Ethics QuestionsIndus Valley Civilization Notes - சிந்து சமவெளி நாகரிகம் பாடக்குறிப்புகள்

சிந்துவெளி நாகரிகம் 11th Ethics Lesson 2 Questions

சிந்துவெளி நாகரிகம் 11th Ethics Lesson 2 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions.

First time preparing candidates get idea how to study and how to start, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also these questions framed with answers and explanation, best practice for all tn govt exam aspirants.

11th Ethics Lesson 2 Questions

2] சிந்துவெளி நாகரிகம்

1) இந்தியாவில் தோன்றிய பழமையான நாகரிகம் எது?

A) சிந்துவெளி நாகரிகம்

B) ஹரப்பா நாகரிகம்

C) மொகஞ்சதாரோ நாகரிகம்

D) திராவிட நாகரிகம்

விளக்கம்: இந்தியாவில் தோன்றிய பழமையான நாகரிகம், சிந்துவெளி நாகரிகம், ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ ஆகிய தொல்பொருள் சின்னங்கள் இதன் கூறுகளாக அமைந்துள்ளது.

2) சிந்துவெளி நாகரிகம் என்பது ஓர்?

A) நகர நாகரிகம்

B) கிராம நாகரிகம்

C) கிராம மற்றும் நகர நாகரீகத்தின் கலப்பு

D) எதுமில்லை

விளக்கம்: சிந்துவெளி நாகரிகம் என்பது, சிந்துநதிக்கரையில் செழித்து வளர்ந்த நகர நாகரிகம் ஆகும். இது. சிந்து ஆற்றங்கரையில் தோன்றி வளர்த்தமையால் சிந்துவெளி நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது.

3) சிந்துவெளி நாகரிகம் எப்போது கண்டறியப்பட்டது?

A) 1920

B) 1921

C) 1922

D) 1928

விளக்கம்: சுமார் 5000 ஆண்டுகள் பழமையான சிந்துவெளி நாகரிகம் 1921-இல் கண்டறியப்பட்டது. இங்கு வாழ்ந்தவர்கள் இந்தியாவின் பழமையான குடிமக்களே என்ற கருத்தொற்றுமை நிலவுகிறது

4) பழைய பஞ்சாபின் மணாட்கொமரி மாவட்டத்தில் ராவி-லட்லஜ் ஆறுகளுக்கு இடையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருள் சின்னம் எது?

A) ஹரப்பா

B) மொகஞ்சதாரோ

C) லோத்தல்

D) காலிபங்கன்

விளக்கம்: மாண்ட்கொமரி மாவட்டம் பாகிஸ்தானில் உள்ளது. 1920-ல் இங்கு அகழ்வாய்வு நடைபெற்றது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட நகரமே ஹரப்பா ஆகும்.

5) எந்த ஆண்டு மொகஞ்சதாரோ கண்டுபிடிக்கப்பட்டது?

A) 1920

B) 1921

C) 1922

D) 1928

விளக்கம்: 1922 ஆம் ஆண்டு, சிந்து மாகாணத்தில்(பாகிஸ்தான்) லர்க்கானா மாவட்டத்தில் 70 அடி உயரமுள்ள மண்மேடு ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது. இச்சின்னத்தை மொகஞ்சதாரோ என்பர்.

6) சிந்துவெளி நாகரீக அகழ்வாய்வை மேற்கொண்டவர் யார்?

A) சர் ஜான் மார்ஷல்

B) தயா ராம் சஹானி

C) பானர்ஜி

D) ராய் பகதூர்

விளக்கம்: சர் ஜான் மார்ஷல் 1902 முதல் 1928 வரை இந்திய அகழாய்வுப் பணியின் பொது இயக்குனராகப் பணியாற்றினார். ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ ஆகிய இரு நகர அகழாய்வுகளையும் மேற்கொண்டார். 1931 முதல் 1935 வரை தயா ராம் சஹானி, இந்திய அகழாய்வுத் துறையின் போது இயக்குனராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் தயா ராம் சஹானி, சர் ஜான் மார்ஷலின் கீழ் பணிபுரிந்து அகழாய்வை 1921-22-ல் மேற்கொண்டார்.

7) சிந்துவெளி நாகரீகத்தின் காலம் கி.மு.3250 முதல் கி.மு 2750 வரை எனக் கூறியவர் யார்?

A) சர் ஜான் மார்ஷல்

B) தயா ராம் சஹானி

C) பானர்ஜி

D) ராய் பகதூர்

விளக்கம்: சிந்துவெளி அகழாய்வினை மேற்கொண்ட தொல்லியாளர், ‘சர் ஜான் மார்ஷல்’. இவர் தொல்பழங்காலத்திலேயே சிறப்புற்று விளங்கிய திராவிட நாகரீகத்துடன் சிந்துவெளி நாகரீகத்தை ஒப்பிடுகிறார். இவரின் கூற்றுப்படி, இந்த நாகரிகம் வேதகாலத்திற்கு முற்பட்டதாக உள்ளது எனவும், இதன் காலம் கி.மு.(பொ.ஆ.மு) 3250 முதல் கி.மு.(பொ.ஆ.மு) 2750 வரை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

8) எந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழாய்வுகள், தமிழ்நாட்டிற்கும் சிந்துவெளி நாகரீகத்திற்குமிடையே தொடர்பு இருப்பதை வெளிப்படுத்துகின்றனர்?

A) சான்குந்தாரோ, கோட்டிஜி

B) லோத்தல், அரிக்காமேடு

C) ஆதிச்சநல்லூர், காளிபங்கன்

D) ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு

விளக்கம்: சான்குந்தாரோ, கோட்டிஜி, லோத்தல், காளிபங்கன் போன்ற இடங்களில் சிந்துவெளி நாகரீகச் சின்னங்கள் காண்டுபிடிக்கப்பட்டன. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழாய்வுகள் தமிழ்நாட்டிற்கும் சிந்துவெளி நாகரீகத்திற்குமிடையே தொடர்பு இருப்பதை வெளிப்படுத்துகின்றது. இதன் மூலம் பழமையான நகர நாகரிகம் தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதைத் தொல்லியலாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

9) பலுசிஸ்தானில் இன்றுவரை பேசப்பட்டு வரும் திராவிட மொழி எது?

A) தமிழ்

B) தெலுங்கு

C) மலையாளம்

D) பிராகுயி

விளக்கம்: பலுசிஸ்தானில் பிராகுயி என்ற திராவிட மொழி இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. தமிழ் பிராமி, வட்டெழுத்து மற்றும் வரிவடிவங்களில் பொறிக்கப்பட்டுள்ள தொடக்க காலத் தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படும் பல இடப்பெயர்கள் இன்றைய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற வடமேற்கு நிலப்பகுதிகளில் நிலைத்திருப்பது வியப்புக்குரியது. சிந்துவெளி நாகரீகத்தை விரிவாக ஆய்வு செய்த சர் ஜான் மார்ஷல் ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்கள் இந்தியாவின் பிற பகுதிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

10) தமிழ்நாட்டின் ஆரணி, கொற்கை, மைலம், மானூர், நாகல், தொண்டி, கண்டிகை போன்ற இடப்பெயர்கள் தற்போதைய எந்தப் பகுதியில் வழக்கத்தில் உள்ளது?

A) பாகிஸ்தான்

B) ஆப்கானிஸ்தான்

C) பாகிஸ்தான்

D) இத்தாலி

விளக்கம்: இதேபோல் தமிழ்நாட்டிலுள்ள ஆலூர், படூர், இஞ்சூர், குந்தா, நாகல், தானூர், செஞ்சி போன்ற இடப்பெயர்கள் தற்போதைய ஆப்கானிஸ்தானில் உள்ளன. திராவிடர்கள் பஞ்சாப், சிந்து, பாகிஸ்தான் போன்ற பகுதிகளில் வாழ்ந்தனர் என்பதை இதன் மூலம் அறியலாம்.

