TnpscTnpsc Current Affairs

11th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

11th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 11th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

11th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. இந்தியாவின் முதல் 24×7 சூரிய ஆற்றலிலியங்கும் கிராமமாக அறிவிக்கப்பட்ட மொதேரா அமைந்துள்ள மாநிலம்/ யூனியன் பிரதேசம் எது?

அ. ஹிமாச்சல பிரதேசம்

ஆ. இராஜஸ்தான்

இ. குஜராத்

ஈ. மகாராஷ்டிரா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. குஜராத்

  • குஜராத் மாநிலத்தின் மேசானா மாவட்டத்தில் உள்ள மொதேரா கிராமத்தை இந்தியாவின் முதல் சூரிய ஆற்றலில் இயங்கும் கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மொதேரா, சூரியன் கோவிலுடன் தொடர்புடைய ஒரு கிராமமாகும். குஜராத் மாநில அரசின் கூற்றுப்படி, கிராமத்து வீடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு, கிராம மக்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அவர்களுக்கு சுழிய விலையில் சூரியவொளி மின்சாரம் வழங்கப்படும்.

2. ‘கல்வி 4.0 இந்தியா’ என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. IMF

ஆ. WEF

இ. உலக வங்கி

ஈ. UNICEF

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. WEF

  • அதன் ‘கல்வி 4.0 இந்தியா’ முனைவின் ஒருபகுதியாக, உலகப்பொருளாதார மன்றம் புதிய, ‘கல்வி 4.0 இந்தியா’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. எண்மம் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் கற்றல் இடைவெளிகளை எவ்வாறு நிரப்பலாம் என்பது குறித்தும் அனைவருக்கும் கல்வியை அணுகக்கூடியதாக எவ்வாறு மாற்றுவது என்பது குறித்தும் இந்த அறிக்கை விவாதிக்கிறது. உலகப்பொருளாதார மன்றம், UNICEF மற்றும் YuWaah ஆகியவற்றின் கூட்டு உழைப்பின்கீழ் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

3. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘Tele–MANAS’ என்ற முனைவுடன் தொடர்புடைய துறை எது?

அ. குழந்தை நலம்

ஆ. மனநலம்

இ. தொற்றுநோய்கள்

ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மனநலம்

  • மத்திய நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம், “Tele Mental Health Assistance and Networking Across States” (Tele–MANAS) என்ற மனநலச் சேவையை அறிமுகப்படுத்தியது. தேசிய மனநலத் திட்டத்தின் டிஜிட்டல் பிரிவாக Tele–MANAS இருக்கும். இத்திட்டத்திற்கான மைய முகமையாக தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனமும் (NIMHANS) தொழில்நுட்ப ஆதரவு வழங்குநராக ஐஐடி–பாம்பே நிறுவனமும் இருக்கும்.

4. சிறுத்தைகள் காணப்பட்ட அசோலா பாட்டி வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்/UT எது?

அ. அஸ்ஸாம்

ஆ. புது தில்லி

இ. மேற்கு வங்கம்

ஈ. ஜார்கண்ட்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புது தில்லி

  • அசோலா பாட்டி வனவுயிரி சரணாலயத்தில் எட்டுச் சிறுத்தைகள் இருப்பது ஓராண்டுகாலம் நடத்தப்பட்ட ஆய்வின்படி உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது அதன் செழிப்பான சுற்றுச்சூழலமைப்பின் உணர்த்தியாகக் கருதப்படுகிறது. கடந்த 1940ஆம் ஆண்டுக்குப்பிறகு பல பத்தாண்டுகளாக இச்சரணாலயத்தில் சிறுத்தைகள் தென்படாமலேயே இருந்தன.
  • கடந்த 2019ஆம் ஆண்டில், தில்லி வனத்துறையானது அந்தச்சரணாலயத்தில் சிறுத்தைப்புலியின் அடையாளங்கள் மற்றும் கீறல்களைப் புதிதாகப் பார்த்ததாக அறிவித்தது. வரிக்கழுதைப்புலி, காட்டுப்பூனை, பொன்னரி, இந்திய முயல், இந்தியப்பன்றி, கரும்புலி மற்றும் புள்ளிமான்போன்ற பாலூட்டிகளின் இருப்பு குறித்தும் இந்த ஆய்வு சிறப்பித்துக் கூறியுள்ளது.

5. 2022ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப்பரிசு, கீழ்க்காணும் எந்தத் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டமைக்காக மூன்று அறிவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது?

