Book Back QuestionsTnpsc

தேசியச் சின்னங்கள் Book Back Questions 6th Social Science Lesson 13

6th Social Science Lesson 13

13] தேசியச் சின்னங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலி மலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.

தமிழகத்தின் மாநில இயற்கைச் சின்னங்கள்: மாநில விலங்கு – வரையாடு; மாநிலப் பறவை – மரகதப் புறா; மாநில மலர் – செங்காந்தள் மலர்; மாநில மரம் – பனை மரம்.

இந்திய தேசியக் கொடியை ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கையா என்பவர் வடிவமைத்தார். விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி தமிழ்நாட்டில் உள்ள குடியாத்தத்தில் (வேலூர் மாவட்டம்) நெய்யப்பட்டது. இக்கொடியைப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் (15. 08. 1947) செங்கோட்டையில் ஏற்றினார். இக்கொடி தற்போது சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கொடி காத்த குமரன்: திருப்பூர்க் குமரன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னி மலையில் பிறந்தார். இள வயதிலிருந்தே இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1932இல் காந்தியடிகளைக் கைது செய்ததைக் கண்டித்து நாடெங்கிலும் போராட்டத்தில் நடைபெற்றன. காந்தியை விடுதலை செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் திருப்பூர்க் குமரன் கலந்து கொண்டார். காவல் துறையினரின் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டு உயிர்துறந்தார். போராட்டக்களத்தில் உயிர் நீத்த போதும் மூவர்ணக் கொடியைக் கீழே விடவில்லை. இதனால் திருப்பூர்க் குமரன் “கொடி காத்த குமரன்” என அழைக்கப்படுகிறார். அவரது தியாகத்தை நினைவு கூறும் வகையில் அவரது நூற்றாண்டில் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

அசோகர் காலத்தில் சாரநாத் தூணின் உச்சியில் அமைந்திருந்த நான்முகச் சிங்கம் தற்போது சாரநாத் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

1911, டிசம்பர் 27ஆம் நாள் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது இப்பாடல் முதன் முதலாகப் பாடப்பட்டது.

இந்தியக் குடியரசு நாளின் மூன்றாவது நாளான ஜனவரி 29, அன்று “பாசறைக்கு திரும்புதல்” என்ற விழா சிறப்பாக நடைபெறும். அந்நாளில் தரைப்படை, கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த இசைக்குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்துவர். குடியரசு தலைவர் இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர் ஆவார். இவ்விழாவின் ஒரு பகுதியாக மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் __________

(அ) பிங்காலி வெங்கையா

(ஆ) ரவீந்திரநாத் தாகூர்

(இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

(ஈ) காந்திஜி

2. இந்தியாவின் தேசியக் கீதம் ___________

(அ) ஜன கண மன

(ஆ) வந்தே மாதரம்

(இ) அமர் சோனார் பாங்கலே

(ஈ) நீராடுங் கடலுடுத்த

3. ஆனந்த மடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர் ___________

(அ) அக்பர்

(ஆ) ரவீந்திரநாத் தாகூர்

(இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

(ஈ) ஜவஹர்லால் நேரு

4. _________ பிறந்த நாளைச் சர்வதேச அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறோம்.

(அ) மாகாத்மா காந்தி

(ஆ) சுபாஷ்சந்திர போஸ்

(இ) சர்தார் வல்ல பாய்பட்டேல்

(ஈ) ஜவஹர்லால் நேரு

5. நம் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறம் ___________

(அ) வெளிர் நீலம்

(ஆ) கரு நீலம்

(இ) நீலம்

(ஈ) பச்சை

6. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி _________ அருங்காட்சியத்தில் உள்ளது.

(அ) சென்னை கோட்டை

(ஆ) டெல்லி

(இ) சாரநாத்

(ஈ) கொல்கத்தா

7. தேசியக் கீதத்தை இயற்றியவர் ___________

(அ) தேவேந்திரநாத் தாகூர்

(ஆ) பாரதியார்

(இ) ரவீந்திரநாத் தாகூர்

(ஈ) பாலகாங்காதர திலகர்

8. தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு ___________

(அ) 50 வினாடிகள்

(ஆ) 52 நிமிடங்கள்

(இ) 52 வினாடிகள்

(ஈ) 20 வினாடிகள்

9. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் ___________

(அ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

(ஆ) ரவீந்திரநாத் தாகூர்

(இ) மகாத்மா காந்தி

(ஈ) சரோஜினி நாயுடு

10. விடுதலை நாளின் போது டெல்லியில் கொடியேற்றுபவர் ____________

(அ) பிரதம அமைச்சர்

(ஆ) குடியரசுத்தலைவர்

(இ) துணைக்குடியரசுத் தலைவர்

(ஈ) அரசியல் தலைவர் எவரேனும்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இந்திய தேசிய இலச்சினை __________ ல் உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2. இந்தியாவின் தேசியக் கனி __________

3. இந்தியாவின் தேசியப் பறவை ___________

4. இந்தியாவில் தேசிய மரம் _________

5. 1947 விடுதலை நாளின் போது ஏற்றப்பட்டக் கொடி __________ என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.

6. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ___________

7. சக ஆண்டு முறையைத் துவக்கியவர் ___________

8. இந்தியாவின் மிக நீளமான ஆறு ___________

9. இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் __________

10. தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் _________ ஆரங்களைக் கொண்டது

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நான்முகச் சிங்கம் தற்போது __________ அருங்காட்சியகத்தில் உள்ளது. (கொல்கத்தா/சாரநாத்)

2. தேசியக் கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு _________ (1950/1947).

3. ___________ இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. (லாக்டோ பேசில்லஸ்/ரைசோபியம்)

நிரப்புக:

1. காவி – தைரியம்; வெள்ளை – ___________

2. குதிரை – ஆற்றல்; காளை – ___________

3. 1947 – விடுதலை நாள்; 1950 – __________

பொருத்துக:

1. ரவீந்திரநாத் தாகூர் – அ. தேசியப்பாடல்

2. பங்கிம் சந்திர சட்டர்ஜி – ஆ. தேசியக்கொடி

3. பிங்காலி வெங்கையா – இ. வான் இயற்பியலாளர்

4. மேக்னாத் சாகா – ஈ. தேசிய கீதம்

1 2 3 4

(அ) அ ஈ ஆ இ

(ஆ) ஈ அ இ ஆ

(இ) ஈ அ ஆ இ

பொருத்தியபின் பொருந்தாதது எது?

1. தேசிய ஊர்வன – புலி

2. தேசிய நீர்வாழ் விலங்கு – லாக்டோ பேசில்லஸ்

3. தேசிய பாரம்பரிய விலங்கு – ராஜநாகம்

4. தேசிய நுண்ணுயிரி – டால்பின்

தவறான இணையைக் கண்டறிக:

1. அ) தேசியக் கொடியின் நீள அகலம் 3: 2 என்ற விகிதத்தில் உள்ளது.

ஆ) அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது.

இ) அசோகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது.

2. அ) பிங்காலி வெங்கையா தேசியக் கொடியை வடிவமைத்தார்.

ஆ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.

இ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக்கொடி குடியாத்தத்தில் நெசவு செய்யப்பட்டது.

சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்

1. ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.

2. நவம்பர் 26 அன்று குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.

3. அக்டோபர் 12 அன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. பங்கிம் சந்திர சட்டர்ஜி 2. ஜன கண மன 3. பங்கிம் சந்திர சட்டர்ஜி 4. மகாத்மா காந்தி

5. கருநீலம் 6. சென்னை கோட்டை 7. ரவீந்திரநாத் தாகூர் 8. (52 வினாடிகள்)

9. பங்கிம் சந்திர சட்டர்ஜி 10. பிரதம அமைச்சர்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. சாரநாத் 2. மாம்பழம் 3. மயில் 4. ஆலமரம் 5. குடியாத்தம் 6. பிங்காலி வெங்கையா

7. கனிஷ்கர் 8. கங்கை 9. டி. உதயகுமார் 10. (24)

சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. சாரநாத் 2. (1950) 3. லாக்டோ பேசில்லஸ்

நிரப்புக: (விடைகள்)

1. நேர்மை (தூய்மை)

2. உழைப்பு

3. குடியரசு நாள்

பொருத்துக: (விடைகள்)

1. ரவீந்திரநாத் தாகூர் – தேசியகீதம்

2. பங்கிம் சந்திர சட்டர்ஜி – தேசியப்பாடல்

3. பிங்காலி வெங்கையா – தேசியக்கொடி

4. மேக்னாத் சாகா – வான் இயற்பியலாளர்

பொருந்தியபின் பொருந்தாதது எது: (விடைகள்)

1. தேசிய ஊர்வன – ராஜநாகம்

2. தேசிய நீர்வாழ் விலங்கு – டால்பின்

3. தேசிய பாரம்பரிய விலங்கு – புலி

4. தேசிய நுண்ணுயிரி – லாக்டோ பேசில்லஸ்

தவறான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்: (விடை)

1. அசோகர் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது

2. விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.

சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்: (விடை)

1. (ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது. )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!