Tnpsc

வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 7th Social Science Lesson 25 Questions in Tamil

7th Social Science Lesson 25 Questions in Tamil

25] வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

1) இராஜபுதனம் என்பது ராஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பால் ஆனது. அவற்றுள் மிகவும் புகழ் பெற்றது ——————— ஆகும்.

A) சித்தூர்

B) குஜராத்

C) பீரார்

D) மாளவம்

விளக்கம்: ராஜபுதனம் என்பது ராஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பால் ஆனது. அவற்றுள் மிகவும் புகழ் பெற்றது சித்தூர் ஆகும். அனைத்து ராஜபுத்திர இனக்குழுவினரும் ஒருங்கிணையும் மையமாக சித்தூர் விளங்கியது.

2) சிந்து பகுதியை அரேபியர் எப்போது கைப்பற்றினர்?

A) கி.பி. 712

B) கி.பி. 722

C) கி.பி. 702

D) கி.பி. 732

விளக்கம்: இந்தியாவில் இஸ்லாமியர்களின் காலகட்டம் கி.பி.712-இல் சிந்துப் பகுதியை அராபியர் கைப்பற்றிதிலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் கானோஜ் பகுதியை ஆண்ட யசோவர்மன் எதிர்ப்பு காரணமாக இந்தியாவில் இஸ்லாமியரின் காலகட்டம் கி.பி.1200-இல் தான் தொடங்கிற்று.

3) பால அரசை வடஇந்திய அரசியலில் ஒரு வலிமைமிக்க சக்தியாக உருவாக்கிய அரசர் யார்?

A) தர்மபாலர்

B) கோபாலர்

C) மகிபாலர்

D) தேவபாலர்

விளக்கம்: தர்மபாலர் பால அரசை வடஇந்திய அரசியலில் ஒரு வலிமைமிக்க சக்தியாக உருவாக்கினார். கன்னோஜுக்கு எதிராக வெற்றிகரமான படையெடுப்பை அவர் மேற்கொண்டார்.

4) கோபாலர் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க

A) பால வம்சத்தை உருவாக்கியவர்

B) அரச பரம்பரையைச் சார்ந்தவர்

C) கி.பி.750 முதல் 770 வரையிலான ஆட்சிக்காலத்தில் அவர் வங்காளத்தில் பாலர்களின் எதிர்கால மேன்மைக்கான அடித்தளத்தை அமைத்தார்.

D) இவரின் மகன் தர்மபாலர் ஆவார்.

விளக்கம்: பால அரசவம்சத்தை உருவாக்கியவர் கோபாலர். அரச பரம்பரயைச் சேர்ந்தவர் என்ற வரலாற்றுப் பின்னணி அவருக்கு இல்லை. அவரது திறமையின் காரணமாக மக்கள் அவரை அரசராகத் தேர்வு செய்தனர். கி.பி.750 முதல் 770 வரையிலான ஆட்சிக்காலத்தில் அவர் வங்காளத்தில் பாலர்களின் எதிர்கால மேன்மைக்கான அடித்தளத்தை அமைத்தார்.

5) ராஜபுத் எனும் சொல் ரஜ்புத்ர எனும் ———————– மொழிச் சொல்லிருந்து பெறப்பட்டதாகும்.

A) சமஸ்கிருதம்

B) அரபி

C) இத்தாலி

D) பெங்காலி

விளக்கம்: ராஜபுத் எனும் சொல் ரஜ்புத்ர எனும் சமஸ்கிருதச் சொல்லிருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் அரசவம்ச ரத்தத்தின் வாரிசு அல்லது வழித்தோன்றல் என்பதாகும்.

6) கூற்று: விக்கிரமசீலா மடாலயம் பௌத்த கல்விக்கான மிகச் சிறந்த மையமாயிற்று

காரணம்: தர்மபாலர் மிகச் சிறந்த பௌத்த ஆதரவாளர் ஆவார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றினை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: பால வம்சத்தின் வலிமை வாய்ந்த அரசரான தர்மபாலர், மிகச்சிறந்த பௌத்த ஆதரவாளர் ஆவார். அவரால் உருவாக்கப்பட்ட விக்கிரமசீலா மடாலயம் பௌத்தக் கல்விக்கான மிகச் சிறந்த மையமாயிற்று.

7) ஹரிச்சந்திரா என்பவர் கீழ்க்காணும் எந்த மரபை சார்ந்தவர்?

A) சோலங்கிகள்

B) பிரதிகாரர்கள்

C) சௌகான்கள்

D) கூர்ஜர அரச வம்சம்

விளக்கம்: கி.பி. ஆறாம் நூற்றாண்டில் ஹரிச்சந்திரா என்பவர் கூர்ஜர அரச வம்சத்தின் அடிக்கல்லை நாட்டினார்.

8) அக்னி குலத்தோன்றல்களின் பொருந்தாவர்கள் யார்?

A) பிரதிகாரர்கள்

B) சௌகான்கள்

C) பரமார்கள்

D) தக்காண சாளுக்கியர்கள்

விளக்கம்: ஜேம்ஸ்டாட் எனும் கீழ்த்திசைப் புலமையாளர் கி.பி.1829 இல் முக்கியமான 36 ராஜபுத்திர அரசகுலங்களைப் பட்டியலிட்டுள்ளார். அவற்றுள் நான்கு குலங்கள்:

1. பிரதிகாரர்கள்

2. சௌகான்கள்

3. சோலங்கிகள் எனும் சாளுக்கியர்கள் (தக்காண சாளுக்கியரிமிருந்து வேறுபட்டவர்கள்)

4. பவாரைச் சேர்ந்த பரமாரர்கள்.

மேற்காணும் நான்கு குலமரபினரும் அக்னித் தோன்றல்கள் ஆவர்.

9) கூற்றுகளை ஆராய்க.

1. சூரிய குல, சந்திர குல வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொள்ளும் ராஜபுத்திரர்களுள் முக்கியமானவர்கள் பந்தேல்கண்டின் சந்தேலர்கள் ஆவர்.

