General Tamil

11th Tamil Unit 8 Questions

11th Tamil Unit 8 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 11th Tamil Unit 8 Questions With Answers Uploaded Below.

1. கீழ்க்கண்டவற்றுள் தாகூரை குறிக்கும் தொடர்கள் எவை?

1. பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்.

2. வடக்கையும் தெற்கையும் இணைத்த தீர்க்கதரிசி.

3. கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி.

அ) அனைத்தும்

ஆ) 1, 2

இ) 1, 3

ஈ) எதுவுமில்லை

2. தாகூர் தமது எத்தனையாவது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார்?

அ) 10

ஆ) 12

இ) 14

ஈ) 16

3. தாகூர் அவர்கள் எந்நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்புக்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்?

அ) தேசியகீதம்

ஆ) கீதாஞ்சலி

இ) அமர் சோனார் பங்களா

ஈ) காவியாஞ்சலி

4. தாகூர் அவர்கள் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டு ____.

அ) 1911

ஆ) 1913

இ) 1916

ஈ) 1918

5. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற ஆண்டு?

அ) 1911

ஆ) 1919

இ) 1916

ஈ) 1918

6. ரவீந்திரனாத் தாகூர் அவர்கள் எந்த சம்பவத்திற்காக ஆங்கிலேய அரசை கண்டித்து அவர்கள் வழங்கிய ‘ சர் ‘ பட்டத்தைத் துறந்தார்.

அ) சௌரிசௌரா சம்பவம்

ஆ) ஜாலியன் வாலாபாக் படுகொலை.

இ) இருட்டறை சம்பவம்

ஈ) இந்தியர்களை அடிமைப்படுத்துதல்.

7. தாகூர் அவர்கள் கீழ்க்கண்ட எந்தெந்த வடிவங்களில் இலக்கியங்களை எழுதியுள்ளார்?

1. கவிதைகள் 2. நாவல்கள் 3. சிறுகதைத் தொகுப்புகள் 4. பெரு நாடகங்கள் 5. குறு நாடகங்கள்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 4

இ) 1, 3, 4, 5

ஈ) 1, 3, 4

8. “குழந்தைகள் இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும். தங்கள் வேலையை தாங்களே கவனித்துக் கொண்டு, மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும்” என்று எண்ணியவர் யார்?

அ) நேதாஜி

ஆ) தாகூர்

இ) மகாத்மா

ஈ) நேரு

9. தாகூர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ஆண்டு?

அ) 1912

ஆ) 1916

இ) 1919

ஈ) 1921

10. தாகூரின் ‘ அமர் சோனார் பங்களா ‘ என்னும் பாடல் எந்த நாட்டின் நாட்டுப்பண்ணாக உள்ளது.

அ) இந்தியா

ஆ) மியான்மர்

இ) வங்காளம்

ஈ) இலங்கை

11. “குருதேவ் ” என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் யார்?

அ) நேதாஜி

ஆ) தாகூர்

இ) மகாத்மா

ஈ) நேரு

12. ‘தாகூரின் கடிதங்கள்‘ என்னும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்?

அ) குருதேவ்

ஆ) த.நா. குமாரசுவாமி

இ) த.நா. இராமசுவாமி

ஈ) நேதாஜி

13. ‘ தாகூரின் கடிதங்கள்‘ என்னும் நூலை யார் வெளியிட்டது?

அ) இந்திய அரசு

ஆ) வங்காள அரசு

இ) சாகித்திய அகாதெமி

ஈ) தமிழ்நாடு அரசு

14. த.நா.குமாரசுவாமி அவர்கள், தமிழ் – வங்க மொழிகளுக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டி ‘ நேதாஜி இலக்கிய விருதினை ‘ எந்த அரசு வழங்கியது?

அ) இந்திய அரசு

ஆ) வங்காள அரசு

இ) சாகித்திய அகாதெமி

ஈ) தமிழ்நாடு அரசு

15. தாகூர் அவர்கள் இயற்றிய நூல்களின் எண்ணிக்கையில் எது தவறானது?

அ) இசைப் பாடல்கள் – 2000 கும் மேற்பட்டவை

ஆ) கவிதைகள் – 1000 கும் மேற்பட்டவை

இ) நாவல்கள் – 8

ஈ) சிறுகதை தொகுப்புகள் – 18 கும் மேற்பட்டவை.

16. ‘ ஜாதீ ‘ என்பது எவ்வகை பூ என தாகூர் கூறுகிறார்?

அ) மல்லிகை

ஆ) முல்லை

இ) சாமந்தி

ஈ) ரோஜா

17. ‘ பியால ‘ என்ற மரம் எங்கு உள்ளதாக தாகூர் கூறுகிறார்?

அ) வங்காளம்

ஆ) சாந்தி நிகேதன்

இ) டெல்லி

ஈ) பீகார்

18. சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. புறாக்கண்ணி – கபோதாக்ஷி

2. மயில் விழியாள் – மயூராக்ஷி

3. விருப்புடையவள் – இச்சாமதி

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

19. ‘ மெடீரியலிஸம் ‘ என்பதன் பொருள் என்ன?

அ) பொருள்கள்

ஆ) மலர்கள்

இ) தாமஸிகம்

ஈ) ஆறுகள்

20. ” கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” என்று கூறியது யார்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) இல்குலாப்

ஈ) சுரதா

21. “காக்கை குருவி எங்கள் ஜாதி ” என்று பாடியவர் யார்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) இல்குலாப்

ஈ) சுரதா

22. “எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்

உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் ”

என்று பாடியவர் யார்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) இல்குலாப்

ஈ) சுரதா

23. இன்குலாப் அவர்களின் இயற்பெயர் என்ன?

அ) சலீம் அமீது

ஆ) சாகுல் அமீது

இ) சலீம் முகமது

ஈ) சாகுல் முகமது

24. இன்குலாப் அவர்கள் சீழ்க்கண்ட எந்தெந்த இலக்கிய தளங்களில் ஈடுபட்டார்?

