Book Back QuestionsTnpsc

நீர்க்கோளம் Book Back Questions 9th Social Science Lesson 15

9th Social Science Lesson 15

15] நீர்க்கோளம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சில்வியா ஏர்ல் என்பவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சி நிபுணர் ஆவார். கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக இவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி “தி டைம் இதழ்” இவருக்கு “கோளத்தின் கதாநாயகன்” என்ற பட்டத்தை முதன்முதலில் வழங்கிச் சிறப்பித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சியாளரான ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ் (1910-1997), ஆழ்கடலினைப் பற்றி மிக விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டின் கடற்படையில் தகவல் சேவை பிரிவில் பணியாற்றிய காலத்தில் ஷாங்காய், ஜப்பான் மற்றும் சோவியத் ரஷ்யா போன்ற நாடுகளுக்குப் பல்வேறு பணிகளுக்காக அனுப்பப்பட்டார். 1945ல் “போரின் சிலுவை” என்ற விருதும் 1985ல் அமெரிக்க அதிபரின் சுதந்திரத்தின் பதக்கமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள நீரின் மேல்மட்ட நிலையே நிலத்தடி நீர்மட்டம் என்கிறோம் (Water table). நீர், நீர்க்கொள்பாறைகளின் வழியாக ஊடுருவிச் சென்று, நீர் உட்புகாப் பாறையின் மேல்பகுதியில் தேங்கி நிற்கும் பகுதி நீர்க்கொள்படுகை (Aquifers) என்கிறோம்.

புவித்தொடர்பு: ஒ. என். ஜி. சி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்த ஆய்வுகளையும் உற்பத்தியையும் மேற்கொண்டு வரும் மிகப் பெரிய நிறுவனமாகும். “மும்பை ஹை” பகுதியில் 20 மில்லியன் டன் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

உயர விளக்கப்படம் (hypsometric curve) என்பது நிலப் பகுதியிலோ அல்லது நீர்ப் பகுதியிலோ காணப்படும் நிலத்தோற்றங்களின் உயரத்தை வரைந்து காட்டும் கோட்டுப்படமாகும். ‘Hypso’, என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் “உயரம்” என்பதாகும்.

“பாத்தோம்கள்” (Fathoms) 🡪 கடலின் ஆழத்தை அளவிடக் கூடிய ஓர் அலகு. சம ஆழக்கோடு (Isobath) 🡪 ஒரே அளவிலான ஆழம் கொண்ட இடங்களை வரைபடத்தில் இணைக்கும் கற்பனைக் கோடு. சம உவர்ப்புக்கோடு (Isohaline) 🡪 ஒரே அளவிலான உப்புத்தன்மை கொண்ட பகுதிகளை வரைபடத்தில் இணைக்கும் கற்பனைக் கோடு.

அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் காணப்படும் கடலடிச் சமவெளிகள் பசிபிக் பெருக்கடலில் காணப்படும் சமவெளிகளைவிட மிகவும் பரந்து காணப்படுகின்றன. ஏனெனில் மிகப்பெரிய ஆறுகளுள் பல இக்கடல்களில் கலப்பதனால் கடலடிச் சமவெளிகள் பரந்து காணப்படுகின்றன. (எ. கா): அமேசான், கங்கை மற்றும் பிரம்மபுத்திரா.

உலகின் மிக ஆழமான கடலடி “உறிஞ்சித் துளைக்கு டிராகன் துளை” என்று பெயர். அப்பகுதியில் வாழும் மீனவர்கள் இதனை “தென் சீனக்கடலின் கண்” என அழைக்கின்றனர்.

இந்தியாவில் காம்பே வளைகுடா, கட்ச் வளைகுடா மற்றும் சுந்தரவன சதுப்பு நிலப் பகுதிகள் ஓதசக்தி உற்பத்தி செய்ய சாத்தியக் கூறுகள் நிறைந்த மண்டலங்களாக அறியப்பட்டுள்ளன.

அலை நீர் விழும் போது ஏற்படும் ஆற்றலை விசைப்பொறி உருளை (hydro turbines) கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தியாவில் கேரளக் கடற்கரையில் உள்ள விழிஞ்சியம் மற்றும் அந்தமான நிக்கோபார் தீவுகளில் அலையாற்றல் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

கடல் எல்லைகள்: பெரும்பாலான நாடுகளின் கடல் எல்லை என்பது அவற்றின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் (National miles) என கணக்கிடப்படுகிறது. 2013-ல் கடல் சட்டத்தின் மீதான மாநாடு நடைபெற்ற போது ஒவ்வொரு நாட்டிற்குமான கடல் மைல்களை ஐ. நா சபை நிர்ணயம் செய்தது. அதன்படி ஜோர்டான் மற்றும் பாலவ் நாடுகளுக்கு 3 கடல் மைல்களும், பெனின், காங்கோ குடியரசு எல்சால்வடார் பெரு மற்றும் சோமாலியா நாடுகளுக்கு 200 கடல் மைல்களும் நிர்ணயம் செய்தது.

