TnpscTnpsc Current Affairs

11th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

11th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 11th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. COP26 உச்சிமாநாட்டைக் குறிக்கும் வகையில், எந்தப் பகுதியில் அமைந்துள்ள பனிப்பாறைக்கு, ‘கிளாஸ்கோ பனிப்பாறை’ என்று பெயரிடப்பட்டுள்ளது?

அ) கனடா

ஆ) அண்டார்டிகா 

இ) அலாஸ்கா

ஈ) ஐஸ்லாந்து

  • அண்டார்டிகாவிலுள்ள ஒரு பனிப்பாறைக்கு ‘கிளாஸ்கோ பனிப்பாறை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அது, ஐநா காலநிலை உச்சிமாநாட்டை (COP 26) நடத்தும் நகரத்தின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. லீட்ஸ் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் குழுவினால், COP26 நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2. காசி, ஜைந்தியா மற்றும் கரோஸ் ஆகியவை எந்த மாநிலத்தின் பழங்குடியினமாகும்?

அ) தமிழ்நாடு

ஆ) ஹிமாச்சல பிரதேசம்

இ) கேரளா

ஈ) மேகாலயா 

  • காசி, ஜைந்தியா மற்றும் கரோஸ் ஆகியோர் மேகாலயா மாநிலத்தின் முதன்மையான பழங்குடியினங்களாகும். அவர்கள், குடும்பத்தில் உள்ள இளைய மகள் குடும்ப சொத்தின் பாதுகாவலராக மாறுகின்ற ஒரு தாய் வழி பரம்பரை முறையைப் பின்பற்றுகிறார்கள். சமீபத்தில் காசி ஹில்ஸ் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் ஒரு மசோதாவை முன்மொழிந்துள்ளது. அது, உடன்பிறப்புகளுக்கிடையே பெற்றோரின் பூர்வீக சொத்துக்களை சமமாக பங்கிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. இங்கிலாந்தில் நடத்தப்பட்ட புதிய ஆராய்ச்சியின்படி, எத்தடுப்பூசி, புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை 62% குறைத்துள்ளது?

அ) மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி 

ஆ) டெட்டனஸ், டிப்தீரியா, பெர்டுசிஸ் (Td/Tdap)

இ) வெரிசெல்லா

ஈ) தட்டம்மை, தாளம்மை, ரூபெல்லா (MMR)

  • கேன்சர் ரிசர்ச் யுகேவால் நிதியுதவி செய்யப்பட்ட ஒரு புதிய ஆராய்ச்சி, மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி, 14-16 வயதுக்குட்பட்ட பெண்களி -ல் புற்றுநோயை உருவாகும் அபாயத்தை 62% குறைத்துள்ளதாக கண்டறிந்துள்ளது. பெண்களை கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்காக மனித பாப்லோமா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

4. இந்திய ரிசர்வ் வங்கியின் திருத்தப்பட்ட PCA கட்டமைப்பானது எந்தத் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது?

அ) ஜனவரி 1, 2022 

ஆ) 1 மார்ச் 2022

இ) ஏப்ரல் 1, 2022

ஈ) ஜூன் 1, 2022

  • திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளுக்கான திருத்தப்பட்ட உடனடி திருத்த நடவடிக்கை (PCA) கட்டமைப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும். மூலதனம், சொத்து தரம் மற்றும் அந்நியச் செலாவணி ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் எனக் கூறியுள்ளது.

5. வெப்ப அலைகளால் பவளப்பாறைகள் அதிக வெப்பமுறும்போது அவை நிறத்தை இழக்கும் செயல்முறைக்கு பெயர் என்ன?

அ) பவள அழுத்தம்

ஆ) பவள வெளுப்பு 

இ) பவள நிறமாற்றம்

ஈ) பவள அழுத்தம்

  • பவள வெளுப்பு என்பது வெப்ப அலைகளின்போது அதிக வெப்பமுற்ற பவளப்பாறைகளில் ஏற்படும் ஓர் எதிர்வினையாகும். இதன்சமயம் அங்கு அவை அவற்றின் நிறத்தை இழந்து உயிர்வாழ போராடுகின்றன. ஒரு புதிய ஆய்வின்படி, 2016ஆம் ஆண்டிலிருந்து எண்பது சதவீத பவளப் பாறைகள் ஒருமுறையாவது கடுமையாக வெளுத்துள்ளன.