1. கவிதை 2. கட்டுரை 3. நாடகம்

4. சிறுகதை 5. மொழிபெயர்ப்பு

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 4

இ) 1, 2, 3

ஈ) 1, 4, 5

25. இன்குலாப் அவர்களின் கவிதைகள் _____ என்ற பெயரில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

அ) ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்.

ஆ) ஒவ்வொரு புல்லும் நானும்

இ) ஒவ்வொரு புல்லையும் ஒரு கவிதை சொல்லி அழைப்பேன்.

ஈ) ஒவ்வொரு புல்லும் இயற்கையும்

26. இன்குலாப்பின் மரணத்திற்கு பிறகு அவருடைய உடல் ____மருத்துவக் கல்லூரிக்கு கொடையளிக்கப்பட்டது.

அ) சென்னை

ஆ) மதுரை

இ) செங்கை

ஈ) கோவை

27. “போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்

பொங்கும் சமத்துவப் புனலில் கரையும் ”

என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை

அ) மனோன்மனீயம்

ஆ) ஒவ்வொரு புல்லையும்

இ) திண்ணையை இடித்து தெருவாக்கு

ஈ) பாரதியார் கவிதைகள்

28. மனோன்மணீயம் எக்காலக்கட்டத்தில் எழுதப்பட்ட நூல்

அ) 19ம் நூற்றாண்டின் முற்பகுதி

ஆ) 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி

இ) 18 ம் நூற்றாண்டின் முற்பகுதி

ஈ) 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி

29. நாடகத் துறைக்கு தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினை தீர்க்க வந்த நூல் ______.

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) மனோன்மணீயம்

ஈ) குண்டலகேசி

30. மனோன்மணீயம் குறித்த கூற்றுகளுள் எது தவறானது?

அ) மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாக திகழ்கிறது.

ஆ) இது தமிழன்னை பெற்ற நல் அணிகலனாகும்.

இ) இந்நூலில் காப்பிய இலக்கணம் காணப்படவில்லை.

ஈ) இயற்கையில் ஈடுபாடு கொண்டு அதனில் தோய்ந்து இணையில்லாத இன்பமும் அமைதியும் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதை கூறுவதாக இந்நூல் உள்ளது.

(Note: காப்பிய இலக்கணம் முழுதும் நிரம்பிய நூலாக விளங்குகிறது.)

31. ” காலையில் கடிநகர் கடந்து நமது

வேலை முடிக்குதும், வேண்டின் விரைவாய்

இன்று இரா முடிக்கினும் முடியும்; “

இது யாருடைய கூற்று?

அ) சுந்தர முனிவர்

ஆ) நடராஜன்

இ) சுந்தரனார்

ஈ) சலீம் அகமது

32. சரியான பொருளை தேர்ந்தெடு.

கடிநகர், காண்டி

அ) பெரிய நகர், கோபம்

ஆ) காவல் உடைய நகரம், கோபம்

இ) காவல் உடைய நகரம், காண்க

ஈ) பெரிய நகர், காண்க

33. சரியான பொருளை தேர்ந்தெடு.

பூம்பராகம், ஆசு இலா

அ) ஒரு வகை இசை, குற்றம்

ஆ) பூவில் உள்ள மகரந்தம், குற்றம் இலாத

இ) பூவில் உள்ள மகரந்தம், குற்றம்

ஈ) போகவிட்டு, குற்றம் இலாத

34. சரியான பொருளை தேர்ந்தெடு.

தோட்டி, ஆயம்

அ) வாய்க்கால், விலங்கு

ஆ) தொட்டில், ஆடு

இ) துறட்டி, ஆடு

ஈ) ஆடு, குதிரை

35. சரியான பொருளை தேர்ந்தெடு.

புக்கவிட்டு, ஈட்டியது

அ) வாய்க்கால், கொடுத்தது

ஆ) போகவிட்டு, சேகரித்தது

இ) கொடுத்தது, சேகரித்தது

ஈ) சேகரித்தது, கொடுத்தது

36. சரியான பொருளை தேர்ந்தெடு.

சீரியதூளி, சிறுகால்

அ) நுண்ணிய வால், வாய்க்கால்

ஆ) ஊஞ்சல், சிறிய கொம்பு

இ) நுண்ணிய வால், சிறிய கொம்பு

ஈ) நுண்ணிய மணல், வாய்க்கால்

37. சரியான பொருளை தேர்ந்தெடு.

பரல், அண்டயோனி

அ) பாறை, உலகம்

ஆ) மேகம், உலகம்

இ) கல், ஞாயிறு

ஈ) பாறை, ஞாயிறு

38. சரியான பொருளை தேர்ந்தெடு.

முந்நீர் மடு, எழிலி

அ) மேகம், மேகம்

ஆ) மேகம், கடல்

இ) கடலாகிய நீர்நிலை, மேகம்

ஈ) ஆறு, அழகு

39. சரியான பொருளை தேர்ந்தெடு.

சாடு, பாடு

அ) உழைப்பு, பாய்

ஆ) பாய், உழைப்பு

இ) கோபம், பாடல்

ஈ) கோபம், உழைப்பு

40. சரியான பொருளை தேர்ந்தெடு.

ஓவா, வேதித்து

அ) உழைப்பு, வேதம்

ஆ) ஆறு, மாற்றி

இ) ஓயாத, மாற்றி

ஈ) ஆறு, வேதம்

41. இலக்கணக் குறிப்புத் தருக.

கடிநகர், சாலத் தகும்

அ) வினைச்சொற்றொடர்கள்

ஆ) உரிச்சொற்றொடர்கள்

இ) வினைத் தொகைகள்

ஈ) பண்புத்தொகைகள்

42. இலக்கணக் குறிப்புத் தருக.

உருட்டி, ஏகுமின்

அ) பெயரெச்சம், வினையெச்சம்

ஆ) வினையெச்சம், பெயரெச்சம்

இ) வினையெச்சம், ஏவல் பன்மை வினைமுற்று

ஈ) பெயரெச்சம், ஏவல் பன்மை வினைமுற்று

43. இலக்கணக் குறிப்புத் தருக.

பின்னிய, முளைத்த

அ) பெயரெச்சங்கள்

ஆ) வினையெச்சங்கள்

இ) வினைத்தொகைகள்

ஈ) வினைமுற்றுகள்

44. இலக்கணக் குறிப்புத் தருக.

