Book Back QuestionsTnpsc

மின்னியல் Book Back Questions 8th Science Lesson 5

8th Science Lesson 5

5] மின்னியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மின் நடுநிலையில் இருக்கும் ஒரு பொருள் எலக்ட்ரான்களை இழப்பதால் மட்டுமே நேர் மின்னூட்டமுடைய பொருளாகிறது. நேர்மின் துகள்களைப் பெற்றுக்கொள்வதால் அல்ல.

நேர் மின்னூட்டம் பெற்ற ஒரு கண்ணாடித் தண்டினை மற்றொரு நேர்மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டின் அருகே கொண்டு செல்லும் போது அவை ஒன்றை விட்டு ஒன்று விலகுகின்றன. ஆனால் நேர் மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டின் அருகே எதிர் மின்னூட்டம் பெற்ற எபோனைட் தண்டினைக் கொண்டு வரும்போது அவை ஒன்றை ஒன்று கவர்கின்றன. தண்டுகளுக்கிடையே உள்ள தூரம் குறையும்போது விலக்கு விசை அல்லது கவர்ச்சி விசை அதிகரிக்கின்றது.

மின்துகள்களை தங்களுக்குள் பாய அனுமதிக்கும் பொருள்கள் மின்கடத்திகள் எனப்படும். அலுமினியம், தாமிரம் போன்ற உலோகங்கள் மின் கடத்திகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். மின்துகள்களை தங்களுக்குள் எளிதாக பாய அனுமதிக்காத பொருள்கள் மின்காப்புப் பொருள்கள் எனப்படும். ரப்பர், மரம், நெகிழிப் பொருள்கள் ஆகியன மின்காப்புப் பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

1600ஆம் ஆண்டு வில்லியம் கில்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட நிலைமின்காட்டி வெர்சோரியம் என்றழைக்கப்பட்டது. தாங்கி ஒன்றிலிருந்து தொங்கவிடப்பட்டிருந்த உலோக ஊசியே வெர்சோரியம் என்று அழைக்கப்பட்டது. இந்த உலோக ஊசியானது அதனருகே கொண்டு வரப்படும் மின்னூட்டம் பெற்ற பொருள்களால் ஈர்க்கப்படும்.

மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையின்போது திறந்த வெளியிலோ அல்லது மரத்தின் அடியிலோ நிற்பதைத் தவிர்க்க வேண்டும். கீழே அமர்ந்து தலையைக் குனிந்து கொள்வது நல்லது. அதைவிட வாகனங்களுக்குள் இருப்பது பாதுகாப்பானது. வாகனங்களின் உலோகப் பரப்பு நிலைமின் தடுப்புறையாகச் செயல்பட்டு வாகனத்திற்குள் அமர்ந்திருப்பவர்களை மின்னலானது தாக்காமல் அது பாதுகாக்கிறது.

மின்னல் ஒரு மரத்தைத் தாக்கும்போது உருவாகும் அதிகபட்ச வெப்பத்தினால் மரத்தினுள் உள்ள நீரானது ஆவியாகி மரம் எரிந்து விடுகிறது

ஈல் (Eel) என்ற ஒரு வகையான விலாங்கு மீன் 650 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உருவாக்கி மின்னதிர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் தொடர்ச்சியாக அது மின்னதிர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தால் அதனுடைய உடலில் இருக்கும் மின்னூட்டம் முழுவதுமாக மின்னிறக்கம் அடைந்துவிடும். அதன் பின் அதனைத் தொடும்போது மின்னதிர்ச்சி ஏற்படாது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?

அ) எதிர் மின்னூட்டம்

ஆ) நேர்மின்னூட்டம்

இ) பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம்

ஈ) எதுவுமில்லை

2. இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?

அ) நியூட்ரான்கள்

ஆ) புரோட்டான்கள்

இ) எலக்ட்ரான்கள்

ஈ) புரோட்டான்களும் எலக்ட்ரான்களும்

3. ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவையான மின் கூறுகள் எவை?

