TnpscTnpsc Current Affairs

10th & 11th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

10th & 11th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 10th & 11th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘SLINEX’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் பயிற்சியாகும்?

அ) ஓமன்

ஆ) சிங்கப்பூர்

இ) இலங்கை 

ஈ) ஜப்பான்

  • இந்தியா-இலங்கை இடையே 9ஆவது கூட்டு கடற்படை பயிற்சி 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முதற்கட்டப் பயிற்சி விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற உள்ளது. அதன்பின் இரண்டாம்கட்ட பயிற்சி வங்காள விரிகுடாவில் நடைபெறவுள்ளது.
  • இலங்கை கடற்படையின், ரோந்துக் கப்பலான LLNS சயூரலா, இந்திய கடற்படையின் INS கிர்ச் கப்பல் ஆகியவை பயிற்சியில் இடம்பெற்றுள்ளன. இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே புரிந்துணர்வு, அனுபவ பகிர்வு, கடல்சார் நடவடிக்கைகள், ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இக்கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுகிறது.

2. எந்த நகரத்தின் மெட்ரோ திட்டத்தை பிரதமர் சமீபத்தில் தொடங்கிவைத்தார்?

அ) மைசூரு

ஆ) புனே 

இ) கோயம்புத்தூர்

ஈ) திருவனந்தபுரம்

  • புனே மெட்ரோ திட்டம் இந்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் SPV (சிறப்பு நோக்கத்திற்கான ஊர்தி) MAHA மெட்ரோவால் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 32.2 கிமீட்டர் புனே மெட்ரோ இரயில் திட்டத்தில், 12 கிமீ தூரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மொத்தச் செலவு `11,400 கோடி.

3. 2022இல் இந்தியா குளோபல் போரம் நிகழ்வு நடக்கும் இடம் எது?

அ) சென்னை

ஆ) பெங்களூரு 

இ) வாரணாசி

ஈ) காந்தி நகர்

  • இந்தியா குளோபல் ஃபோரம் (IGF) நிகழ்ச்சி பெங்களூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதோடு, 30 யூனிகார்ன் நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளார். இந்நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி மற்றும் தொழிற்துறையைச் சேர்ந்த CEO-க்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்பார்கள்.

4. உளவு செயற்கைக்கோள் அமைப்பை அண்மையில் பரிசோதித்த நாடு எது?

அ) வட கொரியா 

ஆ) உக்ரைன்

இ) ரஷ்யா

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

  • வட கொரியாவின் பிராந்திய இராணுவ அதிகாரிகள் எறி கணை ஏவப்பட்டதாக அறிவித்ததை அடுத்து, உளவு செயற்கைக்கோள் அமைப்புகளுக்கான பரிசோதனையை நடத்தியதாக வடகொரியா கூறியது. இது கடந்த ஒரு வார காலத்தில் செயற்கைக்கோள் கருவிகளை பரிசோதிப்பத -ற்காக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது ஏவுதலாகும். மேலும் இந்த ஆண்டில் இது ஒன்பதாவது ஏவுதலாகும். இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடுங்கண்டனம் தெரிவித்துள்ளன.

5. ‘பள்ளி சுகாதார கிளினிக்குகளை’த் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) ஒடிஸா

ஆ) குஜராத்

இ) புது தில்லி 

ஈ) இராஜஸ்தான்

  • தில்லி அரசு சமீபத்தில் 20 அரசுப்பள்ளிகளில் தனிநபர் மருத்துவமனைகளைத் திறந்து வைத்துள்ளது. அவற்றை துணை முதலமைச்சரும், கல்வியமைச்சருமான மணீஷ் சிசோடியா திறந்து வைத்தார். இந்தக் கிளினிக்குகள் சிறார்களின் உடல் மற்றும் மனநலனை உறுதிசெய்வதற் -கான வழக்கமான சுகாதார பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும்.

6. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற ‘ஜரோக்கா’ என்பது எந்தத் துறைசார்ந்த கொண்டாட்டமாகும்?

அ) கலை மற்றும் கலாசாரம் 

ஆ) இலக்கியம்

இ) ஆயுஷ்

ஈ) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

  • மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் ஜவுளி அமைச்சகம் இணைந்து “ஜரோகா-இந்திய கைவினைப்பொருட்கள் / கைத்தறி, கலை மற்றும் கலாசாரத்தின் தொகுப்பு” ஆகியவற்றை ஏற்பாடு செய்கின்றன. ‘ஜரோக்கா’ என்பது பாரம்பரிய இந்திய கைவினைப்பொருட்கள், கைத்தறி & கலை மற்றும் கலாச்சாரத்தின் கொண்டாட்டமாகும்.
  • நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 16 இடங்களில் நடைபெறவுள்ளது. இந்தக் கொண்டாட்டத்தின்கீழ் முதல் நிகழ்வு மத்திய பிரதேசத்தின் போபாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘டிரெல்லிஸ் அமைப்பு’ எந்தத் துறையுடன் தொடர்புடையது?

அ) ஆட்டோமொபைல்

ஆ) வேளாண்மை 

இ) செயற்கை நுண்ணறிவு

ஈ) வங்கியியல்

  • நிலையான வேளாண்மையின் ஒருபகுதியாக, 20 தசம நிலத்தில் நான்கு தூண்கள், மூங்கில் கம்புகள் மற்றும் கயிறுகளை பயன்படுத்தி குறுக்குநெடுக்காக அடிக்கப்பட்ட ஒரு தட்டி அமைப்பு தயாரிக்கப்படுகிறது.
  • குறுக்குநெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி அமைப்பில் செடிகள் குறிப்பாக கொடிகள் செங்குத்தாக வளர்ந்ததால், தண்டுகள், பூக்கள் & பழங்கள் அழுகும் வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒடிஸாவின் பல பழங்குடி கிராமங்களில் இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட்டுள்ளது.

8. ‘கரேவாஸ்’ என்பது எந்த மாநிலத்தில் காணப்படும் வளமான வண்டல்மண் படிவுகளாம்?

அ) உத்தர பிரதேசம்

ஆ) மேற்கு வங்கம்

இ) ஜம்மு-காஷ்மீர் 

ஈ) பீகார்

  • காஷ்மீர் பள்ளத்தாக்கின் மிகவும் வளமான வண்டல்மண் படிவுகள் ‘கரேவாஸ்’ என்று அழைக்கப்படுகின்றன.
  • இந்தப்பீடபூமிகள் 13,000-18,000 மீட்டர் தடிமன்கொண்ட வண்டல்மண் மற்றும் மணற்கல் & மண்கல்போன்ற வண்டல் படிவுகளாகும். குங்குமப்பூ, பாதாம், ஆப்பிள் மற்றும் பல்வேறு பணப்பயிர்களை பயிரிடுவதற்கு ஏற்ற இடங்கள் இவை. வளர்ச்சி என்ற பெயரில் கரேவாக்கள் அழிக்கப்படுவதன் காரணமாக இது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது.

9. MSME அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ‘SAMARTH’ முன்னெடுப்பின் நோக்கம் என்ன?

அ) பெண்கள் தொழில்முனைவு 

ஆ) மதிப்புக்கூட்டல்

இ) சந்தைப்படுத்துதலுக்கான ஆதரவு

ஈ) GST-க்கான இணையதளம்

  • மத்திய MSME அமைச்சகமானது சமீபத்தில் SAMARTH – பெண்களுக்கான சிறப்பு தொழில்முனைவு ஊக்குவிப்பு இயக்கத்தை அறிமுகப்படுத்தியது.
  • SAMARTH’இன்கீழ், அமைச்சகத்தின் திறன்மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் ஏற்பாடு செய்யப்படும் இலவச திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் 20% இடங்கள், ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோருக்கு ஒதுக்கப்படும்.

10. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) அமெரிக்கா 

இ) சௌதி அரேபியா

ஈ) ஈரான்

  • அமெரிக்காவிற்கு அடுத்ததாக உலகில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா 2ஆவது பெரிய நாடாக உள்ளது. ரஷ்யா, நாளொன்றுக்கு 11 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது.
  • ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி பாதி (ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் பீப்பாய்கள்) – ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு பெலாரஸ் வழியாக டுருஷ்பா பைப்லைன் வழியாக ஐரோப்பாவிற்கு வருகிறது. அண்மையில் G7 நாடுகள், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு வரம்புகளை விதிக்க வேண்டும் என UK முன்மொழிந்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. முதலமைச்சர் மு கஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறையினர் மாநாடு இன்று தொடக்கம்

முதலமைச்சர் மு கஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது.

மாநிலம் முழுவதும் அரசின் திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்துவது குறித்தும், மாநிலத்தில்சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காகவும், ஆண்டுதோறும் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கான மாநாடு நடத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக இந்த மாநாடு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு மாநாட்டை நடத்த தமிழக அரசு முடிவெடுத்தது.

அரசின் அறிவிப்புகள், திட்டங்கள்

கடந்த பத்து மாதங்களாக தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுநர் உரை, முதல்வரின் அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, அமைச்சர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என மொத்தம் 1,704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 80 சதவீதத்துக்கும் மேலானவற்றுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டங்கள் தோறும் இந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்தும் மாநாட்டில் ஆலோசிக்கப்படும். இம்மாநாட்டில் முதல்முறையாக வனத்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ள நிலையில், வனத்துறை தொடர்பான திட்டங்களையும் முதலமைச்சர் ஆய்வுசெய்யவுள்ளார்.

2. சுகாதாரத் திட்டங்கள்: ஐந்து ஆட்சியர்களுக்கு விருது!

தமிழ்நாடு சுகாதாரத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர்களுக்கான விருதை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான விருதுகளைப் பெறும் மாவட்ட ஆட்சியர்களி -ன் பெயர்களை தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

2016-17ஆம் ஆண்டிற்கான விருதை விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த சிவஞானத்திற்கும்,

2017-18ஆம் ஆண்டிற்கான விருதை திருவாரூரில் ஆட்சியராக இருந்த நிர்மல் ராஜுக்கும்,

2018–2019ஆம் ஆண்டிற்கான விருதை சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயகாந்தனுக்கும்,

2019-20ஆம் ஆண்டுக்கான விருதை விருதுநகர் ஆட்சியர் சிவஞானத்துக்கும்,

2020–21ஆம் ஆண்டிற்கான விருதை திருவண்ணாம
-லை மாவட்ட ஆட்சியராக இருந்த கந்தசாமிக்கும் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. திருப்பெரும்புதூரில் `500 கோடியில் புதிய தொழில் பிரிவுகள்: முதலமைச்சர் மு கஸ்டாலின் தொடக்கி வைத்தார்

சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் 200 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் `500 கோடி மதிப்பிலான புதிய தொழில் பிரிவுகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் செயின்ட் -கோபைன் என்ற புகழ்பெற்ற கண்ணாடி உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கடந்த 1998-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல்நாட்டப்பட்டது. கடந்த 2000ஆம் ஆண்டில் கண்ணாடி உற்பத்தி தொடங்கப்பட்டது. 177 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் நிறுவனம் `3,750 கோடியை முதலீடு செய்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இந்நிறுவனமானது, சுமார் `4,700 கோடி முதலீட்டைச் செய்து நேரடியாக 2,000 பேருக்கும், மறைமுகமாக 2,500 பேருக்கும் வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறது.

