Tnpsc

10th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

10th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 10th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

10th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற, அஸ்பெர்ஜில்லோசிஸ் என்பது ஒரு ______நோய்?

அ) வைரல்

ஆ) பாக்டீரியா

இ) பூஞ்சை

ஈ) மேற்கண்ட எதுவும் இல்லை

  • அஸ்பெர்ஜிலஸ் பூஞ்சையால் ஏற்படும் தொற்று, ஒவ்வாமை அல்லது பூஞ்சை வளர்ச்சிதான் அஸ்பெர்ஜில்லோசிஸ். சமீபத்தில், இந்தியாவில் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பாதிப்புகள் கடுமையாக அதிகரித்த பின்னர், அஸ்பெர்ஜில்லோசிஸ் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
  • COVID-19 நோயாளிகளில் பொதுவாகக் காணப்படும் வலுவிழந்த நோய் எதிர்ப்பு அமைப்புகள் (அ) நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள் இத்தொற்றுநோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

2. முதலமைச்சரின் சிசு சேவா திட்டத்தை தொடங்கிய மாநிலம் எது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) அஸ்ஸாம்

இ) பீகார்

ஈ) சத்தீஸ்கர்

  • COVID-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்கா -க முதலமைச்சரின் சிஷு சேவா திட்டத்தை அஸ்ஸாம் அரசு சமீபத்தில் அறிவித்தது. பெற்றோரை இழந்த ஆனால் அவர்களின் குடும்ப உறுப்பின -ர்களைக்கொண்ட குழந்தைகளுக்கு மாதத்திற்கு மாத உதவித்தொகையாக `3,500 வழங்கப்படும். குடும்ப உறுப்பினர்களற்ற குழந்தைகட்கு இலவச குடியிருப்பும் கல்வி வசதிகளும் வழங்கப்படும்.

3. இந்தியாவின் முதல் நகர கழிவுநீர் கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கர்நாடகா

இ) மகாராஷ்டிரா

ஈ) உத்தர பிரதேசம்

  • கர்நாடக மாநில அரசானது பெங்களூரில் நகர கழிவுநீர் கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆரம்ப கட்டத்தில் கொரோனா வைரஸைக் கண்காணிக்கும் நோக்கத்தினைக் கொண்டுள்ளது.
  • கர்நாடகாவின் இந்த முன்னெடுப்பை USAID (United States Agency for International Development) மற்றும் COVIDactionCollab (CAC) ஆகியவை ஆதரிக்கின்றன. CAC ஆனது தூய்மைத்தொழிலாளர்களுக்கு மாதிரிகள் சேகரிப்பதற்கும் அவற்றை ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்வதற்கும் பயிற்சியளிப்பதன்மூலம் மாநிலத்திற்கு உதவுகிறது.

4. கேரளாவைச்சார்ந்த தஸ்னீம் அஸ்லாம், பின்வரும் எந்நாட்டுக்கு விதிவிலக்கான மாணவர் பிரிவில், ‘தங்க விசா’வைப் பெற்றுள்ளார்?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) ஐக்கிய அரபு அமீரகம்

இ) ஜப்பான்

ஈ) ஆஸ்திரேலியா

  • கேரளாவைச் சார்ந்த இந்திய மாணவர் தஸ்னீம் அஸ்லாம், ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து விதிவிலக்கான மாணவர் பிரிவின்கீழ் பத்தாண்டுக்கான ‘தங்க விசா’வைப் பெற்றுள்ளார். 2031ஆம் ஆண்டு வரை அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார். இந்த விசா, மிகவும் புகழ்பெற்ற கல்வியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

5. சமீப செய்திகளில் இடம்பெற்ற, “கடற்கூழ்” என்பது எந்த நாட்டின் கடற்கரையில் குவிந்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது?

அ) இந்தியா

ஆ) சிங்கப்பூர்

இ) துருக்கி

ஈ) ஜப்பான்

  • துருக்கி கடற்கரையில் கடற்கோழை அல்லது கூழ் குவிந்துவருவதாக கூறப்படுகிறது. கடற்கூழ் என்பது தடிமனான ஜெல்லிபோன்ற சேறாகும். இது அலைதாவரம் எனப்படும் நுண்தாவரங்களின் திடீர் அதீத இனப் பெருக்கத்தால் உருவாகிறது. காலநிலைமாற்றங்காரணமாக கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதே இவ்விளைவுக்கு வழிவகுத்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதீத மீன்பிடித்தலும் இதற்கு மூல காரணமாக இருக்கும் எனச் சிலர் கருதுகிறார்கள்.

6. “அகங்க்ஷா” என்ற பெயரில் இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?