அ) ஆற்றல் மூலம், மின்கலம், மின்தடை

ஆ) ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி

இ) ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி

ஈ) மின்கலம், மின் கம்பி, சாவி

4. ஒரு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலை மின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?

அ) நேர் மின்னூட்டம்

ஆ) எதிர் மின்னூட்டம்

இ) அ மற்றும் ஆ

ஈ) எதுவும் இல்லை

5. மின் உருகி என்பது ஒரு

அ) சாவி

ஆ) குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின் கம்பி

இ) அதிக மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி

ஈ) மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பொருட்களை ஒன்றுடனொன்று தேய்க்கும் போது ___________ நடைபெறுகிறது.

2. ஒரு பொருள் எலக்ட்ரானை இழந்து ___________ ஆகிறது.

3. மின்னல் தாக்குதலில் இருந்து கட்டடங்களைப் பாதுகாக்கும் சாதனம் ___________.

4. அதிகமான அளவு மின்னோட்டம் மின்சாதனங்கள் வழியாகப் பாயும்போது அவை பாதிக்கபடாமல் இருக்க _____________ அவற்றுடன் இணைக்கப்படுகின்றன.

5. மூன்று மின்விளக்குகள் ஒரே சுற்றில் மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மின்சுற்று __________ எனப்படும்.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. எபோனைட் தண்டினை கம்பளித் துணி ஒன்றுடன் தேய்க்கும்போது எபோனைட் தண்டு எதிர் மின்னூட்டங்களைப் பெற்றுக்கொள்கிறது.

2. மின்னூட்டம் பெற்ற பொருள் ஒன்றை மின்னூட்டம் பெறாத பொருளின் அருகே கொண்டு செல்லும் போது மின்னூட்டம் பெற்ற பொருளுக்கு எதிரான மின்னூட்டம் அதில் தூண்டப்படும்

3. தூண்டல் முறையில் மின்னேற்றம் செய்யப் பயன்படும் ஒரு கருவி நிலைமின்காட்டி.

4. நீர் மின்சாரத்தைக் கடத்தும்.

5. பக்க இணைப்பில் அனைத்துக் கூறுகளிலும் மின்னோட்டம் மாறிலியாக இருக்கும்.

IV. பொருத்துக:

1. இரு ஓரின மின்துகள்கள் – அ. நேர்மின்னூட்டம் பெறும்

2. இரு வேறின மின்துகள்கள் – ஆ. மின்சுற்று அதிக சூடாகாமல் பாதுகாக்கும்

3. கண்ணாடித் துண்டை பட்டுத்துணியில்

தேய்க்கும் போது – இ. ஒன்றை விட்டு ஒன்று விலக்கும்

4. ரப்பர் தண்டை கம்பளியில் தேய்க்கும் போது – ஈ. ஒன்றை ஒன்று கவரும்

5. மின் உருகி – உ. எதிர் மின்னூட்டம் பெறும்

V. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளுக்கு காரணம் கூறுக:

1. ஒரு கண்ணாடித் தண்டினை பட்டுத் துணியில் தேய்க்கும் போது இரண்டும் மின்னூட்டமடையும்.

2. உலர்ந்த தலை முடியில் சீப்பைத் தேய்த்து விட்டு சிறிய காகிதத் துண்டின் அருகில் கொண்டு சென்றால் அவை ஒட்டிக்கொள்ளும்.

3. ஒரு மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் நிலைமின்காட்டியின் உலோகக் குமிழைத் தொடும்போது உலோக இலைகள் விலகலடைகின்றன.

4. ஒரு நிலைமின்காட்டியில் பயன்படுத்தப்படும் தண்டும் இலையும் உலோகத்தினால் ஆனவை.

5. இடி, மின்னலின் போது திறந்த வெளியில் செல்லும் ஒருவர் குடையைப் பயன்படுத்தக் கூடாது.

VI. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. கூற்று: மின்னலினால் பாதிக்கப்படும் நபர்கள் கடுமையான மின்னதிர்ச்சியை உணர்வார்கள்.

காரணம்: மின்னல் அதிக மின்னழுத்தத்தைக் கொண்டிருக்கும்.

