MCQ Questions

உள்ளாட்சி அரசாங்கங்கள் 11th Political Science Lesson 12 Questions in Tamil

11th Political Science Lesson 12 Questions in Tamil

12] உள்ளாட்சி அரசாங்கங்கள்

1) உள்ளாட்சி அரசாங்கத்தன் அங்கம் அல்லாதது கீழ்கண்டவற்றுள் எது?

A) கிராமம், நகரம்

B) பெருநகரம்

C) மாநகரம்

D) மாநிலம்

(குறிப்பு – உள்ளாட்சி அரசாங்கம் என்பது நம்முடைய கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் மக்களுக்கான சேவைகள் மற்றும் வசதிகளை அழிப்பதற்கும் உள்ளூர் பிரச்சனைகளை நிர்வகிப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும்)

2) உள்ளாட்சி அரசாங்கத்தின் பணிகளாவன கீழ்க்கண்டவற்றுள் எது?

I. சாலை பழுது சரிசெய்தல்

II. குளங்களை உருவாக்குதல்

III. பூங்காக்களை அமைத்தல்

IV. தேர்தல்களை நடத்துதல்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, II, III மட்டும்

D) இவை அனைத்தும்.

(குறிப்பு – மக்களுக்கு சாலை பழுது, சாலையில் நீர் தேங்கி இருத்தல், தெரு விளக்குகள் எரியாமல் போன்ற அடிப்படை பிரச்சினைகளின் போதும், குளங்களை உருவாக்குதல், பூங்காக்களை அமைத்தல் போன்ற அடிப்படைத் தேவைகளின் போதும் உள்ளாட்சி அரசாங்கங்கள் அவற்றை மேற்கொள்கின்றன)

3) கீழ்க்காணும் எந்த சான்றுகளை வழங்கும் அமைப்பாக உள்ளாட்சி அரசாங்கங்கள் செயல்படுகின்றன?

I. பிறப்பு சான்றிதழ்

II.இறப்பு சான்றிதழ்

III. வருமான சான்றிதழ்

IV. இருப்பிட சான்றிதழ்

A) I, II மட்டும்

B) III, IV மட்டும்

C) I, II, IV மட்டும்

D) இவை அனைத்தையும்

(குறிப்பு – அவசர காலங்களில் போதும் உள்ளூரில் பிறப்பு மற்றும் இறப்பு நிகழும் போதும் அவற்றை கையாளும் பொறுப்பு உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு உண்டு.ஒரு பகுதியில் இருப்பிடச் சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் வழங்கும் ஒரு அமைப்பாகவும் உள்ளாட்சி அரசாங்கங்கள் செயல்படுகின்றன)

4) உள்ளாட்சி அரசாங்கம் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நம் அரசாங்க நிர்வாக கட்டமைப்பில் இறுதிநிலை அலகாக உள்ளாட்சி அரசாங்கங்கள் உள்ளன

II. உள்ளாட்சி அரசாங்கமானது ஒரு சபையை கொண்டுள்ளது.

III. உள்ளாட்சி அரசாங்கத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாகும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – உள்ளாட்சி அரசாங்கமானது ஒரு சபையை கொண்டுள்ளது. உள்ள உறுப்பினர்கள் அதன் கிராம் அல்லது நகரத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவர். அவர்கள் மக்களின் பிரச்சனையை மக்கள் சார்பாக சபையில் விவாதித்து தீர்வு காண வேண்டிய பொறுப்பு உடையவர்கள் ஆவர்)

5) உள்ளாட்சி அரசாங்கம் கீழ்காணும் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன?

I. கிராமம்

II. நகரம்

III. சிறு ஊர்கள்

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தும் சரி

(குறிப்பு – உள்ளாட்சி அரசாங்கங்கள் கிராமங்கள் மற்றும் நகரங்கள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கிராமம் என்பது அம்மக்களின் விவசாய தொழில் சார்ந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரம் என்பது அப்பகுதி மக்கள் வர்த்தகம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது)

6) கீழ்க்கண்டவற்றுள் எது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வகைகளுள் அல்லாதவை ஆகும்?

A) மாவட்டம்

B) மாநகராட்சி, நகராட்சி

C) நகரியங்கள், பேரூராட்சி

D) பாளைய வாரியங்கள்

(குறிப்பு – இந்தியாவில் நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள் அவற்றின் பொருளாதார மற்றும் அரசியல் அடிப்படையைக் கொண்டு மாநகராட்சிகள், நகராட்சிகள், நகரியங்கள், பேரூராட்சிகள், பாளைய வாரியங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.)

7) கீழ்கண்டவற்றுள் எது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டதாகும்?

A) மாநகராட்சி

B) நகராட்சி

C) பேரூராட்சி

D) கிராமம்

(குறிப்பு – மாநகராட்சி என்பவை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட சேவைகளையும், வசதிகளையும் வழங்க விரிவான நிர்வாக அமைப்பு தேவைப்படுகிற பெருநகரங்களில் ஏற்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் தற்போது 15 மாநகராட்சிகள் உள்ளன)

8) கீழ்காணும் எந்த திட்டத்தின் மூலம் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை அரசாங்கத்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்படுகிறது?

A) நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம்

B) ஸ்வச் பாரத்

C) ராஜீவ் ஆவாஸ் யோஜனா

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – ராஜீவ் ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்படுகிறது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை தேவைகளான குடிநீர், துப்புரவு, கழிவு நீர் அகற்றல், மின்சாரம், ஆரோக்கியம் போன்றவை வழங்கப்படுகிறது)

9) ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் இடங்களில் ______________ ஏற்படுத்தப்படுகின்றன.

A) நகராட்சி

B) மாநகராட்சி

C) பேரூராட்சி

D) பாளைய வாரியங்கள்

(குறிப்பு – ராணுவ, பயிற்சி மையங்கள் அமைந்திருக்கக் கூடிய இடங்களில், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் இடங்களில் பாளைய வாரியங்கள் ஏற்படுத்தப்படுகின்றன)

10) கீழ்க்காணும் எந்த வரி உள்ளாட்சி அரசாங்கத்தால் விதிக்கப்படுவதில்லை?

A) சொத்து வரி

B) குடிநீர் வரி

C) சரக்கு மற்றும் சேவை வரி

D) தொழில் வரி

(குறிப்பு – சொத்து வரி குடிநீர் வரி தொழில் வரி போன்ற பல்வேறு வரிகளை உள்ளாட்சி அரசாங்கங்கள் விதிக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் ஊரக மற்றும் நகர்ப்புற அரசாங்கங்கள் வெவ்வேறு விதங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் உள்ளாட்சி அரசாங்கங்கள் ஏற்படுத்தப்பட்ட நோக்கம் எல்லா நாடுகளிலும் ஒன்றே ஆகும்)

11) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. உள்ளாட்சி அரசாங்கங்கள் மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து காணப்படும் பழமையான ஒன்றாகும்.

II. உலக நாடுகளில் அவர்களின் நவீன அரசுகளே உள்ளாட்சி அரசாங்கங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன.

III. பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களே தங்கள் முயற்சியால் மையப்படுத்தப்பட்டு இருந்த அதிகாரத்தை பரவலாக்கம் செய்கின்றன

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தும் சரி

(குறிப்பு – வளர்ச்சி அடைந்த நாடுகளில் நிதி பகிர்வு, காவல் பணி வரம்பு, போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் போன்றவை இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. ஆனால் வளரும் நாடுகளில் மத்திய அரசாங்கங்கள் அதிகாரத்தையும், நிதி ஆதாரங்களையும் மையப்படுத்தும் முயற்சியை மேற்கொள்கின்றன)

12) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. கி.மு 600 முதல் கி.பி 600 வரையில் உலகில் பல குடியரசுகள் தோன்றுவதும் மறைவதுமாக இருந்தனர். இந்தக் காலத்தில்தான் ஜைன மதத்தைத் தோற்றுவித்த மகாவீரர், புத்த மதத்தை தோற்றுவித்த கௌதம புத்தர் போன்றோர் தோன்றினர்.