அ. போக்குசார் பொருளியல்

ஆ. உலகளாவிய வறுமை

இ. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள்

ஈ. அளவு முறைமைகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள்

  • 2022ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப்பரிசானது அமெரிக்க பெடரல் ரிசர்வின் முன்னாள் தலைவர் பென் S பெர்னான்கே, டக்ளஸ் W டைமண்ட் மற்றும் அமெரிக்காவின் பிலிப் H டைப்விக் ஆகியோருக்கு வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்த அவர்களது ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது.
  • நோபல் பரிசுக்குழுவின் கூற்றுப்படி, “வங்கிகள் ஏன் தேவைப்படுகின்றன, அவை ஏன் பாதிக்கப்படக்கூடிய நிலை கொண்டுள்ளன, அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கான நமது நவீன புரிதலுக்கு பரிசுபெற்றவர்கள் ஓர் அடித்தளத்தை வழங்கியுள்ளனர்”.

6. ‘ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான உலக நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர்.10

ஆ. செப்டம்பர்.20

இ. செப்டம்பர்.30

ஈ. அக்டோபர்.10

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. செப்டம்பர்.10

  • உலக ஓசோன் நாள் அல்லது ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான உலக நாளானது ஒவ்வோர் ஆண்டும் செப்.16 அன்று கொண்டாடப்படுகிறது. ஓசோன் படலத்தில் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Global Cooperation to Protect Life on Earth” என்பது இந்த ஆண்டு (2022) வரும் உலக ஓசோன் நாளுக்கானக் கருப்பொருளாகும். முதலாவது ஓசோன் நாள் 1995 செப்.16 அன்று கொண்டாடப்பட்டது.

7. SCO சுற்றுலா மற்றும் கலாச்சார தலைநகரமாக பரிந்துரைக்கப்பட்டுள்ள முதல் இந்திய நகரம் எது?

அ. மதுரை

ஆ. வாரணாசி

இ. கன்னியாகுமரி

ஈ. ஏதென்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வாரணாசி

  • இந்திய நகரமான வாரணாசி சமீபத்தில் முதல் SCO சுற்றுலா மற்றும் கலாச்சார தலைநகராக பரிந்துரைக்கப்பட்டது. உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத்தலைவர்கள் கவுன்சிலின் 22ஆவது கூட்டத்தில், 2022–2023 காலகட்டத்திற்கு இது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பிரணவ் ஆனந்த் என்பாருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. ஸ்குவாஷ்

ஆ. சதுரங்கம்

இ. டேபிள் டென்னிஸ்

ஈ. பூப்பந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சதுரங்கம்

  • பெங்களூருவைச் சேர்ந்த 15 வயது செஸ் வீரர் பிரணவ் ஆனந்த் சமீபத்தில் இந்தியாவின் 76ஆம் கிராண்ட்மாஸ்டர் ஆனார். ருமேனியாவின் மாமியாவில் நடந்துவரும் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப்பில் அவர் 2,500 Elo மதிப்பெண்களைக் கடந்தார். ஒரு கிராண்ட்மாஸ்டர் ஆக, ஒரு வீரர் மூன்று GM விதிமுறைகளைப் பெறவேண்டும் மற்றும் 2,500 Elo புள்ளிகளின் நேரடி மதிப்பீட்டைக் கடக்கவேண்டும். 2022 ஜூலையில் சுவிச்சர்லாந்தில் நடந்த 55ஆவது பீல் செஸ் விழாவில் பிரணவ் ஆனந்த் மூன்றாவது மற்றும் இறுதி GM நெறிமுறையை அடைந்தார்.

9. இந்தியாவின் முதல் லித்தியம் மின்கல உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டுள்ள நகரம் எது?

அ. மைசூரு

ஆ. திருப்பதி

இ. சிவகாசி

ஈ. ஓசூர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. திருப்பதி

  • சென்னையைச் சார்ந்த முனோத் தொழிற்துறை நிறுவனத்தால் `165 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் லித்தியம் மின்கல உற்பத்தி நிலையத்தை ஆந்திர மாநிலம் திருப்பதியில் வைத்து நடுவண் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இராஜீவ் சந்திரசேகர் தொடங்கி வைத்தார். தற்போது, இந்தியா தனது லித்தியம் அயன் மின்கலத் தேவைகளுக்காக 100 சதவீதம் வரை சீனா, தென் கொரியா, வியட்நாம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சார்ந்துள்ளது.

10. 2022 – ‘உலக நோயாளிகள் பாதுகாப்பு நாளுக்கானக்’ கருப்பொருள் என்ன?