அ) கர்நாடகா

ஆ) ஒடிஸா

இ) மத்திய பிரதேசம்

ஈ) ஹரியானா

  • கர்நாடக மாநிலத்தின் அனைத்து பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள்குறித்த விவரங்களை வழங்கும் “அகங்சஷா” என்ற பெயரிலான வலைத்தளத்தை கர்நாடக மாநில முதலமைச்சர் எடியுரப்பா தொடங்கினார். இந்த வலைத்தளம் மாநில அரசு அதிகாரிகள், பெரு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு உதவும்.
  • சமூக பொறுப்புணர்வு நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த இது முயற்சி செய்கிறது.

7. ஈகிள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) ஐக்கிய அரபு அமீரகம்

இ) ஐக்கியப் பேரரசு

ஈ) சிரியா

  • அமெரிக்க சட்டமன்றத்தில், “Ensuring American Global Leadership and Engagement” அல்லது EAGLE சட்டம் என்ற பெயரிலான மசோதா ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இம்மசோதா சீனா முன்வைக்கும் கொள்கை சவால்களுக்கு எதிர்மாறாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க உற்பத்தி, வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக, அதிகப்படியான முதலீட்டை இம்மசோ -தா எதிர்நோக்குகிறது. தைவான் & ஹாங்காங்கில் அமெரிக்காவின் தலையீட்டை அதிகரிக்கவும் இது எண்ணம் கொண்டுள்ளது.

8. ஜெர்மனிக்கும் நார்வேக்கும் இடையிலான கடலுக்கடியில் உள்ள மின்வட திட்டத்தின் பெயர் என்ன?

அ) GermanLink

ஆ) NordLink

இ) NorwayLink

ஈ) GeNorLink

  • ஜெர்மனியும் நார்வேயும் இருநாடுகளுக்கிடையில், 623 கிமீ கடலுக்கடியில் உள்ள மின்வடத்தின் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. இந்த திட்டம் ‘நார்ட்லிங்க்’ என அழைக்கப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையில் பசுமை ஆற்றலை பரிமாறிக்கொள்ளும் நோக்கங்கொண்டது இது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற $2.2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவாகியுள்ளது. இது பசுமை ஆற்றலுக்கு மாறுவதற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.

9. COVID துயரத்தைத் தணிக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்திய பொதுத்துறை வங்கிகள், பின்வரும் எந்த அளவுவரை பிணையற்ற கடன்களை தனிநபர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளன?

அ) `1 இலட்சம்

ஆ) `2 இலட்சம்

இ) `5 இலட்சம்

ஈ) `25 இலட்சம்

  • COVID-19 தொற்றுநோயால் ஏற்படும் பண ரீதியான சிக்கல்களைத் தணிக்கும் ஒருநடவடிக்கையாக, இந்திய பொதுத்துறை வங்கிகள் (PSB), தனிநபர்களுக்கு, பிணையற்ற கடன்களின் வடிவில் `5 இலட்சம் வரை நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.
  • தடுப்பூசி உற்பத்தியாளர்கள், மருத்துவமனைகள் / மருந்தகங்கள், நோயியல் ஆய்வகங்கள் போன்றவற்றுக்கு நிதியுதவி வழங்க PSB’கள் அறிமுகப்படுத்திய 3 புதிய கடன் தயாரிப்புகளில் இது ஒன்றாகும்.

10. தொலைகடல் ரோந்துக்கப்பலான ‘சஜாக்’, பணியில் சேர்க்கப்பட் -டுள்ள ஆயுதப்படை எது?

அ) இந்திய கடலோர காவற்படை

ஆ) இந்திய கடற்படை

இ) இந்திய இராணுவம்

ஈ) CRPF

  • தொலைகடல் ரோந்துக்கப்பலான ‘ICG சஜாக்’, இந்திய கடலோர காவற்ப டையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாளால் பணியில் சேர்க்கப்பட்டது. இந்தக் கப்பல், கோவா கப்பல் கட்டுந்தளத்தில் கடலோர காவற்படைக்காக பிரத்தியேகமாக கட்டப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படையானது தற்போது 160 கப்பல்களையும் 62 வானூ -ர்திகளையும் அதன் கடற்படையில் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. குறைந்தபட்ச ஆதார விலை நெல்லுக்கு `72 அதிகரிப்பு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

தில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு `72 உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2021-2022 நிதியாண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை `1,868-லிருந்து `72 அதிகரித்து `1,940-ஆக நிர்ணயிப்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கம்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு `2,150-லிருந்து `2,250-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2. கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு

கரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

கோவின் இணையதளத்தில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மாநில மொழிகள் சேர்க்கப்பட்ட நிலையில், தமிழ் மொழி சேர்க்கப்படமால் இருந்தது. இதையடுத்து மாநில மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழி சேர்க்கப்படாமல் இருந்ததற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில், கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு செய்யும் இணையத்தில் செம்மொழியான தமிழ் 12ஆவது மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது.

