TnpscTnpsc Current Affairs

11th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

11th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 11th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

11th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. உட்கட்டமைப்பு நெகிழ்திறன்மிக்க முடுக்கி நிதியத்தை அறிவித்த நிறுவனம் எது?

அ. WEF

ஆ. CDRI

இ. ISA

ஈ. BIMSTEC

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. CDRI

  • பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI) ஆனது CDRI பல்கூட்டாண்மை அறக்கட்டளை நிதியமான Infrastructure Resilience Accelerator Fund (IRAF)ஐ அறிவித்தது. இது எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்கில் உள்ள இந்திய அரங்கில், COP–27இல் அறிவிக்கப்பட்டது. IRAF–க்கு ஐந்து ஆண்டுகாலத்திற்கு சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் நிதிப்பொறுப்புகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

2. உலக உற்பத்தியில் 41 சதவீதத்துடன் கம்பு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா

இ. வங்காளதேசம்

ஈ. இந்தோனேசியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • உலக அளவில் தினை உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது; உலக உற்பத்தியில் 41 சதவீத பங்கை இந்தியா கொண்டுள்ளது. தினை ஏற்றுமதியை ஊக்குவிக்க வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் உலகளாவிய சில்லறை விற்பனை பல்பொருள் அங்காடிகளை ஈடுபடுத்த இந்திய அரசாங்கம் ஓர் உத்தியை வகுத்துள்ளது. லூலூ குழுமம் மற்றும் வால்மார்ட் போன்ற முதன்மை சர்வதேச சில்லறை விற்பனை பல்பொருள் அங்காடிகள், தினைகளை வர்த்தகம் செய்வதற்கும் விளம்பரப்படுத்துவதற்குமாக இணைக்கப்படும்.

3. QS ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் எது?

அ. ஐஐடி தில்லி

ஆ. ஐஐடி மெட்ராஸ்

இ. ஐஐடி பாம்பே

ஈ. IISc பெங்களூரு

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஐஐடி பாம்பே

  • Quacquarelli Symonds (QS) ஆசிய பல்கலைக்கழக தரவரிசையின் 2023 பதிப்பில் மொத்தம் 118 இந்தியப் பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றுள்ளன. ஐஐடி பாம்பே இந்த ஆண்டு 40ஆவது இடத்தில் உள்ளது. இது இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் நிறுவனமாகும். ஐஐடி–பாம்பேக்கு அடுத்தபடியாக ஐஐடி தில்லி (46), இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு (IISc) (52) மற்றும் ஐஐடி மெட்ராஸ் (59) ஆகியவை உள்ளன. முதல் 10 இடங்களுள், ஐந்து பல்கலைக்கழகங்கள் சீனாவைச் சேர்ந்தவையாகும்.

4. 2023 IBA பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தவுள்ள ஆசிய நாடு எது?

அ. இலங்கை

ஆ. பாகிஸ்தான்

இ. இந்தியா

ஈ. நேபாளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்தியா

  • 2023 IBA பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை நடத்தும் நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (IBA) மற்றும் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (BFI) இடையே இந்த நிகழ்வு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. இது இந்தியாவில் நடத்தப்படும் மூன்றாவது மகளிர் உலக சாம்பியன்ஷிப் மற்றும் கடந்த ஆறு ஆண்டுகளில் நடத்தப்படும் இரண்டாவது போட்டியாகும்.

5. மத்திய கிழக்குப் பசுமை முனைவைத் தொடங்கியுள்ள நாடு எது?

அ. ஓமன்

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. சௌதி அரேபியா

ஈ. பஹ்ரைன்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. சௌதி அரேபியா

  • சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அடுத்த பத்தாண்டுகளில், ‘மத்திய கிழக்குப்பசுமை முயற்சிக்கு’ $2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாகவும், அதன் தலைமையகத்தை நடத்துவதாகவும் கூறினார். பிராந்திய கரியமில வாயு உமிழ்வைக் குறைக்கும் முயற்சிகளின் ஒருபகுதியாக, மத்திய கிழக்குப்பசுமை முயற்சி–2021இல் பட்டத்து இளவரசரால் இது தொடங்கப்பட்டது. பிராந்திய கைட்ரோகார்பன் உற்பத்தியிலிருந்து 60%க்கும் அதிகமான கரியமில வாயு உமிழ்வைக் குறைப்பதை இந்த முயற்சி தனது நோக்கமாகக்கொண்டுள்ளது.

6. பிரதமர் கிராம சதக் யோஜனா (PMGSY)–III ஆனது கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?

