TnpscTnpsc Current Affairs

10th & 11th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

10th & 11th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 10th & 11th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

10th & 11th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) கீழ்க்காணும் எந்த நாட்டின் நாணய ஆணையத்துடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

அ. சீனா

ஆ. ரஷ்யா

இ. மாலத்தீவுகள்

ஈ. இலங்கை

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. மாலத்தீவுகள்

  • இந்திய ரிசர்வ் வங்கியானது சார்க் நாணய மாறுகொள் கட்டமைப்பின்கீழ் மாலத்தீவுகள் நாணய ஆணையத்துடன் (Maldives Monetary Authority) நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் MMAஐ ரிசர்வ் வங்கியிடமிருந்து அதிகபட்சம் $200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பல தவணைகளில் பெற உதவும்.

2. அண்மையில், கீழ்க்காணும் எந்த நாட்டின் முதல் பெண் அதிபராக டினா பொலுவார்டே தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ. பிரான்ஸ்

ஆ. பெரு

இ. பிரேசில்

ஈ. ஆஸ்திரேலியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பெரு

  • பெரு நாட்டின் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ, காங்கிரஸால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். துணை அதிபர் டினா பொலுவார்டே, பெருவின் அடுத்த அதிபராகிறார். காஸ்டிலோ, சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயன்றார் என்று அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் காஸ்டிலோ, சட்டமன்றத்தை கலைத்து, அரசாங்கத்தை ஒருதலை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் துணை அதிபர் டினா பொலுவார்டே, பெரு நாட்டின் வரலாற்றில் முதல் பெண் அதிபராக பதவியேற்க உள்ளார்.

3. உட்கட்டமைப்பிற்கு ஊக்கமளிக்கும் நோக்கத்திற்காக இந்தியாவின் முதல் பிணைமுறி காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கவுள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ. சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம்

ஆ. நிதி அமைச்சகம்

இ. தகவல் தொடர்பு அமைச்சகம்

ஈ. வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம்

  • நடுவண் அமைச்சர் நிதின் கட்கரியின் கூற்றுப்படி, உட்கட்டமைப்புத் துறையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்திற்காக இந்தியாவின் முதல் பிணைமுறி காப்பீட்டுத் திட்டத்தை நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிமுகப்படுத்தும். வங்கி பிணைகளில் சிக்கியுள்ள ஒப்பந்ததாரர்களின் செயற்பாட்டு மூலதனத்திற்கு நிவாரணமளிப்பதன்மூலம் உட்கட்டமைப்புத்துறையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு இந்தப் பிணைமுறிகள் உதவும்.

4. சென்னை மெட்ரோ இரயில் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக $780 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான கடன்தொகையை வழங்கவுள்ள நிறுவனம் எது?

அ. உலக வங்கி

ஆ. ஆசிய வளர்ச்சி வங்கி

இ. IMF

ஈ. AIIB

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆசிய வளர்ச்சி வங்கி

  • ஆசிய வளர்ச்சி வங்கியானது சென்னை மெட்ரோ இரயில் வலையமைப்பில் புதிய வழித்தடங்களை உருவாக்க மற்றும் பேருந்து மற்றும் பிற போக்குவரத்துச் சேவைகளுடன் மெட்ரோ இரயில் வலையமைப்பின் இணைப்பை மேம்படுத்துவதற்காக $780 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டத்தின்மூலம் 10.1 கிமீ நீளத்திற்கு உயர்மட்டப் பிரிவு, ஒன்பது மெட்ரோ இரயில் நிலையங்கள், 10 கிமீட்டர் நீளத்திற்கு நிலத்தடிப்பிரிவு ஆகியவை அமைக்கப்படும். இந்த நிலையங்கள் பேரிடர் & பல்வேறு காலநிலைகளில் தாக்குப்பிடிக்கக்கூடியதாகவும், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்படும்.

5. ஒன்பதாவது உலக ஆயுர்வேத மாநாடு மற்றும் ஆரோக்யா கண்காட்சி–2022ஐ நடத்துகிற மாநிலம்/UT எது?

