TnpscTnpsc Current Affairs

10th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

10th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 10th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘உலக நகரங்கள் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) அக்டோபர் 29

ஆ) அக்டோபர் 31 

இ) நவம்பர் 1

ஈ) நவம்பர் 3

  • உலகளாவிய நகரமயமாக்கலில் பன்னாட்டுச் சமூகத்தின் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்.31 அன்று உலக நகரங்கள் நாள் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு, ஐநா பொதுச்சபை தீர்மானத்தில் இந்த நாள் நிறுவப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்நாள் கொண்டாடப்பட்டது.
  • “Adapting Cities for Climate Resilience” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக நகரங்கள் நாளுக்கானக் கருப்பொருளாகும்.

2. 2020-21’க்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புத்தொகைக்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம் என்ன?

அ) 7.0%

ஆ) 7.5%

இ) 8.0%

ஈ) 8.5% 

  • 2020-21ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகையில் 8.5% வருமானத்தை வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை 6.4 கோடி சந்தாதாரர்களை சென்றடையும். 2019-20 இடைப்பட்ட காலத்திலும் இதே விகிதம்தான் இருந்தது. EPFO, தனிப்பட்ட கணக்குகளில் வட்டியை வரவு வைப்பதற்கு முன்னதாக, தொழிலாளர் அமைச்சகம் வட்டி விகிதத்தை அறிவிக்கும்.

3. சிறந்த பொதுப்போக்குவரத்து அமைப்புகொண்ட நகரத்திற்கான நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் விருதை வென்ற நகரம் எது?

அ) மும்பை

ஆ) சூரத் 

இ) காந்திநகர்

ஈ) லக்னோ

  • மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது 2021 ஆம் ஆண்டின் நகர்ப்புற நகர்வு இந்தியா மாநாட்டின் 14ஆவது பதிப்பை நடத்தியது. சிறந்த பொதுப்போக்குவரத்து அமைப்புகொண்ட நகரத்திற்கா -ன விருதை சூரத் நகரம் வென்றது. கொச்சி நகரம் மிகவும் நிலையான போக்குவரத்து அமைப்புகொண்ட நகரமாக மதிப்பிடப்பட்டது.
  • அர்பன் மொபிலிட்டி இந்தியா மாநாட்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விருதுகளை வழங்கினார். மெட்ரோ இரயிலுடன் கூடிய நாக்பூரின் பன்முகட்டு ஒருங்கிணைப்பு, தில்லியின் மெட்ரோ ஆகியவையும் விருதுகளை வென்றன.

4. மோட்டார் வாகன வரிகள் மற்றும் மின்சார வாகனங்கள் (EVகள்) மீதான பதிவுக்கட்டணங்களில் முழு விலக்களிப்பதாக அறிவித்துள்ள இந்திய மாநிலம் எது?

அ) ஒடிஸா 

ஆ) ஆந்திர பிரதேசம்

இ) தெலுங்கானா

ஈ) பஞ்சாப்

  • ஒடிஸா மாநிலத்தில் மின்சார வாகனங்களுக்கான (EVகள்) மோட்டார் வாகன வரிகள் & பதிவுக்கட்டணங்களுக்கு முழு விலக்கு அளிப்பதாக ஒடிஸா மாநில அரசு அறிவித்துள்ளது. ஒடிசா மோட்டார் வாகனங்கள் வரி விதிப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட விலக்கு, 2025 வரை பொருந்தும்.
  • மின்சார வாகனங்களை வாங்குபவர்கள், உற்பத்தியாளர்கள், மின் கலங்கள் மற்றும் மின்னேற்ற நிலையங்கள் ஆகியவற்றுக்கான ஊக்க -த்தொகை ஒடிஸா மின் வாகனக் கொள்கையின் கீழ் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

5. ஐநா’இன் FAO மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்ட இந்திய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) தெலுங்கானா 

