Indus Valley Civilization Notes - சிந்து சமவெளி நாகரிகம் பாடக்குறிப்புகள்MCQ QuestionsTnpsc

பண்டைய நாகரிகங்கள் – சிந்துவெளி நாகரிகம் 9th Social Science Lesson 2 Questions in Tamil

9th Social Science Lesson 2 Questions in Tamil

2. பண்டைய நாகரிகங்கள் – சிந்துவெளி நாகரிகம்

கூற்று 1: இடைக்கற்காலத்திற்கு முன்பு தொடக்ககாலக் சமூக மக்கள் குழுக்களாகவே இருந்தன.

கூற்று 2: இந்த குழுக்கள் என்பது நாடோடிகளாக இருந்த வேட்டையாடுவோர், உணவு சேகரிப்போர் ஆவர்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: இடைக்கற்காலக் காலகட்டத்தில் உருவான தொல்குடி அமைப்புகள் பெரும்பாலும் சமத்துவ இயல்பு கொண்டதாகவே இருந்தது.)

சிந்துவெளி நாகரிகம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் __________ தூரம் பரவியிருந்தது.

A) 1.3 பில்லியன் சதுர கிலோ மீட்டர்கள்

B) 1.3 பில்லியன் கிலோ மீட்டர்கள்

C) 1.3 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள்

D) 1.3 மில்லியன் கிலோ மீட்டர்கள்

(குறிப்பு: சிந்துவெளி நாகரிகம், ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.)

சரியான இணையைத் தேர்ந்தெடு. (ஹரப்பா நாகரிக எல்லைகள்)

1. மேற்கு – சுட்காஜென் டோர்

2. வடக்கு – ஷோர்டுகை

3. கிழக்கு – ஆலம்கீர்பூர்

4. தெற்கு – டைமாபாத்

A) அனைத்தும் சரி

B) 2, 4 சரி

C) 1, 3 சரி

D) 1, 4 சரி

(குறிப்பு: சுட்காஜென் டோர் – பாகிஸ்தான்-ஈரான் எல்லையில் உள்ளது, ஷோர்டுகை – ஆப்கானிஸ்தான், ஆலம்கீர்பூர்-உத்திரப்பிரதேசம்(இந்தியா), டைமா பாத்- மஹாராஷ்ட்ரா (இந்தியா).)

சிந்துவெளி நாகரிகம் பரவியுள்ள முக்கிய பகுதிகள் எவை?

1. குஜராத் 2. பாகிஸ்தான் 3. மத்தியப் பிரதேசம்

4. இராஜஸ்தான் 5. ஹரியானா

A) அனைத்தும் B) 1, 2, 3, 4 C) 1, 2, 4, 5 D) 2, 3, 4, 5

(குறிப்பு: இப்பரப்பில் ஹரப்பா நாகரிகத்துக்கான பல சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.)

சரியான இணையைத் தேர்ந்தெடு.(சிந்துவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்கள்)

1. ஹரப்பா – பஞ்சாப், பாகிஸ்தான்

2. மொஹஞ்சதாரோ – சிந்து, பாகிஸ்தான்

3. தோலாவிரா – குஜராத், இந்தியா

4. கலிபங்கன் – குஜராத், இந்தியா

A) அனைத்தும் சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 3, 4 சரி

D) 1, 2, 3 சரி

(குறிப்பு: கலிபங்கன் – ராஜஸ்தான், இந்தியா)

சரியான இணையைத் தேர்ந்தெடு.(சிந்துவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்கள்)

1. லோதால் – குஜராத், இந்தியா

2. பனவாலி – ராஜஸ்தான், இந்தியா

3. ராகிகரி – பஞ்சாப், இந்தியா

4. சுர்கொடா – குஜராத், இந்தியா

A) அனைத்தும் சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 3, 4 சரி

D) 1, 2, 3 சரி

(குறிப்பு: ராகிகரி – ஹரியானா, இந்தியா)

ஹரப்பா நாகரிகம் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) ஹரப்பா நகரங்களில் மதில் சுவர்கள், நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர்க் கால்வாய்கள் ஆகியவை காணப்படுகின்றன.

