TnpscTnpsc Current Affairs

10th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

10th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 10th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அடல் வயோ அபியுதயா யோஜனா என்ற திட்டத்தைச் செயல்படுத் -துகிற மத்திய அமைச்சகம் எது?

அ) பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ) சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம் 

இ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ) சிறுபான்மை விவகார அமைச்சகம்

  • சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகமானது அடல் வயோ அபியுதயா யோஜனா (AVYAY) என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களின் நலனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா, SACRED, IPSrC, SAPSrC போன்ற பல கூறுகளைக் கொண்டுள்ளது.

2. COVID சமயத்தில் தடையற்ற விமானப் பயணத்திற்காக சிவில் வான் போக்குவரத்து அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இணைய தளத்தின் பெயர் என்ன?

அ) ஏர் சுவிதா 

ஆ) பாரத் டிராவல்

இ) பிரதான் மந்திரி ஏவியேஷன்

ஈ) வெல்கம் இந்தியா

  • COVID காலத்தின்போது தடையற்ற விமானப் பயணத்திற்காக சிவில் வான் போக்குவரத்து அமைச்சகம் 2020 ஆகஸ்டில் ‘ஏர் சுவிதா’ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. அண்மையில், ஓமைக்ரான் அச்சுறுத்தலை அடுத்து இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு வசதியளிக்கும் நோக்கில், ‘ஏர் சுவிதா’ தளத்தில் தொடர்பில்லா சுய அறிவிப்பை விமானப் போக்குவரத்து அமைச்சகமும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமும் கட்டாயமாக்கியுள்ளன. இந்தியாவிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் தொந்தரவு இல்லாத, வரிசை இல்லாத மற்றும் வசதியான விமானப் பயணத்தை வழங்குவதை ஏர் சுவிதாவின் அமலாக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. அதன் ‘Laser Communications Relay Demonstration (LCRD)’ஐ அறிமுகப்படுத்திய விண்வெளி நிறுவனம் எது?

அ) இஸ்ரோ

ஆ) NASA 

இ) புளூ ஆர்ஜின்

ஈ) ஸ்பேஸ் எக்ஸ்

  • டிசம்பர் 7 அன்று, NASA தனது புதிய லேசர் கம்யூனிகேஷன்ஸ் ரிலே டெமான்ஸ்ட்ரேஷனை அறிமுகப்படுத்தியது. கேப் கனாவெரல் விண் வெளிப்படை நிலையத்திலிருந்து அறிமுகப்படுத்தபட்ட இது NASA’இன் முதல் லேசர் தகவல் தொடர்பு அமைப்பாகும்.
  • LCRD ஆனது விண்வெளியில் ஒளியியல் தொடர்பைச் பரிசோதிக்க NASA’விற்கு உதவும். தற்போது, பெரும்பாலான NASA விண்கலங்கள் தரவுகளை அனுப்புவதற்கு ரேடியோ அலைவரிசை தொடர்புகளைப் பயன்படுத்துகின்றன. LCRD இரண்டு ஒளிசார் முனையங்களைக் கொண்டுள்ளது. ஒன்று பயனர் விண்கலத்திலிருந்து தரவைப் பெறுவது, மற்றொன்று தரை நிலையங்களுக்கு தரவை அனுப்புவது ஆகும்.

4. சர்வதேச ‘IDEA’இன் ஆலோசகர் குழுவில் சேர அழைக்கப்பட்ட இந்திய அதிகாரி யார்?

அ) சுனில் அரோரா 

ஆ) P ராவத்

இ) A K ஜோதி

ஈ) நசிம் ஜைதி

  • மக்களாட்சி மற்றும் தேர்தல் உதவிக்கான பன்னாட்டு நிறுவனத்தின் ஆலோசகர் குழுவில் சேர முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சர்வதேச ‘IDEA’ என்றும் அழைக்கப்படுகிறது. இது நிலையான ஜனநாயகத்தை ஆதரிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
  • கடந்த 1995’இல் நிறுவப்பட்ட இது, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். சர்வதேச ‘IDEA’இல் தற்போது 34 உறுப்புநாடுகள் உள்ளன.