11) சரியான கூற்றைத் தேர்க.

1. திராவிடர்கள் மத்தியத் தரைக்கடல் இனத்தினர். முந்தைய ஆஸ்ட்ரோயாய்டுகள், ஆல்பைன்கள் மற்றும் மங்கோலியர்கள் போன்றோர் சிந்துவெளி பகுதியில் வாழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்நாகரீகத்தை தோற்றுவித்த பெருமக்கள் யார் என்பது திட்டவட்டமாக அறியமுடியவில்லை.

2. இந்நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள் ஆரியர்கள் என சர் ஜான் மார்ஷல், சர்.டி. பானர்ஜி ஆகியோரின் கருத்தாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: சிந்துவெளி நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள் திராவிடர்களாகத் தான் இருக்க வேண்டும் என்பது சர் ஜான் மார்ஷல், ஆர்.டி. பானர்ஜி, ஹீராசு பாதிரியார் போன்றோர்களின் கருத்தாகும். மேலும், சிந்துவெளியில் பேசப்பட்டு வந்த மொழி, பண்டைய தமிழ்மொழியே என்பதும் அவர்களது கருத்தாகும்.

12) பண்டைய காலத்தில், தமிழ்நாட்டை ‘திரமிளிகே’ என்று அழைத்தவர்கள் யார்?

A) கிரேக்கர்கள்

B) ரோமானியர்கள்

C) ஆரியர்கள்

D) திராவிடர்கள்

விளக்கம்: பண்டைய காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த யவனர்கள்(கிரேக்கர்கள்) , இந்நாட்டைத் ‘திரமிளிகே’ என்று அழைத்தனர். இதேபோல், காஞ்சியை ஆட்சி செய்த நந்திவர்ம பல்லவன் தமிழ் அரசர்களை ‘திராவிட மன்னர்கள்’ என்றே குறிப்பிட்டுள்ளார்

13) ‘மதுரா விஜயம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) ஆர்.டி. பானர்ஜி

B) ஹீராசு பாதிரியார்

C) சர் ஜான் மார்ஷல்

D) கங்காதேவி

விளக்கம்: கங்காதேவி என்பவர் தாம் எழுதிய ‘மதுரா விஜயம்’ என்ற நூலில் தமிழ்நாட்டைத் ‘திராவிட தேசம்’ என்றும், தமிழ் மன்னர்களை ‘திரமிள ராஜாக்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். பழங்காலந்தொட்டே ‘தமிழ்’ என்ற சொல்லைப் பிற மொழியினர் திராமிளா, திராவிட, திராவிடா என்ற சொற்களால் குறிப்பிட்டு வந்துள்ளனர்.

14) சிந்துவெளி நாகரிகம் ‘ஒரு நகர நாகரிகம்’ என்பதை உறுதி செய்த பிரிட்டானியத் தொல்லியல் அறிஞர் யார்?

A) சர். மார்டிமர் வீலர்

B) சர் ஜான் மார்ஷல்

C) ஆர்.டி.பானர்ஜி

D) ஹீராசு பாதிரியார்

விளக்கம்: சிந்துவெளி நாகரீகத் தொல்பொருள் ஆய்வை மேலும் விரிவுபடுத்தி அறிவியல் முறைகளையும், தொழில்நுட்பங்களையும் கையாண்ட பிரிட்டானியத் தொல்லியல் அறிஞரான சர். மார்டிமர் வீலர் அது ‘நகர நாகரிகம்’ என்பதை உறுதி செய்தார். இது ஆரியர்கள் வருகைக்கு முன்பாகவே வளர்ந்து உச்ச நிலையில் இருந்தது.

15) ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது திராவிடர்கள் எந்த நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்?

A) சுமேரியா

B) பாபிலோனியா

C) A மற்றும் B

D) ஜப்பான்

விளக்கம்: ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது திராவிடர்கள் சுமேரியா, பாபிலோனியா போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். திராவிடர்களே கலை நயத்திற்கும், பண்பட்ட வாழ்க்கைக்கும் பழக்கப்பட்டிருந்தனர். ஆகவே, சிந்துவெளி நாகரீகமானது ஆரிய நாகரீகத்திற்கும் முன்பே வளர்ச்சி அடைந்த ஒரு நகர நாகரிகம் ஆகும்.

16) கீழடி எந்த மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி?

A) மதுரை

B) தேனி

C) சிவகங்கை

D) திருநெல்வேலி

விளக்கம்: கீழடி தொல்லியல் களம் என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடமாகும். இந்த அகழாய்வு மையம், தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து, இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவாகும்.

17) சிந்துவெளியில் மையஅரசு இருந்தமைக்கான சான்றுகள் எங்கு கிடைத்துள்ளன?

A) ஹரப்பா

B) மொகஞ்சதாரோ

C) தோலவிரா

D) காளிபங்கன்

விளக்கம்: சிந்துவெளியில் மையஅரசு இருந்தமைக்கான சான்றுகள் மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ளன. இதற்குப் பல தூண்களைத் தாங்கும் மன்றம், பொதுக்கூடம் முதலியவை முக்கியச் சான்றுகளாகத் திகழ்கின்றன. இங்கு வாழ்ந்த மக்கள் வணிகத்தில் சிறந்து விளங்கினர். மேலும், இவர்கள் பெரும்பொருள் சேர்த்த மாட மாளிகையில் வாழ்ந்தனர்

18) தவறானக் கூற்றைத் தேர்க:

A) சிந்துவெளி நகரத்தின் தெருக்கல் அகலமாகவும் நேராகவும், சுகாதார வசதி கொண்டவையாகவும் அமைக்கப்பட்டிருந்தன

B) இதன் தெருக்கள் கிழக்கு மேற்காகவும், வடக்கு தெற்காகவும் அமைந்திருந்தன. பெரிய தெருக்கள் 33 அடி அகலமும், சிறிய தெருக்கள் 9 அடி முதல் 15 அடிவரை அகலமும் கொண்டதாக இருந்தன.

C) இங்குள்ள பெரிய தெருக்களில் மக்கள் நடந்துசெல்லும் நடையாளராகவும் இருந்தது. 3 வண்டிகள் ஒரே வரிசையில் செல்லும் வகையில் பெரிய சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

D) இங்குள்ள அனைத்து வீடுகளிலும் கிணறுகளும், குளியலறைகளும் இருந்தன. அக்குளியலறைகள், கழிவுநீர் செல்வதற்கு ஏற்ற வகையில் தெருவின் அருகிலேயே அமைக்கப்பட்டிருந்தன.

விளக்கம்: இதன் தெருக்கள் கிழக்கு மேற்காகவும், வடக்கு தெற்காகவும் அமைந்திருந்தன. பெரிய தெருக்கள் 33 அடி அகலமும், சிறிய தெருக்கள் 9 அடி முதல் 12 அடிவரை அகலமும் கொண்டதாக இருந்தன. இதை பாரக்கும்போது பாபிலோனிய நகரங்களை விஞ்சிய சிறந்த நகரமைப்பைச் சிந்துவெளி மக்கள் பெற்றிருந்தனர் என்பதை அறியலாம்.

19) பண்டைய தமிழ்மக்கள் பயன்படுத்திய எந்த பொருளின் தன்மையும்இ அளவும் சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய பொருளோடு ஒத்திருந்தன?

A) பானை

B) முதுமக்கள் தாழி

C) கேடையம்

D) செங்கற்கள்

விளக்கம்: பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய செங்கற்களின் தன்மையும், அளவும் சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய செங்கற்களோடு ஒத்துள்ளன. ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோவில் ஒவ்வொரு வீடும் பல அடுக்கு மாடிகளைக் கொண்டதாக இருந்தது. கட்டடங்கள் கட்டுவதற்கு சுட்டசெங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.

20) ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்ட கிணற்றுச்சுவர், சாக்கடைகள் போன்ற வளைந்த சுவர்களைக் கட்டுவதற்கு எந்த வடிவச் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன?

A) வட்ட வடிவம்

B) சதுர வடிவம்

C) ஆப்பு வடிவம்

D) முக்கோண வடிவம்

விளக்கம்: கிணறு, சாக்கடைச்சுவர் போன்ற வளைந்த சுவர்களைக் கட்டுவதற்கு ஆப்பு வடிவச் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சுவர்களில், செங்கற்களை இணைப்பதற்காக ஒரு வகையான சாந்தைப் பயன்படுத்தி உள்ளனர்.

21) சிந்துசமவெளி மக்கள் எந்தத் திசையில் கோட்டைகள் கட்டினர்?

A) கிழக்கு

B) மேற்கு

C) வடக்கு

D) தெற்கு

விளக்கம்: சிந்துசமவெளியில் ஹரப்பாவிலும், மொகஞ்சதாரோவிலும் ஊருக்குப் புறத்தே கோட்டைக் கொத்தளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் உள்ளே மன்னரின் மாளிகைகளும், பெரிய நீராடும் குளங்களும், நெற்களஞ்சிகளும் மேடான சாலைகளும் இருந்தன. மேற்குத் திசையில் மேடான நிலத்தில் கோட்டையும், கிழக்கே குடியிருப்புப் பகுதியும் அமைந்திருந்தன.

22) பொதுக்குளியல் குளம் அல்லது பெருங்குளம் எங்கு காணப்பட்டது?

A) ஹரப்பா

B) மொகஞ்சதாரோ

C) லோத்தல்

D) காளிபங்கன்

விளக்கம்: சிந்துவெளியில் கிடைத்துள்ள கட்டடங்களில் தலைசிறந்தது. மொகஞ்சதாரோவிலுள்ள ‘பொதுக்குளியல் குளமாகும்’. இக்குளத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றவும், புதிய நீரை உள்ளே கொண்டுவரவும் செங்கற்களால் கட்டப்பட்ட நீர்ப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. குளத்தின் தரைப்பகுதி நீரை உறிஞ்சாமல் இருப்பதற்காக ‘நீலக்கீல்’ என்ற பசையால் பூசப்பட்டிருந்தது. மக்கள், குளித்தபின் உடையை மாற்றிக்கொள்ள குளத்தின் மேல் ஓரங்களில் பல அறைகள் இருந்தன.

23) மொகஞ்தாரோவிலுள்ள நீச்சல் குளத்தின் எந்த மூலையில் நீராவிப் பயன்பாட்டிற்கு வசதி செய்யப்பட்டிருந்தது?

A) வடமேற்கு

B) வடகிழக்கு

C) தென்மேற்கு

D) தென்கிழக்கு

விளக்கம்:குளத்தைச் சுற்றி நான்கு பக்கமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. நீச்சல் குளத்திற்குள் சென்றுவர நுழைவாயில்கள் இருந்தன. நீச்சல் குளத்தின் தென்மேற்கு மூலையில் நீராவிப் பயன்பாட்டிற்கு வசதி செய்யப்பட்டிருந்தது.

24) சிந்துவெளி மக்களின் முக்கியத்தொழில் எது?

A) வேட்டையாடல்

B) வணிகம்

C) மீன்பிடித்தல்

D) வேளாண்மை

விளக்கம்: சிந்துவெளி மக்களின் முக்கியத்தொழில் வேளாண்மை. இவர்கள் எதிர்காலத் தேவையை முன்னிட்டு உணவுப் பொருள்களைச் சேமித்து வைத்திருந்தனர். இதற்கு கிழக்கு ஹரப்பாவிலுள்ள தானியக்களஞ்சியமே சான்றாகும்.

25) ஹரப்பா தானியக்களஞ்சியத்தின் நீள அகலம் என்ன?

A) 168, 135 அடி

B) 168, 52 அடி

C) 52, 9 அடி

D) 135, 9 அடி

விளக்கம்: நீளம் – 168 அடி

அகலம் – 135 அடி

சுவர்களின் உயரம் – 52 அடி

சுவர்ளின் கனம் – 9 அடி

26) ஹரப்பா தானியங்களஞ்சியம் 2 வரிசைகளாகக் கட்டப்பட்டடு இருந்தன. இவ்விரண்டு வரிசைகளுக்கிடையே உள்ள தூரம்?

A) 52 அடி

B) 23 அடி

C) 9 அடி

D) 135 அடி

விளக்கம்:இவ்விரு நெடுஞ்சுவர்களுள் ஒவ்வொரு வரிசையில் 6 மண்டபங்கள் இருந்தன. ஒவ்வொரு மண்டபத்திலும் 3 பெருஞ்சுவர்கள் எழுப்பட்டன. அதில் 4 அறைகள் இருந்தன. இம்மண்டபத்தின் தரைப்பகுதி மரப்பலகையால் ஆனது. பல அறைகள் கொண்ட இத்தானியங்களஞ்சியத்தில் உணவு தானியங்கள் மட்டுமே சேமிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

27) சிந்துவெளி மக்கள் விவசாயம் மற்றும் எந்தத் தொழில் செய்வதன் மூலம் வசதியாக வாழ்ந்தனர்?

A) மீன்பிடித்தல்

B) வேட்டையாடுதல்

C) களவு

D) வணிகம்

விளக்கம்: சிந்துவெளியில் பல்வேறு தொழில் செய்வோர் இருந்தனர். அவர்களுள்இ கட்டடம் கட்டுவோர், நெசவாளர், சிற்பி, ஓவியர், தட்டார், தச்சர் முதலிய கைவினைஞர்கள் இருந்தனர். மேலும், வீட்டு வேலைக்காரர்கள், கூடை முடைவோர், விவசாயம் செய்வோர், மீன் பிடிப்போர் இங்கு வாழ்ந்துள்ளனர். மேலும், சிந்துவெளி மக்கள் விவசாயம் மற்றும் வணிகம் செய்து வசதியுடன் வாழ்ந்தனர் என்பதை அறிய முடிகிறது.

28) சிந்தவெளி மக்களின் அணிகலன்கள் எந்த உலோகத்தால் செய்யப்பட்டிருந்தன?

A) தங்கம்

B) வெள்ளி

C) செம்பு

D) அனைத்தும்

விளக்கம்: சிந்துவெளியில் வாழ்ந்த பெண்கள் காதணி, கைவளையல், மோதிரம், காலில் காப்பு, கழுத்தில் அட்டிகை, கழுத்துமணிகள் போன்ற பல அணிகலன்களையும் அணிந்திருந்தனர். இவையனைத்தும் தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டிருந்தது. சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய மேற்கூறிய அணிகலன்களைத் தொன்றுத்தொட்டுத் தமிழகப் பெண்கள் பயன்படுத்தி வந்தள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

29) சிந்துவெளியில் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர்?

A) ஆண்களுக்கு நிகராக

B) ஆண்களுக்கு மேலாக

C) ஆண்களுக்கு கீழாக

D) இழிவாக

விளக்கம்: சிந்துவெளியில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் மதிக்கப்பட்டனர். இவர்கள், அழகு சாதனப்பொருள்களைப் பயன்படுத்தினர். அதற்குச் சான்றாக வெண்கலத்தால் செய்யப்பட்ட சீட்டிகள் போன்ற பொருள்கள் இங்கு கிடைத்துள்ளன.

30) தவறான கூற்றைத் தேர்வு செய்க.

