Tnpsc

10th September 2020 Current Affairs in Tamil & English

10th September 2020 Current Affairs in Tamil & English

10th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

10th September Tamil Current Affairs 2020

10th September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.இந்திய அரசு ஒப்புதல் அளித்த, புதிய குடிமைப் பணிகள் சீர்திருத்த இயக்கத்தின் பெயர் என்ன?

அ. நிர்வாக இயக்கம்

ஆ. கர்மயோகி இயக்கம்

இ. iGOT இயக்கம்

ஈ. இந்தியர் இயக்கம்

  • “கர்மயோகி இயக்கம்” என்ற புதிய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் சீர்திருத்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. நடத்தை மாற்றத்தை மையமாகக்கொண்ட, ‘நாட்டு மக்களை மையமாகக்கொண்ட குடிமைப்பணி’யை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். Integrated Government Online Training – iGOT கர்மயோகி தளத்தை அமைப்பதன்மூலம் இந்தப் பயிற்சி வழங்கப்படும். பிரதமரின்கீழ் உள்ள ஒரு பொது மனிதவள கவுன்சில், இத்திட்டத்தைக்கண்காணிக்கும்.

2. ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில், தற்போது, இந்தியாவின் எவ்விரு யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன?

அ. லடாக் & இலட்சத்தீவுகள்

ஆ. லடாக் & புதுச்சேரி

இ. புதுச்சேரி & அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்

ஈ. இலட்சத்தீவுகள் & அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்

  • இந்தியாவின் இரு யூனியன் பிரதேசங்களான லடாக் மற்றும் இலட்சத்தீவுகள், சமீபத்தில், “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவ்விரு யூனியன் பிரதேசங்களும், ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் இணையும் பரிசோதனைகளை நிறைவுசெய்துவிட்டன. இத்துடன் மொத்தம் 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன.

3. விளையாட்டு வீரர் / வீராங்கனைகளை அரசாங்க வேலைகளில் நேரடியாக சேர்ப்பதற்கு, எத்தனை விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன?

அ. 10

ஆ. 20

இ. 30

ஈ. 40

  • விளையாட்டு ஒதுக்கீடுமூலம் குரூப் C நிலை அரசாங்கப் பதவிகளில் நேரடி ஆட்சேர்ப்புக்கு தகுதியான விளையாட்டுப்பட்டியலில் நடுவணரசு மேலும் 20 விளையாட்டுக்களை சேர்த்துள்ளது. முன்னதாக 43 துறைகள் இருந்தன; அவை இப்போது 63 பிரிவுகளாக உயர்த்தப்பட்டுள்ளன. தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் தங்கள் மாநிலம் / இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய திறமையான விளையாட்டு ஆளுமைகள், சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைகளுக்கு தகுதியுடையவர்களாவர்.

4.பிரதமர் கிசான் சம்பதா திட்டத்தை அமல்படுத்தும் நிறுவனமாக உள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. வேளாண் & உழவர்நல அமைச்சகம்

ஆ. உணவுப் பதனிடுதல் தொழிலகங்கள் அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

  • உணவுப்பதனிடுதல் தொழிலகங்கள் அமைச்சகமானது பிரதமர் கிசான் சம்பதா திட்டத்தை (Scheme for Agro – Marine Processing and Development of Agro-Processing Clusters – SAMPADA) செயல்படுத்துகிறது. சமீபத்தில், பிரதமர் கிசான் சம்பதா திட்டத்தின்கீழ் 27 திட்டங்களை செயல்படுத்த நடுவணரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டங்கள் ஒருங்கிணைந்த குளிர்பதனச்சங்கிலிகள் மற்றும் மதிப்புக்கூட்டல் உட்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளன.

5.எந்த ஆயுதப்படைக்கு, பினாகா படையணியை வழங்குவதற்காக, பாதுகாப்பு அமைச்சகம் BMEL, TATA பவர் மற்றும் L&T ஆகியவற்றுடன் கூட்டிணைந்துள்ளது?

அ. இந்திய இராணுவம்

ஆ. இந்தியக் கடற்படை

இ. இந்திய வான்படை

ஈ. இந்திய கடலோரக்காவல்படை

  • பாதுகாப்புத்துறையில், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவானது பாரத் நில அகழ்வு நிறுவனம் (BEML), TATA பவர் நிறுவனம் (TPCL) மற்றும் லார்சன் & டூப்ரோ (L&T) ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய இராணுவத்தின் பீரங்கிப் பிரிவுக்கு ஆறு பினாகா படையணிகளை வழங்குவதற்கான ஒப்பந்த -ங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் தோராயமான செலவினம், `2580 கோடியாகும்.

