Book Back QuestionsTnpsc

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Book Back Questions 6th Social Science Lesson 16

6th Social Science Lesson 16

16] பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஆறுமுக நாவலர் (யாழ்ப்பாணம்) தாமோதரம் பிள்ளை (யாழ்ப்பாணம்) உ. வே. சாமிநாத அய்யர் ஆகியோர் அரும்பாடுபட்டு பனையோலைகளில் எழுதப்பட்டிருந்த தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிடுவதில் பல ஆண்டுகளைச் செலவிட்டனர்.

தொல்காப்பியம்: ஒரு தமிழ் இலக்கண நூலாகும். அது சங்க காலத் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் உயர் தரத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழிப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் என்பவர் தமிழ் மொழியானது இலத்தீன் மொழியின் அளவிற்குப் பழைமையானது எனும் கருத்தைக் கொண்டுள்ளார். ஏனைய மொழிகளின் செல்வாக்கிற்கு உட்படாமல் முற்றிலும் சுதந்திரமான ஒரு மரபாக அது உருபெற்று எழுந்துள்ளது என அவர் கூறுகிறார்.

கல்லணை: இது கற்களால் கட்டப்பட்ட தடுப்பணை ஆகும். பாசனத்திற்காகக் கழிமுகப் பகுதி வழியாக நீரைத் திருப்பிவிடுவதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே இவ்வணை கட்டப்பட்டது. கல்லணை கட்டப்பட்ட போது 69, 000 ஏக்கர் நிலத்திற்கு அது நீர்ப்பாசன வசதியை வழங்கியது.

முக்கியத்துவம் மிகுந்த சேர அரசர்கள்: உதயன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், சேரல் இரும்பொறை.

முக்கியத்துவம் வாய்ந்த சோழ அரசர்கள்: இளஞ்சேட்சென்னி, கரிகால் வளவன், கோச்செங்கணான், கிள்ளிவளவன், பெருநற்கிள்ளி.

முக்கியத்துவம் வாய்ந்த பாண்டிய அரசர்கள்: நெடியோன், முதுகுடுமிப் பெருவழுதி, நன்மாறன், நெடுஞ்செழியன்.

சங்க காலப் பெண்பாற்புலவர்கள்: அவ்வையார், வெள்ளிவீதியார், காக்கைப் பாடினியார், ஆதி மந்தியார், பொன்முடியார்.

வீரக்கல்/நடுகல்: பண்டைக்காலத் தமிழர்கள் போர்க்களத்தில் மரணமுற்ற வீரர்கள் மேல் பெரும் மரியாதை கொண்டிருந்தனர். போரில் மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றுவதற்காக நடுகற்கள் நடப்பட்டன.

மலபார் கருமிளகு: எகிப்து அரசன் இரண்டாம் ராம் செஸின் பதப்படுத்தப்பட்ட உடல் திறக்கப்பட்ட போது, தொல்லியல் அறிஞர்கள் அவருடைய நாசியினுள்ளும் அடிவயிற்றிலும் கருமிளகுக் கதிர் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். (இவ்வாறு பதப்படுத்தி உடலைப் பாதுகாப்பது பண்டைய நாட்களில் பின்பற்றப்பட்ட முறையாகும்)

இந்திய வணகர்களால் ரோமப் பேரரசுக்கு விநியோகம் செய்யப்பட்ட பட்டு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. ரோமப்பேரரசர் ஆரிலியன் அந்தபட்டு, எடைக்கு எடை தங்கம் கொடுத்துப் பெற தகுதியானது என அறிவித்தார்.

முசிறி – முதல் பேரங்காடி: ரோம் நாட்டைச் சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு (Natural History) எனும் நூலில் முசிறியை “இந்தியாவின் முதல் பேரங்காடி” எனக் குறிப்பிட்டுள்ளார் ரோமானியரின் குடியிருப்பு இருந்த முசிறியில் அகஸ்டஸ் கடவுளுக்காகக் கோவிலொன்று கட்டப்பட்டிருந்தது. கி. மு. (பொ. ஆ. மு) இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ் இலையில் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தப் பத்திரத்தில் (வியன்னாவிலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது) அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கும் முசிறியைச் சேர்ந்த ஒரு வணிகருக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட வணிக ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. தமிழகத்தின் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ___________

(அ) பாண்டியன் நெடுஞ்செழியன்

(ஆ) சேரன் செங்குட்டுவன்

(இ) இளங்கோ அடிகள்

(ஈ) முடத்திருமாறன்

2. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை?

