MCQ Questions

நீதித்துறை 8th Social Science Lesson 22 Questions in Tamil

8th Social Science Lesson 22 Questions in Tamil

22. நீதித்துறை

1) பண்டைய இந்தியாவில் _________ தனி மனிதனின் சமூக கடமைகளை வரையறுத்தன.

A) ஸ்மிருதிகள்

B) வேதங்கள்

C) அரச கட்டளைகள்

D) இலக்கிய பாடல்கள்

(குறிப்பு – பண்டைய இந்தியாவில் ஸ்மிருதிகள் தனிமனிதனின் சமூகக் கடமைகளை வரையறுத்தன)

2) பண்டைய காலத்தில் நீதி என்ற கருத்து_____________தொடர்புடையதாக இருந்தது.

A) சமயத்துடன்

B) வழிபாட்டுடன்

C) பக்தியுடன்

D) வேதத்துடன்

(குறிப்பு – பண்டைய காலத்தில் நீதி என்ற கருத்து சமயத்துடன் தொடர்புடையதாக இருந்தது. அரசர் நீதியின் மூலாதாரமாக விளங்கினார்)

3) கீழ்க்கண்டவற்றுள் ஸ்மிருதி அல்லாதது எது?

A) மனுஸ்மிருதி

B) நாரதஸ்மிருதி

C) யக்ஞவல்கிய ஸ்மிருதி

D) விஷ்ணு ஸ்மிருதி

(குறிப்பு – நாரதஸ்மிருதி, யக்ஞவல்கிய ஸ்மிருதி, மனுஸ்மிருதி ஆகியன ஆகும். விஷ்ணு ஸ்மிருதி என்பது தவறானது )

4) பண்டைய காலத்தில் நீதிமன்றத்தை எவ்வாறு குறிப்பிட்டனர்?

A) குலிகா

B) சபா

C) வாரியம்

D) வஜ்ஜி

(குறிப்பு – பண்டைய காலத்தில் வஜ்ஜிகளிடையே (மக்கள்) குற்ற வழக்குகளை விசாரிக்க குலிகா என்னும் நீதிமன்றங்கள் இருந்தது)

5) வாரியம் என்பது?

A) எட்டு குலிகாக்களை

B) ஒன்பது குலிகாக்களை

C) ஐந்து குலிகாக்களை

D) ஆறு குலிகாக்களை

(குறிப்பு – பண்டைய காலத்தில் குலிகா என்னும் நீதிமன்றங்கள் இருந்தது. வஜ்ஜிகளிடையே குற்ற வழக்குகளை விசாரிக்கும் எட்டு குலிகாக்களை கொண்ட வாரியம் இருந்தது.)

6) பண்டைய கால நீதிமுறை குறித்த கூற்றுகளுள் தவறானது எது?

I. மேல்முறையீடானது குல நீதிமன்றத்திலிருந்து கன நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது.

II. மேல்முறையீடானது கன நீதிமன்றத்திலிருந்து குல நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது.

III. குற்ற வழக்குகளை விசாரிக்கும் எட்டு குலிகாக்களை கொண்ட வாரியம் இருந்தது.

A) I, III மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) எல்லாமே தவறு.

(குறிப்பு – வாரியம் என்பது 8 குலிகாக்களை கொண்டது. மேல்முறையீடுகள் குல நீதிமன்றத்தில் இருந்து, கன நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது)

7) யாருடைய ஆட்சிக்காலத்தில் உரிமையியல் நடைமுறை சட்டங்கள் தொகுக்கப்பட்டது?

A) சையது

B) லோடி

C) துக்ளக்

D) கில்ஜி

(குறிப்பு – உரிமையியல் நடைமுறை சட்டங்கள் தொகுக்கப்பட்டதை துக்ளக் ஆட்சி காலத்தில் காணமுடிகிறது)

8) துக்ளக் ஆட்சி காலத்தில் தொகுக்கப்பட்ட உரிமையியல் நடைமுறை சட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) ஃபட்வா-இ-பெரோஸ் ஷாகி

B) ஃபைபா-இ-ஆலம்கிர் ஷாகி

C) ஃபைகா-இ-பெரோஸ் ஷாகி

D) ஃபைகா-இ-ஆலம்கிர் ஷாகி

(குறிப்பு – துக்ளக் ஆட்சிகாலத்தில் தொகுக்கப்பட்ட உரிமையியல் நடைமுறை சட்டங்கள், ஃபைகா-இ-பெரோஸ் ஷாகி என்று அழைக்கப்பட்டது.)

9) இடைக்கால இந்தியாவின் நீதித்துறை பற்றிய கூற்றுகளில் எது சரியானது?

