Book Back QuestionsTnpsc

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Book Back Questions 10th Social Science Lesson 9

10th Social Science Lesson 9

9] தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டின் முக்கிய தொடக்க கால மிதவாத தேசியவாதிகள்: தொடக்க கால தேசியவாதிகள் அரசமைப்பு வழிமுறைகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். அறைக்கூட்டங்கள் நடத்துவதும் பிரச்சனைகள் குறித்து ஆங்கிலத்தில் கலந்துரையாடுவதும் அவர்களின் செயல்பாடுகளாக இருந்தன. வங்கப் பிரிவினையின் போது திலகரும் ஏனைய தலைவர்களும் பெருவாரியான மக்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்டங்களை நடத்தியதாலும் மக்களை ஈடுபடச் செய்வதற்காக வட்டாரமொழியைப் பயன்படுத்தியதாலும் தொடக்க கால தேசியவாதிகள் மிதவாதிகளென அழைக்கபடலாயினர். சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழ்நாட்டு மிதவாதத் தலைவர்கள் V. S. சீனிசாச சாஸ்திரி, P. S. சிவசாமி, V. கிருஷ்ணசாமி, T. R. வெங்கட்ராமனார், G. A. நடேசன், T. M. மாதவராவ் மற்றும் S. சுப்பிரமணியனார் ஆகியோராவர்.

தமிழ்நாடு அன்றைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சென்னை மாகாணம் என்பது இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் பெரும் பகுதிகளையும் (கடற்கரை மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா) கர்நாடகாவையும் (பெங்களுரு, பெல்லாரி, தெற்கு கனரா) கேரளாவையும் (மலபார்) மற்றும் ஒடிசாவின் (கஞ்சம்) சில பகுதியையும் உள்ளடக்கியதாக இருந்தது.

ஜார்ஜ் ஜோசப்: வழக்கறிஞரும் நன்கு சொற்பொழிவாற்றும் திறன் படைத்தவருமான ஜார்ஜ் ஜோசப் மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியதிலும், அதன் நோக்கத்தை மக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதிலும் முக்கிய பங்கு வகித்தார். செங்கண்ணூரில் (இன்றைய கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம்) பிறந்திருந்தாலும் மதுரையில் வசிப்பதையே விரும்பி மக்களின் வழக்கறிஞராகப் பணி செய்தார். பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இவர் ஆற்றிய சேவையின் காரணமாக மதுரை மக்கள் இவரை “ரோசாப்பு துரை” என அன்புடன் அழைத்தனர்.

நீல் சிலை அகற்றும் போராட்டம் (1927): ஜேம்ஸ் நீல், மதராஸ் துப்பாக்கி ஏந்திய காலாட்படையைச் சேர்ந்தவர். 1857 பேரெழுச்சியின் போது நடைபெற்ற கான்பூர் படுகொலை என்றழைக்கப்படும் சம்பவத்தில் பல ஆங்கிலப் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இதற்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் நீல் கொடூரமாக நடந்து கொண்டார். பின்னர் நீல் இந்திய வீரர் ஒருவரால் கொல்லப்பட்டார். சென்னை மௌண்ட்ரோட்டில் ஆங்கிலேயர் அவருக்கு ஒரு சிலை வைத்தனர். இதை, இந்தியர்களின் உணர்வுகளுக்கு இழைக்கப்படும் அவமரியாதை எனக் கருதிய தேசியவாதிகள் சென்னையில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர். 1937இல் ராஜாஜியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தபோது இச்சிலை அகற்றப்பட்டு சென்னை அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?

(அ) T. M. நாயர்

(ஆ) P. ரங்கையா

(இ) G. சுப்பிரமணியம்

(ஈ) G. A. நடேசன்

2. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு/அமர்வு எங்கே நடைபெற்றது?

(அ) மெரினா

(ஆ) மைலாப்பூர்

(இ) புனித ஜார்ஜ் கோட்டை

(ஈ) ஆயிரம் விளக்கு

3. “அதி நவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?

(அ) அன்னிபெசன்ட்

(ஆ) M. வீரராகவாச்சாரி

(இ) B. P. வாடியா

(ஈ) G. S. அருண்டேல்

4. கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?

(அ) S. சத்தியமூர்த்தி

(ஆ) கஸ்தூரி ரங்கர்

(இ) P. சுப்பராயன்

(ஈ) பெரியார் ஈ. வெ. ரா

5. சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?

(அ) K. காமராஜ்

(ஆ) C. இராஜாஜி

(இ) K. சந்தானம்

(ஈ) T. பிரகாசம்

6. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப் பெற்றது?

(அ) ஈரோடு

(ஆ) சென்னை

(இ) சேலம்

(ஈ) மதுரை

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி __________ ஆவார்.

2. __________ எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்.

3. சென்னையில் தொழிற்சங்கங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் __________ ஆவார்.

4. சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் ____________

5. ___________ முஸ்லீம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்.

6. 1932 ஜனவரி 26இல் ___________ புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. i) சென்னைவாசிகள் சங்கம் 1852இல் நிறுவப்பட்டது.

ii) தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891இல் தொடங்கப்பட்டது.

iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.

iv) V. S. சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்.

(அ) i மற்றும் ii ஆகியவை சரி

(ஆ) iii மட்டும் சரி

(இ) iv மட்டும் சரி

(ஈ) அனைத்தும் சரி

2. i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை.

ii) முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன் இராஜாஜி நெருக்கமாகப் பணியாற்றினார்.

iii) ஓத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.

iv) தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகளுக்கு முன்பாக மறியல் செய்யப்படவில்லை.

(அ) i மற்றும் ii ஆகியவை சரி

(ஆ) i மற்றும் iii ஆகியவை சரி

(இ) ii மட்டும் சரி

(ஈ) i, iii மற்றும் iv ஆகியவை சரி

பொருத்துக:

1. சென்னைவாசிகள் சங்கம் – இந்தி எதிர்ப்புப் போராட்டம்

2. ஈ. வெ. ரா – நீல் சிலையை அகற்றுதல்

3. S. N. சோமையாஜீலு – உப்பு சத்தியாகிரகம்

4. வேதாரண்யம் – சித்திரவதை ஆணையம்

5. தாளமுத்து – வைக்கம் வீரர்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. P. ரங்கையா 2. ஆயிரம் விளக்கு 3. அன்னிபெசன்ட்

4. S. சத்தியமூர்த்தி 5. T. பிரகாசம் 6. சேலம்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. T. முத்துசாமி 2. பாரத மாதா சங்கம் 3. B. P. வாடியா 4. ராஜாஜி 5. யாகூப் ஹாசன்

6. பாஷ்யம்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. i மற்றும் ii ஆசியவை சரி

2. ii மட்டும் சரி

பொருத்துக: (விடைகள்)

1. சென்னைவாசிகள் சங்கம் – சித்தரவதை ஆணையம்

2. ஈ. வெ. ரா – வைக்கம் வீரர்

3. S. N. சோமையாஜீலு – நீல் சிலையை அகற்றுதல்

4. வேதாரண்யம் – உப்புச் சத்தியாகிரகம்

5. தாளமுத்து – இந்தி எதிர்ப்புப் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!