இ) மகாராஷ்டிரா

ஈ) அஸ்ஸாம்

  • ஐநா உணவு மற்றும் உழவு அமைப்பின் (FAO) மெய்நிகர் மாநாட்டில் பங்கேற்க FAO’ஆல் தெலுங்கானா அரசாங்கம் அழைக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் ரோம் நகரத்தில் இருந்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது. ‘தரமான விதை உற்பத்தி முறை: இந்தியாவின் வெற்றிக்கதை: விதை மையமாக தெலுங்கானா’ என்ற தலைப்பில் உரையாற்ற தெலுங்கானா மாநிலத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

6. தொழில்துறை உறவு விதிகள், 2021’ஐ அங்கீகரித்துள்ள மாநிலம் எது?

அ) அஸ்ஸாம் 

ஆ) கர்நாடகா

இ) மேற்கு வங்கம்

ஈ) கேரளா

  • பணியமர்த்துநர் மற்றும் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்ட தொழில்துறை உறவு விதிகள், 2021’க்கு அசாம் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. COVID-19 தொற்றுநோய்களின் போது துன்பங்களை எதிர்கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தொழில்துறை உறவுகள் தொடர்பான மூன்று மத்திய தொழிலாளர் குறியீடுகளின் விதிகளை எளிமைப்படுத்த விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

7. இந்தியாவில் தேசிய டிரோன் தொழில்நுட்ப மாநாட்டைத் தொடங்க முன்மொழிந்துள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ) சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்

ஆ) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

இ) மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

ஈ) கல்வி அமைச்சகம்

  • இந்தியாவில் தேசிய அளவிலான டிரோன் தொழில்நுட்ப மாநாட்டை நடத்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இது ஒரு வருடாந்திர நிகழ்வாக இருக்கும் என்று அவ்வமைச்சகம் தெரிவித்துள்ளது. இது பயனர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும். சமீபத்தில், இந்திய அரசு புதிய டிரோன் விதிகள், 2021’ஐ வெளியிட்டது.

8. ‘Capricorn Energy PLC’ எனத் தனது பெயரை மாற்றிக்கொண்ட உலகளாவிய நிறுவனம் எது?

அ) BP எண்ணெய் மற்றும் எரிவாயு

ஆ) கெய்ர்ன் எனர்ஜி PLC 

இ) ONGC விதேஷ்

ஈ) ரிலையன்ஸ் எனர்ஜி

  • பிரித்தானியாவைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி PLC தனது பெயரை ‘Capricorn Energy PLC’ என மாற்றியுள்ளதாகவும், 2021 டிசம்பர் முதல் இப்பெயர் நடைமுறைக்கு வரலாம் என்றும் கூறியுள்ளது. இந்நிறுவனம் இந்திய அரசாங்கத்துடன் $1 பில்லியன் டாலர் முன்தேதியிட்ட வரி தகராறில் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கு முடியும் தருவாயில் உள்ளது.

9. “பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பன்னாட்டு நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) நவம்பர் 1

ஆ) நவம்பர் 2 

இ) நவம்பர் 10

ஈ) நவம்பர் 12

  • ஒவ்வோர் ஆண்டும், ஐநா அவை நவ.2ஆம் தேதியை “பத்திரிகையாளர் -களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பன்னாட்டு நாள்” அனுசரிக்கிறது.
  • விசாரணை மற்றும் வழக்குத்தொடுப்பதில் பத்திரிகையாளர்களின் பாத்திரத்தை இது எடுத்துக்கூறுகிறது. ஐநா சபையின் அறிக்கையின்படி, 2006 மற்றும் 2020’க்கு இடையில் 1,200’க்கும் மேற்பட்ட ஊடகவியலா -ளர்கள் செய்திகளைத் தந்தமைக்காகவும், பொதுமக்களுக்கு தகவல்க
    -ளைக் கொண்டு சென்றதற்காகவும் கொல்லப்பட்டுள்ளனர்.

