குறிப்பு: ஆடம்ஸ்மித் “பொருளியலின் தந்தை” என அழைக்கப்படுகிறார்.)

29. கீழ்க்கண்டவற்றுள் ஆடம் ஸ்மித் இயற்றிய நூல்கள் எவை?

1. நன்னெறி கருத்து உணர்வுக் கொள்கை

2. நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு

3. செல்வ இலக்கணம்

A) அனைத்தும்

B) 1, 2

C) 2, 3

D) 1,3

விடை மற்றும் விளக்கம்

விடை: B) 1, 2

30. தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.

A) நிலம் செழிப்புத் தன்மையில் மாறுபடும்

B) நிலம் ஆற்றல் வாய்ந்தது

C) நிலம் ஒரு முதன்மை உற்பத்திக் காரணி

D) நிலம் ஆற்றல் குறைந்தது

விடை மற்றும் விளக்கம்

D) நிலம் ஆற்றல் குறைந்தது

(குறிப்பு: நிலம் இயற்கையின் கொடை. நிலம் ஆற்றல் வாய்ந்தது, இடம்பெயரக் கூடியதன்று, நிலத்தின் அளிப்பு நிலையானது மற்றும் அழிவில்லாதது.)

31. உழைப்பு குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) உழைப்பு ஒரே சீரானதல்ல, திறமையும் பயிற்சியும் நபருக்கு நபர் மாறுபடுகின்றன.

B) உழைப்பை, உழைப்பாளரிடமிருந்து பிரிக்க இயலாது.

C) உழைப்பை சேமித்து வைக்க இயலாது.

D) உழைப்பு இடம்பெயரக்கூடியது அல்ல.

விடை மற்றும் விளக்கம்

D) உழைப்பு இடம்பெயரக்கூடியது அல்ல.

(குறிப்பு: உழைப்பு இடம்பெயரக்கூடியது. குறைந்த ஊதியம் பெறுவதைக் காட்டிலும் அதிக ஊதியம் பெற வேண்டும் என்பதற்காக, மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்கிறார்கள்.)

32. உற்பத்தியில் _________ என்பது செயற்படு காரணியாகும்.

A) நிலம்

B) உழைப்பு

C) மூலதனம்

D) நிறுவனம்

விடை மற்றும் விளக்கம்

B) உழைப்பு

(குறிப்பு: நிலமோ, மூலதனமோ உழைப்பு இல்லாமல் அதிக உற்பத்தியை அளிக்க இயலாது.)

33. வேலைப்பகுப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

A) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

B) ஆடம்ஸ்மித்

C) ஆல்பிரட் மார்ஷல்

D) ஆபிரகாம் லிங்கன்

விடை மற்றும் விளக்கம்

B) ஆடம்ஸ்மித்

(குறிப்பு: வேலை பகுப்பு முறையை, ஆடம்ஸ்மித், தனது “நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும்” என்ற நூலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்.)

34. ஒரு உற்பத்தியை நன்கு வரையறுக்கப்பட்ட வெவ்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவினரிடம் ஒப்படைத்தலே _________ எனப்படும்.

A) பகிர்வு

B) நுகர்வு

C) வேலைப் பகுப்பு முறை

D) வேலைவாய்ப்பு

விடை மற்றும் விளக்கம்

C) வேலைப் பகுப்பு முறை

(குறிப்பு: (எ.கா) பல்வேறு கட்டடங்களிலும் ஒரே தொழிலாளி ஈடுபடாமல், அவற்றைப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு கட்டப்பணியையும் ஒரு தொழிலாளி மேற்கொள்ளுதல்.)

35. வேலைப் பகுப்பு முறையின் நன்மைகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) உழைப்பாளி ஒருவர், ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதனால், அந்த வேலையில் திறமையுடையவராக ஆகிறார்.

B) வேலைப் பகுப்பு முறை நவீன இயந்திரங்களை உற்பத்தியில் அதிகமாக ஈடுபடுத்துவதற்கு வழிவகுக்கிறது.

C) காலமும், மூலப்பொருட்களும் மிகத் திறமையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

D) வேலைவாய்ப்பின்மை பெருகும் நிலை உருவாகிறது.

விடை மற்றும் விளக்கம்

விடை: D) வேலைவாய்ப்பின்மை பெருகும் நிலை உருவாகிறது.

36. வேலைப்பகுப்பு முறையின் தீமைகளில் தவறானது எது?

A) தொழிலாளி, ஒரே வேலையைத் திரும்ப திரும்ப செய்வதால், சுவையற்ற களிப்பற்ற, தன்மையை அடைகிறார். இது மனிதத் தன்மையை அழிக்கிறது.

B) ஒரு பகுதி பணியினை மட்டும் ஒரு தொழிலாளி மேற்கொள்வதால் அவன் குறுகிய தேர்ச்சியை பெற்று வேலைவாய்ப்பின்மை பெருகும் நிலை உருவாகிறது.

C) இம்முறை கைவினைப் பொருட்களின் வளர்ச்சியினைப் பாதிக்கின்றது.