இளமுகம், பேரழகு, முந்நீர், சிறு புல்

அ) பண்புத்தொகைகள்

ஆ) வினையெச்சங்கள்

இ) வினைத்தொகைகள்

ஈ) வினைமுற்றுகள்

45. இலக்கணக் குறிப்புத் தருக.

பூக்குலை, தேன்துளி

அ) 3 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை, 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

ஆ) 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை, 3 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை,

இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை, 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

ஈ) 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை

46. இலக்கணக் குறிப்புத் தருக.

ஆசிலா, ஓவா

அ) வினைத்தொகைகள்

ஆ) வினையெச்சங்கள்

இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்

ஈ) வினைமுற்றுகள்

47. இலக்கணக் குறிப்புத் தருக.

பார்த்து பார்த்து, உழுதுழுது, நில் நில்

அ) இரட்டைக் கிளவிகள்

ஆ) அடுக்குத்தொடர்கள்

இ) உம்மைத் தொகைகள்

ஈ) எண்ணும்மைகள்

48. இலக்கணக் குறிப்புத் தருக.

செய்தொழில், அலைகடல், வீழருவி

அ) வினைத்தொகைகள்

ஆ) வினையெச்சங்கள்

இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்

ஈ) வினைமுற்றுகள்

49. இலக்கணக் குறிப்புத் தருக.

வாய்க்கால், ஏகுதி

அ) உரிச்சொற்றொடர், வினையெச்சம்

ஆ) பெயரெச்சம், வினையெச்சம்

இ) இலக்கணப்போலி, ஏவல் ஒருமை வினைமுற்று

ஈ) பெயரெச்சம், ஏவல் ஒருமை வினைமுற்று

50. இலக்கணக் குறிப்புத் தருக.

மலையலை, குகைமுகம்

அ) உருவகங்கள்

ஆ) உவமைத்தொகைகள்

இ) உம்மைத் தொகைகள்

ஈ) எண்ணும்மைகள்

51. இலக்கணக் குறிப்புத் தருக.

புல்புழு, இராப்பகல்

அ) உருவகங்கள்

ஆ) உவமைத்தொகைகள்

இ) உம்மைத் தொகைகள்

ஈ) எண்ணும்மைகள்

52. இலக்கணக் குறிப்புத் தருக.

நெருநெரு, காலத்தச்சன்

அ) அடுக்குத்தொடர், உவமைத்தொகை

ஆ) இரட்டைக்கிளவி, உருவகம்

இ) இரட்டைக்கிளவி, உவமைத்தொகை

ஈ) அடுக்குத்தொடர், உருவகம்

53. இலக்கணக் குறிப்புத் தருக.

புழுக்களும் பூச்சியும், தாங்குதல்

அ) உம்மைத் தொகை, தொழிற்பெயர்

ஆ) எண்ணும்மை, தொழிற்பெயர்

இ) உம்மைத் தொகை, அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று

ஈ) எண்ணும்மை, அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று

54. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – முளைத்த

அ) முளைத்து + அ

ஆ) முளை + த் + அ

இ) முளை + த் + த் + அ

ஈ) முளைத்து + த் + அ

55. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – ஏகுமின்

அ) ஏகும் + மின்

ஆ) ஏகு + ம் + இன்

இ) ஏகும் + ம் + இன்

ஈ) ஏகு + மின்

56. ” முளைத்த –> முளை + த் + த் + அ ” இதில் “த் + த் ” என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் முறையே

அ) சாரியை, இறந்தகால இடைநிலை

ஆ) சந்தி, இறந்தகால இடைநிலை

இ) இறந்தகால இடைநிலை, சந்தி

ஈ) சந்தி, எதிர்கால இடைநிலை

57. ” ஏகுமின் –> ஏகு + மின் ” இதில் ‘மின் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) ஆண்பால் வினைமுற்று விகுதி

ஆ) பெண்பால் வினைமுற்று விகுதி

இ) ஏவல் வினை முற்று விகுதி

ஈ) பலர்பால் வினைமுற்று விகுதி

58. தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் எது?

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) நீலகேசி

ஈ) மனோன்மணீயம்

59. மனோன்மணீயம் கீழ்க்கண்ட எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?

அ) நீலகேசி

ஆ) குண்டலகேசி

இ) இரகசிய வழி

ஈ) சிவகாமியின் சரிதம்

60. ‘The secret way ‘ என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) பேராசிரியர் சுந்தரனார்

ஆ) லிட்டன் பிரபு

இ) இன்குலாப்

ஈ) ரிப்பன் பிரபு

61. மனோன்மணீயம் நூலை பேராசிரியர் சுந்தரனார் தமிழில் எழுதி வெளியிட்ட ஆண்டு

அ) 1981

ஆ) 1891

இ) 1982

ஈ) 1892

62. மனோன்மணீயம் நூலில் உள்ள மொத்த அங்கங்கள் மற்றும் களங்கள் முறையே எத்தனை?

அ) 20, 5

ஆ) 20, 6

இ) 5, 20

ஈ) 6, 20

63. மனோன்மணீயம் நூல் எவ்வகை பாவால் ஆனது?

அ) வெண்பா

ஆ) கலிப்பா

இ) வஞ்சிப்பா

ஈ) ஆசிரியப்பா

64. மனோன்மணீயம் நூலில் உள்ள கிளைக் கதை _____.

அ) சிவகாமியின் சபதம்

ஆ) சிவகாமியின் சரிதம்

இ) சிவகாமியின் சங்கடம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

65. மனோன்மணீயம் பே. சுந்தரனார் அவர்கள் பிறந்த ஊர் எது?

அ) ஆலப்புழை –திருவிதாங்கூர்

ஆ) ஆலப்புழை – திருவனந்தபுரம்

இ) ஆலப்புழை – திருவொற்றியூர்

ஈ) ஆற்காடு – திருவொற்றியூர்

66. மனோன்மணீயம் பே. சுந்தரனார் அவர்கள் பிறந்த ஆண்டு?