5. ‘உலக மலேரியா அறிக்கை – 2021’இன்படி, கடந்த 2020’இல் மதிப்பிடப்பட்ட மலேரியா இறப்புகளின் எண்ணிக்கை என்ன?

அ) 1.27 இலட்சம்

ஆ) 2.27 இலட்சம்

இ) 4.27 இலட்சம்

ஈ) 6.27 இலட்சம் 

  • உலக மலேரியா அறிக்கை 2021 உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டில் மலேரியாவைக் கையாளுவதற்கான உலகளாவிய முயற்சிகள் COVID -19 காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டன. கடந்த 2020’இல் 627,000 மலேரியா இறப்புகள் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2019’ஐவிட 12% அதிகமாகும். விரைவான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், உலகம் (குறிப்பாக ஆப்பிரிக்காவில்) இந்நோயின் உடனடி பரவலைக் காணும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

6. ‘உணவு & உழவின் நிலை (SOFA) 2021’ என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) உணவு & உழவு அமைப்பு 

ஆ) நபார்டு

இ) NITI ஆயோக்

ஈ) உலக வங்கி

  • உணவு & உழவு அமைப்பானது ‘உணவு மற்றும் வேளாண்மை நிலை – 2021’ என்ற அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, முக்கியமான போக்குவரத்து இணைப்புகளுக்கு இடையூறு ஏற்பட்டால், 845 மில்லியன் மக்களுக்கான உணவு செலவுகள் அதிகரிக்கும். உணவுப்பாதுகாப்பை பூர்த்தி செய்ய வேளாண் உணவு முறைகளை நெகிழ வைக்க வேண்டியதன் அவசியத்தையும் இது எடுத்துக்காட்டியது.

7. Y-8Q நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானத்தை காட்சிப்படுத்திய நாடு எது?

அ) இஸ்ரேல்

ஆ) ஐக்கிய அரபு அமீரகம்

இ) சீனா 

ஈ) ரஷ்யா

  • சீனா அண்மையில் Y-8Q நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானத்தை காட்சிப்படுத்தியது. மக்கள் விடுதலை இராணுவக் (PLA) கடற்படையின் Y-8Q விமானம் KQ-200 என்றும் அழைக்கப்படுகிறது.
  • தைவானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஆழமான ஈடுபாட்டின் மத்தியில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. குறைந்தபட்சம் ஐந்து சீன போர் விமானங்கள் அதன் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் (AIDZ) நுழைந்ததாக தைவான் தெரிவித்துள்ளது.

8. இந்திய வான் படையின் இராணுவ விமானங்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள ‘பயோ-ஜெட்’ எரிபொருளை உருவாக்கிய நிறுவனம் எது?

அ) இந்திய பெட்ரோலிய நிறுவனம் 

ஆ) இந்திய மண் & நீர் பாதுகாப்பு நிறுவனம்

இ) இந்திய தொலையுணரி நிறுவனம்

ஈ) பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிட்

  • இந்திய பெட்ரோலிய நிறுவனம் (CSIR-IIP), அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் ஓர் அங்கமான இவ்வாய்வகமானது ‘பயோ-ஜெட்’ எரிபொருளை உருவாக்கியுள்ளது. இந்திய வான்படையின் இராணுவ விமானங்களில் பயன்படுத்துவதற்கு இராணுவ விமானத்தகுதி மற்றும் சான்றிதழுக்கான மையத்தால் (CEMILAC) இது முறையாக அங்கீகரிக்க -ப்பட்டுள்ளது. இது DRDO’இன்கீழுள்ள ஓர் ஒழுங்குமுறை அமைப்பாகும்.