6. PUBG உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்துள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69A பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, 118 செயலிகளுக்கு தடைவிதித்து இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்பதால் இந்தத் தடை விதிக்கப்படுவதாக நடுவணரசு தெரிவித்துள்ளது. இதில் PUBG மற்றும் Wechat போன்ற பிரபல செயலிகளும் அடங்கும்.

7.நாட்டில் மெட்ரோ இரயில்களை இயக்குவதற்கான வழிகாட்டல்களை வெளியிட்ட அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. இரயில்வே அமைச்சகம்

இ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது நாட்டில் மெட்ரோ இரயில்களை இயக்குவாதற்கான நிலையான இயக்க முறைமையை வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவைகள், செப்டம்பர்.7 முதல் மீண்டும் செயல்படத்தொடங்கியுள்ளன. பயணிகளும் ஊழியர்களும் முகமறைப்பு அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக விலகலை உறுதிசெய்வதற்காக, மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் இரயில்களுக்குள் அடையாள வட்டங்களும் வரையப்படும்.

8.ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) அடைவதற்கு, அனைத்து நாடுகளின் வானூர்திகளும் தன் நாட்டின் வழியாக செல்லலாம் என அனுமதித்துள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. பாகிஸ்தான்

இ. சவூதி அரேபியா

ஈ. துருக்கி

  • ஐக்கிய அரபு அமீரகம் (UAE) கோரிக்கை விடுத்ததை அடுத்து, சவூதி அரேபியா, அனைத்து நாடுகளின் வானூர்திகளும் தனது நாட்டின் வழியாக செல்லலாம் என அனுமதியளித்து அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர், சவூதி அரேபியா, முதலாம் நேரடி இஸ்ரேலிய வணிகப்பயணிகள் விமானத்தை தனது வான்வெளியைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்தை அடைய அனுமதித்தது. அது, இஸ்ரேல் அரசாங்கம் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட தூதுக்குழு சென்ற விமானமாகும்.

9.எந்த மாநிலத்தை மட்டும் தவிர்த்து, நாடு முழுவதும் மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. மகாராஷ்டிரா

ஈ. மேற்கு வங்கம்

  • ‘அன்லாக் 4’ நடவடிக்கைகளின்கீழ், மெட்ரோ இரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. மெட்ரோ இரயில்கள், மகாராஷ்டிர மாநிலத்தைத்தவிர நாடு முழுவதும் முதற்கட்டமாக செப்.7 முதல் தங்களது சேவைகளை மீண்டும் தொடங்கும். சேவைகளை எப்போது மறுதொடக்கம் செய்வது என்பது குறித்து அம்மாநில அரசு முடிவுசெய்யும். இவ்வழிகாட்டுதல்களின்படி, கட்டுப்பாட்டு மண்டலங்களின்கீழ் வரும் அனைத்து இரயில் நிலையங்களும் முடக்கநிலையிலேயே வைத்திருக்கப்படும்.

10.எந்த நாட்டின் புதிய பிரதமராக ஹிச்செம் மெச்சிச்சி நியமிக்கப்பட்டுள்ளார்?

அ. துனிசியா

ஆ. லெபனான்

இ. பிரேசில்

ஈ. தைவான்

  • துனிசியாவின் சட்டமியற்றுநர்கள் நாட்டின் புதிய பிரதமராக ஹிச்செம் மெச்சிச்சி வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். மெச்சிச்சியும் அவரது முன்மொழியப்பட்ட அரசாங்கமும் நீண்ட விவாதத்திற்குப்பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பை வென்றன. முன்னதாக, 46 வயதான முன்னாள் அமைச்சர், தனது அரசு எவ்வாறு பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து துனிசிய நாட்டை வெளியே கொண்டுவரும் என்பதை விளக்கினார். இது, அக்டோபர் முதல் துனிசியாவில் ஏற்படும் மூன்றாவது அரசாங்கமும், 2011 ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்குப் பின்னர் ஏற்படும் ஒன்பதாவது அரசாங்கமும் ஆகும்.

1. What is the name of the new Civil Services reforms programme approved by the Indian Government?

[A] Mission Administration

[B] Mission Karmayogi

[C] Mission iGOT

[D] Mission Indian

  • The Union Cabinet has recently approved the new comprehensive Civil Services reforms programme named “Mission Karmayogi”. The programme aims to create a ‘citizen centric civil service’, which focusses on behavioural change. It will be delivered by setting up an Integrated Government Online Training– iGOT Karmayogi Platform. A Public Human Resources Council under the Prime Minister, will monitor the programme.