A) சிந்துவெளி மக்கள் கோதுமை, பார்லி, பேரீச்சம்பழம், பால் இறைச்சி வகைகளை உண்டனர்.

B) அவர்கள் தானிய வகைகளும், பட்டாணி முதலிய பருப்பு வகைகளும், முலாம்பழம் முதலிய பழ வகைகளும், ஆடைக்கு ஏற்ற பருத்தி வகைகளையும் பயிரிட்டனர்.

C) ஆடு, மாடு, பன்றி, குதிரை முதலிய விலங்குகளின் இறைச்சியும், ஆமை, மீன் முதலியனவும் அவர்களுக்குக் கிடைத்தன.

D) இங்கு கிடைத்துள்ள மாவு அரைக்கும் இயந்திரங்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல், எண்ணெய்ச் சட்டி, இட்லிச் சட்டி மற்றும் பிற பொருள்களையும் கொண்டு சிந்துவெளி மக்களின் உணவு வகைகளை அறியலாம்.

விளக்கம்: சிந்துவெளி மக்கள் ஆடு, மாடு, பன்றி, குதிரை முதலிய விலங்குகளின் இறைச்சியும், ஆமை, மீன் முதலியனவும் அவர்களுக்குக் கிடைத்தன. அவர்கள் எஞ்சிய உணவு தானியங்களையும், இறைச்சி வகைகளையும் பதப்படுத்தி வைத்து உண்டனர். அவர்கள் குதிரை பற்றி அறிந்திருக்கவில்லை.

31) சிந்துவெளி மக்கள் உண்கலங்களாகப் பயன்படுத்திய பொருள் எது?

A) மரப்பலகை

B) மண்சிப்பி

C) வெண்கலக்கிண்ணி

D) அனைத்தும்

விளக்கம்: சிந்துவெளி மக்கள் மரப்பலகை, மண்சிப்பி, வெண்கலக்கிண்ணி போன்றவற்றை உண்கலங்களாகப் பயன்படுத்தினர்.

32) சிந்துவெளியில் வாழ்ந்த ஆண், பெண் இருபாலரும் யாரைப் போல் தலையில் முண்டாசுக் கட்டிக்கொண்டனர்?

A) அரசன்

B) அரேபயிர்கள்

C) மங்கோலியர்

D) பாபிலோனியர்கள்

விளக்கம்: இவர்கள் பருத்தி, கம்பளி, நார்ப்பட்டு ஆகியவற்றால் ஆன ஆடைகளை அணிந்தனர். மேலாடை, கீழாடை என முழு ஆடைகளையே அணிந்திருந்தனர். பருத்தி ஆடைகள் பெரும்பாலும் வண்ணங்களுடனும் பூ வேலைப்பாடுகளுடனும் இருந்தன. கம்பளி ஆடைகள் தடிந்திருந்ததன. நார்ப்பட்டாடை உடலோடு ஒட்டி, ஒளி ஊடுருமாறு இருந்தது. கழுத்துப் பட்டையுடைய சட்டைகளையும், பொத்தான் தைத்த சட்டைகளையும் இவர்கள் அணிந்திருந்தனர்.

33) எந்த அறிஞர் சிந்துவெளி நகர வாழ்க்கையின் கூறுகளாக, அதிக மக்கள் தொகை, பல்வேறு தொழில் புரிவோர், வணிகர்கள், பணியாளர்கள், குடியிருப்புகள், பொதுக்கூட்டங்கள், எழுத்துக்குறீயீடுகள், கலை வடிவங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார்?

A) ஜான்ரே

B) ஷில்டே

C) ரானடே

D) பூஜ்

விளக்கம்: ஷில்டே என்ற அறிஞர் சிந்துவெளி நகர வாழ்க்கையின் கூறுகள் பற்றி கூறுகிறார். மேலும், நகரங்களுக்கு இடையேயான, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகமும் சிறப்பாக நடைபெற்றது. இந்நகரங்கள் பல தொழில்களின் மையங்களாக இருந்தமையால், ஏற்றுமதிக்கான பொருள்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இங்குப் பல நகரங்களில், நகராட்சிமுறை பயன்பாட்டில் இருந்தது. இதிலிருந்து மையஅரசு இருந்திருக்க வேண்டும் எனத் தெளிவாகிறது. எனவே சிந்துவெளி நாகரிகம் ஓர் நகர நாகரீகமாகும்.

34) தவறானக் கூற்றைத் தேர்க.

A) மொகஞ்தாரோவில் கிடைக்கப் பெற்ற விளையாட்டுப் பொருள்களில், கோலிகளே அதிகமாகக் கிடைத்துள்ளன.

B) பகடைக்காய் சொக்கட்டான், சதுரங்கம் ஆடுவது அவர்களுடைய சாதாரண பொழுதுபோக்காகும்.

C) சதுரங்க அட்டை செம்பாலும் சதுரங்க்காய்கள் களிமண்ணாலும் செய்யப்பட்டு இருந்தது. சிறுவர்கள் களிமண்ணில் பொம்மைகள் செய்து விளையாட்டினர்

D) சிந்துவெளி மக்கள் இசையிலும், நாட்டியத்திலும் அதிக ஆர்வம் உடையவர்களாக இருந்தனர். இவர்கள் காளைச்சண்டை, கோழிச்சண்டை, வேட்டையாடுதல், பறவைவளர்ப்பு போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர்.

விளக்கம்: சிந்துவெளி மக்களின் சதுரங்க அட்டை மரத்தாலும், சதுரங்கக்காய்கள் களிமண்ணாலும் செய்யப்பட்டு இருந்தன. பொதுவாக சிந்துவெளி மக்களின் பொழுதுபோக்கு முறைகள் தமிழக மக்களுடன் ஒத்துள்ளது.

35) சிந்துவெளி மக்கள் கண், காது, தொண்டை, தோல் தொடர்பான நோய்களுக்குப் பயன்படுத்தும் மருந்துகளைச் செய்வதற்கு எதைப் பயன்படுத்தினர்?

A) கட்டில் என்ற மீனின் எலும்பு

B) மான் காண்டாமிருகத்தின் எலும்பு

C) பவளங்கள்

D) வேப்பந்தழை

விளக்கம்: கண், காது, தொண்டை, தோல் தொடர்பான நோய்களுக்குப் பயன்படுத்தும் மருந்துகளைச் செய்ய காட்டில் என்ற ஒரு வகையான மீனின் எலும்புகளைப் பயன்படுத்தினர். மான், காண்டாமிருகம் எலும்புகள், பவளம் வேப்பந்தழையும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது வந்தன.

36) சிந்துவெளி மக்கள் இறந்த உடலை அடக்கம் செய்ய எத்தனை வகையான வழிமுறைகளைப் பின்பற்றினர்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: 1. முழு உடலைப் புதைப்பது.

2. எரிந்த உடலின் எஞ்சிய பாகங்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் சேர்த்து தாழிகளில் வைத்துப் புதைப்பது. இத்தாழிகள், வீடுகளிலோ வீட்டின் அருகிலோ புதைக்கப்பட்டன.

3. இறந்த உடல்களை ஊருக்கு வெளியே திறந்த வெளியில் பறவை, விலங்குகள் உண்ணும்படி வைத்தனர். பின் எஞ்சிய எலும்புகளை மட்டும் எடுத்துப் பின்னர், மண்தாழிகளில் வைத்து அவற்றுடன் வேறு குடுவைகளில் இறந்தவர் பயன்படுத்திய சில பொருள்களையும் சேர்த்துப் புதைத்தனர்

37) இறந்தவர்களை புதைக்கும் போது, அவர்களுக்குப் பிடித்த உணவுப்பொருள்களை வைத்து புதைக்கும் வழக்கம் சிந்துவெளி மற்றும் தமிழகத்தில் இருந்தது? இத்தாழிகள் தமிழகத்தில் கண்டறியப்பட்ட இடம் எது?