B) ஹரப்பர்கள் சுட்ட, சுடாத செங்கற்களையும், கற்களையும் கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தினார்.

C) வீடுகளில் மாடிகள் காணப்படவில்லை.

D) உள்ளாட்சி அமைப்பு ஒன்று நகரங்களின் திட்டமிடலை கட்டுப்படுத்தியது.

(குறிப்பு: ஹரப்பா நாகரிகத்தில் சில வீடுகளில் மாடிகள் காணப்பட்டன.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (ஹரப்பா நாகரிகம்)

1. மொஹஞ்சதாரோவில் உள்ள மாபெரும் குளியல் குளம் ஒரு முக்கியமான கட்டுமாகும்.

2. மொஹஞ்சதாரோவிலிருந்து கிடைத்துள்ள ஒரு சிலை “பூசாரி அரசன்” என்று அடையாளம் காட்டப்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு: ஹரப்பர்களின் அரசு அமைப்பு பற்றி நமக்கு விபரங்கள் தெரியவில்லை. ஆனால், பண்டைய அரசு போன்ற ஒரு அரசியலமைப்பு ஒன்று இருந்திருக்க வேண்டும்.)

ஹரப்பா மக்கள் கீழ்க்கண்ட எந்த பயிர்களை பயிரிட்டனர்?

1. கோதுமை 2. பார்லி

3. நெல் 4. திணை வகைகள்

A) அனைத்தும் B) 1, 2, 4 C) 2, 3, 4 D) 1, 3, 4

(குறிப்பு: ஹரப்பா மக்கள் இரட்டைச் சாகுபடி முறையை கடைப்பித்தார்கள்.)

கூற்று 1: ஹரப்பா மக்களுக்கு ஆடு மாடு வளர்த்தல் பற்றி தெரிந்திருந்தது.

கூற்று 2: யானை உள்ளிட்ட பல விலங்குகள் பற்றி அறிந்திருந்தனர்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: ஹரப்பா மக்கள் மாடுகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள் ஆகியவற்றை வளர்த்தனர்.)

ஹரப்பாவின் மாடுகள் ___________ என்று அழைக்கப்படும்.

A) கார்னிலியன்

B) ஜெபு

C) கியூனிபார்ம்

D) ஹைக்சோஸ்

(குறிப்பு: ஜெபு என்பது ஒரு பெரிய வகை மாட்டின் இனம். சிந்துவெளி முத்திரைகளில் இவ்வகையான பெரிய காளை உருவம் பரவலாகக் காணப்படுகிறது.)

கூற்று 1: ஹரப்பர்கள் ஓவியங்கள் தீட்டப்பட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்தினார்கள்

கூற்று 2: மட்பாண்டங்கள் ஆழமான சிவப்பு வண்ணம் பூசப்பட்டு கருப்பு நிற ஓவியங்கள் தீட்டப்பட்டவை.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: பீடம் வைத்த தட்டு, தானியம் போன்றவற்றைச் சேமித்து வைப்பதற்கான ஜாடிகள், துளையிடப்பட்ட ஜாடிகள், கோப்பைகள், ‘S’ வடிவ ஜாடிகள், தட்டுகள், சிறுதட்டுகள், கிண்ணங்கள், பானைகள் என்று பலவிதமான மட்பாண்டங்களைச் செய்தார்கள்.)

கூற்று 1: ஹரப்பா மக்கள் குதிரைகளைப் பயன்படுத்தினர்.

கூற்று 2: ஹரப்பா மக்கள் மட்பாண்டங்களில் சித்திரங்களை தீட்டினர்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: ஹரப்பா மக்கள் குதிரைகளைப் பயன்படுத்தவில்லை.)

சிந்துவெளி நாகரிக மக்கள் மட்பாண்டங்களில் கீழ்க்கண்ட எந்த ஓவியங்களைத் தீட்டினர்?