2. Which two Union Territories of India have joined in the ‘One Nation One Ration Card’ Scheme?

[A] Ladakh and Lakshadweep

[B] Ladakh and Puducherry

[C] Puducherry and Andaman & Nicobar Islands

[D] Lakshadweep and Andaman & Nicobar Islands

  • Two Union Territories of India Ladakh and Lakshadweep have been recently integrated to One Nation One Ration Card Scheme. With this, a total of 26 states and UTs are seamlessly integrated in the national cluster of the scheme. The UTs have successfully completed the trial of portability transactions with other States and UTs.

3. How many sports disciplines has been added for direct recruitment of sportspersons to Government jobs?

[A] 10

[B] 20

[C] 30

[D] 40

  • The Central Government has added 20 more sports disciplines in the list of sports eligible for direct recruitment in Group C level government posts through sports quota. Earlier there were 43 disciplines which have now been raised to 63 disciplines.
  • Meritorious sports persons who have represented their state or India in national or international competitions are eligible for government jobs, under the special quota.

4. Which Union Ministry is the implementing agency of Pradhan Mantri Kisan Sampada Yojana?

[A] Ministry of Agriculture

[B] Ministry of Food Processing Industries

[C] Ministry of Rural Development

[D] Ministry of Finance

  • Union Ministry of Food Processing Industries (MoFPI) implements Pradhan Mantri Kisan SAMPADA Yojana (Scheme for Agro–Marine Processing and Development of Agro–Processing Clusters). Recently, the Union Government has approved the implementation of 27 projects under the Pradhan Mantri Kisan Sampada Yojana scheme. The projects aim to develop integrated cold chains and value addition infrastructure.

5. Ministry of Defence partnered with BMEL, Tata Power and L&T for supply of Pinaka Regiments to which armed force?

[A] Indian Army

[B] Indian Navy

[C] Indian Air Force

[D] Indian Coastal Guard

  • In a boost to Make in India mission in Defence Sector, the Acquisition Wing of Ministry of Defence (MoD) has signed contracts with Bharat Earth Movers Ltd. (BEML), Tata Power Company Ltd. (TPCL) and Larsen & Toubro (L&T).
  • The contracts have been signed for supply of 6 Pinaka Regiments to the Artillery unit of the Indian Army. The approximate cost of the project is Rs 2580 Crores.

6. Which Union Ministry of India has banned 118 Mobile Apps including PUBG?

[A] Ministry of Defence

[B] Ministry of Electronics and Information Technology

[C] Ministry of External Affairs

[D] Ministry of Home Affairs

  • The Government of India has blocked 118 Mobile Apps which are considered to be prejudicial to Sovereignty and Integrity of the nation and the Defence security of the country. The move has been made by the Ministry of Electronics and Information Technology by using the powers vested under Section 69A of Information Technology (IT) Act. This includes apps like PUBG and Wechat.

7. Which Ministry has released the SOP for metro train operations in the country?

[A] Ministry of Defence

[B] Ministry of Railways

[C] Ministry of Housing and Urban Affairs

[D] Ministry of Home Affairs

  • The Ministry of Housing and Urban Affairs (MoHUA) has released Standard Operating Procedure (SOP) operation of Metro Trains in the country. The metro services are set to restart from 7th September. It has been directed that wearing of face mask is mandatory for all passengers and staff. In order to ensure social distancing, markings at stations and inside trains will also be done.

8. Which country has allowed flights from all countries to cross its skies to reach the UAE?

[A] India

[B] Pakistan

[C] Saudi Arabia

[D] Turkey

  • After the United Arab Emirates requested, Saudi Arabia announced that it will allow flights from all countries to cross its skies to reach the UAE. Before some days, Saudi Arabia allowed the first direct Israeli commercial passenger flight use its airspace to reach the UAE. It carried a high–level delegation of the Government of Israel and the USA.

9. Metro train services are to be operated across the country, except in which state/UT?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Maharashtra

[D] West Bengal

  • The Union Ministry of Housing and Urban affairs has released a set of guidelines for the restarting Metro services under the Unlock 4 measures. Metro trains will resume services in a phased manner across the country from September 7, except in Maharashtra.
  • The state will decide on when to restart the services. As per the guidelines, the stations coming under containment zones will remain closed.

10. Hichem Mechichi has been designated as the new Prime Minister of which country?

[A] Tunisia

[B] Lebanon

[C] Brazil

[D] Taiwan

  • The lawmakers of Tunisia have approved Hichem Mechichi as the country’s new Prime Minister. Mechichi and his proposed government won a confidence vote, after a long debate. Earlier, the 46–year–old former Minister explained how his government would bring the country out of the economic and social crisis. This is the third Government of Tunisia since October and the ninth since the revolution held in 2011.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!