`500 கோடி முதலீடு: திருப்பெரும்புதூரில் உள்ள செயின்ட்-கோபைன் வளாகத்தில் கண்ணாடி, முகம் பார்க்கும் கண்ணாடி, சூரிய ஆற்றல் கண்ணாடி, வெடி குண்டு தாக்குதலை சமாளிக்கும் வகையிலான பல்வேறு வகை கண்ணாடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மதிப்புகூட்டப்பட்ட 90% கண்ணாடிகள் இந்த வளாகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

4. உபரி நிலங்களைப் பணமாக்குவதற்காக சிறப்பு ஏற்பாடாக தேசிய நில பணமாக்கல் கழகத்தை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உபரி நிலங்களைப் பணமாக்குவதற்காக சிறப்பு ஏற்பாடாக, முற்றிலும் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாக தேசிய நில பணமாக்கல் கழகத்தை ஏற்படுத்த ஒப்புதலளிக்கப்பட்டது.

இந்தக் கழகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட தொடக்க பங்கு மூலதனமாக `5,000 கோடியும், பெறப்படும் தொகையில் இருந்து `150 கோடி பங்குமூலதனத்தையும் கொண்டதாக இருக்கும். மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு அமைப்புகளுக்குச் சொந்தமான உபரிநிலம் மற்றும் கட்டட சொத்துக்களை பணமாக்கும் பணியை இந்தக் கழகம் மேற்கொள்ளும்.

2021-22 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பயன்படுத்தப்படாத மற்றும் குறைவான பயன்பாடு கொண்ட முக்கியமற்ற சொத்துக்களை பணமாக்குவதன் மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும்.

மத்திய நிதியமைச்சகத்தின் பொது நிறுவனங்கள் துறை இந்தக் கழகத்தை உருவாக்கி, அதன் நிர்வாகம் அமைச்சகமாகவும், செயல்படும்.

5. சென்னை ஐஐடி-வால்மார்ட் நிறுவனம் இடையே புரிந்துணர்வு

தொழில்நுட்பத்தின் புதிய பகுதிகளில் ஆராய்ச்சியை விரைவுபடுத்தவும், வால்மார்ட் பணியாளர்களுக்கு தொடர்ச்சியான கல்வியை வழங்கவும், இந்தியாவில் உள்ள அந்த நிறுவனத்தின் சமூகப்பொறுப்புணர்வு திட்டங்களில் ஒத்துழைக்கவும், சென்னை ஐஐடி – வால்மார்ட் குளோபல் டெக் நிறுவனம் இடையே புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி சென்னை ஐஐடி மாணவர்களும், வால்மார்ட் குளோபல் டெக் பணியாளர்களும் ஆராய்ச்சித் திட்டங்களில் இணைந்து செயலாற்றுவர்.

1. ‘SLINEX’ is a bilateral maritime exercise between India and which country?

A) Oman

B) Singapore

C) Sri Lanka 

D) Japan

  • The 9th Edition of India – Sri Lanka Bilateral Maritime Exercise SLINEX (Sri Lanka–India Naval Exercise) has commenced at Visakhapatnam.
  • The exercise is conducted in two phases – the Harbour Phase at Visakhapatnam followed by the Sea Phase in the Bay of Bengal. Indian Navy is represented by INS Kirch, a guided missile corvette, INS Jyoti, a Fleet support tanker, Advanced Light Helicopter, Seaking and Chetak Helicopters and Dornier Maritime Patrol Aircraft.

2. The Prime Minister recently inaugurated the Metro project of which city?

A) Mysuru

B) Pune 

C) Coimbatore

D) Trivandrum

  • Pune Metro project has been undertaken by MAHA Metro, a SPV (Special Purpose Vehicle) of Government of India and Government of Maharashtra. The Prime Minister Narendra Modi inaugurated the 12–km stretch of the total 32.2 km Pune metro rail project. The total cost of the project is over ₹ 11,400 crore.

