Book Back QuestionsTnpsc

புவி மாதிரி Book Back Questions 6th Social Science Lesson 21

6th Social Science Lesson 21

21] புவி மாதிரி

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

புவி 510. 1 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும்.

உலகில் முதன்முதலாக புவி மாதிரியை (Globe) கி. பி. (பொ. ஆ) 150-ஆம் ஆண்டில் கிரேக்கர்கள் உருவாக்கியுள்ளனர். இந்திய வானியல் அறிஞர் முதலாம் ஆரியபட்டர் அவர்கள் எழுதிய “ஆர்யபட்ட சித்தாந்தம்” என்ற நூலில் “விண்மீன்கள் வானில் மேற்குப்புறமாக நகர்வது போன்ற தோற்றம், புவி தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் விளைகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிரேக்க ரோமானிய கணித வல்லுநர், வான் ஆய்வாளர் மற்றும் புவியியல் ஆய்வாளராகிய தாலமி (Ptolemy) என்பவர் முதன் முதலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவராவார். இவருடைய ‘Geographia” என்ற நூலில் புவியின் அளவும், அதன் மேற்பரப்பைக் குறித்த விவரங்களும், அட்சக்கோடுகள் மற்றும் தீர்த்தக் கோடுகளின் அடிப்படையில் அமைந்த பல்வேறு இடங்களின் பட்டியலும் இடம் பெற்றுள்ளது.

புவியின் நடுவில் வரையப்பட்டுள்ள நில நடுக்கோடு (Equator) மற்ற அட்சக் கோடுகளை விட நீளமாகக் காணப்படுகிறது. எனவே, இக்கோடு “பெருவட்டம்”(Great Circle) என்று அழைக்கப்படுகிறது.

O0 அட்சக் கோட்டிலிருந்து 23 ½0 வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் “தாழ் அட்சக்கோடுகள்” Low Latitudes எனவும். 23 ½0 வடக்கு முதல் 66 ½0 வடக்கு வரையிலும், 23 ½0 தெற்கு முதல் 66 ½0 தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் “மத்திய அட்சக் கோடுகள்” Middle Latitudes எனவும். 66 ½0 வடக்கு முதல் 900 வடக்கு வரையிலும், 66 ½0 தெற்கு முதல் 900 தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக் கோடுகள் “உயர் அட்சக் கோடுகள்” High Latitudes, எனவும் அழைக்கப்படுகின்றன.

Latitude-அகலாங்கு. Longitude-நெட்டாங்கு. Equator-நிலநடுவரை. Tropic of Cancer-கடகவரை. Tropic of Capricorn-மகரவரை எனவும் தமிழில் அழைக்கப்படுகின்றன.

தீர்க்கக்கோடுகள் புவியில் நிலநடுக்கோட்டுப் பகுதியில் 111 கி. மீ. இடைவெளியிலும், 450 அட்சப்பகுதிகளில் 79 கி. மீ இடைவெளியிலும், துருவப் பகுதிகளில் இடைவெளியின்றியும் காணப்படுகின்றன.

பன்னாட்டு தேதிக்கோடு வளைந்து செல்வதற்குக் காரணம், இது நேராகச் சென்றால், ஒரே நாட்டிற்குள் இரண்டு தேதிகள் அமையும். இந்த குழப்பத்தினைத் தவிர்ப்பதற்காகவே இக்கோடு வளைத்து வரையப்பட்டுள்ளது.

புவி தன் அச்சில் ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் கால அளவு ஒரு நாள்.

1 நாள் = 24 மணி நேரம்.

1 மணி நேரம் = 60 நிமிடங்கள்.

24 மணி நேரத்திற்கு = 24 x 60 = 1440 நிமிடங்கள்.

புவி கோளத்தின் சுற்றளவு = 3600.

3600 = 360 தீர்த்தக்கோடுகள்.

3600 = 1440 நிமிடங்கள்.

1 0 யின் நேரம் = 1440/360 = 4 நிமிடங்கள்.

1 0 யை கடக்க புவி எடுத்துக்கொள்ளும் கால அளவு = 4 நிமிடங்கள்.

60 நிமிடங்கள் / 4 நிமிடங்கள் = 60/4 = 15.

1 மணி நேரத்தில் 150 தீர்க்கக் கோடுகளைப் புவி கடக்கிறது.

1. மெரிடியன் (Meridian) என்ற சொல் “மெரிடியானஸ்” (meridianus) என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்ததாகும். இதற்கு நண்பகல் Midday (Medius – Middle, dies = day) எனப்பொருள். எனவே Meridian என்பது சூரியன் ஓர் இடத்தின் நேர் மேலே உச்சியில் உள்ளதைக் குறிக்கிறது.

2. a. m. என்பது ‘anti – meridiem’ (anti = before) நண்பகலுக்கு முன்னதாக எனப் பொருள்படும்.

3. p. m. என்பது “post – Meridiem’ (Post = after or later) நண்பகலுக்குப் பிறகு எனப் பொருள்படும்.

இந்தியா கிடைமட்டப்பரவலில் மேற்கில் குஜராத்தில் உள்ள கௌர்மோட்டா (Ghuar Mota) என்ற இடத்திற்கும், கிழக்கில் அருணாச்சல பிரதேசத்திலுள்ள கிபித்து (Kibithu) என்ற இடத்திற்கும் சமதூர இடைவெளியில், உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள மிர்சாபூர் (Mirzabur) என்ற இடத்தின் வழியே 82 ½0 கிழக்கு தீர்க்கக்கோடு செல்கிறது.

