Book Back QuestionsTnpsc

பன்முகத் தன்மையினை அறிவோம் Book Back Questions 6th Social Science Lesson 7

6th Social Science Lesson 7

7] பன்முகத் தன்மையினை அறிவோம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்கு தெரியுமா?

மேகாலயாவில் உள்ள மௌசின்ராம் அதிக மழை பொழியும் பகுதி ஆகும். ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் குறைவான மழைப்பொழியும் பகுதி ஆகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையின்படி 22 மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக “தமிழ் மொழி” அறிவிக்கப்பட்டது. தற்போது 6 மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் 2005 ஆம் ஆண்டும் தெலுங்கு மற்றும் கன்னடம் 2008 ஆம் ஆண்டும் மலையாளம் 2013 ஆம் ஆண்டும் ஒரியா 2016 ஆம் ஆண்டும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் 60% தமிழ்நாட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டவை ஆகும். அவற்றில் பெரும்பாலானவை தமிழ் மொழியிலேயே எழுதப்படுள்ளன.

இந்திய நாட்டுப்புற நடனங்கள்:

மாநிலம் புகழ்பெற்ற நடனம்
தமிழ்நாடு கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மி, தெருக்கூத்து, பொம்மலாட்டம், புலியாட்டம், கோலாட்டம், தப்பாட்டம்
கேரளா தெய்யம், மோகினியாட்டம்
பஞ்சாப் பாங்க்ரா
குஜராத் கார்பா, தாண்டியா
ராஜஸ்தான் கல்பேலியா, கூமர்
உத்திரப்பிரதேசம் ராசலீலா
உத்தரகண்ட் சோலியா
ஆசாம் பிஹீ

இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” உள்ள நாடாக விளங்குகிறது. இச்சொற்றொடரானது நமது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் பல்வேறு இன மக்கள் காணப்படுவதால், இந்தியாவை “இனங்களின் அருங்காட்சியம்” என வரலாற்றாசிரியர் வி. ஏ. ஸ்மித் அவர்கள் கூறியுள்ளார்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. இந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

(அ) 27, 9

(ஆ) 29, 7

(இ) 28, 7

(ஈ) 28, 9

2. இந்தியா ஒரு __________ என்று அழைக்கப்படுகிறது.

(அ) கண்டம்

(ஆ) துணைக்கண்டம்

(இ) தீவு

(ஈ) இவற்றில் எதுமில்லை

3. மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் __________ மாநிலத்தில் உள்ளது.

(அ) மணிப்பூர்

(ஆ) சிக்கிம்

(இ) நாகலாந்து

(ஈ) மேகாலயா

4. கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?

(அ) சீக்கிய மதம்

(ஆ) இஸ்லாமிய மதம்

(இ) ஜொராஸ்ட்ரிய மதம்

(ஈ) கன்ஃபூசிய மதம்

5. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை ___________

(அ) 25

(ஆ) 23

(இ) 22

(ஈ) 26

6. ___________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

(அ) கேரளா

(ஆ) தமிழ்நாடு

(இ) பஞ்சாப்

(ஈ) கர்நாடகா

7. மோகினியாட்டம் _________ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.

(அ) கேரளா

(ஆ) தமிழ்நாடு

(இ) மணிப்பூர்

(ஈ) கர்நாடகா

8. “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலினை எழுதியவர் _________

(அ) இராஜாஜி

(ஆ) வ. உ. சி.

(இ) நேதாஜி

(ஈ) ஜவஹர்லால் நேரு

9. “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _________

(அ) ஜவஹர்லால் நேரு

(ஆ) மகாத்மா காந்தி

(இ) அம்பேத்கார்

(ஈ) இராஜாஜி

10. வி. ஏ. ஸ்மித் இந்தியாவை __________ என்று அழைத்தார்.

(அ) பெரிய ஜனநாயகம்

(ஆ) தனித்துவமான பன்முகத்தன்மை கொண்ட நிலம்

(இ) இனங்களின் அருங்காட்சியம்

(ஈ) மதச்சார்பற்ற நாடு

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒரு பகுதியின் _________ நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் காலநிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன.

2. மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் __________ மாநிலத்தில் உள்ளது.

3. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ___________

4. பிஹீ திருவிழா __________ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.

பொருத்துக:

1. நீக்ரிட்டோக்கள் – அ. மதம்

2. கடற்கரை பகுதிகள் – ஆ. இந்தியா

3. ஜொராஸ்ட்ரியம் – இ. மீன்பிடித்தொழில்

4. வேற்றுமையில் ஒற்றுமை – ஈ. இந்திய இனம்

சரியான விடையைத் தேர்ந்தெடுடக்கவும்: (விடைகள்)

1. தற்போது 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன 2. துணைக்கண்டம்

3. மேகாலயா 4. கன்ஃபூசிய மதம் 5. (22) 6. கேரளா 7. கேரளா

8. ஜவஹர்லால் நேரு 9. ஜவஹர்லால் நேரு 10. இனங்களின் அருங்காட்சியகம்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. பொருளாதார 2. இராஜஸ்தான் 3. (2004) 4. அஸ்ஸாம்

பொருத்துக: (விடைகள்)

1. நீக்ரிட்டோக்கள் – இந்திய இனம்

2. கடற்கரை பகுதிகள் – மீன்பிடித்தொழில்

3. ஜொராஸ்டிரியம் – மதம்

4. வேற்றுமையில் ஒற்றுமை – இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!