I. துக்ளக் ஆட்சி காலத்தில் உரிமையியல் நடைமுறை சட்டங்கள் அரபு மொழியில் எழுதப்பட்டு பின்னர் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

II. துக்ளக் ஆட்சி காலத்தில் உரிமையியல் நடைமுறை சட்டங்கள் பாரசீக மொழியில் எழுதப்பட்டு பின்னர் அரபுமொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

III. பைகா-இ-பெரோஸ் ஷாகி என்று அழைக்கப்பட்டது.

IV. இது அவுரங்கசீப் காலத்தில் ஃபட்வா-இ-ஆலம்கீர் என்ற சட்டத்தொகுப்பின் படி மாற்றி அமைக்கப்பட்டது.

A) I, III, IV மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) IV மட்டும் சரி

( குறிப்பு – ஃபைகா-இ-பெரோஸ் ஷாகி என்ற சட்டம் அரேபிய மொழியில் எழுதப்பட்டு பின்னர் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் 1670ஆம் ஆண்டு ஃபட்வா-இ-ஆலம்கிர் என்ற சட்டத் தொகுப்பின் படி மாற்றி அமைக்கப்பட்டது)

10) கீழ்க்காணும் இடங்களில் எந்த இடத்தில் ஆங்கிலேயர்களால் மேயர் நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை?

A) மதராஸ்

B) கொல்கத்தா

C) மும்பை

D) புதுடில்லி

(குறிப்பு – ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் மதராஸ், பம்பாய், கொல்கத்தா ஆகிய இடங்களில் உயர்நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டது)

11) உச்சநீதிமன்றம் முதன்முதலாக எங்கு நிறுவப்பட்டது?

A) கல்கத்தா

B) சென்னை

C) மும்பை

D) லக்னோ

(குறிப்பு – உச்சநீதிமன்றம் முதன்முதலாக கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் நிறுவப்பட்டது)

12) உச்சநீதிமன்றம் அமைய வழி வகுத்த சட்டம் எது?

A) ஒழுங்குமுறை சட்டம் 1779

B) ஒழுங்குமுறை சட்டம் 1777

C) ஒழுங்குமுறை சட்டம் 1775

D) ஒழுங்குமுறை சட்டம் 1773

(குறிப்பு – ஒழுங்குமுறை சட்டம் 1773, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அமைக்க வழிவகை செய்தது. இதன்படி இந்தியாவில் முதல் உச்சநீதிமன்றம் கல்கத்தாவில் நிறுவப்பட்டது)

13) இந்தியாவில் முதல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?

A) சர் பட்ரிக் இசுப்பென்சு

B) சர் எலிஜா இம்ஃபே

C) சர் மோரிசு குவையர்

D) சர் எச். ஜே. கானியா

(குறிப்பு – இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சர் எலிஜா இம்ஃபே என்பவர் ஆவார். இவர் கல்கத்தாவில் அமைந்திருந்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்)

14)____________மற்றும்_________ ஆண்டுகளில் மதராஸ் மற்றும் பம்பாய் ஆகிய இடங்களில் உச்சநீதிமன்றத்தில் நிறுவப்பட்டன.

A) 1801, 1823

B) 1803, 1823

C) 1801, 1824

D) 1803, 1824

(குறிப்பு – கல்கத்தா உச்சநீதிமன்றம் 1773ஆம் ஆண்டும், மதராஸ் மற்றும் பம்பாய் நீதிமன்றங்கள் முறையே 1801 மற்றும் 1824ஆம் ஆண்டு நிறுவப்பட்டன)

15) கல்கத்தா, மதராஸ், பம்பாய் ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட உச்சநீதிமன்றங்கள் எந்த ஆண்டு வரை உச்சநீதிமன்றங்களாகவே செயல்பட்டன?

A) 1860ஆம் ஆண்டு வரை

B) 1861ஆம் ஆண்டு வரை

C) 1862ஆம் ஆண்டு வரை

D) 1863ஆம் ஆண்டு வரை

(குறிப்பு – 1862ஆம் ஆண்டு வரை, இந்த மூன்று இடங்களிலும் உயர்நீதிமன்றங்கள் நிறுவப்படும் வரையில் இவை உச்சநீதிமன்றங்களாக செயல்பட்டன).

16) பொருத்துக

I. சாசனச் சட்டம் – a) 1801

II. ஒழுங்குமுறை சட்டம் – b) 1824

III. மதராஸ் உச்சநீதிமன்றம் – c) 1773

IV. பம்பாய் உச்சநீதிமன்றம் – d) 1726

A) I-d, II-c, III-a, IV-b

B) I-c, II-a, III-d, IV-b

C) I-b, II-d, III-a, IV-c

D) I-a, II-d, III-c, IV-b

(குறிப்பு – இந்தியாவில் ஒழுங்குமுறை சட்டம் 1773, உச்ச நீதிமன்றம் அமைக்க வழிவகை செய்தது. இதன்படி கல்கத்தாவில் முதல் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது. கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது.)

17) பொருத்துக

I. ஊரக குற்றவியல் நீதிமன்றம் – a) சதர் திவானி அதாலத்

II. ஊரக குடிமையியல் நீதிமன்றம் – b) மொபசில் திவானி அதாலத்

III. குடிமையியல் மேல்முறையீட்டு நீதிமன்றம் – c) சதர் நிசாமத் அதாலத்

IV. குற்றவியல் மேல்முறையீட்டு நீதிமன்றம் – d) மொபசில் ஃபௌஸ்தாரி அதாலத்

A) I-d, II-c, III-a, IV-b

B) I-c, II-a, III-d, IV-b

C) I-b, II-d, III-a, IV-c

D) I-d, II-b, III-a, IV-c

(குறிப்பு – சிவில் வழக்குகளை தீர்ப்பதற்காக ஊரக குடிமையியல் நீதிமன்றத்தையும், குற்றவியல் வழக்குகளை தீர்ப்பதற்காக ஊரக குற்றவியல் நீதிமன்றத்தையும், ஆங்கிலேயர்கள் அமைத்தனர்)

18) ஊரக குடிமையியல் நீதிமன்றம், ஊரக குற்றவியல் நீதிமன்றம் போன்றவற்றை அமைத்தவர் யார்?

A) வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு

B) காரன்வாலிஸ் பிரபு

C) வில்லியம் பெண்டிங் பிரபு

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – ஊரக குடிமையியல் நீதிமன்றம், ஊரக குற்றவியல் நீதிமன்றம் போன்றவற்றை அமைத்தவர் வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு அவர். மேலும் அவர் மேற்கண்ட நீதிமன்றங்களின் மேல்முறையீட்டை விசாரிக்க சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிசாமத் அதாலத் போன்ற நீதிமன்றங்களையும் நிறுவினார்)

19) உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி முறையில் மறுசீரமைத்தவர் யார்?

A) வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு

B) காரன்வாலிஸ் பிரபு

C) வில்லியம் பெண்டிங் பிரபு

D) டல்ஹௌசி பிரபு

(குறிப்பு – உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி முறையை மறுசீரமைத்தவர், காரன்வாலிஸ் பிரபு ஆவார். மேலும் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டு மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் இவரது ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது)

20) காரன்வாலிஸ் ஆட்சியில் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட இடங்களில் சரியானது எது?

I. பாட்னா II. மூர்ஷிதாபாத் III. கல்கத்தா IV. டாக்கா

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – காரன்வாலிஸ் ஆட்சிகாலத்தில், மேற்கண்ட நான்கு இடங்களில் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன)

21) யாருடைய ஆட்சிக்காலத்தில் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் நீக்கப்பட்டன?

A) வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு

B) காரன்வாலிஸ் பிரபு

C) வில்லியம் பெண்டிங் பிரபு

D) டல்ஹௌசி பிரபு

(குறிப்பு – வில்லியம் பெண்டிங் கால ஆட்சியில் கல்கத்தா, டாக்கா, முர்சிதாபாத் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் நீக்கப்பட்டன)

22) இந்தியாவின் மிகப்பழமையான உயர்நீதிமன்றம் எது?

A) சென்னை உயர்நீதிமன்றம்

B) பம்பாய் உயர் நீதிமன்றம்

C) கல்கத்தா உயர் நீதிமன்றம்

D) ஆந்திர உயர்நீதிமன்றம்

(இந்தியாவின் மிகப்பழமையான உயர்நீதிமன்றம் கல்கத்தா உயர் நீதிமன்றம் ஆகும். 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்டது)

23) இந்தியாவின் மிகப்பெரிய நீதிமன்றம் எது?

A) சென்னை உயர்நீதிமன்றம்

B) பம்பாய் உயர் நீதிமன்றம்

C) கல்கத்தா உயர் நீதிமன்றம்

D) அலகாபாத் உயர்நீதிமன்றம்

(குறிப்பு – நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆகும். 1950ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.)

24) சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிசாமத் அதாலத் ஆகியன எங்கு நிறுவப்பட்டன?

A) சென்னை

B) அலகாபாத்

C) கல்கத்தா

D) பம்பாய்

(குறிப்பு – வில்லியம் பெண்டிங் கால ஆட்சியில், மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் நீக்கப்பட்ட பின்பு, சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிசாமத் அதாலத் ஆகியன அலகாபாத்தில் நிறுவப்பட்டன )

25) யாரால் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம் இந்தியாவில் சட்டங்களை நெறிமுறைபடுத்தியது?

A) வில்லியம் பெண்டிங்

B) மெக்காலே

C) டல்ஹௌசி

D) காரன்வாலிஸ்

(குறிப்பு – மெக்காலே என்பவரால் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம் இந்திய சட்டங்களை நெறிமுறைபடுத்தியது

26) கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது?

I. மெக்காலே என்பவரால் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம் இந்திய சட்டங்களை நெறிமுறை படுத்தியது.

II. அந்த ஆணையத்தின் அடிப்படையில் 1860ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறை சட்டம் கொண்டுவரப்பட்டது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – உரிமையியல் நடைமுறை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு 1859 ஆகும் )

27) இந்திய உச்சநீதிமன்றம் துவங்கப்பட்ட நாள் மற்றும் ஆண்டு?

A) ஜனவரி 25ஆம் நாள், 1950

B) ஜனவரி 26ஆம் நாள், 1950

C) ஜனவரி 27ஆம் நாள், 1950

D) ஜனவரி 28ஆம் நாள், 1950

(குறிப்பு – இந்திய உச்ச நீதிமன்றம் ஜனவரி 25ஆம் நாள், 1950ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் அமைந்துள்ளது)

28) பொருத்துக

I. உரிமையியல் நடைமுறை சட்டம் – a) 1935

II. இந்திய தண்டனை சட்டம் – b) 1861

III. குற்றவியல் நடைமுறைச் சட்டம் – c) 1860

IV. இந்திய அரசு சட்டம் – d) 1859

A) I-d, II-c, III-b, IV-a

B) I-c, II-a, III-d, IV-b

C) I-b, II-d, III-a, IV-c

D) I-d, II-b, III-a, IV-c

(குறிப்பு – மெக்காலே என்பவரால் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம் இந்திய சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது. இதனடிப்படையில் உரிமையியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டன)

29) இந்திய அரசு சட்டம்__________கூட்டாட்சி நீதிமன்றங்களை உருவாக்கியது.