அ. குஜராத்

ஆ. கோவா

இ. தெலுங்கானா

ஈ. பீகார்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கோவா

  • 9ஆவது உலக ஆயுர்வேத மாநாடானது கோவா மாநிலம் பனாஜியில் தொடங்கியது. உலகளவில் ஆயுஷ் மருத்துவ முறைகளின் செயல்திறன் மற்றும் வலிமையை வெளிப்படுத்துவதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்வின் சமயம், ‘ஆயுஷ்மான்’ காமிக் புத்தகத் தொடரின் மூன்றாவது பதிப்பும் வெளியிடப்பட்டது. அகில இந்திய ஆயுர்வேத கல்விக்கழகம், ஜெர்மனியிலுள்ள ரோசன்பர்க் ஐரோப்பிய ஆயுர்வேத அகாடமி ஆகியவற்றுக்கு இடையே பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளில் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

6. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (AICTE) புதிய தலைவராக (2022இல்) நியமிக்கப்பட்டவர் யார்?

அ. T G சீத்தாராம்

ஆ. மனோஜ் சோனி

இ. நிதி சிப்பர்

ஈ. வினீத் ஜோஷி

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. T G சீத்தாராம்

  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (AICTE) புதிய தலைவராக கௌகாத்தி–ஐஐடிஇன் இயக்குநர் பேராசிரியர் T G சீத்தாராம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்பு UGC தலைவர் M ஜெகதேஷ் குமார் இப்பதவியில் இருந்தார். M ஜெகதேஷ் குமாரிடமிருந்து பொறுப்பை ஏற்றுக்கொண்ட T G சீத்தாராம் மூன்றாண்டு காலம் இந்தப் பதவியில் இருப்பார். பேராசிரியர் T G சீத்தாராம், அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் (SERB) உறுப்பினராகவும், பெங்களூர், IIScஇன் குடிசார் பொறியியல் பிரிவில் மூத்த பேராசிரியராகவும் உள்ளார்.

7. அமெரிக்காவைச் சார்ந்த மார்னிங் கன்சல்ட் வெளியிட்ட குளோபல் லீடர் அப்ரூவல் மதிப்பீடுகளின்படி, உலகின் மிகவும் பிரபலமான தலைவர் யார்?

அ. ஜோ பிடன்

ஆ. நரேந்திர மோதி

இ. மு க ஸ்டாலின்

ஈ. விளாடிமிர் புடின்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நரேந்திர மோதி

  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 77 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டுடன் உலகின் மிகவும் பிரபலமான தலைவராகத் தொடர்கிறார். அமெரிக்காவைச் சார்ந்த ஆலோசனை நிறுவனமான மார்னிங் கன்சல்ட் வெளியிட்ட குளோபல் லீடர் அப்ரூவல் மதிப்பீடுகளில் இது தெரியவந்துள்ளது. மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் இரண்டாமிடத்தையும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர்.

8. CITES தீர்மானத்தின் பிற்சேர்க்கை–IIஇலிருந்து பிற்சேர்க்கை–Iக்கு கீழ்க்காணும் எந்த உயிரினத்தை மாற்றிப் பட்டியலிட இந்தியா முன்மொழிந்துள்ளது?

அ. லீத்தின் மெல்லோட்டு ஆமை

ஆ. பர்மிய மயில் வண்ண மெல்லோட்டு ஆமை

இ. இந்திய மெல்லோட்டு ஆமை

ஈ. பர்மிய குறுந்தலையுடைய மெல்லோட்டு ஆமை

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. லீத்தின் மெல்லோட்டு ஆமை

  • அழிந்துவரும் வனவுயிரிகளின் சர்வதேச வர்த்தகம் (CITES) தொடர்பான கூட்டமைப்பின் பிற்சேர்க்கை–IIஇலிருந்து லீத்தின் மெல்லோட்டு ஆமையை (Leith’s Softshell Turtle – Nilssonia leithi) பிற்சேர்க்கை–Iக்கு மாற்றிப்பட்டியலிட இந்தியா முன்மொழிந்துள்ளது. பனாமாவில் நடைபெற்ற CITESஇன் 19ஆவது கூட்டத்தில் இந்த முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. லீத்தின் மெல்லோட்டு ஆமை என்பது மென்மையான ஓடுகொண்ட ஒரு பெரிய நன்னீர் ஆமை ஆகும்; இது தீபகற்ப இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது.

9. ஐந்து வெவ்வேறு உலகக்கோப்பைகளில் கோலடித்த முதல் கால்பந்து வீரர் யார்?

