Tnpsc

11th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

11th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 11th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

11th March 2021 Tnpsc Current Affairs in Tamil

1. அண்மையில், ‘உணவு கழிவு குறியீட்டு அறிக்கை – 2021’ஐ வெளியிட்ட அமைப்பு எது?

அ) UNEP

ஆ) UNESCO

இ) UNCTAD

ஈ) FAO

  • ஐநா சுற்றுச்சூழல் திட்டமானது (UNEP) ‘உணவு கழிவு குறியீட்டறிக்கை – 2021’ஐ வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, உலகம் முழுவதும் 931 மில்லியன் டன் உணவு வீணடிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • வீணடிக்கப்பட்ட மொத்த உணவில் 61% வீடுகளிலிருந்தும், 26% உண -வு சேவைகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களிலிருந்தும், 13% சில்ல -றை விற்பனை நிறுவனங்களிலிருந்தும் வந்துள்ளதாக இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

2. ஐக்கிய நாடுகளின் ஐரோப்பாவுக்கான பொருளாதார ஆணையத் -தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) ஜெனிவா

ஆ) பிரஸ்ஸல்ஸ்

இ) ரோம்

ஈ) பாரிஸ்

  • ஐரோப்பாவுக்கான ஐநா பொருளாதார ஆணையத்தை (UNECE) 1947’இல் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (ECOSOC) அமைத்தது. இதன் தலைமையகம் சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. UNECE வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, கரியமில வாயு நடுநிலைமைத்தன்மையை அடைவதற்கு, புதைப்படிவ மின்னுற்பத்தியிலும் தொழிலகங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் கரிய -மிலவாயுவை சேமிப்பது அவசியமாகும்.

3. OPELIP என்பது பின்வரும் எந்த அமைப்பால் நிதியளிக்கப்படுகிற ஒரு பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டமாகும்?

அ) உலக வங்கி

ஆ) IFAD

இ) IMF

ஈ) ADB

  • ஒடிஸா மாநிலத்தில் வாழும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியி
    -னர் குழுக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் (Odisha Particularly Vulnerable Tribal Groups Empowerment and Livelihoods Improvement Programme – OPELIP) என்பது வேளாண் மேம்பாட்டுக்கான பன்னாட்டு நிதியத்தால் (IFAD) நிதியளிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். திறன் மேம்பாடு மற்றும் நவீன விவசாய நடைமுறைகள் மூலம் வாழ்வை மேம்படுத்துதல் மற்றும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களிடையே வறுமையை குறைப்பதே இதன் நோக்கம்.

4. ICRISAT’இன் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) ஹைதராபாத்

ஆ) சென்னை

இ) மும்பை

ஈ) பெங்களூரு

  • மித வறட்சியான வெப்பமண்டலங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் (ICRISAT) என்பது கிராமப்புற மேம்பாட்டுக்கான வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இதன் தலை -மையகம் ஹைதராபாத்தின் பதஞ்செருவில் அமைந்துள்ளது. OPELIP திட்டத்தின்மூலம், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்க -ளுக்கான திறன்மேம்பாட்டு முயற்சிகளை வழங்குவதற்காக ஒடிஸா அரசாங்கத்தால் இது சமீபத்தில் இணைக்கப்பட்டது.

5. CARICOM’இன் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) தென்னாப்பிரிக்கா

ஆ) கயானா

இ) ஜிம்பாப்வே

ஈ) நமீபியா

  • CARICOM என்பது கரீபிய சமூகத்தை குறிக்கிறது. இது, கடந்த 1973’இல் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் கயானாவின் ஜார்ஜ்டெளனில் அமைந்துள்ளது. இது கரீபிய சமூகம் மற்றும் பொதுவான சந்தை என்றும் அழைக்கப்படுகிறது.
  • CARICOM என்பது பதினைந்து உறுப்புநாடுகள் மற்றும் ஐந்து இணை உறுப்பினர்களைக்கொண்ட இருபது நாடுகளின் குழுமமாகும். அதன் உறுப்பினர்களிடையே பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்து
    -ழைப்பை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. COVID-19 தடுப்பூசிகளை நட்புநாடுகளுக்கு வழங்கும் இந்தியாவி -ன் முன்னெடுப்பின் பெயர் என்ன?

