TnpscTnpsc Current Affairs

10th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

10th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 10th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

10th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘Poverty and Shared Prosperity – 2022’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. உலக வங்கி

ஆ. உலக பொருளாதார மன்றம்

இ. பன்னாட்டு செலாவணி நிதியம்

ஈ. UNICEF

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. உலக வங்கி

  • உலக வங்கியானது அண்மையில், “Poverty and Shared Prosperity 2022: Correcting Course” என்ற தலைப்பில் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, உணவு மற்றும் ஆற்றல் சார்ந்தவற்றின் அதிகரித்த விலைகள் COVID–19க்குப் பிறகான விரைவான மீளெழுச்சிக்குத் தடையாய் உள்ளன; இது பல தசாப்தங்களாக உலகளாவிய வறுமையொழிப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.
  • தீவிர வறுமை நிலையானது துணை–சஹாரா ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வருகிறது. அந்நாடுகள் சுமார் 35 சதவீதம் வரை வறுமை விகிதத்தைக் கொண்டுள்ளன. மேலும், தீவிர வறுமையில் உள்ள மக்கள்தொகையுள் 60% பேரையும் அது கொண்டுள்ளது.

2. மதம் மாறிய ஒடுக்கப்பட்டோரை பட்டியலினத்தில் (SC) சேர்ப்பதற்கான நிலையை ஆராய்வதற்காக அண்மையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர் யார்?

அ. நீதியரசர் K G பாலகிருஷ்ணன்

ஆ. நீதியரசர் H L தத்து

இ. நீதியரசர் அருண் குமார் மிஸ்ரா

ஈ. நீதியரசர் T S தாக்கூர்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. நீதியரசர் K G பாலகிருஷ்ணன்

  • ஹிந்து, பௌத்தம் மற்றும் சீக்கியம் அல்லாத பிற மதங்களுக்கு மாறிய பட்டியலினத்தோருக்கு ‘SC’ என்ற அந்தஸ்து வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க நடுவணரசு ஓர் ஆணையத்தை அமைத்துள்ளது. இந்தியாவின் முன்னாள் தலைமை நீதியரசர் K G பாலகிருஷ்ணன் தலைமையில் மூவர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு இவ்வாணையத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

3. UNICEFஇன் சமீபத்திய அறிக்கையின்படி, கீழ்க்காணும் எந்தத் தென்கிழக்கு ஆசிய நாட்டில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்?

அ. ஆப்கானிஸ்தான்

ஆ. மியான்மர்

இ. இலங்கை

ஈ. சீனா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மியான்மர்

  • கடந்த ஆண்டு நிகழ்ந்த இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் மியான்மரில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புலம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் சிறார் முகமை (UNICEF) தனது சமீபத்திய அறிக்கையில் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் ஆங் சான் சூகியின் அரசை இராணுவம் நீக்கியதில் இருந்து மியான்மர் கிளர்ச்சியிலேதான் உள்ளது. புலம்பெயரவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அந்த நாட்டின் வடமேற்கு சாகேயிங் பிராந்தியத்தில் இருப்பதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

4. ‘துளிர் நிறுவல்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்துடன்’ தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. MSME அமைச்சகம்

ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

இ. நிதியமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

  • வணிகம் & தொழிற்துறை அமைச்சகத்தின் கீழுள்ள தொழிற்துறை & உள்நாட்டு வணிகத்தை மேம்படுத்துவதற்கான துறை, துளிர் நிறுவல்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை நிறுவுவது குறித்து அறிவித்துள்ளது. அட்டவணைப் –படுத்தப்பட்ட வணிக வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் SEBI பதிவுசெய்யப்பட்ட மாற்று முதலீட்டு நிதியங்கள் ஆகியவற்றால் வழங்கப்படும் கடன்களுக்கு கடன் உத்தரவாதங்களை வழங்குவதை இந்தத் திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. முதன்முறையாக, கீழ்க்காணும் எந்த ஆயுதப்படைக்காக, ‘அதிகாரிகளுக்கான ஆயுத அமைப்புக்கிளை’க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது?

அ. இந்திய இராணுவம்

ஆ. இந்திய கடற்படை

இ. இந்திய வான்படை

ஈ. இந்திய கடலோரக் காவல்படை

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்திய வான்படை

  • இந்திய வான்படையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, ஆயுத அமைப்புகள் (WS) கிளை என்ற புதிய கிளையை உருவாக்க அரசு ஒப்புதலளித்துள்ளது. WS கிளையை உருவாக்கியதன் நோக்கமானது, அனைத்து ஆயுத அமைப்பு நிபுணர்களையும் ஒரு குடையின்கீழ் ஒன்றிணைத்து, அனைத்து தரை மற்றும் வான்வழி ஆயுத அமைப்புகளின் செயல்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • தரையிலிருந்து தரை இலக்கைத்தாக்கும் ஏவுகணைகள், தரையிலிருந்து வான் இலக்கைத்தாக்கும் ஏவுகணைகள், தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் ஆளில்லா வானூர்தி மற்றும் இரட்டை விமானிகள், படையினர் பலர் பயணிக்கும் விமானம் ஆகியவற்றில் ஆயுத அமைப்பை இயக்கும் தொகுப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டதாக இந்தக் கிளை இருக்கும். இந்திய வான்படையின் போர்த்திறனை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் இந்தக் கிளை தனது மகத்தான பங்களிப்பை வழங்கும்.