2. இராஜபுத்திரர்கள் தங்கள் வம்சாவளித் தோற்றத்தைக் கடந்தகாலத்திலிருந்து தொடங்குகின்றனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: சூரிய குல, சந்திர குல வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொள்ளும் ராஜபுத்திரர்களுள் முக்கியமானவர்கள் பந்தேல்கண்டின் சந்தேலர்கள் ஆவர்.

இராஜபுத்திரர்கள் தங்கள் வம்சாவளித் தோற்றத்தைக் கடந்தகாலத்திலிருந்து தொடங்குகின்றனர். அவர்களின் மிக முக்கியமான மூன்று குலங்கள்:

1. சூரிய குலம்

2. சந்திர குலம்

3. அக்னி குலம்.

10) கூற்று: கி.பி.1200இல் தான் இந்தியாவில் இஸ்லாமியர்களின் காலகட்டம் தொடங்கிற்று.

காரணம்: வட இந்தியாவின் பெரும்பகுதி மற்றும் கன்னோஜ் பகுதியை ஆட்சி செய்த இராஜபுத்திர அரசர்கள் மற்றும் தலைவர்களின் எதிர்ப்பு.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: இந்தியாவில் இஸ்லாமியர்களின் காலகட்டம் கி.பி.712-இல் சிந்துப் பகுதியை அராபியர் கைப்பற்றிதிலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் கானோஜ் பகுதியை ஆண்ட யசோவர்மன், வட இந்தியாவின் பெரும்பகுதி மற்றும் கன்னோஜ் பகுதியை ஆட்சி செய்த இராஜபுத்திர அரசர்கள் மற்றும் தலைவர்களின் எதிர்ப்பு காரணமாக இந்தியாவில் இஸ்லாமியரின் காலகட்டம் கி.பி.1200-இல் தான் தொடங்கிற்று.

11) யாருடைய வீழ்ச்சி வங்காளத்தில் பாலர்களின் எழுச்சிக்கும், வடமேற்கு இந்தியாவில் சௌகான்களின் எழுச்சிக்கும் வித்திட்டது.

A) முகலாயர்கள்

B) இஸ்லாமியர்கள்

C) பிரதிகாரர்கள்

D) சுல்தான்கள்

விளக்கம்: பிரதிகார அரசின் வீழ்ச்சி, வங்காளத்தில் பாலர்களின் எழுச்சிக்கும் வடமேற்கு இந்தியாவில் சௌகான்களின் எழுச்சிக்கும் வித்திட்டது.

12) கூற்று: ராஜபுதனத்தின் புகழ்பெற்ற இடம் சித்தூர் ஆகும்.

காரணம்: அனைத்து ராஜபுத்திர இனக்குழுவினரும் ஒருங்கிணையும் மையமாகச் சித்தூர் விளங்கிற்று

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: ராஜபுதனம் என்பது ராஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பால் ஆனது. அவற்றுள் மிகவும் புகழ் பெற்றது சித்தூர் ஆகும். அனைத்து ராஜபுத்திர இனக்குழுவினரும் ஒருங்கிணையும் மையமாக சித்தூர் விளங்கிற்கு.

13) _________ என்னும் அரசர் மாளவத்தை வெற்றி கொண்டதன் நினைவாக ஜெய ஸ்தம்பா எனும் வெற்றித்தூண் சித்தூரில் நிறுவப்பட்டது.

A) ராணா

B) ஹரிசந்திரா

C) முதலாம் நாகபட்டர்

D) யசோவர்மன்

விளக்கம்: சித்தூரின் ராணா (அரசர்) மாளவத்தை வெற்றி கொண்டதன் நினைவாக ஜெய ஸ்தம்பா எனும் வெற்றித்தூண் சித்தூரில் நிறுவப்பட்டது.

14) எந்த நூற்றாண்டில் ராஜஸ்தான், கன்னோஜ் ஆகிய பகுதிகளின் மேல் இறையாண்மை கொண்ட சக்தியாகத் தம்மைக் கூறிக்கொள்ளும் அளவிற்குப் பிரதிகார அரச வம்சம் வளர்ச்சிப் பெற்றிருந்தது?

A) 5-ம் நூற்றாண்டு

B) 6-ஆம் நூற்றாண்டு

C) 7-ஆம் நூற்றாண்டு

D) 9-ஆம் நூற்றாண்டு

விளக்கம்: 9-ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தான், கன்னோஜ் ஆகிய பகுதிகளன்; மேல் இறையாண்மை கொண்ட சக்தியாகத் தம்மைக் கூறிக்கொள்ளும் அளவிற்குப் பிரதிகார அரச வம்சம் வளர்ச்சிப் பெற்றிருந்தது.

15) கூற்றுகளை ஆராய்க.

1. பிரதிகாரர்கள் மேற்கிந்தியப் பகுதிகளில் வலிமை மிக்க அரசுகளை நிறுவியிருந்தனர்

2. பாலர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் வலிமை மிக்க அரசுகளை நிறுவியிருந்தனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பிரதிகாரர்கள் மேற்கிந்தியப் பகுதியிலும், பாலர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலும் வலிமைமிக்க அரசுகளை நிறுவியிருந்தனர்.

16) ராஜபுத் என்னும் சொல்லின் பொருள் என்ன?

A) ரத்த வாரிசு

B) வழித்தோன்றல்

C) வம்சம்

D) A மற்றும் B

விளக்கம்: ராஜபுத் எனும் சொல் ரஜ்புத்ர எனும் சமஸ்கிருதச் சொல்லிருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் அரசவம்ச ரத்தத்தின் வாரிசு அல்லது வழித்தோன்றல் என்பதாகும்.

17) காமரூபம் என அழைக்கப்படும் பகுதி எது?