3. உலகத்தரவரிசை: முதல் 200 இடங்களில் 3 இந்திய பல்கலைகள்

QS உலக பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியலில் 3 இந்திய பல்கலைகள் முதல் 200 இடத்துக்குள்ளாக வந்துள்ளன. ஆராய்ச்சி பிரிவில், உலக அளவில் முதலாவது இடத்தில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் உள்ளது. உலக அளவில் உயர்கல்விகுறித்து ‘குவாக்கரெலி சைமண்ட்ஸ்’ (QS) என்ற அமைப்பு ஆய்வுசெய்து தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பு தனது 18ஆவது சர்வதேச பல்கலை தரவரிசைப்பட்டியலை வெளியிட்டது.

இதில் மும்பை ஐஐடி 177-ஆவது இடத்தையும், தில்லி ஐஐடி 185-ஆவது இடத்தையும், பெங்களூரு IISc 186-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

4. அந்தமான் கடல் பகுதியில் இந்தியா-தாய்லாந்து கடற்படைகள் கூட்டு ரோந்து

அந்தமான் கடல் பகுதியில் இந்தியா – தாய்லாந்து கடற்படைகளின் 3 நாள் கூட்டு ரோந்து நடவடிக்கை தொடங்கியது. இந்திய கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், பிராந்திய கடல் பகுதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து குவாட் கூட்டமைப்பை உருவாக்கி, இந்தியப்பெருங்கடல் பகுதியில் கூட்டு போர்ப்பயிற்சி உள்ளிட்ட பல்
-வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, சாகர் திட்டத்தின்கீழ் தாய்லாந்து நாட்டு கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்து பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கூட்டு ரோந்து நடவடிக்கை தொடங்கியது. இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித்தொடர்பாளர் விவேக் மத்வால் கூறியதாவது: இந்தியப்பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தக கப்பல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியா – தாய்லாந்து இரு நாட்டு கடற்படைகளும் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் அவற்றின் சர்வதேச கடல் எல்லையை ஒட்டியப் பகுதிகளில் ஆண்டுக்கு இரு முறை ‘CORPAT’ என்ற கூட்டு ரோந்துப்பணியை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 31ஆவது பகுதி கூட்டு ரோந்து அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியது.

இந்த 3 நாள்கள் கூட்டு ரோந்து நடவடிக்கையில் இந்திய கடற்படையின் ரோந்து கப்பலான INS சூர்யா, தாய்லாந்தின் கிரபி போர் கப்பல் ஆகியவை டோனியர் போர்விமானத்துடன் ரோந்து நடவடிக்கையில் பங்கேற்றுள்ளன. கடல்சார் சட்டவிரோத நடவடிக்கைகள், சட்டவிரோதமாக மீன்பிடித்த -ல், போதைப்பொருள் கடத்தல், கடல்சார் சுற்றுலா, கடற்கொள்ளை ஆகியவற்றைத் தடுப்பதே இந்த CORPAT கூட்டு ரோந்தின் முக்கிய நோக்கம் ஆகும். இது கடல்வழியாக சட்டவிரோதமான குடியேறுதல்களைத் தடுக்கவும், கடல்பகுதியில் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளுக்கும் இந்தத்திட்டம் பெரும் உதவியாக உள்ளது.

5. பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரித்தது எல் சால்வடார்

மெய்நிகர் நாணயமான பிட்காயினை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத் -தும் சட்டப்பூர்வ நாணயமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் அங்கீகரித்துள்ளது. இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் நாடு எல் சால்வடார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

6. தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க “ஆபரேஷன் விண்ட்”: காவல்துறை நடவடிக்கை

தமிழகத்தில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதை தடுக்கும் வகையில் “ஆபரேஷன் விண்ட்” (Operation Wind) என்ற பெயரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருப்பதால், கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக மாநிலத்தில் மலைப்பகுதிகள், வனப் பகுதிகளில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதேபோல கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி மாநிலங்களிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி கொண்டுவரப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதைத்தடுப்பதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கள்ளச்சாராயம் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 10581 என்ற தொலைபேசி எண்ணிலும், 9498410581 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என தமிழ்நாட்டின் காவல்துறையின் மதுவிலக்குப்பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

1. Aspergillosis, which was making news recently, is a …………… disease?

A) Viral

B) Bacteria

C) Fungi

D) None of the above

  • Aspergillosis is an infection, allergic reaction, or fungal growth caused by the Aspergillus fungus. Recently, after a sharp rise in black and white fungus cases in India, cases of aspergillosis infections have been reported. Those with weakened immune systems or lung diseases, which is common in COVID–19 patients, are said to be at high risk of infection.

