MCQ Questions

காலங்கள்தோறும் இந்திய பெண்களின் நிலை 8th Social Science Lesson 19 Questions in Tamil

8th Social Science Lesson 19 Questions in Tamil

19. காலங்கள்தோறும் இந்திய பெண்களின் நிலை

கூற்று 1: பண்டைய இந்தியாவின் சிந்துவெளி நாகரிகத்தில் தாய் கடவுளை வணங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

கூற்று 2: பிரிட்டிஷ் ஆட்சியின் போது ராஜா ராம்மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, கேசவ சந்திர சென், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பண்டித ரமாபாய், டாக்டர். முத்துலட்சுமி அம்மையார், ஜோதிராவ் பூலே, பெரியார், டாக்டர் தர்மாம்பாள் போன்ற சமூக சமய சீர்திருத்தவாதிகள் பெண்களின் மேம்பாட்டிற்காக போராடினர்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: பெண்கள் கல்வி கற்பதன் மூலமே சமூக தீமைகளை ஒழிக்க முடியும் என்பதை உணர்ந்த சீர்திருத்தவாதிகள் நாட்டின் பல பகுதிகளிலும் பெண்களுக்கான பள்ளிகளை தொடங்கினர்.)

கூற்று 1: ரிக்வேத காலத்தில் மனைவியின் நிலை போற்றுதலுக்குரியதாக இருந்தது.

கூற்று 2: ரிக்வேத காலத்தில் மதச் சடங்குகளில் பெண்கள் பங்கெடுத்துக் கொள்வது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: ரிக்வேத காலத்தில் மதச் சடங்குகளில் பெண்கள் பங்கெடுத்துக் கொள்வது ஏற்றுக்கொள்ளப்பட்டன.)

தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (இடைக்கால சமூகம்)

A) அரச மற்றும் உயர்தர சமூகத்தினரிடையே சதி எனும் பழக்கம் நடைமுறையில் இருந்தது.

B) முகலாய ஆட்டியாளர் அக்பர் சதி முறையினை ஒழிக்க முயன்றார்.

C) முஸ்லீம் படையெடுப்பின விளைவாக பர்தா முறை பிரபலமானது.

D) இடைக்காலத்தில் கல்விமுறை நன்கு வளர்ச்சி அடைந்து உச்சநிலையில் காணப்பட்டது.

(குறிப்பு: இடைக்காலத்தில் கல்விமுறை ஆரம்பகட்டத்தில் இருந்தது. பெண்ளின் கல்வி முற்றிலும் புறக்கணிக்கப்படவில்லை.)

கூற்று 1: பின்வேத காலத்தில் பெண்களின் சமய வேள்வி செயல்பாடுகளைத் தவிர்த்து, அவர்களின் சமூக மற்றும் அரசியல் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது.

கூற்று 2: பின்வேத காலத்தில் பெண்கள் வேதாகமங்களைப் படிக்க மறுக்கப்பட்டனர்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: பின்வேத காலத்தின் போது சதி எனும் பழக்கம் பிரபலமானது. தந்தை வழி முறை கடுமையானதாக மாறியது.)

ஜவ்கார் எனும் பழக்கம் ___________ இடையே நடைமுறையில் இருந்தது.

A) முகலாயர்கள்

B) மராத்தியர்கள்

C) செளகான்கள்

D) ராஜபுத்திரர்கள்

(குறிப்பு: ஜவ்கார் என்பது அந்நியர்களால் தாங்கள் கைப்பற்றப்படுவதையும், அவமதிக்கப்படுவதையும் தவிர்ப்பதற்காக தோற்கடிக்கப்பட்ட ராஜபுத்திர போர்வீரர்களின் மனைவிகள் மற்றும் மகள்களின் கூட்டு தன்னார்வ தற்கொலை நடைமுறையை குறிப்பிடுகிறது.)

இடைக்காலத்தில் விதிவிலக்காக திகழ்ந்த பெண்கள் யார்?