9. 2021 – இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற ‘ஹுனார் ஹாத்’தை ஏற்பாடு செய்த அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் 

இ) பாதுகாப்பு அமைச்சகம்

ஈ) திறன் மேம்பாட்டு அமைச்சகம்

  • ‘ஹுனார் ஹாத்’ என்பது இந்திய கைவினைஞர்களின் நிபுணத்துவத் -தை வெளிப்படுத்துவதற்கும், “பாரம்பரிய கலைகள் / கைவினைகளுக் -கான திறன்களை மேம்படுத்துதல் மற்றும் மேம்பாட்டுக்கான பயிற்சி (USTAAD)” என்பதன்கீழ் வேலைவாய்ப்புகளை ஆராய்வதற்கும் மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தால் நடத்தப்படும் ஒரு தளமாகும்.
  • சமீபத்தில், தில்லியில் 33ஆவது ‘ஹுனார் ஹாத்’ ஏற்பாடு செய்யப்பட்டது. அது, 2021ஆம் ஆண்டின் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் வெள்ளிப்பதக்கம் வென்றது.

10. 2021 டிசம்பர்.10 முதல் இந்திய சர்வதேச அறிவியல் விழா எங்கு நடைபெறவுள்ளது?

அ) மும்பை

ஆ) லக்னோ

இ) வாரணாசி

ஈ) கோவா 

  • 2021 – இந்திய சர்வதேச அறிவியல் விழாவானது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமான விஞ்ஞான பாரதி ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டு, 2021 டிசம்பர் 10 முதல் 4 நாட்களுக்கு கோவாவில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான (2021) விழாவில் அறிவியல் திரைப்பட விழா, அறிவியல் இலக்கிய விழா, பொறியியல் மாணவர் விழா, கிராமிய விழா போன்றவை இடம்பெறும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அணைப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றியதன் மூலம் அணைகள் பாராமரிப்புக்கு உலக வங்கியின் நிதியுதவி கிடைக்கும்

அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றியதன் மூலம், உலக வங்கி மூலம் நிதியுதவி கிடைக்கும். இதன் மூலம் அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் (டிஆர்ஐபி) கீழ் தமிழகம் உள்பட நாட்டிலுள்ள அணைகளில் புரனமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

மேலும், இந்த புரனமைப்பில் நீரியல் பாதுகாப்பு, ஹைட்ரோ-மெக்கானிக் -கல் நடவடிக்கைகள், நீர்க்கசிவு குறைப்பு, கட்டமைப்பு நிலைத் தன்மை -யை மேம்படுத்துதல் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதில் அணைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கு புதிய கட்டுமானப் பொருள்கள் வழங்கப்படுவதோடு அணைகளைக் கண்காணிக்க பல நவீன கருவிகளும் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கேள்வி நேரத்தில் தெரிவித்தார்.

மக்களவை பாஜக உறுப்பினர் ஹீனா காவித் உள்ளிட்டோர் நதிகள் இணைப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் ஷெகாவத் பதிலளித்த போது நீலகிரி மக்களவைத் திமுக உறுப்பினர் ஆ ராசா துணைக் கேள்வி எழுப்பினர்.

திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்ற அணைப்பாதுகாப்பு மசோதா இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டது. இது தவறோ, சரியோ, ஆனால் மசோதா நிறைவேற்றத்தின் போது நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் முக்கியமான விஷயம் ஒன்றை குறிப்பிட்டாா். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி அளிக்கும் என்றார். இதில் தமிழகத்திற்கு எவ்வளவு கிடைக்கும் எந்தெந்த தமிழக அணைகளுக்குத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்று ராசா கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசுகையில், ‘அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் முதற் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. அணைகளை புரனமைக்க ஒத்துக்கொண்ட மாநிலங்களில் உள்ள அணைகளில் இரண்டாம், மூன்றாம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு உலக வங்கியின் நிதியுதவி கிடைக்கும். இந்த நிதியுதவி மூலம் நாட்டில் உள்ள 700 அணைகளுக்கு `10,000 கோடி வரை செலவிட திட்டமிடப்ப -ட்டுள்ளது என்பது ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அணைகளும் இடம்பெற்றுள்ளன. இது குறித்த விவரங்கள் உடனடியாக இல்லை. நிச்சியமாக பின்னர் தெரிவிக்கப்படும்’ என்றார் அமைச்சர்.