6. ஆப்கானிஸ்தான் தொடர்பான பிராந்திய பாதுகாப்பு உரையாடலை நடத்தவுள்ள இந்திய நகரம் எது?

அ) புது தில்லி 

ஆ) மும்பை

இ) டேராடூன்

ஈ) சண்டிகர்

  • நவ.10 அன்று ஆப்கானிஸ்தான் தொடர்பான தில்லி பிராந்திய பாதுகாப்பு உரையாடலை இந்தியா நடத்தவுள்ளது. இதில் 7 நாடுகள் பங்கேற்கின் -றன. இதற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை தாங்குவார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் / பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
  • சமீபத்திய ஊடக அறிக்கையின்படி, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் குடியரசு, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய ஏழு நாடுகள் பங்கேற்பதை உறுதி செய்தன.

7. சமீபத்தில் கருத்துக்கேட்புக்காக வைக்கப்பட்ட, ‘வரைவு மத்திய -ஸ்த மசோதா, 2021’ உடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ) பாதுகாப்பு அமைச்சகம்

ஆ) வெளியுறவு அமைச்சகம்

இ) சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் 

ஈ) உள்துறை அமைச்சகம்

  • சட்டம் மற்றும் நீதி அமைச்சகமானது வரைவு மத்தியஸ்த மசோதா – 2021’ஐ கருத்துக்கேட்புக்காக பொதுக்களத்தில் வைத்துள்ளது.
  • உள்நாட்டு மற்றும் சர்வதேச மத்தியஸ்தம் தொடர்பான பிரச்சினைகளில் மத்தியஸ்தம் தொடர்பான ஒரு தனியான சட்டத்தை கொண்டுவர இம் மசோதா முன்மொழிகிறது. மத்தியஸ்தம் தொடர்பான சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த மசோதா ‘சமரசம்’ மற்றும் ‘மத்தியஸ்தம்’ ஆகிய சொற்களை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தவும் எண்ணுகிறது.

8. 2021’இல் தனது ஆறாவது பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற டென்னிஸ் வீரர் யார்?

அ) நோவக் ஜோகோவிச் 

ஆ) டேனியல் மெட்வெடேவ்

இ) ரோஜர் பெடரர்

ஈ) ரபேல் நடால்

  • டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் 4-6 6-3 6-3 என்ற கணக்கில் ரஷ்ய வீரர் டேனியல் மெட்வெடேவை தோற்கடித்து தனது ஆறாவது பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார். செர்பிய வீரர் ஜோகோவிச், ஆண்டு இறுதியில் ஏழாவது முறையாக உலக நம்பர் ஒன் இடத்தைப் பெறுவது உறுதியாகி உள்ளது.

9. Dr கமல் ரணதிவேவுடன் தொடர்புடைய துறை எது?

அ) கதிரியக்க பொருட்கள்

ஆ) கனரக பொறியியல்

இ) செல் உயிரியல் 

ஈ) ஆயுர்வேதம்

  • டாக்டர் கமல் ரணதிவே, ஓர் இந்திய செல் உயிரியலாளராவார். அவர் புற்றுநோய் துறையில் வியத்தகு ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
  • இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் நாட்டின் முதல் திசு வளர்ப்பு ஆய்வகத்தை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினார். இந்தியப் பெண் விஞ்ஞானிகள் சங்கத்தை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றினார். சமீபத்தில், Dr கமல் ரணதிவேவின் 104ஆவது பிறந்தநாளை நினைவு கூரும் வகையில், கூகுள் ஒரு டூடுலை அவருக்கு அர்ப்பணித்தது.

10. உள்நாட்டு மத சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக IRCTCஆல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுலா இரயிலின் பெயர் என்ன?