II. புத்த மற்றும் ஜைன இலக்கியங்களில் கிராமங்கள், அளவு மற்றும் வாழும் முறையால் வகைப்படுத்தப்பட்டுள்ளன

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – புத்தர் மற்றும் மகாவீரர் ஏற்படுத்திய மத அமைப்புகளில் மக்களாட்சி நடைமுறையில் முடிவுகள் எடுக்கப்பட்டன. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் அப்போதைய கிராம நிர்வாகம் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது)

13) மௌரியர்களின் ஆட்சிக்காலத்தில் இல்லாத நிர்வாக அலகு கீழ்க்கண்டவற்றுள் எது?

I. கிராமம்

II. நகரம்

III.மாவட்டம்

A) I மட்டும் இல்லை

B) II மட்டும் இல்லை

C) III மட்டும் இல்லை

D) இது எதுவுமே இல்லை

(குறிப்பு – மௌரியர்களின் ஆட்சிக்காலத்தில் கிராமமும், மாவட்டமே நிர்வாக அலகுகளாக இருந்தன. தென்னிந்திய தீபகற்பத்தில் கிறிஸ்துவின் காலத்திற்கு முன்பே உள்ளாட்சி அரசாங்கங்கள் செயல்பட்டு வந்துள்ளன)

14) யாருடைய ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அரசாங்கங்கள் நன்கு மேம்பட்ட நிலையில் செயல்பட்டுவந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன?

A) சேரர்கள்

B) சோழர்கள்

C) பாண்டியர்கள்

D) பல்லவர்கள்

(குறிப்பு – தென்னிந்தியாவில் கடைக்கோடியில் ஆட்சி புரிந்த பாண்டியர்கள் காலத்திலும், தென் மத்திய இந்தியாவில் ஆட்சி புரிந்த பல்லவர் காலத்திலும் உள்ளாட்சி அரசாங்கங்கள் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் சோழர்கள் காலத்தில் உள்ளாட்சி அரசாங்கங்கள் நன்கு மேம்பட்ட நிலையில் செயல்பட்டு வந்ததற்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன)

15) காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு எந்த சோழ அரசரின் உள்ளாட்சி அரசாங்கம் பற்றி எடுத்துரைக்கிறது?

A) ராஜராஜ சோழன்

B) ராஜேந்திர சோழன்

C) முதலாம் பராந்தக சோழன்

D) இரண்டாம் குலோத்துங்க சோழன்

(குறிப்பு – காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் பராந்தக சோழன் கால கல்வெட்டுகள்(கிபி 919 முதல் கிபி 922 வரை) உள்ளாட்சி அரசாங்கங்கள் பற்றி விரிவாக விளக்குகின்றன. இப்படியும் ஒரு சபை இருந்ததாகவும், அதில் அந்த ஊரின் அனைத்து ஆண்களும் உறுப்பினராக இருந்ததையும், அவர்கள் அனைத்து பொது பிரச்சினைகளையும் கூடி முடிவெடுத்ததும் இந்த கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகிறது)

16) சோழர் காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புகளில் சரியானது எது?

I. ஊர்

II. நகரம்

III. நாடு

IV. மாநிலம்

A) I, II மட்டும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) II, III, IV மட்டும் சரி

D) இவை எல்லாமே சரி

(குறிப்பு – சோழர் காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு சபை இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சபைகள் ஊர் மற்றும் மகாசபை என்று இரண்டு விதங்களாக அழைக்கப்பட்டனர். மேலும் மூன்றாவது வகையாக நகரம் என்று வியாபார மையங்களும் நான்காவது நாடு என்றும் அழைக்கப்பட்டன)

17) சோழர்கால நாடு மற்றும் நகரம் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) கோவில்கள் மற்றும் நீர்ப்பாசனங்களை நிர்வகித்தல்

B) வரி வசூலித்தல்

C) பெரிய மூலதனம் தேவைப்படுகின்ற பணிகளுக்கு கடன் வழங்குதல்

D) இவை அனைத்தும்.

(குறிப்பு – நாடு மற்றும் நகரம் என்ற இரு அமைப்புகளுமே நிலங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள், கோவில்கள் மற்றும் நீர் பாசனங்களை நிர்வகித்தல், வரி வசூலித்தல், பெரிய மூலதனம் தேவைப்படுகின்ற பணிகளுக்கு கடன் வழங்குதல் மற்றும் தொண்டு நிறுவனங்களை நிர்வகித்தல் போன்ற பணிகளை செய்கின்றன)

18) வீரநாராயண சதுர்வேதி மங்கலம் என்ற ஊரின் மகாசபைக்கு, நாட்டுக்கு துரோகம் இழைத்த துரோகிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட சோழ மன்னர் யார்?

A) முதலாம் ராஜராஜ சோழன்

B) முதலாம் ராஜேந்திர சோழன்

C) முதலாம் பராந்தக சோழன்

D) இரண்டாம் குலோத்துங்க சோழன்

(குறிப்பு – முதலாம் ராஜராஜசோழன், வீரநாராயண சதுர்வேதி மங்கலம் என்ற ஊரின் மகாசபைக்கு நாட்டுக்கு துரோகம் இழைத்த துரோகிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதை அறியமுடிகிறது.

19) பண்டைய மற்றும் இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்கள் வளமையுடன் செயல்பட்டு வந்ததை கண்டறிந்த வரலாற்றறிஞர் யார்?

I. சர் சார்லஸ் மெட்கேப்

II. சர் ஜார்ஜ் பேர்டு வுட்

III. எல்பின்ஸ்டோன்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவர்கள் அனைவரும்

(குறிப்பு – சர் சார்லஸ் மெட்கேப், சர் ஜார்ஜ் பேர்டு வுட், எல்பின்ஸ்டோன் போன்ற பல வரலாற்றாசிரியர்கள் பண்டைய மற்றும் இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்கள் வளமையுடன் செயல்பட்டு வந்ததை குறிப்பிடுகின்றனர். ஆனால் மிக விரிவான முறையில் அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வந்தது என்பதில் சில வரலாற்று ஆசிரியர்களுக்கு சந்தேகம் உள்ளது)

20) முகலாயர் காலத்தில் மாகாணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) பராக்னாஸ்

B) சர்க்கார்

C) பராக்காஸ்

D) இவை எதுவும் இல்லை

(குறிப்பு – முகலாயர் காலத்தில் (கிபி 1500 முதல் கிபி 1777 வரை) அரசுகள் மாறினாலும் மத்திய அரசுக்கும் உள்ளூர் நிர்வாகத்துக்கும் இடையிலான உறவில் அடிப்படை விதிகள் மாறவில்லை. முகலாயப் பேரரசு அதன் உச்சத்தில் இருந்த போது அது பல மாகாணங்களாக (பராக்னாஸ்) பிரிக்கப்பட்டிருந்தது மாகாணங்களின் உட்பிரிவுகள் (சர்க்கார்) ஏற்படுத்தப்பட்டிருந்தன)

21) பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு எது?

A) கிபி 1755

B) கிபி 1756

C) கிபி 1757

D) கிபி 1758

(குறிப்பு – கிராமப்பகுதிகளில் முகலாய பேரரசின் இறுதி காலங்களில் உள்ளாட்சி அமைப்புகள் வீழ்ச்சி அடையத் தொடங்கின.ஆனால் அவை பல தாக்குதல்களை கண்டாலும் தொடர்ந்து இயங்கின.பிளாசி போருக்குப் பின்னர் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வங்காள நவாபிடமிருந்து நிலவரி வசூல் உரிமைகளை பெற்றது.)

22) இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் போது மாகாண தலைநகரமாக இல்லாதது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) கல்கத்தா

B) பம்பாய்

C) டில்லி

D) சென்னை

(குறிப்பு – இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் மாகாண தலைநகரங்களான கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை தவிர, மற்ற கிராம மற்றும் நகர வியாபார மையங்கள் எந்த ஒரு கட்டுப்பாட்டின் கீழும், மேற்பார்வையின் கீழும் இயங்கவில்லை.)

23) ஆங்கிலேயர் காலத்தில் மாவட்ட நிர்வாகமானது யாருடைய தலைமையில் இயங்கியது?

