TnpscTnpsc Current Affairs

11th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

11th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 11th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘அன்பாக்ஸ் மீ பிரச்சாரம்’ என்பதுடன் தொடர்புடைய நாள் எது?

அ) திருநங்கையரை இனங்காணும் உலக நாள் 

ஆ) பாகுபாடுகள் ஒழிப்பு நாள்

இ) உலக மனிதாபிமான நாள்

ஈ) ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான உலக நாள்

  • திருநங்கையரை இனங்காணும் உலக நாளானது மார்ச் 31 அன்று அனுசரிக்கப்படுகிறது. USAID ஆனது திருநங்கையரின் உரிமைகளுக்காக வாதிடும், ‘அன்பாக்ஸ் மீ பிரச்சாரம்’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கியது.
  • இது குழந்தைப் பருவத்தில் பாலின அடையாளங்குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமுதாயத்தினரிடையே ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொண்ணூறு சதவீதத்திற்கும் மேலான திருநங்கையர் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறும் இந்தியாவில்தான் இந்தப் பிரச்சாரம் உருவானது.

2. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, 2021 ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில், அதிக மோசடிகளை எதிர்கொண்ட வங்கி எது?

அ) பாரத வங்கி

ஆ) பஞ்சாப் தேசிய வங்கி 

இ) பாங்க் ஆப் இந்தியா

ஈ) மகாராஷ்டிரா வங்கி

  • இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, மொத்தம் 27 அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் 96 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 2021 ஏப்ரல்-டிசம்பரில் மட்டும் மொத்தம் `34,097 கோடி நிதி மோசடி செய்யப்பட்டது. பஞ்சாப் தேசிய வங்கி அதிகபட்ச மதிப்பைப் பதிவு செய்துள்ளது.

3. 2022 – சௌதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்ற பந்தய ஓட்டுநர் யார்?

அ) மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 

ஆ) சார்லஸ் லெக்லெர்க்

இ) லூயிஸ் ஹாமில்டன்

ஈ) செபாஸ்டியன் வெட்டல்

  • பெல்ஜிய-டச்சு பந்தய ஓட்டுநரான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 2022 – சௌதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸை வென்றார். பெராரியின் கார்லோஸ் சைன்ஸ் மற்றும் ரெட் புல்லின்
  • செர்ஜியோ பெரெஸ் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்தனர். மெர்சிடஸ் அணியின் ஜார்ஜ் ரஸ்ஸல் ஐந்தாமிடத்தைப் பிடித்தார். மேலும், லூயிஸ் ஹாமில்டன் 10ஆமிடத்தைப் பிடித்தார்.

4. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்கையை (2022-27) அங்கீகரித்துள்ள மாநிலம் எது?

அ) கர்நாடகா

ஆ) அஸ்ஸாம்

இ) குஜராத்

ஈ) ஒடிஸா

  • கர்நாடக மாநில அமைச்சரவை புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்கைக்கு (2022-27) ஒப்புதல் அளித்துள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான உபகரணங்களை உற்பத்தி செய்யும் மையமாக கர்நாடக மாநிலத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனை 10 ஜிகாவாட்டாக உயர்த்தவும் இந்தக் கொள்கை எண்ணுகிறது.

5. ‘MyGov’ இணையதளத்தை அறிமுகப்படுத்திய முதல் யூனியன் பிரதேசம் எது?

அ) புதுச்சேரி

ஆ) இலட்சத்தீவுகள்

இ) ஜம்மு-காஷ்மீர் 

ஈ) சண்டிகர்

  • ஜம்மு மற்றும் காஷ்மீர் அதன் ‘MyGov’ இணையதளத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் யூனியன் பிரதேசம் ஆகும். இதை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கிவைத்தார். இத்தளம் குடிமக்களின் ஈடுபாட்டை நோக்கமாகக் கொண்டது மற்றும் ‘நல்லாட்சி’ என்ற இலக்கை அடைகிறது. இது, 2014’இல் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.

6. 2022 – தேசிய கடல்சார் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) International trade and Economy

ஆ) Sustainable Shipping beyond COVID-19 

இ) Gratitude towards Navy

ஈ) Atmanirbhar Maritime Force

  • இந்தியா சமீபத்தில் ஏப்.5 அன்று 59ஆம் தேசிய கடல்சார் நாளைக் கொண்டாடியது. “Sustainable Shipping beyond COVID-19” என்பது நடப்பு ஆண்டில் (2022) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும். பன்னாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 1964இல் இந்நாள் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.

7. ‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்தை மேற்பார்வையிடுகிற மத்திய அமைச்சகம் எது?