A) சிந்து

B) மாளவம்

C) அஸ்ஸாம்

D) வங்காளம்

விளக்கம்: காமரூபம் என அழைக்கப்படும் பகுதி அஸ்ஸாம் ஆகும். தர்மபாலரைத் தொடர்ந்து அவருடைய மகன் தேவபாலர் ஆட்சிப்பொறுப்பேற்றார். அவர் பாலர்களின் ஆட்சி அதிகாரத்தைக் கிழக்கு நோக்கி காமரூபம் (அஸ்ஸாம்) வரை விரிவுபடுத்தினார்.

18) தர்மபாலர், தேவபாலர் ஆகியோரின் ஆட்சிக்காலங்கள் வங்காள வரலாற்றி சிறப்பு மிக்க ஒளிரும் அத்தியாயங்கள் என கூறிய வரலாற்றிஞர் யார்?

A) மார்கோபோலோ

B) இபன்பதூதா

C) ஆர்.சி.மஜும்தார்

D) யுவான் சுவாங்

விளக்கம்: தர்மபாலர், தேவபாலர் ஆகியோரின் ஆட்சிக்காலங்கள் வங்காள வரலாற்றில் சிறப்பு மிக்க ஒளிரும் அத்தியாயங்கள் என வரலாற்றறிஞர் ஆர்.சி.மஜும்தார் கருத்துக் கூறியுள்ளார்.

19) யாருடைய ஆட்சிக்காலத்தில் பால வம்சம் முன் எப்போதும் இல்லாத பெயரையும் புகழையும் பெற்றது?

A) மகிபாலர்

B) தேவபாலர்

C) தர்மபாலர்

D) கோபாலர்

விளக்கம்: 988-ஆம் ஆண்டு முதலாம் மகிபாலர் அரியணை ஏறியதைத் தொடர்ந்து பாலர் அரசு முன் எப்போதும் இல்லாத பெயரையும் புகழையும் பெற்றது.

20) இந்தியாவில் டெல்லி சுல்தான் நிறுவப்பட காரணமாக இருந்த போர் எப்போது நடைபெற்றது?

A) 1190

B) 1191

C) 1192

D) 1193

விளக்கம்: இரண்டாம் தரெய்ன் போர் 1192-ல் நடைபெற்றது. இது முகமது கோரிக்கும் பிருதிவிராஜ் சௌகானுக்கும் இடையே நடைபெற்றது. இப்போரில் முகமது கோரி வெற்றி பெற்றார். பின்னாளில் டெல்லி சுல்தான் பேரரசு இல்துமிஷ் என்பவரால் நிறுவப்பட்டது.

21) கஜுராகோ வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கோவில்கள் கீழ்க்காணும் எந்த மதத்துடன் தொடர்புடையது?

A) பௌத்தம்

B) சமணம்

C) பார்சி

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: பந்தேல்கண்டிலுள்ள கஜுராகோ வளாகத்தில் மொத்தம் 30 கோவில்கள் அமைந்துள்ளன. கஜுராகோ கோவில்களின் சிகரங்கள் எழில் மிகுந்தவையாகும். இக்கோவில்கள் சமண தீர்த்தங்கரர்களுக்கும், சிவன், விஷ்ணு ஆகிய இந்துக் கடவுள்களுக்கும் படைத்தளிக்கப்பட்டுள்ளன.

22) கூர்ஜர அரச வம்சத்தின் அடிக்கல்லை நாட்டியவர் யார்?

A) முதலாம் நாகபட்டர்

B) யசோவர்மன்

C) ஹரிச்சந்திரா

D) வத்சராஜா

விளக்கம்: ராஜபுத்திரர்களில் ஒரு பிரிவினரான பிரதிகாரர் அல்லது கூர்ஜரப் பிரதிகாரர் கூர்ஜராட்டிராவிலிருந்து (ஜோத்பூரில் உள்ளது) ஆட்சி புரிந்தனர். கி.பி.ஆறாம் நூற்றாண்டில் ஹரிச்சந்திரா என்பவர் கூர்ஜர அரச வம்சத்தின் அடிக்கல்லை நாட்டினார்.

23) வங்காளத்தில் பாலர்களின் எதிர்கால மேன்மைக்கான அடித்தளத்தை அமைத்தவர் யார்?

A) தர்ம பாலர்

B) தேவபாலர்

C) மகிபாலர்

D) கோபாலர்

விளக்கம்: பால அரசவம்சத்தை உருவாக்கியவர் கோபாலர். அரச பரம்பரயைச் சேர்ந்தவர் என்ற வரலாற்றுப் பின்னணி அவருக்கில்லை. அவரது திறமையின் காரணமாக மக்கள் அவரை அரசராகத் தேர்வு செய்தனர். கி.பி.750 முதல் 770 வரையிலான ஆட்சிக்காலத்தில் அவர் வங்காளத்தில் பாலர்களின் எதிர்கால மேன்மைக்கான அடித்தளத்தை அமைத்தார்.

24) ஹர்சரின் மறைவிற்குப் பிறகு, இந்தியாவின் பல பகுதிகளில் ராஜபுத்திர இனக்குழுக்கள் தங்கள் அரசுகளை நிறுவிக்கொண்டன. ஹர்சர் எப்போது மறைந்தார்?

A) கி.பி.647

B) கி.பி.674

C) கி.பி.625

D) கி.பி.652

விளக்கம்: கி.பி.647-ல் ஹர்சரின் மறைவிற்குப் பிறகு, இந்தியாவின் பல பகுதிகளில் ராஜபுத்திர இனக்குழுக்கள் தங்கள் அரசுகளை நிறுவிக்கொண்டன.

25) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) ராஜபுதனம் பகுதியின் புகழ்பெற்ற நகரம் சிந்து ஆகும்

B) கி.பி.712-இல் சிந்துப் பகுதியை அராபியர் கைப்பற்றியதிலிருந்தே இந்தியாவில் இஸ்லாமியர் காலக்கட்ட வரலாறு தொடங்கவில்லை

C) ராஜ்புத் என்னும் சொல் ராஜ்புத்ர எனும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.