அ. குஜராத்

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. சிக்கிம்

ஈ. கேரளா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹிமாச்சல பிரதேசம்

  • பிரதமர் கிராம சதக் யோஜனா (PMGSY)–III’ஐ ஹிமாச்சல பிரதேசத்தின் சம்பாவில் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். இது மாநிலத்தில் சுமார் 3125 கிலோமீட்டர் சாலைகளை மேம்படுத்தப்படும். மாநிலத்தின் 15 எல்லைகள் மற்றும் தொலைதூரத் தொகுதிகளில் உள்ள 440 கிலோமீட்டர் சாலைகளை மேம்படுத்துவதற்காக இக்கட்டத்தின் கீழ் `420 கோடிக்கும் மேல் நடுவணரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

7. ‘பிரதமர் ஆவாஸ் யோஜனா–நகர்ப்புற (PMAY–U) விருதுகள் – 2021இல்’ முதலிடம் பிடித்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மத்திய பிரதேசம்

இ. உத்தர பிரதேசம்

ஈ. ஆந்திர பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. உத்தர பிரதேசம்

  • ‘பிரதமர் ஆவாஸ் யோஜனா–நகர்ப்புற (PMAY–U) விருதுகள் – 2021இல் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பிடித்தது. அதைத்தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலமும் தமிழ்நாடும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. குஜராத் மாநிலம் ஐந்து சிறப்புப்பிரிவு விருதுகளைப்பெற்றது. ஜம்மு–காஷ்மீரானது தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூவுடன் இணைந்து, ‘சிறந்த செயல்திறன்கொண்ட யூனியன் பிரதேசம்’ எனத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1.23 கோடி வீடுகள் இத்திட்டத்தின்கீழ் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இதில் 64 இலட்சம் ஏற்கெனவே கட்டிமுடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

8. Launch Vehicle Mark 3 (LVM3) திட்டத்துடன் தொடர்புடைய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. இந்தியா

இ. சீனா

ஈ. இஸ்ரேல்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுகல வாகனம் மார்க் 3 (LVM3) திட்டமானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 36 OneWeb Gen–1 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும். LVM3 என்பது விண்வெளித் துறையின் கீழுள்ள நடுவண் பொதுத்துறை நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியா லிட்இன் (NISL) பிரத்யேக வணிக ரீதியான செயற்கைக்கோள் ஏவுதல் திட்டமாகும். NSILமூலம் வணிக ரீதியாக LVM3 ஏவப்படுவது இதுவே முதன்முறையாகும்.

9. ‘Using Technology to Improve a Billion Livelihoods’ என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. ஆசிய வளர்ச்சி வங்கி

ஆ. உலக பொருளாதார மன்றம்

இ. பன்னாட்டு செலாவணி நிதியம்

ஈ. உலக வங்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உலக பொருளாதார மன்றம்

  • அதானி குழுமத்துடன் இணைந்து, இந்தியாவின் நான்காவது தொழிற்புரட்சிக்கான உலக பொருளாதார மன்றத்தின் மையத்தால் தயாரிக்கப்பட்ட, ‘தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பில்லியன் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்’ என்ற புதிய அறிக்கை குஜராத் மாநிலத்தின் காந்திநகரத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, இந்திய வேளாண்மையின் தொழில்நுட்பம் தலைமையிலான மாற்றத்தின் மையத்தில் டிரோன்களை வைப்பதன்மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) 1–1.5 சதவீதம் வரை உயர்த்த முடியும். இது இந்தியாவில் வரும் ஆண்டுகளில் குறைந்தது ஐந்து இலட்சம் பணிவாய்ப்புகளை உருவாக்கும்.

10. இந்தியாவில் நிஹோன்சுவிற்கான புவிசார் குறியீடை (GI) நாடியுள்ள நாடு எது?

அ. சீனா

ஆ. ஜப்பான்

இ. சிங்கப்பூர்

ஈ. இந்தோனேசியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஜப்பான்

  • புது தில்லியில் உள்ள ஜப்பான் தூதரகம், மதுரசமான நிஹோன்ஷுவுக்கு புவிசார் குறியீடு (GI) கோரி விண்ணப்பம் தாக்கல்செய்துள்ளது. ஜப்பானைச் சார்ந்த ஒரு தயாரிப்புக்கு புவிசார் அடையாளப் பதிவேட்டில் குறியீடு வேண்டி விண்ணப்பம் தாக்கல்செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். நிகோன்ஷு என்பது ஜப்பானில் அரிசியைப் புளிக்கவைத்துத் தயாரிக்கப்படும் ஒரு சிறப்பு இரசமாகக் கருதப்படுகிறது. அரிசி, கோஜி–கின் (ஒருவகைப் பூஞ்சை வித்து) மற்றும் நீர் ஆகிய மூன்று முக்கிய மூலப்பொருட்கள் இதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. மைசூரு – புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் & காசி பாரத் கௌரவ் இரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்

