MCQ Questions

பொதுக்கருத்து மற்றும் கட்சிமுறை 11th Political Science Lesson 10 Questions in Tamil

11th Political Science Lesson 10 Questions in Tamil

10] பொதுக்கருத்து மற்றும் கட்சிமுறை

1. உளவியல் மற்றும் சமூகத்தில் உள்ள அனைவரின் நம்பிக்கைக்கும், இசைவான தனிநபரின் நடத்தை சார்ந்த சமூக செயல்முறை

அ) இறையாண்மை

ஆ) சமூகக்கருத்து

இ) பொதுக்கருத்து

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: பொதுக்கருத்து மக்களின் கூட்டுப்பார்வை, அவர்களுடைய அணுகுமுறை மற்றும் கருத்துக்கள் ஆகும். இது அரசாங்கம், அரசியல் குறித்த முன்னுரிமைகள் சார்ந்த மக்களின் கூட்டு விருப்பமாகும்.

2. பொது விவகாரத்தில் ஒன்றோ அல்லது பல பிரிவு மக்களோ ஒருங்கிணைந்த, ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து

அ) பொதுக்கருத்து

ஆ) தனிநபர் கருத்து

இ) ஒருங்கிணைந்த கருத்து

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு: பொதுக்கருத்து என்பது ஒரு பொது விவகாரத்தில் ஒன்றோ அல்லது பல பிரிவு மக்களோ ஒருங்கிணைந்த, ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தாகும்.

3. ____ வெற்றிகரமாக செயல்படுவதற்கு பொதுக்கருத்து என்பது ஓர் அத்தியாவசிய கூறாகும்.

அ) மக்கள்

ஆ) ஆட்சி

இ) குடியரசு

ஈ) மக்களாட்சி

குறிப்பு: மக்களாட்சியில் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. மக்களின் கருத்துக்களைப் புறக்கணித்து எந்த ஒரு அரசாங்கமும் நிலைத்திருக்க முடியாது.

4. ஓர் உண்மையான பொதுக்கருத்தை உருவாக்குவதற்குத் தடையாக இருப்பவை

அ) சுயநல விருப்பங்கள்

ஆ) எழுத்தறிவின்மை, வறுமை

இ) இனவாத மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடு

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு: சுயநல விருப்பங்கள், எழுத்தறிவின்மை, வறுமை, இனவாத மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடு போன்றவை உண்மையான பொதுக்கருத்தை உருவாக்குவதற்குத் தடையாக இருக்கின்றன.

5. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

(1) ஓர் தரமான பொதுக்கருத்து என்பது அறிவும் கருத்துச் சுதந்திரம் இருக்கும் சூழலில் தான் உருவாக முடியும்.

(2) வறுமையை ஒழிப்பதன் மூலம் மட்டுமே ஓர் தரமான குறிக்கோளுடைய பொதுக்கருத்து என்பது சாத்தியமாகும்.

(3) மக்களின் சுதந்திரத்தை மதித்து செய்தி அறிக்கைகளைப் பொறுப்புடன் வெளியிடுகின்ற ஊடகங்கள் பொதுமக்களின் கருத்தை முதிர்வுடன் உருவாக்குவதற்கான முக்கியமான அடிப்படை ஆகும்.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி

6. சுதந்திரத்திற்கான கோரிக்கை விடுக்கப்பட்டு சுதந்திரத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்

அ) 1929 டிசம்பர் 31

ஆ) 1928 டிசம்பர் 31

இ) 1927 டிசம்பர் 31

ஈ) 1926 டிசம்பர் 31

குறிப்பு: லாகூரில் ராவி ஆற்றின் கரையில் 1929 ஆம் ஆண்டு டிசம்பர் 31ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் 44-வது மாநாட்டில் முழு சுதந்திரத்திற்கான கோரிக்கை விடுக்கப்பட்டு சுதந்திரத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

7. இந்திய தேசிய காங்கிரசின் 44-வது மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர்

அ) மகாத்மா காந்தி

ஆ) ஜவஹர்லால் நேரு

இ) சர்தார் வல்லபாய் படேல்

ஈ) W. C. பானர்ஜி

குறிப்பு: இந்திய தேசிய காங்கிரசின் 44-வது மாநாடு 1929 ஆம் ஆண்டு டிசம்பர் 31 லாகூரில் நடைபெற்றது.