D) கன்னோஜை ஆண்ட அரசர் யசோவர்மனின் காலம் கி.பி.736 ஆகும்.

விளக்கம்: ராஜபுதனம் என்பது ராஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பால் ஆனது. அவற்றுள் மிகவும் புகழ் பெற்றது சித்தூர் ஆகும். அனைத்து ராஜபுத்திர இனக்குழுவினரும் ஒருங்கிணையும் மையமாக சித்தூர் விளங்கிற்று.

26) ராஜபுத்திர மிக முக்கியமான இனக்குழுக்களில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) சூரிய குலம்

B) சந்திர குலம்

C) அக்னி குலம்

D) ஆகாய குலம்

விளக்கம்: ராஜபுத்திரர்கள் தங்கள் வம்சாவளித் தோற்றத்தைக் கடந்தகாலத்திலிருந்து தொடங்குகின்றனர். அவர்களின் மிக முக்கியமான மூன்று குலங்கள்:

1. சூரிய வம்சி – சூரிய குலம்

2. சந்திர வம்சி – சந்திர குலம்

3. அக்னி குலம்.

27) போஜா பற்றி கூற்றுகளில் தவறான கூற்றை தெரிவு செய்க

A) இவர் ராமபத்திராவின் மகன் ஆவார்

B) பதவியேற்ற சில ஆண்டுகளில் அதிகாரத்தை வலுப்படுத்துவதில் வெற்றி பெற்ற அரசர்

C) இவருக்கு பின் ஒரு நூற்றாண்டு காலம் பிரதிகாரப் பேரரசு புகழோடும், கீர்த்தியோடும் விளங்கியது.

D) அரேபியரின் அச்சுறுத்தல்களை உறுதியுடன் சமாளிக்க தவறினார்.

விளக்கம்: ராமபத்திராவுக்குப் பின்னர் அவருடைய மகனான மிகரபோஜா அல்லது போஜா என்பவர் அரியணை ஏறினார். பதவியேற்ற சில ஆண்டுகளுக்குள் பிரதிகாரர்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதில் அவர் வெற்றி பெற்றார். ஒரு வலிமை மிகுந்த அரசராக அவர் தனது நாட்டில் அமைதியைப் பராமரித்தார். அராபியரின் அச்சுறுத்தல்களை உறுதியுடன் சமாளித்தார். இவருக்குப்பின் பிரதிகாரப் பேரரசு நூற்றாண்டு காலம் புகழோடும், கீர்த்தியோடும் விளங்கியது.

28) ராஜபுத்திரர்களின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவு செய்க.

A) வலிமையான அரசர் இன்மை

B) தங்களுக்கிடையே முடிவற்ற போர் செய்தல்

C) அந்நியப் படையெடுப்பு

D) நாட்டின் வறுமை நிலை நிலவுதல்

விளக்கம்: 12-ஆம் நூற்றாண்டுகளில் ராஜபுத்திரர்கள் தங்களுக்கிடையிலேயே முடிவற்ற போர்களை மேற்கொண்டனர். இச்சூழரைச் சாதகமாகப் பயன்படுத்திப் பல உள்ளுர் சிற்றரசர்கள் சுதந்திர அரசர்கள் ஆயினர்.

29) பால அரச வம்சத்தை உருவாக்கியவர் யார்?

A) தர்மபாலர்

B) மகிபாலர்

C) கோபாலர்

D) தேவபாலர்

விளக்கம்: பால அரசவம்சத்தை உருவாக்கியவர் கோபாலர். அரச பரம்பரயைச் சேர்ந்தவர் என்ற வரலாற்றுப் பின்னணி அவருக்கில்லை. அவரது திறமையின் காரணமாக மக்கள் அவரை அரசராகத் தேர்வு செய்தனர். கி.பி.750 முதல் 770 வரையிலான ஆட்சிக்காலத்தில் அவர் வங்காளத்தில் பாலர்களின் எதிர்கால மேன்மைக்கான அடித்தளத்தை அமைத்தார்.

30) கூற்றுகளை ஆராய்க.

1. ஜேம்ஸ் டாட் எனும் கீழ்த்திசைப் புலமையாளர் கி.பி.1829 இல் முக்கியமாக 36 ராஜபுத்திர அரசகுலங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

2. பிரதிகாரர்களின் முதல் அரசர் ஹரிசந்திரா ஆவார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: ஜேம்ஸ் டாட் எனும் கீழ்த்திசைப் புலமையாளர் கி.பி.1829 இல் முக்கியமாக 36 ராஜபுத்திர அரசகுலங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

பிரதிகாரர்களின் முதலாவது மற்றும் முக்கியமான அரசர் முதலாம் நாகபட்டர்.

31) தர்மபாலாவுடன் பகை ஏற்படும் வகையில் படையெடுப்பை மேற்கொண்ட அரசர் யார்?

A) ஹரிச்சந்திரா

B) யசோவர்மன்

C) வத்சராஜா

D) போஜா

விளக்கம்: வத்சராஜா ஒட்டுமொத்த வடஇந்தியாவின் மேல் ஆதிக்கம் செலுத்த ஆசைப்பட்டார். கன்னோஜைக் கைப்பற்ற அவர் மேற்கொண்ட முயற்சி வங்காளப் பகுதியின் பாலவம்ச அரசரான தர்மபாலவுடன் பகை ஏற்பட வழிவகுத்தது.

32) பால வம்சத்தின் மிகச்சிறந்த, வலிமை மிக்க அரசர் யார்?

A) முதலாம் மகிபாலர்

B) கோபாலர்

C) இரண்டாம் மகிபாலர்

D) தர்மபாலர்

விளக்கம்: முதலாம் மகிபாலர் (கி.பி.988-1038) பால வம்சத்தின் மிகச்; சிறந்த, வலிமை மிக்க அரசர் ஆவார். அவர் இரண்டாம் பால வம்சத்தைத் தோற்றுவித்தவர் ஆவார்.

