TnpscTnpsc Current Affairs

10th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

10th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 10th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

10th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘அனைத்து சவால்களுக்கும் போக்குவரத்து நிலை–2 மற்றும் குடிமக்கள் கருத்தாய்வு–2022’ஐ அறிமுகப்படுத்திய நடுவண் அமைச்சகம் எது?

அ. கல்வி அமைச்சகம்

ஆ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ. கலாச்சார அமைச்சகம்

ஈ. வெளியுறவு அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

  • நடுவண் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ‘அனைத்து சவால்களுக்கும் போக்குவரத்து நிலை–2 மற்றும் குடிமக்கள் கருத்தாய்வு – 2022’ஐ மெய்நிகராக தொடங்கினார். ‘அனைத்து சவால் –களுக்கும் போக்குவரத்து நிலை–2’ ஆனது பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாற்பத்தாறு நகரங்களிலுள்ள போக்குவரத்து பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை உருவாக்குவதற்காக நிலை–2 துளிர் நிறுவல்களுக்காக இது தொடங்கப்பட்டுள்ளது.
  • குடிமக்கள் கருத்தாய்வானது 264 நகரங்களுக்காக வாழ்வதற்கெளிய நகரங்கள் குறியீடு–2022இன்கீழ் தங்கள் நகரத்தைப் பற்றிய குடிமக்களின் கருத்துக்களைப் பதிவு செய்வதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

2. ‘பிரதமர் கதி சக்தி பன்மாதிரி நீர்வழிகள் உச்சிமாநாடு’ நடத்தப்படுகிற நகரம் எது?

அ. புனே

ஆ. கொல்கத்தா

இ. வாரணாசி

ஈ. அகமதாபாத்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. வாரணாசி

  • மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரவு மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின்கீழ் இந்திய நீர்வழிப் போக்குவரவு ஆணையம், நவ.11 – 12 ஆகிய தேதிகளில், ‘பிரதமர் விரைவு சக்தி பல்வேறு போக்குவரத்து நீர்வழி உச்சிமாநாட்டை’ வாரணாசியில் ஏற்பாடு செய்துள்ளது. நீர்வழிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான நடவடி –க்கைகள் பற்றிய பிரதமர் கதி சக்தி தேசிய பெருந்திட்டம்மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த மாநாட்டின் முதன்மை நோக்கமாகும்.

3. ‘அடல் புதிய இந்தியா சவால்’ என்பது கீழ்க்காணும் எந்த நிறுவனத்தின் முனைவாகும்?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. NITI ஆயோக்

இ. DRDO

ஈ. ISRO

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. NITI ஆயோக்

  • பெண்களை மையப்படுத்திய சாவல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை அடல் புத்தாக்கத் திட்டத்தை NITI ஆயோக் தொடங்கி வைத்தது. அடல் புதிய இந்தியாவின் சவால்கள் என்ற நடவடிக்கையின் இரண்டாம்கட்ட நிகழ்வாக அடல் புத்தாக்கத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சமூகத்தை உருவாக்கும் சிற்பியாக பெண்கள் திகழ்கின்றனர் என்பதை கருத்தில்கொண்டு, அடல் புதிய இந்தியாவின் சவால்கள் என்ற நடவடிக்கைமூலம் சமூக அமைப்பில் பல்வேறு நிலையிலுள்ள பெண்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். குறிப்பாக, பெண்கள் நலவாழ்வு, பாதுகாப்பு, ஊரகப் பகுதியில் உள்ள பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குதல், தொழில்சார்ந்த கூட்டு நடவடிக்கைகள் போன்றவற்றில் புதுமைகளை புகுத்தி, தீர்வு காண்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

4. COP–27இன்போது, ‘அனைவருக்குமான முன்கூட்டிய எச்சரிக்கைகளின் நிர்வாக செயல்திட்டத்தை’ அறிமுகம் செய்த நிறுவனம் எது?

அ. IMF

ஆ. WEF

இ. WMO

ஈ. UNEP

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. WMO

  • உலக வானிலை அமைப்பானது (WMO) காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் 27ஆவது மாநாட்டில் (COP27) நிகழ்ந்த ஒரு வட்டமேசைக் கூட்டத்தின்போது, ‘அனைவருக்குமான முன்கூட்டிய எச்சரிக்கைகளின் நிர்வாக செயல்திட்டத்தை’ வெளியிட்டது. WMOஇன் கூற்றுப்படி, 2027ஆம் ஆண்டுக்குள் அனைவருக்குமான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை வழங்குவதற்கான தொடக்கநிலை முதலீடு கிட்டத்தட்ட $3.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்.