A) 1933

B) 1935

C) 1937

D) 1939

(குறிப்பு – இந்திய அரசு சட்டம் 1935, கூட்டாட்சி நீதிமன்றங்களை உருவாக்கியது. எனினும் அது மேல் முறையீட்டு நீதிமன்றம் அல்ல. மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் இங்கிலாந்தில் உள்ள பிரிவு கவுன்சில் நீதி குழுவிடம் கொண்டுசெல்லப்பட்டது)

30) எந்த சட்டத்தின் மூலம் பிரிவு கவுன்சில் நீதி வரையறை நீக்கப்பட்டது?

A) பிரிவு கவுன்சில் நீதி வரையறை ஒழிப்பு சட்டம் 1946

B) பிரிவு கவுன்சில் நீதி வரையறை ஒழிப்பு சட்டம் 1947

C) பிரிவு கவுன்சில் நீதி வரையறை ஒழிப்பு சட்டம் 1948

D) பிரிவு கவுன்சில் நீதி வரையறை ஒழிப்பு சட்டம் 1949

(குறிப்பு – பிரிவு கவுன்சில் நீதி வரையறை ஒழிப்பு சட்டம் 1949ஆம் ஆண்டின்படி, பிரிவு கவுன்சில் நீதி வரையறை நீக்கப்பட்டு, இந்திய உச்ச நீதிமன்றம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் தொடங்கப்பட்டது)

31) கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?

A) இந்தியா தனக்கென ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி உள்ளது

B) அரசியலமைப்புச் சட்டத்தின் உன்னதமான நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களில் நீதிக்கு உயரிய இடத்தை உருவாக்கியவர்கள் அளித்துள்ளனர்.

C) ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியர்களுக்கான தனி சட்டமும், நீதிமன்றமும் இருந்தது.

D) இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள், நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினர்.

(குறிப்பு – ஆங்கிலேயர் காலத்தின் இந்தியர்களுக்கு என தனியாக சட்டமும் அரசியல் அமைப்பும் இல்லை. சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் இரண்டும் காலனி ஆதிக்கத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது)

32) எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவின் படி நடைமுறை மற்றும் வழிமுறைகள் உச்சநீதிமன்ற விதிகள் ஒழுங்குபடுத்த ஏற்படுத்தப்பட்டன?

A) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 145இன்படி

B) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 166இன்படி

C) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 173இன்படி

D) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 187இன்படி

(குறிப்பு – அரசியலமைப்பு சட்டப்பிரிவு 145இன்படி, 1966ஆம் ஆண்டு நடைமுறை மற்றும் வழிமுறைகள் உச்சநீதிமன்ற விதிகள் ஒழுங்குபடுத்த ஏற்படுத்தப்பட்டன.)

33) நீதித்துறை மற்றும் அரசியல் அமைப்புச் சட்டம் குறித்த கூற்றுகளுள் சரியானது எது?

I. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நான்காவது அத்தியாயத்தின் கீழ் பகுதி V இன்படி ஒன்றிய நிதித்துறை என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ளது.

II. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது அத்தியாயத்தின் கீழ் பகுதி VI இன்படி துணை நீதிமன்றங்கள் என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 4வது அத்தியாயத்தின் கீழ் பகுதி-5 யூனியன் என்ற தலைப்பின் கீழ், ஒன்றிய நீதித்துறை என்ற பெயரில் அமைந்துள்ளது. மேலும் 6வது அத்தியாயத்தின் கீழ், ஆறாவது பகுதியில் மாநிலம் என்ற தலைப்பின் கீழ் துணை நீதிமன்றங்கள் என்ற பெயரிலும் நிறுவப்பட்டுள்ளது)

34) உச்சநீதிமன்றத்தின் அமைப்பு மற்றும் அதிகார வரம்பினை கூறும் நீங்கள் அமைப்பு சட்டப்பிரிவுகள் எது?

A) சட்டப்பிரிவு 124 முதல் 147 வரை

B) சட்டப்பிரிவு 121 முதல் 145 வரை

C) சட்டப்பிரிவு 123 முதல் 149 வரை

D) சட்டப்பிரிவு 125 முதல் 145 வரை

(குறிப்பு – சட்டப்பிரிவு 124 முதல் 147 வரையிலான அரசியலமைப்பு சட்ட பிரிவுகள் இந்திய உச்சநீதிமன்றத்தின் அமைப்பு மற்றும் அதிகார வரம்பினை வகுத்து கூறுகிறது. எ.கா நீதிமன்றங்களின் நீதிபதிகளின் சம்பள விவரங்களையும், வழங்கப்படும் சலுகைகளை குறித்து அரசியலமைப்பு சட்டப்பிரிவு 126 கூறுகிறது)

35) இந்திய உச்சநீதிமன்றம் குறித்து கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?