அ. லியோனல் மெஸ்ஸி

ஆ. கிறிஸ்டியானோ ரொனால்டோ

இ. நெய்மர்

ஈ. கைலியன் பாப்பே

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கிறிஸ்டியானோ ரொனால்டோ

  • போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 வெவ்வேறு உலகக்கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் ஆவார். 2006, 2010, 2014, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடர்களில் ரொனோல்டோ கோலடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கானாவுக்கு எதிரான குரூப்–H போட்டியில் 65ஆவது நிமிடத்தில் கோலடித்து ரொனோல்டோ இந்த மைல்கல் சாதனையை எட்டினார்.

10. ‘RH–200’ என்ற ஆய்வு ஏவுகணையை ஏவிய நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. இந்தியா

இ. இஸ்ரேல்

ஈ. ஈரான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) தொடர்ந்து 200ஆவது முறையாக ‘RH–200’ ஆய்வு ஏவுகணையை ஏவியது. வானிலை, வானியல் மற்றும் விண்வெளி இயற்பியலின் ஒத்த பிரிவுகளில் சோதனைகளை மேற்கொள்வ –தற்கு இந்திய ஆய்வு ஏவுகணைகள் (sounding rockets) பயன்படுத்தப்படுகின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 130 ஆண்டுகளில் 13ஆவது புயல்!

கடந்த 1891 முதல் 2021 வரையிலான 130 ஆண்டுகாலத்தில் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே 12 புயல்கள் கரையைக் கடந்துள்ளன. சென்னை–புதுச்சேரி இடையே கரையைக் கடந்த 13–ஆவது புயலாக ‘மாண்டஸ்’ ஆனது.

2. 10–12–2022 – ‘மூதறிஞர்’ இராஜாஜியின் 144ஆவது பிறந்தநாள்.

3. 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கத் திட்டம்: நடுவண் அரசு.

2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க நடுவணரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் நிகழாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 20.16 இலட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த நோயால் 73,551 பேர் இறந்தனர். உலகளாவிய காசநோய் அறிக்கை–2022இன்படி, நாட்டில் காசநோய் பாதிப்பு 18% குறைந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவில் லட்சத்தில் 256 பேர் அந்த நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு லட்சத்தில் 210 பேர் பாதிக்கப்பட்டனர். காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாநில–மாவட்ட அளவிலான திட்டம், பலவீனமானவர்களிடமும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடமும் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள்மூலம், 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது.

4. 11–12–2022 – ‘மகாகவி’ பாரதியாரின் 141ஆவது பிறந்தநாள்.

5. ‘காசி தமிழ்ச்சங்கமம்’ விரைவு இரயில்!

‘காசி தமிழ்ச்சங்கமம்’ நிகழ்வை நினைவுகூரும் வகையில் காசி–தமிழ்நாட்டுக்கு இடையே ‘காசி தமிழ்ச்சங்கமம்’ விரைவு இரயில் என்ற புதிய இரயில்சேவை தொடங்கப்படும் என நடுவண் இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

10th & 11th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. The Reserve Bank of India (RBI) has signed a Currency Swap Agreement with which country’s monetary authority?

A. China

B. Russia

C. Maldives

D. Sri Lanka

Answer & Explanation

Answer: C. Maldives

  • The Reserve Bank of India has signed a Currency Swap Agreement with the Maldives Monetary Authority (MMA) under the SAARC Currency Swap Framework. This agreement will enable the MMA to make withdrawals in multiple tranches up to a maximum of USD 200 million from the RBI.

2. Dina Boluarte was recently selected as the first female President of which country?

A. France

B. Peru

C. Brazil

D. Australia

Answer & Explanation

Answer: B. Peru

  • Dina Boluarte was appointed as Peru’s first female president amid a political crisis when her predecessor and former boss Pedro Castillo was ousted in an impeachment trial. Peru’s leftist president Pedro Castillo was ousted by lawmakers and detained by police after he tried to illegally shut down Congress.

3. Which Union Ministry is set to launch India’s first–ever surety bonds insurance product to boost infrastructure?

A. Ministry of Road Transport and Highways

B. Ministry of Finance

C. Ministry of Communication

D. Ministry of Housing and Urban Affairs

Answer & Explanation

Answer: A. Ministry of Road Transport and Highways

  • The Ministry of Road Transport and Highways (MoRTH) will launch India’s first–ever surety bonds insurance product to boost liquidity in the infrastructure sector, as per Union minister Nitin Gadkari. The surety bonds will help in boosting the liquidity in the infrastructure sector by providing relief to the contractors’ working capital stuck in bank guarantees.