அ) Vaccine Maitri

ஆ) Vaccine to Mitron

இ) Bharat Vaccine Mitra

ஈ) India contributes

  • ‘Vaccine Maitri’ முன்னெடுப்பானது கடந்த ஜன.20 அன்று தொடங்கப்பட் -டது. இந்த முன்னெடுப்பின்கீழ், இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசிகளை வழங்குகிறது.
  • பூடான் மற்றும் மாலத்தீவுகள்தான் தடுப்பூசிகளைப்பெற்ற முதல் நாடுகள். இவ்விரு நாடுகளைத்தொடர்ந்து வங்காளதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. அண்மையில் கயானா, சமைக்கா மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளுக்கு COVID-19 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன.

7.நாகர்ஹோளே புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) கர்நாடகா

ஆ) ஆந்திர பிரதேசம்

இ) மகாராஷ்டிரா

ஈ) கோவா

  • முன்பு ராஜீவ் காந்தி (நாகர்ஹோளே) தேசிய பூங்கா என்றழைக்கப்பட்ட நாகர்ஹோளே புலிகள் காப்பகம் என்பது கர்நாடகா மாநிலத்தில் உள்ள வனவுயிரி காப்பகமாகும். இது நீலகிரி உயிர்க்கோள இருப்பகதத்தின் ஒருபகுதியாகும். இதற்கு நாகர்ஹோளே ஆற்றின் பெயரிடப்பட்டுள்ளது, கன்னட மொழியில் இதற்கு ‘பாம்பாறு’ எனப்பொருள்.
  • சமீபத்தில் இந்தக் காப்பகத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயில் சிக்கி பல ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதிகள் அழிந்தன.

8. அண்மையில் கண்டறியப்பட்ட, ‘விண்வெளி சூறாவளி’, புவியின் எந்தப்பகுதியில் காணப்பட்டது?

அ) வட துருவம்

ஆ) தென் துருவம்

இ) வெப்பமண்டலத்திடை காற்றழுத்தத்தாழ்வு மண்டலம்

ஈ) நிலநடுக்கோட்டுப்பகுதி

  • அறிவியலாளர்கள் முதன்முறையாக ஒரு ‘விண்வெளி சூறாவளி’யைக் கண்டுபிடித்தனர். இச்சூறாவளி, புவியின் மேல் வளிமண்டலத்தில், வட துருவத்தின் மீது எட்டு மணி நேரம் வீசியது. அமெரிக்கா, நார்வே, சீனா மற்றும் ஐக்கியப்பேரரசு ஆகிய நாடுகளின் அறிவியலாளர்கள் குழுமம், பாதுகாப்பு வானிலை செயற்கைக்கோள் திட்டத்தின் செயற்கைக்கோள் -கள் மற்றும் ஒரு முப்பரிமாண காந்த மண்டலத்தை மாதிரியாகப் பயன்படுத்தி அச்சூறாவளியின் படத்தைக் கூர்ந்து தயாரித்தது.

9. ‘உலக உணவுவிலைக்குறியீட்டை’ வெளியிடுகிற அமைப்பு எது?

அ) உலக வங்கி

ஆ) உணவு மற்றும் உழவு அமைப்பு

இ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ) IFAD

  • உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO) உணவு விலைக்குறியீட்டை வெளியிட்டு வருகிறது. இது தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் மாதாந்திர விலை ஏற்ற இறக்கங்களை அளவிடுகிறது.
  • சமீபத்திய ஜனவரி மாத புள்ளிவிவரத்தின்படி, பிப்ரவரி மாதத்தில் உலக உணவுவிலைகள் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக உயர்ந்தன. 2014 ஜூலை முதல் இந்தக் குறியீட்டு எண் உயர்ந்துகொண்டே செல்கிறது. சர்க்கரை மற்றும் தாவர எண்ணெய்களின் விலை உயர்வே இந்தக் குறியீட்டு எண்ணின் உயர்வுக்கு வழிவகுக்கிறது.