6. எந்த அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் சமீபத்தில் தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியத்துடன் `215 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன?

அ. நிதியமைச்சகம்

ஆ. எரிசக்தி அமைச்சகம்

இ. நிலக்கரி அமைச்சகம்

ஈ. எஃகு அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. எரிசக்தி அமைச்சகம்

  • விளையாட்டுத்துறையின் தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியமானது நடுவண் எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் உள்ள இரண்டு பெரிய பொதுத்துறை நிறுவனங்களான NTPC மற்றும் REC லிட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. NTPC, வில்வித்தைக்காக `115 கோடி தருவதாக உறுதியளித்தது; REC லிட் பெண்கள் ஹாக்கி, குத்துச்சண்டை மற்றும் தடகளப் போட்டிகளுக்காக 3 ஆண்டுகளுக்கு `100 கோடி அளிப்பதாக உறுதியளித்தது.

7. 2022 – எம்மி விருதுகளில், ‘நாடகத்தொடரில் சிறந்த நடிகர் மற்றும் நடிகை’ பட்டத்தை வென்றவர் யார்?

அ. லீ ஜங்–ஜே மற்றும் ஜெண்டயா

ஆ. வில் ஸ்மித் மற்றும் ஜெண்டயா

இ. பிரட் கோல்ட்ஸ்டைன் மற்றும் ஜெண்டயா

ஈ. வில் ஸ்மித் மற்றும் கில்லியன் ஆண்டர்சன்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. லீ ஜங்–ஜே மற்றும் ஜெண்டயா

  • 2022 – எம்மி விருதுகள் வழங்கும் விழாவானது சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது. நாடகத்தொடரில் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதை ஸ்குவிட் கேம் என்ற தொடருக்காக முறையே நடிகர் லீ ஜங்–ஜேவும், யுபோரியா என்ற தொடருக்காக நடிகை ஜெண்டயாவும் வென்றனர்.
  • பிறழுலக கொரிய திகில்மிகுந்த ஸ்குவிட் கேம் தொடரை இயக்கிய ஹ்வாங் டோங்–ஹியூக் சிறந்த இயக்கத்திற்கான எம்மி விருதை வென்றார். ஆப்பிளின் டெட் லாஸ்ஸோ நிகழ்ச்சிக்காக, ‘நகைச்சுவைத்தொடரில் சிறந்த நடிகருக்கான விருதை’ ஜேசன் சுடேகிஸ் பெற்றார்.

8. இந்தியாவின் தலைமைத்துவ முன்னெடுப்பான, ‘LEADS உச்சிமாநாட்டை’ ஏற்பாடு செய்கிற தொழிற்சங்கம் எது?

அ. NASSCOM

ஆ. FICCI

இ. CII

ஈ. ASSOCHAM

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. FICCI

  • FICCI ஆனது இந்தியாவின் தலைமைத்துவ முனைவான, ‘LEADS (Leadership, Excellence, Adaptability, Diversity, Sustainability) உச்சிமாநாட்டை புது தில்லியில் ஏற்பாடு செய்கிறது. இதில் சுமார் 50 நாடுகளிலிருந்து 250–க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். 3ஆவது பதிப்பான இதில் 36 உலகளாவிய சிந்தனைத்தலைவர்களின் விவாதங்கள் அடங்கும்; இதில் அனைவருக்கும் உணவு; புதுமை; இயக்கம் உட்பட 11 கருப்பொருள்களில் கருத்துகள் பரிமாறப்படும்; இந்திய நடுவண் அமைச்சர்கள் மற்றும் ஜெர்மனி மற்றும் நியூசிலாந்தில் இருந்து வரும் அவர்களுக்கு இணையான பிரதிநிதிகள் பல்வேறு கருப்பொருள்களின்கீழ் நடைபெறும் அமர்வுகளில் உரையாற்றுவார்கள்.

9. ‘The Green Fins Hub’ என்ற முதலாவது உலகளாவிய கடல்சார் சுற்றுலாத்துறை தளத்துடன் தொடர்புடைய நிறுவனம் எது?