மைசூரு மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலை KSR பெங்களூரு இரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது நாட்டில் தொடங்கப்பட்ட ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பதுடன் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் இரயிலாகும்.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ வெற்றிக்கு ஒரு சிறந்த உதாரணமாக, இந்திய ரயில்வே இந்தியாவின் முதல் உள்நாட்டு அதிவேக இரயில் – வந்தே பாரத் எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்தியது; அது கான்பூர்-அலகாபாத்-வாரணாசி வழித் தடத்தில் பிப்ரவரி 15, 2019 அன்று புது தில்லியில் தொடக்கி வைக்கப்பட்டது. மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்கள் புது தில்லி-மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, காந்திநகர்-அகமதாபாத்-மும்பை சென்ட்ரல், மற்றும் ஆம்ப் ஆண்டௌரா-புது தில்லி வழித்தடங்களில் தொடங்கப்பட்டுள்ளன.

2. ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கட்டாயம்: புதிய ஆணை

ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அதனை நடுவணரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதார் அட்டை வைத்திருப்போர், அதனை பதிவுசெய்த நாளிலிருந்து சரியாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, அடையாள சான்றிதழ்களை அளித்து புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையில் மோசடிகள் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், ஆதார் அட்டை பெறும்போது அளித்த அடையாள சான்றிதழ்களை பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அளித்து புதுப்பித்துக் கொள்வதன்மூலம், ஆதார் அட்டையின் உண்மைத்தன்மை உறுதிசெய்யப்படும் என நடுவண் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை விவரங்களை உறுதி செய்யும் ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கான வசதியை யுஐடிஏஐ மேற்கொண்டுள்ளது. இந்த வசதி, மை ஆதார் இணையதளம், மை ஆதார் செயலி மூலமாக பயனாளர்களே செய்து கொள்ளலாம் என்றும், ஆதார் சேவை மையங்களில் நேரடியாகச் சென்றும் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து. இதன்படி, ஆதார் அட்டை வைத்திருப்போர், அவர்களது பெயரில் இருக்கும் பிழைகள், நிழற் படங்களைப் பதிவேற்றுதல், முகவரி மாற்றுதல் உள்ளிட்ட விவரங்களை செய்துகொள்ளலாம். இந்த நாள் வரை, 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

3. நவம்பர் 14 முதல் 16 வரை G20 மாநாடு: பிரதமர் மோதி பங்கேற்பு

இந்தோனேசியாவின் பாலியில் வரும் நவ.14 முதல் 16 வரை நடைபெறும் G20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகின் வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட சர்வதேச அமைப்பான G20 அமைப்புக்கு, தற்போது இந்தோனேசியா தலைமை வகிக்கிறது. இதையொட்டி, G20 மாநாடு அந்நாட்டின் பாலியில் நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:

பாலியில் நடைபெறும் மாநாட்டில், “ஒன்றாக மீண்டெழுவோம், பலத்துடன் மீண்டெழுவோம்” என்ற கருத்துருவை மையமாகக்கொண்டு உலகின் மிக முக்கியப் பிரச்னைகள் குறித்து உலகத் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர். உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு, நலம், எண்ம மாற்றம் (டிஜிட்டல் மாற்றம்) ஆகிய தலைப்புகளில் 3 அமர்வுகள் நடைபெறுகின்றன. மாநாட்டின் முடிவில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ G20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை முறைப்படி பிரதமர் மோதியிடம் வழங்குவார்.

வரும் டிச.1 முதல் G20இன் தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது. உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 85 சதவீத பங்கைக் கொண்டுள்ள G20 அமைப்பு, உலக வர்த்தகத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பில் ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சௌதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உலக அளவில் 2/3 பங்கு மக்கள்தொகையை G20 நாடுகள் கொண்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

11th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which institution announced the Infrastructure Resilience Accelerator Fund (IRAF)?

A. WEF

B. CDRI

C. ISA

D. BIMSTEC

Answer & Explanation

Answer: B. CDRI

  • The Coalition for Disaster Resilient Infrastructure (CDRI) announced Infrastructure Resilience Accelerator Fund (IRAF), a CDRI Multi–Partner Trust Fund. It was launched at the India Pavilion, Conference of Parties COP–27, Sharm El Sheikh, Egypt. Around USD 50 million in financial commitments have already been announced for IRAF, over an initial duration of five years.

2. Which country is the leading producer of millets with 41 per cent of global production?

A. China

B. India

C. Bangladesh

D. Indonesia

Answer & Explanation

Answer: B. India

  • India is one of the leading producers of millets in the world with an estimated share of 41 per cent of the global production. The Indian government has formulated a strategy to involve Indian missions abroad as well as global retail supermarkets to promote exports of millets. Major international retail supermarkets like Lulu group and Walmart, would also be roped in to establish millet corner for branding and promotion of millets.