8. மக்களாட்சி முறைக்கு முக்கியமான கருவி

அ) அரசியலமைப்பு

ஆ) அடிப்படை உரிமைகள்

இ) முகவுரை

ஈ) அரசியல் கட்சிகள்

குறிப்பு: திட்டவட்டமான லட்சியங்கள் மற்றும் செயல்திட்டத்துடன் உருவாக்கப்படுகின்றன. அவை பொது மக்களிடம், சமுதாயம் மற்றும் அரசுக்கு உள்ள பிரச்சனைகளைப் பற்றி விழிப்பூட்டுவதுடன் மாற்றுத் திடடங்களையும் பரிந்துரைக்கின்றன.

9. கூட்டணி அமைச்சரவையை கொண்டுள்ள நாடுகள்

அ) இங்கிலாந்து

ஆ) இந்தியா

இ) அ, ஆ இரண்டும்

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: நாடாளுமன்ற மக்களாட்சியில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை வென்ற கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணி அமைச்சரவையை உருவாக்குகிறது.

10. குடியரசுத்லைவர் முறை மக்களாட்சி முறை நடைமுறையில் உள்ள நாடு

அ) அமெரிக்கா

ஆ) பிரான்ஸ்

இ) அ, ஆ இரண்டும்

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: குடியரசுத்லைவர் முறை மக்களாட்சி நாடுகளில் தலைமை நிர்வாகிகள் (அதிபர்) கட்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

11. மக்களாட்சியில் எதன் மூலமாக பொதுக்கருத்துக்கள் வழிநடத்தப்படுகின்றன?

அ) அழுத்தக்குழுக்கள்

ஆ) தேர்தல் ஆணையம்

இ) அரசியல் கட்சிகள்

ஈ) சட்டமன்றம்

12. கீழ்க்கண்டவற்றுள் மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளாகக் கருதப்படுபவை எவை?

(1) கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடும். இவை வேறுபட்ட கொள்கைகளையும் திட்டங்களையும் முன்வைக்கும்.

(2) கட்சிகள் நாட்டிற்கான சட்டங்களையும், அரசாங்கத்தை அமைத்தும் செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகளாகவும் பங்கு வகிக்கின்றன.

(3) அரசாங்கத்தின் நலத்திட்டங்களை மக்கள் பெறுவதற்கு கட்சிகள் உதவுகின்றன. பொதுக்கருத்துக்களையும் கட்சிகள் வடிவமைக்கின்றன.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) மேற்கூறிய அனைத்தும்

13. அரசியல் பொருளாதார மற்றும் சமூக செயல்பாட்டிற்கான ஓர் தளத்தை வழங்குவது

அ) சட்டமன்றம்

ஆ) கிராம சபை

இ) அரசியல் கட்சி

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு: மக்களுக்கு பலதரப்பட்ட வேட்பாளர்களையும், கொள்கைகளையும், தேசத்தில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கான அணுகுமுறைகளையும் கட்சிகள் வழங்கியுள்ளன.

14. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1) கட்சி முறை என்பது அரசாங்கங்களை நடத்துவதற்கும், நிலை நிறுத்துவதற்கும் உதவுகிறது. மேலும் அவை மக்களாட்சியின் திறன் வாய்ந்த செயல்பாட்டிற்கும் தேவையானதாக இருக்கின்றன.

2) கட்சிமுறை என்பது அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள் மற்றும் அதிகாரச் சமநிலையை வழங்கும் முறையாகும்.

3) பொது மக்களிடையே ஆதரவைப் பெறுவதன் மூலம் கட்சிக்குள்ளேயே தலைமைத்துவத்திற்கும், கலந்துரையாடலுக்கும் ஓர் கட்டமைப்பினை அந்தந்த கட்சிகளின் குறிக்கோள் மற்றும் செயல்திட்டப்படி வழங்குவதன் மூலம் அது நிலையான மற்றும் நல் ஆட்சிக்கு உதவும்.