2. தமிழகத்தில் 53 சதவீத திடக்கழிவுகள் மறுசுழற்சி

தமிழகத்தில் 53% திடக்கழிவுகள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுவதாக மக்களவையில் நகர்ப்புற வீட்டு வசதித்துறை இணையமைச்சர் கெளசல் கிஷோர் எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

இது தொடர்பான பதிலில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நகர்ப்புறங்களின் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்குவது, திடக்கழிவுகளை மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்படுவது ஆகிய நோக்கத்திற்காக 2014 அக்டோபர்.2ஆம் தேதி தொடங்கப்பட்டது தூய்மை இந்தியா நகர்ப்புறத் திட்டம். இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 4,372 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 4,371 (மேற்கு வங்க மாநிலம் புருலியா தவிர) திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத அமைப்புகளாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு 18 சதவீதமாக இருந்த நகர்ப்புற திடக்கழிவு மறுசுழற்சி தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. சண்டிகர், சத்தீஸ்கர், ஹிமாசலப்பிரதேசம், ஆகிய மாநிலங்களில் இது 100 சதவீதமாக உள்ளது.

3. நகர்ப்புற வசதிகளை மேம்படுத்த `2,645 கோடி கடன்: ஆசிய வங்கி ஒப்புதல்

நகர்ப்புற வசதிகளை மேம்படுத்த உதவியாக இந்தியாவுக்கு `2,644.85 கோடி மதிப்பிலான கடனை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் நகர்ப்புற வசதிகளை மேம்படுத்த ஏதுவாக 35 கோடி டாலர் (`2,645 கோடி) கடன் உதவி அளிக்கும் திட்டத்துக்கு ஆசிய வங்கி அனுமதியை வழங்கியுள்ளது. குழாய்மூலம் குடிநீர் விநியோகிப்பது, சுகாதார கட்டமைப்புகளை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவது உள்ளிட்ட நகர்ப்புறங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கொள்கைகளுக்கு இந்தக் கடன் உதவிகரமாக இருக்கும்.

மேலும், புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள், ஏழைகள் உள்ளிட்ட அனைவருக்கும் வீட்டு வசதியை ஏற்படுத்தி தருவது, நகர்ப்புற மாறத்துக்கான அம்ருத் 2.0 ஆகிய திட்டங்களை செயல்படுத்துவதும் இக்கடனுதவி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கியோர், குறைந்த வருமான பிரிவினர் உள்ளிட்ட நகர்ப்புற ஏழைகள் இந்தத் திட்டத்தால் பெரிதும் பயனடைவர்.

இந்தியாவின் நகா்ப்புற மக்கள் தொகை தற்போது 46 கோடியாக உள்ளது. இது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். ஆண்டு வளர்ச்சி விகிதம் 2 சதவீதம் என்பதன் அடிப்படையில் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய நகர்ப்புற மக்கள்தொகை 60 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஏடிபி தெரிவித்துள்ளது.

4. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் 48,000 பேர் உயிரிழப்பு:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 48,000 பேர் உயிரிழந்ததாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த தகவல்களை ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.

விரைவு சாலைகள் உள்பட தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்துள்ள சாலை விபத்துகளுக்கான பல்வேறு காரணங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். கேள்வி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், வாகனங்களின் வடிவமைப்பு, சாலை அமைக்கப்பட்ட பொறியியல் காரணங்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, போதை பொருள் உட்கொண்டது, அதிவேகம், தவறான பக்கத்தில் வாகனத்தை ஓட்டி சென்றது, சிவப்பு விளக்கை எரியவிட்டதில் ஏற்பட்ட தவறு உள்ளிட்ட காரணங்களால் சாலை விபத்துகள் நேரிட்டதாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.

