MCQ Questions

தொழிலகங்கள் 8th Social Science Lesson 20 Questions in Tamil

8th Social Science Lesson 20 Questions in Tamil

20. தொழிலகங்கள்

1) தொழிற்சாலைகள் பொருளாதார நடவடிக்கையின்……… துறையாகும்.

A) முதன்மை நிலை

B) இரண்டாம் நிலை

C) சார்பு நிலை

D) நான்காம் நிலை

(குறிப்பு – மூலப்பொருள்களை ஒரு வடிவத்திலிருந்து வரும் வகையில் மற்றொரு வடிவத்திற்கு மாற்றுவது உற்பத்தித் தொழிற்சாலையின் சாராம்சமாகும். தொழிற்சாலைகள் பொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலை துறையாகும்)

2) ஒரு நாட்டின் பொருளாதார வலிமை எப்பொழுதும்…………. வளர்ச்சியால் அளவிடப்படுகிறது.

A) மனிதவள வளர்ச்சியால்

B) தொழிற்சாலைகளின் வளர்ச்சியால்

C) பொருளாதார வளர்ச்சியால்

D) தனிமனித வருமான வளர்ச்சியால்

(குறிப்பு – ஒரு நாட்டின் பொருளாதார வலிமை எப்பொழுதும் உற்பத்தி தொழிற்சாலைகளில் வளர்ச்சியால் அளவிடப்படுகிறது. எந்த ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், தொழிலகங்களின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு மேம்பாடு அடைகிறது)

3) கீழ்க்கண்டவற்றுள் பொருளாதார நடவடிக்கை அல்லாதது எது?

A) உற்பத்தி

B) விநியோகம்

C) நுகர்வு

D) இவை அனைத்தும்

(குறிப்பு – உற்பத்தி, விநியோகம், நுகர்வு அல்லது பணிகளில் ஈடுபடும் எந்த ஒரு செயலும் பொருளாதார நடவடிக்கையாகும்)

4) பொருத்துக

I. முதன்மை பொருளாதார நடவடிக்கை – a) நீதித்துறை

II. இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கை – b) வங்கித்துறை

III. சார்புநிலை பொருளாதார நடவடிக்கை – c) நூற்பாலைகள்

IV. நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கை – d) கச்சா பருத்தி உற்பத்தி

A) I-d, II-c, III-b, IV-a

B) I-d, II-b, III-a, IV-c

C) I-b, II-a, III-c, IV-d

D) I-a, II-c, III-d, IV-b

(குறிப்பு – பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படைகள் ஆவன, முதல் நிலை, இரண்டாம் நிலை, சார்பு நிலை மற்றும் நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்)

5) முதன்மை அல்லது முதல் நிலை பொருளாதார நடவடிக்கைகளுள் அல்லாதது எது?

A) வேட்டையாடுதல்

B) விவசாயம்

C) சுரங்கத் தொழில்

D) கல்வி மற்றும் மருத்துவம்

(குறிப்பு – முதல் நிலை பொருளாதார நடவடிக்கை பழங்கால முதலில் தோன்றிய பொருளாதார நடவடிக்கையாகும். கல்வி மற்றும் மருத்துவம் சார்பு நிலை பொருளாதார நடவடிக்கை ஆகும்)

6) மூலப்பொருட்களை முறைப்படுத்துதல் மற்றும் உற்பத்தி மூலம் பயன்படும் பொருளாக மாற்றம் செய்வது………… பொருளாதார நடவடிக்கையாகும்.

A) முதல் நிலை பொருளாதார நடவடிக்கை

B) இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கை

C) சார்புநிலை பொருளாதார நடவடிக்கை

D) ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கை

(குறிப்பு – மூலப் பொருட்களை பயன்படும் பொருளாக மாற்றம் செய்வது இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கை ஆகும். எடுத்துக்காட்டு. அடுமனைகளில் மாவுகளை ரொட்டியாக மாற்றுவது)

7) சேவைகள் துறை என்று அழைக்கப்படுவது எது?

A) முதல் நிலை பொருளாதார நடவடிக்கை

B) இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கை

C) சார்புநிலை பொருளாதார நடவடிக்கை

D) ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கை

(குறிப்பு – சேவை துறை என்று சார்புநிலை அல்லது மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கையை அழைப்பர் )

8) எந்த துறை தகவல் நுட்பத் தொழிலகங்கள் துறை என்று அழைக்கப்படுகிறது?

