Book Back QuestionsTnpsc

தமிழ்நாடு – மானுடப் புவியியல் Book Back Questions 10th Social Science Lesson 17

10th Social Science Lesson 17

17] தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் (TANU) கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) நெல் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஓர் இந்திய நிறவனமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்னுமிடத்தில் 1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் இப்பகுதியிலுள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நெல் சாகுபடி மற்றும் உற்பத்தி முறை குறித்த ஆராய்ச்சிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.

இந்தியா, 2018ஆம் ஆண்டை தினைப்பயிர்களின் தேசிய ஆண்டாக அனுசரித்தது. உலக உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் (FAO), 2023ஆம் ஆண்டை சர்வதேச தினைப்பயிர்கள் ஆண்டாக அனுசரிக்கத் தீர்மானித்துள்ளது.

இரண்டாவது பசுமைப்புரட்சி (இயற்கை வேளாண்மை அல்லது கரிம வேளாண்மை): இயற்கை வேளாண்மையில் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தாவர வளர்ச்சி சீராக்கிகள் (செயற்கை இரசாயனம்) கால்நடை தீவனக் கலப்புகள் பயன்படுத்துவதில்லை. இவ்வகை விவசாயம், பயிர் சுழற்சி, பயிர் கழிவுகள், விலங்குகளின் கழிவுகள், விவசாயம் அல்லாத கரிம கழிவுகள், உயிரியல் பூச்சிக் கொல்லிகள் ஆகியனவற்றை மண்வளப் பாதுகாப்பிற்கு நம்பியுள்ளனர். குறைவான விவசாயிகளே இம்முறையினைப் பின்பற்றுகின்றனர்.

டான் டீ (TANTEA) இந்நிறுவனம் இந்தியாவில் கருப்பு வகை தேயிலை உற்பத்தியிலும், கலப்பு வகை தேயிலை உற்பத்தியிலும் முன்னணி வகிக்கும் நிறுவனங்களுள் ஒன்றாகும். (தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம்) இந்நிறுவனத்தின் தேயிலை பயிரிடும் பரப்பு ஏறத்தாழ 4, 500 ஹெக்டேர் ஆகும்.

இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசானது தேசிய இயற்கை கரிம வேளாண்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விழப்புணர்வு ஏற்படுத்துதல், இயற்கை உரங்களை மேம்படுத்துதல், பயிற்சியளித்தல் போன்றவற்றை இத்திட்டம் செயல்படுகிறது. மேலும் கரிமப் பொருள்களை மறுசுழற்சி செய்யவும், தொழிற்கூடங்கள், உயிரி உரங்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி செய்யவும் தெழிற்கூடங்களுக்கு மாநிலத்தில் நிதி உதவி அளித்தல், தர மேம்பாட்டு வளர்ச்சி மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் குழுமத்தின் மனித வளத்தை மேம்படுத்துதல் போன்றவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு பால் வளர்ச்சி கழகம் என்ற அமைப்பானது தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற புதிய அமைப்பாக பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பிரபலமாக ஆவின் என்று அழைக்கப்படுகிறது.

புவியியல் குறியீடு (GI Tag): புவியியல் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் பொருள்களின் மீது பயன்படுத்தப்படும் குறிப்பாகும். இது உற்பத்தி செய்யும் உரிமையாளர்களுக்கு உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது.

சில முக்கியப் புவியியல் குறியீடுகள்: ஆரணி – பட்டு; காஞ்சிபுரம் – பட்டு; கோயம்புத்தூர் – மாவு அரைக்கும் இயந்திரம், கோரா பட்டு சேலை; தஞ்சாவூர் – ஓவியங்கள், கலைநயம் மிக்க தட்டுகள், தலையாட்டி பொம்மைகள், வீணை; நாகர்கோவில் – கோயில் நகைகள்; ஈரோடு – மஞ்சள்; சேலம் – வெண்பட்டு (சேலம்பட்டு); பவானி – போர்வைகள்; மதுரை – சுங்கடி சேலை; சுவாமிமலை – வெண்கலச் சிலைகள்; நாச்சியார் கோவில் – குத்துவிளக்கு; பத்தமடை – பாய்; நீலகிரி – பாரம்பரிய பூ தையல்; மகாபலிபுரம் – சிற்பங்கள்; சிறுமலை – மலை வாழை; ஏத்தோமொழி – தேங்காய்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள்: டைடல் பூங்கா, அசெண்டாஸ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான மகேந்திரா உலக நகரம், சிறப்பு பொருளாதார மண்டலம்-டைடல் பூங்கா II மற்றும் டைடல் பூங்கா III, கோயம்புத்தூர் சிறப்பு பொருளாதார மண்டலம்-டைடல் பூங்கா ஆகியனவாகும்.

தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எண் 44-ஐ உடையதாகும். இது ஓசூரிலிருந்து தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை 627. 2 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. தமிழ்நாட்டின் மிகக் குறைவான நீளங்கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 785-ஐக் கொண்டதாகும். இது மதுரையிலிருந்து துவரங்குறிச்சி வரை செல்கிறது. இதன் நீளம் 38 கிலோ மீட்டர் ஆகும்.

தமிழ்நாட்டின் அஞ்சலக மாவட்டங்கள் மற்றும் தலைமையகம்: சென்னை – சென்னை; மேற்கு மண்டலம் – கோயம்புத்தூர்; மத்திய மண்டலம் – திருச்சிராப்பள்ளி; தெற்கு மண்டலம் – மதுரை.

தமிழ்நாட்டின் முக்கிய ஏற்றுமதிகள்:
வேளாண் பொருள்கள் புகையிலை, தானியங்கள், பருத்தி, கரும்பு, நெல், நிலக்கடலை, வாசனைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள்
தோல் பொருள்கள் சிறுதோல் பைகள், பணப்பைகள், கைப்பைகள், இடுப்பு கச்சை, காலணிகள் மற்றும் கையுறைகள்
இரத்தின கற்கள் மற்றும் நகைகள் விலை மதிப்பு மிக்க கற்கள், முத்துக்கள், தங்க நகைகள், கலை மற்றும் அலங்காரம் பொருள்கள்
இரசாயன மற்றும் இரசாயனம் சார்ந்த பொருள்கள் காகிதம், இரசாயனங்கள், இரப்பர் மற்றும் கண்ணாடி

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா __________

(அ) காவிரி டெல்டா

(ஆ) மகாநதி டெல்டா

(இ) கோதாவரி டெல்டா

(ஈ) கிருஷ்ணா டெல்டா

2. தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப்பயிர் ___________

(அ) பருப்பு வகைகள்

(ஆ) சிறுதானியங்கள்

(இ) எண்ணெய் வித்துக்கள்

(ஆ) நெல்

3. தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர்மின்சக்தி திட்டம் ______________

(அ) மேட்டூர்

(ஆ) பாபநாசம்

(இ) சாத்தனூர்

(ஈ) துங்கபத்ரா

4. தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ___________

(அ) 3 மற்றும் 15

(ஆ) 4 மற்றும் 16

(இ) 3 மற்றும் 16

(ஈ) 4 மற்றும் 15

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு __________ சதவிகிதத்தை வகிக்கிறது.

2. சாத்தனூர் அணை __________ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

3. மும்பை மற்றும் டில்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் __________ ஆகும்.

4. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையிலுள்ள வேறுபாடு ___________ என அழைக்கப்படுகிறது.

பொருத்துக:

1. பாக்சைட் – சேலம்

2. ஜிப்சம் – சேர்வராயன் மலை

3. இரும்பு – கோயம்புத்தூர்

4. சுண்ணாம்புக்கல் – திருச்சிராப்பள்ளி

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.

காரணம்: இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; காரணம், கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

2. கூற்று: நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டம்.

காரணம்: இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. காவிரி டெல்டா 2. சிறுதானியங்கள் 3. மேட்டூர் 4. (3 மற்றும் 15)

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. (21) 2. தென்பெண்ணை 3. சென்னை 4. வர்த்தக சமநிலை

பொருத்துக: (விடைகள்)

1. பாக்சைட் – சேர்வராயன் மலை

2. ஜிப்சம் – திருச்சிராப்பள்ளி

3. இரும்பு – சேலம்

4. சுண்ணாம்புக்கல் – கோயம்புத்தூர்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

2. கூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!