33) சௌகான் வம்சாவளியின் தலைசிறந்த அரசர் யார்?

A) சிம்மராஜ்

B) பிருதிவிராஜ் சௌகான்

C) யசோவர்மன்

D) அறிய இயலவில்லை

விளக்கம்: சௌகான் வம்சாவளியின் கடைசி அரசனான பிருதிவிராஜ் சௌகானே அவ்வரச வம்சாவளி அரசர்களுள் தலைசிறந்தவரெனக் கருதப்படுகின்றார். அவர் 1191-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் தரெய்ன் போரில் முகமது கோரியை தோற்கடித்தார்.

34) பௌத்தர்களுக்கு ஐந்து கிராமங்களைக் கொடையாக வழங்கிய பால அரசர் யார்?

A) தேவபாலர்

B) மகிபாலர்

C) தர்மபாலர்

D) கோபாலர்

விளக்கம்: தேவபாலர், தலைசிறந்த பௌத்த ஆதரவாளர் ஆவார். அவர் பௌத்தர்களுக்கு ஐந்து கிராமங்களைக் கொடையாக வழங்கினார். இவர் மகதத்தில் மடாலயங்கள், பல கோவில்களை நிறுவினார்.

35) யாருடைய ஆட்சி காலம் வங்காள வரலாற்றின் சிறப்பு மிக்க ஒளிரும் அத்தியாயங்கள் என வரலாற்று அறிஞர் ஆர்.சி.மஜும்தார் கூறியுள்ளார்?

A) தர்மபாலர் மற்றும் தேவபாலர்

B) தேவபாலர் மற்றும் கோபாலர்

C) தர்மபாலர் மற்றும் கோபாலர்

D) கோபாலர் மற்றும் மகிபாலர்

விளக்கம்: தர்மபாலர், தேவபாலர் ஆகியோரின் ஆட்சிக்காலங்கள் வங்காள வரலாற்றின் சிறப்பு மிக்க ஒளிரும் அத்தியாயங்கள் என வரலாற்றறிஞர் ஆர்.சி.மஜும்தார் கருத்துக் கூறியுள்ளார்.

36) முதலாம் மகிபாலர் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க

A) வாரணாசி, சாரநாத், நாளந்தா ஆகிய இடங்களில் சமயம் சார்ந்த ஏராளமான கட்டடங்களைக் கட்டினார்;

B) பால வம்சத்தின் பண்டைய புகழையும் பெயரையும் மீட்டெடுத்தார்.

C) பால வம்சத்தின் மிகச் சிறந்த, வலிமை மிக்க அரசர்

D) விக்கிராமசீலா மடாலயத்தை கட்டினார்

விளக்கம்: விக்கிராமசீலா மடாலயத்தை உருவாக்கியவர் தர்மபாலர் ஆவார்.

37) அஜ்மீர் நகரைத் தோற்றுவித்தவர் என அறியப்படுபவர் யார்?

A) சிம்மராஜ்

B) பிருதிவிராஜ் சௌகான்

C) முதலாம் மகிபாலர்

D) தேவபாலர்

விளக்கம்: சௌகான்கள் எனப்படும் ராஜபுத்திர அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் சிம்மராஜ் ஆவார். இவர் அஜ்மீர் நகரைத் தோற்றுவித்தவர் எனவும் அறியப்படுகிறார்.

38) முதலாம் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு எது?

A) 1190

B) 1191

C) 1192

D) 1193

விளக்கம்: முதலாம் தரெய்ன் போர் 1191-ஆம் ஆண்டு முகமது கோரிக்கும் பிருதிவிராஜ் சௌகானுக்கும் இடையே நடைபெற்றது. இதில் பிருதிவிராஜ் சௌகான் வெற்றி பெற்றார்.

39) கூற்றுகளை ஆராய்க.

1. பாலர்கள் ஹீனயான பௌத்தத்தைப் பின்பற்றினர்.

2. ஜோத்பூரிலிருந்து 32 மைல் தொலைவிலுள்ள ஓசியான் என்னுமிடத்தில் 16 இந்து மற்றும் சமணக் கோவில்கள் உள்ளன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பாலர்கள் மகாயான பௌத்தத்தைப் பின்பற்றினர்.

2. ஜோத்பூரிலிருந்து 32 மைல் தொலைவிலுள்ள ஓசியான் என்னுமிடத்தில் 16 இந்து மற்றும் சமணக் கோவில்கள் உள்ளன.

40) திபெத்தில் பௌத்தத்தை நிறுவியவர்கள்?

A) சௌகான்கள்

B) பாலர்கள்

C) சாளுக்கியர்கள்

D) பரமாரர்கள்

விளக்கம்: பாலர்கள் மகாயான பௌத்தத்தைப் பின்பற்றினார்கள். அவர்கள் சமயப் பரப்பாளர்கள் மூலம் திபெத்தில் பௌத்தம் நிறுவப்பட்டது.

41) கூற்றுகளை ஆராய்க.

1. காலீஃபா என்னும் சொல்லுக்கு, இறைதூதர் முகமது நபிகளின் பிரதிநிதி என்று பொருளாகும்.

2. உமையத்துகளும், அப்பாசித்துகளும் தொடக்கக்கால கலீஃபத்துகளாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. காலீஃபா என்னும் சொல்லுக்கு, இறைதூதர் முகமது நபிகளின் பிரதிநிதி என்று பொருளாகும்.

2. உமையத்துகளும், அப்பாசித்துகளும் தொடக்கக்கால கலீஃபத்துகளாகும்.

42) கலீஃபாக்களின் அதிகாரத்தை தூக்கிஎறிந்துவிட்டு சுதந்திரமான சுல்தான்களான ஆட்சிபுரியத் தொடங்கிய கஜினி பகுதி ஆளுநர் யார்?