A) உச்சநீதிமன்ற முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.

B) உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யலாம்.

C) எந்த ஒரு நீதிமன்றத்தின் வழக்குகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

D) வழக்குகளை ஒரு உயர் நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாது.

(குறிப்பு – உச்சநீதிமன்றத்தால் வழக்குகளை ஒரு உயர் நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற முடியும்)

36) அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காக நீதிப் பேராணைகள் வழங்கும் அதிகாரம் எந்த நீதிமன்றத்திற்கு உள்ளது?

A) உச்சநீதிமன்றதிற்கு மட்டும்

B) உயர்நீதிமன்றத்திற்கு மட்டும்

C) உச்ச நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றத்திற்கும்

D) அனைத்து நீதிமன்றத்திற்கும்.

(குறிப்பு – நீதிப்பேராணை வழங்கும் அதிகாரம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் மட்டுமே பெற்றுள்ளது)

37) ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன் மொழிந்த முதல் அரசியல் தத்துவ ஞானி யார்?

A) கன்பூசியஸ்

B) மாண்டெஸ்கியூ

C) சாக்ரடீஸ்

D) பிளேட்டோ

(குறிப்பு – ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்த முதல் அரசியல் தத்துவஞானி மாண்டெஸ்கியூ ஆவார். இவர் புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானி ஆவார்).

38) பொருத்துக

I. மாவட்ட நீதிமன்றங்கள் – a) குற்றவியல் வழக்குகளை விசாரித்தல்

II. அமர்வு நீதிமன்றங்கள் – b) கிராம அளவில் உரிமையியல், குற்றவியல்

வழக்குகளை விசாரித்தல்

III. பஞ்சாயத்து நீதிமன்றங்கள் – c) நில ஆவணம் தொடர்பான வழக்குகள்

IV. வருவாய் நீதிமன்றங்கள் – d) மாவட்ட அளவில் சிவில் வழக்குகளை விசாரித்தல்

A) I-d, II-a, III-b, IV-c

B) I-b, II-a, III-c, IV-d

C) I-c, II-a, III-b, IV-d

D) I-c, II-d, III-a, IV-b

( குறிப்பு – மாவட்ட நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்கள், பஞ்சாயத்து நீதிமன்றங்கள், வருவாய் நீதிமன்றங்கள் போன்றவை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களுக்கு கீழாக செயல்படுகின்றது )

39) விரைவாக நீதியை வழங்கும் லோக் அதாலத் அமர்விற்கு தலைமை ஏற்போர் யார்?

I. ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி

II. ஒரு சமூகப் பணியாளர்

III. ஒரு வழக்கறிஞர்

IV. ஒரு காவல்துறை அதிகாரி

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவர் அனைவரும்

(குறிப்பு – லோக் அதாலத் என்னும் விரைவு நீதிமன்றத்திற்கு, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு சமூகப் பணியாளர் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகிய மூன்று நபர்கள் கொண்ட அமர்வுக்கு தலைமை வகிப்பர்)

40) லோக் அதாலத் எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?

A) 1985ஆம் ஆண்டு

B) 1987ஆம் ஆண்டு

C) 1983ஆம் ஆண்டு

D) 1982ஆம் ஆண்டு

(குறிப்பு – லோக் அதாலத் 1982 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத்தில் நடைபெற்றது)

41) விரைவு நீதிமன்றங்கள் எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது?

A) 2000ஆம் ஆண்டு முதல்

B) 2002ஆம் ஆண்டு முதல்

C) 2003ஆம் ஆண்டு முதல்

D) 2004ஆம் ஆண்டு முதல்

(குறிப்பு – நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் கீழ் நீதிமன்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்திற்காக 2000ஆம் ஆண்டு விரைவு நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன)

42) லோக் அதாலத் பற்றிய சரியான கூற்று எது?

I. இது மக்கள் முன்னிலையில் மக்கள் பேசும் மொழியிலேயே பிரச்சினையை விசாரித்து தீர்வு காண்கிறது.

II. 4 பேர் கொண்ட அமர்வு இதற்கு தலைமை வகிக்கும்.

III. வழக்குரைஞர்கள் இல்லாமல் வழக்குகள் முன்வைக்கப்படுகின்றன

IV. பரஸ்பர ஒப்புதல் மூலம் வழக்குகள் தீர்த்து வைக்கப்படுகின்றன.

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றங்கள் 3 பேர் கொண்ட அமர்வினை, தலைமையாக கொண்டது ஆகும்)

43) தொலைதூர சட்ட முன்னெடுப்பு பற்றிய சரியான கூற்று எது?

I. கிராமப்புற மக்களுக்காக சட்ட உதவி மற்றும் சேவைகளை வழங்குவதற்காக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூட்டு முயற்சியுடன் இது தொடங்கப்பட்டது.

II. தொழில்நுட்ப இயங்குதளமான தொலைதூர சட்ட இணைய வழியின் பொதுவான சேவை மையத்தில் காணொளி கலந்துரையாடல் மூலம் வழக்கறிஞர்களிடம் இருந்து மக்கள் சட்ட ஆலோசனைகளைப் பெறலாம்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – இரண்டு அமைச்சகத்தின் கூட்டு முயற்சியுடன் தொடங்கப்பட்டது ஆகும்)

44) குடும்ப நீதிமன்றம் குறித்த சரியான கூற்று எது?

