Book Back QuestionsTnpsc

வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Book Back Questions 6th Social Science Lesson 9

6th Social Science Lesson 9

9] வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

வேதகாலம்: இந்திய வரலாற்றில் கி. மு. (பொ. ஆ. மு) 1500-600 காலகட்டம். “வேதங்கள்” என்பதில் இருந்து இப்பெயரைப் பெற்றது.

அழிந்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண்முறை (Slash and Burn Agriculture): இம்முறையில் நிலத்தின் மீதுள்ள மரங்கள் மற்றும் செடி, கொடிகள் அனைத்தும் வெட்டப்பட்டு எரிக்கப்படும். அந்நிலத்தில் குறுகிய காலகட்டத்திற்கு வேளாண்மை செய்து அதன் பின் அந்நிலம் கைவிடப்படும். பின்னர் மக்கள் மற்றொரு இடத்தில் இதே போன்று வேளாண்மை செய்யத் தொடங்குவர்.

நான்கு வேதங்கள்: ரிக், யஜூர், சாம, அதர்வன.

இந்தியாவின் தேசிய குறிக்கோள்: “சத்யமேவ ஜெயதே” (“வாய்மையே வெல்லும்”) என்ற வாக்கியம் முண்டக உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

வேதகாலத்தின் இரு கட்டங்கள்: தொடக்க வேத காலம்-கி. மு (பொ. ஆ. மு) 1500-1000; பின் வேதகாலம் கி. மு. (பொ. ஆ. மு) 1000-600.

சபா – மூத்தோர்களை கொண்ட மன்றம்; சமிதி – மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு.

பாலி – இது ஒரு வரி ஆகும். ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் 1/6 பங்கை இவ்வரியாகச் செலுத்த வேண்டும்.

ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள்: தங்கம் (ஹிரண்யா), இரும்பு (சியாமா), தாமிரம்/செம்பு (அயாஸ்).

தமிழ்நாட்டின் பெருங்கற்காலம்/இரும்புக்காலம்: பெருங்கற்காலம் ஆங்கிலத்தில் Megalithic Age என்று அழைக்கப்படுகிறது. Megalith என்பது கிரேக்கச் சொல்லாகும். ‘Mega’ என்றால் பெரிய, lith என்றால் “கல்” என்று பொருள். இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.

தீபகற்ப இந்தியாவிலிருந்து எஃகு ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறித்தும் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் இவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள்: புதிய கற்காலத்தின் கடைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பெருங்கற்காலப் புதைப்பு முறைகளைப் பின்பற்றத் தொடங்கினர். இம்முறையின்படி இறந்தவர்களின் உடல் பெரிய மட்பாண்டத்தில் வைக்கப்படும். ஏனைய சில பொருட்களும் அதனுடன் வைக்கப்படும். இந்த பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் இரும்பைக் குறித்த அறிவைப் பெற்றிருந்த, சமூகமாக கூடி வாழத் தெரிந்திருந்த மிகவும் முன்னேறிய தமிழ் நாகரிகத்திற்கான சாட்சிகளாகும்.

கற்திட்டைகள் (Dolmens): இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இடபுறம் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்பட்டு அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும். இக்கற்திட்டைகள் வீரராகவபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) கும்மாளமருதுபட்டி (திண்டுக்கல் மாவட்டம்) நரசிங்கம்பட்டி (மதுரை மாவட்டம்) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

நினைவு கற்கள் (Menhir): பிரிட்டானிய (Breton) மொழியில் “மென்” என்றால் கல், “கிர்” என்றால் “நீளமான” என்று பொருள். ஒரே கல்லிலான இத்தூண்கள் இறந்தோரின் நினைவாக செங்குத்தாக நடப்படும். திருப்பூர் மாவட்டம் சிங்கரிபாளையம், தேனி மாவட்டம் வெம்பூர் ஆகிய இடங்களில் இவ்வாறான நினைவுத் தூண்கள் உள்ளன. இவை உப்பாற்றின் இரு கரைகளிலும் பழங்கால வாழ்விடங்கள் இருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன. மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டியிலும், ஈரோடு மாவட்டம் குமரிக்கல் பாளையத்திலும், கொடு மணலிலும் இது போன்ற நினைவுத் தூண்கள் உள்ளன.