A) அல்ப்-டஜின்

B) சபக்டிஜின்

C) மாமூது

D) முகமது கோரி

விளக்கம்: 9-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அப்பாசித் கலீஃபாக்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஏனைய பகுதிகளிலும் இருந்த அராபிய இராணுவத் தளபதிகள் கலீஃபாக்களின் அதிகாரத்தைத் துக்கிஎறிந்துவிட்டு சுதந்திரமான சுல்தான்களாக ஆட்சிபுரியத் தொடங்கினர். அவர்களில் ஒருவர் கஜினியை தலைநகராக கொண்ட அல்ப்-டஜின் ஆவார்.

43) ரக்ஷா எனும் சொல்லின் பொருள் என்ன?

A) கட்டுதல்

B) அன்பு

C) சகோதரத்துவம்

D) பாதுகாப்பு

விளக்கம்: ரக்ஷாபந்தன் எனும் பண்பாட்டு மரபானது ராஜபுத்திரர்களுக்கு உரியதாகும். ரக்ஷா எனில் பாதுகாப்பு என்றும், பந்தன் என்பது கட்டுதல் அல்லது உறவு என்றும் பொருளாகும்.

44) வங்கப்பிரிவினை திட்டத்துடன் தொடர்புடைய ஆண்டு எது?

A) 1900

B) 1885

C) 1911

D) 1905

விளக்கம்: 1905-ஆம் ஆண்டு வங்கப்பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார். இந்து முஸ்லீம்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக இச்செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது.

45) இந்தியாவில் முதல் இஸ்லாமிய அரசு எங்கு நிறுவப்பட்டது?

A) டெல்லி

B) பஞ்சாப்

C) மூல்தான்

D) ஆஜ்மீர்

விளக்கம்: இந்தியாவில் ஆஜ்மீரில் முதல் இஸ்லாமிய அரசு உறுதியாக நிறுவப்பட்டது. இந்திய வரலாற்றில் புதிய சகாப்தம் தொடங்கியது.

46) ராஜபுத்திரர்களின் குடியிருப்புக் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குபவைகளில் பொருந்தாதது எது?

A) மான்சிங் அரண்மனை – குவாலியர்

B) ஆம்பூர் கோட்டை – ஜெய்ப்பூர்

C) உதய்பூர் அரண்மனை

D) ரான்தாம்பூர் கோட்டை – ராஜஸ்தான்

விளக்கம்: ராஜபுத்திரர்களின் குடியிருப்புக் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவை குவாலியரிலுள்ள மான்சிங் அரண்மனை, ஆம்பூர் (ஜெய்ப்பூர்) கோட்டை, உதய்பூரின் ஏரியின் நடுவே அமைந்துள்ள அரண்மனை ஆகியவைகளாகும்.

47) கூற்றுகளை ஆராய்க.

1. கூர்ஜரப் பிரதிகாரர்கள், ராஷ்டிரகூடர்கள் மற்றும் பாலர்கள் கன்னோஜின் மீது அவர்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்று பலவீனமடைந்தனர்.

2. முதலாம் நாகப்பட்டருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றவர் தர்மபாலர் ஆவார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: கூர்ஜரப் பிரதிகாரர்கள், ராஷ்டிரகூடர்கள் மற்றும் பாலர்கள் கன்னோஜின் மீது அவர்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்று பலவீனமடைந்தனர்.

2. முதலாம் நாகப்பட்டருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றவர் வத்சராஜா ஆவார்.

48) யாருடைய படையெடுப்பின் காரணமாக வரணாசிக்கு அப்பால் தனது அதிகாரத்தை விரிவுபடுத்த இயலாத சூழல் முதலாம் மகிபாலருக்கு ஏற்பட்டது?

A) ராஜராஜசோழன்

B) ராஜேந்திரசோழன்

C) கரிகாலன்

D) இரண்டாம் ராஜராஜசோழன்

விளக்கம்: தென்னிந்திய அரசரான ராஜேந்திர சோழனின் படையெடுப்பின் காரணமாய் வாரணாசிக்கு அப்பால் தனது அதிகாரத்தை விரிவுபடுத்த இயலாமல் போனது.

49) கூற்றுகளை ஆராய்க.

1. சுமத்ரா மற்றும் ஜவாவைச் சேர்ந்த இந்து பௌத்த சைலேந்திர அரசுடன் பாலர்கள் சுமூகமான உறவைப் பேணினர்.

2. கிழக்கு இந்தியக் கலை என்ற புதிய கலைப்பாணியை உருவாக்கினார்கள்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சுமத்ரா மற்றும் ஜவாவைச் சேர்ந்த இந்து பௌத்த சைலேந்திர அரசுடன் பாலர்கள் சுமூகமான உறவைப் பேணினர்.

2. கிழக்கு இந்தியக் கலை என்ற புதிய கலைப்பாணியை உருவாக்கினார்கள்.

50) இஸ்லாம் பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றை தெரிவு செய்க.

A) ஒரு சமய நம்பிக்கையான இஸ்லாம் அராபியாவிலுள்ள மெக்காவில் தோன்றியது.

B) இதனைத் தோற்றுவித்தவர் இறைதூதர் முகமது நபிகள் நாயகம் ஆவார்.

C) ஓர் இஸ்லாமிய அரசு அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் ஒரே நபரால் ஆளப்பட்டால் அவ்வரசு கலீஃபத் என்றழைக்கப்பட்டது.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: 1) ஒரு சமய நம்பிக்கையான இஸ்லாம் அராபியாவிள்ள மெக்காவில் தோன்றியது.

2) இதனைத் தோற்றுவித்தவர் இறைதூதர் முகமது நபிகள் நாயகம் ஆவார்.

3) ஓர் இஸ்லாமிய அரசு அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் ஒரே நபரால் ஆளப்பட்டால் அவ்வரசு கலீஃபத் என்றழைக்கப்பட்டது.

51) பிரதிக்கார வம்சத்தின் அரசர்களை கால வரிசைப்படுத்துக.