10. எந்த ஆற்றின்மீது, ‘நட்புப்பாலம்’ கட்டப்பட்டுள்ளது?

அ) பிரம்மபுத்திரா

ஆ) யமுனை

இ) கோசி

ஈ) பெனி

  • திரிபுரா மாநிலத்தில் பாயும் பெனி ஆற்றின்மீது, 1.9 கிமீ நீளத்திற்கு கட்டப் -பட்டுள்ள பாலந்தான், ‘நட்புப்பாலம்’. இந்தப்பாலம், இந்தியாவையும் வங் -காளதேசத்தையும் இணைக்கிறது. இப்பாலத்தை தேசிய நெடுஞ்சாலை -கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகம், `133 கோடி செலவில் கட்டியுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாட்டில் காசநோய் பாதிப்பு 24 % குறைவு

தமிழ்நாட்டில் கடந்த இருமாதங்களில் மட்டும் 15,300 பேர் காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 24% குறைவான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025’க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன் பயனாக காசநோய் பாதிப்பு தொடா்பாக விழிப்புணா்வு மேம்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டைப்பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84% பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடர்சிகிச்சைகள்மூலம் மீதமுள்ளவர்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த இருமாதங்களில் தனியார் மற்றும் அரசு மருத்துவம -னைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுக -ளை ஆய்வுசெய்தபோது நாடு முழுவதும் 3.78 லட்சம் பேருக்கு அந்நோய் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளர்.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் 15,362 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவர்களில், தனியார் மருத்துவமனைகளில் 2960 பேரும், அரசு மருத்துவமனைகளில் 12,402 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2020’இல் இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 24% அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2. இந்தியா-வங்கதேசம் இடையேயான நதியில் ‘நட்புப்பாலம்’

இந்தியா-வங்கதேசம் எல்லையில் பாயும் ஃபெனி நதி மீது கட்டப்பட்டுள்ள ‘நட்புப்பாலத்தை’ (மைத்ரி சேது) பிரதமர் மோடி திறந்துவைத்தார். எல்லை மாநிலமான திரிபுராவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான எல்லை
-யாக ஃபெனி ஆறு வரையறுக்கப்பட்டுள்ளது.

திரிபுராவின் சப்ரூம் பகுதிக்கும் வங்கதேசத்தின் ராம்கர் பகுதிக்கும் இடை -யே அந்நதியின்மீது 1.9 கிமீ நீளத்துக்கு அப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையேயான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

3. தஞ்சாவூர் அருகே இராஜராஜன் காலத்து நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் அருகே பேரரசர் இராஜராஜன் கால நிலக்கொடை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. தஞ்சாவூர் அருகே அருண்மொழிதேவன்பேட்டை கிராமத்தில், ராஜராஜசோழன் காலத்தைச்சார்ந்த ஒரு துண்டுக்கல்வெட்டு கிடப்பதாக, தஞ்சாவூர் சரசுவதி மகால் நுாலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறனுக்கு தகவல்கிடைத்தது. இதைய -டுத்து மணிமாறன், பொந்தியாகுளம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜன், ஆசிரியர் ஜெயலெட்சுமி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மணிமாறன் கூறியதாவது: சோழர்காலத்தில் தஞ்சாவூர் கூற்றத்தின் புறம்படியாகத்திகழ்ந்த அருண்மொழிதேவன்பேட்டை, மாமன்னர் இராஜராஜனின் பெயரால் அமைந்த ஊர். இப்பகுதியில் உள்ள சமுத்திரம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக வெட்டப்பட்ட லோகமாதேவி மற்றும் அருண்மொழிதேவன் என்று இரண்டு வாய்க்கால்கள் உள்ளன. இதில் அருண்மொழிதேவன் வாய்க்கால் மதகு சீர்செய்யப்பட்டபோது அங்கிருந்து இக்கல்வெட்டு எடுக்கப்பெற்றது.