2019ம் ஆண்டு விரைவு சாலைகள் உள்பட, தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 53,872 பேர் மரணமடைந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். விபத்துகளை தவிர்க்கவும், சாலை பாதுகாப்புகளை மேம்படுத்தவும், வாகனங்கள் வடிவமைப்பு முதல் பல்வேறு கட்டங்களில் தணிக்கை செய்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கப்பட இருப்பதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். இதற்காக தனியார் வல்லுனர்களின் உதவி நாடப்பட்டுள்ளதாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.

5. சுயசரிதையை வெளியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரைச் சேர்ந்த ரஞ்சன் கோகோய், உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த 2018, அக்.3ஆம் தேதி முதல் 2019, நவ.17ஆம் தேதி வரை பதவி வகித்தார். பதவிக்காலம் முடிவதற்கு சில நாள்களுக்கு முன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி நில வழக்கில் தீர்ப்பளித்தார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இவர் ‘ஜஸ்டிஸ் ஃபார் தி ஜட்ஜ்’ என்ற தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார்.

6. காமன்வெல்த் பளுதூக்குதல்: ஜிலி தலபெஹராவுக்கு வெள்ளி

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 49 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜிலி தலபெஹரா வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 73 கிலோ, கிளீன் & ஜெர்க் பிரிவில் 94 கிலோ என மொத்தமாக 167 கிலோ எடையைத் தூக்கி 2ஆம் இடம்பிடித்தார். ஜிலி ஒரு கிலோ எடை வித்தியாசத்தில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார். அவரது பிரிவில் நைஜீரிய வீராங்கனை பீட்டர் ஸ்டெல்லா கிங்ஸ்லி 168 கிலோ (72+96) எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தார்.

முன்னதாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சாய்கோம் மீராபாய் சானு இந்த எடைப்பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க இருந்தார். எனினும், இந்தப்போட்டியையொட்டி உலக சாம்பிய -ன்ஷிப்பும் நடைபெறுவதால், அதில் பங்கேற்பதற்காக இந்தப் போட்டியிலிருந்து சானு விலகினார். இதையடுத்து அந்த எடைப் பிரிவில் ஜிலி களம் கண்டு வெள்ளி வென்றுள்ளார்.

இந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பானது, அடுத்த ஆண்டு பிர்மிங்ஹாம் நகரில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்கு தகுதிபெறுவதற்கான போட்டியாக உள்ளது. இந்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வோர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறுவார்கள். இதர போட்டியாளர்கள் காமன்வெல்த் ரேங்கிங் அடிப்படையில் தகுதிபெறுவர். காமன்வெல்த் ரேங்கிங்கில் தற்போது முதலிடத்தில் இருக்கும் சானு, காமன்வெல்த் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

1. Which Union Ministry is implementing the umbrella scheme named ‘Atal Vayo Abhyudaya Yojana (AVYAY)?

A) Ministry of Women and Child Development

B) Ministry of Social Justice and Empowerment

C) Ministry of Rural Development

D) Ministry of Minority Affairs

  • The Ministry of Social Justice and Empowerment is implementing an Umbrella scheme namely Atal Vayo Abhyudaya Yojana (AVYAY). The scheme aims for welfare of Senior Citizens across the country. This has several components, namely Rashtriya Vayoshri Yojana (RVY), SACRED, IPSrC, SAPSrC among others.

2. What is the name of the portal launched by Ministry of Civil Aviation for seamless air travel during COVID?

A) Air Suvidha 

B) Bharat Travel

C) Pradhan Mantri Aviation

D) Welcome India

  • Ministry of Civil Aviation launched the ‘Air Suvidha’ portal in August 2020 for seamless air travel during Covid pandemic. Recently, in the wake of the Omicron threat, Ministry of Civil Aviation and Ministry of Health & Family Welfare mandated contactless self–declaration at Air Suvidha portal. It aims to provide hassle–free air travel to all international passengers arriving in India.

3. Which space agency launched its ‘Laser Communications Relay Demonstration (LCRD)’?

A) ISRO

B) NASA 

C) Blue Origin

D) SpaceX

  • On December 7, NASA launched its new Laser Communications Relay Demonstration (LCRD). It is the agency’s first–ever laser communications system from Cape Canaveral Space Force Station. The LCRD will help the NASA to test optical communication in space. At present, most NASA spacecraft use radio frequency communications to send data. LCRD has two optical terminals – one to receive data from a user spacecraft, and the other to transmit data to ground stations.