A) முதல் நிலை பொருளாதார செயல்பாடுகள்

B) இரண்டாம் நிலை பொருளாதார செயல்பாடுகள்

C) மூன்றாம் நிலை பொருளாதார செயல்பாடுகள்

D) நான்காம் நிலை பொருளாதார செயல்பாடுகள்

(குறிப்பு – நான்காம் நிலை பொருளாதார செயல்பாடுகள், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி உள்ளிட்ட தகவல் உருவாக்கம் மற்றும் பரிமாற்றங்கள் உடன் தொடர்புடையது. எனவே இது தகவல் நுட்பத் தொழிலகங்கள் என்று அழைக்கப்படுகிறது)

9) கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை இது நான்காம் நிலை பொருளாதார செயல்பாடு ஆகும்?

A) மாவை ரொட்டி ஆக்குதல்

B) தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை காணுதல்

C) வங்கிகளில் பணம் எடுத்தல்

D) ஆடுகள் மேய்த்தல்

(குறிப்பு – தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை காண்பது நான்காம் நிலை பொருளாதார செயல்பாட்டிற்கு சிறந்த உதாரணமாகும்)

10) சேவைத்துறையின் பங்களிப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்……… சதவீதமாகும்.

A) 53%

B) 50%

C) 55%

D) 57%

(குறிப்பு – சேவைத்துறை இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாகும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 53% பங்களிப்பினை இது அளிக்கிறது)

11) தொழிற்சாலைகள் வணிகம் கல்வி மற்றும் அரசாங்கங்களின் உயர்மட்ட அளவில் முடிவெடுக்கும் நிர்வாகிகளை குறிப்பிடுவது எது?

A) முதல்நிலை பொருளாதார செயல்பாடுகள்

B) இரண்டாம் நிலை பொருளாதார செயல்பாடுகள்

C) மூன்றாம் நிலை பொருளாதார செயல்பாடுகள்

D) ஐந்தாம் நிலை பொருளாதார செயல்பாடுகள்

(குறிப்பு – அமைச்சரவை குழுவினர் ஒரு மாநிலத்தின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பற்றிய முடிவுகளை எடுக்கின்றனர். அதுபோல உயர்மட்ட அது அளவில் முடிவெடுக்கும் நிர்வாகிகளை குறிப்பிடுவது, ஐந்தாம் நிலை பொருளாதார செயல்பாடுகள் ஆகும்)

12) தொழிலக அமைவிட காரணிகள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. புவியியல் காரணிகள்

II. புவியியல் அல்லாத காரணிகள்

III. பொருளாதார காரணிகள்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) எல்லாமே சரி

D) எல்லாமே தவறு

(குறிப்பு – தொழிலக அமைவிட காரணிகள், புவியியல் சார்ந்த காரணிகள், புவியியல் சாராத காரணிகள் எதை இருவகைப்படுத்தப்பட்டுள்ளது)

13) கீழ்க்கண்டவற்றுள் தொழிலக அமைவிட காரணிகளுள் புவியியல் காரணிகள் அல்லாதவை எது?

A) மூலப்பொருள்

B) காலநிலை

C) மனித சக்தி

D) மூலதனம்

(குறிப்பு – மூலதனம் என்பது தொழிலக அமைவிட காரணிகளுள், புவியியல் அல்லாத காரணி ஆகும்.)

14) சேலத்தில் இரும்பு எஃகு ஆலை யானது இரும்புத்தாது கிடைக்கும்……….. அருகிலேயே அமைந்துள்ளது.

A) கஞ்சமலைக்கு

B) பொதிகை மலைக்கு

C) சேர்வராயன் மலைக்கு

D) ஏற்காடு மலைக்கு

(குறிப்பு – சேலத்தில் இரும்புத்தாது கிடைக்கும் மலையானது, கஞ்சமலை ஆகும்)

15) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மூலப்பொருட்களை தொழிலகங்களுக்கு கொண்டு செல்வதற்கும், முடிக்கப்பட்ட பொருட்களை மீண்டும் சந்தைக்கு அனுப்பவும் போக்குவரத்து தேவைப்படுகிறது.

II. எளிதான போக்குவரத்து தொழிலகங்களின் அமைவிடத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

III. நீர்வழிகள் சாலை வலிகள் மற்றும் இருப்பு பாதைகளின் வலைப்பின்னல் கொண்ட பகுதிகள் சிறந்த தொழில் மையங்களாக திகழ்கின்றன.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) எல்லாமே சரி

D) எல்லாமே தவறு

(குறிப்பு – தொழிலகங்கள் போக்குவரத்து வசதி அத்தியாவசியமாகும். சாலை போக்குவரத்து, சிறந்த போக்குவரத்தாக கருதப்படுகிறது.)

16) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு பகுதியில் நிலவும் காலநிலை தொழிலகங்களின் அமைவிடத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

II. தொழிற்சாலை வளர்ச்சிக்கு தீவிர காலநிலை பொருத்தமானது அல்ல.

III. பருத்தி நெசவாளி தொழிலுக்கு குளிர் ஈரப்பத காலநிலை சிறந்ததாகும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) எல்லாமே சரி

D) எல்லாமே தவறு

(குறிப்பு – ஒவ்வொரு தொழிலகங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட கால நிலை தேவைப்படுகிறது)

17) பருத்தி நெசவாளி தொழிலுக்கு ஏற்ற குளிர் ஈரப்பத காலநிலை எங்கு நிலவுகிறது?

A) திருப்பூர், கோயம்புத்தூர்

B) திருச்சி, கோயம்புத்தூர்

C) நாமக்கல், திருப்பூர்

D) தஞ்சாவூர், திருப்பூர்

(குறிப்பு – கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற பகுதிகளில் குளிர் ஈரப்பத காலநிலை நிலவுவதால், பருத்தி நெசவு தொழிலகங்கள் இந்த மண்டலத்தில் அமைந்துள்ளன)

18) கீழ்காணும் எந்த வகை தொழிலகங்களுக்கு ஏராளமான நீர் தேவைப்படுகிறது?

I. இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை

II. ஜவுளி தொழிற்சாலை

III. ரசாயனத் தொழிற்சாலை

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) எல்லாமே சரி

D) எல்லாமே தவறு

(குறிப்பு – மேற்காணும் எல்லா தொழிற்சாலைகளுக்கும், ஏராளமான நீர் தேவைப்படுகிறது. நீர்வளம் தொழிற்சாலைகளின் அமைவிடத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது)

19) தொழிலகங்களின் அமைவிடத்திற்கு புவியியல் அல்லாத காரணிகள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. மூலதனம்

II. கடன் வசதி

III. அரசாங்க கொள்கைகள் அல்லது விதிமுறைகள்

IV. மூலப்பொருள்

A) I, II, III மட்டும் சரி

B) I, III, IV மட்டும் சரி

C) II, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மூலப்பொருள் என்பது புவியியல் சார்ந்த காரணி ஆகும். தொழிலக அமைவிடங்களுக்கு, புவியியல் அல்லாத காரணிகள் மூலதனம் (Capital), கடன் வசதி (Availability of Loans), அரசாங்க கொள்கைகள் (Government Policies) போன்றவை ஆகும்.)

20) காரணிகளையும் அது சார்ந்த தொழிலகங்களையும் பொருத்துக.

I. மூலப்பொருள் – a) சென்னை துறைமுகம்

II. மனித சக்தி – b) திருப்பூர் நெசவாலை

III. போக்குவரத்து – c) தேயிலை தொழிற்சாலை

IV. குளிர் ஈரப்பத காலநிலை – d) கஞ்சமலை இரும்புத்தாது

A) I-d, II-c, III-a, IV-b

B) I-c, II-a, III-b, IV-d

C) I-a, II-c, III-d, IV-b

D) I-b, II-d, III-a, IV-c

(குறிப்பு – மேற்கண்டவைகள் தொழிலகம் அமைவிடத்தை தீர்மானிக்கும் புவியியல் சார்ந்த முக்கிய காரணிகள் ஆகின்றன)

21) மூலப் பொருட்களின் அடிப்படையில் தொழிலகங்களின் வகைப்பாடுகளை பொருத்துக.

I. வேளாண் சார்ந்த தொழிலகங்கள் – a) காகித உற்பத்தி

II. கனிம வளம் சார்ந்த தொழிலகங்கள் – b) சிமெண்ட் தொழிற்சாலை

III. கடல் வளம் சார்ந்த தொழிலகங்கள் – c) பருத்தி நெசவாலை

IV. வன வளம் சார்ந்த தொழிலகங்கள் – d) மீன் எண்ணெய் உற்பத்தி

A) I-c, II-b, III-d, IV-a

B) I-c, II-a, III-b, IV-d

C) I-a, II-c, III-d, IV-b

D) I-b, II-d, III-a, IV-c

(குறிப்பு – தொழிலகங்கள் மூலப்பொருட்களின் அடிப்படையில், வேளாண் சார்ந்த தொழில், கனிம வளம் சார்ந்த தொழில், கடல் வளம் சார்ந்த தொழில் மற்றும் வன வளம் சார்ந்த தொழில் என வகைப்படுத்தப்பட்டுள்ளது)

22) அளவு மற்றும் மூலதனத்தின் அடிப்படையில், பெரிய அளவிலான தொழிலகங்கள் அல்லாதவை கீழ்கண்டவற்றுள் எது?

A) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

B) சிமெண்ட் தொழிற்சாலை

C) இரும்பு மற்றும் எஃகு ஆலை

D) பட்டு நெசவு ஆலை

(குறிப்பு – பட்டு நெசவு ஆலை என்பது சிறிய அளவிலான தொழிலகங்கள் ஆகும். ரூபாய் ஒரு கோடிக்கும் குறைவான மூலதனத்தைக் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகளை சிறிய அளவிலான தொழிற்சாலைகள் என்று அழைக்கப்படுகிறது)

23) உலக பாரம்பரிய வாகன தொழில் மையமாக அறியப்படும் டெட்ராய்ட் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

A) அமெரிக்கா

B) கனடா

C) ஜெர்மனி

D) பிரான்ஸ்

(குறிப்பு – அமெரிக்க ஐக்கிய நாட்டில் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரம் உலக பாரம்பரிய வாகன தொழில் மையமாக அறியப்படுகிறது)

24) இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் நகரம் எது?

A) மும்பை

B) சென்னை

C) குவாஹாத்தி

D) அகமதாபாத்

( குறிப்பு – சென்னை மாநகரம் இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற வாகன தொழிலகங்களான ஃபோர்டு, மகேந்திரா, ஹூண்டாய் போன்ற தொழிலகங்கள் இங்கு அமைந்துள்ளன)

25) நாட்டின் வாகன தொழில் ஏற்றுமதியில், சென்னையின் உற்பத்தி பங்களிப்பு எது?

A) 60%

B) 80%

C) 70%

D) 50%

(குறிப்பு – இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னை மாநகரம், நாட்டின் மொத்த வாகன ஏற்றுமதியில் 60 சதவீத பங்கினை கொண்டுள்ளது)

26) உடைமையாளர் அடிப்படையில் தொழிலகங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?

I. பொதுத்துறை தொழிலகங்கள்

II. தனியார்துறை தொழிலகங்கள்

III. கூட்டுறவு தொழிலகங்கள்

IV. கூட்டுதுறை தொழிலகங்கள்

A) I, II, III மட்டும் சரி

B) I, III, IV மட்டும் சரி

C) II, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பொதுத்துறை, தனியார் துறை, கூட்டு துறை, கூட்டுறவு துறை ஆகிய நான்கும் உடைமையாளர் அடிப்படையில் தொழிலகங்களின் வகைகள் ஆகும்)

27) கீழ்க்கண்டவற்றுள் எது குடிசைத்தொழில் அல்லாதவை ஆகும்?

A) கூடை முடைதல்

B) பானை தயாரித்தல்

C) தேயிலை தயாரித்தல்

D) கைவினைப் பொருட்கள் தயாரித்தல்

(குறிப்பு – குடும்ப உறுப்பினர்கள் உதவியோடு, அல்லது ஒரு சிறு குழுவாக செய்யும் தொழில்கள் குடிசைத் தொழில்கள் என்று அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தி என்பது, குடிசை தொழில் அல்ல.)

28) பொருத்துக

I. தனியார்துறை தொழிலகங்கள் – a) இந்திய இரும்பு எக்கு ஆணையம்

II. பொதுத்துறை தொழிலகங்கள் – b) ஆனந்த் பால் (அமுல்) ஒன்றிய நிறுவனம்

III. கூட்டுதுறை தொழிலகங்கள் – c) இந்தியன் சின்தடிக் ரப்பர் நிறுவனம்

IV. கூட்டுறவுத்துறை தொழிலகங்கள் – d) ரிலையன்ஸ்

A) I-d, II-a, III-c, IV-b

B) I-c, II-a, III-b, IV-d

C) I-a, II-c, III-d, IV-b

D) I-b, II-d, III-a, IV-c

(குறிப்பு – உடமையாளர்கள் அடிப்படையில் (Basis of Ownership) தொழிலகங்கள் தனியார் துறை, பொதுத்துறை கூட்டுறவுத்துறை, கூட்டு துறை என நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது)

29) கீழ்க்கண்டவற்றுள் பொதுத்துறை தொழிலகம் அல்லாதவை எது?

A) இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம்

B) பாரத மிகு மின் நிறுவனம்

C) இந்திய இரும்பு எக்கு ஆணையம்

D) இந்தியன் ஆயில் ஸ்கை டேங்கிங் நிறுவனம்

(குறிப்பு – இந்தியன் ஆயில் ஸ்கை டேங்கிங் நிறுவனம் என்பது கூட்டு துறை தொழிலகம் ஆகும். இவ்வகை தொழிலகங்கள் அரசுத் துறையும் மற்றும் தனிநபர்கள் அல்லது தனிக் குழுவாகவோ கூட்டாக இணைந்து இயக்கப்படுகின்றன)

30) கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை தொழிலகங்கள், மூலப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் / விநியோகிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அல்லது இவை இரண்டையும் அளிப்பவர்களால் நிறுவப்பட்டு இயக்கப்படுபவை?

I. கூட்டுதுறை தொழிலகங்கள்

II. கூட்டுறவுத்துறை தொழிலகங்கள்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஆனந்த் பால் ஒன்றிய நிறுவனம், கூட்டுறவுத்துறை தொழிலாளர்களுக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.)

31) வன வளம் சார்ந்த தொழிலகங்கள் அல்லாதவை எது?

A) தேயிலை தொழிற்சாலை

B) மரக்கூழ் மற்றும் காகித உற்பத்தி

C) மரத்தளவாடங்கள் உற்பத்தி

D) எல்லாமே தவறு

(குறிப்பு – தேயிலை உற்பத்தி என்பது, வனவளம் சார்ந்த தொழிலகம் அல்லாதவை.)

32) அரசாங்கம் தொழிலகங்களின் அமைவிடத்தை எவ்வாறு தீர்மானிக்கின்றன?

I. பெருநகரங்களில் மிகுதியான தொழிலகங்களில் தவிர்ப்பதற்கு அனுமதி மறுத்தல்

II. தொழிற்சாலையை நிறுவுவதற்கு அனுமதி அளித்தல்

III. தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்தல்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, I மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – தொழிலகங்களின் அமைவிடத்தை நிர்ணயிக்கும், முக்கிய காரணியாக விளங்குவது அரசாங்க கொள்கைகள் ஆகும். தொழிலகம் அமைத்திட அனுமதி அளித்தல், அனுமதி மறுத்தல், நிலம் ஒதுக்கீடு, கனிமவள பயன்பாடு போன்றவைகளுக்கு அனுமதி அளித்தல் என்பன அரசாங்க கொள்கைகள் அல்லது விதிமுறைகள் ஆகும் )

33) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. தொழிலகங்கள் நிறுவுவதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது.

II. மூலதனம் இல்லாமல் எந்த ஒரு தொழிற்சாலையையும் நிறுவ முடியாது.

III. குடிசை தொழில்களுக்கு அதிக முதலீடுகள் தேவைப்படுகின்றது

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, I மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – குடிசைத் தொழில் என்பது, ஒரு சிறு குழுவோ அல்லது குடும்ப உறுப்பினர்களையோ கொண்டு சிறிய முதலீட்டை கொண்டு நடத்தப்படும் சிறு தொழில் ஆகும்.)

34) உணவு பதப்படுத்துதல், தாவர எண்ணெய் உற்பத்தி, பால் உற்பத்தி போன்றவை எந்த வகை தொழிலகங்கள் ஆகும்?

A) கனிம வளம் சார்ந்த தொழில்கள்

B) வேளாண் சார்ந்த தொழில்கள்

C) வனவளம் சார்ந்த தொழில்கள்

D) இது எதுவும் அல்ல.

(குறிப்பு – வேளாண் சார்ந்த தொழிலகங்கள் உணவு பதப்படுத்துதல், தாவர எண்ணெய் உற்பத்தி, பருத்தி நெசவாலைகள், பால் உற்பத்தி போன்றவைகள் ஆகும்)

35) எரிசக்தி ஆற்றல் அளிக்கும் மரபுசார் மூலங்கள் அல்லாதவை எது?

A) நிலக்கரி

B) தாது எண்ணெய்

C) நீர்

D) சூரிய வெளிச்சம்

(குறிப்பு – சூரிய வெளிச்சம் ஆற்றல் சக்தி என்பது, மரபுசார் சக்தி அல்லாதவை ஆகும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!