இக்கல்வெட்டு ராஜராஜசோழனின் நிலக்கொடைபற்றிக் குறிப்பிட்டுள்ளது. மேலும், வானவன் மூவேந்த வேளாண் என்ற அதிகாரியின் பெயர் காண -ப்படுகிறது. இவர் இராஜராஜசோழன் காலத்தில் உயர்பொறுப்பில் இருந்த அதிகாரியாவார். இராஜராஜனின் இரண்டாவது ஆட்சியாண்டு தொடங்கி ஒன்பதாவது ஆட்சியாண்டு வரையிலுள்ள திருப்புறம்பியம் கல்வெட்டிலும், பதினேழாவது ஆட்சியாண்டு கரந்தை கல்வெட்டிலும் மூவேந்த வேளாண் பெயர் குறிப்பிடப்பெற்றுள்ளது. அருண்மொழிதேவன்பேட்டையில் கண்டெ -டுக்கப்பெற்ற கல்வெட்டு வாசகம் கரந்தை கல்வெட்டில் காணப்படும் வாசகங்களுடன் ஒத்துள்ளது.

4. ISRO தயாரிப்பில் அதி நவீன ‘ரேடார்’

இந்திய விண்வெளி ஆய்வு மையமான ISRO, பூமியின் மேற்பகுதியை மிகத்துல்லியமாக படம்பிடிக்கும் திறனுள்ள, ‘SAR ரேடார்’ சாதனத்தை தயாரித்துள்ளது. ISRO, அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான, NASA உடன் இணைந்து, முதன்முறையாக, ‘NISAR’ என்ற செயற்கைகோளை, அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தவுள்ளது. இதில், முதன்முறையாக, வெவ்வேறு அலைவரிசை திறன்கொண்ட, ‘L கற்றை மற்றும் S கற்றை’ ரேடார்கள் பொருத்தப்படவுள்ளன.

இத்திட்டத்தில், செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுக -லம், S கற்றை SAR ரேடார் ஆகியவற்றை, ISRO வழங்கும். அறிவியல் சார்ந்த தகவல்களை சேகரிப்பதற்கான, L கற்றை SAR ரேடார், இருப்பிடத் -தை அறிய உதவும் GPS ரிசீவர் ஆகியவற்றை NASA தயாரித்தளிக்கும். இந்த ரேடார் சாதனத்தில், NASA அதன் ரேடார் சாதனத்தை பொருத்தி, இந்தியாவுக்கு அனுப்பியவுடன், அடுத்த ஆண்டு, ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து, ஏவுகலம் வாயிலாக, NISAR செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும்.

5. மின்னூல் வடிவில் பகவத் கீதையை பிரதமர் வெளியிட்டார்

பகவத் கீதை ஆங்கில பதிப்பின், மின்நூலை பிரதமர் வெளியிட்டார். தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை சுவாமி சித்பவான -ந்தர், இந்தப் பகவத் கீதைக்கு, தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்க உரைகளை எழுதியுள்ளார்.

6. நாடாளுமன்றத்தில் நிறைவேறியது மத்தியஸ்தம்-சமரசம் சட்டத் திருத்த மசோதா

மத்தியஸ்தம்-சமரசம் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. மத்தியஸ்தம்-சமரசம் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வற்கான அவசரச்சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்ப -ரில் இயற்றியது. அந்த அவசரச்சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புத
-லைப் பெறும் நோக்கில், மத்தியஸ்தம்-சமரசம் சட்டத் திருத்த மசோதா, பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால், அந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்தியஸ்தம் மற்றும் சமரசம் வாயிலாக அளிக்க -ப்பட்ட தீர்வை அமல்படுத்துவதற்குத் தடைபெறும் வாய்ப்பை இம்மசோதா வழங்குகிறது. குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அந்த மசோதா அனுப்பிவைக்கப்படவுள்ளது. ஒப்புதலளித்தபிறகு அது சட்டவடிவு பெறும்.

