Tnpsc

11th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

11th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 11th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

11th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. உயிரியல் தரவுத்தளங்களின் அடிப்படையில், இந்தியாவின் தர நிலை (rank) என்ன?

அ) 1ஆவது

ஆ) 2ஆவது

இ) 3ஆவது

ஈ) 4ஆவது 

  • உயிரியல் தரவுத்தளங்களுக்கு பங்களிக்கும் முதல் இருபது நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “Biotech-PRIDE” வழிகாட்டுதல்களை வெளியிட்டார். PRIDE என்ற சொல்லுக்கு தரவு பரிமாற்றத்தின்மூலம் ஆராய்ச்சி & கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்” என்று பொருள். இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பத்துறையால் உருவாக்கப்பட்டது.
  • இந்த வழிகாட்டுதல்கள், நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆராய்ச்சிக் குழுக்களில், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கு தகவல்பரிமாற்றத்தை செயல்படுத்தும். ஆரம்பத்தில், இந்திய உயிரியல் தரவு மையம் இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்தும். தற்போதுள்ள பிற தரவுத்தொகுப்புகள் / தரவு மையங்கள் BioGrid என்ற உயிரியல் தரவு மையத்துடன் இணைக்கப்படும்.

2. கலப்பு 4×100 மீ மெட்லி ரிலேவில் உலக சாதனை படைத்துள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) சீனா

இ) ஜப்பான்

ஈ) பிரிட்டன் 

  • சமீபத்தில் நிறைவுற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில், பிரித்தானியா, நீச்சல் நிகழ்வான 4×100 மீ மெட்லி ரிலே போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. ஆண் மற்றும் பெண் உட்பட நான்கு பிரிட்டிஷ் நீச்சல் வீரர்கள் கலப்பு 4×100 மீ மெட்லி ரிலேவில் பங்கேற்றனர். அவர்கள் மொத்தம் 3:37.58 வினாடிகள் நேரத்தை எடுத்துக்கொண்டு முதல் இடத்தைப் பிடித்தனர். இந்தக் காலப்பகுதியில் நிகழ்வை முடித்து உலக சாதனை படைத்தனர். இந்த உலக சாதனை 4 நீச்சல் வீரர்கள் – கேத்லீன் டாசன், ஆடம் பீட்டி, ஜேம்ஸ் கை மற்றும் அன்னா ஹாப்கின் ஆவர்.

3. காரைக்கால் துறைமுகம் அமைந்துள்ள மாநிலம் (அ) யூனியன் பிரதேசம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) புதுச்சேரி 

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) கேரளம்

  • துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகம் ஆனது காரைக்கால் துறைமுகம் (புதுச்சேரி) மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் (இலங்கை) இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்காக புதுச்சேரி மற்றும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முன்மொழிவுகளைப்பெற்று குழுவொன்றை அமைத்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையேயான இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2011’இல் கையெழுத்திடப்பட்டது.

4. புதிதாக வெளியிடப்பட்ட “Nehru, Tibet and China” என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ) அரவிந்த் அதிகா

ஆ) ரமேஷ் நாராயண்

இ) அவ்தார் சிங் பாசின் 

ஈ) ராமச்சந்திர குகா

  • பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா, அவ்தார் சிங் பாசின் எழுதிய “நேரு, திபெத் மற்றும் சீனா” என்ற புதிய நூலை வெளியிட்டது. அவ்தார் சிங் பாசின், ஓர் அசல் காப்பக ஆவணங்களை வெளியிடுபவரும் ஆவார்.
  • “நேரு, திபெத் மற்றும் சீனா” என்ற இந்நூல், இந்தியாவின் சுதந்திரம் முதல் 1962 இந்திய-சீனப் போர் வரை நடந்த பல்வேறு விவரங்கள் மற்றும் நிகழ்வுகள்பற்றி விவரிக்கிறது. அவ்தார் சிங் பாசின், வெளியுறவு அமைச்சகத்தில் சுமார் முப்பதாண்டு காலம் பணியாற்றியுள்ளார். அவர், வரலாற்றுப் பிரிவின் இயக்குநராக இருந்து 1993’இல் ஓய்வுபெற்றார். தெற்காசிய விவகாரங்களில் அவர், “India in Sri Lanka: Between Lion & the Tigers” போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

5. 2021 ஆகஸ்ட்டுக்கான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?