அ) 1 மட்டும் சரி

ஆ) 2 மட்டும் சரி

இ) 3 மட்டும் சரி

ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி

15. அரசியல் கட்சியின் கூறுகள் யாவை?

அ) தலைவர்

ஆ) செயல் உறுப்பினர்கள்

இ) தொண்டர்கள்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு: ஓர் அரசியல் கட்சி என்பது மக்களின் ஒன்றிணைந்த ஒரு குழுவாக தேர்தலில் போட்டியிட்டு அரசாங்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது. அவர்கள் சமுதாயத்திற்கான கூட்டு நலனை ஊக்குவிப்பதற்கான சில கொள்கைகளையும், திட்டங்களையும் ஒப்புக்கொள்கிறார்கள்.

16. கட்சிமுறைகள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன?

அ) 7

ஆ) 6

இ) 4

ஈ) 3

குறிப்பு: கட்சிமுறைகள் ஒரு கட்சி முறை, இரு கட்சி முறை, பல கட்சி முறை எனப் பல்வேறு வகையான கட்சி முறைகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் நடைமுறையில் உள்ள குறிப்பிட்ட கூறுகளைப் பொறுத்து பரிணாம வளர்ச்சியில் உருவாகியுள்ளன.

17. ஒரு கட்சி முறைக்கு எடுத்துக்காட்டு

அ) வியட்நாம்

ஆ) கியூபா

இ) சீனா

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு: ஒரு கட்சி முறை – (எ.கா) சிங்கப்பூர், (வடகொரியா), கொரிய தொழிலாளர் கட்சி, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி (வியட்நாம்), கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி (கியூபா), கம்யூனிஸ்ட் கட்சி (சீனா).

18. தேசியவாத இராணுவத்தை ஆதரித்து பாசிச இயக்கங்கள் அரசியல் கட்சிகள் உருவாவதைத் தடைசெய்த ஆண்டு

அ) 1917

ஆ) 1918

இ) 1919

ஈ) 1920

குறிப்பு: 1920-களில் தேசியவாத இராணுவத்தை ஆதரித்து பாசிசஇயக்கங்கள் ஹிட்லரின் தலைமையில் ஜெர்மனியிலும், முசோலினியின் கீழ் இத்தாலியிலும், ஜெனரல் பிராங்கோவின் கீழ் ஸ்பெயினிலும் அதிகாரத்தைக் கைப்பற்றியதுடன் அரசியல் கட்சிகள் உருவாவதைத் தடைசெய்தன.

19. குறைவான பங்கேற்பு மற்றும் பலவீனமான பொறுப்புடைமை உள்ள கட்சி முறை

அ) ஒரு கட்சி முறை

ஆ) இரு கட்சி முறை

இ) பல கட்சி முறை

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: ஒரு கட்சி முறையில் ஓர் அரசியல் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் உரிமையை பெறுகிறது. இது எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத அரசமைப்பிலிருந்து பெரும்பாலும் பெறப்படுகிறது. ஒரு கட்சி முறையின் கீழ் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குறைவான பங்கேற்பு மற்றும் பலவீனமான பொறுப்புடைமை உள்ளது.

20. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான கூற்று எது?

(1) இரு கட்சி முறையில், இரண்டு அரசியல் கட்சிகள் வேறுபட்ட நலன்களுடன், பெரும்பான்மையை பெற்று அரசாங்கத்தை அமைப்பதற்கான சமவாய்ப்பைக் கொண்டுள்ளன. இரு கட்சி முறையில் பெரும்பான்மை பெறும் கட்சி ஆளும் கட்சியாகவும் சிறுபான்மைகட்சி, எதிர்கட்சியாகவும் உருவாக்குகின்றன.

(2) இரு கட்சி முறையில் அரசியல் தலைவர்களிடம், மிக அதிக பொறுப்புணர்வும், அதிக அரசியல் பங்கேற்பும் உள்ளது.

(3) எதிர் கட்சிகள் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலமாக தங்களை நீக்கும் அச்சுறுத்தல் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருப்பதனால் ஆட்சியில் இருப்பவர்கள் அதிக அளவிலான பொறுப்பான நடத்தை மற்றும் செயல்பாட்டினை மேற்கொள்கின்றனர்.