5. அண்மைய தரவுகளின்படி, பரஸ்பர நிதியங்களின் ஊடுருவல் கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் அதிகபட்சமாக உள்ளது?

அ. மகாராஷ்டிரா

ஆ. கேரளா

இ. தெலுங்கானா

ஈ. குஜராத்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மகாராஷ்டிரா

  • 2022 நவம்பர் மாத நிலவரப்படி, மகாராஷ்டிரா, புது தில்லி மற்றும் கோவா ஆகியவை இந்தியாவில் அதிக பரஸ்பர நிதிய நிறுவனங்களைக் கொண்டுள்ளன. அதிக வருவாய் நிலைகள், சிறந்த கல்வியறிவு விகிதங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் மற்றும் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களின் இருப்பின் காரணமாக இவ்வாறு அதிகமாக உள்ளது. கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இதன் சதவீதம் 5– 6 சதவீதமாக உள்ளது.

6. சுதேச தர்ஷன் திட்டத்துடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. வெளியுறவு அமைச்சகம்

ஆ. சுற்றுலா அமைச்சகம்

இ. கலாச்சார அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சுற்றுலா அமைச்சகம்

  • மையப்பொருள் அடிப்படையிலான சுற்றுலாக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக 2014–15இல் மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் சுதேச தர்ஷன் திட்டம் தொடங்கப்பட்டது. சுற்றுலாத் தலங்களை நிலையான அணுகுமுறையுடன் பொறுப்புடன் மேம்படுத்துவதற்காக அரசாங்கம் சமீபத்தில் இந்தத்திட்டத்தை சுதேச தர்ஷன் 2.0 என மறுசீரமைத்தது. தலா இரண்டு அல்லது மூவிடங்களைக்கொண்ட பதினைந்து மாநிலங்கள் இனம் காணப்பட்டுள்ளன. சுற்றுலா உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சகம் இத்திட்டத்திற்கு நிதியுதவியும் வழங்கும்.

7. 24 ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதல் காந்தியல்லாத தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. மல்லிகார்ஜுன கார்கே

ஆ. சசி தரூர்

இ. ப சிதம்பரம்

ஈ. அசோக் கெலாட்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மல்லிகார்ஜுன கார்கே

  • 24 ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதல் காந்தியல்லாத தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரசு கட்சித்தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 9,385 வாக்குகளில் 7,897 வாக்குகள் பெற்று மற்றொரு வேட்பாளரான சசி தரூரை வீழ்த்தினார்.

8. 2022 அக்டோபர் நிலவரப்படி, புதிய வருவாய் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. பங்கஜ் சௌத்ரி

ஆ. சஞ்சை மல்கோத்ரா

இ. அஜை சேத்

ஈ. துகின் காந்தா பாண்டே

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சஞ்சை மல்கோத்ரா

  • நிதிச்சேவைகள் துறையின் செயலர் சஞ்சை மல்கோத்ரா புதிய வருவாய் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நடுவணரசால் மேற்கொள்ளப்பட்ட உயர்மட்ட அதிகாரத்துவ மறுசீரமைப்பின் ஒருபகுதியாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் செயலராக இருந்த அரமனே கிரிதர் புதிய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. ‘கானமயில்’ என்பது கீழ்க்காணும் எந்த இந்திய மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் மாநிலப் பறவையாகும்?

அ. பஞ்சாப்

ஆ. அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

இ. இராஜஸ்தான்

ஈ. ஹரியானா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இராஜஸ்தான்

  • இராஜஸ்தான் மாநிலத்தின் மாநிலப்பறவையான ‘கானமயில்’ இந்தியாவின் மிகவும் அருகிவிட்ட பறவையினமாக கருதப்படுகிறது. கானமயிலானது வனவுயிரிகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுகிறது. ராஜஸ்தானில் சுமார் 150 கானமயில்கள் உள்ளன; அது உலகில் உள்ள கானமயில்களின் எண்ணிக்கையில் 95% ஆகும். சமீபத்தில், பாகிஸ்தானில் சில பறவைகள் காணப்பட்டன. இதன் காரணமாக அப்பறவைகள் புலம்பெயர்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஐயப்படுகின்றனர். ‘வனவுயிரிகளில் புலம்பெயர்ந்த உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானம்’ படி, பாதுகாக்கப்பட்ட உயிரினங்களுக்கான உலகப் பட்டியலில் அது சேர்க்கப்பட்டது.