அ. WEF

ஆ. UNEP

இ. IMF

ஈ. UNICEF

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. UNEP

  • ‘தி கிரீன் ஃபின்ஸ் ஹப்’ என்பது முதலாவது உலகளாவிய கடல்சார் சுற்றுலாத்துறை தளமாகும். ஐநா சுற்றுச்சூழல் திட்டத்துடன் (UNEP) இணைந்து ‘The Reef–World’ அறக்கட்டளை இந்தக் கருவியை உருவாக்கியுள்ளது. கடல்சார் பாதுகாப்புச் சுற்றுலாத்துறையில் நிலைத்தன்மை சவால்களைச் சமாளிக்க இந்தக் கருவி உதவுகிறது. சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தங்கள் அன்றாட நடைமுறைகளில் எளிய மாற்றங்களைச்செய்யவும், அவர்களின் வருடாந்திர வளர்ச்சிகளைக் கண்காணிக்கவும், அவர்களின் சமூகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ளவும் இது உதவுகிறது.

10. ‘ANGAN – 2022’ என்ற மாநாட்டை ஏற்பாடு செய்த நிறுவனம் எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. எரிசக்தித் திறன் பணியகம்

இ. NITI ஆயோக்

ஈ. நடுவண் மறைமுக வரிகள் வாரியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. எரிசக்தித் திறன் பணியகம்

  • குறைந்த செலவில் புதிய பசுமை குடியிருப்புகள்மூலம் இயற்கையை விரிவுபடுத்துதல் என்ற பொருளுடைய அங்கன் – 2022 என்னும் மூன்று நாள் சர்வதேச மாநாடு 2022 செப்.14 அன்று தொடங்கியது. “கட்டடங்களைக் கரியமில வாயு வெளியேற்றமில்லாமல் மாற்றுவது” என்று தலைப்பில் இம்மாநாடு நடைபெற்றது. இந்தியா – சுவிஸ் கட்டுமான எரிசக்தித்திறன் திட்டத்தின்கீழ், வளர்ச்சி & ஒத்துழைப்புக்கான சுவிஸ் முகமையுடன் ஒருங்கிணைந்து எரிசக்தி அமைச்சகத்தின் எரிசக்தித் திறன் பணியகம் அங்கன் 2.0 மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், கட்டடங்களில் எரிசக்தித் திறன் ஆகிய தலைப்புகளில் விவாதங்கள் நடந்தேறின.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. உலகில் ஆற்றல்வாய்ந்த ஏவுகலமாக தயாராகும், ‘GSLV Mk-III’

உலகின் அதிக திறன், ஆற்றல்வாய்ந்த ஏவுகலமாக ‘GSLV Mk-III’ தயாராகி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் உலகளவில் இந்தியா 2ஆவது இடம் வகித்து வருகிறது.

ஆண்டுதோறும் விண்வெளி வாரத்தை அக்.4 முதல் 10-ஆம் தேதி வரை கொண்டாட வேண்டுமென ஐநா சபையில் கடந்த 1999ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 2000ஆம் ஆண்டு முதல் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் 100 நாடுகளில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது.

10th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which institution released the ‘Poverty and Shared Prosperity 2022’ Report?

A. World Bank

B. World Economic Forum

C. International Monetary Fund

D. UNICEF

Answer & Explanation

Answer: A. World Bank

  • World Bank recently released a new report, titled “Poverty and Shared Prosperity 2022: Correcting Course”. As per the report, higher food and energy prices hindered a quick recovery after COVID–19, which has been the biggest setback to global poverty alleviation in decades. Extreme poverty is concentrated in sub–Saharan African countries, which has a poverty rate of about 35 % and accounts for 60 % of all people in extreme poverty.

2. Who is the head of the commission recently set up to examine the Scheduled Caste (SC) status for converted Dalits?

A. Justice K G Balakrishnan

B. Justice H L Dattu

C. Justice Arun Kumar Mishra

D. Justice T S Thakur

Answer & Explanation

Answer: A. Justice K G Balakrishnan

  • The Union Government has appointed a commission to consider the possibility of granting SC status to the persons who have historically belonged to the Scheduled Castes but have converted to religions other than Hinduism, Buddhism and Sikhism. The three–member Commission is headed by former Chief Justice of India K G Balakrishnan. The Cimmission has been asked to submit report in two years.

3. As per UNICEF’s recent report, over 1 million people has displaced in which South East Asian nation?

A. Afghanistan

B. Myanmar

C. Sri Lanka

D. China

Answer & Explanation

Answer: B. Myanmar

  • The United Nations children’s agency (UNICEF) has announced in its recent report that more than one million people have been displaced in Myanmar since the military coup last year. The Southeast Asian nation has been in turmoil since the military ousted Aung San Suu Kyi’s government last year. The report added that more than half of those forced to flee are in the country’s northwest Sagaing region.

