TnpscTnpsc Current Affairs

11th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

11th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 11th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்திய கடற்படையின் மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பலான INS தர்காஷ், கீழ்க்காணும் எந்த நாட்டு கடற்படையுடன் இணைந்து கடல்சார் கூட்டாண்மை பயிற்சியை நடத்தியது?

அ. பிரான்ஸ்

ஆ. ஓமன்

இ. சூடான் 

ஈ. ஜப்பான்

  • இந்திய கடற்படையின் மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பலான INS தர்காஷ், ஜிபூட்டிக்கு விஜயம் செய்து, சூடான் கடற்படைத் தளத்திற்கு அருகிலுள்ள செங்கடலில் சூடான் கடற்படைக் கப்பல்களான அல்மாஸ் மற்றும் நைமர் ஆகியவற்றுடன் கடல்சார் கூட்டாண்மை பயிற்சியை மேற்கொண்டது. இது அதன் கடல் தாண்டிய பயிற்சிகளின் ஒருபகுதியாக சென்றுள்ளது. இது பிரேசிலின் ரியோ டி ஜெனிரியோவிற்கும் செல்லவுள்ளது.

2. ‘பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு’ என்னும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடத்தப்படவுள்ள இடம் எது?

அ. புது தில்லி 

ஆ. புனே

இ. டேராடூன்

ஈ. ஹைதராபாத்

  • பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், புது தில்லியில் முதன்முறையாக, ‘பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு’ (AIDef) என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். சேவைகள், ஆய்வு நிறுவனங்கள், தொழிற்துறை மற்றும் துளிர் நிறுவல்கள் மற்றும் சந்தைக்கு AI தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்காக, நடுவண் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ உற்பத்தித்துறையால் இது ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு ‘GenNext AI’ தீர்வுகள் போட்டியும் அதன் சமயம் ஏற்பாடு செய்யப்பட்டது.

3. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட கவிதைகள், எழுத்துக்கள் மற்றும் வெளியீடுகளை அடையாளங் கண்டு வெளியிட்ட நடுவண் அமைச்சகம் எது?

அ. கலாச்சார அமைச்சகம் 

ஆ. வெளியுறவுத் துறை அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • 75 வார கால ‘அமுதப்பெருவிழா’ கொண்டாட்டங்களை நடத்தும் அமைச்சக்கமாக கலாச்சார அமைச்சகம் உள்ளது. இது பிரிட்டிஷ் அரசாங்கம் தடைசெய்த கவிதைகள், எழுத்துக்கள் மற்றும் வெளியீடுகளை அடையாளங்கண்டு, அவற்றை தொகுத்து, இந்தியாவின் தேசிய ஆவணக் காப்பகத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் படைப்புகள் தமிழ், பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, மராத்தி, கன்னடம், ஒடியா, பஞ்சாபி, சிந்தி, தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட ஒன்பது பிராந்திய மொழிகளில் உள்ளன.

4. அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ஷின்சோ அபே, கீழ்க்காணும் எந்த நாட்டின் முன்னாள் பிரதமராவார்?

அ. ஜப்பான் 

ஆ. சீனா

இ. இந்தோனேசியா

ஈ. தென் கொரியா

  • ஜப்பானின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே, நாரா நகரத்தில் நடந்த ஓர் அரசியல் பிரசார நிகழ்ச்சியின்போது துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். இந்த வாரத்தில் ஜப்பானில் மேலவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஷின்சோ அபே அவரது முன்னாள் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் சுடப்பட்டு இறந்தார்.

5. நிதியமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, இந்திய தேசியக்கொடியின் விற்பனைக்கு எவ்வளவு GST விதிக்கப்படுகிறது?

அ. 18 சதவீதம்

ஆ. 12 சதவீதம்

இ. 5 சதவீதம்

ஈ. 0 சதவீதம் 

  • நிதியமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, இந்திய தேசியக்கொடி விற்பனைக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசியக்கொடி, இயந்திரத்தால் செய்யப்பட்டதா அல்லது பாலியஸ்டரால் செய்யப்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல், சரக்கு & சேவை வரியிலிருந்து (GST) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பருத்தி, பட்டு, கம்பளி அல்லது காதி ஆகியவற்றால் செய்யப்பட்ட கையால் நெய்யப்பட்ட தேசியக்கொடிகளுக்கு ஏற்கனவே GSTஇல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘BepiColombo’ மிஷன் என்பது எதற்கான முதல் ஐரோப்பியத் திட்டமாகும்?