I. குடும்பம் தொடர்பான சட்ட விவகாரங்களை குடும்ப நீதிமன்றம் கையாளுகிறது.

II. இது உரிமையியல் மற்றும், குற்றவியல் வழக்குகளை கையாளுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – குடும்ப நீதிமன்றங்கள் உரிமையியல் நீதிமன்றங்கள் ஆகும். இவை குழந்தையின் பாதுகாப்பு, மணமுறிவு, தத்தெடுப்பு ஆகிய குடும்பம் தொடர்பான பல்வேறு உரிமைகள், கோரிக்கைகளுக்காக இந்தநீதிமன்றங்கள் பயன்படுகின்றன)

45) இ- நீதிமன்றங்கள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

A) 2004ஆம் ஆண்டு

B) 2005ஆம் ஆண்டு

C) 2006ஆம் ஆண்டு

D) 2007ஆம் ஆண்டு

(குறிப்பு – இ – நீதிமன்றங்கள் திட்டம் 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி அனைத்து நீதிமன்றங்களும் கணினி மயமாக்கப்படும்.)

46) நீதித்துறை சேவை மையம்………… ஒரு பகுதியாகும்.

A) மக்கள் நீதிமன்றத்தின்

B) விரைவு நீதிமன்றத்தின்

C) நடமாடும் நீதிமன்றத்தின்

D) இ- நீதிமன்றத்தின்

(குறிப்பு – நிதித்துறை சேவை மையம் இ- நீதிமன்றத்தின் ஒரு பகுதியாகும். பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்கள் நேரடியாக வழக்கு நிலை மற்றும் அடுத்த விசாரணை தேதிகளை கட்டணமின்றி அறிய முடியும்)

47) கீழ்க்கண்டவற்றுள் யாருக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு இயக்கமுறையை நீதிமன்ற அமைப்பு வழங்குகிறது?

I. குடிமக்கள் மற்றும் அரசாங்கம் இடையே இருக்கும் பிரச்சனைகள்

II. இரண்டு மாநில அரசாங்கங்கள் இடையே இருக்கும் பிரச்சனைகள்

III. மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே இருக்கும் பிரச்சனைகள்

IV. குடி மக்களிடையே இருக்கும் பிரச்சனைகள்

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – நீதிமன்றங்கள் குடிமக்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளையும், அரசாங்கங்கள் இடையே இருக்கும் பிரச்சினைகளையும் தீர்க்கும்பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது)

48) தேசிய சட்ட சேவைகள் அதிகாரம் (NALSA) எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

A) 1985ஆம் ஆண்டு

B) 1986ஆம் ஆண்டு

C) 1987ஆம் ஆண்டு

D) 1988ஆம் ஆண்டு

(குறிப்பு – இது 1987ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகார சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இது சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட உதவிகள் வழங்குவதோடு பிரச்சனைகளுக்கு இணக்கமான தீர்வுகாண ஏற்பாடு செய்கிறது)

49) இந்திய அரசியலமைப்பின்படி அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலனாக இருப்பது எது?

A) உச்சநீதிமன்றம்

B) பாராளுமன்றம்

C) உயர்நீதிமன்றம்

D) மாநில சட்டமன்றம்

(குறிப்பு – இந்திய அரசியலமைப்பின்படி உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராகவும் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகவும் உள்ளது)

50) உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்புகளுள் அல்லாதது எது?

A) முதன்மை அதிகார வரம்பு

B) மேல்முறையீட்டு அதிகார வரம்பு

C) ஆலோசனை அதிகார வரம்பு

D) பாராளுமன்ற அதிகார வரம்பு

(குறிப்பு – பாராளுமன்ற நிகழ்வுகளை குறித்து விசாரிக்கும் உரிமை உச்சநீதிமன்றத்திற்கு இல்லை )

51) உச்சநீதிமன்றத்தின் நீதிப் பேராணை வரம்பு குறித்து கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?

A) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 30

B) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 31

C) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32

D) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 33

(குறிப்பு – உச்சநீதிமன்றத்தின் நீதிப்பேராணை அதிகார வரம்பு கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32 ஆகும். உயர்நீதிமன்றத்தின் நீதிப்பேராணை அதிகார வரம்பு பற்றி கூறும் சட்டப்பிரிவு 226 ஆகும்)

52) மேல்முறையீட்டு அதிகார வரம்பு குறித்து கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

I. உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது.

II. உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது.

III. மேல்முறையீட்டுக்கு தகுதியுள்ளது என உயர்நீதிமன்றத்தால் சான்றிதழ் வழங்கப்பட்ட வழக்குகள் மட்டுமே உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.)

53) உயர்நீதிமன்றம் குறித்த கூற்றுகளில் தவறானது எது?

A) உயர்நீதிமன்றம் மாநிலங்களில் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும்.

B) ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர் நீதிமன்றம் கட்டாயம் இருக்க வேண்டும்.