7. உத்தரகண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்ற தீரத் சிங் ராவத்

உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தீரத் சிங் ராவத் பொறுப்பேற்றுக்கொண்டார். உத்தரகண்ட் மாநில பாஜ கட்சியில் எழுந்த அதிருப்தி காரணமாக கட்சியின் மத்திய தலைமையின் உத்தரவின் பேரில் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் (60) தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில் புதிய முதல்வராக பாஜக எம்.பி. தீரத் சிங் ராவத் தேர்வுசெய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து டேராடூனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் ராணி மெளரி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

8. ‘ஸ்கார்பீன்’ ரக நீர்மூழ்கி கப்பலான ‘INS கரஞ்ச்’ நாட்டுக்காக அர்ப்பணிப்பு.

கடல் பிராந்திய சவால்களை எதிர்கொள்ளும் விதமாக இந்திய கடற்படை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இரகசியமாக செயல்படும் ‘ஸ்கார்பீன்’ வகை நீர்மூழ்கியான INS கரஞ்ச், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி, மும்பையில் உள்ள கடற்படை கப்பல்துறையில் நடைபெற்றது. இந்திய கடற்படையில் இணை -க்கப்பட்டுள்ள மூன்றாவது ‘ஸ்கார்பீன்’ வகை நீழ்மூழ்கியாகும் இது.

கடற்படையின் மேற்குப்பிரிவில் இது சேர்க்கப்படுகிறது. அதிநவீன வசதிக -ள், தாக்குதல் திறனுள்ள இந்நீர்மூழ்கிக்கப்பலை, அரசுக்கு சொந்தமான மும்பை மஸகோன் கப்பல் கட்டுமான நிறுவனம், பிரான்ஸ் நாட்டின் கடற்படை குழுமத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இதுபோன்ற 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. INS கரஞ்ச், தன்னிறைவு இந்தியா திட்டத்தின்கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது என்று தொடக்க நிகழ்வில் பேசிய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கூறினார். இந்நிகழ்ச்சியில், கடற்படை முன்னாள் தலைமைத்தளபதியும், 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற பழைய கராஞ்ச் நீர்மூழ்கி கப்பலின் தளபதியுமான அட்மிரல் V S ஷெகாவத் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

9. மார்ச்.12 ‘QUAD’ உச்சிமாநாடு: மோடி, ஜோ பைடன் பங்கேற்பு

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் கூட்டமைப்பின் (QUAD) உயர்மட்டத்தலைவர்கள் பங்கேற்கும் முதலாவது உச்சிமாநாடு மார்ச்.12 நடைபெறுகிறது. கடந்த 2004’இல் பல நாடுகளில் ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்குப்பின் இந்த 4 நாடுகள் கூட்டமைப்பு (QUAD) உருவாக்கப்பட்டது. அதன்பின் 2007’இல் இந்த அமைப்பு முறைப்படுத்தப்ப -ட்டது. இன்றைய சூழ்நிலையில், பன்னாட்டுச் சமூகம் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

COVID-19 சவால்கள், பொருளாதார நெருக்கடி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகள் குறித்து அதிபர் ஜோ பைடன் விவாதிப்பார். இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவது குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும்.

10. சுகாதாரம் மற்றும் கல்வி மேல்வரி வருவாய் மூலம் கிடைக்கும் நிதியிலிருந்து சுகாதாரத்திற்கு காலாவதியாகாத ஒற்றைத் தொகுப்பு வைப்பு நிதியான பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதியை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சுகாதாரம் மற்றும் கல்விக்கான மேல்வரி வருவாய் மூலம் கிடைக்கும் நிதியில் இருந்து நிதிச் சட்டம் 2007-ன் 136-பி பிரிவின் கீழ் சுகாதாரத்தின் பங்காக காலாவதியாகாத ஒற்றைத் தொகுப்பு வைப்புநிதியான பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதியை உருவாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதியின் முக்கிய அம்சங்கள்:

i. சுகாதாரத்திற்கான காலாவதியாகாத ஒற்றைத் தொகுப்பு வைப்புநிதி பொது கணக்கில் உருவாக்கப்படும்

ii. சுகாதாரம் மற்றும் கல்விக்கான மேல்வரி வருவாய் மூலம் கிடைக்கும் நிதியில் சுகாதாரத்தில் பங்கு, பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதியின் கணக்கில் சேர்க்கப்படும்

iii. பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதியில் சேர்க்கப்படும் தொகை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ்க்காணும் முக்கிய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்:

• ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம்

• ஆயுஷ்மான் பாரத்- சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள்

• தேசிய சுகாதார இயக்கம்

• பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா திட்டம்

• மருத்துவ அவசர காலங்களின் போது அவசரகால மற்றும் பேரிடர் தயார் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்

• நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் தேசிய சுகாதார கொள்கை 2017-இன் இலக்குகளை முன்னெடுத்து செல்வதற்கான எதிர்கால திட்டங்கள்

iv. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் இந்தத் தொகுப்பின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்படும்

v. எந்த நிதி ஆண்டிலும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கான செலவினங்கள் முதலில் இந்தவைப்பு நிதியிலிருந்தும், அதன்பிறகு ஒட்டுமொத்த நிதிநிலை ஆதரவிலிருந்தும் வழங்கப்படும்.

பயன்கள்:

ஒதுக்கப்பட்ட தொகை, நிதி ஆண்டின் முடிவிற்குள் காலாவதியாகாததை உறுதிசெய்து, ஒதுக்கப்பட்ட வளங்களின் இருப்பைக் கொண்டு அனைவருக்கும் கிடைக்கும் வகையில் சர்வதேச தரத்திலான மருத்துவ சேவையை வழங்குவது இதன் முக்கிய பயனாகும்.

11. நிலவு ஆராய்ச்சி நிலையம் அமைக்க சீனா-ரஷியா ஒப்பந்தம்

புவியின் துணைக்கோளான நிலவு குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான நிலையத்தை அமைப்பதற்கு சீனா-ரஷியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

நிலவின் மேற்பரப்பிலோ சுற்றுவட்டப்பாதையிலோ இந்த ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது. நிலவுசார்ந்த அனைத்து ஆய்வுகளையும் இங்கு மேற்கொள்ளமுடியும். மற்ற நாடுகளும் இந்த ஆராய்ச்சி நிலையத்
-தைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

12. பார்சல்கள் விநியோகிக்கப்படுவதை கண்காணிக்க இந்திய அஞ்சல் துறையில் புதிய வசதி அறிமுகம்

கார்ப்பரேட், MSME உள்ளிட்ட நிறுவனங்கள் தாங்கள் அனுப்பும் பார்சல்களை கண்காணிக்க இந்தியஅஞ்சல் துறை புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. கடிதங்கள், மணியார்டர்களை விநியோகிப்பது, சேமிப்புக்கணக்கு, கிசான் விகாஸ் பத்திரங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட குறிப்பிட்ட சேவைகளை மட்டுமே அஞ்சல் துறை வழங்கி வந்தது. இந்நிலையில் போட்டிகள் நிறைந்த தற்போதைய சந்தை சவாலை சந்திக்க அஞ்சல் துறையும் தனது சேவைகளை மேம்படுத்தி வருகிறது.

13. வாழைக்கழிவிலிருந்து ஆடை, பிஸ்கட் தயாரிக்கும் தொழில்நுட்பம்: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் நிறுவனம் கண்டுபிடிப்பு

வாழைத்தண்டிலிருந்து ஆடை, பிஸ்கட், ஊறுகாய் உள்ளிட்ட பல பயனுள்ள பொருட்களை உருவாக்கும் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடி -த்துள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் என்.டி.ஆர்.எஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தவிர கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் வாழை சாகுபடி அதிகம் என்பதால், என்.டி.ஆர்.எஃப் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, இயக்குநர் இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு ஆகியோர் இத்தொழில்நுட்பம்குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவை சந்தித்து இந்தத் திட்டத்தை விளக்கினர்.