4. Which institution has approved USD 780 million loan to expand Chennai metro rail network?

A. World Bank

B. ADB

C. AIIB

D. IMF

Answer & Explanation

Answer: B. ADB

  • The Asian Development Bank (ADB) approved financing of USD 780 million to build new lines for Chennai’s metro rail and improve the network’s connectivity with bus and feeder services. The project will construct 10.1 km of an elevated section, nine metro stations, 10 km of the underground section among others. The stations will be disaster– and climate–resilient and responsive to the needs of the elderly, women, children, and the differently abled.

5. Which state/UT is the host of 9th World Ayurveda Congress and Arogya Expo 2022?

A. Gujarat

B. Goa

C. Telangana

D. Bihar

Answer & Explanation

Answer: B. Goa

  • The 9th World Ayurveda Congress (WAC) and Arogya Expo 2022was inaugurated today at Panaji, Goa. It aims to showcase the efficacy of AYUSH systems of medicine at Global level. The third edition of the ‘Ayushman’ comic book series was also released on this occasion.  A MoU was signed between All India Institute of Ayurveda (AIIA) and Rosenberg’s European Academy of Ayurveda, Germany for advanced studies in traditional Indian medicine systems.

6. Who has been appointed as the new chairman of the All-India Council for Technical Education (AICTE) (in 2022)?

A. T G Sitharam

B. Manoj Soni

C. Nidhi Chibber

D. Vineet Joshi

Answer & Explanation

Answer: A. T G Sitharam

  • IIT Guwahati Director Professor TG Sitharam has been appointed as the new chairman of the All–India Council for Technical Education (AICTE). He will take the charge from UGC Chairman M Jagadesh Kumar and hold the position for a period of three years. Professor TG Sitharam is also a member of the Science and Engineering Research Board (SERB), and a senior professor in the civil engineering department of IISc Bangalore.

7. Who is the world’s most popular leader as per Global Leader Approval Ratings released by US–based Morning Consult?

A. Joe Biden

B. Narendra Modi

C. M K Stalin

D. Vladimir Putin

Answer & Explanation

Answer: B. Narendra Modi

  • Indian Prime Minister Narendra Modi remains the world’s most popular leader with an approval rating of 77 percent. This was revealed in a Global Leader Approval Ratings released by a US based consulting firm Morning Consult.  Mexico President Andrés Manuel López Obrador stands at second position followed by Australian Prime Minister Anthony Albanese.

8. India has proposed to transfer which species from Appendix–II to Appendix–I of CITES Convention?

A. Leith’s soft–shelled turtle

B. Burmese peacock soft–shell turtle

C. Indian soft–shell turtle

D. Burmese narrow–headed soft–shell turtle

Answer & Explanation

Answer: A. Leith’s soft–shelled turtle

  • India has proposed for transferring Leith’s Softshell Turtle (Nilssonia leithi) from Appendix II to Appendix I of the Convention on International Trade in Endangered Species of wild fauna and flora (CITES). The proposal has been adopted by the Conference of Parties (CoP) to CITES in its 19th Meeting at Panama.  Leith’s Softshell Turtle is a large fresh water soft–shelled turtle which is endemic to peninsular India.

9. Who is the first football player to score goals in 5 different World Cups?

A. Lionel Messi

B. Cristiano Ronaldo

C. Neymar

D. Kylian Mbappe

Answer & Explanation

Answer: B. Cristiano Ronaldo

  • Portuguese footballer Cristiano Ronaldo becomes first player to score goals in 5 different World Cup tournaments. The former Manchester United player reached this milestone after he converted a penalty in the 65th minute against Ghana in their Group H match.

10. Which country launched the ‘RH–200’ Sounding Rocket?

A. Russia

B. India

C. Israel

D. Iran

Answer & Explanation

Answer: B. India

  • The Indian Space Research Organisation (ISRO) conducted 200th Consecutive Launch of ‘RH–200’ Sounding Rocket. Indian sounding rockets are used as tools for the scientific community for carrying out experiments on meteorology, astronomy and similar branches of space physics.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!