1. அரச மர இலை

2. மீன் செதில்

3. கிடைக்கோட்டு பட்டைகள்

4. ஒன்றையொன்று வெட்டும் வட்டங்கள்

5. குறுக்கும் நெடுக்குமான கோடுகள்

6. கணித வடிவியல் வடிவங்கள்

7. செடி, கொடிகள்

A) அனைத்தும் B) 2, 3, 5, 6 C) 1, 2, 5, 6 D) 2, 4, 6, 7

(குறிப்பு: மட்பாண்டங்களில் மேற்கண்ட ஓவியங்கள் கருப்பு நிறத்தில் தீட்டப்பட்டனர்.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. ஹரப்பா பண்பாட்டு மக்கள் செர்ட் என்ற சிலிகா கல் வகையில் செய்த பிளேடுகள், கத்திகள், செம்புப் பொருட்கள், எலும்பாலும் தந்தத்தாலும் செய்யப்பட்ட கருவிகள் ஆகியவற்றை பயன்படுத்தினார்கள்.

2. சிந்து சமவெளி மக்கள் இரும்பின் பயனை அறிந்திருந்தனர்.

3. கூர்மையான கருவிகள், உளிகள், ஊசிகள், மீன் தூண்டில் முட்கள், கத்திகள், நிறுவைத் தட்டுகள், முகம் பார்க்கும் கண்ணாடி, அஞ்சனம் தீட்டும் குச்சி ஆகியவை செம்பால் செய்யப்பட்டன.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 1, 3 சரி

D) 2, 3 சரி

(குறிப்பு: சிந்து சமவெளி மக்கள் இரும்பின் பயனை அறியவில்லை.)

கூற்று 1: செம்பில் செய்த அம்புகள், ஈட்டிகள், உளி, கோடரி ஆகிய கருவிகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினர்.

கூற்று 2: மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள நடனமாடும் பெண்ணின் சிலை, ஹரப்பா மக்களுக்கு மெழுகு அச்சில் உலோகத்தை உருக்கி ஊற்றி சிலை வார்க்கும் தொழில்நுட்பம் தெரிந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

ஹரப்பா பண்பாட்டு மக்கள் எவற்றாலான அணிகலன்களைச் செய்தனர்?

1. கார்னீலியன் 2. செம்பு

3. வெள்ளி 4. தங்கம்

A) அனைத்தும் B) 1, 2, 3 C) 1, 2, 4 D) 2, 3, 4

(குறிப்பு: ஹரப்பா நாகரிக மக்கள் கல் அணிகலன்களையும் சங்குவளையல்களையும் செய்தனர்.)

ஹரப்பா மக்கள் வேலைப்பாடுகள் மிக்க ஆடை அணிகலன்களை ___________ற்கு ஏற்றுமதி செய்தனர்.

A) சீனா

B) ஜப்பான்

C) இலங்கை

D) மெசபடோமியா

(குறிப்பு: ஹரப்பா பண்பாட்டு மக்கள் பருத்தி மற்றும் பட்டு பற்றி அறிந்திருந்தார்கள்.)

கீழ்க்கண்ட எந்த பகுதிகளில் ஹரப்பன் முத்திரைகள் காணப்படுகின்றன?

1. ஓமன் 2. பஹ்ரைன் 3. ஈராக் 4. ஈரான்

A) அனைத்தும் B) 1, 2, 3 C) 2, 3, 4 D) 1, 3, 4

(குறிப்பு: ஹரப்பர்களுக்கு மெசபடோமியர்களுடன் நெருங்கிய வணிகத் தொடர்பு இருந்தது.)

கியூனிபார்ம் எழுத்துகளில் காணப்படும் _________ என்ற குறிப்பு சிந்து பகுதியைக் குறிப்பதாகும்.

A) சர்கோபகஸ்

B) ஹைக்சோஸ்

C) மெலுஹா

D) ஹைரோகிளிபிக்

(குறிப்பு: கியூனிபார்ம் ஆவணங்கள் மெசபடோமியாவிற்கும், ஹரப்பர்களுக்கும் இடையே இருந்த வணிகத் தொடர்பை வெளிப்படுத்துகின்றன.)