1. முதலாம் நாகபட்டர் 2. இரண்டாம் நாகபட்டர் 3. வத்சராஜா 4. ராமபத்ரா

A) 1, 2, 3, 4

B) 1, 4, 3, 2

C) 1, 2, 4, 3

D) 1, 3, 2, 4

விளக்கம்: பிரதிகாரர்களின் முதலாம் மற்றும் முக்கியமான அரசர் முதலாம் நாகபட்டர். இவருக்கு பின் ஆட்சிப்பொறுப்பேற்றவர் வத்சராஜா. வத்சராஜாவைத் தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பேற்ற இரண்டாம் நாகபட்டர் மற்றும் ராமபத்ரா ஆகியோர் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் எதுவும் புரியவில்லை.

52) பதவியேற்ற சில ஆண்டுகளுக்குள் பிரதிகாரர்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதில் வெற்றி பெற்ற அரசர் யார்?

A) முதலாம் நாகபட்டர்

B) இரண்டாம் நாகபட்டர்

C) மிகிரபோஜா

D) ஹரிசந்திரா

விளக்கம்: ராமபத்திராவுக்குப் பின்னர் அவருடைய மகனான மிகிரபோஜா அல்லது போஜா என்பவர் அரியணை ஏறினார். பதவியேற்ற சில ஆண்டுகளுக்குள் பிரதிகாரர்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதில் அவர் வெற்றி பெற்றார். ஒரு வலிமை மிகுந்த அரசராக அவர் தனது நாட்டில் அமைதியைப் பராமரித்தார்.

53) வங்கப்பிரிவினையின் போது ரக்ஷாபந்தன் நிகழ்வை நடத்தியவர் யார்?

A) கோபால கிருஷ்ண கோகலே

B) தேவேந்திரநாத் தாகூர்

C) ரவீந்திரநாத் தாகூர்

D) பாரதியார்

விளக்கம்: 1905-ஆம் ஆண்டு வங்கப்பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார். இந்து முஸ்லீம்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக இச்செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது.

54) எந்த ஆண்டு முகமது பின் காசிம் சிந்துவின் மீது படையெடுத்தார்?

A) கி.பி. 721

B) கி.பி. 712

C) கி.பி. 741

D) கி.பி. 714

விளக்கம்: கி.பி. (பொ.ஆ) 712-ஆம் ஆண்டு உமையது அரசின் படைத்தளபதியான முகமது பின் காசிம் சிந்துவின் மீது படையெடுத்தார். சிந்துவின் அரசர் தாகீர், முகமது பின் காசிமால் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

55) கஜினி மாமூது இந்தியாவின் மீது படையெடுப்பு மேற்கொள்ள காரணம்?

A) டெல்லியை கைப்பற்றுதல்

B) சூறையாடல்

C) இந்தியாவினை கைப்பற்றுதல்

D) இராணுவத்தை வலிமைப்படுத்துதல்

விளக்கம்: கஜினி மாமூது (கி.பி(பொ.ஆ) 997-1030): இந்தியாவின் மீது சூறையாடலை நோக்கமாகக் கொண்ட திடீர் படையெடுப்புகளைப் பதினேழு முறை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

56) இரண்டாம் பால வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?

A) இரண்டாம் மகிபாலர்

B) முதலாம் மகிபாலர்

C) கோபாலர்

D) தர்மபாலர்

விளக்கம்: 988-ல் அரியணை ஏறிய முதலாம் மகிபாலரே இரண்டாம் பால வம்சத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். அவர் பால வம்சத்தின் மிகச் சிறந்த, வலிமை மிக்க அரசர் ஆவார்.

57) சௌகான்களின் தலைநகரம் எது?

A) அஜ்மீர்

B) சௌகான்

C) கன்னோஜ்

D) சாகம்பரி

விளக்கம்: சௌகான்கள் கி.பி.956 முதல் 1192 வரை இன்றைய ராஜஸ்தானின் கிழக்குப் பகுதிகளைச் சாகம்பரி நகரில் தலைநகரை நிறுவி ஆட்சிப் புரிந்தவர்களாவர்.

58) சௌகான்கள் எனப்படும் இராஜபுத்திர அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?

A) சிம்மராஜ்

B) பிருதிவிராஜ் சௌகான்

C) யசோவர்மன்

D) அறிய இயலவில்லை

விளக்கம்: சௌகான்கள் எனப்படும் ராஜபுத்திர அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் சிம்மராஜ் ஆவார். இவர் அஜ்மீர் நகரைத் தோற்றுவித்தவர் எனவும் அறியப்படுகிறார்.

59) ஷாகி அரசை சேர்ந்த எந்த அரசர் 1001-ல் தோற்கடிக்கப்பட்டார்?

A) மகிபாலர்

B) ஆனந்தபாலர்

C) ஜெயபாலர்

D) கோபாலர்

விளக்கம்: ஷாகி அரசு பஞ்சாப் முதல் காபூல் வரை பரவி இருந்தது. ஷாகி அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளில் அதன் அரசர் ஜெயபாலர் 1001-ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டார். இத்தோல்வியை பெருத்த அவமானமாகக் கருதிய ஜெயபாலர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.

60) கூற்று: 1905-ஆம் ஆண்டு வங்கப்பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார்.

காரணம்: இந்து முஸ்லீம்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக இச்செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது.

A) கூற்று சரி, காரணம் தவறு.

B) கூற்று தவறு, காரணம் சரி.

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: 1905-ஆம் ஆண்டு வங்கப்பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார். இந்து முஸ்லீம்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக இச்செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது.

61) கஜினி மாமூதுக்கு எதிராக போரிட்ட ஆனந்தபாலர் எந்த ஆண்டு தோற்கடிக்கப்பட்டார்?