A) அத்திரப்பாக்கம்

B) அரிக்காமேடு

C) ஆதிச்சநல்லூர்

D) அனைத்தும்

விளக்கம்: இதுபோன்ற தாழிகள், அத்திரப்பாக்கம், அரிக்காமேடு, ஆதிச்சநல்லூர், திருகாம்புலியூர், தாமிரபரணி ஆற்றங்கரை போன்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தின் வடக்கிலும், தக்காணத்தின் தெற்கிலும், இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

38) சிந்துவெளி மக்கள் இறந்தவர்களை எவ்வாறு புதைத்தனர்?

A) கிழக்கு மேற்காக

B) வடக்கு கிழக்காக

C) வழகிழக்கு, தென்மேற்காக

D) எதுவுமில்லை

விளக்கம்: இறந்தவர்களை வடக்கு தெற்காகப் புதைக்கும் வழக்கம் சிந்துவெளிக்கும் பண்டைய தமிழகத்திற்கும் பொதுவான நடைமுறையாக இருந்தது. உருண்டை வடிவ ஈமத்தாழிகள், சிந்துவெளியிலும் தமிழகத்திலும் பயன்படுத்தப்பட்டன. இன அடிப்படையிலும், தொழில்நுட்ப அடிப்படையிலும் சிநதுவெளி நாகரீகத்திற்கும் தமிழகப் பயன்பாட்டிற்கும் இருந்த தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

39) சரியான கூற்றைத் தேர்க.

1. சிந்துவெளி நாகரிகம் ஆற்றங்கரையில் தோன்றியதால், அங்குள்ள மக்கள் நீர்வழிப்பயணம் மேற்கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்திலும் ஈடுபட்டனர்.

2. இவர்கள் உள்நாட்டில் காஷ்மீர், மைசூர், நீலகிரிமலை, கிழக்கு இந்தியா, மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகிய பகுதிகளில் வணிகம் செய்தனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இவர்கள் சுமேரியா, எகிப்து போன்ற வெளிநாடுகளிலும் வணிகத்தில் ஈடுபட்டுப் பொருளீட்டிச் சிறப்பாக வாழ்ந்தனர்.

40) சிந்துவெளி மக்கள், நிலத்தை இரு வழியாக உழுததற்கான அடையாளங்கள் எங்கு காணப்படுகிறது?

A) ஹரப்பா

B) மொகஞ்சதாரோ

C) லோத்தல்

D) காளிபங்கன்

விளக்கம்: சிந்துவெளியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதியும் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தது. இவர்கள், நிலத்தை இரு வழியாக உழுததற்கான அடையாளங்கள் காளிபங்கனில் காணப்படுகின்றன.

41) சிந்துவெளி மக்கள் வேளாண்மைக்கு பயன்படுத்திய மிருகம் எது?

A) திமிலுடன் இருக்கும் யானை

B) ஒட்டம்

C) எருமை

D) அனைத்தும்

விளக்கம்: சிந்துவெளி மக்கள் திமிலுடன் இருக்கும் காளை, ஒட்டகம், எருமை ஆகியவற்றை வேளாண்மைக்குப் பயன்படுத்தினர். விவசாயத்திற்குத் தேவையான நீர்இ சிந்துநதியிலிருந்து பெறப்பட்டது. அகழாய்வின் போது, கண்டெடுக்கப்பட்ட கலப்பைகளும், அரிவாள்களும் சிந்துவெளி மக்கள் வேளாண்மையில் சிறந்து விளங்கினர் என்பதை வெளிப்படுத்துகிறது. அகழ்வாராய்ச்சியின் போது சிதைந்து கிடந்த பல கால்வாய்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

42) சிந்துவெளி மக்கள் அறியாத விலங்கு எது?

A) நாய்

B) பூனை

C) மான்

D) குதிரை

விளக்கம்: சிந்துவெளி மக்கள் பசு, செம்மறியாடு, வெள்ளாடு, எருமை, எருது, நாய், பன்றி, ஒட்டகம் போன்ற விலங்குகளை வளர்த்து வந்தனர். இதனால், இவர்களின் பொருளாதாரம் மேம்பட்டது. வீட்டைப் பாதுகாக்கவும், வேட்டைக்காகவும் நாயை பயன்படுத்தினர். மேலும் பூனை, மான், மயில், வாத்து, கிளி போன்றவற்றையும் வளர்த்தனர். ஆனால் இவர்கள் குதிரையை அறியவில்லை.

43) சிந்துவெளி மக்களின் வேட்டைக் கருவிகள் எதனால் செய்யப்பட்டது?

A) இரும்பு

B) செம்பு

C) வெண்கலம்

D) B மற்றும் C

விளக்கம்: வேட்டைக்கருவிகள் செம்பாலும், வெண்கலத்தாலும், செய்யப்பட்டிருந்தன. வேட்டைக்கு கோடாரி, ஈட்டி, குத்துவாள், மழு, தண்டு, கவன், அம்பு, வில் போன்ற கருவிகளைப் பயன்படுத்தினர். இவர்கள் யானை, காண்டாமிருகம், கரடி, மான், சிறுத்தை போன்ற விலங்குகளை வேட்டையாடினர். விலங்குகளின் தோல், முடி, எலும்பு ஆகியவற்றை விற்று வணிகம் செய்தனர். மேற்கண்ட விலங்குகளின் உருவங்கள் பொறித்த பல முத்திரைகள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன.

44) சிந்துவெளி மக்கள் அறியாத உலோகம் எது?

A) இரும்பு

B) செம்பு

C) வெண்கலம்

D) பித்தளை

விளக்கம்: சிந்துவெளி மக்கள் தங்கம், பித்தளை, வெள்ளி போன்ற உலோகங்களைப் பயன்படுத்தினர். பெரும்பாலான உலோகப் பொருள்கள் செம்பு மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்டவை. போர்க்கருவிகள் செய்வது இவர்களின் முதன்மைத் தொழிலாகும். கோடாரி ஈட்டி, வில், அம்பு, கதாயுதம், கவன் கத்தி போன்ற ஆயுதங்களைப் போரில் பயன்படுத்தினர். வீடுகளுக்குத் தேவையான பாத்திரங்கள் மண், கற்கள், தந்தம், செம்பு, பித்தளை ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்தன. ஆனாலும், இவர்கள் இரும்பின் பயனை அறியவில்லை.

45) சிந்துவெளி மக்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்திற்கு எப்போக்குவரத்தைப் பயன்படுத்தினர்?

A) நிலவழிப்போக்குவரத்து

B) நீர்வழிப்போக்குவரத்து

C) A மற்றும் B

D) வான்வழிப்போக்குவரத்து

விளக்கம்: பொதுவாக ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்கள் வணிக மையங்களாக இருந்தன. உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்திற்கு நிலவழி மற்றும் நீர்வழிப் போக்குவரத்தைப் பயன்படுத்தினர்.

46) சிந்துவெளி மக்கள் வணிகத்திற்காக மற்ற இடங்களுக்குச் சென்று வர எதை அதிகமாகப் பயன்படுத்தினர்?

A) மாட்டு வண்டி

B) குதிரை வண்டி

C) ஒட்டகம்

D) கப்பல்

விளக்கம்: சிந்துவெளி மக்கள் வணிகத்திற்காக மற்ற இடங்களுக்குச் சென்று வர மாட்டுவண்டியை அதிகமாகப் பயன்படுத்தினர். வணிகம் பண்டமாற்று முறையிலேயே நடைபெற்றது. தரைவழிப் போக்குவரத்துக்கு எருதுகளே அதிகம் பயன்படுத்தப்பட்டன

47) சிந்துவெளி மக்கள், தென்பாரசீகம், ஈராக், சுமேரியா, சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுடன் தரைவழி வணிகம் செய்யும் பொருட்டு எத்தனை கல் தொலைவு வரை பயணம் மேற்கொண்டனர்?