2. Which state launched the Chief Minister’s Sishu Sewa Scheme?

A) Uttar Pradesh

B) Assam

C) Bihar

D) Chhattisgarh

  • The Assam government has recently announced Chief Minister’s Sishu Sewa Scheme for the welfare of those children who lost parents due to COVID–19. Monthly scholarship of Rs. 3,500 per month would be given to those children who lost their parents but have their extended family members. Free residential educational facilities would be provided to children who don’t have extended family members.

3. Which state has introduced India’s 1st city sewage surveillance system?

A) Tamil Nadu

B) Karnataka

C) Maharashtra

D) Uttar Pradesh

  • The state government of Karnataka has introduced a city sewage surveillance system in Bangalore. This is aimed to track coronavirus at an early stage. This effort of Karnataka is supported by USAID (United States Agency for International Development) and COVIDactionCollab (CAC). CAC is supporting the state by providing training to sanitation workers in collecting samples and analysing them in labs.

4. Tasneem Aslam from Kerala has received the Golden Visa in the exceptional student category, to which country?

A) USA

B) UAE

C) Japan

D) Australia

  • Tasneem Aslam, an Indian student belonging to Kerala has received United Arab Emirates (UAE) 10–year Golden Visa under the exceptional student category.
  • The student is permitted to stay in the UAE till the year 2031. This visa is one of the most coveted documents, which is given to prominent global personalities for merit and academic credentials.

5. “Sea snot” which is in the news, has been reported to accumulate in the coast of which country?

A) India

B) Singapore

C) Turkey

D) Japan

  • Marine mucilage or “sea snot” is reported to have accumulated along the coast of Turkey. The sea snot is a thick jelly–like layer of slime which is formed by the population explosion of microscopic plants called phytoplankton. Some Researchers believe that the increase in sea surface temperature due to climate change, has led to this effect while few others see over–fishing as the root cause.

6. Which state has launched the portal named “Akanksha”?

A) Karnataka

B) Odisha

C) Madhya Pradesh

D) Haryana

  • The Chief Minister of Karnataka B S Yediyurappa has launched a portal named Akanksha, which would provide details on all the Corporate Social Responsibility (CSR) activities in Karnataka.
  • This comprehensive portal would help the state Government officials, corporates and donors. It seeks to improve transparency in utilisation of CSR funds by the Government.

7. Which country has introduced a new legislation named as EAGLE Act?

A) USA

B) UAE

C) UK

D) Syria

  • A bill named “Ensuring American Global Leadership and Engagement” or EAGLE Act has been moved in the USA’s legislative body. This bill is seen as a counter to the policy challenges posed by China. The bill seeks for increased investment to promote US manufacturing, trade and seeks for increased US intervention to Taiwan and Hong Kong.

8. What is the name of the undersea power cable project between Germany and Norway?

A) GermanLink

B) NordLink

C) NorwayLink

D) GeNorLink

  • Germany and Norway have opened the operations of a 623–kilometer undersea power cable between the two countries. This project is called the NordLink and is aimed to exchange green energy between the two countries. The project has cost more than $2.2 billion and is seen as a major initiative to shift to green energy.

9. As a COVID–19 distress mitigating measure, PSBs in India announced to provide unsecured loans to individuals up to which amount?

A) Rs 1 lakh

B) Rs 2 lakh

C) Rs 5 lakh

D) Rs 25 lakh

  • As a measure to mitigate the distress caused due to COVID 19 pandemic, Public Sector Banks (PSBs) in India have announced to provide financial assistance to individuals in the form of unsecured loans up to a limit of Rs 5 lakh. This is a part of the three new loan products introduced by the PSBs to provide financial support to vaccine manufacturers, hospitals/dispensaries, pathology labs etc.

10. Offshore patrol vessel “Sajag” has been commissioned to which armed force?

A) Indian Coast Guard

B) Indian Navy

C) Indian Army

D) CRPF

  • Offshore patrol vessel ICG Sajag has been commissioned into the Indian Coast Guard, by the National Security Advisor to India (NSA) Ajit Doval. The ship was commissioned by NSA virtually. This vessel is constructed by the Goa Shipyard Limited exclusively for the Coast Guard. At present, the Indian Coast Guard has 160 ships and 62 aircraft in its fleet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!