10. இராசாளிகளைப் பாதுகாப்பதற்காக குழுவொன்றை அமைத்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. இராஜஸ்தான்

இ. கேரளா

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • இராசாளிகளைத் திறம்பட பாதுகாப்பதற்காக ஒரு நிறுவன கட்டமைப்பை அமைக்க தமிழ்நாடு அரசு மாநில அளவிலான ஒரு குழுவை அமைத்துள்ளது. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டில் இராசாளிகள் கிட்டத்தட்ட அழிந்தேவிட்டன. கடந்த 1993 மற்றும் 2003–க்கு இடையில் இந்தியாவிலிருந்த இராசாளிகளின் எண்ணிக்கையில் 96% சரிந்தது. தேசிய அளவில் இராசாளி இனங்களைப் பாதுகாக்க நடுவண் அரசு இரண்டு செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உமையாள்புரம் சிவராமன், இளையராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்: பிரதமர் மோதி வழங்குகிறார்

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப்பல்கலைக்கழக்கத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி வழங்குகிறார்.

இசையமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா (79): தேனி மாவட்டத்தை பூர்விகமாகக்கொண்ட இவர், ‘அன்னக் கிளி’ திரைப்படத்தின்மூலம் திரையுலகத்துக்கு அறிமுகமானவர். நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசையில் முறையான பயிற்சியும், புலமையும் பெற்றவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். ‘பத்மபூஷண்’, ‘பத்ம விபூஷண்’ ஆகிய இந்தியாவின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். கலைத்துறையில் இவரது சேவைகளை கௌரவிக்கும் வகையில், கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

உமையாள்புரம் சிவராமன் (85): தஞ்சாவூர் மாவட்டத்தைச்சேர்ந்த இவர், தனது பத்தாம் வயதில் மிருதங்க வாசிப்பில் ஈடுபடத் தொடங்கினார். வாசிப்பில் புதிய உத்திகள், புதுமைகளை ஏற்படுத்திய இவர், முதன்முதலாக இழைக் கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட மிருதங்கத்தை அறிமுகப்படுத்தினார். பதனிட்ட தோல், பதனிடாத தோல் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மிருதங்கங்களை தனித்தனியே ஆராய்ச்சி செய்தவர் என்ற சிறப்புக்கு உரியவர். மிருதங்க வாசிப்பு தொடர்பாக பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார்.

10th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which Union Ministry launched the ‘Transport 4 All Challenge Stage–2 and Citizen Perception Survey–2022’?

A. Ministry of Education

B. Ministry of Housing and Urban Affairs

C. Ministry of Culture

D. Ministry of External Affairs

Answer & Explanation

Answer: B. Ministry of Housing and Urban Affairs

  • Union Housing and Urban Affairs Minister Hardeep Singh Puri virtually launched the Transport 4 All Challenge Stage–2 and Citizen Perception Survey 2022. The Transport 4 All Challenge is an initiative aims to develop digital solutions to improve public transport. The Stage–2 is opened to Startups for developing solutions to transport problems in 46 cities.
  • The Citizen Perception Survey is launched under Ease of Living Index–2022 for 264 cities to capture citizens’ feedback about their city.

2. Which city is the host of ‘PM Gati Shakti Multimodal Waterways Summit’?

A. Pune

B. Kolkata

C. Varanasi

D. Ahmedabad

Answer & Explanation

Answer: C. Varanasi

  • Union Shipping Minister is set to inaugurate the PM Gati Shakti Multimodal Waterways Summit at Varanasi. The event is being organised by the Indian Waterways Authority of India (IWAI) under the aegis of the Union ministry of ports, shipping and waterways. It aims to generate public awareness about the ‘PM Gati Shakti National Masterplan’ with focus on infrastructure development in the waterways.

3. ‘Atal New India Challenge (ANIC)’ is an initiative of which institution?