அ) 1854

ஆ) 1855

இ) 1954

ஈ) 1955

67. மனோன்மணீயம் பே. சுந்தரனார் அவர்கள் திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் ______ பேராசிரியராகப் பணியாற்றினார்.

அ) இலக்கணம்

ஆ) இலக்கியம்

இ) தத்துவம்

ஈ) கணிதம்

68. மனோன்மணீயம் பே. சுந்தரனார் அவர்களுக்கு சென்னை மாகாண அரசு இவருக்கு _____பட்டம் வழங்கி சிறப்பித்தது.

அ) முனைவர்

ஆ) தமிழ் செம்மல்

இ) ராவ்பகதூர்

ஈ) பாவேந்தர்

69. மனோன்மணீயம் பே. சுந்தரனார் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு எங்கு பல்கலைக்கழகம் நிறுவியுள்ளது?

அ) திருச்சி

ஆ) திருவிதாங்கூர்

இ) கன்னியாகுமரி

ஈ) திருநெல்வேலி

70. “குண நூல், கூத்த நூல், சந்தம், சமந்தம்” ஆகியவை எவ்வகை நூல்கள்?

அ) தமிழ் இலக்கண நூல்

ஆ) தமிழ் இலக்கிய நூல்

இ) தமிழ் நாடக இலக்கண நூல்

ஈ) தமிழ் நாடக இலக்கிய நூல்

71. கீழ்க்கண்டவற்றுள் தமிழ் நாடக நூல்கள் எவை?

1. அகத்தியம் 2. தொல்காப்பியம்

3. செயன்முறை 4. நாடகவியல்

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 3, 4

72. “உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்

உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்து நீ”

என்னும் வரிகள் யாரைக் குறிக்கின்றன?

அ) சுந்தர முனிவர்

ஆ) நடராஜன்

இ) மாமன்னர்

ஈ) நாங்கூழ்ப் புழு

73. ” எவ்வினை யோர்க்கும் இம்மையில் தம்மை

இயக்குதற்கு இன்பம் பயக்கும் ஓர் இலக்கு

வேண்டும்; உயிர்க்கு அது தூண்டுகோல் போலாம் ”

இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?

அ) ஐங்குறுநூறு

ஆ) அகநானூறு

இ) மனோன்மணீயம்

ஈ) ஒவ்வொரு புல்லையும்

74. “இதமுற தேன்துளி தாங்கி ஈக்களை

நலமுற அழைத்து நல்லூண் அருத்திப்

பதமுறத் தனதுபூம்ப ராகம் பரப்பித்து

ஆசுஇலாச் சிறுகாய் ஆக்கி”

இவ்வரிகள் கீழ்க்கண்ட எவற்றை குறிக்கின்றன?

அ) நாங்கூழ்ப் புழு

ஆ) வாய்க்கால்

இ) புல்

ஈ) மலர்

75. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – விடுத்தனை

அ) விடுத்து + அனை

ஆ) விடு + த் + அன் + ஐ

இ) விடு + த் + த் + அன் + ஐ

ஈ) விடுத்து + அன் + ஐ

76. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – சென்ற

அ) செல் + ன் + ற

ஆ) சென்று + அ

இ) சென் + ற

ஈ) செல்(ன்) + ற் + அ

77. ” விடுத்தனை –> விடு + த் + த் + அன் + ஐ ” இதில் ‘ஐ’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி

ஆ) முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

இ) படர்க்கை பன்மை வினைமுற்று விகுதி

ஈ) படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி

78. ” சென்ற –> செல்(ன்) + ற் + அ ” இதில் ‘ ற் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) சந்தி

ஆ) சாரியை

இ) இறந்த கால இடைநிலை

ஈ) எதிர்கால இடைநிலை

79. “மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும், வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்” என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது?

அ) பேரழகு

ஆ) காலத்தச்சன்

இ) உழுதுழுது

ஈ) சென்ற

80. “உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது?

அ) பேரழகு

ஆ) காலத்தச்சன்

இ) உழுதுழுது

ஈ) விடுத்து

81. “ஈறுபோதல், ஆதி நீடல், இணையவும், உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது?

அ) பேரழகு

ஆ) காலத்தச்சன்

இ) உழுதுழுது

ஈ) சென்ற

82. சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூடப் படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகுக்குக் காட்டியவர் யார்?

அ) நர்த்தகி நடராஜ்

ஆ) சுந்தரனார்

இ) ஜீவா

ஈ) செல்வி

83. நர்த்தகி நடராஜ் அவர்கள் பிறந்த ஊர் எது?

அ) அனுப்பானடி – திருச்சி

ஆ) அனுப்பானடி – மதுரை

இ) அனுப்பானடி – கரூர்

ஈ) அனுப்பானடி – திண்டுக்கல்

84. நர்த்தகி நடராஜ் அவர்கள் யாருடைய நடனத்தினால் ஈர்க்கப்பட்டு நடனம் பயின்றார்?

அ) சக்தி

ஆ) தஞ்சை கிட்டப்பா

இ) வைஜெயந்திமாலா

ஈ) நர்த்தகி

85. நர்த்தகி நடராஜ் அவர்களின் உயிரோட்டமான நடனத்தினால் ஒருநாளாக இருந்த நடன நிகழ்ச்சி இரண்டு மாதங்கள் வரை நீண்ட நிகழ்வு எந்நாட்டில் நடந்தது?

அ) இந்தியா

ஆ) கனடா

இ) சிங்கப்பூர்

ஈ) அமெரிக்கா

86. நர்த்தகி நடராஜ் அவர்கள் யாரிடம் நடனம் கற்றார்?

அ) சக்தி

ஆ) தஞ்சை கிட்டப்பா

இ) வைஜெயந்திமாலா

ஈ) நர்த்தகி

87. நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு ‘நர்த்தகி‘ என்ற பட்டத்தை சூட்டியது யார்?

அ) சக்தி

ஆ) தஞ்சை கிட்டப்பா

இ) வைஜெயந்திமாலா

ஈ) நர்த்தகி

88. எல்லா காலக்கட்டத்திலும் திருநங்கையர் இருந்தனர் என்ற சான்று எந்நூலில் உள்ளது என்று நர்த்தகி நடராஜ் அவர்கள் கூறுகின்றார்?