A) வைசிராய்

B) கவர்னர்

C) மேஜர்

D) ஆட்சியர்

(குறிப்பு – ஆங்கிலேயர் காலத்தில் மாவட்ட நிர்வாகமானது மாவட்ட ஆட்சியரின் கீழ் இயங்கியது. ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட நிர்வாகம் முக்கியமானதொரு நிர்வாக அமைப்பாகவும், நாட்டின் ஊரகப் பகுதிகள் அனைத்தும் அதன் கட்டுப்பாட்டிலும் இருந்தன)

24) 1882ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தவும் அதனை மேற்பார்வையிட மாவட்ட அளவில் வாரியங்களை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்தவர் யார்?

A) வெல்லெஸ்லி பிரபு

B) கானிங் பிரபு

C) ரிப்பன் பிரபு

D) லின்லித்கொ பிரபு

(குறிப்பு – 1882ஆம் ஆண்டு ரிப்பன் பிரபு ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தவும், அதை மேற்பார்வையிட மாவட்ட அளவில் வாரியங்களை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார். ரிப்பன் பிரபுவின் தீர்மானம் உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலும் அதிகாரிகள் அல்லாதோரை கொண்டிருக்க வேண்டும் எனவும், அவர்கள் முடிந்தவரை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும் எனவும் கூறியது)

25) எந்த ஆண்டு வரை மாவட்ட வாரியங்களின் பணிகள் காவல், கல்வி மற்றும் கிராம துப்புரவு முதலியவையாக மட்டுமே இருந்தன?

A) 1906 வரை

B) 1907 வரை

C) 1908 வரை

D) 1909 வரை

(குறிப்பு – ரிப்பன் பிரபுவின் தீர்மானத்தால் ஏறத்தாழ 500 உள்ளாட்சி அமைப்புகள் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரிகள் அல்லாதோரை கொண்டு தொடங்கப்பட்டன. அவர்களின் பெயர்களை மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தார். மாவட்ட வாரியங்களின் பணிகள் 1909ம் ஆண்டு வரை காவல், கல்வி மற்றும் கிராம துப்புரவு முதலியவையாக மட்டுமே இருந்தன)

26) ஆங்கிலேய அரசாங்கம் மத்திய அரசிற்கும் மாகாண மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகளுக்கும் இடையே நிர்வாக மற்றும் நிதி உறவுகளைப் பற்றி விசாரிப்பதற்கு ஆணையத்தை எந்த ஆண்டு அமைத்தது?

A) 1906 ஆம் ஆண்டில்

B) 1907 ஆம் ஆண்டில்

C) 1908 ஆம் ஆண்டில்

D) 1909 ஆம் ஆண்டில்

(குறிப்பு – ரிப்பன் பிரபுவால் ஏற்படுத்தப்பட்ட உள்ளாட்சி அரசாங்கங்கள் பலரால் விமர்சிக்கப்பட்டன.ஆங்கிலேய அரசாங்கம் 1907ஆம் ஆண்டு மத்திய அரசிற்கும், மாகாண மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகளுக்கும் இடையே நிர்வாக மற்றும் நிதி உறவுகளைப் பற்றி விசாரிப்பதற்கு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. அப்போதைய நிர்வாக அமைப்பை நிர்வாக பகிர்வின் மூலம் மேம்படுத்தும் நோக்கத்துடன் இது அமைக்கப்பட்டது.)

27) தமிழ்நாட்டின் மாவட்ட மற்றும் வட்டார அமைப்புகளின் எந்த ஆண்டு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன?

A) 1922 இல்

B) 1923 இல்

C) 1924 இல்

D) 1925 இல்

(குறிப்பு – தமிழ்நாட்டில் கிராம உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை 1926ஆம் ஆண்டில் 1417 ஆகவும், 1937-ஆம் ஆண்டில் 6250 ஆகவும் அதிகரித்தது. இங்கு மூன்று அடுக்கு உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன அவை மாவட்ட வட்டார மற்றும் கிராம அளவில் உள்ளன)

28) 1927ஆம் ஆண்டில் மாவட்ட நிர்வாக அமைப்புகளில் நீதிகட்சியின் உறுப்பினர்கள் எத்தனை பேர் நியமிக்கப்பட்டனர்?

A) 530 பேர்

B) 540 பேர்

C) 545 பேர்

D) 550 பேர்

(குறிப்பு – தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்ட நிர்வாக அமைப்புகளில் நீதி கட்சியின் உறுப்பினர்கள் 1927ஆம் ஆண்டில் 145 பேர்கள் நியமிக்கப்பட்டனர். மாகாணங்களில் இருந்த அலுவலர் அல்லாத தலைவர்கள் மாற்றப்பட்டு அலுவலர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்)

29) இரட்டை ஆட்சி முறை மூலமாக கீழ்க்காணும் எந்த நிர்வாக துறை ஆளுநர் வசம் கொண்டிருக்கவில்லை?

A) சட்டம் ஒழுங்கு துறை

B) காவல் துறை

C) கல்வி துறை

D) நிதித்துறை

(குறிப்பு – இரட்டை ஆட்சி முறை மூலமாக நிர்வாகத் துறைகள் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் எனவும் மாகாண அரசுகளுக்கு மாற்றி தரப்பட்ட துறைகள் எனவும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. காவல், சட்டம் ஒழுங்கு, நிதி போன்ற துறைகள் ஒதுக்கப்பட்ட துறைகள் எனப்பட்டது. அவை ஆளுநரின் வசம் இருந்தது.)

30) தன்னிறைவு பெற்ற கிராம சுயராஜ்ஜியம் வேண்டும் என்று வலியுறுத்தியவர் யார்?

A) மகாத்மா காந்தி

B) ஜவஹர்லால் நேரு

C) சர்தார் வல்லபாய் பட்டேல்

D) கோபால கிருஷ்ண கோகலே

(குறிப்பு – இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்பு உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு புத்துயிரூட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் பரவலாக்கப்பட்ட அதிகார அமைப்பு இருத்தல்வேண்டும், கிராமப் பஞ்சாயத்துக்கு ஆளுகையில் பொறுப்புகள் அளிக்கப்படவேண்டும் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார்.)

31) சுதந்திர இந்தியாவுக்கான காந்திய அரசியலமைப்பு தொடர்பான ஒரு திட்ட வரைபடத்தை தயாரித்தவர் யார்?

A) சங்கர நாராயணன்

B) சத்திய நாராயணன்

C) ஷர்மா நாராயணன்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – ஷர்மா நாராயணன் என்பவர் சுதந்திர இந்தியாவுக்கான காந்திய அரசியலமைப்பு தொடர்பான ஒரு திட்ட வரைபடத்தை தயாரித்தார். அதில் குடிமக்களின் சமூக பொருளாதார அரசியல் நடவடிக்கைகளுக்கான அடிப்படை அமைப்பாக பஞ்சாயத்துகள் இருக்கும்படி அமைத்தார்)

32) இந்திய அரசால், இந்திய அரசியலமைப்பு எந்த நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது?

A) நவம்பர் 26, 1948

B) நவம்பர் 26, 1949

C) ஜனவரி 25, 1948

D) ஜனவரி 25, 1949

(குறிப்பு – நவம்பர் 26, 1949ஆம் நாள் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பின் பகுதி நான்கில் அமைந்துள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் அரசு கிராம பஞ்சாயத்துகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது)

33) அரசு கிராம பஞ்சாயத்துகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் எந்த விதி மூலம் ஏற்படுத்தப்பட்டது?

A) விதி 38

B) விதி 40

C) விதி 42

D) விதி 44

(குறிப்பு – நவம்பர் 26, 1949ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பின் பகுதி நான்கில் அமைந்துள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் விதி 40 ஏற்படுத்தப்பட்டது. அரசு கிராம பஞ்சாயத்துக்களில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அவைகள் சுய ஆட்சியின் அலகுகளாக பணிபுரிய தேவையான அதிகாரங்களையும் திறனையும் வழங்கவேண்டுமென அரசியலமைப்புப் பிரிவு 40 கூறுகிறது)

34) சமூக மேம்பாட்டு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

A) 1950 இல்

B) 1952 இல்

C) 1954 இல்

D) 1956 இல்

(குறிப்பு – அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் விதிகளின்படி செயல்படுவதற்காக 1952 ஆம் ஆண்டு பேரார்வத்துடன் சமூக மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமாக மக்களின் கூட்டு முயற்சியின் மூலம் கிராமங்களின் சமூக பொருளாதார மாற்றத்தை உறுதி செய்வதாகும்)

35) எந்த ஐந்தாண்டு திட்டத்தில் கிராம பஞ்சாயத்து அமைப்புரீதியாக உயர் நிலைகளில் உள்ள, மக்கள் நிர்வாக அமைப்புகளுடன் இணைக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது?

A) இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலம்

B) மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டகாலம்

C) நான்காவது ஐந்தாண்டுத் திட்டகாலம்

D) ஆறாவது ஐந்தாண்டுத் திட்டகாலம்

(குறிப்பு – இரண்டாவது ஐந்தாண்டு திட்ட காலமான 1956இல் (1956-1961) கிராமப் பஞ்சாயத்துக்கள் அமைப்பு ரீதியாக உயர் நிலைகளில் உள்ள மக்கள் நிர்வாக அமைப்புகளுடன் இணைக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.)

36) எந்த ஆண்டு பல்வந்த்ராய் மேத்தா தலைமையில் மத்திய அரசாங்கம் திட்ட வடிவமைப்பு குழு ஒன்றை அமைத்தது?

A) 1955 இல்

B) 1957 இல்

C) 1959 இல்

D) 1961 இல்

(குறிப்பு – 1957 ஆம் ஆண்டு திட்ட வடிவமைப்பு குழு ஒன்றை பல்வந்த்ராய் மேத்தா தலைமையில் மத்திய அரசாங்கம் அமைந்தது மேத்தா குழு முக்கியமாக இரண்டு பரிந்துரைகளை கூறியது. அவை நிர்வாகம் பரவலாக்கப்பட வேண்டும் மற்றும் நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், இரண்டாவதாக ஊரக வளர்ச்சி வட்டங்கள் மக்களாட்சி நிர்வாக அலகுகளாக மாற்றப்பட வேண்டும் என்பதாகும்)

37) 1960 வாக்கில் பஞ்சாயத்துராஜ் அமைப்புக்குள் எத்தனை சதவீத இந்திய மக்கள் கொண்டு வரப்பட்டனர்?

A) 70 சதவீதம்

B) 80 சதவீதம்

C) 90 சதவீதம்

D) 100 சதவீதம்

(குறிப்பு – பல்வந்த்ராய் மேத்தா குழுவின் பரிந்துரைகள் பெரும்பாலும் அனைவராலும் வரவேற்கப்பட்டன. பல்வேறு மாநிலங்களில் பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள் இயற்றப்பட்டன.ஏறத்தாழ 90 சதவீத இந்திய மக்கள் 1960 வாக்கில் பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் கொண்டுவரப்பட்டனர்)

38) இந்திய அரசாங்கம் 1927 ஆம் ஆண்டு யாருடைய தலைமையில் குழுவை அமைத்தது?

A) பல்வந்த்ராய் மேத்தா

B) அசோக் மேத்தா

C) ஹனுமந்த ராவ்

D) ஜி.வி.கே.ராவ்

(குறிப்பு – பஞ்சாயத்து அமைப்புகளின் செயல்பாடுகளை பற்றி ஆராயவும், அதனை செம்மைப்படுத்தவும், இந்திய அரசாங்கம் 1977 ஆம் ஆண்டு அசோக் மேத்தா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது)

39) மாவட்ட பஞ்சாயத்து நேரிடையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும் என பரிந்துரை செய்த குழு எது?

A) பல்வந்த்ராய் மேத்தா குழு

B) அசோக் மேத்தா குழு

C) எல்.எம்.சிங்வி குழு

D) சி.எச். ஹனுமந்த ராவ் குழு

(குறிப்பு – 1977 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அசோக் மேத்தா குழு, தனது முதல் பரிந்துரையாக மாவட்ட பஞ்சாயத்து நேரிடையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்றது. ஒரு தற்கால தீர்வாக வட்டார அளவில் பஞ்சாயத்து ஒன்றியம் நீடிக்க பரிந்துரை செய்தது)

40) 1978 ஆம் ஆண்டு அசோக் மேத்தா குழுவின் பரிந்துரையை ஏற்று, கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் தங்கள் மாநில பஞ்சாயத்து சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்தன?

I. கர்நாடகா

II. மஹாராஷ்ட்ரா

III. ஆந்திர பிரதேசம்

IV. மேற்கு வங்காளம்

V. குஜராத்

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) III, IV, V மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – அசோக் மேத்தா குழு 1978 ஆம் ஆண்டு தனது பரிந்துரையை சமர்ப்பித்தது. இதன் எதிரொலியாக கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநில பஞ்சாயத்து சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்தனர்)

41) ராஜீவ்காந்தி அரசாங்கத்தால் 1989-ஆம் ஆண்டு கீழ்க்காணும் எந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேறாமல் போனது?

A) 62 வது சட்டத்திருத்தம்

B) 64 வது சட்டத்திருத்தம்

C) 66 வது சட்டத்திருத்தம்

D) 68 வது சட்டத்திருத்தம்

(குறிப்பு – ராஜீவ்காந்தி அரசாங்கத்தால் 1989 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 64 ஆவது மற்றும் 65 ஆவது சட்டத்திருத்தம் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும்.ஆனால் அது மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை.)

42) கீழ்காணும் எந்த சட்டத்திருத்தம் இந்திய அரசமைப்பில் பகுதி IX மற்றும் IX-A ஆகிய இரு பகுதிகளை இணைத்தது?

I. 72 வது சட்டத்திருத்தம்

II. 73வது சட்டத்திருத்தம்

III. 74வது சட்டத்திருத்தம்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – 1992ஆம் ஆண்டு முந்தைய பல முயற்சிகளின் சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி அரசாங்கம் 73வது மற்றும் 74-வது சட்டத் திருத்த மசோதாவை, 1992இல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி இறுதியில் அது 1993ஆம் ஆண்டு இரு அவைகளிலும் நிறைவேறியது)

43) இந்திய அரசியலமைப்பில் பகுதி ஒன்பதில் கீழ்க்காணும் எந்த சட்டப்பிரிவுகள் அமைந்துள்ளது?

A) சட்டப் பிரிவுகள் 243 முதல் 243-P வரை

B) சட்டப் பிரிவுகள் 243 முதல் 243-Q வரை

C) சட்டப் பிரிவுகள் 243 முதல் 243-O வரை

D) சட்டப் பிரிவுகள் 243 முதல் 243-Z வரை

(குறிப்பு – இந்திய அரசமைப்பில் பகுதி IX இல் சட்டப்பிரிவு 243 முதல் 243- O வரை உள்ளது. பகுதி IX – A வில், சட்டப்பிரிவு 243-P முதல் 243-ZG வரை உள்ளது. பகுதி IX உள்ளாட்சி நிர்வாகம் எனவும், பகுதி IX-A நகராட்சி நிர்வாகம் எனவும் தலையங்கம் கொடுக்கப்பட்டுள்ளது)

44) மூன்றெழுத்து பஞ்சாயத்து அமைப்பில் இல்லாதவை எது?

A) கிராமம்

B) ஒன்றியம்

C) நகரம்

D) மாவட்டம்

(குறிப்பு – மக்கள் தொகை 20 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கிராமம், ஒன்றியம் மற்றும் மாவட்டத்தை கொண்ட மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என இந்திய அரசமைப்பு கூறுகிறது)

45) மக்கள் தொகை 20 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாநிலங்கள் மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பை உருவாக்க வேண்டும் என 73வது அரசமைப்பு சட்ட திருத்தம், சட்டப்பிரிவு ____________ கூறுகிறது.

A) 243-A

B) 243-B

C) 243-C

D) 243-D

(குறிப்பு – மக்கள் தொகை 20 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கிராமம், ஒன்றியம் மற்றும் மாவட்டத்தை கொண்ட மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென, 73வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட அரசமைப்புச் சட்டப்பிரிவு 243-B கூறுகிறது.)

46) இந்திய அரசமைப்பு சட்ட பிரிவு 243-B இன்படி கிராம மற்றும் ஒன்றிய பஞ்சாயத்து எல்லைகளை தீர்மானிப்பவர் யார்?