அ. புதன்

ஆ. வெள்ளி

இ. செவ்வாய்

ஈ. வியாழன்

  • 2018இல் தொடங்கப்பட்ட ‘BepiColombo’ என்பது ஐரோப்பிய விண்வெளி முகமை மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகமை (JAXA) ஆகியவற்றின் கூட்டுத்திட்டமாகும். இந்தத்திட்டத்துக்கு இரண்டு தனிப்பட்ட சுற்றுப்பாதைகள் உள்ளன – ESA’இன் Mercury Planetary Orbiter மற்றும் Jaxa’இன் Mercury Magnetospheric Orbiter. இது புதன் கோளிற்கான முதல் ஐரோப்பியத்திட்டமாகும். இந்தக் கூட்டுத்திட்டம் சமீபத்தில் அதன் இரண்டாவது கோள் ஆய்வுக் கலத்தை புதன் கோளில் பறக்கச்செய்தது.

7. 2022 – ஐநா பெருங்கடல் மாநாடு நடைபெறும் இடம் எது?

அ. போர்ச்சுகல் 

ஆ. ஸ்பெயின்

இ. இத்தாலி

ஈ. இந்தியா

  • ஐநா–இன் பெருங்கடல் மாநாடு ஜூன்.27 முதல் ஜூலை.1 வரை போர்ச்சுகலின் லிஸ்பனில் நடத்தப்பட்டது. இது கென்யா மற்றும் போர்ச்சுகல் அரசாங்கங்களால் இணைந்து நடத்தப்பட்டது. கடலின் நிலையான மேலாண்மையை உறுதிசெய்தற்கு தேவையான அறிவியலடிப்படையிலான புதுமையான தீர்வுகளை ஊக்குவிப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும். இது பசுமை தொழில்நுட்பம் மற்றும் கடல்வளங்களின் புதுமையான பயன்பாட்டை ஊக்குவிக்க எண்ணுகிறது. சுகாதாரம், சூழலியல், பொருளாதாரம் மற்றும் கடலின் நிர்வாகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு தீர்வுகாண்பது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மந்தாகினி ஆறானது கீழ்க்காணும் எவ்வாற்றின் துணையாறாகும்?

அ. அலக்னந்தா ஆறு 

ஆ. பாகீரதி ஆறு

இ. கோஷி ஆறு

ஈ. இராமகங்கை ஆறு

  • உத்தரகாண்டில் பாயும் மந்தாகினி ஆறு, கங்கை ஆற்றின் இரண்டு பிரதான நீரோடைகளில் ஒன்றான அலக்னந்தா ஆற்றின் துணையாறாகும். இது கர்வால் இமயமலையில் உள்ள சோராபரி பனிப்பாறையிலிருந்து உருவாகிறது. இந்த ஆறு கங்கையில் கலக்கும் அலக்னந்தா ஆற்றில் கலக்கிறது. சமீபத்தில், மந்தாகினி ஆற்றில் சிக்கிய இரண்டு இளையோரை மீட்க உத்தரகண்ட் மாநில காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்பு நிதியம் (SDRF) இணைந்து நடவடிக்கை மேற்கொண்டது.

9. GST இழப்பீடு செஸ் வரியானது எந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?

அ. 2023

ஆ. 2025

இ. 2026 

ஈ. 2030

  • நடுவண் நிதியமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (வரி மற்றும் செஸ் வசூல் காலம்) விதிகள், 2022–இன்படி, இழப்பீட்டு செஸ் 2022 ஜூலை 1–இலிருந்து 2026 மார்ச் 31–ஆம் தேதி வரை தொடர்ந்து விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செஸ் வரி விதிப்பு ஜூன்.30–ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சர்களைகொண்ட GST கவுன்சில், வருவாய் வசூல் பற்றாக்குறையை ஈடுசெய்ய கடந்த இரண்டு நிதியாண்டுகளில்பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்காக இழப்பீட்டு செஸ்ஸை 2026 மார்ச் வரை நீட்டிக்க முடிவுசெய்துள்ளது.

