Book Back QuestionsTnpsc

தொழிலகங்கள் Book Back Questions 8th Social Science Lesson 14

8th Social Science Lesson 14

14] தொழிலகங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சேவைத்துறை இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாகும். தற்போது இந்தத் துறையானது இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 53 சதவீதம் பங்களிப்பினை அளிக்கிறது.

இந்தியாவின் டெட்ராய்ட்: அமெரிக்க ஐக்கிய நாட்டில் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரம் உலக பாரம்பரிய வாகன தொழில் மையமாக அறியப்படுகிறது. அதே போல் இந்தியாவில் உள்ள சென்னை மாநகரம் இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் உலகப் புகழ் பெற்ற வாகன தொழிலகங்களான ஜி. எம், போர்டு, மஹேந்திரா, ஹீண்டாய் போன்ற தொழிலகங்கள் இங்கு அமைந்துள்ளன. இவற்றைத் தவிர இந்நகரம் நாட்டின் வாகன தொழில் ஏற்றுமதியில் 60% பங்கினைக் கொண்டுள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் __________ பிரிவுகளின் கீழ் வருகின்றன.

(அ) சிறிய அளவிலான தொழிலகம்

(ஆ) பெரிய அளவிலான தொழிலகம்

(இ) கடல்வளம் சார்ந்த தொழிலகம்

(ஈ) மூலதனம் சார்ந்த தொழிலகம்

2. உடைமையாளர்கள் அடிப்படையிலான தொழிலகங்கள் ——– வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

(அ) 2

(ஆ) 3

(இ) 4

(ஈ) 5

3. ஆனந்த பால் பண்ணைத் தொழிலகம் (அமுல்) __________ துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

(அ) தனியார் துறை

(ஆ) பொதுத்துறை

(இ) கூட்டுறவுத்துறை

(ஈ) கூட்டுத்துறை

4. இரும்பு எஃகு மற்றும் சிமெண்ட் தொழிலகங்கள் __________ தொழிலகங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

(அ) வேளாண் சார்ந்த

(ஆ) கனிம வளம் சார்ந்த

(இ) வனப்பொருட்கள் சார்ந்த

(ஈ) கடல் வளம் சார்ந்த

5. சார்புத் துறை __________ வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

(அ) 4

(ஆ) 3

(இ) 2

(ஈ) 5

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வங்கித் துறை என்பது ____________ பொருளாதார நடவடிக்கையாகும்.

2. மூன்றாம் நிலை தொழில்கள் _________ மற்றும் ___________ ஆக வகைப்படுத்தப்படுகிறது.

3. அரசாங்க முடிவு எடுக்கும் செயல்முறைகள் __________ துறையின் கீழ்வரும் மூன்றாம் நிலை செயல்பாடாகும்.

4. மூலப்பொருட்கள் அடிப்படையில் பருத்தி நெசவாலை ஒரு ___________ தொழிலாகும்.

5. பெரிய அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்கு தேவையான மூலதனம் ___________ ஆகும்.

பொருத்துக:

1. நீதித்துறை – தனியார்துறை

2. தொலைக்காட்சி ஒளிபரப்பு – புவியியல் அல்லாத காரணிகள்

3. புவியியல் காரணிகள் – நான்காம் நிலை செயல்பாடு

4. மூலதனம் – மூலப்பொருட்கள்

5. பஜாஜ் ஆட்டோ – ஐந்தாம் நிலை செயல்பாடுகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. சிறிய அளவிலான தொழிலகம் 2. (4) 3. கூட்டுறவுத்துறை

5. கனிம வளம் சார்ந்த 5. (2)

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. சார்பு நிலை 2. நான்காம் நிலை, ஐந்தாம் நிலை 3. ஐந்தாம் நிலை

4. ஈரப்பத காலநிலை 5. ஒரு கோடி

பொருத்துக: (விடைகள்)

1. நீதித்துறை – ஐந்தாம் நிலை செயல்பாடுகள்

2. தொலைக்காட்சி ஒளிபரப்பு – நான்காம்; நிலை செயல்பாடு

3. புவியில் காரணிகள் – மூலப்பொருட்கள்

4. மூலதனம் – புவியில் அல்லாத காரணிகள்

5. பஜாஜ் ஆட்டோ – தனியார் துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!