Book Back QuestionsTnpsc

தாவர உலகம் Book Back Questions 8th Science Lesson 17

8th Science Lesson 17

17] தாவர உலகம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

பூஞ்சைகளைப் பற்றிய பாடப்பிரிவு மைக்காலஜி எனப்படும்.

“பெனிசிலின்” மருந்துகளின் அரசி என்று கூறப்படுகிறது. இதை சர் அலெக்ஸாண்டர் ஃபிளெம்மிங் 1928ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.

R.H.விட்டேக்கரின் ஐந்து உலக வகைப்பாட்டில் பூஞ்சைகள் மூன்றாவது உலகமாக இடம் பெற்றுள்ளன. ஏனெனில், இவற்றில் பச்சையம் மற்றும் ஸ்டார்ச் இல்லை.

கிளாவிசெப்ஸ் பர்பூரியா என்ற பூஞ்சையானது மாயத்தோற்றப் பூஞ்சை எனப்படுகிறது. இது கனவுலகில் மிதப்பது போன்ற ஒரு வித்தியாசமான மனநிலையை இளைஞர்களிடத்தில் ஏற்படுத்தி அவர்களைப் பாதிப்படையச் செய்கிறது. அஸ்பர்ஜில்லஸ் என்ற பூஞ்சையானது குழந்தைகளிடம் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. ஆனால், கிளாடோஸ்போரியம் என்ற பூஞ்சையானது ஒவ்வாமையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

லைக்கோபோடியம், கிளப் மாஸ் எனப்படுகிறது. ஈக்விசிட்டம் குதிரை வால் எனப்படுகிறது.

இந்தியாவிலுள்ள மிகப் பெரிய உலர் தாவரத் தொகுப்பு (Herbarium) கொல்கத்தாவில் உள்ளது. இங்கு பத்து இலட்சத்திற்கும் அதிகமான உலர் தாவர மாதிரிகள் (Herbarium) உள்ளன.

தாவரங்களைச் சேகரித்து, உலர்த்தி, அழுத்தி, ஒரு அட்டையின் மீது ஒட்டி, ஏற்றுக் கொள்ளப்பட்ட எதாவது ஒரு வகைபாட்டின்படி வரிசைபடுத்தும் முறை ஹெர்பேரியம் எனப்படும்.

இரு சொற்பெயரிடு முறை தொடர்பான விதிமுறைகள் மற்றும் பரிந்துரைகள் ICBN (அகில உலக தாவரவியல் பெயர் சூட்டும் சட்டம்) அமைப்பில் உள்ளது. தற்போது இது ICN (அகில உலக பெயர் சூட்டும் சட்டம்) என அழைக்கப்படுகிறது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் ட்ரைலொபேட்டம் ஆகும். இதில் “சொலானம்” என்ற சொல் எதைக் குறிக்கிறது?

அ) சிற்றினம்

ஆ) பேரினம்

இ) வகுப்பு

ஈ) துறைகள்

2. புளேரிடியன் ஸ்டார்ச் சேமிப்புப் பொருளாகக் காணப்படும் பிரிவு

அ) குளோரோஃபைசி

ஆ) பியோஃபைசி

இ) ரோடோஃபைசி

ஈ) சயனோஃபைசி

3. கூட்டமைப்பாகக் காணப்படும் பாசி

அ) ஆசில்லடோரியா

ஆ) நாஸ்டாக்

இ) வால்வாக்ஸ்

ஈ) குளோலெல்லா

4. உண்ணத் தகுந்த காளான்

அ) பாலிபோரஸ்

ஆ) அகாரிகஸ்

இ) பெனிசிலியம்

ஈ) அஸ்பர்ஜில்லஸ்

5. மண் அரிப்பைத் தடுக்கும் தாவரங்கள்

அ) பாசிகள்

ஆ) பூஞ்சைகள்

இ) பிரையோஃபைட்டுகள்

ஈ) டெரிடோஃபைட்டுகள்

6. முதலாவது நிலத் தாவரங்கள்

அ) பிரையோஃபைட்டுகள்

ஆ) டெரிடோஃபைட்டுகள்

இ) ஜிம்னோஸ்பெர்ம்கள்

ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

7. நன்கு வளர்ச்சியடைந்த வாஸ்குலார் திசுக்களைக் கொண்ட தாவர உடலம் காணப்படுவது

அ) பிரையோஃபைட்டுகள்

ஆ) டெரிடோஃபைட்டுகள்

இ) ஜிம்னோஸ்பைட்டுகள்

ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

8. இருசொற்பெயரிடு முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ____________

அ) 1970

ஆ) 1975

இ) 1978

ஈ) 1623

9. பெனிசிலின் ஒரு உயிர் எதிர்பொருள். இது எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?