அ) திருக்குறள்

ஆ) அகத்தியம்

இ) தொல்காப்பியம்

ஈ) மணிமேகலை

89. 11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல் _______.

அ) திருக்குறள்

ஆ) சிலப்பதிகாரம்

இ) தொல்காப்பியம்

ஈ) மணிமேகலை

90. ‘வேளிர் அடல்‘ பற்றிய குறிப்புகள் எந்நூலில் உள்ளது?

அ) திருக்குறள்

ஆ) அகத்தியம்

இ) தொல்காப்பியம்

ஈ) மணிமேகலை

91. “தமிழச்சி என்பதில் தாளாத பெருமை கொண்ட நான் பரதத்தின் பக்கம் திரும்பினேன்“ என்று கூறியவர் யார்?

அ) சக்தி

ஆ) தஞ்சை கிட்டப்பா

இ) வைஜெயந்திமாலா

ஈ) நர்த்தகி நடராஜ்

92. நர்த்தகி நடராஜ் அவர்கள் ஜப்பானிலுள்ள ஒசாகா நகரத்தில் எந்த பாடல்களை நடனமாக நிகழ்த்தினார்?

1. தேவாரம் 2. திருவாசகம் 3. சிலப்பதிகாரம்

4. தொல்காப்பியம்

அ) 1, 3

ஆ) 2, 3

இ) 1, 2

ஈ) 3, 4

93. ‘அடுத்த ஜென்மத்தில் நான் தமிழனாக பிறந்து திருக்குறள் படிக்க வேண்டும்’ என்று கூறியவர் யார்?

அ) காந்தி

ஆ) நேதாஜி

இ) நேரு

ஈ) நர்த்தகி நடராஜ்

94. ‘ கலையின் வழியாகப் பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் ‘ என்று கூறியவர் யார்?

அ) சக்தி

ஆ) தஞ்சை கிட்டப்பா

இ) வைஜெயந்திமாலா

ஈ) நர்த்தகி நடராஜ்

95. நர்த்தகி நடராஜ் அவர்கள் ஆய்வு செய்த இலக்கியங்கள் எவை?

1. சங்கப்பாடல்கள் 2. திரும்புகழ்

3. தேவாரம் 4. திவ்விய பிரபந்தம்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2

இ) 1, 3

ஈ) 1, 2, 3

96. _____, _____ ஆகியவை தன்னை இன்னும் ஒரு குழந்தையாக வைத்திருக்கின்றன என நர்த்தகி நடராஜ் அவர்கள் கூறுகின்றார்.

அ) பாரம்பரியம், கலாச்சாரம்

ஆ) நடனம், கலாச்சாரம்

இ) நடனம், பாரம்பரியம்

ஈ) நடனம், வாசிப்பு

97. நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு ‘ மதிப்புறு முனைவர் ‘ என்ற பட்டத்தை யார் வழங்கியது?

அ) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

ஆ) பெரியார் பல்கலைக்கழகம்

இ) இந்திய அரசுத் தொலைக்காட்சி

ஈ) தமிழக அரசு

98. நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு ‘ சிறந்த கலைஞர் ‘ விருதை யார் வழங்கியது?

அ) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

ஆ) பெரியார் பல்கலைக்கழகம்

இ) இந்திய அரசுத் தொலைக்காட்சி

ஈ) தமிழக அரசு

99. நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு தமிழக அரசு எவ்விருது வழங்கி கவுரவித்தது?

அ) நாட்டியாஞ்சலி விருது

ஆ) கலைமாமணி விருது

இ) சிறந்த கலைஞர் விருது

ஈ) சங்கீத நாடக அகாதெமி விருது

100. நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு இந்திய அரசு எவ்விருது வழங்கி கவுரவித்தது?

அ) நாட்டியாஞ்சலி விருது

ஆ) கலைமாமணி விருது

இ) சிறந்த கலைஞர் விருது

ஈ) சங்கீத நாடக அகாதெமி விருது

101. நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு ஏ கிரேடு விருதை யார் வழங்கியது?

அ) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

ஆ) பெரியார் பல்கலைக்கழகம்

இ) இந்திய அரசுத் தொலைக்காட்சி

ஈ) தமிழக அரசு

102. ‘ தாமரை நெஞ்சம் ‘ என்னும் நூலை இயற்றியவர் யார்?

அ) மீரா

ஆ) கல்கி

இ) ஜீவா

ஈ) அகிலன்

103. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

1. நர்த்தகி நடராஜ் அவர்கள் தான் ‘ திருநங்கை ‘ என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார்.

2. திருநங்கைகளுக்குள் முதன் முதலில் கடவுச்சீட்டு, தேசிய விருது, மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பல்வேறு முதல் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2மட்டும் சரி

ஈ) அனைத்தும் தவறு

104. இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் யார்?

அ) ஜோயிதா மோண்டல் மாஹி

ஆ) பிரித்திகா யாஷினி

இ) தாரிகா பானு

ஈ) நர்த்தகி நடராஜ்

105. பிரித்திகா யாஷினி கணினிப் பாடப்பிரிவு இளநிலைப் பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆண்டு ____.

அ) 2010

ஆ) 2011

இ) 2012

ஈ) 2013

106. இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளரான பிரித்திகா யாஷினி எங்கு பணியாற்றுகிறார்?

அ) சேலம்

ஆ) காஞ்சிபுரம்

இ) சென்னை

ஈ) மதுரை

107. இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளரான பிரித்திகா யாஷினி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?

அ) சேலம்

ஆ) காஞ்சிபுரம்

இ) சென்னை

ஈ) மதுரை

108. லோக் அதாலத் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை _____.