அ. Medication Safety

ஆ. Ask Before Googling

இ. Expanding Healthcare

ஈ. Warning in Medication

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Medication Safety

  • உலக நோயாளிகள் பாதுகாப்பு நாளானது செப்.17 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு (WHO) செப்.17ஆம் தேதியை உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் என அறிவித்தது. “Medication Safety” என்பது இந்த ஆண்டில் (2022) வரும் உலக நோயாளிகள் பாதுகாப்பு நாளுக்கானக் கருப்பொருளாகும். மேலும், “Medication Without Harm” என்ற முழக்கவரியுடன் இந்த நாள் அனுசரிக்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பொருளாதாரம்: அமெரிக்க அறிவியலாளர்கள் மூவருக்கு நோபல்

வங்கிகள் குறித்தும், நிதி நெருக்கடி தொடர்பாகவும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர்கள் மூவருக்கு நடப்பாண்டுக்கான பொருளாதாரத்துக்குரிய நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக 2006 முதல் 2014 வரை பணியாற்றிய பென் பெர்னன்கே, நிபுணர்கள் டக்ளஸ் W டைமண்ட், பிலிப் H டிப்விக் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை ஸ்டாக்ஹோமில் வெளியிட்ட தேர்வுக்குழு தலைவர் ஜான் ஹேஸ்லர் கூறுகையில், “நிதி நெருக்கடியும் பொருளாதார வீழ்ச்சியும் நாட்டுக்குப் பெரும் இன்னல் விளைவிக்கக்கூடியவை. அவை ஒருமுறை மட்டுமல்லாமல் மீண்டும் மீண்டும் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, அவை குறித்து தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டியது கட்டாயமாக உள்ளது. அந்தப் புரிதலை வெளிப்படுத்திய நிபுணர்களுக்கே நடப்பாண்டுக்கான பொருளாதாரத்துக்குரிய நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. வங்கிகள் சந்திக்கும் நிதி நெருக்கடியைக் கண்டு கொள்ளாமல் ஏன் இருக்கக்கூடாது என்பதற்கான விடையை நிபுணர்கள் மூவரும் வழங்கியுள்ளனர்.

உலக நாடுகள் 2008-ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது, அதில் இருந்து மீள்வதற்கு மூவரின் ஆராய்ச்சிகளும் முக்கியப்பங்கு வகித்தன” என்றார்.

முதன்மை ஆராய்ச்சி: கடந்த 1930-ஆம் ஆண்டில் உலக நாடுகள் சந்தித்த பொருளாதார நெருக்கடிக்கு வங்கிகளின் தோல்வியே முக்கிய காரணம் எனத் தனது 1983-ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில் பெர்னன்கே வெளிப்படுத்தினார். வங்கி அமைப்பு முற்றிலும் தோல்வியடைந்ததே நவீன வரலாற்றின் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாக அமைந்ததென அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

2008-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை உலக நாடுகள் சந்தித்தபோது, அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக பெர்னன்கே செயல்பட்டார். அப்போது, அமெரிக்க நிதித்துறையுடன் இணைந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அவர் விரைந்து மேற்கொண்டார். தற்போது வாஷிங்டன் புரூகிங்ஸ் நிறுவனத்தில் அவர் பணியாற்றி வருகிறார்.

நிதிநெருக்கடி: சிகாகோ பல்கலைக்கழகப்பேராசிரியரான டைமண்ட், வாஷிங்டன் பல்கலை பேராசிரியரான டிப்விக் ஆகியோர் நிதி நெருக்கடியின் விளைவுகள் குறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டனர். வங்கிக்கடன்களுக்கு அரசு உத்தரவாதம் அளிப்பதன்மூலமாக நிதி நெருக்கடியின் விளைவுகளைத் தடுக்க முடியும் என அவர்கள் கூறினர். வங்கியை முறையாக நிர்வகிப்பது தொடர்பாக கடந்த 1983ஆம் ஆண்டில் அவர்கள் இருவரும் இணைந்து ஆய்வறிக்கையை வெளியிட்டனர். 2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது மூவரின் ஆராய்ச்சிகளும் முதலீட்டாளர்களுக்குப் பெருமளவில் உதவியதாக நோபல் பரிசு தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

11th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Modhera, which was declared as India’s first 24×7 solar–powered village, is located in which state/UT?

A. Himachal Pradesh

B. Rajasthan

C. Gujarat

D. Maharashtra

Answer & Explanation

Answer: C. Gujarat

  • Prime Minister Narendra Modi declared Modhera, a village in Mehsana district of Gujarat, as India’s first solar–powered village. Modhera, is also associated with the Sun Temple. According to the Gujarat government, over 1000 solar panels have been installed on village houses, generating electricity for the villagers. They will be provided with solar electricity at zero cost.

2. Which institution launched the ‘Education 4.0 India Report’?

A. IMF

B. WEF

C. World Bank

D. UNICEF

Answer & Explanation

Answer: B. WEF

  • As part of its Education 4.0 India initiative, the World Economic Forum has launched a new ‘Education 4.0 India Report’. The report deliberates on how digital and other technologies can address learning gaps and make education accessible to all. The report is the result of collaboration between the World Economic Forum, UNICEF and YuWaah.