10. வாங் யாப்பிங் என்பவர் பின்வரும் எந்த நாட்டின் விண்வெளி வீராங்கனை ஆவார்?

அ) இஸ்ரேல்

ஆ) சீனா 

இ) ஐக்கிய அரபு அமீரகம்

ஈ) ஜப்பான்

  • வாங் யாப்பிங், விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண்மணி ஆனார். அவரது குழு, தியாங்கோங் விண்வெளி நிலையத்திற்கு வெளியே ஆறு மணிநேரப்பயணத்தை நிறைவு செய்தது. “விண்ணுலக அரண்மனை” என்று பொருள்படும் தியாங்கோங், செவ்வாய் கிரகத்தில் ரோவரை தரையிறக்கியுள்ளதோடு, நிலவுக்கு ஆய்வுக்கலங்களையும் அனுப்பி உள்ளது. அதன் மையத்தொகுதியானது ஏற்கனவே விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இவ்விண்வெளி நிலையம் 2022 ஆம் ஆண்டில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 200 பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் விதைத் தாய்

சுமார் 200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகளை மகாராஷ்டிராவை சேர்ந்த ரஹிபாய் சோமாபூபேரே பாதுகாத்து வருகிறார். விதைத் தாய் என்றழைக்கப்படும் அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதினை வழங்கி கவுரவித்துள்ளார்.

மகாராஷ்டிர மக்கள் அவரை ‘விதைத்தாய்’ என்று அழைக்கின்றனர்.

2. ஆப்கன் விவகாரம் குறித்த ஆலோசனை – ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை:

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட 7 நாடுகளின் தலைவர்கள் நேற்று இந்தியா வந்தனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் வெளியேறின. இதையடுத்து, தலிபான்கள், அங்கு ஆட்சிப் பொறுப்பேற்று உள்ளனர். தலிபான் ஆட்சியாளர்களுக்கு சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஒருசில நாடுகளே ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் தலிபான்களுக்கு ஆதரவு தரவில்லை.

இந்த சூழலில், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்துள்ள தலிபான்களால் ஆசிய கண்டத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக பரவலாக கருத்து எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்தியா தலைமையில் டெல்லியில் இன்றுஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான் ஆகிய 7 நாடுகளின் பாதுகாப்புத் துறை தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

3. அருணாச்சல பிரதேச எல்லைக்குள் சீனா உருவாக்கிய கிராமம் 1959-ல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி: இந்திய ராணுவம் தகவல்

அருணாச்சல பிரதேச எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாக பென்டகன் அறிக்கை குறிப்பிட்ட நிலையில், சர்ச்சைக்குரிய கிராமத்தை 1959-ம் ஆண்டு சீனா ஆக்கிரமித்தது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அருணாச்சலபிரதேசத்துக்கு சீனா அடிக்கடி உரிமை கொண்டாடி வருகிறது. அதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கடந்த வாரம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஆண்டு அறிக்கையில், அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய பகுதியில் சுமார் 100 வீடுகளைக் கொண்ட கிராமத்தை சீனா உருவாக்கி உள்ளதாகவும் இந்திய பகுதிக்குள் 4.5 கி.மீ. தூரம் வரை சீனா ஊடுருவியுள்ளதாகவும் தெரிவித்தது.

இதுகுறித்து இந்திய ராணுவஅதிகாரிகள் கூறும்போது, “அருணாச்சல பிரதேசத்தில் மேல்சுபன்சிரி மாவட்டத்தில் பென்டகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளசர்ச்சைக்குரிய பகுதி 1959-ம்ஆண்டு சீன ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகும். பல ஆண்டுகளாகவே அந்தப் பகுதியை ராணுவ முகாமாக சீனா பயன்படுத்தி வருவதோடு பல்வேறு கட்டுமானங்களையும் கட்டி வருகிறது. இவை குறுகிய காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இல்லை” என்று தெரிவித்தனர்.