வாழைத்தண்டின் உள்பாகத்தில் இருந்து ஊறுகாய், பிஸ்கட், ஆரோக்கிய பானங்கள் ஆகியவற்றையும் தயாரிக்கலாம். இந்த ஆராய்ச்சி முயற்சிகளில் திருச்சியிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தோடு இணைந்து என்.டி.ஆர்.எஃப் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. வாழைத்தண்டின் நீர்ச்சத்
-தை பயன்படுத்தி உயிரி-உரங்கள், கழிவுப்பொருட்களிலிருந்து ஒலி தடுப்புப்பலகைகள் போன்ற பல மதிப்புகூட்டப்பட்ட பொருட்களும் தயாரிக்க முடியும். இத்திட்டத்தால் வாழை உழவர்களின் வாழ்வாதாரம் வலுப்பெறும் என்.டி.ஆர்.எஃப் கூட்டமைப்பின் இந்த ஆராய்ச்சி முயற்சிகளை முன்னெடு -க்க தமிழ்நாடு அரசு 7 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

14. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தாமஸ் பேச் மீண்டும் தேர்வு

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தாமஸ் பேச் (67) மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனியைச்சேர்ந்த வழக்குரைஞ -ரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றார். அவர் 2025ஆம் ஆண்டு வரை இந்தப்பதவியில் நீடிப்பார்.

15. ஏழு இந்திய பெண்களுக்கு அமெரிக்க விருது கிடைத்தது

அமெரிக்காவில், சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்தியாவைச் சேர்ந்த ஏழு பெண்களுக்கு, சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அமெரிக்காவில், நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிகட் மாகாண இந்தியர்கள் கூட்டமைப்பு, சர்வதேச பெண்கள் தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில், நியூயார்க்கில் உள்ள இந்திய துணை துாதர் ரந்திர் ஜெய்சால் பங்கேற்று, பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனை பெண்கள் எழுவருக்கு, விருது, பாராட்டுச்சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.

அவ்வகையில், வதோதராவைச்சார்ந்த, நவரசனா கல்விக்கழக தலைவரு -ம் ‘துாய்மை இந்தியா’ திட்டத்தின் துாதருமான தேஜல் அமின் விருது பெற்றார். ஹார்ட்போர்டு ஹெல்த்கேர் மருத்துவமனையில் மருத்துவராக உள்ள உமா ராணி மதுசூதனா, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பான சேவை வழங்கியதற்காக பாராட்டப்பட்டார்.

செவிலியர், ராஷ்மி அகர்வால், பல் மருத்துவர் அபா ஜெய்ஸ்வால், சட்ட ஆலோசகர் சபீனா தில்லான், நடிகையும் தயாரிப்பாளருமான ராஷனா ஷா ஆகியோருக்கும், விருது வழங்கப்பட்டது. குடும்ப வன்முறையால் பாதிக்கப் -படுவோருக்கு உணவு உள்ளிட்ட உதவிகளையும், இலவச முகக்கவசங் -களையும் வழங்கிய, ‘மாஸ்க் ஸ்குவாட்’ என்ற மகளிர் அமைப்பை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.

1. Which organization recently published the “Food Waste Index Report, 2021”?

A) UNEP

B) UNESCO

C) UNCTAD

D) FAO

  • The United Nation Environment Programme (UNEP) published the “Food Waste Index Report, 2021”. As per the UNEP report, estimated 931 million tonnes of food were wasted across the world 2019. The agency also highlighted that 61% of the total food wasted came from households, 26% from food service and 13% from retail.

2. Which is the headquarters of the UN’s Economic Commission for Europe (UNECE)?

A) Geneva

B) Brussels

C) Rome

D) Paris

  • The United Nations Economic Commission for Europe (UNECE) was set up in 1947 by the United Nations Economic and Social Council (ECOSOC). It is headquartered at Geneva, Switzerland.
  • As per the recent report published by the UNECE, trapping and storing carbon dioxide emissions from fossil power generation and industry is needed to achieve carbon neutrality.