தேசிய கடல் சார் நிறுவனம் (National Institute of Oceanography – NIO) 01. 01. 1996-ல் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் கோவாவில் உள்ள “டோனா பௌலா” ஆகும். கடல்சார் அம்சங்கள், பெருங்கடல் பொறியியல், கடல் அகழாய்வு போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ள ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை இந்நிறுவனம் மேற்கொள்கிறது.

பவளப்பாறைத் திட்டு: உலகின் மிக நீளமான பவளப்பாறைத் திட்டு “தி கிரேட் பேரியர் ரீப்” (The Great Barrier Reef) ஆகும். இப்பவளப்பாறை 2, 900 தனித்த பவளத்திட்டுகளையும் 900 தீவுகளையும் உள்ளடக்கி 2, 000 கி. மீ நீண்டு காணப்படுகிறது. இது 3, 50, 000 சதுர கி. மீ பரந்து காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் அருகேயுள்ள பவளக்கடலில் இதன் அமைவிடம் உள்ளது. விண்வெளியிலிருந்தும் இப்பவளத்திட்டைக் காணலாம். புவியின் உயிரினப்பன்மை நிறைந்த இடங்களில் ஒன்றாக இப்பரந்த பவளப்பாறைத்திட்டுகள் உள்ளன. பல பில்லியன் நுண்ணிய உயிரியான பவள மொட்டுக்களால் இப்பவளப்பாறைகள் உருவாக்கப்படுகின்றன. உலகின் 7 இயற்கை அதிசயங்களில் ஒன்றாக CNN இதனை அடையாளங்கண்டுள்ளது.

கங்கை வாழ் ஓங்கில் (டால்பின்), இந்தியாவின் தேசிய கடல்வாழ் உயிரினமாக 2010-ல் அறிவிக்கப்பட்டது. இஃது ஓர் அழிந்து வரும் உயிரினமாகும். ஓங்கில்கள் உண்மையிலேயே அழிந்து வரும் உயிரினமா? ஆம், என்றால் காரணங்களைப் பட்யலிடுக.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சுந்தா அகழி காணப்படும் பெருங்கடல் ————-

(அ) அட்லாண்டிக் பெருங்கடல்

(ஆ) பசிபிக் பெருங்கடல்

(இ) இந்தியப் பெருங்கடல்

(ஈ) அண்டார்டிக் பெருங்கடல்

2. பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச்செல்ல ————-

(அ) அதிகரிக்கும்

(ஆ) குறையும்

(இ) ஒரே அளவாக இருக்கும்

(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

3. கடல் நீரோட்டங்கள் உருவாகக் காரணம்

(அ) புவியின் சுழற்சி

(ஆ) வெப்ப நிலை வேறுபாடு

(இ) உவர்ப்பிய வேறுபாடு

(ஈ) மேற்கண்ட அனைத்தும்

4. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:

1. மீன்பிடித்தளங்கள் பெரும்பாலும் அகலமான கண்டத்திட்டு பகுதிகளில் காணப்படுகின்றன.

2. மிதவெப்ப மண்டலப்பகுதிகளில் மீன் பிடித்தொழில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.

3. மீனின் முதன்மை உணவான தாவர ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப நீரோட்டமும் குளிர் நீரோட்டமும் இணைவதே காரணமாகும்.

4. இந்தியாவின் உள்நாட்டு மீன் பிடித்தொழில் குறிப்பிடத்தக்கது ஆகும்.

(அ) 1 மற்றும் 2 சரி

(ஆ) 1 மற்றும் 3 சரி

(இ) 2, 3 மற்றும் 4 சரி

(ஈ) 1, 2 மற்றும் 3 சரி

5. கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்

(அ) புவித்தட்டுகள் இணைதல்

(ஆ) புவித்தட்டுகள் விலகுதல்

(இ) புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்

(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

6. கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கரமாக உள்ளவை எவை?

(அ) கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி சமவெளி, கடல் அகழி

(ஆ) கண்டச்சரிவு, கண்டத்திட்டு, கடலடிச்சமவெளி, கடல் அகழி

(இ) கடலடி சமவெளி, கண்டச்சரிவு, கண்டத்திட்டு, கடல் அகழி

(ஈ) கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி, கண்டத்திட்டு, கடல் அகழி

7. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்துவது எது?