நடுகற்கள்: இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல் நடுகல்லாகும் தனது கிராமத்தை கொடிய விலங்குகளிடமிருந்து அல்லது எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய வீரர்களின் நினைவாக நடப்படுவது ஆகும். திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகேயுள்ள மானூர், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன் கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் புலிமான் கோம்பை ஆகிய இடங்களில் நடுகற்கள் காணப்படுகின்றன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஆரியர்கள் முதலில் __________ பகுதியில் குடியமர்ந்தனர்.

(அ) பஞ்சாப்

(ஆ) கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி

(இ) காஷ்மீர்

(ஈ) வடகிழக்கு

2. ஆரியர்கள் __________ லிருந்து வந்தனர்

(அ) சீனா

(ஆ) வடக்கு ஆசியா

(இ) மத்திய ஆசியா

(ஈ) ஐரோப்பா

3. நம் நாட்டின் தேசிய குறிக்கோள் “வாய்மையே வெல்லும்”__________ லிருந்து எடுக்கப்பட்டது.

(அ) பிராமணா

(ஆ) ஆரண்யகா

(இ) வேதம்

(ஈ) உபநிடதம்

4. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

(அ) 1/3

(ஆ) 1/6

(இ) 1/8

(ஈ) 1/9

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச் சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.

காரணம்: நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.

(அ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

(ஆ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

(இ) கூற்று சரி காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு காரணம் சரி.

2. கூற்று 1: தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யபட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிக்கப்பட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்.

கூற்று 2: இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.

(அ) கூற்று 1 தவறானது

(ஆ) கூற்று 2 தவறானது

(இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை

(ஈ) இரண்டு கூற்றுகளும் தவறானவை

3. வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.

(அ) ஒரு கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளலாம்

(ஆ) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது.

(இ) தந்தையின் சொத்துக்களை மகன் மரபுரிமையாகப் பெற்றான்.

(ஈ) உடன்கட்டை ஏறுதல் தெரியாது.

4. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?

(அ) கிராமா < குலா < விஷ் < ராஸ்டிரா < ஜனா

(ஆ) குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா

(இ) ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ்

(ஈ) ஜனா < கிராம < குலா < விஷ் < ராஸ்டிரா

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வேதப்பண்பாடு _________ இயல்பைக் கொண்டிருந்தது

2. வேதகாலத்தில் மக்களிடமிருந்து _________ என்ற வரி வசூலிக்கப்பட்டது.

3. _________ முறையானது பண்டைய கால கல்வி கற்கும் முறையாகும்.

4. ஆதிச்சநல்லூர் _________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. பல இடங்களில் கிடைத்துள்ள ரோமானியத் தொல் பொருட்கள் இந்திய-ரோமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன.

2. நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும்.

3. படைத்தளபதி “கிராமணி” என அழைக்கப்பட்டார்.

4. கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும்.

5. பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

பொருத்துக:

அ. கீழடி – 1. பகடை

ஆ. பொருந்தல் – 2. கொழு முனைகள்

இ) கொடுமணல் – 3. சுழல் அச்சுக்கள்

ஈ) ஆதிச்சநல்லூர் – 4. தங்க ஆபரணங்கள்

அ) 4 3 2 1

ஆ) 3 4 1 2

இ) 1 3 4 2

ஈ) 1 2 3 4

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. பஞ்சாப் 2. மத்திய ஆசியா 3. உபநிடதம் 4. (1/6)

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்று தவறு, காரணம் சரி

2. இரண்டு கூற்றுகளும் சரியானவை

3. குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது

4. குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. இரத்த உறவு 2. பாலி 3. குருகுல 4. தூத்துக்குடி

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. சரி

2. சரி

3. தவறு

சரியான விடை: கிராமத்தின் தளபதி கிராமணி ஆவார்.

4. சரி

5. சரி

பொருத்துக: (விடைகள்)

1. கீழடி – பகடை

2. பொருந்தல் – கொழு முனைகள்

3. கொடுமணல் – சுழல் அச்சுக்கள்

4. ஆதிச்சநல்லூர் – தங்க ஆபரணங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!