அ) ஜோயிதா மோண்டல் மாஹி

ஆ) பிரித்திகா யாஷினி

இ) தாரிகா பானு

ஈ) நர்த்தகி நடராஜ்

109. ஜோயிதா மோண்டல் மாஹி எங்கு லோக் அதாலத் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அ) இஸ்லாம்பூர் – பீகார்

ஆ) இஸ்லாம்பூர் – ஒடிசா

இ) இஸ்லாம்பூர் – மேற்கு வங்கம்

ஈ) இஸ்லாம்பூர் – பஞ்சாப்

110. ஜோயிதா மோண்டல் மாஹி என்ற திருநங்கை எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

அ) பீகார்

ஆ) மேற்கு வங்கம்

இ) பஞ்சாப்

ஈ) ஒடிசா

111. தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினப் பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவர் யார்?

அ) ஜோயிதா மோண்டல் மாஹி

ஆ) பிரித்திகா யாஷினி

இ) தாரிகா பானு

ஈ) நர்த்தகி நடராஜ்

112. தாரிகா என்ற திருநங்கை எங்கு தனது பள்ளிப் படிப்பை முடித்தார்?

அ) காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி – சேலம்

ஆ) காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி – சென்னை

இ) காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி – காஞ்சிபுரம்

ஈ) காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி – திருவள்ளூர்

113. தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினப் பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவரான தாரிகா தேர்ச்சி பெற்ற ஆண்டு

அ) 2010

ஆ) 2012

இ) 2014

ஈ) 2017

114. கீழ்க்கண்டவற்றுள் அச்சுப் படி திருத்துபவரின் பணிகளில் தவறானது எது?

அ) ஒரு வரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிழைகள் இருந்தால் பிழைகளைக் குறிக்கும் கோடுகளைத் தெளிவாக காட்டல் வேண்டும்

ஆ) எண்ணின் இடையில் பிழையிகுந்தால் அந்தத் தொகையில் தவறான எண்ணை மட்டும் பிழையின்றி எழுதிக் காட்டுதல் வேண்டும்.

இ) ஒரு செல்லில் பிழைகள் பல இருந்தால் அச்சொல்லையே நீக்கிவிட்டுச் சரியான சொல்லைத் தெளிவாக பக்க ஓரத்தில் தருதல் வேண்டும்.

ஈ) அச்சுப் படி திருத்துவோர் செய்தியின் உருவையோ உள்ளடக்கத்தையோ மாற்றுதல் கூடாது.

115. “பாரதியார் கேளிச் சித்தரத்தை விகடச் சித்திறம் என்று குறிப்பார்”

இவ்வரிகளில் உள்ள பிழைகளை குறியீடுகள் இடுதல் முறையில் திருத்தி எழுதுக.

அ) : லி: ர: றி

ஆ) : ற: ர: றி

இ) /லி /ர /றி

ஈ) /ற /ர /றி

116. பிழைகள் உள்ள அச்சுப்படியைத் திருத்துவதற்குக் கையாளப்படும் திருத்தக் குறியீடுகள் எத்தனை வகைப்படும்?

அ) 3

ஆ) 4

இ) 5

ஈ) 6

117. கீழ்க்கண்டவற்றுள் பிழைகள் உள்ள அச்சுப்படியைத் திருத்துவதற்குக் கையாளப்படும் திருத்தக் குறியீடுகளில் அல்லாதது எது?

அ) பொதுவானவை

ஆ) நிறுத்தக் குறியீடுகள் தொடர்பானவை

இ) இடைவெளி தரவேண்டியவை

ஈ) சிறப்பு எழுத்துக்கள்

118. சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. Dt – அச்சடித்திருக்கும் சொல்லையோ எழுத்தையோ நீக்குக.

2. ^ – சொல்லையோ எழுத்தையோ இந்தக் குறிப்பிட்ட இடத்தில் சேர்த்துக் கொள்க

3. [ – புதிய பத்தி தொடங்குக.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

119. கீழ்க்கண்டவற்றுள் குறியீடுகள் இடுதல் முறையில் திருத்தி

எழுதுதலில் எது சரியானது?

அ) பாரதி தம்மைப் போலவே பிறரை: யும்

நேசிக்கும் பண்ப்பாளர் / dt

ஆ) பாரதி தம்மைப் போலவே பிறரை: யும்

நேசிக்கும் பண்ப்பாளர் / ;

இ) பாரதி தம்மைப் போலவே பிறரை ; யும்

நேசிக்கும் பண்ப்பாளர் / dt

ஈ) பாரதி தம்மைப் போலவே பிறரை / / யும்

நேசிக்கும் பண்ப்பாளர் / dt

120. சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. , / – கால்புள்ளியைச் சேர்க்கவும்

2. ; / – முக்காற்புள்ளியைச் சேர்க்கவும்

3. : / – அரைப்புள்ளியைச் சேர்க்கவும்

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

(Note: ; / – அரைப்புள்ளியைச் சேர்க்கவும்

: / – முக்காற்ப்புள்ளியைச் சேர்க்கவும்)

121. சரியான இணையைத் தேர்ந்தெடு.

1.. / – முற்றுப்புள்ளியை நீக்கவும்

2.? / – வினாக்குறி அடையாளத்தை நீக்கவும்.

3. ! / – வியப்புக் குறியை நீக்கவும்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2, 3 சரி

ஈ) அனைத்தும் தவறு

(Note:. / – முற்றுப்புள்ளியை சேர்க்கவும்

? / – வினாக்குறி அடையாளத்தை சேர்க்கவும்.

! / – வியப்புக் குறியை சேர்க்கவும்.)

122. கீழ்க்கண்டவற்றுள் குறியீடுகள் இடுதல் முறையில் திருத்தி

எழுதுதலில் எது சரியானது?

அ) சங்ககாலத்தில் கற்பித்தல் பணியை மன்றம் / ; /

சான்றோர் அவை / அறங்கூர் அவையம் / சமணப்பள்ளி ; / ; /

போன்ற அமைப்புகள் செய்துள்ளன.

ஆ) சங்ககாலத்தில் கற்பித்தல் பணியை மன்றம் / : /

சான்றோர் அவை / அறங்கூர் அவையம் / சமணப்பள்ளி : / : /

போன்ற அமைப்புகள் செய்துள்ளன.

இ) சங்ககாலத்தில் கற்பித்தல் பணியை மன்றம் / , /

சான்றோர் அவை / அறங்கூர் அவையம் / சமணப்பள்ளி , /, /

போன்ற அமைப்புகள் செய்துள்ளன.