1. ரசியா சுல்தானா 2. ராணி துர்காவதி 3. சாந்த் பீபி

4. நூர்ஜஹான் 5. ஜஹனாரா 6. ஜிஜாபாய்

7. மீராபாய்

A) அனைத்தும் B) 1, 2, 4, 5 C) 3, 6, 7 D) 1, 2, 4, 7

(குறிப்பு: இடைக்காலத்தில் பெண்களுக்கென தனியாக பள்ளிகள் எதுவும் காணப்படவில்லை. பெண் கல்வி முறையாக இல்லை. பெண்கள் பொதுவாக குழந்தை பருவத்தில் பெற்றோரிடமிருந்து தங்கள் பாடங்களைக் கற்றுக்கொண்டனர்.)

___________நூற்றாண்டில் ஏற்பட்ட தேசிய விழிப்புணர்வின் விளைவாக சமூகத்தில் சீர்திருத்தம் ஏற்பட்டது.

A) 17 B) 18 C) 19 D) 20

(குறிப்பு: கடுமையான சமூக தீமைகள் மற்றும் காலாவதியான பழக்கவழக்கங்களுக்கு எதிராக அறிவார்ந்த மக்கள் பெருமளவில் கிளர்ச்சி செய்தனர்.)

கிறித்துவ அமைப்புகள் முதன் முதலில் பெண் சிறார் சங்கத்தை அமைத்த இடம்

A) ஆக்ரா

B) பம்பாய்

C) மதராஸ்

D) கல்கத்தா

(குறிப்பு: 1819 ஆம் ஆண்டு முதல் பெண் சிறார் சங்கம் அமைக்கப்பட்டது.)

J.E.D பெதுன் என்பவர் ________ ஆண்டு பெதுன் பள்ளியை நிறுவினார்.

A) 1819 B) 1829 C) 1839 D) 1849

(குறிப்பு: J.E.D பெதுன் என்பவர் கல்கத்தாவில் கல்வி கழகத்தின் தலைவராக இருந்தார்.)

___________ ஆண்டின் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.

A) 1852 B) 1853 C) 1854 D) 1855

__________ ஆண்டில் இந்தியக் கல்விக் (ஹண்டர்) குழு சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளியையும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையும் தொடங்க பரிந்துரைத்தது.

A) 1880 B) 1882 C) 1884 D) 1886

(குறிப்பு: ஹண்டர் குழு சிறுமிகளுக்கு சிறப்பு உதவித்தொகை மற்றும் பரிசுகளை வழங்கவும் பரிந்துரைத்தது.)

இந்தியப் பெண்கள் பல்கலைக் கழகங்களில் நுழையத் தொடங்கிய ஆண்டு

A) 1880 B) 1881 C) 1882 D) 1883

(குறிப்பு: இக்காலக்கட்டத்தில் பெண்கள் மருத்துவர்களாகவும் ஆசிரியர்களாகவும் பயிற்சி பெற்றனர்.)

_________ ஆண்டில் மகளிர் மருத்துவ சேவை அமைப்பு செவிலியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் பெரும்பங்காற்றியது.

A) 1912 B) 1913 C) 1914 D) 1915

1890களில் D.K.கார்வே என்பவர் __________ல் ஏராளமான பெண் பள்ளிகளை நிறுவினார்.

A) 1870 B) 1885 C) 1890 D) 1892

(குறிப்பு: பேராசிரியர் D.K. கார்வே, பண்டித ரமாபாய் ஆகியோர் கல்வியறிவின் மூலம் பெண்கள் விடுதலை பெற தீவிர முயற்சி எடுத்தனர்.)

இந்திய மகளிர் பல்கலைக்கழகம் பேராசிரியர் D.K.கார்வேவால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

A) 1890 B) 1897 C) 1906 D) 1916

(குறிப்பு: இது பெண்களுக்கு கல்வியை வழங்குவதில் சிறந்த நிறுவனமாக விளங்கியது.)

சதி ஒழிப்புச் சட்டம் _________ ஆண்டு இயற்றப்பட்டது.