3. OPELIP, a tribal livelihood development program is funded by which organisation?

A) World Bank

B) IFAD

C) IMF

D) ADB

  • Odisha Particularly Vulnerable Tribal Groups Empowerment and Livelihoods Improvement Programme (OPELIP) is a programme funded by the International Fund for Agriculture Development (IFAD).
  • The objective is to improve living conditions and reduce poverty among particularly vulnerable tribal groups through capacity building and improved agricultural practices.

4. Where is the headquarters of ICRISAT situated?

A) Hyderabad

B) Chennai

C) Mumbai

D) Bengaluru

  • The International Crops Research Institute for Semi–Arid Tropics (ICRISAT) is an international organisation involved in agricultural research for rural development. Its headquarters is located at Patancheru, Hyderabad. It was recently roped in by the Odisha government for providing capacity–building initiatives for the state’s Particularly Vulnerable Tribal Groups via OPELIP scheme.

5. Where is the headquarters of CARICOM?

A) South Africa

B) Guyana

C) Zimbabwe

D) Namibia

  • CARICOM stands for Caribbean Community, which was founded in 1973 and headquartered in Georgetown, Guyana. It is also called Caribbean Community and Common Market.
  • CARICOM is a grouping of twenty countries with fifteen Member States and five Associate Members. It aims to establish economic integration and cooperation among its members.

6. What is the name of India’s initiative to deliver COVID–19 vaccines to friendly countries?

A) Vaccine Maitri

B) Vaccine to Mitron

C) Bharat Vaccine Mitra

D) India contributes

  • The Vaccine Maitri or the Vaccine Friendship initiative was started on January 20, 2021. Under the initiative, India supplies Made–in–India COVID–19 vaccines to its neighbouring countries. Bhutan and Maldives were the first country to get the vaccines. They are followed by Bangladesh, Nepal, Myanmar and Seychelles. Recently, consignment of Covid vaccines were airlifted for Guyana, Jamaica and Nicaragua.

7. Nagarahole Tiger Reserve is situated in which Indian state?

A) Karnataka

B) Andhra Pradesh

C) Maharashtra

D) Goa

  • Nagarahole Tiger Reserve, formerly known as Rajiv Gandhi (Nagarahole) National Park, is a wildlife reserve in Karnataka. It is a part of the Nilgiri Biosphere Reserve. It is named after the river Nagarahole, which is the Kannada term for ‘Serpent River’.
  • The reserve was recently engulfed in a major forest fire, leading to the destruction of several acres of forest covers.

8. The “space hurricane”, which was discovered recently, was spotted in which region of the Earth?

A) North Pole

B) South Pole

C) Inter–tropical Convergence Zone

D) Karnataka

  • The scientists have discovered a “space hurricane” for the first time. The hurricane swirled for eight hours over the North Pole in the upper atmosphere of Earth. The team of scientists from USA, Norway, China and United Kingdom observed and produced the image of space hurricane using the Defense Meteorological Satellite Program (DMSP) satellites and a 3D magnetosphere modelling.

9. Which organisation releases the ‘World food price Index’?

A) World Bank

B) Food and Agriculture Organization

C) International Monetary Fund

D) IFAD

  • The Food and Agriculture Organization (FAO) releases the Food price index, which measures monthly changes for a basket of cereals, oilseeds, dairy products, meat and sugar. As per the recent January figure, the world food prices rose for a ninth consecutive month in February. The index hit its highest level since July 2014 and the rise is led by the rise in sugar and vegetable oils.

10. ‘Maitri Setu’ bridge has been constructed over which river?

A) Brahmaputra

B) Yamuna

C) Kosi

D) Feni

  • The ‘Maitri Setu’ is a 1.9 km long bridge that has been constructed over the river Feni in the state of Tripura.
  • This bridge connects India and Bangladesh. The bridge has been constructed by National Highways and Infrastructure Development Corporation Ltd at a project cost of Rs. 133 Crores.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!