அ) ஸ்ரீ இராமாயண யாத்திரை இரயில்

ஆ) மகாபாரத யாத்திரை இரயில் 

இ) வேளாங்கண்ணி யாத்திரை இரயில்

ஈ) தர்கா யாத்திரை இரயில்

  • இந்திய இரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ஆனது தில்லியிலிருந்து ‘ஸ்ரீ இராமாயண யாத்திரை’ ரயிலை தொடங்கியுள்ளது. தில்லி சப்தர்ஜங் இரயில் நிலையத்திலிருந்து இந்த இரயில் புறப்பட்டது.
  • IRCTC’இன் கூற்றுப்படி, மதச்சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இது போன்ற பல இரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில் 17 நாட்களில் ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அனைத்து முக்கிய தலங்களையும் உள்ளடக்கும். சுமார் 7500 கிமீ நீளப்பயணமாகும் இது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இன்று ‘பீமா லோக்பால்’ தினம் – காப்பீடு தொடர்பான 1,416 புகார்களுக்கு தீர்வு:

சென்னை காப்பீட்டு குறைதீர்ப்பாளர் அலுவலகம் வெளியிட்டசெய்திக்குறிப்பு:

காப்பீடு தொடர்பான புகார்களை விரைந்து விசாரித்து தீர்வுகாண்பதற்காக, காப்பீட்டு குறைதீர்ப்பாளர் (இன்சூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன்) என்ற அமைப்பை மத்திய அரசு கடந்த 1998 நவ.11-ம் தேதி ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆண்டுதோறும் நவ.11-ல், பீமா லோக்பால் தினம் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வரப்படுகிறது.

அதன்படி, பீமா லோக்பால் தினம் (நவ.11) இன்று கொண்டாடப் படுகிறது. சென்னை உட்பட நாடுமுழுவதும் 17 காப்பீட்டு குறைதீர்ப்பாளர் அலுவலகங்கள் உள்ளன.தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒரு பகுதி ஆகியவை சென்னை அலுவலகத்தின்கீழ் வருகிறது.

ஆயுள், பொது மற்றும் மருத்துவக் காப்பீடு தொடர்பான புகார்களை இந்த அலுவலகம் விசாரித்துதீர்வு வழங்குகிறது. இங்கு புகார்களை அளிக்க எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

கடந்த 2020-21 நிதியாண்டில் சென்னை அலுவலகம் மூலம், காப்பீடு தொடர்பாக 1,677 புகார்கள் பெறப்பட்டு, 1,416 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில், 40% புகார்கள் ஆயுள் காப்பீடு, 14% பொதுக் காப்பீடு, 46% மருத்துவக் காப்பீடு தொடர்பானவை.

கரோனா காலத்திலும் காப்பீட்டுதாரர்களின் புகார்கள் காணொலி மூலம் விசாரித்து தீர்வு காணப்பட்டது. இதற்காக, கடந்த பிப்ரவரிமாதம் ஆன்லைன் மூலம் புகார்களை பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

2. உச்சநீதிமன்றத்தில் மத்தியஸ்த மையம்: தலைமை நீதிபதி திறந்துவைத்தாா்

உச்சநீதிமன்ற வளாகத்தில் மத்தியஸ்த மையம், தேசிய சட்டப் பணிகள் ஆணைய அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

உச்சநீதிமன்ற சட்டப் பணிகள் குழு (எஸ்எஸ்எல்எஸ்சி), மத்தியஸ்தம் மற்றும் சமரச திட்டக் குழு (எம்சிபிசி) ஆகியவற்றின் வழிகாட்டுதலில் உச்சநீதிமன்ற மத்தியஸ்த மையம் செயல்படுகிறது. உச்சநீதிமன்றம் பரிந்துரைக்கும் வழக்குகள் அந்த மையத்தில் விசாரிக்கப்படும். இதற்காக அந்த மையத்தில் பயிற்சி பெற்ற 79 மத்தியஸ்தா்கள் உள்ளனா்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் கூடுதல் கட்டட வளாகத்தில் புதிதாக மத்தியஸ்த மையம், தேசிய சட்டப் பணிகள் ஆணைய அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், சஞ்சய் கிஷண் கெளல், உதய் உமேஷ் லலித் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இவா்களில் ஏ.எம்.கான்வில்கா் எஸ்எஸ்எல்எஸ்சி தலைவராகவும், சஞ்சய் கிஷண் கெளல் எம்சிபிசி உறுப்பினராகவும் உள்ளனா். உதய் உமேஷ் லலித் தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் நிா்வாகத் தலைவராக பதவி வகிக்கிறாா்.