A) 1819 B) 1823 C) 1829 D) 1856

(குறிப்பு: ராஜா ராம்மோகன் ராயின் முயற்சியினால் சதி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டது.)

1916 ஆம் ஆண்டில் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி எங்கு தொடங்கப்பட்டது?

A) பம்பாய்

B) கல்கத்தா

C) டெல்லி

D) புனே

கீழ்க்கண்ட எந்த இடங்களில் பெண்சிசுக்கொலையானது அதிகமாக நடைமுறையில் இருந்தது?

1. ராஜபுதனம் 2. பீகார் 3. பஞ்சாப்

4. ஆக்ரா 5. வடமேற்கு மாகாணங்கள்

A) 1, 2, 3 B) 1, 3, 4 C) 1, 3, 5 D) 2, 4, 5

(குறிப்பு: பெண்சிசுக்கொலை என்பது 19ஆம் நூற்றாண்டில் இந்திய சமுதாயத்தை பாதித்த ஒரு மனிதாபிமானமற்ற நடைமுறையாகும்.)

கூற்று 1: பெண்சிசுக்கொலையானது பொருளாதார சுமையைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டன.

கூற்று 2: குடும்பப் பெருமை, சமூக பாதுகாப்பு, பெண் குழந்தைக்கு பொருத்தமான வரனை கண்டுபிடிக்க முடியாது என்ற பயம் போன்ற காரணிகளே பெண்சிசுக்கொலை நடைமுறைக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் கீழ்க்கண்ட எந்த சட்டங்களின் மூலம் பெண்சிசுக் கொலையை தடை செய்தது?

1. 1795 வங்காள ஒழுங்காற்றுச் சட்டம் XXI

2. 1793 ஒழுங்குமுறைச் சட்டம்

3. 1802 ஒழுங்குமுறைச் சட்டம்

4. 1870 பெண்சிசுக்கொலை தடுப்புச் சட்டம்

A) அனைத்தும் B) 1, 2, 3 C) 2, 3, 4 D) 1, 3, 4

__________ ஆண்டில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு திருமணச் சட்டம் மூலம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 14 ஆகவும், ஆண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

A) 1846 B) 1856 C) 1864 D) 1872

(குறிப்பு: குழந்தைத் திருமணம் பழங்குடியினரிடையே வழக்கத்தில் இருந்தது.)

1846ஆம் ஆண்டில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது __________ ஆக இருந்தது.

A) 8 B) 10 C) 12 D) 14

_________ குழந்தை திருமணத்தை தடுத்ததுடன் திருமணத்திற்கு முன் மணமகன் மற்றும் மணமகனின் ஒப்புதலை பெற்றோர்கள் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

A) பாபர்

B) உமாயூன்

C) அக்பர்

D) ஷாஜகான்

(குறிப்பு: அக்பர் பெண்ணிற்கான திருமண வயது 14 எனவும் ஆண்களுக்கான திருமண வயது 16 எனவும் நிர்ணயித்தார்.)

மத்திய சட்டப்பேரவையில் ராய்சாகிப் ஹர்பிலாஸ் சாரதா குழந்தை திருமண மசோதா கொண்டுவரப்பட்ட ஆண்டு

A) 1927 B) 1929 C) 1930 D) 1932

(குறிப்பு: இச்சட்டம் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 எனவும் பெண்களுக்கான திருமண வயது 14 ஆகவும் நிர்ணயித்தது.)

விதவை மறுமண சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு __________.

A) 1853 B) 1854 C) 1855 D) 1856

(குறிப்பு: வித்யாசாகரின் அயராத முயற்சியால் விதவைப் பெண்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதுடன் விதவை மறுமண சட்டமும் இயற்றப்பட்டது.)

ராய்சாகிப் ஹர்பிலாஸ் சாரதா குழந்தை திருமண மசோதா திருத்தப்பட்டு பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது ____________ ஆக மாற்றப்பட்டது.

A) 15 B) 16 C) 17 D) 18

(குறிப்பு: இத்திருத்தத்தில் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக மாற்றப்பட்டது.)