அ) கூற்று 1 மட்டும்

ஆ) கூற்று 2 மட்டும்

இ) கூற்று 3 மட்டும்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

21. இரு கட்சி முறைக்கு எடுத்துக்காட்டு

அ) அமெரிக்கா

ஆ) இங்கிலாந்து

இ) அ, ஆ இரண்டும்

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: இருகட்சி முறையின் எடுத்துக்காட்டாக அமெரிக்கா (மக்களாட்சி வாதிகள் / குடியரசுவாதிகள்) மற்றும் இங்கிலாந்து – (பழமைவாதிகள் மற்றும் தாராளவாதிகள்).

22. பலகட்சி முறைக்கு எடுத்துக்காட்டு

அ) கனடா, பிரான்ஸ்

ஆ) இந்தியா, ஸ்வீடன்

இ) ஜெர்மனி

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு: பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் உள்ள விகி்தாச்சார பிரதிநிதித்துவ முறை பல கட்சி முறையிலும் கூட்டணி அமைச்சரவைகளிலும் முடிவடைகிறது.

23. மக்களுடைய உரிமைகளையும், சுதந்திரங்களையும் காப்பாற்ற வேண்டிய மக்களாட்சியின் முக்கியமான உந்து சக்தி

அ) அழுத்தக்குழுக்கள்

ஆ) நலக்குழுக்கள்

இ) அரசியல் கட்சிகள்

ஈ) கிராம சபை

குறிப்பு: அரசியல் கட்சிகளே மக்களாட்சியின் உந்து சக்திகள் ஆகும். பொதுக்கருத்தினை உருவாக்குவதற்கு அரசியல்வாதிகள் தங்களது பேச்சாற்றல் மற்றும் தலைமைத் திறன்களைப் பயன்படுத்துகின்றனர்.

24. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

(1) அரசியல் கட்சியின் பொதுப்பதவிகளுக்காக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து தேர்தலில் நிறுத்துகின்றன. அவை கட்சியின் பெயரில் அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, ஒருதரப்படுத்த முயற்சி செய்கின்றன.

(2) அரசியல் கட்சி என்பது மக்களது இறையாண்மை மற்றும் பெரும்பான்மை ஆட்சியின் பிரதான கருவியாக ஒரு சிலரால் கருதப்படுகிறது.

(3) அரசியல் கட்சிகள் ஒழுங்காக வேலைசெய்யும் பொழுது, மக்களின் இறையாண்மைக்கான அவசியமான கருவிகளாக அவை இருக்கலாம்.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி

25. இங்கிலாந்தில் தோன்றிய கட்சி முறைகள்

அ) டோரீஸ்

ஆ) விக்ஸ்

இ) அ, ஆ இரண்டும்

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: இங்கிலாந்தில் முடியாட்சியின் நிலை மற்றும் அதன் பங்கினை பற்றிய பிரச்சனைகள், கருத்துக்கள் துருவப்படுத்தப்படுவது இரண்டு கட்சிகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. அவையாவன:1. டோரீஸ் அல்லது பழமைவாதிகள் 2. விக்ஸ் அல்லது தாராளவாதிகள். 20 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர் கட்சி தாராளவாதிகளை விட பெரிய சக்தியாக மாறியது.

26. அமெரிக்காவில் மக்களாட்சியிலான குடியரசுக் கட்சி என்ற பெயர் மக்களாட்சிக் கட்சியாக மாற்றப்பட்ட ஆண்டு

அ) 1828

ஆ) 1728

இ 1628

ஈ) 1528

குறிப்பு: 1828-ல் மக்களாட்சியிலான குடியரசுக் கட்சி என்ற பெயர் மக்களாட்சிக் கட்சியாக மாற்றப்பட்டது.

27. அமெரிக்காவில் 1854-ல் குடியரசுக் கட்சி கொத்தடிமை முறைக்கு எதிராக தனது போராட்டத்தைத் தொடங்கிய போது குடியரசுத்தலைவராக இருந்தவர் யார்?