3. Which is the venue of the India Global Forum event in 2022?

A) Chennai

B) Bengaluru 

C) Varanasi

D) Gandhi Nagar

  • The India Global Forum (IGF) event is scheduled at Bengaluru. Minister of State for Electronics and IT, Rajeev Chandrasekhar is set to attend the event and interact with the founders and CEOs of 30 unicorns during the event. The IGF event shall also see participation of Finance Minister, Nirmala Sitharaman, and Minister of State for External Affairs and Culture, Meenakshi Lekhi as well as CEOs and leaders from the industry.

4. Which country has recently tested reconnaissance satellite system?

A) North Korea 

B) Ukraine

C) Russia

D) UAE

  • North Korea said that it conducted a test for reconnaissance satellite systems (spy satellite system), after regional military authorities reported the launch of a ballistic missile from the country.
  • It was the second such launch in a week to test satellite equipment, and the ninth missile launch this year. It was condemned by the United States, South Korea, and Japan.

5. Which state has inaugurated ‘School Health Clinics’?

A) Odisha

B) Gujarat

C) New Delhi 

D) Rajasthan

  • The Delhi Government has recently inaugurated individual health clinics in 20 government schools. They were inaugurated by Deputy Chief Minister and Education Minister Manish Sisodia. The clinics will provide routine health check–ups as well as counselling to ensure the children’s physical and mental well–being.

6. ‘Jharokha’, which was in the news recently, is a celebration related to which field?

A) Art and Culture 

B) Literature

C) AYUSH

D) Science and Technology

  • Ministry of Culture and Ministry of Textiles are jointly organizing “Jharokha–Compendium of Indian handicraft/ handloom, art and culture”. Jharokha is a celebration of the traditional Indian handicrafts, handlooms, and art & culture.
  • It is scheduled to be held across the country at 16 locations in 13 states and UTs. The first event under this celebration is being organized in Bhopal, Madhya Pradesh.

7. ‘Trellis structure’, which was seen in the news, is associated with which sector?

A) Automobile

B) Agriculture 

C) Artificial–Intelligence

D) Banking

  • As a part of sustainable farming, a trellis structure is prepared using four pillars, bamboo poles and ropes, on 20 decimals of land. As plants especially creepers grew vertically in a trellis system, the chances of stems, flowers and fruits getting rotten are very less. The system has worked well in many tribal villages of Odisha.

8. ‘Karewas’ are fertile alluvial soil deposits found in which state?

A) Uttar Pradesh

B) West Bengal

C) Jammu and Kashmir 

D) Bihar

  • The highly fertile alluvial soil deposits of the Kashmir Valley are called ‘Karewas’. The plateaus are 13,000–18,000–metre–thick deposits of alluvial soil and sediments like sandstone and mudstone.
  • These are the ideal places for cultivation of saffron, almonds, apples and several other cash crops. It was seen in the news, as Karewas are being destroyed in the name of development.

9. What is the objective of ‘SAMARTH’ initiative launched by the MSME Ministry

A) Women Entrepreneurship 

B) Value Addition

C) Support for Marketing

D) Portal for GST

  • The Union MSME Ministry recently launched SAMARTH — a special entrepreneurship promotion drives for women. Under SAMARTH, 20 per cent seats in free skill development programmes, organised under skill development schemes of the Ministry, will be allocated for aspiring and existing women entrepreneurs.

10. Which country is the largest Crude–Oil producer in the world, as of 2022?

A) Russia

B) USA 

C) Saudi Arabia

D) Iran

  • Russia is the second–largest crude oil producer in the world, only behind the United States. Russia produces close to 11 million barrels per day of crude oil. About half of Russia’s exported oil (2.5 mn barrels per day) –is shipped to European countries.
  • Nearly one–third of it arrives in Europe via the Druzhba Pipeline through Belarus. Recently, the UK proposed that the G7 nations impose limits on their Russian oil and gas imports.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!