4. Which Indian bureaucrat was invited to join the board of advisers of International ‘IDEA’?

A) Sunil Arora 

B) P Rawat

C) A K Joti

D) Nasim Zaidi

  • Former Chief Election Commissioner (CEC) Sunil Arora has been invited to join the board of advisers at the International Institute for Democracy and Electoral Assistance.
  • The institute is also known as International IDEA which has a mission to support sustainable democracy. Established in 1995, International IDEA is an intergovernmental organisation based in Stockholm, Sweden. International IDEA currently has 34 member countries.

5. As per the ‘World Malaria Report 2021’, what is the number of estimated malaria deaths in 2020?

A) 1.27 lakhs

B) 2.27 lakhs

C) 4.27 lakhs

D) 6.27 lakhs 

  • World Malaria Report 2021 has been released by the World Health Organization (WHO). As per the report, global efforts to tackle malaria suffered due to COVID–19 in 2020. There were estimated 627,000 malaria deaths in 2020, which is an increase of 12 per cent over 2019.
  • The report also warns that if expeditious action is not taken, the world is in the danger of seeing an immediate resurgence of the disease, especially in Africa.

6. Which institution released ‘The State of Food and Agriculture (SOFA) 2021’ report?

A) Food and Agriculture Organization 

B) NABARD

C) NITI Aayog

D) World Bank

  • The Food and Agriculture Organization (FAO) released ‘The State of Food and Agriculture (SOFA) 2021’ report. As per the report, food costs could increase for up to 845 million people if a disruption to critical transport links occurs. It also highlighted the need to make agri–food systems resilient to address food security.

7. Which country showcased the Y–8Q anti–submarine warfare aircraft?

A) Israel

B) UAE

C) China 

D) Russia

  • China recently showcased Y–8Q anti–submarine warfare aircraft. The People Liberation Army (PLA) Navy’s Y–8Q aircraft is also known as KQ–200. This was launched amidst the deepening engagement between Taiwan and the US. Taiwan claimed that at least 5 Chinese warplanes had entered its Air Defense Identification Zone (AIDZ).

8. Which institution developed the ‘Bio–jet fuel’, which has been approved for use on military aircraft of IAF?

A) Indian Institute of Petroleum 

B) Indian Institute of Soil and Water Conservation

C) Indian Institute of Remote Sensing

D) Bharat Electronics Limited

  • The Indian Institute of Petroleum (CSIR–IIP), a constituent laboratory of the Council of Scientific and Industrial Research developed the ‘Bio–jet fuel’. It has been formally approved for use on military aircraft of the Indian Air Force (IAF), Centre for Military Airworthiness and Certification (CEMILAC). It is a regulatory body under DRDO.

9. ‘Hunar Haat’ is organized by which ministry, has received silver medal at the India International Trade Fair, 2021?

A) Ministry of Home Affairs

B) Ministry of Minority Affairs 

C) Ministry of Defence

D) Ministry of Skill Development

  • The ‘Hunar Haat’ is a platform provided by the Union Ministry of Minority Affairs to showcase the expertise of artisans/craftsmen of India and explore the opportunities of employment under “Upgrading the Skills and Training in Traditional Arts/Crafts for Development (USTAAD)”. Recently, the 33rd Hunar Haat was organized at Delhi, which received silver medal at the India International Trade Fair, 2021.

10. Where is the India International Science Festival to be held from December 10th, 2021?

A) Mumbai

B) Lucknow

C) Varanasi

D) Goa 

  • India International Science Festival IISF 2021 is being organized jointly by Ministry of Science & Technology, Ministry of Earth Sciences, and NGO Vijnana Bharati (VIBHA) and would be held from 10th December 2021, for 4 days in Goa. This year’s festival would contain Science Film Festival, Science Literature Festival, Engineering Students Festival, Village Festival etc.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!