Tnpsc

12th & 13th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

12th & 13th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th & 13th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘தி மார்னிங் கன்சல்ட்’ நடத்திய ஆய்வில், எந்த நாட்டின் பிரதமர் முதலிடம் பிடித்துள்ளார்?

அ) ரஷ்யா

ஆ) ஆஸ்திரேலியா

இ) நியூசிலாந்து

ஈ) இந்தியா 

  • ‘தி மார்னிங் கன்சல்ட்’ நடத்திய ஆய்வொன்றில், இந்தியப்பிரதமர் மோடி, 70% ஒப்புதல் மதிப்பீட்டைப்பெற்றுள்ளார். உலகளாவிய தலைவர்களின் ஒப்புதல் & மறுப்பு மதிப்பீட்டை இவ்வாய்வு கணக்கிடுகிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 70 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் தலைமையை அங்கீகரித்துள்ளனர்.
  • அடுத்தபடியாக மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 64% வாக்குகள், இத்தாலி பிரதமர் மாரியோ தெராகி 63% வாக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். மொத்தம் 13 நாடுகளில் இந்த ஆய்வானது நடத்தப்பட்டது.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற பஞ்சீர் பள்ளத்தாக்கு அமைந்துள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) பாகிஸ்தான்

இ) சீனா

ஈ) ஆப்கானிஸ்தான் 

  • ஆப்கானிஸ்தானிலுள்ள பஞ்சீர் பள்ளத்தாக்கில், தலிபான் படைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு முன்னணி (NRF) கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. போர்நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ள NRF, தலிபான்கள் பஞ்சீரில் மேற்கொண்டு வரும் அவர்களது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்றும் அது முன்மொழிந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் உட்பட முக்கியபகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பஞ்சீர் பள்ளத்தாக்கு இன்னமும் அவர்களின் கைகளுக்குச் செல்லவில்லை.

3. 2020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய அணி, எத்தனை பதக்கங்களைப் பெற்றுள்ளது?

அ) 6

ஆ) 17

இ) 19 

ஈ) 21

  • டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய அணி 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை உள்ளடக்கிய மொத்தம் 19 பதக்கங்களுடன் போட்டியை நிறைவுசெய்தது. மொத்தம் உள்ள 162 நாடுகளில் இந்தியா 24ஆவது இடத்திலும், பதக்கங்களின் எண்ணிக்கையில் 20ஆவது இடத்திலும் உள்ளது. இந்த ஆண்டு (2021), 9 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்ற 54 பாரா-தடகள வீரர்களைக் கொண்ட மிகப்பெரிய குழுவை இந்தியா போட்டிக்கு அனுப்பியது.

4. பின்வரும் யாரின் நினைவுநாளை அனுசரிக்கும் விதமாக, செப்.5 அன்று ஐநா’இன் சர்வதேச தொண்டு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?

அ) ‘சுவாமி’ விவேகானந்தர்

ஆ) ‘அன்னை’ தெரசா 

இ) ‘மகாத்மா’ காந்தி

ஈ) ‘கர்மவீரர்’ காமராஜர்

  • ஆண்டுதோறும் செப்.5ஆம் தேதியன்று சர்வதேச தொண்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ‘அன்னை’ தெரசாவின் நினைவுநாளையொட்டி இந்தநாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நாள், செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும்
  • 2030’க்குள் SDG’களை அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானம், 2012ஆம் ஆண்டில் ஐநா பொது அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஐநா’இன் 44 உறுப்புநாடுகளால் இணைந்து இந்தத் தீர்மானம் வழங்கப்பட்டது.

5. 2015 நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பாரம்பரிய இடங்கள் மற்றும் நலவாழ்வுத்துறை திட்டங்களை புனரமைப்பதற்காக, இந்தியா, எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ) சீனா

ஆ) பாகிஸ்தான்

இ) அமெரிக்கா

ஈ) நேபாளம் 

  • இந்தியாவும் நேபாளமும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்தி -ட்டுள்ளன. அதன்கீழ் கடந்த 2015 பூகம்பத்தின்போது சேதமடைந்த 14 கலாச்சார பாரம்பரியம் மற்றும் 103 நலவாழ்வுத்துறை திட்டங்களை புனரமைப்பதற்காக இந்தியா நேபாளத்திற்கு உதவும். இந்தப்புனரமைப்பு -க்கான மொத்த செலவு 420 கோடி நேபாள ரூபாய் ஆகும்.
  • இது பூகம்பத்திற்கு பிந்தைய இந்தியாவின் மறுசீரமைப்பு தொகுப்பின் ஒருபகுதியாகும். இதன்கீழ், இந்தியா, நேபாளத்திற்கு $250 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.

6. SIMBEX என்பது சிங்கப்பூருக்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான கடல்சார் கடற்படைப்பயிற்சியாகும்?

அ) அமெரிக்கா

ஆ) சீனா

இ) ரஷ்யா

ஈ) இந்தியா 

  • சிங்கப்பூர்-இந்தியா கடல்சார் இருதரப்பு பயிற்சியின் (SIMBEX) 28ஆவது பதிப்பு தென்சீனக்கடலில் நடந்தது. COVID தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு SIMBEX, ‘கடல்சார்’ பயிற்சியாக மட்டுமே நடத்தப்பட்டது. ‘SIMBEX’ என்பது இந்தியக் கடற்படையின் மிகப்பழமையான இருதரப்பு கடல்சார் பயிற்சியாகும்.