(அ) பாண்டியர்

(ஆ) சோழர்

(இ) பல்லவர்

(ஈ) சேரர்

3. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் _________ ஆவர்.

(அ) சாதவாகனர்கள்

(ஆ) சோழர்கள்

(இ) களப்பிரர்கள்

(ஈ) பல்லவர்கள்

4. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு ___________

(அ) மண்டலம்

(ஆ) நாடு

(இ) ஊர்

(ஈ) பட்டினம்

5. குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?

(அ) கொள்ளையடித்தல்

(ஆ) ஆநிரை மேய்த்தல்

(இ) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

(ஈ) வேளாண்மை

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: புலவர்களின் குழுமம் சங்கம் என அறியப்பட்டது.

காரணம்: சங்க இலக்கியங்களின் மொழி தமிழாகும்.

(அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

(ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

(இ) கூற்று சரி காரணம் தவறு

(ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

2. கீழ்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை அல்ல?

1. கரிகாலன் தலையாலங்கானம் போரில் வெற்றிபெற்றான்.

2. பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.

3. சங்க காலத்தைச் சேர்ந்த பழைமையான இலக்கியங்கள் பெரும்பாலும் உரைநடையில் எழுதப்பட்டன.

(அ) 1 மட்டும்

(ஆ) 1 மற்றும் 3 மட்டும்

(இ) 2 மட்டும்

3. பண்டைக்காலத் தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் இவ்வாறு அமைந்திருந்தது.

(அ) ஊர் < நாடு < கூற்றம் < மண்டலம்

(ஆ) ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்

(இ) ஊர் < மண்டலம் < கூற்றம் < நாடு

(ஈ) நாடு < கூற்றம் < மண்டலம் < ஊர்

4. அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக:

அ. சேரர் – 1. மீன்

ஆ. சோழர் – 2. புலி

இ. பாண்டியர் – 3. வில், அம்பு

(அ) 3, 2, 1

(ஆ) 1, 2, 3

(இ) 3, 1, 2

(ஈ) 2, 1, 3

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வெண்ணி போரில் வெற்றி பெற்றது ___________

2. சங்க காலத்து மிகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ___________

3. காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ___________ கட்டினார்.

4. படைத் தலைவர் ___________ என அழைக்கப்பட்டார்.

5. நில வரி ___________ என அழைக்கப்பட்டது.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. சங்க காலத்தில் பாடல்களைப் பாடுவோர் இருளர் என அழைக்கப்பட்டனர்.

2. சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது.

3. கிழார் என்பவர் கிராமத்தின் தலைவர் ஆவார்.

4. புகார் என்பது நகரங்களின் பொதுவான பெயர் ஆகும்.

5. கடற்கரைப் பகுதிகள் மருதம் என அழைக்கப்பட்டன.

பொருத்துக:

அ. தென்னர் – சேரர்

ஆ. வானவர் – சோழர்

இ. சென்னி – வேளிர்

ஈ. அதியமான் – பாண்டியர்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. சேரன் செங்குட்டுவன் 2. பல்லவர் 3. களப்பிரர்கள் 4. ஊர்

5. வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

2. ‘1 மற்றும் 3’ மட்டும்

3. ஊர் கூற்றம் நாடு மண்டலம்

4. (3, 2, 1)

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. கரிகாலச் சோழன் 2. தொல்காப்பியம்

3. கரிகாலச் சோழன் 4. தானைத் தலைவன்

5. இறை

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. தவறு

சரியான விடை: சங்க காலத்தில் பாடல்களைப் பாடுவோர் புலவர் என அழைக்கப்பட்டனர்.

2. தவறு

சரியான விடை: சங்க காலத்தில் சாதி முறை வளர்ச்சி பெறவில்லை.

3. சரி

4. தவறு

சரியான விடை: புகார் என்பது துறைமுகங்களின் பொதுவான பெயர் ஆகும்.

5. தவறு

சரியான விடை: கடற்கரைப் பகுதிகள் நெய்தல் என அழைக்கப்பட்டன.

பொருத்துக: (விடைகள்)

1. தென்னவர் – பாண்டியர்

2. வானவர் – சேரர்

3. சென்னி – சோழர்

4. அதியமான் – வேளிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!