4. திருப்பதியில் தென்மண்டல முதல்வர்கள் மாநாடு

திருப்பதியில் வரும் 14-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு நடைபெற உள்ளது. திருப்பதியில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் இம்மாதம் 14-ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென் மண்டல வளர்ச்சிகுறித்து முதல்வர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில், ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநில முதல்வர்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவு போன்ற யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களும் பங்கேற்கின்றனர்.

இதில் தென்னிந்தியாவின் வளர்ச்சி, பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

5. சாலையில் பழம் விற்ற பணத்தில் பள்ளிக்கூடம் கட்டிய பெரியவர்: பத்மஸ்ரீ விருது பெற்றவருக்கு குவியும் பாராட்டுகள்

கர்நாடகாவில் சாலையில் பழம்விற்ற பணத்தில் பள்ளிக்கூடம் கட்டிய ஹரேகலா ஹாஜப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னட மாவட்டம் மங்களூரு அருகேயுள்ள நியூபடப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரேகலா ஹாஜப்பா (68). இவர் மங்களூரு பேருந்து நிலையத்தில் ஆரஞ்சு, கொய்யா உள்ளிட்ட பழங்களை விற்று வந்தார். இதன்மூலம் நாளொன்றுக்கு `150 வரை சம்பாதித்தார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவரிடம் ஆரஞ்சு பழத்தின் விலையைக்கேட்டனர். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் அவர்களுடன் பேச முடியவில்லை. இதனால் வருத்தம் அடைந்த ஹாஜப்பா, தன்னைப் போன்று கல்வி கற்க முடியாமல் இருக்கும் தன் கிராம மக்களுக்காக பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும் என நினைத்தார். இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தார். நீண்ட காலம் காத்திருந்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து மத அமைப்புகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரிடம் பள்ளி தொடங்க உதவுமாறு ஹாஜப்பா கோரினார். ஆனால் யாரும் அவரது கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

இதனால், தான் பழம் விற்ற பணத்தை சிறிது சிறிதாக சேமித்து தனது கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்ட முடிவெடுத்தார். அதன்படி, 2001-ம் ஆண்டு தன் சேமிப்பு பணத்தில், பள்ளிக்கூடம் கட்ட நிலம் வாங்கினார். பின்னர் வங்கியில் கடன் வாங்கி நியூபடப்பு கிராமத்தில் தொடக்கப் பள்ளியை நிறுவினார். 27 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அந்த பள்ளியில் தற்போது 178 மாணவர்கள் படிக்கின்றனர்.

ஹாஜப்பாவுக்கு பள்ளியைத் தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால், 2014ஆம் ஆண்டு ஜூம்மா மதராஸாவின் முஸ்லீம் கல்வி நிறுவனத்துடன் பள்ளி இணைக்கப்பட்டது. பின்னர் தொடக்கப்பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

ஹரேகலா ஹாஜப்பாவின் இச்சேவையைப்பாராட்டி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

6. முக்கிய வழக்குகளை சிபிஐ விசாரிக்க அனுமதி தர மறுக்கும் 8 மாநிலங்கள்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

வங்கி மோசடி உள்ளிட்ட முக்கியவழக்குகளை விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி மறுக்கும் 8 மாநிலங்கள் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தில்லி சிறப்பு போலீஸ் எஸ்டாபிளிஷ்மென்ட் சட்டத்தின் 6-வது பிரிவு, பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் ஊழல், வங்கி முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரிக்க சிபிஐ-க்கு அதிகாரம் வழங்கி உள்ளது. இதற்கு அனைத்து மாநிலங்களும் பொது ஒப்புதல் வழங்குவது வழக்கம். இந்நிலையில், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 8 மாநிலங்கள் இத்தகைய பொது ஒப்புதலை கடந்த 2018-ம் ஆண்டு திரும்பப் பெற்றன. இதனால் குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலை பெற வேண்டும்.

இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பதில் அளிக்குமாறு சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “வழக்கு விசாரணைக்கான பொது ஒப்புதலை 8 மாநிலங்கள் திரும்பப் பெற்றுக் கொண்டதால், ஒவ்வொரு வழக்குக்கும் தனித் தனியாக அனுமதி கோர வேண்டி உள்ளது. இதன்படி, கடந்த 2018 முதல் 2021 ஜூன் மாதம் வரையிலான காலத்தில் 150-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரிக்க ஒப்புதல் வழங்குமாறு அம்மாநில அரசுகளிடம் கோரி உள்ளோம்.

இதில் மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார் உள்ளிட்ட 18 சதவீத வழக்குகளை விசாரிக்க மட்டுமே அம்மாநிலங்கள் அனுமதி வழங்கி உள்ளன. மேலும் சிபிஐ நடத்தும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு விசாரணை, உயர் நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்துள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, “முக்கியமான வழக்குகளை விசாரிக்க சிபிஐ-க்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் மாநில அரசுகளின் செயல் அதிருப்தி அளிக்கிறது. சிபிஐ வழக்குகளில் நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்திருப்பதும் கவலை அளிப்பதாகஉள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

7. லடாக் கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம்

லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது லே மாவட்டம். கடல் மட்டத்திலிருந்து 3,524 மீட்டர் (11,562 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த லே நகரமானது ஆண்டு முழுவதும் கடும் குளிரைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தனித்தனி குடிநீர் குழாய் இணைப்பை வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி லே மாவட்டத்திலுள்ள 60 கிராமங்களில் தற்போது 12 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனித்தனி குடிநீர் குழாய் இணைப்பை வழங்கி ஜல் ஜீவன் திட்டம் வெற்றி கண்டுள்ளது. இந்தப் பகுதியில் ஜீரோ டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவுகிறது. இந்த கடும் குளிரிலும் வீடுகளுக்கு வெற்றிகரமாக குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதை ஜல் ஜீவன் திட்டம் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், லே மாவட்டத்திலுள்ள உம்லா கிராமத்தில் ஒரு பாட்டியும், அவரது பேத்தியும் மிகுந்த மகிழ்ச்சியில் குடிநீரை குழாயிலிருந்து பிடிக்கும் புகைப்படத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருவதால் இது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து ஜல் ஜீவன் திட்டத்தின் கூடுதல் செயலரும், இயக்குநருமான பரத் லால் கூறும்போது, “மக்களின் வாழ்க் கையை மாற்றி வருகிறது ஜல் ஜீவன் திட்டம். தற்போது ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக குடிநீர் இணைப்பை வழங்குவதே எங்களது திட்டம். லே மாவட்டத்தில் 12 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பைக் கொடுத்து வெற்றி கண்டுள்ளோம். ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் குடிநீரைப் பிடிக்கும் அந்தபாட்டி, பேத்தியின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இதுதான் உண்மையான திருப்தி.

இந்த உம்லா கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லை. குக்கிராமமான இந்த உம்லாவில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மிகுந்த சிரமத்துக்கு இடையே இந்தத் திட்டத்தில் வெற்றி கண்டுள்ளோம்” என்றார்.

1. When is the ‘World Cities Day’ observed every year?

A) November 29

B) November 31 

C) November 1

D) November 3

  • World Cities Day is observed globally on November 31 every year to promote the international community’s interest in global urbanization. The day was established in 2013, by the United Nations General Assembly in its resolution and the occasion was first celebrated in 2014. This year, the theme for World Cities Day is ‘Adapting Cities for Climate Resilience’.

2. What is the interest rate fixed for the employees’ provident fund (EPF) deposits for 2020–21?

A) 7.0%

B) 7.5%

C) 8.0%

D) 8.5% 

  • The Finance ministry has approved an 8.5% return on employees’ provident fund (EPF) deposits for 2020–21. This move will impact over 6.4 crore subscribers. The rate was the same for the year 2019–20 also. The Labour ministry will now notify the interest rate before the EPFO starts crediting the interest into individual accounts.