அ) ஆபிரகாம் லிங்கன்

ஆ) ஜார்ஜ் வாஷிங்டன்

இ) ஜார்ஜ் புஷ்

ஈ) மேற்கூறிய யாருமில்லை

குறிப்பு: 1854-ல் குடியரசுக் கட்சி கொத்தடிமை முறைக்கு எதிராக தனது போராட்டக் களத்தை அமைத்துக் கொண்டதுடன் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக ஆபிரகாம் லிங்கன் பதவி வகித்ததால் அதிக முன்னுரிமையைப் பெற்றது.

28. பிரெஞ்சு புரட்சி நடைபெற்ற ஆண்டு

அ) 1789

ஆ) 1798

இ) 1689

ஈ) 1698

29. பொதுவுடைமைப் புரட்சி ரஷ்யாவில் நடைபெற்ற ஆண்டு

அ) 1617

ஆ) 1717

இ) 1817

ஈ) 1917

குறிப்பு: சோவியத் ரஷ்யாவில், போல்ஷிவிக் கட்சி 1917-ல் நடந்த பொதுவுடைமைப் புரட்சியினை நடத்தி சோவியத் யூனியன் என்ற பிரபலமான சோவியத் சோசலிச குடியரசுகளை உருவாக்கியது.

30. ரஷ்யாவில் உலக பொது உடமைப் புரட்சியை ஊக்குவிக்கும் பணியைக் மேற்கொள்ள நிறுவப்பட்ட நிறுவனத்தின் பெயர்

அ) COMINTERN

ஆ) கம்யூனிஸ்ட்இன்டர்நேஷனல்

இ) அ, ஆ இரண்டும்

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: COMINTERN (கம்யூனிஸ்ட்இன்டர்நேஷனல்) அமைப்பு பிறநாடுகளில் பொதுவுடைமைப் கட்சிகளை ஆதரிப்பதன் மூலம் உலக பொது உடமைப் புரட்சியை ஊக்குவிக்கும் பணியைக் மேற்கொள்ள நிறுவப்பட்டது.

31. கீழ்க்கண்டவற்றுள் தென்னாப்பிரிக்காவின் அரசமைப்பு பற்றிய கூற்றுகளை ஆராய்க.

(1) 18 வயதில் அனைவருக்கும் வாக்குரிமை. பொதுவான வாக்காளர் பட்டியல்.

(2) வழக்கமான தேர்தல்

(3) பொறுப்புணர்வு, பதிலுரைத்தல் மற்றும் வெளிப்படையான அரசாங்கத்தை உறுதிப்படுத்த பல கட்சி முறை மக்களாட்சி அவசியம்.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி

32. இந்திய தேசிய காங்கிரசு (INC) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) அயர்லாந்து

இ) ரஷ்யா

ஈ) 1885

குறிப்பு: இந்திய தேசிய காங்கிரசு (INC) 1885 ஆம் ஆண்டில் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (A.O.Hume) என்பவரால் நிறுவப்பட்டது. இது சட்டமன்ற மற்றும் அரசியல் பிரிவுகளில் இந்தியர்களின் அரசியல் பங்கேற்பிற்கான அடித்தளமாக இருந்தது.

33. பொருத்துக

(1) தென்னிந்திய சுதந்திரவாதக் கூட்டமைப்பு – 1906

(2) பிராமணரல்லாதோர் – 1916

(3) முஸ்லிம் லீக் கட்சி – நீதிக்கட்சி

(4) இந்து மகா சபை கட்சி – திராவிடர்கள்

அ) 3 1 2 4

ஆ) 3 4 1 2

இ) 3 4 1 2

ஈ) 2 3 1 4

குறிப்பு: 20-ஆம் நூற்றாண்டில், வகுப்புவாதத்தை செயல்திட்டமாக கொண்ட கட்சிகள், அதாவது 1906 ஆம் ஆண்டு இந்தியாவில் முஸ்லிம் லீக் மற்றும் 1916-இல் இந்து மகா சபை போன்ற கட்சிகள் உருவாகின. சென்னை மாகாணத்தில், தென்னிந்திய சுதந்திரவாதக் கூட்டமைப்பு (நீதிக்கடசி) பிராமணரல்லாதோரின் (திராவிடர்கள்) நலன்களை பிரதிபலிக்க உருவாக்கப்பட்டது.