அ) ஜெர்மனி

ஆ) பிரான்ஸ்

இ) ஐக்கியப் பேரரசு

ஈ) இந்தியா 

  • ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா, 2021 ஆகஸ்ட்டிற்கு அதன் தலைவராக செயல்படும். இந்தியா, நார்வே, அயர்லாந்து, மெக்ஸிகோ & கென்யா ஆகியவை நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன. 15 உறுப்பினர்களைக் கொண்ட UNSC’க்கு, 2021 ஜனவரி.1 முதல் இரண்டு ஆண்டுகாலத்திற்கு அந்நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
  • துனிசியா, கடந்த ஜனவரி மாதத்தில் தலைவராக இருந்தது. உறுப்பு நாடுகளின் பெயரின் ஆங்கில அகரவரிசைப்படி, தலைமைப் பதவி கிடைக்கப்பெறும்.

6. 100% COVID-19 தடுப்பூசி செலுத்தப்பெற்ற இந்தியாவில் முதல் நகரம் எது?

அ) சூரத்

ஆ) நொய்டா

இ) புவனேசுவரம் 

ஈ) இந்தூர்

  • புவனேசுவர் மாநகராட்சி (தென்கிழக்கு மண்டலம்) மண்டல துணை ஆணையர் அன்ஷுமன் ராத், 100% COVID-19 தடுப்பூசி செலுத்தப்பெற்ற முதல் நகரமாக புவனேசுவரம் மாறியுள்ளதாக கூறினார். முன்களப் பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள், 18-44 வயதுக்குட்பட்டோர், 45 வயதிற்கு மேற்பட்டோர் என வெவ்வேறு பிரிவுகளின் குடிகளை வகைப்படுத்தியதன்மூலம் 2021 ஜூலை.31ஆம் தேதிக்குள்ளாகவே புவனேசுவர் மாநகராட்சி இந்த இலக்கை அடைந்தது.

7. ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்களை வென்ற முதல் பெண் நீச்சல் வீராங்கனை யார்?

அ) எம்மா மெக்கியன் 

ஆ) சாரா ஸ்ஜோஸ்ட்ரோம்

இ) பெர்னில் புளூம்

ஈ) கெய்லி மெக்கவுன்

  • ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்களை வென்ற முதல் பெண் நீச்சல் வீராங்கனை என்ற பெருமையை எம்மா மெக்கியன் பெற்று உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 7 பதக்கங்களை வென்றார். அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையாவார்.
  • டோக்கியோ ஒலிம்பிக்கில், அவர் இரண்டுமுறை ஒலிம்பிக் சாதனையை முறியடித்தார். அவர், 50மீ பிரீஸ்டைல் போட்டியை 24.02 வினாடிகளில் முடித்து உலக சாதனை படைத்தார். பின்னர் 50 மீ பிரீஸ்டைலை 24 வினாடிகளில் முடித்து மீண்டும் அந்தச் சாதனையை முறியடித்தார். ஒரு விளையாட்டு / நிகழ்வில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தங்கங்களை வென்ற நீச்சல்காரர்களில் மைக்கா பெல்ப்ஸ், மாட் பியோண்டி மற்றும் ஓட்டோ ஆகியோருடன் எம்மா மெக்கியனும் தற்போது இணைகிறார்.

8. 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸிற்கான இந்தியாவின் கீதத்தை இயற்றியவர் யார்?

அ) யோகேஷ்வர் தத்

ஆ) தீபா மாலிக்

இ) சஞ்சீவ் சிங் 

ஈ) வருண் சிங் பதி

  • மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரான சஞ்சீவ் சிங், 2020 டோக்கியோ பாராலிம்பிக்கிற்கான இந்தியாவின் கீதத்தை இயற்றி பாடியுள்ளார். “கர் தே கமல் து” என்று தொடங்கும் இந்தக் கீதத்தை இந்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார். டோக்கியோ ஒலிம்பிக்கில், இந்தியாவிலிருந்து 54 விளையாட்டு வீரர்கள் ஒன்பது விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கிறார்கள்.