ஈ) சங்ககாலத்தில் கற்பித்தல் பணியை மன்றம் / ; /

சான்றோர் அவை / அறங்கூர் அவையம் / சமணப்பள்ளி , /, /

போன்ற அமைப்புகள் செய்துள்ளன.

123. கீழ்க்கண்டவற்றுள் குறியீடுகள் இடுதல் முறையில் திருத்தி

எழுதுதலில் எது சரியானது?

அ) தமிழ் / இதழ்களில் தமிழ் திங்கள் / நாள் ஆகியவற்றை

முதன்முதலாகக் குறித்தவர் பாரதியார். /ஆண்டு # /

ஆ) தமிழ் இதழ்களில் தமிழ் திங்கள் / நாள் ஆகியவற்றை

முதன்முதலாகக் குறித்தவர் பாரதியார். /ஆண்டு ; /

இ) தமிழ் / இதழ்களில் தமிழ் திங்கள் / நாள் ஆகியவற்றை

முதன்முதலாகக் குறித்தவர் பாரதியார். /ஆண்டு, /

ஈ) தமிழ் / இதழ்களில் தமிழ் திங்கள் / நாள் ஆகியவற்றை

முதன் முதலாகக் குறித்தவர் பாரதியார். /ஆண்டு # /

124. சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. – சொற்களை அல்லது எழுத்துகளைச் சேர்க்கவும். இடைவெளி விட வேண்டாம்.

2. # – பத்திகளுக்கிடையில் இடைவெளி தருக

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) அனைத்தும் தவறு

125. கீழ்க்கண்ட வற்றுள் தவறானதை தேர்ந்தெடு.

அ) – இடப்பக்கம் தள்ளவும்

ஆ) – வலப்பக்கம் தள்ளவும்

இ) – சொற்களை இணைக்கவும்

ஈ) – ஒற்றை மேற்கோள் குறியீடு இடுகள்

( Note: – பத்திகளை இணைக்கவும்)

126. கீழ்க்கண்டவற்றுள் குறியீடுகள் இடுதல் முறையில் திருத்தி

எழுதுதலில் எது சரியானது?

அ) கல்வியின் சிறப்பை / கல்வி அழகே அழகு / என நாலடியார் கூறுகிறது.‘/ ‘/

ஆ) கல்வியின் சிறப்பை / கல்வி அழகே அழகு / என நாலடியார் கூறுகிறது.”/ “ /

இ) கல்வியின் சிறப்பை கல்வி / அழகே அழகு / என நாலடியார் கூறுகிறது.‘/ ‘/

ஈ) கல்வியின் சிறப்பை / கல்வி அழகே அழகு / என நாலடியார் கூறுகிறது.‘/ ;/

127. தவறான இணையைத் தேர்ந்தெடு

அ) Unbold – வழக்கமான எழுத்தில் மாற்றுக.

ஆ) Bold – தடித்த எழுத்தில் மாற்றுக.

இ) Trs – சொற்கள், எழுத்துகளை சேர்த்து எழுதுக.

ஈ) l.c – எழுத்துருவைச் சிறியதாக ஆக்குக.

(Note: Trs – சொற்கள், எழுத்துகளை இடம் மாற்றுக.)

128. பொருத்துக

ஆங்கிலப் பெயர் – தமிழ்ப் பெயர்

1. Semicolon – i) அரைப்புள்ளி

2. Colon – ii) முக்காற்புள்ளி

3. Colondash – iii) வரலாற்றுக்குறி

4. Dash – iv) இடைக் கோடு

அ) i ii iii iv

ஆ) ii iii iv i

இ) iv iii ii i

ஈ) iii iv i ii

129. பொருத்துக

ஆங்கிலப் பெயர் – தமிழ்ப் பெயர்

1. Bar – i) வெட்டுக்கோடு

2. Brackets – ii) பகர அடைப்பு

3. Double brackets – iii) இரட்டை பிறைக்கோடு

4. Large brackets – iv) பிறைக்கோடு

அ) i ii iii iv

ஆ) i iv iii ii

இ) iv iii ii i

ஈ) iii iv i ii

130. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. எழுத்துக் குறை ( ‘)

2. மேற்படிக் குறி ( “)

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) அனைததும் தவறு

131. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. அரைப்புள்ளி (:)

2. முக்காற்புள்ளி ( 😉

3. வரலாற்றுக்குறி ( /)

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

132. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. இடைக்கோடு ( – )

2. வெட்டுக்கோடு ( /)

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) அனைததும் தவறு

133. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. பிறைக்கோடு ( () )

2. இரட்டைப்பிறைக்கோடு ( {})

3. பகர அடைப்பு ( [])

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

134. பூஜை, விஷயம், உபயோகம் – எனபவை முறையே

அ) வழிபாடு, செய்தி, பயன்பாடு

ஆ) பயன்பாடு, வழிபாடு, செய்தி

இ) வழிபாடு, பயன்பாடு, செய்தி

ஈ) பயன்பாடு, செய்தி, வழிபாடு

135. கூவும் குயிலும் கரையும் காகமும் – தொடரில் இடம்பெற்ற மரபு

அ) பெயர் மரபு

ஆ) வினைமரபு

இ) ஒலி மரபு

ஈ) இவை மூன்றும்

136. யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்? – இது எவர் மொழி?

அ) வாய்க்கால்

ஆ) நாங்கூழ்

இ) நடராசன்

ஈ) புல்

137. தமிழின் முதல் பாவடிவ நாடக நூல்

அ) இரகசிய வழி

ஆ) மனோன்மணீயம்

இ) நூல்தொகை விளக்கம்

ஈ) திருவிதாங்கூர் அரசர் வரலாறு

138. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக

அ) நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்

ஆ) இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்

இ) இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்.

ஈ) இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு.

139. “பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து உலகை நோக்குங்கள்; நமது நாட்டை நோக்குங்கள்; ” என்று கூறியவர் யார்?

அ) அண்ணா

ஆ) பெரியார்

இ) திரு.வி.க

ஈ) விவேகானந்தர்

140. “ நமது நாடு நாடாயிருக்கிறதா? தாய் முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயம் துடிக்கிறது; சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை, உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன” என்ற வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?