அ) வளைகுடா நீரோட்டம் – பசிபிக் பெருங்கடல்

ஆ) லாப்ரடார் கடல் நீரோட்டம் – வடஅட்லாண்டிக் பெருங்கடல்

இ) கேனரி கடல் நீரோட்டம் – மத்திய தரைக்கடல்

ஈ) மொசாம்பிக் கடல் நீரோட்டம் – இந்தியப் பெருங்கடல்

8. கடலில் காணப்படும் பிளாங்கடனின் அளவை தீர்மானிக்கும் காரணி

1. நீரின் ஆழம்

2. கடல் நீரோட்டம்

3. வெப்பநிலை மற்றும் உவர்ப்பியம்

4. பகல் மற்றும் இரவின் நீளம்

(அ) 1 மற்றும் 2 சரி

(ஆ) 1, 2 மற்றும் 3 சரி

(இ) 1, 3 மற்றும் 4 சரி

(ஈ) அனைத்தும் சரி

II. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) A மற்றும் R இரண்டும் சரி, R, A விற்கான சரியான விளக்கம்.

(ஆ) A மற்றும் R சரி ஆனால் R, A விற்கான சரியான விளக்கம் இல்லை.

(இ) A சரி ஆனால் R தவறு

(ஈ) A தவறு ஆனால் R சரி

1. கூற்று (A): வரைபடங்களில் கடல்கள் எப்பொழுதும் நீல நிறத்தில் கொடுக்கப்படும்.

காரணம் (R): இது கடல்களின் இயற்கையான நிறத்தைக் காட்டுகிறது.

2. கூற்று (A): ஆழ்கடல் மட்டக்குன்றுகள், கயாட் என்று அழைக்கப்படுகின்றன.

காரணம் (R): அனைத்து கயாட்டுகளும் எரிமலை செயல்பாடுகளால் உருவானவை.

3. கூற்று (A): கடலடித்தளத்தில் காணப்படும் ஆழமான குறுகிய பகுதி கடலடிப் பள்ளத்தாக்குகள் ஆகும்.

காரணம் (R): இவைகள் கண்டத்திட்டு, சரிவு மற்றும் உயர்ச்சிகளினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

4. கூற்று (A): வட்டப் பவளத்திட்டு (Atolls), அட்லாண்டிக் பெருங்கடலில் பரவலாகக் காணப்படுகின்றன.

காரணம் (R): ஆழமான பகுதிகளில் கடல் வாழ் உயிரினங்கள் குறைவாக உள்ளன.

5. கூற்று (A): நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளில் உவர்ப்பியம் அதிகமாக உள்ளது.

காரணம் (R): நிலத்தால் சூழப்பட்ட கடலில் விரிந்த நன்னீர் சிறிதளவே கலக்கின்றது.

III. பொருத்துக:

1. மரியானா அகழி – அ] கடலில் உவர்ப்பியம் குறைவு

2. கிரேட் பேரியர் ரீப் – ஆ] ஜப்பான் கடற்கரையோரம்

3. உயர்ஓதம் – இ] பசிபிக் பெருங்கடலின் ஆழமானப்பகுதி

4. அதிக மழை – ஈ] ஆஸ்திரேலியா

5. குரோசியோ நீரோட்டம் – உ] இரண்டாம் நிலை நிலத்தோற்றம்

6. கண்டச்சரிவு – ஊ] அமாவாசை மற்றும் முழு நிலவு நாள்

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இந்தியப் பெருங்கடல், 2. குறையும், 3. மேற்கண்ட அனைத்தும், 4. 1, 2 மற்றும் 3 சரி, 5. புவித்தட்டுகள் விலகுதல், 6. கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி சமவெளி, கடல் அகழி, 7. வளைகுடா நீரோட்டம்- பசிபிக் பெருங்கடல், கேனரி கடல் நீரோட்டம் – மத்திய தரைக்கடல், 8. 1, 2 மற்றும் 3 சரி

II. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. A மற்றும் R இரண்டும் சரி, R, A விற்கான சரியான விளக்கம், 2. A சரி ஆனால் R தவறு, 3. A மற்றும் R சரி ஆனால் R, A விற்கான சரியான விளக்கம் இல்லை, 4. A மற்றும் R இரண்டும் சரி, R, A விற்கான சரியான விளக்கம், 5. A மற்றும் R இரண்டும் சரி, R, A விற்கான சரியான விளக்கம்.

III. பொருத்துக:

1. இ, 2. ஈ, 3. ஊ, 4. எ, 5. அ, 6. ஆ, 7. உ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!