9. சமீபத்தில் காலமான நெல்லியோடே வாசுதேவன் நம்பூதிரியுடன் தொடர்புடைய நடனம் எது?

அ) கதக்

ஆ) கதகளி

இ) பரதநாட்டியம் 🗹

ஈ) மோகினியாட்டம்

  • நெல்லியோடே வாசுதேவன் நம்பூதிரி என்பவர் ஒரு கதகளி கலைஞர் ஆவார். அவர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவராவார். சமற்கிருதம் மற்றும் ஹிந்து புராணங்களில் அறிஞரான அவர், கேந்திர சங்கீத நாடக அகாடமி, கேரள சங்கீத நாடக அகாடமி விருது, கேரள மாநில கதகளி பரிசு போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

10. வட இந்தியாவின் முதல் மந்தாரை (orchid) பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ) ஹரியானா

ஆ) உத்தரகாண்ட் 

இ) பஞ்சாப்

ஈ) இமாச்சல பிரதேசம்

  • உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் வட இந்தியாவின் முதல் மந்தாரை பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. மந்தாரை இனங்களை பாதுகாப்பது மற்றும் உள்ளூர் மக்களுக்கு சுற்றுலா மற்றும் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இந்தப் பாதுகாப்பு மையத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • Orchidaceae” என்ற அறிவியல் பெயர்கொண்ட மந்தாரை என்பது ஒரு பூக்குந்தாவரமாகும். அனைத்து மந்தாரை இனங்களும் CITES’இன்கீழ் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த 1975 ஜூலை.1’இல் CITES நிறுவப்பட்டது. ஐவோன் ஹிகுவெரோ, CITES’இன் தற்போதைய பொதுச்செயலாளர் ஆவார். இதன் தலைமையகம் சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கிரசென்ட் கல்வி நிறுவனத்திற்கு மத்திய அரசின் விருது

வண்டலூர் B S அப்துர் ரகுமான் கிரசென்ட் உயர்கல்வி நிறுவனத்திற்கு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற கல்வித் திட்டத்தின் கீழ் சிறந்த பசுமை வளாக விருது வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் தூய்மை செயல்திட்டத்தின் அங்கமாக மாவட்ட அளவில் கல்வி நிறுவன வளாகங்களில் பசுமை மரங்கள் வளர்ப்பு, கழிவுநீர் மேலாண்மை, மரபுசாரா எரிசக்தி பயன்பாடு, தூய்மை வளாக மேலாண்மை உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பசுமை வளாக விருதுடன் ரொக்கப்பரிசாக `5,000 வழங்கி ஊக்குவித்து வருகின்றது.

2. இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் 2.0: பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்

ஏழைக்குடும்பங்களுக்கு இரண்டாம்கட்ட இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை (பிரதம மந்திரி உஜ்வலா யோஜனா 2.0) பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஐந்து கோடி ஏழைக்குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்காக, பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் (பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா 1.0) கடந்த 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பின்னர், அந்தத் திட்டத்தில் SC/ST பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, 8 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அந்த இலக்கையும் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டில் அடைந்து, 8 கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு விட்டது.

அதைத்தொடர்ந்து, ஒரு கோடி ஏழைக்குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று கடந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் நோக்கில், இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் 2.0 தொடங்கப்பட்டுள்ளது.

3. ATM’இல் பணம் இல்லாவிட்டால் வங்கிகளுக்கு அபராதம்: அக்டோபர் 1 முதல் அமல்

தானியங்கி பணப்பட்டுவாடா மையத்தில் (ATM) பணம் இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அபராதம் விதிக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது. அக்.1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. ATM’இல் பணம் இல்லாததால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அசௌகர்யங்களைக் குறைக்கும் வகையிலும், ATM’இல் எப்போதும் பணம் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து 10 மணி நேரத்துக்கு மேல் ATM பணம் இல்லாமல் இருந்தால் `10,000 அபராதம் விதிக்கப்படும். இதற்கு ஏற்றபடி வங்கிகள் பணம் நிரப்புவதற்கான தங்களது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்று RBI அறிவித்துள்ளது.