இத்தாலிய பயணி நிக்கோலோ கோண்டி விஜயநகருக்கு வருகைப்புரிந்த ஆண்டு

A) கி.பி 1418

B) கி.பி 1420

C) கி.பி 1422

D) கி.பி 1423

(குறிப்பு: இவர் தனது குறிப்புகளில் ‘அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பல பெண்களை திருமணம் செய்து கொண்டனர் என்றும் பெண்கள் இறந்த தன் கணவருடன் எரிக்கப்பட்டனர்” என்றும் குறிப்பிடுகிறார்.)

ராம்மோகன் ராயின் சகோதரர் ஜெகன்மோகன்ராய் காலமான ஆண்டு

A) 1809 B) 1811 C) 1812 D) 1813

(குறிப்பு: 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சதி என்னும் பழக்கம் வங்காளத்தின் பல பகுதிகளிலும் மேற்கு இந்தியா மற்றும் தென் இந்தியாவிலும் நடைமுறையில் இருந்தது.)

“சதி எனும் சடங்கு சாஸ்திரங்களால் கட்டளையிடப்படவில்லை” என்பதை கட்டுரையின் மூலம் எடுத்துக் கூறியவர்

A) வில்லியம் பெண்டிங் பிரபு

B) ராஜா ராம்மோகன் ராய்

C) விவேகானந்தர்

D) பவானி சரண் பானர்ஜி

(குறிப்பு: ராஜா ராம் மோகன் ராய் 1818 – 20 இல் சதி தொடர்பாக பல கட்டுரைகளை வெளியிட்டார்.)

கூற்று 1: சதி எனும் சடங்கு இந்து மதத்தின் ஒரு அங்கம் என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தை சிதைக்க செராம்பூர் சமயப் பரப்புக் குழுக்களில் சதி ஒழிப்பு கருத்துகள் பயன்படுத்தப்பட்டது.

கூற்று 2: பழமையான இந்து பழக்கமான சதி ஒழிப்புக்கு எதிராக ராதாகந்த் தேப் மற்றும் பவானி சரண் பானர்ஜி ஆகியோர் தங்களது கருத்துகளை வெளியிட்டனர்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

வில்லியம் பெண்டிங் பிரபு சதி ஒழிப்பு சட்டத்தை ( விதிமுறை XVII ) நிறைவேற்றிய நாள்

A) டிசம்பர் 24 1829

B) டிசம்பர் 18, 1829

C) டிசம்பர் 14, 1829

D) டிசம்பர் 4, 1829

(குறிப்பு: இச்சட்டத்தின் மூலம் சதியில் ஈடுபடுவது அல்லது எரித்தல் அல்லது இந்து விதவைகளை உயிருடன் புதைத்தல் ஆகியவை சட்டத்திற்கு புறம்பானது மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களால் தண்டிக்கக் கூடியவை எனவும் அறிவித்தார்.)

தேவதாசி அல்லது தேவர் அடியாள் என்ற வார்த்தையின் பொருள்

A) அரசரின் சேவகர்

B) கடவுளின் சேவகர்

C) மக்களின் சேவகர்

D) இயற்கையின் சேவகர்

(குறிப்பு: தேவதாசி – சமஸ்கிருதம், தேவர் அடியாள் – தமிழ்.)

தேவதாசி முறைக்கு எதிரான டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் போராட்டத்தை பாராட்டும் வகையில் __________ ஆண்டு அவர் சென்னை சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டார்.

A) 1919 B) 1922 C) 1925 D) 1929

(குறிப்பு: இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், கொடுமையான தேவதாசி முறையை தமிழ்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.)

கூற்று 1: பெரியார் ஈ.வெ.ரா “தேவதாசி ஒழிப்பு மசோதாவை” நிறைவேற்றுதுதில் முக்கிய கருவியாக செயல்பட்டார்.

கூற்று 2: 1929 இல் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் இம்மசோதாவை சென்னை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: 1930 இல் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் இம்மசோதாவை சென்னை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார்.)