A) மாநில முதல்வர்

B) மாநில ஆளுநர்

C) மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர்

D) மாநில சட்டசபை

(குறிப்பு – மாவட்டம் என்பது சாதாரணமான வழக்கில் உள்ள ஒரு மாநிலத்தின் மாவட்டத்தை குறித்தாலும், கிராமம் மற்றும் ஒன்றிய பஞ்சாயத்துகளின் எல்லைப்பற்றி 73வது சட்டத்திருத்தம் குறிப்பிடவில்லை. ஒரு கிராம பஞ்சாயத்தின் எல்லையை மாநில ஆளுநர் ஒரு அறிக்கை மூலமாக தீர்மானிக்கலாம்)

47) கட்டாய பணிகள் மற்றும் விருப்ப பணிகளை பஞ்சாயத்தின் மூன்றடுக்குகளுக்கும் தரும்படி, கீழ்காணும் எந்த அட்டவணை இந்திய அரசமைப்பில் இணைக்கப்பட்டது?

A) பத்தாவது அட்டவணை

B) பதினோராவது அட்டவணை

C) பன்னிரெண்டாவது அட்டவணை

D) பதிமூன்றாம் அட்டவணை

(குறிப்பு – அரசமைப்பில் ஒரு புதிய அட்டவணையாக 11வது அட்டவணை சேர்க்கப்பட்டு, அது கட்டாயப்பணிகள் மற்றும் விருப்ப பணிகளை பஞ்சாயத்தின் மூன்றடுக்குகளுக்கும் தருவதாக தீர்மானிக்கப்பட்டது.

48) பஞ்சாயத்து ராஜ் முதன் முதலில் எந்த மாநிலத்தில் அறிமுகமானது?

A) குஜராத்

B) ராஜஸ்தான்

C) மத்தியப் பிரதேசம்

D) மகாராஷ்டிரம்

(குறிப்பு – அக்டோபர் 2, 1959 ஆம் ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேரு ராஜஸ்தான் மாநிலம் நகவூரில் பஞ்சாயத்து ராஜினை அறிமுகம் செய்தார். பஞ்சாயத்து ராஜ், பொன்விழா 2009ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் நாள் கொண்டாடப்பட்டது)

49) 11வது அட்டவணை பிரிவு 243-G இல் கீழ்க்காணும் எது குறிப்பிடப்பட்டுள்ளது?

I. விவசாயம் மற்றும் விவசாய விரிவாக்க பணிகள்

II. கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பால் பண்ணை.

III. காதி, கிராமம் மற்றும் குடிசை தொழில்கள்.

IV. தொழில் நுட்ப பயிற்சி மற்றும் தொழில் கல்வி

V. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV, V மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பதினோராவது அட்டவணை சட்டப்பிரிவு 243-G இல் மேற்கண்ட அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் நலிவடைந்த பிரிவினரின் நலம், சமுதாய சொத்துக்களை நிர்வகித்தல், பொது விநியோக முறை, ஊரக வீட்டுவசதி, குடிநீர், ஊரக மின்மயமாக்கல் மற்றும் மின் வினியோகம், மீன்வளம் போன்றவைகள் இணைக்கப்பட்டுள்ளன)

50) இந்தியாவின் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ எத்தனை கிராம பஞ்சாயத்துகள் உள்ளன?

A) 2.5 லட்சம்

B) 3 லட்சம்

C) 3.5 லட்சம்

D) 4 லட்சம்

(குறிப்பு – இந்தியாவின் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துக்கள் இந்தியாவில் உள்ளன)

51) கிராம பஞ்சாயத்து குறித்த கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிராமப் பஞ்சாயத்துக்கு மேலுள்ள பஞ்சாயத்துக்களின் உறுப்பினர்களாக உள்ளனர்.

II. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பஞ்சாயத்து தலைவர் அம்மாநில சட்டப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

III. கிராம பஞ்சாயத்தின் தலைவருக்கும், ஒன்றிய பஞ்சாயத்தின் தலைவருக்கும், மாவட்ட பஞ்சாயத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது.

A) I, II மட்டும் சரியானது

B) II, III மட்டும் சரியானது

C) I, III மட்டும் சரியானது

D) எல்லாமே சரியானது

(குறிப்பு – ஒரு பஞ்சாயத்தில் உள்ள அனைத்து இடங்களும் தொகுதி மக்களின் நேரடியான தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டும். ஒரு கிராம பஞ்சாயத்தின் வாக்காளர்களை கொண்ட அமைப்பு கிராம சபை என்று அழைக்கப்படுகிறது. ஒரு கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் கிராம சபை உறுப்பினர்கள் ஆவர்)

52) பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் தகுதிகள் கீழ்க்கண்டவற்றுள் எந்த பதவிக்கான தகுதிகளைப் போலவே இருக்கும்?

A) மாநில சட்டமன்ற உறுப்பினர்

B) மக்களவை உறுப்பினர்

C) மாநிலங்களவை உறுப்பினர்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – பஞ்சாயத்தின் மூன்று அடுக்குகளிலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மேலும் பெண்களுக்கு மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பஞ்சாயத்துக்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்)

53) 73 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தத்தால் (1991ஆம் ஆண்டு) ஏற்படுத்தப்பட்ட மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் ஆலோசனை அமைப்பு என அழைக்கப்படுவது எது?

A) மாவட்ட பஞ்சாயத்து

B) ஊராட்சி ஒன்றியக் குழு

C) கிராம பஞ்சாயத்து

D) கிராம சபை

(குறிப்பு – மாவட்ட பஞ்சாயத்து( தேர்ந்தெடுக்கப்பட்டோர் மட்டும் நியமிக்கப்பட்டோர்), ஊராட்சி ஒன்றியக் குழு( தேர்ந்தெடுக்கப்பட்டோர்), கிராம பஞ்சாயத்து( தேர்ந்தெடுக்கப்பட்டோர்), கிராமசபை( ஒரு கிராமத்தின் அனைத்து வாக்காளர்களும்) ஆகியவை மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் இன் அமைப்பாகும். இதில் கிராம சபை என்பது ஆலோசனை அமைப்பாக கருதப்படுகிறது)

54) எந்த அரசமைப்பு சட்ட திருத்தத்தின்படி நகரப் பகுதிகள் என்பவை வெவ்வேறு விதமான அளவுகள், குணம் மற்றும் முக்கியத்துவம் கொண்ட நகரங்களையும் பெரு நகரங்களையும் உள்ளடக்கியதாகும்?

A) 72வது அரசமைப்புச் சட்டத்திருத்தம்

B) 73வது அரசமைப்புச் சட்டத்திருத்தம்

C) 74வது அரசமைப்புச் சட்டத்திருத்தம்

D) 75வது அரசமைப்புச் சட்டத்திருத்தம்

(குறிப்பு – 74வது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி நகரப் பகுதிகள் என்பவை வெவ்வேறு விதமான அளவுகள், குணம் மற்றும் முக்கியத்துவம் கொண்ட நகரங்களையும் பெரு நகரங்களையும் உள்ளடக்கியவை. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகரங்கள் மற்றும் பாளைய வாரியங்கள் என்பவை பொதுவான நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்க வகைகளாக உள்ளன.)

55) பாளைய வாரியங்கள் சட்டம் எந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்டது?

A) 1921 இல்

B) 1922 இல்

C) 1923 இல்

D) 1924 இல்

(குறிப்பு – பாளைய வாரியங்கள் சட்டம் 1924இல் பிறப்பிக்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்க வகைகளில், பாளைய வாரியம் மட்டும் மத்திய சட்டமான, பாளையங்கள் சட்டம் 1924இன் அடிப்படையில் செயல்படுகிறது)

56) அரசமைப்பின் 74வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் எந்த ஆண்டு அரசிதழில் வெளியானது?

A) ஜூன், 1992

B) ஜூன், 1993

C) ஜூன், 1994

D) ஜூன், 1995

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் 74 ஆவது சட்டத்திருத்தம் 1922 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, ஜூன் மாதம் 1993 ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த 1992ஆம் ஆண்டு சட்டம், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு ஆண்டு காலம் காலஅவகாசம் வழங்கியது. அதற்குள் ஒவ்வொரு மாநிலமும் அல்லது யூனியன் பிரதேசமும் தங்கள் சட்டங்களை தேவையான அளவு திருத்துவதன் மூலமும், மாற்றுவதன் மூலமும், மத்திய சட்டத்தின் விதிகளை தங்கள் சட்டங்களில் ஏற்படுத்தி, அதன்மூலம் நகர உள்ளாட்சி அரசாங்கங்களை அமைத்திட வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது)

57) கிராமசபை கூட்டங்கள் ஆண்டிற்கு எத்தனை முறை கூடும்?