அ) பாசிகள்

ஆ) பூஞ்சைகள்

இ) பிரையோஃபைட்டுகள்

ஈ) டெரிடோஃபைட்டுகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. “வகைப்பாட்டியல்” என்ற சொல் ____________ மொழியிலிருந்து பெறப்பட்டது

2. இருசொற்பெயரிடு முறை முதன்முதலில் ____________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

3. ஜெனிரா பிளாண்டாரம் என்ற நூலை வெளியிட்டவர்கள் _____________ மற்றும் __________

4. ஒரு விதையிலைத் தாவரங்கள் ____________ விதையிலையினை மட்டுமே கொண்டுள்ளன.

5. பழுப்பு பாசி ___________ வகுப்பைச் சார்ந்தது.

6. அகார் அகார் __________ என்ற பாசியிலிருந்து பெறப்படுகிறது.

7. பூஞ்சைகளின் சேமிப்புப் பொருள்கள் ___________ மற்றும் _____________ ஆகும்.

8. _____________ முதலாவது உண்மையான நிலத்தாவரம்

9. ___________ தாவரங்களில் சைலம் மற்றும் ஃபுளோயம் காணப்படுவதில்லை.

10. _______________ தாவரங்களில் வலைப்பின்னல் நரம்பமைவு காணப்படுகிறது.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. பாலிபெட்டலே துணை வகுப்பில் அல்லி இதழ்கள் தனித்தவை.

2. இருசொல் பெயர் இரண்டுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கும்.

3. செயற்கை முறை வகைப்பாடானது தாவரத்தின் ஒரு சில புறத்தோற்றப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.

4. பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டினால் ஆனது.

5. பைனஸ் ஒரு மூடிய விதைத் தாவரம்.

6. பிரையோஃபைட்டா தாவரங்கள் அனைத்தும் நீர் வாழ்த் தாவரங்களாகும்.

7. இரு விதையிலைத் தாவரங்கள் ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களைவிட நன்கு வளர்ச்சியடைந்த பண்புகளைக் கொண்டுள்ளன.

8. பிரையோஃபைட்டுகளில் மாஸ்கள் நன்கு வளர்ச்சியடைந்த தாவரங்களாகும்.

9. பிரையோஃபைட்டுகளில் ஸ்போரோபைட் தாவர நிலை ஓங்கியது.

10. டெரிடோஃபைட்டுகளில் ஸ்போரோபைட் நிலை ஓங்கியது.

IV. பொருத்துக:

1. சையனோஃபைசி – அ. பச்சைப் பாசி

2. குளோரோஃபைசி – ஆ. நீலப்பச்சைப்பாசி

3. பெயோஃபைசி – இ. சிவப்புப் பாசி

4. ரோடோஃபைசி – ஈ. பழுப்புப்பாசி

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பேரினம், 2. ரோடோஃபைசி, 3. வால்வாக்ஸ், 4. அகாரிகஸ், 5. பிரையோஃபைட்டுகள், 6. டெரிடோஃபைட்டுகள், 7. ஜிம்னோஸ்பெர்ம்கள், 8. 1623, 9. பூஞ்சைகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. கிரேக்க, 2. காஸ்பார்ட் பாகின், 3. பெந்தம் மற்றும் ஹூக்கர், 4. ஒரு, 5. பேயோஃபைசி, 6. ஜெலிடியம் மற்றும் கிரேசிலேரியா, 7. கிளைகோஜன் மற்றும் எண்ணெய், 8. டெரிடோபைட்டுகள், 9. பிரையோபைட்டுகள், 10. இருவித்திலை தாவரம்

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. சரி, 2. இரண்டு பெயர்கள், 3. சரி, 4. சரி, 5. திறந்த வெளி, 6. நீர் மற்றும் நில, 7. சரி, 8. சரி, 9. கேமிட்டோபைட், 10. சரி

IV. பொருத்துக:

1. ஆ, 2. அ, 3. ஈ, 4. இ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!