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியன விளக்கம்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

(ஈ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரியானது

2. கூற்று: மின்னலின் போது உயரமான மரத்தினடியில் நிற்பது நல்லது.

காரணம்: அது உங்களை மின்னலுக்கான இலக்காக மாற்றும்.

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியன விளக்கம்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

(ஈ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரியானது

விடைகள்:

I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நேர்மின்னூட்டம், 2. எலக்ட்ரான், 3. மின்கலம், மின் கம்பி, சாவி, 4. நேர் மின்னூட்டம், 5. மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. எலக்ட்ரான் இடமாற்றம், 2. நேர்மின் சுமையுடைய பொருள், 3. மின்னல் கடத்தி, 4. மின் உருகி, 5. தொடர் இணைப்பு

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. சரி, 2. சரி, 3. சரி, 4. சரி, 5. மின் அழுத்தம்

IV. பொருத்துக:

1. இ, 2. ஈ, 3. அ, 4. உ, 5. ஆ

V. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளுக்கு காரணம் கூறுக:

1. ஒரு கண்ணாடித் தண்டினை பட்டுத் துணியினால் தேய்க்கும்போது, கண்ணாடித் தண்டிலிருக்கும் கட்டுறா எலக்ட்ரான்கள் (Free electrons) பட்டுத் துணிக்கு இடமாற்றமடைகின்றன. பட்டுத் துணியிலிருக்கும் எலக்ட்ரான்களைவிட கண்ணாடித் தண்டிலிருக்கும் எலக்ட்ரான்கள் தளர்வாகப் பிணைக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணமாகும். கண்ணாடித்தண்டு எலக்ட்ரான்களை இழப்பதால் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை குறைவுபட்டு அது நேர்மின்னூட்டம் பெறுகிறது. பட்டுத்துணி அதிக எலக்ட்ரான்களைப் பெறுவதால் அது எதிர்மின்னூட்டம் பெறுகிறது.

2. சீப்பினை அழுத்தமாகத் தேய்க்கும்போது தலை முடியிலிருந்து சில எலக்ட்ரான்கள் சீப்புக்குச் சென்று விடுகின்றன. எனவே, சீப்பு எதிர் மின்னூட்டமடைகிறது. இந்த எலக்ட்ரான்கள் சீப்பின் முனையில் ஒட்டிக் கொள்கின்றன. காகிதத்தை சிறுசிறு துண்டுகளாகக் கிழிக்கும்போது காகிதத் துண்டுகளின் ஓரங்களில் நேர் மின்துகள்களும் எதிர் மின்துகள்களும் காணப்படுகின்றன. சீப்பில் இருக்கும் எதிர் மின்துகள்கள் காகிதத்துண்டின் ஓரங்களில் இருக்கும் நேர் மின்துகள்களை ஈர்க்கின்றன. எனவே, காகிதத் துண்டுகள் சீப்பினை நோக்கி ஈர்க்கப்படுகின்றன.

3. மின்னூட்டம் பெற்ற பொருள் ஒன்றினைக் கொண்டு பித்தளைக் குமிழினைத் தொடும் போது அதிலிருக்கும் மின்னூட்டம் பித்தளைக் குமிழ் வழியாக தங்க இலைகளுக்கு இடமாற்றமடைகிறது. இதனால் இரு இலைகளும் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன. இரண்டு இலைகளும் ஒரே மின்னூட்டத்தைப் பெற்றுள்ளதே இதற்குக் காரணமாகும்.

4. இவை உலோகங்களால் ஆனவை. அதனால் எலக்ட்ரான்கள் சுதந்திரமாக நகரும்.

5. இடியுடன் கூடிய மழையின் போது குடையை எடுத்துச் செல்வது நல்லது அல்ல. குடையின் தடி மற்றும் அதன் துணை கம்பிகள் உலோகங்களால் ஆனவை. இதனால் இடியுடன் கூடிய மழையின் போது, கடத்தும் பொருள்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

VI. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1.கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியன விளக்கம்.

2. கூற்று தவறானது. ஆனால் காரணம் சரியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!