Book Back QuestionsTnpsc

வெப்பம் Book Back Questions 8th Science Lesson 4

8th Science Lesson 4

4] வெப்பம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மின்சாரத்தை நீண்ட தொலைவிற்கு எடுத்துச்செல்லப் பயன்படுத்தப்படும் மின்வடக் கம்பிகள் பகல் நேரங்களில் விரிவடைந்து இரவு நேரங்களில் சுருங்குகின்றன. எனவே தான், அவை மிகவும் விரைப்பாக இணைக்கப்படுவதில்லை. விரைப்பாக இணைக்கப்பட்டால் இரவு நேரங்களில் குளிர்ச்சி அடையும் பொழுது அவை அறுந்து விடக்கூடும்

இயற்கையாகவே புவியின் மீது திண்மம், திரவம் மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படுகின்ற ஒரே பருப்பொருள் நீர் ஆகும்.

உலோகங்கள் அனைத்தும் சிறந்த வெப்பக் கடத்திகளாகும். வெப்பத்தை எளிதாகக் கடத்தாத பொருள்கள் வெப்பம் கடத்தாப் பொருள்கள் அல்லது காப்பான்கள் என்று அழைக்கப்படுகின்றன. மரம், தக்கை, பருத்தி, கம்பளி, கண்ணாடி, இரப்பர் ஆகியவை வெப்பம் கடத்தாப் பொருள்களாகும்.

வெப்பக் கதிர்வீச்சு மூலம் வெப்ப ஆற்றல் பரவுவதை நம் கண்களால் காண முடியும். 500oC வெப்பநிலைக்கு ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது கதிர்வீச்சானது மங்கிய சிவப்பு நிறத்தில் நமது கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. அப்பொழுது நம் தோலின் மூலம் வெப்பத்தினை உணரமுடியும். மேலும், வெப்பப்படுத்தும்போது கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கின்றது. அப்பொழுது ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தைத் தொடர்ந்து இறுதியாக அப்பொருள் வெள்ளை நிறத்தில் ஒளிரும்.

உணவுப் பொருள்களில் உள்ள ஆற்றலின் அளவு கிலோ கலோரி எனும் அலகால் குறிப்பிடப்படுகிறது. 1 கிலோ கலோரி = 4200 J (தோராயமாக)

பிற பொருள்களை விட நீர் அதிக அளவு வெப்ப ஏற்புத் திறனைப் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே நீரானது குளிர்விப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. 100 கிராம் எண்ணையைவிட 100 கிராம் தண்ணீர் அதிக அளவு வெப்பத்தை இழுத்துக் கொள்ள முடியும்.

முதல் முதலாக 1782ஆம் ஆண்டு ஆன்டொய்ன் லவாய்ஸியர் மற்றும் பியரே சைமன் லாப்லாஸ் ஆகியோரால், வேதியியல் மாற்றங்களால் ஏற்படும் வெப்ப ஆற்றலின் அளவை அளவிட பனிக்கட்டி-கலோரி மீட்டர் பயன்படுத்தப்பட்டது.

வெற்றிடக்குடவை முதன் முதலில் 1892ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அறிவியலாளர் சர் ஜேம்ஸ் திவார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவரைக் கவுரவப்படுத்தும் விதமாக இது திவார் குடவை (Dewar Flask) என்றும் அழைக்கப்படுகிறது. இது திவார் பாட்டில் எனவும் அழைக்கப்படும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வெப்பம் என்பது ஒரு வகையான _____________

அ) மின்னாற்றல்

ஆ) ஈர்ப்பு ஆற்றல்

இ) வெப்ப ஆற்றல்

ஈ) எதுமில்லை

2. ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும் போது பின்வருவனவற்றுள் எது/எவை நிகழ முடியும்?

அ) விரிவடைதல்

ஆ) வெப்பநிலை உயர்வு

இ) நிலைமாற்றம்

ஈ) அனைத்தும்

3. பின்வரும் பொருள்களில் எது அதிக வெப்ப ஆற்றலை உட்கவர்கிறது?

அ) திடப்பொருள்

ஆ) திரவப்பொருள்

இ) வாயுப்பொருள்

ஈ) அனைத்தும்

4. திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்போது, எது அதிக விரிவுக்கு உட்படும்?