A) 3000 கல் தொலைவு

B) 2000 கல் தொலைவு

C) 1000 கல் தொலைவு

D) 5000 கல் தொலைவு

விளக்கம்: இதேபோல், நீர்வழிப்போக்குவரத்து சிந்துநதி வழியே நடைபெற்றது. பண்டைய சிந்துவெளி மக்கள் பொருள்களைக் கப்பல்களில் ஏற்றிக்கொண்டு, பல நாடுகளுடன் வணிகம் செய்தனர். படகுப் போக்குவரத்தின் மூலம் உள்நாட்டு வணிகம் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக புரோச், காம்பே துறைமுகங்கள் வணிகத்தில் சிறப்புற்று இருந்தன.

48) ஹரப்பா மக்கள் நீளத்தை அளக்க எந்த முறையை பயன்படு;த்தினர்?

A) மீட்டர்

B) முழம்

C) சாண்

D) அடி

விளக்கம்: சிந்துவெளி மக்கள் வணிகத்தில் ஒரே சீரான எடைக்கற்களையும், அளவீடுகளையும் பயன்படுத்தினர். “ஹரப்பா” மக்கள் அளக்கும் கலையை அறிந்திருந்தனர். நீளத்தை அளக்க அடிமுறையைப் பயன்படுத்தினர். இதற்குச் சான்றாக, அளவைக் குறி இடப்பட்ட குச்சிகள் கிடைத்துள்ளன.

49) தமிழகத்தில் நீளத்தை அளக்க எந்த முறையானது தொன்றுதொட்டு வழக்கத்தில் இருக்கிறது?

A) மீட்டர்

B) முழம்

C) சாண்

D) அடி

விளக்கம்: தமிழகத்தில் நீளத்தை அளக்க அடி முறையானது தொன்றுதொட்டு வழக்கத்தில் இருக்கிறது. இது சிந்துவெளி மக்களை ஒத்திருந்தது.

50) சிந்துவெளி மக்கள் நிலத்தை அளக்க எந்த அளவுகோலைப் பயன்படுத்தினர்?

A) இரும்பு அளவுகோல்

B) செம்பு அளவுகோல்

C) வெண்கல அளவுகோல்

D) வெள்ளி அளவுகோல்

விளக்கம்: சிந்துவெளி மக்கள் நிலத்தை அளக்க வெண்கல அளவுகோலைப் பயன்படுத்தினர். இதிலிருந்து, சிந்துவெளி மக்கள் அளக்கப் பயன்படுத்திய அளவீட்டு முறைக்கும் தமிழர்கள் பயன்படுத்தும் அளவீட்டு முறைக்கும் தொடர்பு இருப்பதை அறியலாம்.

51) சரியானக் கூற்றைத் தேர்க

1. சிந்துவெளி மக்கள், சமய வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அங்குக் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் காணப்படும் உருவங்கள், வடிவங்களைக் கொண்டு அவர்களின் சமயத்தைப் பற்றி அறிய முடிகிறது.

2. இவர்கள் இயற்கைப் படைப்பாற்றலின் உருவமாகப் பெண்களைக் கருதி, அவர்களைத் தெய்வமாக வழிபட்டனர்.

A) 1 தவறு

B) 2 தவறு

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்: சிந்துவெளி மக்கள், சமய வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இவர்கள் இயற்கைப் படைப்பாற்றலின் உருமாகப் பெண்களைக் கருதி அவர்களைத் தெய்வமாக வழிபட்டனர்

52) சிந்துவெளி மக்கள் வணங்கிய பெண் தெய்வம் எது?

A) சக்தி

B) தாய்தெய்வம்

C) காளி

D) பார்வதி

விளக்கம்: தாய்த்தெய்வ வழிபாடு, சிந்துவெளி மக்களின் முக்கிய வழிபாடாகும். ஹரப்பாவில் பெண் உருவம் பொறித்த பல முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவே, பிறகு சக்தி வழிபாடாக மாறியது. இன்றும், தமிழகத்தில் பெண்களைத் தெய்வமாக வழிபடும் மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. (எ.கா) பார்வதி, காளி போன்ற தெய்வங்கள் தமிழகத்தில் இன்றும் வணங்கப்படுவதைக் காணலாம்.

53) ‘தாய்தெய்வ உரிமை’, ‘தாய் முறை’ போன்றவற்றை கடைப்பிடித்தவர்கள் யார்?

A) யவனர்கள்

B) ஆரியர்கள்

C) திராவிடர்கள்

D) எவருமில்லை

விளக்கம்: பண்டைய திராவிட மக்களுள் பெரும் பகுதியினர், தாய்தெய்வ உரிமை, தாய் முறை போன்றவற்றைக் கடைப்பிடித்தனர். இவற்றின் காரணமாக திராவிட மக்களிடையே பெண் தெய்வ வழிபாடு பெருவழக்காக இருந்தது என சமூவியல் அறிஞர்கள் கூறுவர்

54) பசுபதி என்ற மூன்று முகக் கடவுள் யாரைக் குறிக்கும்?

A) சிவன்

B) திருமால்

C) பிரம்மன்

D) முருகன்

விளக்கம்: பசுபதி வழிபாடு என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கூற்றுப்படி, இது சிவனுக்குரிய ‘திருமுகம்’(மூன்றுமுகம்) , பசுபதி(விலங்குகளின் கடவுள்) , யோகேசுவரன்(யோகிககளின் கடவுள்) போன்ற பல்வேறு வடிவங்களை உணர்த்துவதாக இவ்வழிபாடுகள் உள்ளன.

55) அமர்ந்த நிலையிலுள்ள மகாயோகியின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் எங்கு கிடைத்தன?

A) ஹரப்பா

B) மொகஞ்சதாரோ

C) லோத்தல்

D) காளிபங்கன்

விளக்கம்: ஹரப்பாவில் கிடைத்த முத்திரைகளில் அமர்ந்த நிலையிலுள்ள மகாயோகியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று முகங்களை கொண்ட கடவுள், யோக நிலையில் அமர்ந்திருப்பது போலவும், அதனைச்சுற்றி யானை, புலி ஆகியவற்றின் உருவங்கள் வலப்புறமாகவும், காண்டாமிருகம், எருமை ஆகியவற்றின் உருவங்கள் இடப்புறமாகவும் அமர்ந்திருந்தனர்.

56) கூற்றுகளை ஆராய்க

1. சிந்துவெளி மக்கள் விலங்குகளைத் தெய்வமாக வழிபட்டனர்.

2. தமிழகப் பண்பாட்டில் பண்டைய காலம் முதல் இன்றுவரை பசு, எருது, புலி, பறவை போன்றவை சமயச் சின்னங்களாக இருந்து வருகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: சிந்துவெளி மக்களும், தமிழக மக்களும் விலங்குகளைத் தெய்வமாக வழிபட்டனர். இது சிந்துவெளி நாகரீகத்திற்கும் திராவிடப் பண்பாட்டிற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.

57) ‘ஆற்று வணக்கம்’ அல்லது ‘ஆற்றுவழிபாடு’ செய்து வந்தவர்கள் யார்?

