MCQ Questions

சாலை பாதுகாப்பு 9th Social Science Lesson 16 Questions in Tamil

9th Social Science Lesson 16 Questions in Tamil

16. சாலை பாதுகாப்பு

1. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1) சாலை விபத்து என்பது திறந்த வெளிசாலையில் ஒரு வாகன விபத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர் காயமடைவதையோ (அ) இறப்பதையோ குறிக்கும்.

2) கொலை, தற்கொலை (ம) இயற்கை பேரிடர் போன்றவை சாலை விபத்தில் அடங்காது.

அ) கூற்று 1 சரி

ஆ) கூற்று 2 சரி

இ) கூற்று 1,2 சரி

ஈ) எதுவுமில்லை

2. உலகின் மிக மோசமான சாலை விபத்துக்களைக் கொண்ட நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) பிரான்ஸ்

இ) இத்தாலி

ஈ) இந்தியா

குறிப்பு: ஆண்டுக்கு 1,30,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புடன் இந்தியா உலகின் மிக மோசமான சாலை விபத்துக்களைக் கொண்ட நாடாக உள்ளது.

3. பின்வருவனவற்றில் எது சாலை விபத்துக்களுக்கான முக்கியமான காரணமல்ல?

அ) அதிவேகம்

ஆ) மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது

இ) முறையற்ற சாலை வசதிகள்

ஈ) முறையற்ற ஓட்டுனர் பயிற்சி

குறிப்பு:

4. உலகளவில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான பத்தாவது முதன்மைக் காரணி எது?

அ) கொலை

ஆ) தற்கொலை

இ) சாலை விபத்து

ஈ) நோய்த்தொற்றுகள்

குறிப்பு: சாலை விபத்துக்கள் காயத்தால் ஏற்படும் மரணங்களுக்கு முதன்மைக் காரணிகளாகவும், உலகளவில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான பத்தாவது முதன்மைக் காரணியாகும்.

5. ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் ஏற்படும் இறப்புக்களின் எண்ணிக்கை

அ) 1.2 மில்லியன்

ஆ) 2.2 மில்லியன்

இ) 2.4 மில்லியன்

ஈ) 2.5 மில்லியன்

குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் ஏறக்குறைய 50 மில்லியன் பேர் காயமைடைகிறார்கள்.

6. சாலை விபத்தில் ஏற்படும் மரணங்களுக்கான முக்கிய காரணங்களையும் அதற்கான சதவீதத்தையும் பொருத்துக.

(1) அதிவேகம் – 5%

(2) குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது – 24%

(3) வாகன எண்ணிக்கை அதிகரிப்பு – 15%

(4) சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனம் – 40%

(5) தலைக்கவசம் மற்றும் இருக்கைப்பட்டையை

குறைவாகப் பயன்படுத்துவது – 16%

அ) 5 1 2 3 4

ஆ) 2 4 1 5 3

இ) 5 1 4 2 3

ஈ) 2 5 3 4 1

7. சாலை விபத்துக்கான முக்கியமான காரணங்கள் எவை?

அ) சிவப்பு விளக்கு எரியும் போது சாலையைக் கடப்பது

ஆ) ஓட்டுநருக்கு ஏற்படும் கவனச்சிதைவு

இ) தவறான முறையில் பிற வாகனங்களை முந்திச் செல்வது

) மேற்கூறிய அனைத்தும்

8. இந்தியா விபத்துக்கள் அறிக்கை 2016ன் படி, சாலை விபத்துக்களில் முதலில் உள்ள நகரம்

அ) சென்னை

ஆ) மும்பை

இ) இந்தூர்

ஈ) ஹைதராபாத்

9. இந்தியா விபத்துக்கள் அறிக்கை 2016ன் படி, சாலை விபத்துக்களில் கடைசி இடத்தைப் பிடித்த நகரம்

அ) சென்னை

ஆ) மும்பை

இ) இந்தூர்

ஈ) ஹைதராபாத்

குறிப்பு:

10. பொருத்துக

(1) பாதசாரிகள் – ஆலங்கட்டி மழை

(2) பயணிகள் – கவனக்குறைவு

(3) சாலையின் நிலை – ஓட்டுநரிடம் பேசுவது

(4) வானிலை – குழிகள்

அ) 4 1 2 3

ஆ) 2 4 1 3

இ) 1 4 2 3

ஈ) 2 3 4 1

11. சரியானவற்றைத் தேர்ந்தெடு

(1) ஓட்டுனர் அதிவேகமாக வாகனத்தை இயக்கக்கூடாது.

(2) பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போது கவனமாகக் கடக்க வேண்டும்.

(3) பயணிகள் ஓடுகிற வண்டியில் ஏறக்கூடாது.

அ) கூற்று 1 சரி

ஆ) கூற்று 2 சரி

இ)கூற்று 3 சரி

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு:

12. சாலை விபத்தின் நேரடியான விளைவுகள் யாவை?

அ) மரணம்

ஆ) காயம்

இ) பொருட்சேதம்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

13. கீழ்க்கண்டவற்றில் எதன் மூலம் சாலைவிபத்தைத் தடுக்க முடியும்?