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பெருவட்டம் என அழைக்கப்படும் அட்சக்கோடு __________

2. புவியின் மீது கிழக்கு மேற்காக, கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கோடுகள் __________

3. புவியில் 900 அட்சங்கள் _________ என அழைக்கப்படுகின்றன.

4. முதன்மை தீர்க்கக்கோடு __________ என அழைக்கப்படுகிறது.

5. உலகின் நேர மண்டலங்களின் எண்ணிக்கை __________

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. புவியின் வடிவம்.

(அ) சதுரம்

(ஆ) செவ்வகம்

(இ) ஜியாய்டு

(ஈ) வட்டம்

2. வடதுருவம் என்பது

(அ) 900 வ அட்சக்கோடு

(ஆ) 900 தெ அட்சக்கோடு

(இ) 900 மே தீர்க்கக்கோடு

(ஈ) 900 கி தீர்க்கக்கோடு

3. 00 முதல் 1800 கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப்பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.

(அ) தெற்கு அரைக்கோளம்

(ஆ) மேற்கு அரைக்கோளம்

(இ) வடக்கு அரைக்கோளம்

(ஈ) கிழக்கு அரைக்கோளம்

4. 23 ½0 வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

(அ) மகரரேகை

(ஆ) கடக ரேகை

(இ) ஆர்க்டிக் வட்டம்

(ஈ) அண்டார்டிக் வட்டம்

5. 1800 தீர்க்கக்கோடு என்பது

(அ) நிலநடுக்கோடு

(ஆ) பன்னாட்டு தேதிக்கோடு

(இ) முதன்மை தீர்க்கக்கோடு

(ஈ) வடதுருவம்

6. கீரீன்விச் முதன்மை தீர்க்கக் கோட்டிறக்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும் போது அவ்விடத்தின் நேரம்.

(அ) நள்ளிரவு 12 மணி

(ஆ) நண்பகல் 12 மணி

(இ) பிற்பகல் 1 மணி

(ஈ) முற்பகல் 1 மணி

7. ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?

(அ) 1240 நிமிடங்கள்

(ஆ) 1340 நிமிடங்கள்

(இ) 1440 நிமிடங்கள்

(ஈ) 1140 நிமிடங்கள்

8. கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?

(அ) 82 ½0 கிழக்கு

(ஆ) 82 ½0 மேற்கு

(இ) 81 ½0 கிழக்கு

(ஈ) 81 ½0 மேற்கு

9. அட்சக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை

(அ) 171

(ஆ) 161

(இ) 181

(ஈ) 191

10. தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை

(அ) 370

(ஆ) 380

(இ) 360

(இ) 390

பொருந்தாததை வட்டமிடுக:

1. வடதுருவம், தென்துருவம், நிலநடுக்கோடு, பன்னாட்டு தேதிக்கோடு

2. மகரரேகை, கடகரேகை, நிலநடுக்கோடு, முதன்மை தீர்த்தக்கோடு

3. வெப்பமண்டலம், நேர மண்டலம், மிதவெப்ப மண்டலம், குளிர் மண்டலம்

4. இராயல் வானியல் ஆய்வுமையம், முதன்மை தீர்க்கக்கோடு, கிரீன்விச், பன்னாட்டு தேதிக்கோடு

5. 100 வடக்கு, 200 தெற்கு, 300 வடக்கு, 400 மேற்கு

பொருத்துக:

1. O0அட்சக்கோடு – துருவம்

2. O0 தீர்க்கக்கோடு – பன்னாட்டு தேதிக்கோடு

3. 1800 தீர்க்கக்கோடு – கிரீன்விச்

4. 900 அட்சக்கோடு – நிலநடுக்கோடு

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.

2. புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.

3. புவி தட்டையான வடிவத்தில் உள்ளது. மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.

(அ) 1 மற்றும் 3 சரி

(ஆ) 2 மற்றும் 3 சரி

(இ) 1 மற்றும் 2 சரி

(ஈ) 1, 2 மற்றும் 3 சரி

1. கூற்று 1: புவியில், அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.

கூற்று 2: புவியில் தீர்க்கக் கோடுகள், ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.

(அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

(ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

(இ) இரண்டு கூற்றுகளும் சரி

(ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. நிலநடுக்கோடு 2. அட்சக்கோடுகள் 3. துருவங்கள் 4. கிரீன்விச் 5. (24)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. ஜியாய்டு 2. 900 வ அட்சக்கோடு 3. கிழக்கு அரைக்கோளம்

4. கடகரேகை 5. பன்னாட்டு தேதிக்கோடு

6. நண்பகல் 12 மணி 7. 1440 நிமிடங்கள்

8. (82 1/20 கிழக்கு) 9. (181) 10. 360

பொருந்தாததை வட்டமிடுக: (விடைகள்)

1. பன்னாட்டு தேதிக்கோடு

2. முதன்மைதீர்க்கக்கோடு

3. நேரமண்டலம்

4. இராயல் வானியல் ஆய்வுமையம்

5. 300 வடக்கு

பொருத்துக: (விடைகள்)

1. 00 அட்சக்கோடு – நிலநடுக்கோடு

2. 00 தீர்க்கக்கோடு – கிரீன்விச்

3. 1800 தீர்க்கக்கோடு – பன்னாட்டு தேதிக்கோடு

4. 900 அட்சக்கோடு – துருவம்

பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. 1 மற்றும் 2 சரி

2. இரண்டு கூற்றுகளும் சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!