C) இரண்டு அல்லது மூன்று மாநிலங்களுக்கு என ஒரு பொதுவான உயர்நீதிமன்றம் இருக்கலாம்.

D) உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு அந்த மாநிலங்களுக்குள் மட்டுமே இருக்கும்.

(குறிப்பு – ஒவ்வொரு மாநிலமும் தனக்கான ஒரு உயர்நீதிமன்றத்தை கட்டாயம் கொண்டிருக்க வேண்டியது இல்லை. இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாக ஒரு உயர் நீதிமன்றம் இருக்கலாம். எகா. சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு பொதுவான ஒரு உயர் நீதிமன்றம் ஆகும்)

54) கீழ்க்கண்டவற்றுள் உயர்நீதிமன்றம் கொண்டுள்ள அதிகார வரம்புகளுள் தவறானது எது?

A) மேல்முறையீட்டு அதிகார வரம்பு

B) தனக்கென முதன்மை அதிகார வரம்பு

C) நீதிப்பேராணை வழங்கும் அதிகார வரம்பு

D) சட்டமன்ற விவகாரங்களில் தலையிடும் அதிகார வரம்பு

(குறிப்பு – சட்டமன்ற விவகாரங்களில் தலையிடும் அதிகார வரம்பு உயர்நீதிமன்றம் கொண்டிருக்கவில்லை.)

55) ” நமது நீதித்துறை, நிர்வாகத்திடம் இருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும். அதே வேளையில் திறமை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. மேலும் வினா என்னவென்றால் எப்படி இந்த இரண்டு நோக்கங்களையும் பாதுகாக்க முடியும் என்பதே” என்னும் கூற்று யாருடையது?

A) ஜவகர்லால் நேரு

B) சர்தார் வல்லபாய் பட்டேல்

C) டாக்டர் பி ஆர் அம்பேத்கர்

D) டாக்டர் ராதாகிருஷ்ணன்

(குறிப்பு – மேற்கண்ட கூற்று டாக்டர் பி ஆர் அம்பேத்கருடையது ஆகும். இந்திய அரசியல் அமைப்பின், அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக டாக்டர் பி ஆர் அம்பேத்கார் பதவி வகித்தார். இந்தியாவின் சட்ட அமைச்சராகவும் பதவி வகித்தார்)

56) மக்களாட்சி நாடுகளில், குடிமக்களின் உரிமைகளின் பாதுகாவலன் ஆக இருப்பது எது?

I. நீதித்துறை

II. பாதுகாப்புதுறை

A) I மட்டும்

B) II மட்டும்

C) இரண்டும்

D) இரண்டும் அல்ல

(குறிப்பு – நியாயமாக நீதி கிடைப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் முக்கியமானதாகும். இந்தியா போன்ற மக்களாட்சி நாடுகளில் நீதித்துறை குடிமக்களின் உரிமைகளின் பாதுகாவலனாக உள்ளது)

57) பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது எந்த நீதிமன்றம் ஆகும்?

A) உச்சநீதிமன்றம்

B) உயர்நீதிமன்றம்

C) மாவட்ட நீதிமன்றம்

D) லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம்

(குறிப்பு – பொதுநல வழக்கு, தாக்கல் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது உச்சநீதிமன்றம் ஆகும். இது ஒரு நபர் தனது வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தை அணுக வழி செய்கிறது. மனித உரிமை மீறல், சமய உரிமைகள் மீறல், சாலை பாதுகாப்பு ஆகியவற்றுக்காக பொதுநல வழக்கை எவரும் தாக்கல் செய்யலாம்)

58) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அதன் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது கீழ்க்காணும் எந்த வகை சட்டம் ஆகும்?

I. உரிமையியல் சட்டம்

II. குற்றவியல் சட்டம்

A) I இல் மட்டும்

B) II இல் மட்டும்

C) இரண்டிலும்

D) இரண்டிலும் அல்ல

(குறிப்பு – குற்றம் என சட்டம் வரையறுக்கும் நடத்தைகள் அல்லது செயல்களை விசாரிப்பது குற்றவியல் சட்டங்கள் ஆகும். இது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்வதன் மூலம் தொடங்குகிறது. அதன் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது)

59) உலகில் அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைக் கொண்ட மக்களாட்சி நாடு எது?

A) இந்தியா

B) அமெரிக்கா

C) கனடா

D) பிரேசில்

(குறிப்பு – உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு இந்தியா ஆகும். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைக் கொண்ட மக்களாட்சி நாடு இந்தியா ஆகும்.)

60) FIR என்று அழைக்கப்படுவது எது?

A) முதல் தகவல் அறிக்கை

B) முதல் தகவல் முடிவு

C) முதல் நிகழ்வு அறிக்கை

D) முதல் பிரச்சனை அறிக்கை

(குறிப்பு – முதல் தகவல் அறிக்கை என்பது FIR (First Information Report )ஆகும். குற்றவியல் சட்டத்தின்படி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த பின்பு, வழக்கு நீதிமன்றத்தில் பதியப்படும்)

61) குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்படும் பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி குறித்து ஆலோசனை வழங்கும் அதிகார வரம்பினை பெற்றுள்ளது யார்?