3. ஸ்கார்ப்பியன் நீர்மூழ்கிக் கப்பல் வேலா: கடற்படையிடம் ஒப்படைப்பு

நான்காவது ஸ்கார்ப்பியன் நீர்மூழ்கிக் கப்பல் வேலா இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ப்ராஜக்ட்-75 திட்டத்தின் நான்காவது நீர்மூழ்கிக் கப்பலான யார்டு 11878 இந்திய கடற்படையிடம் இன்று (09.11.2021) ஒப்படைக்கப்பட்டது. ஸ்கார்ப்பியன் வகையைச் சேர்ந்த ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டுவது ப்ராஜக்ட்-75 திட்டத்தில் அடங்கும். இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், பிரான்ஸ் நாட்டின், திருவாளர்கள் நேவல் குரூப் ஒத்துழைப்புடன், மும்பை மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தாயரிக்கப்பட்டு வருகின்றன.

‘வேலா’ என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல், 6, மே 2019 அன்று தனது சேவையைத் தொடங்கி, கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு இடையேயும், அனைத்து பெரிய துறைமுகங்கள் மற்றும் ஆயுதம், சென்சார் ஒத்திகை உள்ளிட்ட அனைத்துக் கடல்வழி ஒத்திகைகளையும் நிறைவு செய்துள்ளது. இந்த வகையைச் சேர்ந்த மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே இந்திய கடற்படைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானம் மிகவும் சிக்கலானது என்பதோடு, அனைத்து சாதனங்களையும் சிறிய அளவுடையதாக மாற்றி கடுமையான தரப்பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியிருப்பதால், இது மிகவும் சிரமமான பணியாகும்.

இந்தியாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இத்தகைய நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டிருப்பது ‘தற்சார்பு இந்தியாவை’ நோக்கிய மற்றொரு நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இந்த நீர்மூழ்கிக் கப்பல், இந்திய கடற்படையில் உடனடியாக பணியில் ஈடுபடுத்தப்படுவது, இந்தியக் கடற்படையின் திறனை மேம்படுத்தும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4. இந்திய கடற்படை தளபதியாக ஆர்.ஹரிகுமார் நியமனம்!

இந்திய கடற்படை தளபதியாக ஆர்.ஹரிகுமார் பதவியேற்கவுள்ளார். கரம்பீர் சிங் ஓய்வு பெறும் நிலையில் ஹரிகுமார் பதவியேற்கிறார்.

ஹரிகுமார் 1983 ஜனவரியில் கடற்படையில் சேர்ந்தார். மும்பை பல்கலைக்கழகம் மற்றும் யு.எஸ். அவர் கடற்படை போர் கல்லூரி மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் படித்தார். இவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்றவர்.

மேலும் ஐ.என்.எஸ் விராட் உட்பட 5 கப்பல்களுக்கு கேப்டனாக இருந்த ஹரிகுமார் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.

5. காரீப் பருவத்தில் 209 லட்சம் டன் நெல் கொள்முதல்: மத்திய அரசு

நடப்பு காரீப் சந்தைப் பருவத்தில் 209 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு காரீப் சந்தைப் பருவத்தில் நவம்பா் 8-ஆம் தேதி வரையிலுமாக, 209.52 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.41,066.80 கோடியாகும். இதன் மூலம், 11.57 லட்சம் விவசாயிகள் பலனடைந்துள்ளனா்.

கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் நெல் கொள்முதல் சீராக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, சண்டீகா், குஜராத், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், தெலங்கானா, ராஜஸ்தான், கேரளம், தமிழ்நாடு மற்றும் பிகாா் மாநிலங்களிலிருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காரீப் சந்தைப் பருவம் என்பது 2021-22 அக்டோபா் முதல் செப்டம்பா் வரையிலானதாகும்.

6. இலங்கைக்கு சுற்றுலா செல்வதில் இந்தியா்கள் முதலிடம்

இலங்கைக்கு சுற்றுலா செல்வதில் இந்தியா்கள் முதலிடத்தில் உள்ளனா். இலங்கை சுற்றுலா தொடா்பாக அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்ட தகவலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

அதன்படி இலங்கைக்கு கடந்த அக்டோபா் மாதத்தில் 22,771 சா்வதேச சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவுக்குப் பிறகு இலங்கையின் சுற்றுலாத் துறையில் மேம்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியா, பிரிட்டன், பாகிஸ்தான், ரஷியா, ஜொ்மனி ஆகிய நாடுகளில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனா். மொத்த சுற்றுலாப் பயணிகளில் 37 சதவீதம் போ் இந்தியாவைச் சோ்ந்தவா்கள். இதன் மூலம் இலங்கைக்கு சுற்றுலா வருபவா்களில் இந்தியா்கள் முதலிடம் பிடித்துள்ளனா். பிரிட்டன், பாகிஸ்தான் பயணிகள் முறையே 10 மற்றும் 9 சதவீதம் உள்ளனா்.