A) நான்கு முறை

B) ஐந்து முறை

C) ஆறு முறை

D) ஏழு முறை

(குறிப்பு – கிராமசபை கூட்டங்கள் ஆண்டிற்கு நான்கு முறை கூடும்.ஜனவரி 26(குடியரசு தினம்), மே 1(உழைப்பாளர் தினம்) ஆகஸ்ட் 15(சுதந்திர தினம்) மற்றும் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது)

58) 24 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தத்தில் பரிந்துரைக்கப்பட்ட மூன்றடுக்கு முறைகளில் அல்லாதவை கீழ்க்கண்டவற்றுள் எது?

A) சிறு பேரூராட்சிகள்

B) பேரூராட்சிகள்

C) நகராட்சிகள்

D) மாநகராட்சிகள்

(குறிப்பு – 74 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தத்தில் நகர உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றடுக்கு முறை பரிந்துரைக்கப்பட்டது.அவை பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி ஆகும்)

59) கீழ்க்கண்டவற்றில் எதன் மக்கள்தொகை 15 ஆயிரத்திற்கு மேலும் மூன்று லட்சத்திற்கு மிகாமலும் இருக்கும்?

A) பேரூராட்சி

B) நகராட்சி

C) மாநகராட்சி

D) இவை எதுவுமில்லை

(குறிப்பு – நகராட்சி என்பது மக்கள் தொகை 15 ஆயிரத்திற்கும் மேலும் மூன்று லட்சத்திற்கும் கீழ் உள்ள பகுதிகளாகும். நகராட்சிகள் வகையினம்-அ, வகையினம்-ஆ, வகையினம்-இ என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது)

60) பேரூராட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு எது?

A) 3 முதல் 10 வரை

B) 3 முதல் 15 வரை

C) 5 முதல் 10 வரை

D) 5 முதல் 15 வரை

(குறிப்பு – ஒரு பேரூராட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை மூன்று குறையாமலும் அதே சமயத்தில் 15 கைவிட மிகாமலும் அந்த மாநில சட்டம் கூறும் எண்ணிக்கையில் இருக்கும்.)

61) பேரூராட்சி தேர்தல்களில் ஒட்டு மொத்த வார்டுகள் எண்ணிக்கையில் எத்தனை பங்கு பெண்களுக்கு இடஒதுக்கீடாக அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது?

A) ஐந்தில் ஒரு பங்கு

B) நான்கில் ஒரு பங்கு

C) மூன்றில் ஒரு பங்கு

D) இது எதுவும் இல்லை

(குறிப்பு – பேரூராட்சி தேர்தல்களில் ஒட்டுமொத்த வார்டுகள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. மேலும் மொத்த மக்கள்தொகை எண்ணிக்கையில் உள்ள விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடியினருக்கும் வார்டுகள் இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது)

62) கீழ்க்காணும் எந்த நகராட்சி வகையினத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 க்கு குறையாமலும் 50 க்கு மிகாமலும் இருப்பர்?

A) வகையினம் – அ

B) வகையினம் – ஆ

C) வகையினம் – இ

D) இவை எதுவும் இல்லை

(குறிப்பு – நகராட்சிகள் வகையினம்- அ, ஆ, இ என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் நகராட்சியின் வகையினம் அ-இல் 20 எண்ணிக்கை குறையாமலும், 50 எண்ணிக்கைக்கு மிகாமலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருப்பர்)

63) நகராட்சிகளில் எத்தனை உறுப்பினர்கள் வரை அரசாங்கம் நகரசபைக்கு நியமிக்க முடியும்?

A) 1 மட்டும்

B) 2 வரை மட்டும்

C) 3 வரை மட்டும்

D) 4 வரை மட்டும்

(குறிப்பு – சட்டமன்ற தொகுதி எல்லைக்குள் வருகின்ற நகராட்சிகளில் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி வழி உறுப்பினராக நகராட்சியில் இருப்பார். மூன்று உறுப்பினர்கள் வரை அரசாங்கம் நகரசபைக்கு நியமிக்கலாம்)

65) நகராட்சிகளில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் கீழ்க்காணும் எந்த பதவிக்கான தேர்தலில் வாக்களிக்க முடியாது?

I. தலைவர்

II. துணை தலைவர்

A) I-க்கு மட்டும்

B) II-க்கு மட்டும்

C) இரண்டு பதவிகளுக்கும்

D) இரண்டு பதவியும் அல்ல

(குறிப்பு – தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கு பெற்று வாக்களிக்க முடியாது. நகராட்சி உறுப்பினர்கள் மக்களால் ரகசிய வாக்கெடுப்பு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்)

66) நகராட்சிகளில் தேர்தல் முடிவு வெளியான எத்தனை நாட்களுக்குள் துணை ஆணையர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கூட்டி அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும்?

A) 10 நாட்களுக்குள்

B) 14 நாட்களுக்குள்

C) 20 நாட்களுக்குள்

D) 24 நாட்களுக்குள்

(குறிப்பு – தேர்தல் முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் துணை ஆணையர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி, அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து, தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க வகை செய்ய வேண்டும்)

67) நகராட்சித் தேர்தலில் எத்தனை சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது?

A) 20 சதவீதம்

B) 30 சதவீதம்

C) 40 சதவீதம்

D) 50 சதவீதம்

(குறிப்பு – நகரப் பஞ்சாயத்துக்கள் பொறுத்தவரையிலும் ஒரு நகரப்பகுதியில் உள்ள பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரின் மக்கள்தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் அடிப்படையிலேயே தனித்தொகுதிகள் நகரப் பஞ்சாயத்துக்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.மேலும் கூடுதலாக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின பெண்கள் உட்பட மொத்த இடங்களில் 30% பெண்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது)

68) நகராட்சி நிலைக்குழுவின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் ஆகும்?

A) 2.5 ஆண்டுகள்

B) 3 ஆண்டுகள்

C) 3.5 ஆண்டுகள்

D) 4 ஆண்டுகள்

(குறிப்பு – மக்கள் தொகை மூன்று லட்சத்திற்கு குறைவாக உள்ள நகராட்சிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வார்டுகளை இணைத்து வார்டு குழுக்கள் ஏற்படுத்தப்படும். அந்தந்த வார்டுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வார்டு குழு உறுப்பினர்களாக இருப்பர்)

69) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நகரசபை நிலைக்குழுவின் பதவிக் காலம் இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

II. நகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

III. ஒவ்வொரு நகராட்சி நிலைக்குழுவிலும் நகராட்சியின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் இருப்பர்

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – நகர சபை ஆண்டுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும் அந்தக் கூட்டத்திற்கு நகர சபை தலைவர், அவர் இல்லை எனில் நகரசபை துணைத்தலைவர் தலைமை ஏற்பார்)

70) நகர சபை தன் பணிகளை செய்ய பல்வேறு துணை குழுக்களை அமைகிறது. அந்தக் குழுக்களின் வகைகளுள் அல்லாதவை கீழ்கண்டவற்றில் எது?

A) சட்டப்பூர்வ குழு

B) சட்டபூர்வமற்ற குழு

C) சிறப்பு தேவை குழு

D) எல்லாமே தவறு

(குறிப்பு – நகர சபை தன் பணிகளை செய்ய பல்வேறு துணை குழுக்களை அமைக்கிறது. இதில் நகரமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களாக இருப்பர். அவர்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காண பரிந்துரைகளை அளிப்பர். இந்த குழுக்கள் இரண்டு வகைப்படும். அவை சட்டபூர்வ குழுக்கள், சட்டபூர்வமற்ற குழுக்கள் என இருவகைப்படும். சிறப்பு தேவைகளுக்காக நகராட்சி அமைப்புகள் சில துணை குழுக்களை அமைக்கலாம்)

71) நகர மன்ற தலைவரின் பதவி ஆனது கீழ்கண்டவற்றுள் எது?