A) உச்சநீதிமன்றம் மட்டும்

B) மாநில உயர்நீதிமன்றங்கள் மட்டும்

C) உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும்

D) உச்சநீதிமன்றமும், பாராளுமன்றமும்

(குறிப்பு – குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கும் அதிகார வரம்பினை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது)

62) இந்திய குடிமகன் தனது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதால் நம்பும் பட்சத்தில் அவர் எந்த நீதிமன்றத்தை நேரடியாக அணுக முடியும்?

A) உச்சநீதிமன்றத்தை மட்டும்

B) உயர்நீதிமன்றத்தை மட்டும்

C) உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம்

D) முதலில் மாவட்ட நீதிமன்றம் பின்பு உயர்நீதிமன்றம் பின்பு உச்சநீதிமன்றம்.

(குறிப்பு – அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதால் இந்திய குடிமகன் ஒருவர் நம்பும் பட்சத்தில், அவர் உச்ச நீதிமன்றத்தையோ அல்லது உயர் நீதிமன்றத்தையோ நேரடியாக அணுக முடியும்)

63) சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று பிரிவுகளாக அரசாங்கம் செயல்பட வேண்டும் என்ற கோட்பாட்டில் உறுதியாக இருந்தவர் கீழ்கண்டவற்றுள் யார்?

A) தத்துவஞானி மாண்டெஸ்கியூ

B) தத்துவஞானி சாக்ரடீஸ்

C) தத்துவஞானி பிளாட்டோ

D) தத்துவஞானி கன்பூசியஸ்

(குறிப்பு – ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்த முதல் அரசியல் தத்துவஞானி மாண்டெஸ்கியூ ஆவார். இவர் சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று பிரிவுகளாக அரசாங்கம் செயல்பட வேண்டும் என்ற கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தார்)

64) உச்ச நீதிமன்றம் குறித்த அரசியலமைப்பு சட்ட பிரிவுகளை பொருத்துக

I. சட்டப்பிரிவு 124 – a) தலைமை நீதிபதியை அமர்த்துதல்

II. சட்டப்பிரிவு 125 – b) ஓய்வு பெற்ற நீதிபதிகள் அமர்வுகளில் பணியாற்றுதல்

III. சட்டப்பிரிவு 126 – c) நீதிபதிகளின் வரைவூதியங்கள்

IV. சட்டப்பிரிவு 128 – d) உச்சநீதிமன்றம், அதன் அமைப்பு.

A) I-d, II-c, III-a, IV-b

B) I-b, II-a, III-c, IV-d

C) I-c, II-a, III-b, IV-d

D) I-c, II-d, III-a, IV-b

(குறிப்பு – ஒன்றியத்தின் நீதித்துறையின் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 124 முதல் 147 வரை அமைந்துள்ளது)

65) கீழ்க்கண்டவற்றில் தவறான இணை எது

A) சட்டப்பிரிவு 138 – உச்சநீதிமன்ற அதிகார வரம்பை விரிவாக்குதல்

B) சட்டப்பிரிவு 137 – உச்சநீதிமன்றம் நீதிப்பேராணை வழங்கும் அதிகாரம்

C) சட்டப்பிரிவு 134 – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு அதிகார வரம்பு

D) சட்டப்பிரிவு 131 – உச்ச நீதிமன்றத்தின் முதலேற்பு அதிகார வரம்பு.

(குறிப்பு – உச்சநீதிமன்றத்தின் நீதிப்பேராணை வழங்கும் அதிகார வரம்பு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 139 இன் கீழ் அமைந்துள்ளது)

66) பொருத்துக

I. சட்டப்பிரிவு 217 – a) உயர் நீதிமன்றங்களின் அமைப்பு

II. சட்டப்பிரிவு 216 – b) உயர் நீதிமன்றங்களின் நீதிபதி அமர்ந்துகை

III. சட்டப்பிரிவு 221 – c) உயர்நீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகளை அமர்த்துதல்

IV. சட்டப்பிரிவு 224 – d) உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வரைவூதியங்கள்

A) I-b, II-a, III-d, IV-c

B) I-b, II-a, III-c, IV-d

C) I-c, II-a, III-b, IV-d

D) I-c, II-d, III-a, IV-b

(குறிப்பு – இந்திய அரசியலமைப்பில், உயர்நீதிமன்றங்களின் அமைப்பு அதிகாரம் போன்றவற்றை அரசியலமைப்பு சட்டப்பிரிவு 214 முதல் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 231 வரை சொல்லப்பட்டுள்ளது)

67) கீழ்க்கண்டவற்றில் தவறான இணை எது?

A) சட்டப்பிரிவு 233 – மாவட்ட நீதிபதிகள் அமர்த்துதல்

B) சட்டப்பிரிவு 220 – உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வரைவூதியங்கள்

C) சட்டப்பிரிவு 222 – கூடுதல் நீதிபதிகளை அமர்த்துதல்

D) சட்டப்பிரிவு 231 – இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான ஒரு உயர் நீதிமன்றம்

(குறிப்பு – அரசியலமைப்பு சட்டப்பிரிவு 220, நிலையம் நீதிபதியாக இருந்தவர் வழக்குரைஞராக தொழில் ஆற்றுவதின் மீதான வரையறையை சொல்கிறது )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!