Book Back Questions

தாவர உலகம் – தாவர செயலியல் Book Back Questions 9th Science Lesson 19

தாவர உலகம் – தாவர செயலியல் Book Back Questions 9th Science Lesson 19

9th Science Lesson 19

19] தாவர உலகம் – தாவர செயலியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சில உவர் தாவரங்கள் எதிர் புவிச்சார்பசைவு உடையவை. அவை 180o கோணத்தில் செங்குத்தான வேர்களைக் கொண்டவை. எ.கா: ரைசோபோரா, சுவாச வேர்கள்.

நடுக்கமுறு வளைதல் (thigmonasty) என்ற திசை சாராத் தூண்டல் அசைவுக்கு வீனஸ் பூச்சிப் பிடிப்பான் என்றழைக்கப்படும் டையோனியா மிஃசிபுலா (Dionaea muscipula) என்ற தாவரம் சிறந்த எடுத்துக்காட்டாகும். திசை சாரா தூண்டலில் இது மிக வேகமானது ஆகும்.

பூச்சியினங்களும் சூரிய ஒளியை ஈர்க்குமா? சூரிய ஒளியை ஈர்க்கக் கூடிய வெஸ்பா ஒரியன்டாலிஸ் (Vespa Orientalis) என்ற எறும்பை (Oriental hornets) டெல்அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் வயிற்றுப்பகுதியில் மஞ்சள் திட்டுகள் மற்றும் அசாதாரண மேல் தோல் அமைப்பு 30 அடுக்குகளைக் கொண்டு தடித்துக் காணப்படுகிறது. மேல்தோல் பகுதியில் பச்சையம் காணப்படாது, மாறாக சாந்தோப்டெரின் (xanthopterin) என்ற மஞ்சள் நுண் ஒளி உணர் நிறமி காணப்படுகிறது. இவை ஒளி அறுவடை மூலக்கூறாக செயல்பட்டு ஒளி ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றுகின்றன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள் ___________

(அ) ஒளி சார்பசைவு

(ஆ) புவி சார்பசைவு

(இ) தொடு சார்பசைவு

(ஈ) வேதிசார்பசைவு

2. ஒளிச்சேர்க்கையின் போது நடைபெறுவது.

(அ) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது.

(ஆ) நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO2 ஆக்ஸிகரணம் அடைதல்.

(இ) நீர் மற்றும் CO2 இரண்டுமே ஆக்ஸிகரணம் அடைதல்.

(ஈ) CO2 மற்றும் நீர் இரண்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

3. நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது __________ எனப்படும்.

(அ) நடுக்கமுறு வளைதல்

(ஆ) ஒளிசார்பசைவு

(இ) நீர்சார்பசைவு

(ஈ) ஒளியுறு வளைதல்

4. இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு?

(அ) வேதி சார்பசைவு

(ஆ) நடுக்கமுறு வளைதல்

(இ) ஒளி சார்பசைவு

(ஈ) புவிஈர்ப்பு சார்பசைவு

5. தாவரத்தின் வேர் ___________ ஆகும்.

I. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு.

II. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு.

III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு.

IV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு.

(அ) I மற்றும் II

(ஆ) II மற்றும் III

(இ) III மற்றும் IV

(ஈ) I மற்றும் IV

6. வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது ___________ எனப்படும்.

(அ) வெப்ப சார்பசைவு

(ஆ) வெப்பமுறு வளைதல்

(இ) வேதி சார்பசைவு

(ஈ) நடுக்கமுறு வளைதல்

7. இலையில் காணப்படும் பச்சையம் ___________ க்கு தேவைப்படும்.

(அ) ஒளிச்சேர்க்கை

(ஆ) நீராவிப்போக்கு

(இ) சார்பசைவ

(ஈ) திசை சாரா தூண்டல் அசைவு

8. நீராவிப்போக்கு ____________ல் நடைபெறும்.

(அ) பழம்

(ஆ) விதை

(இ) மலர்

(ஈ) இலைத்துளை

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. __________ இன் துலங்கலால் தண்டுத் தொகுப்பு மேல்நோக்கி வளர்கிறது.

2. __________ நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது.

3. தாவரத்தில் காணப்படும் பச்சைய நிறமி ___________ எனப்படும்.

4. சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ____________ எனப்படும்.

5. புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரம் வளைவது ____________ எனப்படும்.

6. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2 வை உள்ளிழுத்துக் கொள்கின்றன. ஆனால் அவற்றின் உயிர் வாழ்தலுக்கு ___________ தேவைப்படும்.

பொருத்துக:

A B

1. வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்பது – நேர் ஒளிசார்பசைவு

2. தண்டு ஒளியை நோக்கி வளர்வது – எதிர் புவிசார்பசைவு

3. தண்டு மேல் நோக்கி வளர்வது – எதிர் ஒளி சார்பசைவு

4. வேர் சூரிய ஒளிக்கு எதிராக கீழ் நோக்கி வளர்வது – நேர் புவிசார்பசைவு

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றாற் போல் தாவர உறுப்பு வளைதல் ஒளிசார்பசைவு எனப்படும்.

2. தண்டுப் பகுதி நேர் ஒளிசார்பசைவு மற்றும் எதிர் புவி சார்பசைவு உடையது.

3. வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் குறைந்துவிடும்.

4. ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் CO2 உற்பத்தியாகும்.

5. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

6. தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும்போது, நீர் இழப்பு ஏற்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. தொடு சார்பசைவு 2. co2 உள்ளிழுக்கப்பட்டு o2 வெளியேற்றப்படுகிறது 3. நீர்சார்பசைவு 4. ஒளிச் சார்பசைவு 5. ii மற்றும் iii

6. வெப்பமுறு வளைதல் 7. ஒளிச்சேர்க்கை 8. இலைத்துளை

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ஒளி 2. வேர் 3. பச்சையம் 4. ஒளிச்சார்பசைவு 5. புவிசார்பசைவு 6. ஆக்சிஜன்

பொருத்துக: (விடைகள்)

1. வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்பது – நேர் புவிசார்பசைவு

2. தண்டு ஒளியை நோக்கி வளர்வது – நேர் ஒளிசார்பசைவு

3. தண்டு மேல் நோக்கி வளர்வது – எதிர் புவிசார்பசைவு

4. வேர் சூரியஒளிக்கு எதிராக கீழ் நோக்கி வளர்வது – எதிர் ஒளி சார்பசைவு

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. தவறு

சரியான விடை: வேதிப்பொருள்களின் தூண்டுதல்களுக்கு ஏற்றார்போல் தாவர உறுப்பு வளைதல் வேதிச்சார்பசைவு எனப்படும்.

2. சரி

3. தவறு

சரியான விடை: வளி மண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை மூடிக் கொள்வதால் நீர் ஆவியாதல் குறைந்து விடும்.

4. தவறு

சரியான விடை: ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தியாகும்.

5. சரி

6. தவறு

சரியான விடை: தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் திறந்திருக்கும் போது நீர் இழப்பு ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!