அ) MSME அமைச்சகம்

ஆ) நிதி அமைச்சகம் 

இ) வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

ஈ) அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

  • கிரீன்பீல்ட் நிறுவனத்தைத் தொடங்குதற்கு உதவுதற்காக, பெண்கள், பட்டியலிடப்பட்ட சாதிகள் (SC) மற்றும் பழங்குடி (ST) பிரிவினர் மத்தியில் தொழில்முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட, ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்தை நடுவண் அரசின் நிதி அமைச்சகம் மேற்பார்வையிடுகிறது. இந்தத் திட்டம் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

8. கங்கௌர் திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ) சிக்கிம்

ஆ) இராஜஸ்தான் 

இ) மணிப்பூர்

ஈ) அருணாச்சல பிரதேசம்

  • கங்கௌர் திருவிழாவானது இராஜஸ்தான் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. COVID தொற்றுநோய் காரணமாக ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு ராஜஸ்தான் சுற்றுலாத் துறை இவ்விழாவை ஏற்பாடு செய்தது.
  • ஏப்ரல்.3ஆம் தேதி தொடங்கிய இந்த விழா தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறுகிறது.

9. இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலராக நியமனம் செய்யப்பட்டவர் யார்?

அ) வினய் மோகன் குவாத்ரா 

ஆ) ருத்ரேந்திர டாண்டன்

இ) தினேஷ் பாட்டியா

ஈ) சந்தோஷ் ஜா

  • இந்திய வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி வினய் மோகன் குவாத்ராவை புதிய வெளியுறவுச் செயலாளராக இந்திய அரசு நியமித்தது. 1988ஆம் ஆண்டுத் தொகுதி IFS அதிகாரியான இவர், தற்போது 2020 ஜனவரி முதல் காத்மாண்டுவில் தூதராகப் பணியாற்றி வருகிறார்.
  • தற்போதைய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லாவுக்குப் பதிலாக வினய் நியமிக்கப்படுகிறார்.

10. ரிக்கி கேஜ் மற்றும் பல்குனி ஷா ஆகியோர் சமீபத்தில் கீழ்காணும் எந்த விருதை வென்றனர்?

அ) அகாதமி விருதுகள்

ஆ) கிராமி விருதுகள் 

இ) பிரிட்ஸ்கர் கட்டடக்கலை பரிசு

ஈ) ஆபெல் பரிசு

  • 64ஆவது ஆண்டு கிராமி விருதுகளில் இரண்டு இந்திய இசைக்கலைஞர்கள் விருது வென்றனர்.
  • அதில், ‘டிவைன் டைட்ஸ்’ என்ற பாடல் தொகுப்புக்காக பெங்களூரைச் சேர்ந்த ரிக்கி கெஜ், ‘சிறந்த புதிய ஆல்பம்’ என்ற பிரிவில் கிராமி விருதை வென்றார். ரிக்கி கெஜ் பெறும் இரண்டாவது கிராமி விருது இதுவாகும். பல்குனி ஷா, ‘சிறார்களுக்கான சிறந்த ஆல்பம்’ என்ற பிரிவில், ‘எ கலர்புல் வேர்ல்டு’ பாடலுக்காக கிராமி விருதைப்பெற்றார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கல்வித்தரத்தில் தமிழகத்துக்கு 22ஆவது இடம்

தேசிய அளவில் கல்வித்தரத்தில் தமிழ்நாடு 22ஆவது இடத்திலிருப்பதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ பாலகுருசாமி தெரிவித்தார்.

கல்வி, சுகாதாரம், தனிநபர் வருமானம் உள்ளிட்ட காரணிகளை உள்ளடக்கிய மனித வளர்ச்சிக் குறியீட்டில், மொத்தமுள்ள 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 130 ஆவது இடத்திலேயே உள்ளது. தனி நபர் வருமானத்தில் 12 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவைவிட சீனா 8 மடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

நவோதயா பள்ளிகள் அமையும் பட்சத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% சிறப்பு ஒதுக்கீடு என்ற தேவை இருக்காது. தமிழகத்தில் கல்விகற்போரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட, தரத்தின் அடிப்படையில் இந்திய அளவில் 22ஆவது இடத்திலேயே தமிழ்நாடு உள்ளது என்றார்.

2. குஜராத்தில் எல்லைச்சுற்றுலா: அமித்ஷா தொடக்கி வைத்தார்

குஜராத் மாநிலத்தில் ‘சீமாதர்ஷன்’ என்ற எல்லை சுற்றுலாத் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கிவைத்தார்.

நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் வாழ்க்கைமுறைபற்றி சாமானிய மக்கள் தெரிந்து கொள்ளும் நோக்கில் `125 கோடியில் இந்தச் சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

3. தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக அணி சாம்பியன்

71ஆவது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஒரு வாரமாக சென்னையில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாட்டு அணி 87-69 என்ற புள்ளிக்கணக்கில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்வை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது.