அ) பொதுமை வேட்டல்

ஆ) முருகன் அல்லது அழகு

இ) இளமை விருந்து

ஈ) பெண்ணின் பெருமை

141. திரு. வி.க அவர்கள் யாரிடம் தமிழ் பயின்றார்?

அ) விருத்தாசலனார்

ஆ) நா.கதிரைவேல்

இ) மயிலை தணிகாசலம்

ஈ) திருவாரூரார்

142. திரு. வி.க அவர்கள் யாரிடம் சைவ நூல்களை பயின்றார்?

அ) விருத்தாசலனார்

ஆ) நா.கதிரைவேல்

இ) மயிலை தணிகாசலம்

ஈ) திருவாரூரார்

143. தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) அண்ணா

ஆ) திரு.வி.க

இ) தாராபாரதி

ஈ) உ.வே.சா

144. கீழ்க்கண்டவற்றுள் திரு.வி.க எழுதாத நூல்கள் எவை?

1. பெண்ணின் பெருமை 2. முருகன் அல்லது அழகு

3. சைவத்திறவு 4. திருக்குறள் விரிவுரை

5. என் கடன் பணி செய்து கிடப்பதே

அ) 4, 5

ஆ) 4 மட்டும்

இ) 3, 4

ஈ) எதுவுமில்லை

145. திரு.வி.க அவர்கள் கீழ்க்கண்ட எந்த இதழ்களில் ஆசிரியராக பணியாற்றினார்?

1. தென்றல் 2. தேசபக்தன் 3. நவசக்தி 4. தமிழ்நிலம்

அ) 1, 2

ஆ) 2, 3

இ) 3, 4

ஈ) 1, 4

146. தமிழ்க் கவிஞர்களில் அரசியல் இயக்கங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டவர் யார்?

அ) அண்ணா

ஆ) திரு.வி.க

இ) தாராபாரதி

ஈ) ஈரோடு தமிழன்பன்

147. தொழிற்சங்கத்தை தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டவர் யார்?

அ) அண்ணா

ஆ) திரு.வி.க

இ) காமராஜர்

ஈ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

148. திரு.வி.க. அவர்கள் தலைமை தமிழாசிரியராக எங்கு பணியாற்றினார்?

அ) வெஸ்லி கல்லூரி

ஆ) வெஸ்லி பள்ளி

இ) சென்னை பல்கலைக்கழகம்

ஈ) அண்ணாமலை பல்கலைக்கழகம்

149. திரு.வி.க குறித்த கூற்றுகளில் எது தவறானது?

1. திரு.வி.க தம் தந்தையிடம் தொடக்கக் கல்வி பயின்றார்.

2. சிறந்த மேடைப் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார்.

3. இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் பெற்றவர்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

150. கீழ்க்கண்டவற்றுள் “தேன்” என்ற பொருள் தரும் சொல் எது?

அ) பிரசம்

ஆ) பாணி

இ) பாழி

ஈ) பாலை

151. கீழ்க்கண்டவற்றுள் பாரதிதாசன் நடத்திய இதழ் எது?

அ) குயில்

ஆ) எழுத்து

இ) தென்றல்

ஈ) தேசபக்தன்.

152. கீழ்க்கண்டவற்றுள் சி.சு.செல்லப்பா நடத்திய இதழ் எது?

அ) குயில்

ஆ) எழுத்து

இ) தென்றல்

ஈ) தேச பக்தன்

153. கவிஞர் மீரா நடத்திய பதிப்பகம் எது?

அ) குயில்

ஆ) அன்னம்

இ) தென்றல்

ஈ) தேச பக்தன்

154. கீழ்க்கண்டவற்றுள் மூங்கில் என்பதை குறிக்கும் சொல்?

அ) அரி

ஆ) பாணி

இ) வேய்

ஈ) பாழி

155. உமறுப் புலவரை ஆதரித்தவர் யார்?

அ) சீதக்காதி

ஆ) பனு அகமது மரைக்காயர்

இ) அபு பக்கர்

ஈ) முகமது நபி

156. “You must not lose faith in humanity. Humanity is an ocean; if a few drops of the ocean are dirty, the ocean does not become dirty” என்று கூறியவர் யார்?

அ) நேரு

ஆ) திரு.வி.க

இ) நேதாஜி

ஈ) காந்தி

157. ” சங்கக் கவிதையின் எழுத்தொன்றைத் திறந்து

காக்கைப்பாடினி வெளியே வந்தாள் ”

இவ்வரிகள் யாருடையது?

அ) திரு.வி.க

ஆ) தாராபாரதி

இ) ஹெச்.ஜி.ரசூல்

ஈ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

158. “வயல்வெளியெங்கும் சலசலத்து திரிந்த

மருதயாழின் ஓசை வழிந்தோட

கால்கள் சுழன்றாடிய விறலி கூத்தின் முன்

பிரபஞ்சமே தன்னை புனைந்து கொண்டது “

என்ற வரிகள் காணப்படும் கவிதை?

அ) ஒவ்வொரு புல்லையும்

ஆ) சங்கத் தமிழ் அனைத்தும் தா

இ) பெண்ணின் பெருமை

ஈ) பொதுமை வேட்டல்

159. பொருத்துக.

1. Earthworm – i) விழிப்புணர்வு

2. Globalisation – ii) முனைவர் பட்டம்

3. Doctor of philosophy – iii) உலகமயமாக்கல்

4. Awareness – iv) நாங்கூழ்ப்புழு

அ) i ii iii iv

ஆ) ii iii iv i

இ) iv iii ii i

ஈ) iii iv i ii

160. சரியான இணையை தேர்ந்தெடு

1. Passport – நுழைவு இசைவு

2. Materialism – பொருள் முதல் வாதம்

3. Ph.D – முனைவர் பட்டம்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

(Note: Passport – கடவுச் சீட்டு)

161. சரியான இணையை தேர்ந்தெடு

1. இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் மொழிப் பெயர்ப்பு – த.நா. குமாரசுவாமி

2. ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் – கவிஞர் இன்குலாப்

3. நான் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!