Book Back QuestionsTnpsc

வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Book Back Questions 8th Social Science Lesson 2

8th Social Science Lesson 2

2] வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

இருட்டறை துயரச் சம்பவம் (1756): சிராஜ்-உத்-தௌலாவின் படை வீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைப்பிடித்து கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் காற்று புகாத ஒரு சிறிய இருட்டறையில் ஓர் இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தனர். மறுநாள் காலை அறையை திறந்தபோது அவர்களுள் 123 பேர் மூச்சு திணறி இறந்திருந்தனர். இது வரலாற்றில் “இருட்டறை துயரச் சம்பவம்” என்றழைக்கப்படுகிறது.

1863இல் ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் சத்தியேந்திரநாத் தாகூர். இவர் கவிஞர் இரபீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரர் ஆவார்.

ஆங்கில ராணுவத்தின் வலிமை: பிளாசிப்போர் 1757: ஐரோப்பிய காலாட்படை – 1950, ஐரோப்பிய பீரங்கி படை – 100, ஆங்கிலேய மாலுமிகள் – 50, இந்திய சிப்பாய்கள் – 2100, வங்காளத்தில் இருந்த ஆங்கில இராணுவம் – 6000. 1857இல் இந்திய இராணுவத்தில் 3, 11, 400 வீரர்களில் 2, 65, 900 வீரர்கள் இந்தியர்களாக இருந்தனர். உயர் பதவி அலுவலர்கள் அனைவரும் ஆங்கிலேயர்கள் ஆவர்.

வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார். மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி சர் திருவாரூர் முத்துசாமி ஆவார்.

துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் சுதேச அரசு ஹைதராபாத் (1798). அதனை தொடர்ந்து ஏற்றுக்கொண்ட இந்தியா அரசுகள் தஞ்சாவூர் (1799), அயோத்தி (1801), பேஷ்வா (1802), போன்ஸ்லே (1803), குவாலியர் (1804), இந்தூர் (1817), ஜெய்பூர், உதய்பூர் மற்றும் ஜோத்பூர் (1818).

வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம் டல்ஹெளசி பிரபு இணைத்துக் கொண்ட பகுதிகள்: சதாரா (1848), ஜெய்த்பூர், சம்பல்பூர் (1849), பகத் (1850), உதய்பூர் (1852), ஜான்சி (1853) மற்றும் நாக்பூர் (1854).

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. 1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்

(அ) சுஜா-உத்-தௌலா

(ஆ) சிராஜ்-உத்-தௌலா

(இ) மீர்காசிம்

(ஈ) திப்பு சுல்தான்

2. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

(அ) 1757

(ஆ) 1764

(இ) 1765

(ஈ) 1775

3. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை

(அ) அலகாபாத் உடன்படிக்கை

(ஆ) கர்நாடக உடன்படிக்கை

(இ) அலிநகர் உடன்படிக்கை

(ஈ) பாரிசு உடன்படிக்கை

4. பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி __________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

(அ) முதல்

(ஆ) இரண்டாம்

(இ) மூன்றாம்

(ஈ) ஏதுமில்லை

5. ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு __________

(அ) 1756

(ஆ) 1761

(இ) 1763

(ஈ) 1764

6. மங்களுர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது.

(அ) பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்

(ஆ) ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்

(இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்

(ஈ) திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்

7. மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்____________

(அ) இராபர் கிளைவ்

(ஆ) வாரன் ஹேஸ்டிங்ஸ்

(இ) காரன்வாலிஸ்

(ஈ) வெல்லெஸ்லி

8. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் _____________

(அ) இரண்டாம் பாஜிராவ்

(ஆ) தௌலத்ராவ் சிந்தியா

(இ) ஷாம்பாஜி போன்ஸ்லே

(ஈ) ஷாயாஜி ராவ் கெய்க்வாட்

9. மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா ___________

(அ) பாலாஜி விஸ்வநாத்

(ஆ) இரண்டாம் பாஜிராவ்

(இ) பாலாஜி பாஜிராவ்

(ஈ) பாஜிராவ்

10. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேச அரசு எது?

(அ) அயோத்தி

(ஆ) ஹைதராபாத்

(இ) உதய்பூர்

(ஈ) குவாலியர்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு _____________

2. சிராஜ் உத்-தௌலாவின் தலைமை படைத்தளபதி ____________

3. இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் ___________

4. இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் _____________

5. திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் ___________

6. திப்பு சுல்தான் இறப்புக்கு பின் ____________ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.

7. 1800ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் __________

பொருத்துக:

1. அய்-லா-சப்பேல் உடன்படிக்கை – முதல் ஆங்கிலேய மைசூர் போர்

2. சால்பை உடன்படிக்கை – முதல் கர்நாடகப் போர்

3. பாரிஸ் உடன்படிக்கை – மூன்றாம் கர்நாடகப் போர்

4. ஸ்ரீ ரங்கபட்டின உடன்படிக்கை – முதல் மராத்திய போர்

5. மதராஸ் உடன்படிக்கை – மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. அலிவர்திகான் மறைவுக்கு பின்னர் சிராஜ்-உத்-தௌலா வங்காளத்தின் அரியணை ஏறினார்.

2. பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்.

3. ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.

4. வங்களாத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.

5. காரன் வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்.

கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது? (விடை)

1. அடையாறு போர் – 1748

2. ஆம்பூர் போர் – 1754

3. வந்தவாசிப் போர் – 1760

4. ஆற்காட்டுப் போர் – 1749

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. சிராஜ்-உத்-தொளலா 2. (1757) 3. அலகாபாத் உடன்படிக்கை 4. இரண்டாம்

5. (1761) 6. ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான் 7. காரன்வாலிஸ்

8. இரண்டாம் பாஜிராவ் 9. இரண்டாம் பாஜிராவ் 10. ஹைதராபாத்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. (1757) 2. மிர் ஜபார் 3. வாரிசுரிமை பிரச்சனை 4. டல்ஹெளசி

5. வெல்லெஸ்லி 6. மூன்றாம் கிருஷ்ணராஜா உடையார் 7. வெல்லெஸ்லி

பொருத்துக: (விடைகள்)

1. அய்-லா-சப்பேல் உடன்படிக்கை – முதல் கர்நாடகப் போர்

2. சால்பை உடன்படிக்கை – முதல் மராத்தியப் போர்

3. பாரிஸ் உடன்படிக்கை – மூன்றாம் கர்நாடகப் போர்

4. ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை – மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்

5. மதராஸ் உடன்படிக்கை – முதல் ஆங்கிலேய மைசூர் போர்

சரியா / தவறா எனக் குறிப்பிடுக:

1. சரி

2. தவறு

சரியான விடை: பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் வாட்சன் ஆவார்.

3. தவறு

சரியான விடை: ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் மூன்றாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.

4. சரி

5. சரி

கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது? (விடை)

3. வந்தவாசிப் போர் – 1760

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!