A) 1001

B) 1002

C) 1004

D) 1008

விளக்கம்: ஜெயபாலருக்கு பின் வந்த ஆனந்தபாலர் மாமூதுக்கு எதிராகப் போரிட்டார். 1008-ஆம் ஆண்டு பெஷாவருக்கு அருகேயுள்ள வைகிந்த் எனுமிடத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

62) கூற்றுகளை ஆராய்க. (சிந்து மீது முகமது பின் காசிம் படையெடுப்பு)

1. சிந்து பகுதியின் அரசர் தாகீர்

2. சிந்துவின் தலைநகர் அரோர்

3. சிந்துப்பகுதிவாழ் மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட மக்கள் எனும் தகுதி வழங்கப்பட்டது.

4. மக்களின் மதங்களில் தலையீடு இருந்தது.

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: சிந்து பகுதியின் அரசர் தாகீர்

2. சிந்துவின் தலைநகர் அரோர்

3. சிந்துப்பகுதிவாழ் மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட மக்கள் எனும் தகுதி வழங்கப்பட்டது.

4. மக்களின் மதங்களில் தலையீடு இல்லை.

63) தவறான கூற்றை தெரிவு செய்க (சிந்து படையெடுப்பு)

A) அராபிய அறிஞர்கள் சிந்துவிற்கு வந்து பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர்

B) 0 முதல் 9 வரையிலான எண்களை அவர்களை இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர்.

C) ஐரோப்பியர்கள் கணிதம் தொடர்பான அறிவை அராபியர் வாயிலாகப் பெற்றனர்

D) பூஜ்ஜியத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் ஏற்கனவே உணர்ந்திருந்தனர்

விளக்கம்: பூஜ்ஜியத்தின் முக்கியத்துவத்தை ஐரோப்பியர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர்.

64) கீழ்க்காணும் எந்த அரசருக்கு எதிராக நடைபெற்ற போரில் வெற்றி பெற்றதன் விளைவாக மாமூது பஞ்சாப் வரை தனது ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்தினார்?

A) ஆனந்தபாலர்

B) ஜெயபாலர்

C) மகிபாலர்

D) கோபாலர்

விளக்கம்: ஜெயபாலருக்கு பின் வந்த ஆனந்தபாலர் மாமூதுக்கு எதிராகப் போரிட்டார். 1008-ஆம் ஆண்டு பெஷாவருக்கு அருகேயுள்ள வைகிந்த் எனுமிடத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டார். வைகிந்தில் பெற்ற வெற்றியின் விளைவாக மாமூது பஞ்சாப் வரை தனது ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்தினார்.

65) முகமது பின் காசிம் கி.பி.712-ல் சிந்தன் மீது படையெடுப்பு நிகழ்த்தும் போது சிந்து பகுதியின் அரசர் யார்?

A) பிருதிவிராஜ் சௌகான்

B) தாகீர்

C) யசோவர்மன்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: கி.பி. (பொ.ஆ) 712-ஆம் ஆண்டு உமையது அரசின் படைத்தளபதியான முகமது பின் காசிம் சிந்துவின் மீது படையெடுத்தார். சிந்துவின் அரசர் தாகீர், முகமது பின் காசிமால் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். சிந்துவின் தலைநகர் அரோர் கைப்பற்றப்பட்டது.

66) எந்த ஆண்டு தானேஸ்வரர் நகர் சூறையாடப்பட்டது?

A) 1001

B) 1008

C) 1011

D) 1010

விளக்கம்: 1011இல் பஞ்சாபிலுள்ள நாகர்கோட், டெல்லிக்கு அருகேயுள்ள தானேஸ்வர் ஆகிய நகரங்கள் மாமூது-ஆல் சூறையாடப்பட்டன.

67) கூற்றுகளை ஆராய்க.

1. 1018-ஆம் ஆண்டு மாமூது புனித நகரமான மதுராவைக் கொள்ளையடித்தார்.

2. கன்னோஜின் அரசர் ராஜ்யபாலர் கன்னோஜைக் கைவிட்டுவிட்டு வெளியேறினார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1018-ஆம் ஆண்டு மாமூது புனித நகரமான மதுராவைக் கொள்ளையடித்தார். கன்னோஜின் அரசர் ராஜ்யபாலர் கன்னோஜைக் கைவிட்டுவிட்டு வெளியேறினார்.

68) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க. (மாமூது படையெடுப்பு).

A) குஜராத் படையெடுப்பு – 1024

B) தானேஸ்வர் படையெடுப்பு – 1011

C) மதுரா படையெடுப்பு – 1018

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்:

1) குஜராத் படையெடுப்பு – 1024

2) தானேஸ்வர் படையெடுப்பு – 1011

3) மதுரா படையெடுப்பு – 1018

69) கூற்றுகளை ஆராய்க.

1. கஜினியின் கடைசி படையெடுப்பு சோமநாதபுர ஆலய படையெடுப்பு ஆகும்.

2. கஜினி சோலங்கி அரசர் முதலாம் பீமதேவரைத் தோற்கடித்து அன்கில்வாட் நகரைச் சூறையாடினார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

1. விளக்கம்: கஜினியின் கடைசி படையெடுப்பு சோமநாதபுர ஆலய படையெடுப்பு ஆகும்.

2. கஜினி சோலங்கி அரசர் முதலாம் பீமதேவரைத் தோற்கடித்து அன்கில்வாட் நகரைச் சூறையாடினார்.

70) மாமூது-வின் பேரரசு எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) மாமூது பேரரசு

B) கஜானாவியப் பேரரசு

C) ஷாகி பேரரச

D) முகமது பேரரசு

விளக்கம்: மாமூது-வின் பேரரசு கஜானாவியப் பேரரசு ஆகும். அவரின் இந்தியாவின் மீதான 17 படையெடுப்புக்கு பின், கஜானாவியப் பேரரசு தோராயமாக பாரசீகம், ஆக்ஸஸீக்கு அப்பால் உள்ள பகுதிகள், ஆப்கானிஸ்தான், பஞ்சாப் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!