வங்கி அல்லாத பிற நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ATM நிர்வகிக்கும் நிறுவனங்கள் பணத்தை நிரப்பத் தவறினாலும் இந்த அபராதம் உண்டு. அதே நேரத்தில் வங்கிகள் அந்த அபராதத்தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம். வங்கிகளின் தொடர் விடுமுறை, மக்கள் அதிக அளவில் ATM இயந்திரத்தை நாடும் மாதத்தின் முதல் வாரம் மற்றும் திருவிழா காலங்களில் பல ATM’களில் பணம் இல்லாத சூழல் நிலவுகிறது.

இதனால் வங்கிக்கணக்கில் பணம் இருந்தும் அதனைக் கையில் எடுக்க முடியாமல் திண்டாடும் சூழல் உருவாகிறது. RBI’இன் இந்த நடவடிக்கை மக்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஜூன் மாதம் நிலவரப்படி நாட்டில் 2,13,766 ATM’கள் உள்ளன.

4. நீரஜ் சோப்ராவுக்குக் கெளரவம்: ஆகஸ்ட் 7, தேசிய ஈட்டி எறிதல் நாள்

நீரஜ் சோப்ராவைக் கெளரவப்படுத்தும் விதமாக ஆகஸ்ட் 7ஆம் தேதியை தேசிய ஈட்டி எறிதல் நாளாகக் கொண்டாடப்படும் என இந்தியத் தடகள சம்மேளனம் அறிவித்துள்ளதற்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா (23) தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இறுதிச்சுற்றில் அவர் 87.58 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். கடந்த 1920 ஆன்ட்வெர்ப் ஒலிம்பிக் போட்டியில் தொடங்கி, 101 ஆண்டுகளாக அந்த விளையாட்டுத் திருவிழாவில் களம் கண்டுவரும் இந்தியாவுக்கு தடகளத்தில் கிடைத்துள்ள முதல் மகுடம் இது. முன்னதாக ஒலிம்பிக் தடகளத்தில் ஓட்டப்பந்தயத்தில் மில்கா சிங் (1960 ரோம்), பி டி உஷா (1984 லாஸ் ஏஞ்சலீஸ்) போராடி தவற விட்ட பதக்க வாய்ப்புகளை, தற்போது நீரஜ் சோப்ரா தட்டிச்சென்றுள்ளார்.

இந்நிலையில் ஆக.7 அன்று ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இதையொட்டி ஆக.7ஆம் தேதியை தேசிய ஈட்டி எறிதல் நாளாக தேதி கொண்டாடப்படும் என இந்தியத் தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். அடுத்த வருடம் முதல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

அதற்கடுத்த வருடம் நாட்டிலுள்ள 600’க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1. In terms of biological databases, what is the rank of India?

A) 1st

B) 2nd

C) 3rd

D) 4th 

  • India ranks Fourth among the top 20 countries which is contributing to biological databases. Union Minister Jitendra Singh released the “Biotech–PRIDE Guidelines. The term PRIDE means “Promotion of Research and Innovation through Data Exchange”.
  • It has been developed by Department of Biotechnology, Ministry of Science and Technology. These guidelines will enable exchange of information to promote research and innovation in different research groups across the country. The Indian Biological Data Center (IBDC) will initially implement these guidelines. Other existing datasets/data centers will connect to this IBDC called BioGrid.

2. Which country holds the world record in the mixed 4x100m medley relay?

A) India

B) China

C) Japan

D) Britain 

  • Britain won a gold medal recently at the Tokyo Olympics in a mixed 4x100m medley relay event which is a Swimming event. Four British swimmers including male and female both participated in the mixed 4x100m medley relay and they finished first by taking total time duration of 3:37.58s. They set a world record by finishing the event in this time duration. The four swimmers who set this world record are Kathleen Dawson, Adam Peaty, James Guy and Anna Hopkin.

3. In which state / union territory, Karaikal Port is located?

A) Tamil Nadu

B) Puducherry 

C) Andhra Pradesh

D) Kerala

  • The Ministry of Ports, Shipping and Waterways has set up a committee after receiving the proposals from the government of Puducherry and Sri Lanka to start the passenger shipping between Karaikal Port (Puducherry) and Kankesanthurai Port (Sri Lanka). A memorandum of understanding (MoU) was signed between India and Sri Lanka in 2011.