I. நகரமன்ற கூட்டங்களைக் கூட்டுதல்.

II. நகரமன்ற கூட்டங்களுக்கு தலைமை வகித்தல்

III. தவறு செய்யும் நகரமன்ற உறுப்பினர் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல்

IV. அரசுடன் தகவல்தொடர்பு மற்றும் அரசு விழாக்களில் பங்கு கொள்ளுதல்

A) I, II, III மட்டும்

B) I, II மட்டும்

C) I, II, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – ஒரு நகர மன்றம் ஒன்று அல்லது இரண்டு துணை தலைவர்களையும் தேர்வு செய்கின்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரமன்ற தலைவர்கள் பயணப்படி மற்றும் மாத ஊதியம் பெறுகின்றனர்.)

72) ஒரு நகர மன்றத்தின் நிர்வாக அலுவலர் யாரால் நியமனம் செய்யப்படுகிறார்?

A) மாநில நிர்வாகத்தால்

B) மத்திய நிர்வாகத்தால்

C) மாவட்ட ஆட்சியரால்

D) மக்களால்

(குறிப்பு – ஒவ்வொரு நகர்மன்றத்திற்கும் ஒரு நிர்வாக அலுவலர் உள்ளார்.அவரை மாநில நிர்வாகம் நியமனம் செய்கின்றது.நகரமன்ற அலுவலர்கள் அந்த நிர்வாக அலுவலரின் கீழ் பணிபுரிபவர்களாக உள்ளனர்.)

73) கீழ்க்கண்டவற்றில் எது நகரமன்ற நிர்வாக அலுவலரின் பணி அல்ல?

A) சட்டம் இயற்றுவது

B) நகரமன்ற கூட்டத்தின் நேரத்தை முடிவு செய்தல்

C) நகர்மன்ற கூட்டத்தை நடத்துதல்

D) அரசு விழாக்களை நடத்துதல்

(குறிப்பு – நகர்மன்றத்தில் ஆளுகின்ற அமைப்பு நகர்மன்ற குழு ஆகும்.இது நகர நிர்வாகத்திற்கு பொறுப்புள்ளது.மேலும் சட்டம் இயற்றுவது, நகரமன்ற கூட்டத்தின் நேரம், கூட்டத்தை நடத்துவது போன்ற முடிவுகளை நிர்வாக அலுவலர் மேற்கொள்கிறார்)

74) நகர மன்றத்தின் பணிகள் மற்றும் பொறுப்புகள் இந்திய அரசமைப்பில் எந்த அட்டவணையில் கூறப்பட்டுள்ளது?

A) 11வது அட்டவணை

B) 12வது அட்டவணை

C) 13வது அட்டவணை

D) 14வது அட்டவணை

(குறிப்பு – நகர மன்றத்தின் பணிகள் மற்றும் பொறுப்புகள் இந்திய அரசமைப்பில் 12 ஆவது அட்டவணையில் கூறப்பட்டுள்ளது. 74வது அரசமைப்புச் சட்டத்திருத்தம், ஒரு மாவட்டம் முழுமைக்கும் ஒரு வளர்ச்சி திட்ட வரைவை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட திட்டக்குழுவை ஏற்படுத்தியது)

75) எந்த ஆண்டு சட்டத்தின்படி மாவட்ட திட்ட குழுவில் மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் நான்கு பங்கிற்கு குறையாமல் இருக்கவேண்டும்?

A) 1991ஆம் ஆண்டு

B) 1992ஆம் ஆண்டு

C) 1993ஆம் ஆண்டு

D) 1994ஆம் ஆண்டு

(குறிப்பு – 1992ஆம் ஆண்டு சட்டத்தின்படி மாவட்ட திட்ட குழுவில் மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் நான்கு பங்கிற்கு குறையாமல் இருத்தல் வேண்டும். இந்த உறுப்பினர்களை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் தேர்ந்தெடுக்கின்றனர்)

76) கீழ்க்கண்டவற்றுள் எது நகரமன்றத்தால் விதிக்கப்படாத வரி ஆகும்?

A) சொத்து வரி

B) சேவை வரி

C) சுங்க வரி

D) சாலை வரி

(குறிப்பு – நகராட்சி அமைப்புகள் தனது நிதி ஆதாரங்களை உயர்த்திக்கொள்ள பலவகை வரி விதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக நிலவரி, கட்டிட வரி, விளம்பரத்தின் மீதான வரி, நெடுஞ்சாலை சுங்கவரி, சாலை வரி முதலானவை ஆகும்)

77) கீழ்கண்டவற்றுள் எது நகராட்சியின் அதிகாரம் மற்றும் பொறுப்பாகும்?

A) நகர்ப்புற காடு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல்

B) இடுகாடு மற்றும் சுடுகாடு மைதானங்களை பராமரித்தல்.

C) பேருந்து நிறுத்துமிடங்கள், கழிவறை, சாலை விளக்கு போன்ற பொது வசதிகளை செய்து கொடுத்தல்.

D) இவை அனைத்தும்.

(குறிப்பு – நகர திட்டங்கள், நகரத்தை வடிவமைத்தல், பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு திட்டமிடல், சாலைகள் மற்றும் பாலங்கள் பராமரித்தல், வீட்டு உபயோகத்திற்கு குடிநீர் விநியோகம் செய்தல், கல்வி மற்றும் கலாச்சார அம்சங்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல், வதைக் கூடங்கள் மற்றும் தோல் பதனிடும் தொழில்களை ஒழுங்குபடுத்துதல் போன்றவை அரசமைப்பின் 12வது அட்டவணைப்படி நகராட்சியின் அதிகாரமும், பொறுப்புகளும் ஆகும்)

78) மாநில நிதிக்குழு கீழ்கண்டவற்றில் எதை பரிந்துரை அளிக்கலாம்?

I. மாநில அரசாங்கத்திற்கு மாநகராட்சிக்கும் இடையே வரி சுங்க சட்டங்கள் போன்றவற்றின் மூலமாக வரும் வருவாயை பகிர்ந்தளித்தல்.

II. நகராட்சிகளின் வரி வகைகள் சுங்கக் கட்டணங்கள் போன்றவற்றை நிர்ணயம் செய்தல்.

III. மாநிலங்களுக்கு நிதி வழங்க உதவும் மானியங்கள்.

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – மாநில அரசாங்கத்திற்கு மாநகராட்சிக்கும் இடையே பரிசுத்த சட்டங்கள் போன்றவற்றின் மூலமாக வரும் வருவாயை பகிர்ந்தளித்தல், அந்த வருவாயை மாநிலத்திலுள்ள நகராட்சியின் பல நிலைகளுக்கும் ஒதுக்கீடு செய்தல், நகராட்சியின் வரி வகைகள், சுங்கக் கட்டணங்கள் போன்றவற்றை நிர்ணயம் செய்தல், பேரூராட்சியின் நிதி நிலைமையை மேம்படுத்த தேவைப்படும் நடவடிக்கைகளை எடுத்தல் போன்றவற்றில் மாநில நிதிக் குழு பரிந்துரை அளிக்கலாம்)

79) ஆரம்பகாலத்தில் மாநகராட்சி அமைப்புகள் கீழ்க்காணும் எந்த இடத்தில் உருவாக்கப்பட்டன?

A) சென்னை

B) மும்பை

C) கொல்கத்தா

D) இந்த மூன்று இடங்களிலும்

(குறிப்பு – இந்தியாவில் உள்ள நகர உள்ளாட்சி அமைப்பின் உச்ச அமைப்பு மாநகராட்சி ஆகும். பாராளுமன்ற சட்டத்தின் மூலமாகவும், மாநில சட்டமன்ற மற்றும் யூனியன் பிரதேசத்தின் சட்டம் மூலம் பெரிய நகரங்களில் மாநகராட்சிகள் நிறுவப்படுகின்றன)

80) ஆணையர் என்பவர் கீழ்க்கண்டவற்றில் எதன் தலைமை நிர்வாகி ஆவார்?

A) பேரூராட்சி

B) நகராட்சி

C) மாநகராட்சி

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – நகராட்சி ஆணையின் பரிந்துரையின் அடிப்படையில்தான் அனைத்து திட்டங்களும் நகராட்சி குழுவில் நிறைவேற்றப்படுகின்றன. ஆணையர் மாநகராட்சியின் தலைமை நிர்வாகி ஆவார். மாநகராட்சி மன்றத்தால் இயற்றப்படும் கொள்கைகளை செயல்படுத்துவது அவருடைய தலையாய பொறுப்பாகும்)

81) மாநகராட்சியின் தலைவரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் ஆகும்?