கூற்று: ஹரப்பர்கள் முறையான எடைகளையும் அளவுகளையும் பயன்படுத்தினார்கள்.

காரணம்: வணிகப் பரிமாற்றங்களில் ஈடுபட்ட காரணத்தால் அவர்களுக்கு முறைப்படுத்தப்பட்ட அளவுகள் தேவையாக இருந்தது.

A) கூற்று சரி காரணம் தவறு

B) கூற்று தவறு காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

D) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல

ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் __________ வடிவிலான செர்ட் எடைகள் கிடைத்துள்ளன.

A) வட்டம்

B) சதுரம்

C) கனசதுரம்

D) கனசெவ்வகம்

(குறிப்பு: தராசுகளுக்கான செம்புத் தட்டுகள் ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் கிடைத்துள்ளன.)

ஹரப்பர்களின் எடைகளின் விகிதம் எவ்வாறு அதிகரித்தன?

A) 1:2:4:8:16:32

B) 1:3:6:9:12:15

C) 1:2:4:6.8.10

D) 1:2:5:8:10:12

(குறிப்பு: எடைகள், ஹரப்பா மக்களுக்கு ஈரடிமான எண் முறை பற்றி தெரிந்திருந்ததைக் காட்டுகின்றன.)

ஹரப்பன் பகுதிகளிலிருந்து சுமார் _________ எழுத்துடைய சிறு எழுத்துத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

A) 2000 B) 3000 C) 4000 D) 5000

(குறிப்பு: ஹரப்பன் எழுத்துகள் இதுவரை வாசிக்கப்படவில்லை.)

ஹரப்பா பண்பாட்டுப் பகுதிகளில் கீழ்க்கண்ட எவற்றால் செய்யப்பட்ட முத்திரைகள் கிடைத்துள்ளன?

1. நுரைக்கல் 2. செம்பு 3. சுடுமண் 4. தந்தம்

A) அனைத்தும் B) 1, 2, 4 C) 2, 3, 4 D) 1, 3, 4

(குறிப்பு: இந்த முத்திரைகள் வணிக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.)

மொகஞ்சதாரோவில் கிடைத்த ‘மதகுரு அல்லது அரசன்’ சிலை __________ ஆல் செய்யப்பட்டது.

A) செம்பு

B) தங்கம்

C) மாக்கல்

D) தந்தம்

(குறிப்பு: செம்பில் வார்க்கப்பட்ட நடனமாடும் பெண் சிலை ஹரப்பா, மொஹஞ்சதாரோ, தோலாவிராவில் கிடைத்த கற்சிலைகள் ஆகியவை மொஹஞ்சதாரோவின் முக்கியமான கலைப் படைப்புகள் ஆகும்.)

கூற்று 1: ஹரப்பா பகுதிகளில் கிடைத்துள்ள சுடுமண்ணாலான சிறு சிலைகள், மட்பாண்டங்களில் உள்ள ஓவியங்கள், வெண்கலச் சிலைகள் ஆகியவை ஹரப்பர்களின் கலைத் திறமையைக் காட்டுகின்றன.

கூற்று 2: பொம்மை வண்டிகள், கிலுகிலுப்பைகள், பம்பரங்கள், கோலிக் குண்டுகள், பல்வேறு விளையாட்டிற்கான சுடுமண் சில்லுகள் ஆகியவை ஹரப்பா மக்களின் பொழுதுபோக்கு விளையாட்டுகளைக் காட்டுகின்றன.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

__________ல் நெருப்புக் குண்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

A) பானவாலி

B) சுர்கொடா

C) ராகிகரி

D) காலிபங்கன்

(குறிப்பு: ஹரப்பா நாகரிகத்தில் இறந்தவர்களைப் புதைப்பது வழக்கத்திலிருந்தது. இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் இருந்ததற்கான சான்றுகள் அரிதாகக் கிடைத்துள்ளன.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. சிந்துவெளி மக்கள் இயற்கையை வணங்கினார்கள்.

2. அரசமரத்தை வழிபட்டனர்.