1. The ‘Unbox Me campaign’, which was launched recently, is associated with which day?

A) International Transgender Day of Visibility 

B) Zero Discrimination Day

C) World Humanitarian Day

D) International Day for People of African Descent

  • International Transgender Day of Visibility is observed on March 31. The USAID launched an initiative called ‘Unbox Me campaign’, which advocates for the rights of transgender children.
  • It aims to raise awareness among parents, teachers and the society about gender identity during childhood. The campaign originated in India, where more than 90 per cent of transgender people leave their homes.

2. As per the data from the Reserve Bank of India, which bank recorded the highest value of frauds in April–December 2021?

A) State Bank of India

B) Punjab National Bank 

C) Bank of India

D) Bank of Maharashtra

  • According to data from the Reserve Bank of India, a total of 27 scheduled commercial banks and financial institutions have reported 96 cases of fraud, involving a total amount of Rs 34,097 crore during April–December 2021. While Punjab National Bank recorded the highest value of frauds worth Rs 4,820 crore.

3. Which racing driver won the Saudi Arabian Grand Prix 2022?

A) Max Verstappen 

B) Charles Leclerc

C) Lewis Hamilton

D) Sebastian Vettel

  • Belgian–Dutch racing driver Max Verstappen won the Saudi Arabian Grand Prix 2022. Max Verstappen won the intense battle with Charles Leclerc to take his first victory of the season. Ferrari’s Carlos Sainz and Red Bull’s Sergio Perez took third and fourth. George Russell finished fifth for Mercedes while ace driver Lewis Hamilton finished at 10th spot.

4. Which state has approved Renewable Energy Policy (2022–27)?

A) Karnataka 

B) Assam

C) Gujarat

D) Kerala

  • The State Cabinet of Karnataka approved Renewable Energy Policy (2022–27). It aims for developing the State as a hub of renewable energy generation as well as manufacturing of equipment related to renewable energy. The policy also seeks to upgrade the renewable energy generation capacity of the State to 10 GW in the next five years.

5. Which is the first Union Territory of India to launch its MyGov platform?

A) Puducherry

B) Lakshadweep

C) Jammu and Kashmir 

D) Chandigarh

  • Jammu and Kashmir is the first India’s first Union Territory to launch its MyGov platform. It was launched by Lieutenant Governor Manoj Sinha. The platform aims for citizen engagement and achieve the goal of ‘Good Governance’. It was launched by Prime Minister Narendra Modi in 2014.

6. What is the theme of the ‘National Maritime Day’ 2022?

A) International trade and Economy

B) Sustainable Shipping beyond COVID–19 

C) Gratitude towards Navy

D) Atmanirbhar Maritime Force

  • India recently celebrated the 59th National Maritime Day which falls on April 5 every year. This year’s theme is ‘Sustainable Shipping beyond COVID–19’. The first anniversary of the day was held in 1964 to raise awareness about international trade and economy.

7. Which Union Ministry oversees the ‘Stand Up India Scheme’?

A) Ministry of MSME

B) Ministry of Finance 

C) Ministry of Commerce and Industry

D) Ministry of Science and Technology

  • Ministry of Finance oversees the ‘Stand Up India Scheme’, which aims to promote entrepreneurship among women, Scheduled Castes (SC) & Scheduled Tribes (ST) categories, to help them in starting a Greenfield enterprise. The scheme has completed six years.

8. Gangaur Festival is predominantly celebrated in which Indian state?

A) Sikkim

B) Rajasthan 

C) Manipur

D) Arunachal Pradesh

  • Gangaur Festival is predominantly celebrated in the state of Rajasthan. Rajasthan Tourism Department organised the festival after two years gap due to the COVID–19 pandemic. The festival commenced on April 3 and continues for 18 days.

9. Who has been appointed as the new Foreign Secretary of India?

A) Vinay Mohan Kwatra 

B) Rudrendra Tandon

C) Dinesh Bhatia

D) Santosh Jha

  • The Indian government appointed senior Indian Foreign Service officer Vinay Mohan Kwatra as the new Foreign Secretary. The 1988–batch IFS officer is currently serving as Ambassador in Kathmandu since January 2020. Vinay Kwatra will replace the incumbent Foreign Secretary Harsh Vardhan Shringla.

10. Ricky Kej and Falguni Shah are the recent winners of which award?

A) Academy Awards

B) Grammy Awards 

C) Pritzker Architecture Prize

D) Abel Prize

  • Two Indian musicians were among the winners at the 64th Annual Grammy Awards. Composer Ricky Kej won his second Grammy Award as he won the award for Best New Age Album, jointly with Stewart Copeland for their album ‘Divine Tides’. Indian–American singer–songwriter Falguni Shah, called as Falu won in the Best Children’s Music Album category for her album ‘A Colorful World’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!