அமெரிக்கா, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதும் இப்போது மேம்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் அக்டோபா் மாதம் வரை 60,695 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனா். வழக்கமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடும்போது இது 88 சதவீதம் குறைவாகும்.

சுற்றுலா வருவாய் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. கரோனா பிரச்னை காரணமாக சுற்றுலா வருவாய் அடியோடு சரிந்ததால் அந்நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலை எதிா்கொண்டு வருகிறது.

7. தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் சாதனைக்கான ஆய்வுகள் நாளை தொடக்கம்

3, 5, 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மேற்கொள்ளப்படும் தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் சாதனைக்கான ஆய்வுகள் திட்டம் வெள்ளிக்கிழமை (நவம்பா் -12 ஆம் தேதி) தொடங்குகிறது.

தேசிய சாதனைக்கான ஆய்வு மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகத்தால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இது மாணவா்களின் கற்றல் குறித்த தேசிய அளவிலான மிகப் பெரிய கணக்கெடுப்பாகும். பள்ளிக் கல்வியின் நிலை, அமைப்பு, செயல்திறனுக்கான பிரதிபலிப்பை இந்த ஆய்வு வழங்குகிறது.

குறிப்பாக பள்ளிக்குழந்தைகளின் திறன்களை மதிப்பீடு செய்து அதில் மேம்பாடுகளுக்கான திசையைக் கண்டறிய இந்த ஆய்வுகள் உதவுகின்றன. கடைசியாக கடந்த 2017 ஆண்டில் 3, 5, 8 வகுப்புகளில் மட்டும் மத்திய அரசால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது கூடுதலாக 10 ஆம் வகுப்பும் இணைக்கப்பட்டு இந்த திட்டம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 12-ஆம் தேதி) நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது.

கொவைட்-19 நோய்த் தொற்றின்போது கற்றல்களின் பாதிப்பு மற்றும் புதிய கற்றல் மதிப்பிட்டு தீா்வு காணும் நடவடிக்கைகளுக்கு இந்த ஆய்வு உதவும் என மத்திய கல்வித்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கற்றல் மூலம் மாணவா்கள் அடையும் திறன்களை அளவிட்டு மதிப்பிட தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) இதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த ஆய்வுக்கான முறை, சோதனை, தோ்வுப் பொருட்கள் போன்ற மாதிரிகளை இதில் அடக்கம்.

இருப்பினும், மாதிரி பள்ளிகளில் சோதனை அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளின் கல்வித்துறைகளுடன் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இணைந்து செய்யப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-தேசிய சாதனைக்கான ஆய்வு, நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் (மத்திய அரசு மற்றும் மாநில அரசு), அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளின் ஆகியவைகளையும் உள்ளடக்கியுள்ளது.

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 733 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 1.23 லட்சம் பள்ளிகள், 38 லட்சம் மாணவா்கள் இந்தத் திட்டத்தில் இடம்பெறுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மொழி, கணிதம், சுற்றுச்சூழல் கல்வி, அறிவியல் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் வகுப்புகளுக்கு தகுந்தவாறு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தமிழ், வங்கம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 22 மொழிகளில் இந்த ஆய்வுத் தோ்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சம் தெரிவித்துள்ளது.

8. ஆசிய செயிலிங்: கணபதி/வருண் இணை சாம்பியன்

ஓமனில் நடைபெற்ற ஆசிய 49 இஆா் செயிலிங் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் பிரிவில் இந்தியாவின் வருண் தக்கா்/கே.சி.கணபதி இணை சாம்பியன் ஆனது. ஆசிய போட்டியில் இது இந்த இணையின் 3-ஆவது பதக்கமாகும்.

