Book Back QuestionsTnpsc

காற்று Book Back Questions 8th Science Lesson 11

8th Science Lesson 11

11] காற்று

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஆக்சிஜனானது நைட்ரஜனைவிட இருமடங்கு நீரில் அதிகமாகக் கரையும் தன்மை உடையது. நைட்ரஜனின் கரைதிறனையே ஆக்சிஜனும் கொண்டிருக்குமானால். கடல், ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கு உயிர் வாழ்தல் மிகவும் கடினமான செயலாக இருக்கும்.

ஆக்சிஜனுக்கு தானாகவே தீப்பற்றி எரியும் தன்மை இருந்தால் நமது வளிமண்டலத்திலுள்ள ஆக்சிஜன் முழுவதும் எரிய ஒரு தீக்குச்சி மட்டுமே போதுமானதாக இருக்கும்.

தற்காலங்களில் வாகனங்களின் டயர்களில் அழுத்தப்பட்ட காற்றுக்குப் பதிலாக நைட்ரஜன் நிரப்பப்படுகிறது. இதை நீ கவனித்துள்ளாயா? ஏன் மக்கள் தற்போது நைட்ரஜனைப் பயன்படுத்துகின்றனர்?

வெப்பப்படுத்தும் போது ஒரு பொருள் திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு பதங்கமாதல் எனப்படும்.

காற்றோற்றப்பட்ட நீர் என்பது அதிக அழுத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயு நீரில் கரைந்துள்ள பொருளாகும். இது சோடா நீர் என்றும் அழைக்கப்படுகிறது.

வெள்ளிக் கோளின் வளிமண்டலத்தில் 96-97% கார்பன் டை ஆக்சைடு உள்ளது. கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகமாக இருப்பதால் வெள்ளியின் மேற்பரப்பால் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. வெள்ளியின் மேற்பரப்பு வெப்ப நிலை தோராயமாக 4620C ஆக இருக்கிறது. எனவே தான், சூரிய குடும்பத்தில் வெள்ளி மிகவும் வெப்பமான கோளாக இருக்கிறது.

தூய மழை நீரின் pH மதிப்பு 5.6 ஆக இருக்கிறது. ஆனால் அமில மழையின் pH மதிப்பு 5.6ஐ விடக் குறைவு. ஏனெனில், வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடு மழை நீரில் கரைந்திருக்கிறது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?

அ) முழுமையாக எரியும் வாயு

ஆ) பகுதியளவு எரியும் வாயு

இ) எரிதலுக்குத் துணைபுரியாத வாயு

ஈ) எரிதலுக்குத் துணைபுரியும் வாயு

2. காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _____________ உள்ளது

அ) காற்று

ஆ) ஆக்சிஜன்

இ) கார்பன் டை ஆக்சைடு

ஈ) நைட்ரஜன்

3. சால்வே முறை __________ உற்பத்தி செய்ய பயன்படுகிறது.

அ) சுண்ணாம்பு நீர்

ஆ) காற்றோற்றம் செய்யப்பட்ட நீர்

இ) வாலை வடி நீர்

ஈ) சோடியம் கார்பனேட்

4. கார்பன் டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து ___________ மாற்றுகிறது

அ) நீலலிட்மசை நீலமாக

ஆ) சிவப்பு லிட்மசை நீலமாக

இ) நீலு லிட்மசை மஞ்சளாக

ஈ) லிட்மசுடன் வினைபுரிவதில்லை.

5. அசோட் எனப்படுவது எது?

அ) ஆக்சிஜன்

ஆ) நைட்ரஜன்

இ) சல்பர்

ஈ) கார்பன் டை ஆக்சைடு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. _________ அத்தியாவசியமான உயிர் எனப்படுகிறது.

2. நைட்ரஜன் காற்றை விட ___________

3. _______________ உரமாகப் பயன்படுகிறது.

4. உலர் பனி ____________ ஆகப் பயன்படுகிறது

5. இரும்பை நீரேறிய இரும்பு ஆக்சைடாக மாற்றும் நிகழ்வு ________ எனப்படும்

III. பொருத்துக:

1. நைட்ரஜன் – அ. உயிரினங்களின் சுவாசித்தல்

2. ஆக்சிஜன் – ஆ. உரம்

3. கார்பன் டை ஆக்சைடு – இ. குளிர்பதனப் பெட்டி

4. உலர்பனி – ஈ. தீயணைப்பான்

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. எரிதலுக்குத் துணைபுரியும் வாயு, 2. கார்பன் டை ஆக்சைடு, 3. சோடியம் கார்பனேட், 4. நீல லிட்மசை சிவப்பாக, 5. நைட்ரஜன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஆக்சிஜன், 2. லேசானது, 3. நைட்ரஜன், 4. குளிரூட்டி, 5. துருப்பிடித்தல்

III. பொருத்துக:

1. ஆ, 2. அ, 3. ஈ, 4. இ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!