4. Who is the author of the newly published book, “Nehru, Tibet and China”?

A) Aravind Adiga

B) Ramesh Narayan

C) Avtar Singh Bhasin 

D) Ramchandra Guha

  • Penguin Random House India published a new book “Nehru, Tibet and China” which is authored by Avtar Singh Bhasin. Avtar Singh Bhasin is also the publisher of original archival documents. The book “Nehru, Tibet and China” describes about the various details and events that took place from the Independence of India to the 1962 Indo–China war.
  • Avtar Singh Bhasin served in the Ministry of External Affairs for about 30 years. He retired in 1993 as the Director of the Historical Division. He has also served in the Ministry of Defence and National Archives of India. He has written various books on South Asian Affairs like “India in Sri Lanka: Between Lion & the Tigers”.

5. Which country is named the President of the UN Security Council for August 2021?

A) Germany

B) France

C) United Kingdom

D) India 

  • India, which has been elected as a non–permanent member of the Security Council recently, will serve as its president for the month of August, 2021. India, Norway, Ireland, Mexico and Kenya were elected as the non–permanent members of the 15–nation–UNSC for a two–year term beginning January 1, 2021.
  • Tunisia will begin 2021 as the President of the Council in January. It will be followed by each of the members in turn for one month, as per the English alphabetical order of the name of member states.

6. Which city in India become the first city to achieve 100% Covid–19 Vaccination?

A) Surat

B) Noida

C) Bhubaneshwar 

D) Indore

  • Anshuman Rath, the Zonal Deputy Commissioner of Bhubaneshwar Municipal Corporation (South–east zone) said that Bhubaneshwar has become the first city to achieve 100% Covid–19 Vaccination.
  • Bhubaneshwar Municipal Corporation made different categories of people who are above 18 years like front–line workers, health workers, 18–44 age group, people above 45 years of age. So, it achieved this target by July 31.

7. Who is the first female swimmer to win seven medals in a single Olympic event?

A) Emma Mckeon 

B) Sarah Sjostrom

C) Pernille Blume

D) Kaylee McKeown

  • Emma Mckeon became the first female swimmer to win seven medals in a single Olympic event. She won seven medals at the Tokyo Olympics. She belongs to Australia. She had broken the Olympic record twice in the Tokyo Olympic. She completed the 50m freestyle event in 24.02 seconds and set a world record and then again broken this record by completing the 50m freestyle in 24 seconds.
  • Emma Mckeon joins Michael Phelps, Matt Biondi and Otto, as the only swimmers to win five or more golds at one Games/event.

8. Who composed the theme song of India for Tokyo Paralympics 2020?

A) Yogeshwar Dutt

B) Deepa Malik

C) Sanjeev Singh 

D) Varun Singh Bhati

  • Sanjeev Singh, who is a specially–abled (Divyang) cricketer, composed and sung the theme song of India for the Tokyo Paralympics. The theme song “Kar De Kamaal Tu” was launched by Anurag Thakur, the Sports Minister of India. In the Tokyo Olympics, a record number of 54 athletes from India will participate in nine sports disciplines.

9. Nelliyode Vasudevan Namboothiri, who dies recently, was associated with which dance form?

A) Kathak

B) Kathakali 

C) Bharatanatyam

D) Mohiniyattam

  • Nelliyode Vasudevan Namboothiri was a Kathakali artist. He belonged to Kerala. He was a scholar in Sanskrit and Hindu Puranas and was a recipient of several awards including Kendra Sangeet Natak Akademi, Kerala Sangeetha Nataka Akademi award, Kerala State Kathakali Prize etc.

10. In which state, the first orchid conservation centre of North India has been inaugurated?

A) Haryana

B) Uttarakhand 

C) Punjab

D) Himachal Pradesh

  • The first orchid conservation centre of North India has been inaugurated in Chamoli district of Uttarakhand. The main purpose of the conservation centre is to conserve orchid species and create ventures for tourism and livelihood for local people.
  • Orchid is a flowering plant and its scientific name is Orchidaceae. All orchid species are protected under CITES. CITES was enforced on 1 July, 1975. Ivonne Higuero is the current Secretary–General of CITES. It is headquartered in Geneva, Switzerland.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!