4 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் வருண்/கணபதி இணை முதலிடம் பிடிக்க, ஓமனின் முசாப் அல் ஹாதி/வாலித் அல் கின்டி இணை வெள்ளியும், அதே நாட்டின் அகமது அல் ஹசானி/அப்துல்ரஹ்மான் அல் மஷாரி ஜோடி வெண்கலமும் வென்றது.

இதே பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய ஜோடியான ஆனந்த் தாக்குா்/சத்யம் ரங்காட், 29-ஆவது இடம் பிடித்தனா்.

மகளிருக்கு 2-ஆம் இடம்: இதேபோட்டியில் மகளிா் பிரிவில் இந்தியாவின் ஹா்ஷிதா தோமா்/ஸ்வேதா ஷொ்வெகாா் இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.

அடுத்தபடியாக, வருண்/கணபதி இணை அதே நகரில் வரும் 16-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் கலந்துகொள்கிறது.

9. பகவான் பிர்சா முண்டா பிறந்த நவம்பர் 15ம் தேதியை, ஜன்ஜாதிய கௌரவ் தினமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்:

தீரமான பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறவும், நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகங்களை வருங்கால தலைமுறையினர் அறியவும் நவம்பர் 15ம் தேதியை, ஜன்ஜாதிய கௌரவ் தினமாக அறிவிக்க பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் சுதந்திர போராட்டம் சந்தால்கர்கள், தமார்கள், கோல் இனத்தவர், பில், காசி இனத்தவர் மற்றும் மிசோ இனத்தவர் உட்பட இன்னும் பல பழங்குடியின சமுதாயத்தினரால் வலுப்படுத்தப்பட்டது.

இந்த பழங்குடி இனத்தவர்கள் நடத்திய புரட்சிகர இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள் அவர்களின் மகத்தான தைரியம் மற்றும் உன்னத தியாகத்தால் குறிக்கப்பட்டன. ஆங்கில ஆட்சிக்கு எதிரான, நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின இயக்கங்கள், நாட்டின் சுதந்திர போராட்டத்துடன் இணைப்பை ஏற்படுத்தி கொண்டு நாடு முழுவதும் இந்தியர்களை ஊக்குவித்தன. ஆனால், அந்த பழங்குடியின நாயகர்கள் பற்றி, பொது மக்கள் பலருக்கு தெரியாது. மாண்புமிகு பிரதமரின் 2016ம் ஆண்டு சுதந்திர தின உரையை தொடர்ந்து, நாடு முழுவதும் 10 பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களின் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

ஜன்ஜாதிய கௌரவ் தினம் அறிவிக்கப்பட்ட தேதி, திரு பிர்சா முண்டாவின் பிறந்த தினம். அவர் நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களால் பகவான் என அழைக்கப்பட்டார். ஆங்கில காலனி முறையின் சுரண்டலுக்கு எதிராக பிர்சா முண்டா தைரியமாக போராடினார் மற்றும் ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக புரட்சிக்கு அழைப்பு விடுத்தார். இந்த அறிவிப்பு, பழங்குடியின சமுதாயத்தின் பெருமையான வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அங்கீகரிக்கிறது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் மற்றும் பழங்குடியின கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் முயற்சிகள் அங்கீகரிக்கப்படும்.

ராஞ்சியில் உள்ள பழங்குடியினர் சுதந்திர அருங்காட்சியகம் அமைக்கும் இடத்தில்தான் பிர்சா முண்டா இறந்தார். இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்து வைப்பார். பழங்குடியின மக்களில் 75 ஆண்டு வரலாறை நினைவு கூறும் வகையில் இந்தாண்டு நவம்பர் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஒருவார கால கொண்டாட்டத்துக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாநில அரசுகளுடன் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள், பழங்குடியினரின் தனித்துவமான கலாச்சார பாரம்பரியம், சுதந்திர போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும்.

10. குமரியைச் சேர்ந்த தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் : வாடிகனில் மே 15-ம் தேதி வழங்கப்படுகிறது

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அருளாளர் மறை சாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம், அடுத்த ஆண்டு மே 15-ம் தேதி வாடிகனில் வழங்கப்பட உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்தவர் தேவசகாயம். கடந்த 1745-ம் ஆண்டு மே 14-ம் தேதி கிறிஸ்தவராக திருமுழுக்கு பெற்றார். ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் 1752-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் மறைசாட்சியாக தேவசகாயம் போற்றப்படுகிறார்.