10. மின்னாற்றலில் இயங்கும் வாகன மின்கலங்களுக்கான தரநிலைகளை உருவாக்கி வெளியிட்ட அமைப்பு எது?

அ. ஆற்றல் திறன் பணியகம்

ஆ. இந்திய தரநிலை பணியகம் 

இ. நிதி ஆயோக்

ஈ. பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்

  • இந்தியாவின் தேசிய தரநிலை அமைப்பான Bureau of Indian Standard (BIS) மின்னாற்றலில் இயங்கும் வாகன மின்கலங்களுக்கான தரநிலைகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின்கீழ் BIS செயல்படுகிறது. நிஜ வாழ்க்கைக் காட்சிகளைக் கருத்தில்கொண்டு, லித்தியம்–அயன் இழுவை மின்கலப் பொதிகள் மற்றும் மின்சாரத்தால் இயக்கப்படும் வாகன அமைப்புகளுக்கான சோதனை விவரக்குறிப்புகளுக்காக இப்புதிய தரநிலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரைபகினா

லண்டனில் நடந்துவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் போட்டி நிறைவடைந்துள்ளது. நடந்த இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் நாட்டின் எலினா ரைபகினாவும், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீரும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரைபகினா 3-6, 6-2, 6-2 செட்களில் ஜபீரை வீழ்த்தினார். இதன்மூலம் முதன்முறையாக ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

2. ஜோகோவிச் சாம்பியன்

ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்புச் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார். இது, ஒட்டு மொத்தமாக அவரது 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இருக்கும் நிலையில், விம்பிள்டனில் அவரது 7-ஆவது சாம்பியன் பட்டமாகும்.

சமன்: விம்பிள்டனில் 7-ஆவது முறையாக பட்டம் வென்று, அமெரிக்காவின் முன்னாள் வீரர் பீட் சாம்ப்ராஸின் எண்ணிக்கையை சமன் செய்துள்ளார் ஜோகோவிச். இந்த கிராண்ட்ஸ்லாமில் அதிக முறை சாம்பியன் (8 முறை) ஆகியிருக்கும் பெருமையை தற்போது ஃபெடரர் தன் வசம் வைத்திருக்கிறார்.

4-ஆவது வீரர்: இதுதவிர, ஓபன் எராவில் தொடர்ந்து 4 முறை விம்பிள்டன் வென்றவர்கள் பட்டியலில் பெடரர், சாம்ப்ராஸ், ஸ்வீடனின் ஜோர்ன் போர்க் ஆகியோரை அடுத்து 4-ஆவது வீரராக ஜோகோவிச் இணைந்திருக்கிறார்.

1. Indian Navy’s stealth frigate INS Tarkash conducted a Maritime Partnership Exercise with which country’s navy?

A. France

B. Oman

C. Sudan 

D. Japan

  • Indian Navy’s stealth frigate INS Tarkash, visited Djibouti and conducted a Maritime Partnership Exercise with Sudan Navy ships Almazz and Nimer in the Red Sea near the Sudan Naval Base. This is a part of its long–range overseas deployment. It is also on a deployment to Rio de Janerio, Brazil.

2. Where is the ‘Artificial Intelligence in Defence’ (AIDef) symposium and exhibition organised?

A. New Delhi 

B. Pune

C. Dehradun

D. Hyderabad

  • Defence Minister Rajnath Singh inaugurated the first ever ‘Artificial Intelligence in Defence’ (AIDef) symposium and exhibition in New Delhi. It was organised by Department of Defence Production, Ministry of Defence, to showcase the cutting–edge AI–enabled solutions developed by the Services, research organisations, Industry and start–ups and launch of AI products for the market. A ‘GenNext AI’ Solutions Competition was also organised.

3. Which Union Ministry identified and published poems, writings and publications that were banned by the British Government?