4. Which Union Ministry is associated with the ‘Credit Guarantee Scheme for Startups (CGSS)’?

A. Ministry of MSME

B. Ministry of Commerce and Industry

C. Ministry of Finance

D. Ministry of Home Affairs

Answer & Explanation

Answer: B. Ministry of Commerce and Industry

  • The Department for Promotion of Industry and Internal Trade (DPIIT), Ministry of Commerce and Industry has notified the establishment of the Credit Guarantee Scheme for Startups (CGSS). The scheme aims for providing credit guarantees to loans extended by Scheduled Commercial Banks, Non–Banking Financial Companies and Securities and Exchange Board of India (SEBI) registered Alternative Investment Funds (AIFs).

5. For the first time, a ‘Weapon System branch for officers’ has been approved for which Armed Force?

A. Indian Army

B. Indian Navy

C. Indian Air Force

D. Indian Coast Guard

Answer & Explanation

Answer: C. Indian Air Force

  • In a historic step for the Indian Air Force (IAF), Government has approved the creation of a new branch, called the Weapon Systems (WS) branch. The creation of WS branch would entail unification of all weapon system operators under one entity dedicated to the operational employment of all ground–based and specialist airborne weapon systems.
  • The branch would encompass operators in four specialised streams of Surface–to–Surface missiles, Surface–to–Air missiles, Remotely Piloted Aircraft and Weapon System Operators in twin/multi–crew aircraft. The branch will contribute immensely by enhancing the war fighting capability of the Indian Air Force.

6. PSUs of which Ministry recently signed MoUs worth Rs 215 crores with National Sports Development Fund?

A. Finance Ministry

B. Power Ministry

C. Coal Ministry

D. Steel Ministry

Answer & Explanation

Answer: B. Power Ministry

  • National Sports Development Fund (NSDF) of the Department of Sports signed Memorandum of Understandings MoUs with NTPC and REC Ltd, two major PSUs under Ministry of Power. NTPC made a commitment for Rs 115 crores towards Archery while REC Limited made a commitment for Rs 100 Crores for 3 years towards Women’s hockey, Boxing and athletics.

7. Who won the best actor and actress title in Drama Series in the Emmy Awards 2022?

A. Lee Jung–jae and Zendaya

B. Will Smith and Zendaya

C. Brett Goldstein and Zendaya

D. Will Smith and Gillian Anderson

Answer & Explanation

Answer: A. Lee Jung–jae and Zendaya

  • The Emmy Awards 2022 Awarding Ceremony was held recently in Los Angeles. Lead Actor in a Drama Series title was won by Lee Jung–jae, Squid Game while the Lead actress in the same category was won by Zendaya for Euphoria. Hwang Dong–hyuk won the directing Emmy for the dystopian Korean thriller, Squid Game. Jason Sudeikis won Best Actor in Comedy Series for Apple’s show Ted Lasso.

8. Which industry union is organising ‘LEADS Summit’, the thought Leadership initiative of India?

A. NASSCOM

B. FICCI

C. CII

D. ASSOCHAM

Answer & Explanation

Answer: B. FICCI

  • FICCI is organizing the thought Leadership initiative of India, LEADS (Leadership, Excellence, Adaptability, Diversity, Sustainability) in New Delhi. It will have more than 250 participants from around 50 countries. The 3rd edition will include the discussions by 36 global thought leaders exchanging ideas on 11 themes including manufacturing; food for all; innovation; mobility etc. Indian Union Ministers and their counter–parts from Germany and New Zealand will address various thematic sessions.

9. ‘The Green Fins Hub’, the first–ever global marine tourism industry platform, is associated with which institution?

A. WEF

B. UNEP

C. IMF

D. UNICEF

Answer & Explanation

Answer: B. UNEP

  • ‘The Green Fins Hub’ is the first–ever global marine tourism industry platform. The tool has been developed by The Reef–World Foundation in partnership with the UN Environment Programme (UNEP). The tool helps to overcome sustainability challenges in the marine conservation tourism industry.  It helps operators to make simple changes to their daily practices, keep track of their annual improvements and communicate with their communities and customers.

10. Which institution organised the ‘ANGAN 2022’ Conference?

A. Reserve Bank of India

B. Bureau of Energy Efficiency

C. NITI Aayog

D. Central Board of Indirect Taxes

Answer & Explanation

Answer: B. Bureau of Energy Efficiency

  • The second edition of the international conference, ‘ANGAN – 2022’ (Augmenting Nature by Green Affordable New–habitat) was recently held on the title “Making the Zero–Carbon Transition in Buildings”. ANGAN 2.0 is being organised by the Bureau of Energy Efficiency (BEE), Ministry of Power, in collaboration with Swiss Agency for Development & Cooperation (SDC) under the Indo–Swiss Building Energy Efficiency Project (BEEP). The Conference had discussions related to building energy efficiency and reducing carbon emission from buildings.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!