இவரை சிறப்பிக்கும் வகையில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி, தேவசகாயத்தை `முக்திபேறு பெற்றவர்’ என வாடிகன் பேராயம் அறிவித்தது. அன்றையதினம் இதற்கான விழா நாகர்கோவில் கார்மல் பள்ளியில் நடைபெற்றது. பின்னர், 2020 பிப்ரவரி 21-ம் தேதி, `தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கலாம்’ என போப் ஆண்டவர் அறிவித்தார்.

கடந்த மே மாதம் வாடிகனில் நடந்த கர்தினால்கள் கூட்டத்தில், தேவசகாயத் துக்கு புனிதர் பட்டம் வழங்கும் இடமாக, வாடிகன் புனித பீட்டர் சதுக்கம் அறிவிக்கப்பட்டது. கரோனா பரவலால் இதற்கான நாள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு மே 15-ம் தேதி வாடிகனில் பீட்டர் சதுக்கத்தில் நடைபெறும் விழாவில், மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவு கடிதம், நாகர்கோவில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை மற்றும் பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வழக்கமாக சர்ச்சுடன் தொடர்புடைய பாதிரியார்கள், பிஷப்கள், கார்டினல் களுக்குத்தான் அவர்களின் அற்புதங்களைப் பொறுத்து புனிதர் பட்டம் வழங்கப்படும். ஆனால், இந்தியாவில் தமிழகத்தில் பிறந்த சாதாரண மனிதர் ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

11. அங்கன்வாடி பணியிடங்கள்: விதவை-கணவனால் கைவிடப்பட்டோருக்கு 25 சதவீத இடங்கள்

அங்கன்வாடி, அங்கன்வாடி உதவியாளா் காலிப் பணியிடங்களில் 25 சதவீத இடங்கள் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோரைக் கொண்டு நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை முதன்மைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:

அங்கன்வாடி பணியாளா்கள், குறு அங்கன்வாடிப் பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரம்பும் போது, இனசுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பணிகளுக்கு பெண்களை மட்டுமே பணியமா்த்த வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சத்துணவுத் துறை: புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு அமைப்பாளா், சமையலா் மற்றும் சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்பும் போது 25 சதவீத இடங்கள் விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு ஒதுக்கப்படுகிறது.

அங்கன்வாடி ஊழியா்கள் காலிப் பணியிடங்களில் ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க உரிய திருத்தங்களை வெளியிட வேண்டுமென ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் இயக்குநா் அரசைக் கேட்டுக் கொண்டாா். அதன்படி, அங்கன்வாடிப் பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில் 25 சதவீத பணியிடங்கள், விதவைகள் அல்லது கணவரால் கைவிடப்பட்டோரைக் கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்பப்படும்.

12. 5.5 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு: ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லியில் 5வது ஐஎஸ்சி -ஐஎப்சிசிஐ துப்புரவு விருதுகள் மற்றும் இந்திய துப்புரவு மாநாடு நடைபெற்றது. இதில் ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த 70 ஆண்டுகளில் 17 சதவீதம் வீடுகள் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பை பெற்றன. ஆனால், கொரொனா தொற்று சூழல் காரணமாக சிக்கல்கள் இருந்த போதிலும் நாங்கள் கூடுதலாக 27 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பை வழங்கி இருக்கிறோம். தற்போது 8.5 கோடி பெண்கள் வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பை பெற்றுள்ளனர். ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 5.5 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.

1. A glacier located in which region has been named as ‘Glasgow Glacier’, to mark the COP26 summit?

A) Canada

B) Antarctica 

C) Alaska

D) Iceland

  • A glacier in Antarctica has been formally named Glasgow Glacier in honour of the city hosting the UN climate summit which formally opened recently. It was named by a team of researchers at the University of Leeds to mark the 26th Conference of Parties (COP26).

2. Khasis, Jaintias, and Garos are the tribal population of which state?

A) Tamil Nadu

B) Himachal Pradesh

C) Kerala

D) Meghalaya 

  • The Khasis, Jaintias, and Garos are the predominant tribal population of Meghalaya. They practise a matrilineal system of inheritance, where the youngest daughter in the family becomes the custodian of the family’s property. Recently the Khasi Hills Autonomous District Council has proposed a bill, which aims for equitable distribution of parental property among siblings.