A) யவனர்கள்

B) ஆரியர்கள்

C) சிந்து சமவெளி மக்கள்

D) A மற்றும் C

விளக்கம்: ஹரப்பா, மொகஞ்தாரோ நகர மக்கள் ஆற்றங்கரையின் அருகிலேயே வசித்தன் காரணமாக, நீரைக் கடவுளாகக் கருதி வழிபட்டனர். இவர்கள், மொகஞ்சதாரோவில் உள்ள பெரிய நீச்சல் குளத்தில் நீராடுதல் என்ற வழக்கம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இங்கு, வாயில் சிறுமீன்களை வைத்துள்ள முதலைகள், ஆமை போன்ற உருவங்கள் ஆறுகளுடன் சேர்த்துப் பொறிக்கப்பட்டுள்ளதை முத்திரைகள் மூலம் காணமுடிகிறது. ஆகவே சிந்துவெளி மக்கள் ஆற்று வணக்கம் அல்லது ஆற்றுவழிபாடு செய்து வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் வழிபடுதவற்கு முன் நீராடும் வழக்கம் இருப்பதை இன்றும் காணலாம். மேலும், நீர்நிலைகளைத் தெய்வமாக வணங்குவது தமிழர்களிடையே உள்ள பண்பாடாகும்.

58) சிந்துவெளி மக்களிடையே பிரசித்தி பெற்ற மரம் எது?

A) அரச மரம்

B) ஆலமரம்

C) வேப்பமரம்

D) சால்மரம்

விளக்கம்: சிந்துவெளி மக்களிடம் மரங்களை வழிபடும் வழக்கமும் இருந்தது என்பதை ஹரப்பா, மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளின் வாயிலாக அறியலாம். இவற்றில், அரசமரமே முதன்மையாக உள்ளது. மரத்தடியில் மேடை அமைத்தலும் விழாக்கள் நடத்துதலும் வழக்கமாகும். மரங்களை ஆண் கடவுளாகவும், பெண் கடவுளாகவும் கருதி வழிபட்டனர். இன்றும்இ தமிழகத்தின் வழிபாட்டுத் தலங்களில் வேப்பமரத்தை பெண் கடவுளாகவும், அரசமரத்தை ஆண் கடவுளாகவும் வணங்குவது வழக்கமாகவுள்ளது.

59) சிந்துவெளியில் கிடைத்த முத்திரைகளில் காணப்பட்ட உருவம் எது?

A) சந்திரன்

B) பூமி

C) நட்சத்திரம்

D) சூரியன்

விளக்கம்: சிந்துவெளியில் கிடைத்த முத்திரைகளில் சூரியன்இ பாம்பு உருவங்கள் காணப்படுகின்றன. ஆகவே, இவர்கள் சூரியனையும் நெருப்பையும் கடவுளாகக் கருதி வழிபபட்டனர் எனலாம். இன்றும், தமிழகத்தில் பஞ்சபூதத் தலங்களுள் ஒன்றான திருவண்ணாமலை அக்னித்தலமாகவும்(நெருப்பு) , சிவபெருமானின் வடிவமாகவும் வணங்கப்படுகிறது. மேலும், சிந்துவெளி மக்களிடையே காணப்படும் பாம்பு வழிபாடு, லிங்க வழிபாடு போன்றவை தமிழக பண்பாட்டோடு பொருந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

60) சிந்துவெளி மக்களின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் சான்று எது?

A) இரும்பால் ஆன நடனப்பெண் உருவம்

B) வெண்கலத்தால் ஆன நடனப் பெண் உருவம்

C) செம்பால் ஆன நடனப் பெண் உருவம்

D) எதுவுமில்லை

விளக்கம்: சிந்துவெளி மக்கள் நுண்கலைகளில் சிறந்து விளங்கினர். இவர்கள் பயன்படுத்திய முத்திரைகளில் காணப்படும் உருவங்கள், பானைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள், சுடுமண் பொம்மைகள், அணிகலன்கள், வெண்கலத்தாலான நடனப்பெண்ணின் உருவம், யோகி சிற்பம் ஆகியவை சிந்துவெளி மக்களின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் சான்றுகளாகத் திகழ்கின்றன.

61) சிந்துவெளி எழுத்துக்களுக்கும், திராவிட எழுத்துக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று கூறியவர்கள் யார்?

A) ஹீராஸ் பாதிரியார்

B) ஐராவதம் மகாதேவன்

C) பாலகிருஷ்ணன்

D) அனைத்தும்

விளக்கம்: சிந்துவெளி நாகரீக மக்களின் பேச்சு மொழி, எழுத்துக்கள் தொடர்பாக இன்றும், பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. சிந்துவெளி எழுத்துக்களுக்கும், திராவிட எழுத்துக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று ஹீராசு பாதிரியார், ஐராவதம் மகாதேவன், பாலகிருஷ்ணன் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

62) கூற்றுகளை ஆராய்க.

1. சிந்துவெளி முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள ‘சித்தி எழுத்துக்கள்’ சிந்துவெளி மக்களின் மொழிக்குரிய எழுத்துக்களாகும்.

2. இந்த எழுத்துக்கள் இடமிருந்து வலமாக ஒரு வரியும், வலமிருந்து இடமாக மற்றொரு வரியும் ஆக எழுதப்பட்டுள்ளன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தமிழகத்தின் கீழ்வாலை, குளிர்சுனை, புறக்கல், ஆலம்படி, செத்தவாரை, நேகனூர்பட்டி ஆகிய இடங்களில் காணப்படும் எழுத்துக்கள், சிந்துவெளியிலுள்ள எழுத்துக்களோடு தொடர்புடைய தொல்தமிழ் எழுத்துக்களாகும். வடபிராமி எழுத்துகளும், தென்பிராமி எழுத்துக்களும் சிந்துவெளி எழுத்துக்களிலிருந்து வளர்ச்சி பெற்றவையாகும்.

63) சிந்துவெளி எழுத்துக்களிலிருந்து திராவிடரால் வளர்க்கப்பட்ட நேரான வளர்ச்சியுடைய எழுத்துக்கள் எது?

A) வடபிராமி எழுத்துக்கள்

B) தென்பிராமி எழுத்துக்கள்

C) தமிழ் எழுத்துக்கள்

D) A மற்றும் B

விளக்கம்: தென்பிராமி எழுத்துகள், சிந்துவெளி எழுத்துக்களிலிருந்து திராவிடரால் வளர்க்கப்பட்ட நேரான வளர்ச்சியுடைய எழுத்துகள் ஆகும். அவற்றின் ஒருமைப்பாட்டைத் திருநெல்வேலியில் கிடைத்த மட்பாண்டங்கள் மீதுள்ள எழுத்துக்குறிகளையும், நீலகிரியிலுள்ள கல்வெட்டுகளையும் கொண்டு அறியலாம். சிந்துவெளி எழுத்துக்களைக் கொண்ட மொழி, திராவிட மொழி என்பதும், தமிழ் ஒரு தென் திராவிட மொழி என்பதும் குறிப்பிடத்தக்கது.

64) தமிழ் எழுத்துக்களின் ஒலிப்பு முறையான எந்தெந்த எழுத்துக்கள் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன?

A) ழ, ன, ர, ற, ன

B) ல, ள, ர, ண, ன

C) ழ, ற, ன, ண, ல

D) ழ, ள, ற, ன, ண

விளக்கம்: உலக மொழிகள் எவற்றிலும் இல்லாத சிறப்பு தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு. எழுத்துகளின் ஒலிப்பு முறையான ழ, ள, ற, ள, ண ஆகிய 5 எழுத்துக்கள் சிந்துவெளி முத்தரைகளில் காணப்படுகிறது.

65) அகழ்வாராய்ச்சியில் சுமார் எத்தனை முத்திரைகள் சிந்துவெளியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன?

A) 1000

B) 2000

C) 3000

D) 4000

விளக்கம்: சிந்துவெளி மக்களின் பண்பாட்டில் மிகச் சிறந்த கலைப்படைப்புகளாக திகழ்வன முத்திரைகளாகும். அகழ்வாராய்ச்சியில், சுமார் 2000-க்கும் மேற்பட்ட முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றுள் பெரும்பாலான திமிலுடன் இருக்கும் காளை, எருமை, புலி, காண்டாமிருகம், வெள்ளாடு, யானை போன்ற விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகளாகும். பல முத்திரைகள் எழுத்துக்குறியீடுகளைக் கொண்டுள்ளன.