3. Which institution is ranked at the top spot from India in the QS Asia University rankings?

A. IIT Delhi

B. IIT Madras

C. IIT Bombay

D. IISc Bengaluru

Answer & Explanation

Answer: C. IIT Bombay

  • A total of 118 Indian universities have figured in 2023 edition of Quacquarelli Symonds (QS) Asia University Rankings. IIT Bombay has been placed at 40th rank this year. It is the top–ranking institution from India. IIT–B is followed by IIT Delhi (46), Indian Institute of Science (IISc), Bangalore (52) and IIT Madras (59). In the top 10, five universities are from China.

4. Which Asian country is named as the host of 2023 IBA Women’s World Boxing Championship?

A. Sri Lanka

B. Pakistan

C. India

D. Nepal

Answer & Explanation

Answer: C. India

  • India has been named as the host country for the 2023 IBA Women’s World Boxing Championship. The Memorandum of Understanding (MoU) regarding the event was signed between the International Boxing Association (IBA) and the Boxing Federation of India (BFI). It will be the third Women’s World Championships to be conducted in India and the second event within a span of six years.

5. Which country launched the ‘Middle East Green Initiative’?

A. Oman

B. UAE

C. Saudi Arabia

D. Bahrain

Answer & Explanation

Answer: C. Saudi Arabia

  • Saudi Arabia’s Crown Prince Mohammed bin Salman said the kingdom would contribute USD 2.5 billion to ‘Middle East Green Initiative’ over the next ten years, and host its headquarters. The Middle East Green Initiative was launched by the crown prince in 2021 as part of efforts to reduce regional carbon emissions. The initiative aims to reduce carbon emissions from regional hydrocarbon production by more than 60%.

6. Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)–III has been launched in which state?

A. Gujarat

B. Himachal Pradesh

C. Sikkim

D. Kerala

Answer & Explanation

Answer: B. Himachal Pradesh

  • The Prime Minister Narendra Modi launched Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)–III in Chamba, Himachal Pradesh. It is for the upgradation of around 3125 kilometres of roads in the state. More than Rs 420 crores has been sanctioned by the Central Government under this phase for the upgradation of 440 kilometres of roads in 15 border and far–flung blocks of the state.

7. Which state was ranked first in the ‘Pradhan Mantri Awas Yojana– Urban (PMAY–U) Awards 2021?

A. Tamil Nadu

B. Madhya Pradesh

C. Uttar Pradesh

D. Andhra Pradesh

Answer & Explanation

Answer: C. Uttar Pradesh

  • Uttar Pradesh bagged the first position in the ‘Pradhan Mantri Awas Yojana– Urban (PMAY–U) Awards 2021. It is followed by Madhya Pradesh and Tamil Nadu at second and third place, respectively. Gujarat saw five special category awards while Jammu and Kashmir was adjudged the ‘Best Performing UT’ alongside Dadra and Nagar Haveli and Daman & Diu.1.23 crore houses were sanctioned under the scheme of which 64 lakh have already been completed and delivered while the rest were at various stages of completion.

8. Launch Vehicle Mark 3 (LVM3) mission is associated with which country?

A. USA

B. India

C. China

D. Israel

Answer & Explanation

Answer: B. India

  • Indian Space Research Organisation’s Launch Vehicle Mark 3 (LVM3) mission will launch 36 OneWeb Gen–1 satellites, from the Satish Dhawan Space Centre in Sriharikota. LVM3 is the dedicated commercial satellite mission of New Space India Limited (NISL), a central public sector enterprise under the Department of Space. This is the first LVM3 dedicated commercial launch on demand through NSIL.

9. Which organisation has released a report titled ‘Using Technology to Improve a Billion Livelihoods’?

A. Asian Development Bank

B. World Economic Forum

C. International Monetary Fund

D. World Bank

Answer & Explanation

Answer: B. World Economic Forum

  • A new report titled ‘Using Technology to Improve a Billion Livelihoods’ was written by the World Economic Forum’s Centre for Fourth Industrial Revolution, India, in collaboration with Adani Group, was released in Gandhinagar, Gujarat. As per the report, putting drones at the centre of a technology–led transformation of Indian agriculture can boost the country’s GDP by 1–1.5 per cent. It will create at least five lakh jobs in the coming years in India.

10. Which country has sought Geographical Indication (GI) tag for Nihonshu/Sake in India?

A. China

B. Japan

C. Singapore

D. Indonesia

Answer & Explanation

Answer: B. Japan

  • The Embassy of Japan, New Delhi, has filed an application seeking Geographical Indication (GI) tag for Nihonshu/Japanese sake, an alcoholic beverage. This is the first time a product from Japan has filed for a tag at the Geographical Indication Registry. in Japan, nihonshu is regarded as a special beverage made from fermenting rice. The three main raw materials used are rice, koji–kin (a type of fungal spore) and water.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!