3. Which city has won Urban Affairs Ministry’s award for the city with the best public transport system?

A) Mumbai

B) Surat 

C) Gandhinagar

D) Lucknow

  • Union Housing and Urban Affairs Ministry presented the 14th edition of Urban Mobility India (UMI) Conference 2021. Surat won the award for the city with the best public transport system, and Kochi was judged the city with most sustainable transport system.
  • The awards were presented by Housing and Urban Affairs Minister Hardeep Singh Puri at Urban Mobility India conference. Nagpur’s multi–modal integration with Metro rail, Delhi’s Metro also won awards.

4. Which Indian state has announced full exemption of motor vehicle taxes and registration fees on electric vehicles (EVs)?

A) Odisha 

B) Andhra Pradesh

C) Telangana

D) Punjab

  • The Odisha government announced full exemption of motor vehicles taxes and registration fees on electric vehicles (EVs) in the state. The exemption, which was granted under the Odisha Motor Vehicles Taxation Act, is applicable till 2025. The incentives for the buyers, manufacturers, batteries and charging stations of electric vehicles were also extended under the Odisha Electric Vehicle Policy.

5. Which Indian state has been invited to participate in a FAO conference of the UN?

A) Tamil Nadu

B) Telangana 

C) Maharashtra

D) Assam

  • The Government of Telangana has been invited by FAO to participate in a virtual conference of the Food and Agricultural Organisation (FAO), UN. The conference is being organized from Rome, Italy. The state has been invited to deliver an address on Quality Seed Production System: A success story of India: Telangana as a seed hub’.

6. Which state has approved the Industrial Relation Rules, 2021?

A) Assam 

B) Karnataka

C) West Bengal

D) Kerala

  • The Assam cabinet approved the Industrial Relation Rules, 2021 aiming at safeguarding the rights of employers and employees. The cabinet has approved a scheme for providing ration to migrant workers, who faced hardship during the COVID–19 pandemic. The rules have been framed with a view to simplify and rationalise the provisions of three central labour codes relating to industrial relations.

7. Which Ministry has proposed to launch a national drone technology conference in India?

A) Ministry of Civil Aviation

B) Ministry of Science and Technology

C) Ministry of Electronics and Information Technology 

D) Ministry of Education

  • The Union Ministry of Electronics and Information Technology (MeitY) has proposed to host a national level drone technology conference in India. The Ministry has stated that it would be an annual event, which would create a platform for users and technology providers. Recently, the Government of India has released the new Drone Rules, 2021.

8. Which global company has changed its name to ‘Capricorn Energy PLC’?

A) BP Oil and Gas

B) Cairn Energy PLC 

C) ONGC Videsh

D) Reliance Energy

  • Britain Based oil and gas explorer Cairn Energy PLC has stated that it has changed its name to Capricorn Energy PLC and the same could come into effect from December 2021. The company has been involved in a USD 1 billion retrospective tax dispute with the Government of India, and the case has come to a point of closure.

9. When is the “International Day to End Impunity for Crimes against Journalists” observed every year?

A) November 1

B) November 2 

C) November 10

D) November 12

  • Every year, the United Nations observes 2 November as the “International Day to End Impunity for Crimes against Journalists”, to highlight the instrumental role played by Journalists in investigating and prosecuting. As per an UN report, over 1,200 journalists have been killed between 2006 and 2020, for reporting the news and bringing information to the public.

10. Wang Yaping is the Astronaut of which country?

A) Israel

B) China 

C) UAE

D) Japan

  • Wang Yaping became the first Chinese woman to walk in space, as her team completed a six–hour stint outside the Tiangong space station. Tiangong, which means “heavenly palace”, is the latest achievement of China, after landing a rover on Mars and sending probes to the Moon. Its core module entered orbit earlier this year, with the space station expected to be operational by 2022.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!