A. RBI

B. NITI Aayog

C. DRDO

D. ISRO

Answer & Explanation

Answer: B. NITI Aayog

  • Atal Innovation Mission (AIM), under NITI Aayog, has launched women–centric challenges under phase–II of the second edition of the Atal New India Challenge (ANIC). ANIC is an initiative launched to select and support technology–based innovations that solve sectoral challenges of national importance and societal relevance through a grant–based mechanism of up to ₹1 crore.

4. Which institution has launched the ‘Executive Action Plan of Early Warnings for All’ during COP–27?

A. IMF

B. WEF

C. WMO

D. UNEP

Answer & Explanation

Answer: C. WMO

  • The World Meteorological Organization (WMO) released the ‘Executive Action Plan of Early Warnings for All’during a roundtable meeting at the 27th Conference of Parties (COP27) to the United Nations Framework Convention on Climate Change. As per the WMO, the initial investment for delivering early warning systems for all by 2027 will be nearly USD 3.1 billion.

5. As per the recent data, the mutual fund penetration is the maximum in which state?

A. Maharashtra

B. Kerala

C. Telangana

D. Gujarat

Answer & Explanation

Answer: A. Maharashtra

  • As of November 2022, Maharashtra, New Delhi and Goa have the highest mutual fund penetration in India. This is due to higher income levels, better literacy rates and strong inflows from corporates and high net worth individuals. Mutual fund penetration is only 5– 6 per cent in states including Kerala and Telangana.

6. The Swadesh Darshan Scheme is an initiative of which Union Ministry?

A. Ministry of External Affairs

B. Ministry of Tourism

C. Ministry of Culture

D. Ministry of Home Affairs

Answer & Explanation

Answer: B. Ministry of Tourism

  • The Swadesh Darshan Scheme was launched by the Ministry of Tourism in 2014–15 for the integrated development of theme–based tourist circuits. The government recently revamped the scheme as Swadesh Darshan 2.0 (SD2.0) to develop sustainable and responsible destinations with tourist and destination centric approach. 15 states with two or three destinations each have been identified and Tourism Ministry will provide financial support to strengthen tourist infrastructure.

7. Who has been elected as the first non–Gandhi President of the Indian National Congress (INC) party in 24 years?

A. Mallikarjun Kharge

B. Shashi Tharoor

C. P Chidambaram

D. Ashok Gehlot

Answer & Explanation

Answer: A. Mallikarjun Kharge

  • Mallikarjun Kharge has been elected as the first non–Gandhi President of the Indian National Congress (INC) party in 24 years. In the Congress presidential election, he defeated another candidate Shashi Tharoor by securing 7,897 votes out of the 9,385 votes.

8. Who has been named as the new Revenue Secretary, as of October 2022?

A. Pankaj Chaudhary

B. Sanjay Malhotra

C. Ajay Seth

D. Tuhin Kanta Pandey

Answer & Explanation

Answer: B. Sanjay Malhotra

  • Secretary in the Department of Financial Services Sanjay Malhotra has been named as the new Revenue Secretary. Road Transport and Highways Secretary Aramane Giridhar has been named the new Defence Secretary as part of a top–level bureaucratic reshuffle effected by the Centre.

9. ‘Great Indian Bustard’ is the state bird of which Indian state/ UT?

A. Punjab

B. Andaman & Nicobar Islands

C. Rajasthan

D. Haryana

Answer & Explanation

Answer: C. Rajasthan

  • The ‘Great Indian Bustard’ (GIB), which is the State bird of Rajasthan, is also considered India’s most critically endangered bird. GIB is protected under the Wildlife Protection Act. Its population of about 150 in Rajasthan accounts for 95% of its total world population. Recently, some birds are spotted in Pakistan and the environmentalists suspect of migration of the birds. The was added to the world list of protected species of the ‘Convention on the Conservation of Migratory Species of Wild Animals’.

10. Which state has set up a committee for conservation of vultures?

A. Tamil Nadu

B. Rajasthan

C. Kerala

D. Karnataka

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • The Tamil Nadu Government has formed a State–level Committee to set up an institutional framework for the effective conservation of vultures. Vultures almost went extinct in the country at the beginning of the 21st century. A decline of 96% has been registered in India’s vulture population between 1993 and 2003. The Central government introduced two action plans to protect the species at the national level.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!