மூவலூர் ராமாமிர்தம் அவர்கள் யாருடைய ஆதரவுடன் தேவதாசிகளின் விடுதலைக்காக முழக்கம் எழுப்பினார்?

1. ராஜாஜி 2. பெரியார்

3. திரு.வி.க 4. அம்பேத்கர்

A) அனைத்தும் B) 1, 2, 3 C) 2, 3, 4 D) 1, 3, 4

மதராஸ் தேவதாசி சட்டம் __________ ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

A) அக்டோபர் 9, 1930

B) ஆகஸ்ட் 9, 1930

C) அக்டோபர் 9, 1947

D) ஆகஸ்ட் 9, 1947

(குறிப்பு: மதராஸ் மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் தேவதாசிகளுக்கு சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் உரிமையை வழங்கியதுடன், இந்திய கோவில்களுக்கு பெண் குழந்தைகளை தானமாக வழங்குவது சட்டவிரோதம் எனவும் அறிவித்தது.)

__________ இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ஆவார்.

A) ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

B) கந்துகூரி வீரேசலிங்கம்

C) எம்.ஜி. ரானடே

D) ராஜா ராம்மோகன் ராய்

(குறிப்பு: இந்தியாவில் காணப்பட்ட சமூக அடக்குமுறைகளை சீர்திருத்த முயன்ற பிரிட்டிஷாரின் முயற்சியை ராஜா ராம்மோகன் ராய் ஆதரித்தார்.)

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பெண்கல்வி, விதவை மறுமணம் ஆகியவற்றை ஆதரிக்கவும் பலதார மணத்தை ஒழிப்பதற்காகவும் _________ல் ஒரு இயக்கத்தை மேற்கொண்டார்.

A) டெல்லி

B) பம்பாய்

C) வங்காளம்

D) சென்னை

(குறிப்பு: 1856 இல் இந்து விதவை மறுமணச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்திய சட்டமன்றத்திற்கு ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பல மனுக்களை சமர்பித்தார்.)

கீழ்க்கண்ட எந்த இடங்களில் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பெண்கள் பள்ளியை நிறுவினார்?

1. நாடியா 2. மிட்னாபூர்

3. ஹூக்ளி 4. பர்த்வான்

A) அனைத்தும் B) 1, 2, 4 C) 1, 2, 3 D) 1, 3, 4

(குறிப்பு: மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வித்யாசாகருடைய மகன் நாராயணச்சந்திரா, ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டார்.)

கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு __________ என்ற பத்திரிகையை வெளியிட்டார்.

A) சக்கரவர்த்தினி

B) விவேகவர்தினி

C) இந்தியா

D) பாரதம்

(குறிப்பு: கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு தென்னிந்தியாவில் மகளிர் விடுதலைக்காக போராடிய ஆரம்பகால போராளி ஆவார்.)

கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு _________ ஆண்டு தனது முதல் பெண்கள் பள்ளியை திறந்தார்.

A) 1852 B) 1865 C) 1868 D) 1874

(குறிப்பு: இவர் பெண்கல்வி மற்றும் விதவை மறுமணம் ஆகியவற்றை சமூக சீர்திருத்தத்திற்கான தனது திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக கொண்டார்.)

எம்.ஜி. ரானடே மற்றும் பி.எம். மலபாரி ஆகியோர் __________இல் பெண்கள் முன்னேற்றத்திற்கான இயக்கத்தை நடத்தினர்.

A) கல்கத்தா

B) வாரணாசி

C) பம்பாய்

D) மைசூர்

ரானடே விதவை மறுமண சங்கத்தில் சேர்ந்த ஆண்டு

A) 1858 B) 1862 C) 1869 D) 1872

(குறிப்பு: இச்சங்கத்தில் சேர்ந்ததன் மூலம் ரானடே, விதவை மறுமணம் மற்றும் பெண்கல்வியை ஊக்குவித்ததுடன் குழந்தை திருமணத்தை எதிர்த்தார்.)