அ) சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துதல்

ஆ) சாலை விபத்தைப் பற்றிய கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு

) வாகன வடிவமைப்பு மற்றும் சாலை கட்டமைப்பு தொழில்நுட்பம்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

14. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) சாலை விபத்துக்கான பல்வேறு காரணிகள் ஓட்டுனர், பாதசாரிகள், பயணிகள், வாகனங்கள், சாலையின் நிலை மற்றும் வானிலை ஆகும்

(2) இருக்கைப்பட்டை பயன்படுத்துவதன் மூலம் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பை 51% தடுக்கலாம்.

அ) கூற்று 1 சரி

ஆ) கூற்று 2 சரி

இ) கூற்று 1,2 சரி

ஈ) எதுவுமில்லை

15. கூற்று: 2016 விபத்துக்கள் அறிக்கையின்படி, மிக அதிகமான நபர்கள் இறப்பதற்கு அதிகமான இரு சக்கர வாகனப்பயன்பாடாகும்.

காரணம்: மாட்டுவண்டி, கையால் இழுக்கப்படும் வண்டி, மிதிவண்டி போன்ற மற்ற வாகனங்களைப் பயன்படுத்தினால் சாலை இறப்பு விகிதத்தைக் குறைக்கலாம்.

அ) கூற்று, காரணம் இரண்டும் சரி

ஆ) கூற்று மட்டும் சரி

இ) காரணம் மட்டும் சரி

ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு

குறிப்பு:

16. 2002 உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி, எந்த வயதுக்குழுவைச் சார்ந்தோர் அதிகளவில் சாலை விபத்தில் இறந்துள்ளனர்?

அ) 15-20

ஆ) 5-14

இ) 30-44

ஈ) 15-29

17. 2002 உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி, கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு.

அ) அனைத்து வயதுக் குழுவைச் சார்ந்தோரிலும் பெண்களை விட ஆண்களே அதிகமாக இறந்துள்ளனர்.

ஆ) சாலை விபத்துக்களில் இறந்தவர்களில், 60 வயதுக்கும் மேற்பட்டோர் குறைவாகவே உள்ளனர்.

இ) 0-4 வயதுக்குழுவிலும் பெண் குழந்தைகளைக்காட்டிலும், ஆண் குழந்தைகளே அதிகமாக இறந்துள்ளனர்.

ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி

குறிப்பு:

18. கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு

அ) குழந்தைகளுக்கு சாலைப்பாதுகாப்பு விதிகளை அவர்களின் எல்லைகளுக்கு மேல் திணிக்கக்கூடாது.

ஆ) குழந்தைகள் சாலைப்பாதுகாப்பு விதிகளைத் தெரிந்து கொள்வது இன்றியமையாதது.

இ) சாலையில் ஓடாதீர் என்பது குழந்தைகளுக்கான அடிப்படை சாலைப்பாதுகாப்பு விதிகளில் ஒன்றாகும்.

ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி

19. கீழ்க்கண்டவற்றுள் குழந்தைகளுக்கான அடிப்படை சாலைப்பாதுகாப்பு விதிகள் எவை?

அ) வளைவில் சாலையைக் கடக்காதீர்

ஆ) நில் கவனி செல்

இ) வாகனத்தின் வெளியில் கையை நீட்டாதீர்

ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி

குறிப்பு:

20. இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் எடுக்க தகுதியான வயது என்ன?

அ) 20

ஆ) 19

இ) 18

ஈ) 17

குறிப்பு: பதினாறு வயது முடிந்திருந்தால் கியர் இல்லாத மொபெட் வகை வாகனம் ஓட்டுவதற்கும், பதினெட்டு வயது கியர் வகை வாகனங்கள் ஓட்டுவதற்கும் ஓட்டுநர் உரிமம் பெறலாம்.

21. இந்தியாவில் வாகனங்கள் ஒட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்பதை எந்த ஆண்டு மோட்டார் வாகனச்சட்டம் வரையறுக்கிறது?

அ) 1988

ஆ) 1980

இ) 1990

ஈ) 1981

22. குழந்தைகளுக்கு சாலை விதிகளை கற்பிக்க சிறந்த வழிமுறை எது?

அ) காணொலி

ஆ) இசை

இ) விளையாட்டு

ஈ) கட்டுரைகள்

23. கீழ்க்கண்ட சாலை விபத்துக்கான காரணிகளில் எது வாகனங்களுடன் தொடர்புடையது?

அ) கனமழை

ஆ) கல்வியறிவின்மை

இ) சட்டத்துக்கு புறம்பான வேகத்தடைகள்

ஈ) கட்டுப்பாட்டை இழப்பது

குறிப்பு: வாகனம் கட்டுப்பாட்டை இழப்பது, டயர் வெடிப்பது, குறைவான வெளிச்சம், அதிக சுமை ஏற்றுவது ஆகியவை வாகனங்களுடன் தொடர்புடைய சாலை விபத்துக்கான காரணிகளாகும்.

24. இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணியை நிர்வகிக்கும் அமைப்பு எது?

அ) மத்திய போக்குவரத்து அலுவலகங்கள்

ஆ) மாநில போக்குவரத்து அலுவலகங்கள்

இ) மண்டல போக்குவரத்து அலுவலகங்கள்

ஈ) மேற்கூறிய ஏதுமில்லை

25. குழந்தைகள் சாலைப்பாதுகாப்பு பற்றி கற்றுக் கொள்ளும் சில செயல்பாடுகள் யாவை?

அ) குறுக்கெழுத்து

ஆ) யூகிக்கும் விளையாட்டு

இ) சிவப்பு விளக்கு, பச்சை விளக்கு

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!