34. வங்கப்பிரிவினை ஏற்பட்ட ஆண்டு

அ) 1805

ஆ) 1905

இ) 1810

ஈ) 1910

குறிப்பு: 1905-இல் வங்கப் பிரிவினைக்குப் பிறகு, இந்திய தேசிய காங்கிரசில் மி்தவாதிகள் (மனுக்களின் கொள்கை) மற்றும் தீவிரவாதிகள் (ஆக்கிரமிப்பு உத்தி) என பிரிவினை ஏற்பட்டது.

35. பொருத்துக

(1) சுயராஜ்ய கட்சி – 1920

(2) காங்கிரசு சோசலிஸ்ட் கட்சி – 1922

(3) கம்யூனிஸ்ட் – 1934

அ) 3 1 2

ஆ) 2 1 3

இ) 1 3 2

ஈ) 2 3 1

குறிப்பு: சித்தரஞ்சன் தாஸ் 1922-இல் தொடங்கிய சுயராஜ்ய கட்சி, 1934-இல் ஆச்சார்யா நரேந்திர தேவ் தொடங்கிய காங்கிரசு சோசலிஸ்ட் கட்சி மற்றும் 1920-இல் எம்.என். ராயின் (M.N. Roy) முயற்சியால் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவைகள் இதை முக்கிய அரசியல் கட்சிகள் ஆகும். அரசியல் பரப்புரைகளில் ஈடுபடும் பல அரசியல் கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடாமல் இருந்தன. இத்தகையவை அழுத்த குழுக்களாகச் செயல்பட்டன.

36. கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?

(1) இந்தியாவில் 1977-ஆம் ஆண்டு வரை பொதுவுடமை கட்சி, சோசலிஸ்ட் கட்சிகள் மற்றும் வலதுசாரி ஜனசங்கம் ஆகியவை தேசிய அளவில் குறிப்பிடத்தக்க எதிர்கட்சிகளாக இருந்தன.

(2) 1977 வரை, எந்த ஒரு கட்சியும் தேசிய அளவில் இந்திய தேசிய காங்கிரசுக்கு மாற்றாக வர இயலவில்லை.

(3) ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையின் கீழ் பல தேசிய கட்சிகள், ஓர் பெரிய தேசிய அளவிலான மாற்றுக் கட்சியை உருவாக்க இணைந்தன. 1977-ஆம் ஆண்டில் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

37. ஜனசங்கம் கட்சியின் மாற்றப்பட்ட பெயர்

அ) நீதிக்கட்சி

ஆ) திராவிட முன்னேற்றக் கழகம்

இ) பகுஜன் சமாஜ் கட்சி

ஈ) பாரதீய ஜனதா கட்சி

குறிப்பு: ஜனசங்கம் கட்சியின் மாற்றப்பட்ட பெயர் பாரதீய ஜனதா கட்சி.

38. பகுஜன் சமாஜ் கட்சியைத் தோற்றுவித்தவர் யார்?

அ) கஜூலா லட்சுமி நரசு

ஆ) பெரியார்

இ) கன்ஷிராம்

ஈ) லால் பகதூர் சாஸ்திரி

குறிப்பு: பகுஜன் சமாஜ் கட்சியைத் தோற்றுவித்தவர் கன்ஷிராம்.

39. பொருத்துக

முக்கியப் பிராந்திய கட்சிகள் – மாநிலம்

(1) சிரோமணி அகாலி தளம் – மேற்கு வங்காளம்

(2) சமாஜ்வாதிக் கட்சி – பீகார்

(3) தெலுங்கு தேசம் கட்சி – பஞ்சாப்

(4) ராஷ்டிரிய ஜனதா தளம் – உத்தரப்பிரதேசம்

(5) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு – ஆந்திரபிரதேசம்

அ) 4 5 2 3 1

ஆ) 5 4 1 2 3

இ) 4 3 5 1 2

ஈ) 5 3 4 1 2

40. திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்தவர்

அ) காமராஜர்

ஆ) அண்ணாதுரை

இ) பெரியார்

ஈ) பால கங்காதர திலகர்

குறிப்பு: திராவிட இயக்கம் பெரியார் ஈ.வே.ராமசாமியின் கீழ் தமிழ்நாட்டில் புத்துயிர் பெற்று திராவிட உரிமைகள், சுயமரியாதை, கண்ணியம் ஆகியவற்றினால் பிரபலமடைந்தது.