ரானடே, இந்திய தேசிய சமூக மாநாட்டை தொடங்கிய ஆண்டு

A) 1875 B) 1879 C) 1884 D) 1887

பி.எம்.மலபாரி _________ ஆண்டு குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான ஒரு இயக்கத்தைத் தொடங்கினார்.

A) 1854 B) 1868 C) 1878 D) 1884

(குறிப்பு: பத்திரிக்கையாளரான பி.எம்.மலபாரி துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.)

கோபால கிருஷ்ண கோகலே __________ ஆண்டு இந்திய ஊழியர் சங்கத்தை தொடங்கினார்.

A) 1892 B) 1895 C) 1905 D) 1908

(குறிப்பு: இச்சங்கம் தொடக்கக்கல்வி, பெண்கல்வி மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் மேம்பாடு ஆகியவற்றில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது.)

சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. பிரம்ம சமாஜம் – 1828

2. பிரார்த்தனை சமாஜம் – 1867

3. ஆரிய சமாஜம் – 1875

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

_________ ஆண்டு இந்து விதவைகளுக்காக சாரதா சதன் எனும் அமைப்பினை பண்டித ரமாபாய் திறந்தார்.

A) 1882 B) 1889 C) 1892 D) 1894

(குறிப்பு: சாரதா சதன் என்பதன் பொருள் கற்றல் இல்லம் என்பதாகும்.)

பண்டித ரமாபாயால் சாரதா சதன் எனும் அமைப்பு எங்கு திறக்கப்பட்டது?

A) கல்கத்தா

B) வாரணாசி

C) பம்பாய்

D) மைசூர்

(குறிப்பு: பின்னர் இந்த அமைப்பு பூனாவுக்கு மாற்றப்பட்டது.)

இந்தியாவில் விதவைகளுக்கு முதன்முதலில் கல்வி புகட்ட முயற்சி மேற்கொண்டவர்

A) ருக்மாபாய்

B) தாராபாய்

C) பண்டித ரமாபாய்

D) ராஜா ராம்மோகன் ராய்

டாக்டர் S. தர்மாம்பாள் யாருடைய கருத்துக்களால் கவரப்பட்டார்?

A) முத்துலட்சுமி அம்மையார்

B) பெரியார்

C) அம்பேத்கர்

D) ராஜா ராம்மோகன் ராய்

(குறிப்பு: தர்மாம்பாள் விதவை மறுமணத்தை செயல்படுத்துவதிலும் பெண்கல்வியிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்.)

கூற்று 1: சீர்திருத்தவாதியான டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருடன் இணைந்து தேவதாசி முறைக்கு எதிராக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் குரல் எழுப்பினார்.

கூற்று 2: ராமாமிர்தம் அம்மையார் நினைவாக தமிழக அரசு “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி” திட்டத்தை தொடங்கியது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி” திட்டம் மூலம் ஏழைப் பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.)

கூற்று: இந்தியாவில் இந்திய பெண்கள் சங்கம், தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் அனைத்து இந்திய பெண்கள் மாநாடு போன்ற மூன்று மிகப்பெரிய பெண்கள் அமைப்புகள் நிறுவப்பட்டது.

காரணம்: தங்களின் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தங்களுக்கானதொரு சங்கம் நிறுவப்படுவதன் அவசியத்தை புகழ்பெற்ற பெண்கள் உணர்ந்தனர்.

A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை

B) கூற்று சரி, காரணம் தவறு

C) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

பின்வருவனவற்றுள் சீர்திருத்த இயக்கத்தின் தாக்கங்கள் எவை?

1. பெண்களின் விடுதலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.

2. மக்களிடையே தேசிய விழிப்புணர்வை உருவாக்கியது.

3. தியாகம், சேவை மற்றும் பகுத்தறிவு உணர்வு ஆகியவற்றை உருவாக்கியது.

4. சதி மற்றும் பெண்சிசுக்கொலை ஆகியவை சட்டவிரோதமாக்கப்பட்டது.

