Book Back QuestionsTnpsc

நிலத்தோற்றங்கள் Book Back Questions 7th Social Science Lesson 6

7th Social Science Lesson 6

6] நிலத்தோற்றங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

துணையாறு: ஒரு முதன்மை ஆற்றுடன் இணையும் அல்லது ஆற்றினுள் பாயும் ஓர் நீரோடை அல்லது ஓர் ஆறு.

கிளையாறு: ஒரு முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து மற்றும் விலகிச் செல்லும் ஓர் ஆறு.

தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டில் காணப்படும் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உயரமான நீர்வீழ்ச்சி ஆகும். வட அமெரிக்காவில் கனடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி மற்றும் ஆப்பிரிக்காவில் ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்பே நாடுகளின் எல்லையில் உள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சி ஆகியன முக்கிய நீர்வீழ்ச்சிகளாகும்.

ஆசியா மைனர் (துருக்கி) என்ற இடத்தில் உள்ள மியாண்டர் ஆற்றின் பெயரின் அடிப்படையில் ஆற்று வளைவு என்ற சொல் ஏறப்பட்டது. காரணம், இந்த ஆறு அதிக திருப்பங்களுடனும் மற்றும் அதிக வளைவுகளுடனும் ஓடுகின்றது.

வடக்கு சீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் கோபி பாலைவனத்தில் இருந்து கடத்தப்பட்டவை ஆகும்.

உலகிலேயே மிக நீளமான கடற்கரை அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்தில் தெற்கில் காணப்படும் மியாமி கடற்கரை ஆகும். இரண்டாவது நீண்ட கடற்கரை சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரை ஆகும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் ————– ஆகும்.

(அ) வீழ்ச்சி குளம்

(ஆ) வண்டல் விசிறி

(இ) வெள்ளச் சமவெளி

(ஈ) டெல்டா

2. குற்றால நீர்வீழ்ச்சி ————– ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது.

(அ) காவேரி

(ஆ) பெண்ணாறு

(இ) சிற்றாறு

(ஈ) வைகை

3. பனியாற்று படிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் ————— ஆகும்.

(அ) சர்க்

(ஆ) அரெட்டுகள்

(இ) மொரைன்கள்

(ஈ) டார்ன் ஏரி

4. மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்.

(அ) அமெரிக்கா

(ஆ) இந்தியா

(இ) சீனா

(ஈ) பிரேசில்

5. பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று —————-

(அ) கடல் ஓங்கல்

(ஆ) கடல் வளைவுகள்

(இ) கடல் தூண்

(ஈ) கடற்கரை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் ————— என்கிறோம்.

2. ஒரு ஏரி அல்லது ஒரு கடலில் ஆறு சேரும் இடம் ————– எனப்படுகிறது.

3. காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் ———— பாலைவனத்தில் காணப்படுகிறது.

4. ஜெர்மனியில் காணப்படும் சர்க் ————- என்று அழைக்கப்படுகிறது.

5. உலகின் மிக நீண்ட கடற்கரை ————— ஆகும்.

III. பொருத்துக:

அ – ஆ

1. பாறை உடைதல் மற்றும் நொறுங்குதல் – அ) பனியாறுகள்

2. கைவிடப்பட்ட மியாண்டர் வளைவுகள் – ஆ) பிறை வடிவ மணற்குன்றுகள்

3. நகரும் ஒரு பெரும் பனிக்குவியல் – இ) காயல்

4. பிறை வடிவ மணல் மேடுகள் – ஈ) பாறைச் சிதைவுகள்

5. வேம்பநாடு ஏரி -உ) குதிரைக் குளம்பு ஏரி

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று (அ): முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாகின்றன.

காரணம் (க): கடல் பகுதியை ஆறு அடையும் போது ஆற்றின் வேகம் குறையும்.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

(ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு

(இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

2. கூற்று: கடல் வளைவுகள் இறுதில் கடல் தூண்களாகின்றன.

காரணம்: கடல் தூண்கள் அலைகளின் படிவுகளால் ஏற்படுகின்றன.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

(ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு

(இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வண்டல் விசிறி, 2. சிற்றாறு, 3. மொரைன்கள், 4. சீனா, 5. கடற்கரை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பாறைகள், 2. சிதைவுறுதல், 3. முகத்துவாரம், 4. கலஹாரி, 5. கார் சர்க், 6. மியாமி

III. பொருத்துக:

1. 1. ஈ, 2. உ, 3. அ, 4. ஆ, 5. இ

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, 2. கூற்று சரி மற்றும் காரணம் தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!