66) சிந்துவெளி நாகரீக அழிவுக்கான காரணங்களில் பொருந்தாதவற்றைத் தேர்க

A) சிந்துநதி வெள்ளப்பெருக்கு

B) அங்கு கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் அடிப்படையில் பார்த்தால் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு அழிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

C) வரலாற்று ஆசிரியர் சம்மாசிம்பா ரெட்டி என்பாரின் கூற்றுப்படி ஹரப்பாஇ மொகஞ்சதாரோ ஆகிய இரு நகரங்கள் மிகப்பெரிய வணிகத்தலங்களாக இருந்துள்ளன. இங்குப் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுஇ நகரங்களைவிட்டு மக்கள் வெளியேறி இருக்கலாம்

D) சிந்துநதி தன்போக்கை மாற்றிக் கொண்டதால், கடுமையான வறட்சி ஏற்பட்டு மக்கள் அந்நகரங்களிலிருந்து வெளியேறி இருக்கலாம் .

விளக்கம்: வரலாற்று ஆசிரியர் கிருஷ்ணா ரெட்டி என்பாரின் கூற்றுப்படி ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இரு நகரங்கள் மிகப்பெரிய வணிகத்தலங்களாக இருந்துள்ளன. இங்குப் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டு, நகரங்களை விட்டு மக்கள் வெளியேறி இருக்கலாம்.

67) எந்த இடத்தில் கிடைத்துள்ள மண்டை ஓடுகளில் காணப்பட்டுளள வெட்டுக் காயங்களின் அடிப்படையிலும் பெரும்பான்மையினரின் கருத்துப்படி, ஆரியர் படையெடுப்பினால் இந்நாகரிகம் முற்றிலும் அழிந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்?

A) ஹரப்பா

B) மொகஞ்சதாரோ

C) லோத்தல்

D) காளிபங்கன்

விளக்கம்: மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ள மண்டை ஓடுகளில் காணப்பட்டுள்ள வெட்டுக் காயங்களின் அடிப்படையிலும் பெரும்பான்மையினரின் கருத்துப்படி, ஆரியர் படையெடுப்பினால் இந்நாகரிகம் முற்றிலும் அழிந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

68) தவறானக் கூற்றைத் தேர்க

A) சிந்துவெளி காலத்தில் தோன்றிய நகரங்களின வடிவமைப்பு மேம்பட்டதாகவும் மற்ற நகர வடிவமைப்பிற்கு முன்னோடியாகவும் திகழ்ந்துள்ளது.

B) கட்டடக் கலையில் சுட்ட செங்கற்கள், சுண்ணாம்பை பயன்படுத்தியதில் முன்னோடிகாளகத் திகழ்ந்தனர்.

C) நகரம் மாசடைவதைத் தடுக்க சுண்ணாம்புக் கால்வாய்கள், நகரின் நடுவே அமைக்கப்பட்டிருந்தது

D) கவின்கலைகள் நன்கு ஊக்குவிக்கப்பட்டன.

விளக்கம்: நகரம் மாசடைவதை தடுக்க சுண்ணாம்புக் கால்வாய்கள், நகரின் ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்டிருந்தன. தூய்மை மற்றும் சுகாதாரம் நன்கு பராமரிக்கப்பட்டது.

69) யார் பயன்படுத்திய மொழியே தென்னிந்திய மொழிகளுக்கெல்லாம் தாயாக விளங்குகிறது?

A) ஆரியர்கள்

B) கிரேக்கர்கள்

C) எகிப்தியர்கள்

D) சிந்துசமவெளி மக்கள்

விளக்கம்: சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய மொழியே தென்னிந்திய மொழிகளுக்கெல்லாம் தாயாக விளங்குகிறது.

70) பொருத்துக

அ. ஹரப்பா – 1. சட்லெஜ் நதியோரம், குஜராத்

ஆ. மொகஞ்சதாரோ – 2 . சட்லெஜ் நதியோரம், குஜராத்

இ. ரூபார் – 3. சிந்து நதியோரம், மேற்கு பஞ்சாப்

ஈ. லோத்தல் – 4. ராவி நதியோரம், மேற்கு வங்காளம்

A) 4, 3, 2, 1

B) 4, 2, 3, 1

C) 4, 1, 3, 2

D) 3, 4, 2, 1

விளக்கம்:ஹரப்பா – ராவி நதியோரம், மேற்கு வங்காளம்(தற்போதைய பாகிஸ்தான்)

மொகஞ்சதாரோ – சிந்து நதியோரம், மேற்கு பஞ்சாப்(தற்போதைய பாகிஸ்தான்)

ரூபார் – சட்லெஜ் நதியோரம், குஜராத்

லோத்தல் – சட்லெஜ் நதியோரம், குஜராத்

71) பொருத்துக.

அ. காலிபங்கன் – 1. கபீர் மாவட்டம், குஜராத்

ஆ. சாகுந்தாரோ – 2. சரஸ்வதி நதியோரம், இராஸ்தான்

இ. தோல்வீரா – 3. காகர் நதி தென் கரையோரம், இராஜஸ்தான்

A) 3, 2, 1

B) 2, 3, 1

C) 1, 3, 2

D) 2, 1, 3

விளக்கம்: காலிபங்கன் – காகர் நதி தென் கரையோரம், இராஜஸ்தான்

சாகுந்தாரோ – சரஸ்வதி நதியோரம், இராஸ்தான்

தோல்வீரா – கபீர் மாவட்டம், குஜராத்

72) பொருத்துக.

அ. கோட்டிஜி – 1. குஜராத்

ஆ. பனவாலி – 2. சிந்து மகாணம்

இ. சுர்கோட்டா – 3. ஹரியானா

A) 3, 2, 1

B) 2, 3, 1

C) 2, 1, 3

D) 3, 1, 2

விளக்கம்: கோட்டிஜி – சிந்து மகாணம்

பனவாலி – ஹரியானா

சுர்கோட்டா – குஜராத்

73) ‘லோத்தல்’ என்ற இடத்தை கண்டறிந்தவர் யார்?

A) பானர்ஜி

B) சர்.ஜான் மார்ஷல்

C) S.R. ராவ்

D) ஸ்டீல்

விளக்கம்: குஜராத்திலுள்ள அகமதாபாத் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின்போது S.R. ராவ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இடமே ‘லோத்தல்’ ஆகும்.

74) உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைத் துறைமுகம் எது?

A) லோத்தல்

B) காளிபங்கன்

C) தோல்விரா

D) பனவாலி

விளக்கம்: உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைத் துறைமுகம் லோத்தல். இது துறைமுக நகரம் எனப்படும். இது சிந்வெளி நாகரீக காலத்திலிருந்தே துறைமுகமாகும். இத்துறைமுகம் வழியாக எகிப்து, மெசபடோமியா உள்ளிட்ட நாடுகளுடன் வாணிபம் நடைபெற்று வந்தது.

75) சரியான கூற்றைத் தேர்க.

1. சித்திர எழுத்துக்கள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டவை

2. சித்திர எழுத்துக்கள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டவை

3. சித்திர எழுத்துக்கள் மேலிருந்து கீழாக எழுதப்பட்டவை

4. சித்திர எழுத்துக்கள் கீழிருந்து மேலாக எழுதப்பட்டவை

A) 1, 3 சரி

B) 1, 2 சரி

C) 1, 4 சரி

D) 3, 4 சரி

விளக்கம்: சித்திர எழுத்துக்கள் இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் எழுதப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!