A) ஓராண்டு

B) இரண்டு ஆண்டு

C) மூன்று ஆண்டு

D) நான்கு ஆண்டு

(குறிப்பு – இந்தியாவில் உள்ள மாநகராட்சி அமைப்புகள் மும்பையில் அமைந்த மாநகராட்சி அமைப்பை போன்றவை. மாநகராட்சி அமைப்பின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதன் தலைவர் ஓராண்டுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் மீண்டும் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம்)

82) மாநகராட்சி நிலைக்குழுவின் உறுப்பினர்கள் அல்லாதவர் யார்?

A) மேயர்

B) துணை மேயர்

C) வார்டு உறுப்பினர்கள்

D) பஞ்சாயத்து உறுப்பினர்கள்

(குறிப்பு – மாநகராட்சியின் நிலை குழு உருவாக்கப்பட்டு அதில் மேயர், துணை மேயர், வார்டு உறுப்பினர்கள் இடம்பெறுவர். மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் தமக்குள்ளிருந்து ஒருவரை துணை மேயராக தேர்ந்தெடுக்கின்றனர்)

83) கீழ்க்கண்டவற்றில் யார் மாநகராட்சி நிலைக்குழுவின் தலைவராவார்?

A) மாநகராட்சி ஆணையர்

B) மேயர்

C) துணை மேயர்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – மாநகராட்சியின் நிலைக்குழுவின் தலைவர் மேயர் ஆவார். மாநகராட்சி குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றல் போன்றவற்றுக்கும் குழுக்களை அமைக்கிறது.ஒவ்வொரு குழுவிலும் மூன்றுக்கு குறையாமலும், ஐந்துக்கு மிகாமலும் உறுப்பினர்கள் இருப்பர்)

84) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் முதல் ஐந்து இடங்களில் இல்லாத நகரம் கீழ்கண்டவற்றுள் எது?

A) புனே

B) கொல்கத்தா

C) பாட்னா

D) சூரத்

(குறிப்பு – நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் புனே, கொல்கத்தா, திருவனந்தபுரம், புவனேஸ்வர் மற்றும் சூரத் ஆகிய நகரங்கள் முறையே முதல் ஐந்து இடங்களில் உள்ளன. மேலும் சென்னை, பாட்னா, டேராடூன், சண்டிகார், பெங்களூர் ஆகிய நகரங்கள் முறையே கடைசி ஐந்து இடங்களில் உள்ளன.)

85) மாநகராட்சி நிலைக்குழுவின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகளாகும்?

A) ஓராண்டு

B) இரண்டு ஆண்டுகள்

C) மூன்றாண்டுகள்

D) நான்காண்டுகள்

(குறிப்பு – மாநகராட்சி நிலைக்குழுவின் பதவி காலம் ஓராண்டு ஆகும். 74 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் நிதி ஆதாரங்கள் மாநகராட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசமைப்பின் 12வது அட்டவணை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய 18 பணிகளை பட்டியலிட்டுள்ளது.)

86) மாநகராட்சி ஆணையரை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

A) மாநில அரசுக்கு

B) மத்திய அரசுக்கு

C) பாராளுமன்றத்திற்கு

D) சட்ட மன்றத்திற்கு

(குறிப்பு – மாநகராட்சி ஆணையர் என்பவர் மாநகராட்சியின் தலைமை நிர்வாகி ஆவர். மாநகராட்சி ஆணையர் இந்திய நிர்வாக பணியை(IAS) சார்ந்தவர் ஆவார். மாநகராட்சி ஆணையரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது)

87) மாநகராட்சி ஆணையரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகளாகும்?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

(குறிப்பு – மாநகராட்சி ஆணையரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். இந்த கால அளவை மாநில அரசாங்கம் விரும்பினால் நீட்டிக்க முடியும். மாநகராட்சி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசின் முழு அதிகாரம் நிறைந்தவர் மாநகராட்சி ஆணையர் ஆவார்)

88) கீழ்க்காணும் எந்த சட்ட திருத்தத்தின் மூலம் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது?

I. 72வது அரசமைப்பு சட்ட திருத்தம்

II. 73வது அரசமைப்பு சட்ட திருத்தம்

III. 74வது அரசமைப்பு சட்ட திருத்தம்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – 73வது மற்றும் 74வது சட்ட திருத்தத்தின் மூலம் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. 73 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் தமிழக அரசாங்கத்தின் அரசமைப்பு கடமைகளாக, அதிகாரத்துடன் கூடிய கிராம சபைகளை அனைத்து கிராமங்களிலும் உருவாக்குதல், பொதுவான மேற்பார்வை மற்றும் பஞ்சாயத்தின் வருடாந்திர திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் முதலான அதிகாரங்கள் பஞ்சாயத்து, மூன்று அடுக்குகளைக் கொண்ட உள்ளாட்சி அமைப்பை உருவாக்குதல் போன்றவை உள்ளன.

89) கீழ்க்காணும் எது 74வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மூலமாக தோன்றியவை அல்ல?

A) மாநில அரசுடன் வருமான பகிர்வு அளித்தல்

B) சீரான தேர்தல் நடத்துதல்

C) பெண்கள் மற்றும் பட்டியல் இனத்தவர் பழங்குடியினர் இட ஒதுக்கீடு செய்தல்

D) மூன்று அடுக்கு கொண்ட உள்ளாட்சி அமைப்பை உருவாக்குதல்

(குறிப்பு – மாநில அரசுடன் வருமான பகிர்வு, சீரான தேர்தல் நடத்துதல் பெண்கள் மற்றும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் இட ஒதுக்கீடு போன்றவை 74வது சட்டத் திருத்தத்தின் மூலமாக தமிழகத்தில் நிகழ்ந்தவை ஆகும். மூன்று அடுக்கு கொண்ட உள்ளாட்சி அமைப்பை உருவாக்கும் முயற்சியானது 73 ஆவது சட்டதிருத்தத்தின் மூலமாக விளைந்தவை ஆகும்)

90) தமிழகத்தில் நகர உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் கீழ்காணும் எந்த ஆண்டுகளில் நடைபெறவில்லை?

A) 1996

B) 2001

C) 2005

D) 2011

(குறிப்பு – 74 வது சட்டத்திருத்தம் பல்வேறு மாநிலங்களில் நகர உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்க வழி செய்தது. தமிழகத்தில் நகர உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் 1996, 2001 மற்றும் 2013, 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது)

91) இதுவரை இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் தங்களது சட்டசபையில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்த இசைவு தந்துள்ளன?

A) 14 மாநிலங்கள்

B) 16 மாநிலங்கள்

C) 18 மாநிலங்கள்

D) 20 மாநிலங்கள்

(குறிப்பு – இந்தியாவில் இதுவரை 18 மாநிலங்களில் மட்டும் தான் தங்களது சட்டசபையில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்த இசைவு தந்துள்ளன. மேலும் சில மாநில அரசாங்கங்கள் சட்ட திருத்தத்திற்கு பிறகும், உள்ளாட்சி அமைப்பு உருவாக்க சட்டம் இயற்றிய பின்னும் பல பிரிவுகளை சரிவர செயல்படுத்தவில்லை)

92) தமிழ்நாட்டில் தற்போது உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை என்ன?

A) 13 மாநகராட்சிகள்

B) 14 மாநகராட்சிகள்

C) 15 மாநகராட்சிகள்

D) 16 மாநகராட்சிகள்

(குறிப்பு – தமிழகத்தில் தற்பொழுது 15 மாநகராட்சிகள் உள்ளன. அவை சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர் மற்றும் ஆவடி ஆகும்)

93) தமிழகத்தில் உள்ள நகராட்சிகளின் எண்ணிக்கை என்ன?

A) 100 நகராட்சிகள்

B) 125 நகராட்சிகள்

C) 150 நகராட்சிகள்

D) 175 நகராட்சிகள்

(குறிப்பு – தமிழகத்தில் தற்போது 150 நகராட்சிகள் உள்ளன. இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!