3. As per new research conducted in the UK, which vaccine has reduced the risk of developing a cancer by 62 percent?

A) Human Papillomavirus (HPV) Vaccine 

B) Tetanus, Diphtheria, Pertussis (Td/Tdap)

C) Varicella

D) Measles, Mumps, Rubella (MMR)

  • A new–research, funded by Cancer Research UK, has recently found that the human papillomavirus (HPV) vaccine, reduced the risk of developing the cancer by 62 percent in women between the ages of 14 and 16. Human papillomavirus (HPV) vaccine is administered to protect against cervical cancer in women.

4. RBI’s Revised PCA framework is set to come into effect from which date?

A) 1st January 2022 

B) 1st March 2022

C) 1st April 2022

D) 1st June 2022

  • The Reserve Bank of India has come out with a revised Prompt Corrective Action (PCA) framework for scheduled commercial banks, which would come into effect from 1st January 2022. It has stated that RBI would monitor three key areas — capital, asset quality and leverage for banks.

5. What is the process by which coral reeves overheat during heat waves, where they lose their colour?

A) Coral Stress

B) Coral Bleaching 

C) Coral Decolouring

D) Coral Pressure

  • Coral Bleaching is a response by overheated corals during heat waves, where they lose their colour and struggle to survive. As per a new study, eighty percent of the coral reeves have been bleached severely at least once since 2016.

6. Which Indian city is to host the Regional Security Dialogue on Afghanistan?

A) New Delhi 

B) Mumbai

C) Dehradun

D) Chandigarh

  • India is set to host the Delhi Regional Security Dialogue on Afghanistan on November 10 which will be attended by seven countries. It will be chaired by National Security Adviser Ajit Doval.
  • The dialogue will be held at the level of National Security Advisers / Secretaries of Security Councils. As per recent media reports, both China and Pakistan are not attending the meeting. Seven countries –Iran, Kazakhstan, Kyrgyz Republic, Russia, Tajikistan, Turkmenistan and Uzbekistan– confirmed participation.

7. Which Union Ministry is associated with the ‘Draft Mediation Bill, 2021’, which was placed in public domain recently?

A) Ministry of Defence

B) Ministry of External Affairs

C) Ministry of Law and Justice 

D) Ministry of Home Affairs

  • The Ministry of Law and Justice placed the Draft Mediation Bill, 2021 in public domain, seeking feedback and suggestions from all stakeholders. The Bill proposes to bring about a standalone law on Mediation on issues of domestic and international mediation. India is a signatory to the Singapore Convention on Mediation. The Bill also seeks to use the terms ‘conciliation’ and ‘mediation’ interchangeably.

8. Which Tennis player won his sixth Paris Masters title in 2021?

A) Novak Djokovic 

B) Daniil Medvedev

C) Roger Federer

D) Rafael Nadal

  • Tennis player Novak Djokovic won his sixth Paris Masters title by defeating his Russian counterpart Daniil Medvedev with a 4–6 6–3 6–3 victory. Djokovic, the Serbian player, is guaranteed to secure the year–end world number one spot for a record seventh time.

9. Dr. Kamal Ranadive was associated with which field?

A) Radioactive Materials

B) Heavy Engineering

C) Cell Biology 

D) Ayurveda

  • Dr. Kamal Ranadive was an Indian cell biologist who has made groundbreaking research in the field of Cancer. She was instrumental in establishing country’s first tissue culture laboratory at Indian Cancer Research Center.
  • She also played a key role in founding the Indian Women Scientists’ Association. Recently, Google has dedicated a doodle to Dr. Kamal Ranadive remembering her 104th birth anniversary.

10. What is the name of the Circuit Train recently launched by IRCTC, to boost domestic religious tourism?

A) Shri Ramayana Yatra Train 

B) Mahabharata Yatra Train

C) Velankanni Yatra Train

D) Dargah Yatra Train

  • Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) has commenced a ‘Shri Ramayana Yatra’ train from Delhi. The train left Delhi’s Safdarjung railway station. As per IRCTC, more such ones would be run to promote religious tourism. The train will cover the visit of all prominent places associated with the life of Lord Rama in 17 days, travelling around 7500 Kms in the entire tour.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!