3. சில சுட்ட களிமண் சிலைகள் பெண் தெய்வத்தைக் குறிப்பது போன்று உள்ளன.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

தொல்லியல் ஆய்வுகள் ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மக்கள் __________ நோக்கி இடம்பெயர்ந்ததைக் காட்டுகின்றன.

A) கிழக்கு, வடக்கு

B) கிழக்கு, மேற்கு

C) கிழக்கு, தெற்கு

D) வடக்கு, தெற்கு

(குறிப்பு: ஹரப்பா மக்களில் சிலர் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் குடிபெயர்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு.)

சரியான இணையைத் தேர்ந்தெடு’

1. தொடக்க கால ஹரப்பா – பொ.ஆ.மு 3300 – 2600

2. முதிர்ந்த ஹரப்பா நாகரிகம் – பொ.ஆ.மு 2600 – 1900

3. பிந்தைய கால ஹரப்பா – பொ.ஆ.மு 1700 வரை

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

_________லிருந்து சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி பெறத் துவங்கியது.

A) பொ.ஆ.மு 1700

B) பொ.ஆ.மு 1800

C) பொ.ஆ.மு 1900

D) பொ.ஆ.மு 1600

(குறிப்பு: சிந்துவெளி நாகரிகம் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. அது கிராமப் பண்பாடாக இந்தியாவில் தொடர்ந்தது.)

சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் எவை?

1. பருவநிலை மாற்றம்

2. மெசபடோமியாவுடனான வணிகத்தில் வீழ்ச்சி

3. நதியின் வறட்சி

4. வெள்ளப்பெருக்கு

5. அந்நியர் படையெடுப்பு

A) அனைத்தும்

B) 2, 3, 5

C) 1, 3, 5

D) 2, 3, 4, 5

சிந்துவெளி எழுத்துக்கும் திராவிட/தமிழ் மொழிக்கும் இடையே ஒற்றுமை நிலவுவதை இனங்கண்ட ஆய்வாளர்கள்

1. அருட்தந்தை ஹென்றி ஹெராஸ்

2. அஸ்கோ பர்போலா

3. ஐராவதம் மகாதேவன்

4. ஹென்றி ஆல்பர்ட்

A) அனைத்தும்

B) 1, 2, 3

C) 2, 3, 4

D) 1, 3, 4

(குறிப்பு: தொல்லியல் சான்றுகள் இடைக் கற்காலத்திலிருந்தே தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவில் பல மக்கள் குழுக்கள் தொடர்ச்சியாக வசித்து வந்ததைக் காட்டுகின்றன.)

_________ காலத்தில் சிந்துவெளியின் சில கருத்துகளும் தொழில்நுட்பங்களும் தென்னிந்தியாவை அடைந்துள்ளன.

A) பழங்கற்காலம்

B) வெண்கலக் காலம்

C) இரும்புக் காலம்

D) செம்புக்காலம்

(குறிப்பு: தமிழ்நாட்டின் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, அகழாய்வு பகுதிகளில் கிடைத்துள்ள கார்னீலியன் பாசிமணிகள், சங்குவளையல்கள், செம்பு முகம் பார்க்கும் கண்ணாடிகள் ஆகியவை முதலில் சிந்துவெளி மக்களால் அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும்.)

கீழடி, அரிக்கமேடு, உறையூர் போன்ற நகரங்கள் சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்து ________ ஆண்டுகள் கழித்து உருவானவை.

A) 600 B) 800 C) 900 D) 1200

(குறிப்பு: தமிழகத்தின் பண்டைய நகரங்களான கீழடி, அரிக்கமேடு, உறையூர் போன்றவை இந்தியாவின் இரண்டாவது நகரமயக் காலக்கட்டத்தில் தழைத்தோங்கின.)

சிந்துவெளி மக்கள் ‘லாஸ்ட் வேக்ஸ்’ முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை __________ ஆகும்.

A) ஜாடி

B) மதகுரு அல்லது அரசன்

C) நடனமாடும் பெண்

D) பறவை

கூற்று: சிந்துவெளி நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.

காரணம்: ஹரப்பா முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்பதால் ஹரப்பா நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது.