D) ஒரு தொழிலாளி, ஒரு பொருளினை முழுவதுமாக உருவாக்கிய மனநிறைவினைப் பெறுகிறார்.

விடை மற்றும் விளக்கம்

D) ஒரு தொழிலாளி, ஒரு பொருளினை முழுவதுமாக உருவாக்கிய மனநிறைவினைப் பெறுகிறார்.

(குறிப்பு: வேலைவாய்ப்புப் பகுப்பு முறையில், ஒரு தொழிலாளி, ஒரு பொருளினை முழுவதுமாக உருவாக்கிய மனநிறைவினைப் பெறுவதில்லை.)

37. கூற்று 1: மூலதனம் என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்வதற்காக மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.

கூற்று 2: செல்வத்தை உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட செல்வம் என்றும் மூலதனத்தைக் கூறலாம்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

விடை மற்றும் விளக்கம்

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

(குறிப்பு: மூலதனம் என்பது செல்வத்தை குறிக்கும்.)

38. “இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக்கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம் ஆகும்.” என்று கூறியவர்

A) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

B) ஆடம்ஸ்மித்

C) ஆல்பிரட் மார்ஷல்

D) ஆபிரகாம் லிங்கன்

விடை மற்றும் விளக்கம்

விடை: C) ஆல்பிரட் மார்ஷல்

39. சரியான இணையைத் தேர்ந்தெடு. (மூலதனத்தின் வடிவங்கள்)

1. பருமப் பொருள் மூலதனம் – இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள்

2. பண மூலதனம் – வங்கி வைப்புகள், பங்குகள், பத்திரங்கள்

3. மனித மூலதனம் – கல்வி, பயிற்சி, சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடுகள்

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

விடை மற்றும் விளக்கம்

A) அனைத்தும் சரி

(குறிப்பு: பருமப்பொருள் மூலதனம் பொருட்சார் மூலதனம் எனவும், பண மூலதனம் பணவியல் வளங்கள் எனவும், மனித மூலதனம் மனிதத் திறன் வளங்கள் எனவும் அழைக்கப்படுகிறது.)

40. மூலதனத்தின் சிறப்பியல்புகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) மூலதனம் செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி

B) மூலதனம் அதிகம் இயங்கும் தன்மையுடையது.

C) மூலதனத்தின் அளிப்பு நெகிழாத்தன்மையுடையது.

D) மூலதனம் ஆக்கமுடையது.

விடை மற்றும் விளக்கம்

C) மூலதனத்தின் அளிப்பு நெகிழாத்தன்மையுடையது.

(குறிப்பு: மூலதனத்தின் சிறப்பியல்புகள்

மனித முயற்சியால் உருவாக்கப்படுகிறது.

இது உற்பத்தியில் தவிர்க்க முடியாத காரணியல்ல. இது இன்றியும் உற்பத்தி நடைபெறும்.

மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும்.

மூலதனத்தை ஈடுபடுத்துவதன் நோக்கம், எதிர்காலத்தில் வருமானம் பெற வேண்டும் என்பதேயாகும்.)

41. __________ என்பவர் பல உற்பத்திக் காரணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுபவர் ஆவார்.

1. தொழில் முனைவோர்

2. தொழில் அமைப்பாளர்

3. சமுதாய மாற்றம் காணும் முகவர்

A) அனைத்தும்

B) 1 மட்டும்

C) 1, 3

D) 2, 3

விடை மற்றும் விளக்கம்

A) அனைத்தும்

(குறிப்பு: நிலம், உழைப்பு, மூலதனம் ஆகிய காரணிகளைச் சரியான அளவிலும், முறையிலும் தொடங்கி, இடர்ப்பாடுகளை ஏற்று, உற்பத்தி அதிகரிக்க முயல்பவரே தொழில்முனைவோர் ஆவார்.)

42. தொழில் முனைவோரின் சிறப்பியல்புகளில் சரியானதைத் தேர்ந்தெடு.

1. இலாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுதல்

2. உற்பத்தி அலகின் இருப்பிடத்தைத் தீர்மானித்தல்

3. புதுமைகளை உருவாக்குதல்

4. வெகுமதி செலவைத் தீர்மானித்தல்

5. இடர்களை ஏற்றல் மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளல்

A) அனைத்தும் சரி

B) 1, 2, 4 சரி

C) 2, 3, 5 சரி

D) 1, 3, 4, 5 சரி

விடை மற்றும் விளக்கம்

விடை: A) அனைத்தும் சரி

43. பொருத்துக.

1. முதன்மை உற்பத்தி – i) ஆடம்ஸ்மித்

2. காலப்பயன்பாடு – ii) மீன்பிடித்தல், சுரங்கத் தொழில்

3. நாடுகளின் செல்வம் – iii) தொழில் முனைவோர்

4. மனித மூலதனம் – iv) எதிர்கால சேமிப்பு

5. புதுமை புனைபவர்-  v) கல்வி, உடல்நலம்

A) ii iv v i iii

B) ii iv i v iii

C) iii ii i iv v

D) v i iii ii iv

விடை மற்றும் விளக்கம்

விடை: B) ii iv i v iii

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!