அ) திடப்பொருள்

ஆ) திரவப்பொருள்

இ) வாயுப்பொருள்

ஈ) அனைத்தும்

5. திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு _________ என்று பெயர்.

அ) பதங்கமாதல்

ஆ) குளிர்வித்தல்

இ) உறைதல்

ஈ) படிதல்

6. வெப்பக்கடத்தல் முறையில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் __________ல் நடைபெறும்.

அ) திடப்பொருள்

ஆ) திரவப்பொருள்

இ) வாயுப்பொருள்

ஈ) அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. கலோரிமீட்டர் என்ற சாதனம் ___________ஐ அளக்கப் பயன்படுகிறது.

2. ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்ப நிலையை 1oC உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ___________ எனப்படும்

3. வெப்பக் கட்டுப்படுத்தி என்பது ___________ஐ மாறாமல் வைத்திருக்கிறது.

4. வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு ஒரு பொருள் மாறும் நிகழ்விற்கு _________ என்று பெயர்.

5. ஒரு அமைப்பிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது, அதன் வெப்நிலை __________

6. ஒரு கலனிலுள்ள திரவத்தின் வெப்ப நிலையை உயர்த்தும் போது அணுக்களுக்கிடையேயான தொலைவு __________

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. ஒரு பொருளுக்கு அளிக்கப்படும் வெப்ப ஆற்றல், அப்பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது.

2. ஒரு பொருளின் வெப்பநிலையை அதிகரிக்கும்போது அப்பொருளின் பரிமாணத்தின் மதிப்பு அதிகரிக்கும்.

3. ஒரு பொருளானது திட நிலையிலிருந்து வாயுநிலைக்கு மாறும் நிகழ்விற்கு குளிர்வித்தல் என்று பெயர்.

4. திடப்பொருளில் வெப்பப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு வெப்பக் கடத்தல் என்று பெயர்.

5. ஒரு பொருள் ஏற்கும் வெப்பத்தின் அளவானது அதன் நிறையையும் உள்ளுறை வெப்பத்தையும் பெருக்கிக் கிடைக்கும் மதிப்பாகும்.

6. வெப்பக் குடுவையில், சில்வர் சுவர்கள் வெப்பத்தை வெளிப்புறத்தில் எதிரொளிக்கின்றன.

IV. பொருத்துக:

1. வெப்பக் கடத்தல் – அ. திரவப்பொருள்

2. வெப்பச்சலனம் – ஆ. வாயு திரவமாதல்

3. வெப்பக் கதிர்வீச்சு – இ. திண்மம் வாயுவாதல்

4. பதங்கமாதல் – ஈ. வாயு

5. குளிர்வித்தல் – உ. திடப்பொருள்

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: வெற்றிடத்தில் வெப்ப ஆற்றல் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்.

காரணம்: அணுக்களின் இயக்கமின்றி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வெப்பம் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

ஆ) கூற்று சரி, காரணம் தவறு

இ) கூற்று தவறு, காரணம் சரி

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

2. கூற்று: ஓர் அமைப்பினை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்ற முடியும்.

காரணம்: ஒரு அமைப்பின் வெப்ப நிலை மாறாமல் இருக்கும்போது இது நிகழ்கிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

ஆ) கூற்று சரி, காரணம் தவறு

இ) கூற்று தவறு, காரணம் சரி

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வெப்ப ஆற்றல், 2. அனைத்தும், 3. அனைத்து, 4. வாயுப்பொருள், 5. உறைதல், 6. திடப்பொருள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஏற்கப்பட்ட இழக்கப்பட்ட வெப்பத்தை, 2. 1K, 3. வெப்பநிலையை, 4. குளிர்தல், 5. உயரும், 6. அதிகரிக்கும்

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. சரி, 2. சரி, 3. பதங்கமாதல், 4. சரி, 5. சரி, 6. உட்புறத்தில்

IV. பொருத்துக:

1. உ, 2. அ, 3. ஈ, 4. இ, 5. ஆ

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

2. கூற்று சரி, காரணம் தவறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!