A) கூற்று சரி காரணம் தவறு

B) கூற்று தவறு காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

D) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல

(குறிப்பு: ஹரப்பா நாகரிகம் சிந்து நதிக்கு அப்பாலும் பரவியுள்ளதால் சிந்து சமவெளி நாகரிகம் என்று முன்னர் அழைக்கப்பட்டதற்கு மாறாக சிந்துவெளி நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது.)

‘சிந்துவெளி எழுத்துகள் திராவிட மொழிக் குடும்பம் போன்ற வார்த்தை வரிசையைப் பெற்றுள்ளன’ என்று கூறியவர்

A) யூரி நோரோசோவ்

B) அருட்தந்தை ஹென்றி ஹெராஸ்

C) ஐராவதம் மகாதேவன்

D) அஸ்கோ பர்போலா

(குறிப்பு: யூரி நோரோசோவ் இரஷ்ய அறிஞர் ஆவார்.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (சிந்துவெளி மக்களின் எழுத்துகள் – ஆய்வு)

A) ஹரப்பா மக்கள் எழுதும் கலையை அறிந்திருந்தனர்.

B) தொடர்கள் சராசரியாக ஐந்துக்கும் குறைவான குறியீடுகளையே கொண்டுள்ளன.

C) ரோசட்டா கல்லில் காணப்பட்டது போல் மும்மொழிகள் பயன்படுத்தப்படவில்லை.

D) எழுத்துகள் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக எழுதப்பட்டுள்ளன.

(குறிப்பு: எழுத்துகள் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக எழுதப்பட்டுள்ளன.)

“ஹரப்பா மொழியின் மூல வேர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்திருப்பதை நாம் காணலாம்.” என்று கூறியவர்

A) யூரி நோரோசோவ்

B) அருட்தந்தை ஹென்றி ஹெராஸ்

C) ஐராவதம் மகாதேவன்

D) அஸ்கோ பர்போலா

__________ ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறையால் பூம்புகாருக்கு அருகில் மேலபெரும்பள்ளம் என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பானைகளில் உள்ள அம்பு போன்ற குறியீடுகள் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினை போன்று உள்ளன.

A) மே 2004

B) மே 2005

C) மே 2006

D) மே 2007

“மயிலாடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கோடரியில் உள்ள குறியீடுகள் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்டவையில் உள்ள குறியீடுகளை ஒத்திருக்கின்றன” என்று கூறியவர்

A) யூரி நோரோசோவ்

B) அருட்தந்தை ஹென்றி ஹெராஸ்

C) ஐராவதம் மகாதேவன்

D) அஸ்கோ பர்போலா

தவறான இணையைத் தேர்ந்தெடு.(அடையாளம் – பொருள்)

A) சரிபாதியாக பகுக்கப்படும் மீன் – மீன் விண்மீன்

B) மேற்கூரை + மீன் – மூன்று விண்மீன் மிருகசீரிஷம்

C) இடைப்பட்ட + பகுதி மீன் – ஆறு விண்மீன்கள் கார்த்திகை

D) புள்ளி / துளி – சிகப்பு மீன் கெண்டை

வரலாற்று அறிஞர் ___________ன் கருத்துப்படி, சிந்துவெளி எழுத்துக்களின் குறியீடுகள் திராவிட ஒற்றைக் குறிப்பு வேர்களுடன் ஒத்துப்போகின்றன.

A) யூரி நோரோசோவ்

B) அருட்தந்தை ஹென்றி ஹெராஸ்

C) ஐராவதம் மகாதேவன்

D) பர்போலா

தவறான இணையைத் தேர்ந்தெடு. (ஒலிப்புமுறை – பொருள்)

A) பசுமீன் – பச்சை விண்மீன் புதன் கிரகம்

B) மேய்மை மீன் – கருப்பு விண்மீன் சனிகிரகம்

C) வெள்ளி மீன் – வெண்மை விண்மீன் வெள்ளி கிரகம்

D) பொட்டு மீன் – ஏழு விண்மீன்கள் சப்த ரிஷி மண்டலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!