Book Back QuestionsTnpsc

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Book Back Questions 10th Social Science Lesson 10

10th Social Science Lesson 10

10] தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

1930இல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் “சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்குப் பெண்கள் அர்பணிக்கப்படுவதை தடுப்பது” எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம் மசோதா, இந்து கோவில் வளாகங்களிலோ அல்லது வேறு வழிபாட்டு இடங்களிலோ “பொட்டுக் கட்டும் சடங்கு” நடத்துவது சட்டத்திற்கப் புறம்பானதாகும் என அறிவித்தது. தேவதாசிகள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டபூர்வமான அனுமதியை வழங்கியது. மேலும் தேவதாசி முறைக்கு உதவி செய்கிற தூண்டிவிடுகிற குற்றத்தை செய்வோர்க்கு குறைந்த பட்சம் ஐந்தாண்டு சிறை தண்டனை என ஆணையிட்டது. இம்மசோதா சட்டமாக மாறுவதற்கு 15 ஆண்டுகள் காத்திருந்தது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. 1709இல் தரங்கம்பாடியில் ___________ ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.

(அ) கால்டுவெல்

(ஆ) F. W. எல்லிஸ்

(இ) சீகன்பால்கு

(ஈ) மீனாட்சி சுந்தரனார்

2. 1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை __________ நிறுவினார்.

(அ) இரட்டை மலை சீனிவாசன்

(ஆ) B. R. அம்பேத்கார்

(இ) ராஜாஜி

(ஈ) எம். சி. ராஜா

3. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ___________ இல் உருவாக்கப்பட்டது?

(அ) 1918

(ஆ) 1917

(இ) 1916

(ஈ) 1914

4. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ___________ நீதிக் கட்சியால் நிறுவப் பெற்றது.

(அ) பணியாளர் தேர்வு வாரியம்

(ஆ) பொதுப் பணி ஆணையம்

(இ) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்

(ஈ) பணியாளர் தேர்வாணையம்

5. சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

(அ) எம். சி. ராஜா

(ஆ) இரட்டை மலை சீனிவாசன்

(இ) டி. எம். நாயர்

(ஈ) பி. வரதராஜீலு

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி __________ ஆகும்.

2. புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் ___________ ஆவார்.

3. ___________ தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்.

4. தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது ___________ ஆகும்.

5. சூரிய நாராயண சாஸ்திரி எனும் பெயர் ___________ என மாற்றம் பெற்றது.

6. ___________ தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

7. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ___________ ஆவார்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.

ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்

iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.

iv) திரு. வி. கல்யாண சுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்க கால முன்னோடியாக இருந்தார்.

(அ) i, ii ஆகியன சரி

(ஆ) i, iii ஆகியன சரி

(இ) iv சரி

(ஈ) ii, iii ஆகியன சரி

2. கூற்று: சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.

காரணம்: இக்கால கட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்ட மன்றத்தைப் புறக்கிணத்தது.

(அ) காரணம், கூற்று ஆகியவை சரி

(ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல.

(இ) காரணம், கூற்று இரண்டுமே தவறு

(ஈ) காரணம் சரி. ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை.

பொருத்துக:

1. திராவிடர் இல்லம் – மறைமலையடிகள்

2. தொழிலாளன் – இரட்டைமலை சீனிவாசன்

3. தனித்தமிழ் இயக்கம் – சிங்கார வேலர்

4. ஜீவிய சரித சுருக்கம் – நடேசனார்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. சீகன் பால்கு 2. இரட்டைமலை சீனிவாசன் 3. (1916) 4. பணியாளர் தேர்வு வாரியம்

5. எம். சி. ராஜா

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. தமிழ் 2. F. W. எல்லீஸ் 3. மறைமலை அடிகள் 4. நீதிக்கட்சி

5. பரிதிமாற்கலைஞர் 6. ஆபிரகாம் பண்டிதர் 7. முத்துலட்சுமி அம்மையார்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. i, iii ஆகியன சரி

2. காரணம், கூற்று ஆகியவை சரி

பொருத்துக: (விடைகள்)

1. திராவிடர் இல்லம் – நடேசனார்

2. தொழிலாளன் – சிங்காரவேலர்

3. தனித் தமிழ் இயக்கம் – மறைமலையடிகள்

4. ஜீவிய சரித சுருக்கம் – இரட்டைமலை சீனிவாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!