3. Tele–MANAS Initiative, which was launched recently, is associated with which field?

A. Child health

B. Mental health

C. Communicable Diseases

D. Science and Technology

Answer & Explanation

Answer: B. Mental health

  • Union Ministry of Health and Family Welfare launched the mental health service called Tele Mental Health Assistance and Networking Across States (Tele–MANAS) initiative. Tele MANAS will be the digital arm of the National Mental Health Programme. The nodal centre for the program will be National Institute of Mental Health and Neuroscience (NIMHANS) with technological support from IIT–Bombay.

4. Asola Bhatti Wildlife Sanctuary, where leopards were spotted, is located in which state/UT?

A. Assam

B. New Delhi

C. West Bengal

D. Jharkhand

Answer & Explanation

Answer: B. New Delhi

  • As per a year–long study, presence of eight leopards in the Asola Bhatti Wildlife Sanctuary has been confirmed. This is seen as an indicator of its thriving ecosystem. The sanctuary did not record any leopard sighting for many decades after 1940.
  • In 2019, the Delhi Forest department reported fresh sightings of leopard pug marks and scats in the sanctuary. The study has also shed light on the presence of mammals such as striped hyena, jungle cat, golden jackal, Indian hare, Indian boar, black buck and hog deer among others.

5. The Nobel Memorial Prize in Economic Sciences 2022 was awarded to three scientists for their research in which field?

A. Behavioural Economics

B. Global Poverty

C. Banks and Financial Crises

D. Quantitative Methods

Answer & Explanation

Answer: C. Banks and Financial Crises

  • The Nobel Memorial Prize in Economic Sciences was awarded to Ben S Bernanke, the former chair of the US Federal Reserve, Douglas W Diamond and Philip H Dybvig of USA for research into banks and financial crises. As per the committee, ‘the laureates have provided a foundation for our modern understanding of why banks are needed, why they’re vulnerable, and what to do about it’.

6. When is the ‘International Day for the Preservation of the Ozone Layer’?

A. September.10

B. September.20

C. September.30

D. October.10

Answer & Explanation

Answer: A. September.10

  • World Ozone Day or International Day for the Preservation of the Ozone Layer is celebrated every year on 16 September. The day is observed to create awareness about the harmful effects of ozone layer depletion. This year, the theme of World Ozone Day 2022 is ‘Global Cooperation to Protect Life on Earth’. The first–ever Ozone Day was celebrated on 16 September 1995.

7. Which Indian city has been nominated as the first–ever SCO Tourism and Cultural Capital?

A. Madurai

B. Varanasi

C. Kanyakumari

D. Athens

Answer & Explanation

Answer: B. Varanasi

  • Indian city Varanasi has been recently nominated as the first–ever SCO Tourism and Cultural Capital. It was nominated for the period 2022–2023 at the 22nd Meeting of Shanghai Cooperation Organization (SCO) Council of Heads of State in Samarkand, Uzbekistan.

8. Pranav Anand, who was seen in the news, is associated with which sports?

A. Squash

B. Chess

C. Table–tennis

D. Badminton

Answer & Explanation

Answer: B. Chess

  • 15–year–old chess player Pranav Anand from Bengaluru recently became India’s 76th Grandmaster. He crossed the 2,500 Elo mark in the ongoing World Youth Chess Championship in Mamaia, Romania. To become a Grandmaster, a player has to secure three GM norms and cross the live rating of 2,500 Elo points. Pranav Anand scored the third and final GM norm at the 55th Biel Chess Festival in Switzerland in July 2022.

9. India’s first lithium cell manufacturing facility is set to be inaugurated in which city?

A. Mysuru

B. Tirupati

C. Sivakasi

D. Hosur

Answer & Explanation

Answer: B. Tirupati

  • The Minister of State for Electronics and Information Technology (MeitY), Rajeev Chandrasekhar, is set to inaugurate India’s first lithium cell manufacturing facility at Tirupati, Andhra Pradesh The unit has been set up by Chennai–based Munoth Industries with an outlay of Rs 165 crore. At present, India imports 100 percent of its lithium–ion batteries primarily from China, South Korea, Vietnam and Hong Kong.

10. What is the theme of the ‘World Patient Safety Day 2022’?

A. Medication Safety

B. Ask Before Googling

C. Expanding Healthcare

D. Warning in Medication

Answer & Explanation

Answer: A. Medication Safety

  • World Patient Safety Day is observed on September 17. In 2019, World Health Organization’s (WHO) declared September 17 as the World Patient Safety Day. This year, the theme of World Patient Safety Day 2022 is ‘Medication Safety’ along with the slogan ‘Medication Without Harm’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!