5. விதவை மறுமணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

A) அனைத்தும் B) 1, 3, 4, 5 C) 1, 2, 4, 5 D) 1, 2, 5

தவறான இணையைத் தேர்ந்தெடு. (முக்கிய சட்டவிதிகள்-முக்கிய பிரிவுகள்)

A) இந்து விதவைகள் மறுமணச் சட்டம், 1856 – விதவைகள் மறுமணம் செய்ய அனுமதித்தது.

B) உள்நாட்டு திருமணச் சட்டம், 1872 – பலதார மணம் தடை செய்யப்பட்டது.

C) சாரதா சட்டம் 1930 – சிறுவர்கள் சிறுமிகளுக்கான திருமண வயது உயர்த்தப்பட்டது.

D) தேவதாசி ஒழிப்புச் சட்டம், 1947 – தேவதாசி முறையை ஒழித்தது.

(குறிப்பு: உள்நாட்டு திருமணச் சட்டம், 1872 – குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டது.)

சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. வங்காள ஒழுங்குமுறைச் சட்டம் XXI, 1804 – பெண்சிசுக்கொலை சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது.

2. ஒழுங்குமுறை XVII, 1829 – சதி எனும் பழக்கம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

கூற்று 1: பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான தேசிய கொள்கையானது, தேசிய கல்விக் கொள்கை (1976) கீழ் நிறைவேற்றப்பட்டது.

கூற்று 2: ‘மஹிளா சமக்யா’ எனும் திட்டமானது பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான தேசிய கொள்கையானது, தேசிய கல்விக் கொள்கை (1986) கீழ் நிறைவேற்றப்பட்டது)

சமவாய்ப்பு மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் என உத்திரவாதமளிக்கும் இந்திய அரசியலமைப்பு பிரிவு

A) பிரிவு 12

B) பிரிவு 13

C) பிரிவு 14

D) பிரிவு 15

பெண்களுக்கு _________ சதவீத இடத்தை ஒதுக்கியது பெண்களின் சமூக-அரசியல் செல்வாக்கில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.

A) 15% B) 22% C) 33% D) 38%

பெண்களுக்கான தேசிய ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது?

A) ஜனவரி 1991

B) டிசம்பர் 1991

C) ஜனவரி 1992

D) டிசம்பர் 1992

(குறிப்பு: பெண்கள் தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்வது, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் உரிமைகள் மறுப்பு குறித்த தனிப்பட்ட புகார்களில் தலையிடுவது இதன் முக்கிய பணிகள் ஆகும்.)

_________ சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

A) மனித

B) விலங்கு

C) காடு

D) இயற்கை

பொருத்துக.

1. பிரம்மஞான சபை i) இத்தாலிய பயணி

2. சாரதா சதன் ii) சமூக தீமை

3. வுட்ஸ் கல்வி அறிக்கை iii) அன்னிபெசன்ட்

4. நிக்கோலோ கோண்டி iv) பண்டித ரமாபாய்

5. வரதட்சணை v) 1854

A) ii iv v i iii

B) iii iv v i ii

C) iv iii v ii i

D) v iv ii i iii

சரியான இணையைத் தேர்ந்தெடு.

A) மகளிர் பல்கலைக்கழகம் – பேராசியர் D.K கார்வே

B) நீதிபதி ரானடே – ஆரிய சமாஜம்

C) விதவை மறுமணச் சட்டம் – 1855

D) ராணி லட்சுமி பாய் – டெல்லி

(குறிப்பு: ராணி லட்சுமிபாய் – ஜான்சி, விதவை மறுமணச் சட்டம் – 1856, ரானடே – இந்திய தேசிய சமூக மாநாடு)

சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. பேகம் ஹஸ்ரத் மஹால், ராணி லட்சுமிபாய் ஆகியோர் ஆங்கிலேயர் மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

2. தமிழ்நாட்டின் சிவகங்கையைச் சேர்ந்த வேலுநாச்சியார், பிரிட்டிஷாருக்கு எதிராக வீரமாக போராடினார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!