A. Ministry of Culture 

B. Ministry of External Affairs

C. Ministry of Defence

D. Ministry of Home Affairs

  • The Ministry of Culture is the nodal ministry for the 75–week–long Amrit Mahosav celebrations. It has identified poems, writings and publications that the British government banned and put them as catalogue, which has been published on the website by the National Archives of India. These works are in nine regional languages Tamil, Bengali, Gujarati, Hindi, Marathi, Kannada, Odiya, Punjabi, Sindhi, Telugu and Urdu.

4. Shinzo Abe, who was recently assassinated, is the former Prime Minister of which country?

A. Japan 

B. China

C. Indonesia

D. South Korea

  • Japan’s former Prime Minister Shinzo Abe passed away he was shot at a political campaign event in the city of Nara. Abe’s speech was part of a campaign for his former party, the Liberal Democratic Party, as upper house elections in Japan are due to take place in this week.

5. As per the recent notification by the Finance Ministry, what is the GST applied for sale of the Indian national flag?

A. 18 percent

B. 12 percent

C. 5 percent

D. 0 percent 

  • As per the recent notification by the Finance Ministry, sale of the Indian national flag is exempt from the Goods and Services Tax (GST). The Indian national flag, irrespective of whether machine made or of polyester, is exempt from the Goods and Services Tax (GST). Hand–woven, hand–spun national flags made of cotton, silk, wool or Khadi are already exempt from GST.

6. BepiColombo mission, which recently made news, is the first European mission to__?

A. Mercury 

B. Venus

C. Mars

D. Jupiter

  • Launched in 2018, BepiColombo is the joint mission of the European Space Agency and Japan Aerospace Exploration Agency (JAXA). The mission has two individual orbiters – ESA’s Mercury Planetary Orbiter and Jaxa’s Mercury Magnetospheric Orbiter. It is the first European mission to Mercury. This joint mission recently made its second gravity assist flyby of the Mercury.

7. Which is the venue of the 2022 UN Ocean Conference?

A. Portugal 

B. Spain

C. Italy

D. India

  • United Nations Ocean Conference is set to be organized from June 27 to July 1 in Lisbon, Portugal. It will be co–hosted by the governments of Kenya and Portugal.
  • The aim of the conference is to promote science–based innovative solutions needed to ensure sustainable management of ocean. It seeks to promote green technology and innovative use of marine resources. The conference will discuss solutions to address threats to health, ecology, economy and governance of the ocean.

8. Mandakini River, which was recently found in the news, is the tributary of which river?

A. Alaknanda River 

B. Bhagirathi River

C. Koshi River

D. Ramganga River

  • The Mandakini River in Uttarakhand is the tributary of the Alaknanda River, which is one of the two head–streams of Ganga River. It originates from the Chorabari Glacier in the Garhwal Himalayas. The river drains into the Alaknanda, which flows into the Ganges. Recently, a joint operation was conducted by Uttarkhand Police and the State Disaster Response Fund (SDRF) to rescue two youths trapped in the Mandakini River.

9. The levy of GST compensation cess has been extended till which year?

A. 2023

B. 2025

C. 2026 

D. 2030

  • As per the Goods and Services Tax (Period of Levy and Collection of Cess) Rules, 2022, notified by the Ministry of Finance, the compensation cess will continue to be levied from July 1, 2022 to March 31, 2026. The levy of cess, which was to end on June 30 was extended by the GST Council, chaired by Union Finance Minister Nirmala Sitharaman. It is used to repay the loans taken in the last two fiscal years to make up for the shortfall in revenue collection.

10. Which body has formulated and published standards for electric vehicle (EV) batteries?

A. Bureau of Energy Efficiency

B. Bureau of Indian Standard 

C. NITI Aayog

D. Power Finance Corporation

  • India’s national standard body, the Bureau of Indian Standard (BIS) has formulated and published standards for electric vehicle (EV) batteries. BIS functions under the aegis of Ministry of Consumer Affairs, Food & Public Distribution. The new standards are released for test specifications for Lithium–ion Traction Battery Packs and Systems for Electrically Propelled Road Vehicles, considering real–life scenarios.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!