41. பொருத்துக

மாநிலம் முக்கியப் பிராந்திய கட்சிகள்

(1) தமிழகம் – தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி

(2) ஜம்மு காஷ்மீர் – அசாம் கண பரிசத்

(3) அசாம் – சிவசேனா

(4) மகாராஷ்டிரா – தேசிய மாநாட்டுக்கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி

(5) தெலுங்கானா – திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

அ) 4 5 2 3 1

ஆ) 5 4 1 2 3

இ) 4 3 5 1 2

ஈ) 5 3 4 2 1

42. 2010-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை எத்தனை இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன?

அ) 21

ஆ) 22

இ) 23

ஈ) 24

குறிப்பு: இரண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல்களுக்கிடையே ஒரு சட்டமன்ற தொகுதி காலியானாலோ அந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்தாலோ, வேறு கட்சிக்கு மாறுவதினால் பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது இறந்து விட்டாலோ அந்த தொகுதியில் நடைபெறும் தேர்தல் இடைத்தேர்தல் எனப்படும்.

43. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

(1) ஓர் மக்களாட்சியின் திறன்மிக்க செயல்பாட்டிற்கு, முரண்பாடான விருப்பங்களைப் பிரதி்பலிப்பு செய்யும் அரசியல் கட்சிகள் இருப்பது கட்டாயமாகும்.

(2) பல்வேறு விருப்பங்களையும், கொள்கைகளையும் பரிந்துரிக்கையில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், வலதுசாரி (பழமைவாதம், பாரம்பரியம் மற்றும் முதலாளித்துவம்) அல்லது இடதுசாரி சிந்தனையை (சமத்துவ- சார்பு, தாராளவாதம் மற்றும் தொழிலாளர் நலனை) பின்பற்றுகின்றன.

(3) மக்களாட்சிக்கான லட்சியத்தை அடைவதற்கு அரசியல் கட்சிகள் அவசியமானவை என்பது உண்மையே என்றாலும், மக்களாட்சி கோட்பாடற்ற, தனிப்பட்ட கட்சிகளின் வளர்ச்சி மற்றும் சர்வாதிகார தலைமையின் கீழ் தனிப்பட்ட கட்சிகளின் எழுச்சி என்பது மக்களாட்சிக்கு ஒரு முக்கியமான சவால் ஆகும்.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

44. பல பொதுக் கொள்கை சிக்கல்களால் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி அரசாங்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அமைப்புகள்

அ) அழுத்தக்குழுக்கள்

ஆ) நலக்குழுக்கள்

இ) அ, ஆ இரண்டும்

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கிடையிலான தொடர்பு மற்றும் தொடர்புக்கான ஆதாரமாக செயல்படுவதன் மூலம் இந்திய அரசியல் முறைமையில் அழுத்தக் குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

45. “தலைமைப்பண்பும், , கற்றலும் ஒன்றோடு ஒன்று இன்றியமையாதவை.” என்று கூறியவர்

அ) ஜெரமி பெந்தம்

ஆ) ஜேம்ஸ் மில்

இ) ஜான் ஸ்டுவார்ட் மில்

ஈ) ஜான் எ.ஃப் கென்னடி

குறிப்பு:

46. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

(1) தேர்தல் பற்றிய ஆய்வு மற்றும் புள்ளிவிவர பகுப்பாய்வே தேர்தலியல் ஆகும். தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள்,

(2) தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகள் ஆகியவை இதில் பகுப்பா ய் வு செய்யப்படு கின்றன.

(3) கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஆகியவை தேர்தல்களில் வாக்காளர் விருப்பத்தின் முக்கிய குறியீடாக இருக்கின்றன.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!