7. INSPIRE விருதுகள் – MANAK’ஐ நிறுவி வழங்கிவரும் நடுவண் அமைச்சகம் எது?

அ) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 

ஆ) மின்னணு அமைச்சகம்

இ) உழவு அமைச்சகம்

ஈ) உள்துறை அமைச்சகம்

  • ‘INSPIRE’ விருதுகளுக்கான தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் திட்டப் போட்டி – MANAK (Million Minds Augmenting National Aspiration and Knowledge) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் – மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் தொடங்கப்பட்டது. நாடு முழுவதுமுள்ள மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

8. வானிலிருந்து ஏவக்கூடிய ஆளில்லா வான்வழி வாகனத்தை (ALUAV) உருவாக்குவதற்காக, இந்தியா, எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது?

அ) அமெரிக்கா 

ஆ) பிரான்ஸ்

இ) ரஷ்யா

ஈ) ஜெர்மனி

  • வானிலிருந்து ஏவக்கூடிய ஆளில்லா வான்வழி வாகனத்தை (ALUAV) உருவாக்குவதற்கான அமெரிக்க பாதுகாப்புத்துறையின் திட்ட ஒப்பந்தத் -தில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. ALUAV’ க்கான இந்தத் திட்ட ஒப்பந்தம், பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்னெடுப்பின் ஒட்டுமொத்த கட்டமைப்பின்கீழ் உள்ளது.
  • ALUAV முன்மாதிரியை இணைந்து உருவாக்கும் செயலில் வான்படை ஆராய்ச்சி ஆய்வகம், இந்திய வான்படை மற்றும் DRDO இடையேயான ஒத்துழைப்பும் இதிலடங்கும்.

9. சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், இந்தியாவின் முதல் செயல்பாட்டு பனிப்புகை கோபுரத்தை எந்நகரத்தில் திறந்தார்?

அ) தில்லி 

ஆ) வாரணாசி

இ) கொல்கத்தா

ஈ) லக்னோ

  • நடுவண் சுற்றுச்சூழல், வனம் & காலநிலைமாற்ற அமைச்சர் பூபேந்திர யாதவ், இந்தியாவின் முதல் செயல்பாட்டு பனிப்புகை கோபுரத்தை தில்லி ஆனந்த் விகாரில் திறந்துவைத்தார். பனிப்புகை கோபுரம் என்பது வளிமாசைக் குறைப்பதற்காக பெரிய (அ) நடுத்தர அளவிலான காற்று தூய்மைப்படுத்திகளாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகும். இந்தக் கோபுரத்தை, NBCC (இந்தியா) லிட்’ஐ திட்ட மேலாண் ஆலோசகராக வைத்துக்கொண்டு டாடா ப்ராஜெக்ட்ஸ் லிட் கட்டியுள்ளது.

10. PRANA தளத்தைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

ஆ) புவி அறிவியல் அமைச்சகம்

இ) சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஈ) சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் 

  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், 2021 செப்.7 அன்று ‘PRANA’ என்ற இணையதளத்தைத் தொடங்கினார். தூயகாற்று மற்றும் நீலவானத்தை உறுதிசெய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு இணங்க தேசிய தூய்மைவளி திட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்கா -ணிப்பதற்காக PRANA இணையதளம் பயன்படுத்தப்படும்.
  • ‘நீலவானிற்கான தூயவளி பன்னாட்டு நாளையொட்டி’ மேன்மையுறா நகரங்களில் இது தொடங்கப்பட்டது. மேன்மையுறா நகரங்கள் என்பது 5 ஆண்டு காலப்பகுதியில் தேசிய வளி தரத்தை பூர்த்தி செய்யத் தவறிய நகரங்களாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பனாரஸ் பல்கலையில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை: பிரதமர் மோடி

மகாகவி பாரதியார் நினைவுநூற்றாண்டை ஒட்டி சுப்ரமணிய பாரதியார் பெயரில் பனாரஸ் பல்கலைக்காகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

2. சென்னை அம்பத்தூரில் ரூ.2,500 கோடியில் தகவல் தரவு மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

சென்னை அம்பத்தூரில் ரூ.2,500 கோடியில் அமையவுள்ள தரவு மையத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். முதல்வரின் முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வழியாக புதிதாக அமையவுள்ள மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஜப்பான் நாட்டினை தலைமையமாகக் கொண்டு என்டிடி க்ளோபல் தரவு மைய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் 160 தகவல் தரவு மையங்களை நிறுவியுள்ளன. சென்னையிலும் தனது மையத்தை இந்த நிறுவனம் அமைக்க உள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:- தகவல் தரவு மையங்களை அமைத்துச் செயல்படுவதில் உலகளவில் ஒரு முன்னணி நிறுவனமாக என்டிடி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு செய்வதுடன், 700 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் தகவல் தரவு மையம் மற்றும் கேபிள் இறங்குதளங்களை அமைத்திட உள்ளது. இந்தத் திட்டத்தில் 50 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்காவும் நிறுவப்பட உள்ளது.

6 இடங்களில் சரக்குகளை கையாளும் முனையம்

சரக்குகளைக் கையாளும் வகையில் ஆறு இடங்களில் ரூ.2,000 கோடியில் முனையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், டிபி வேல்ா்டு குழுமம் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது. இதற்கான நிகழ்வு, சென்னையில் உள்ள முதல்வரின் முகாம் இல்லத்தில் நடந்தது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: ஐக்கிய அரசு அமீரக நாடுகளைச் சோ்ந்த டிபி குழுமம், தூத்துக்குடி, திருவள்ளூா், ஸ்ரீபெரும்புதூா், சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூா் ஆகிய நகரங்களில் ரூ.2,000 கோடி முதலீட்டில் கன்டெய்னா் முனையம், சிறு துறைமுகம், குளிா்பதனக் கிடங்கு, பல்பொருள் கிடங்குப் பூங்கா, நவீன வா்த்தகக் கிடங்கு மண்டலம் மற்றும் தகவல் தரவு மையம் போன்றவற்றை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுடன் அந்த நிறுவனம் சனிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

ரூ.2,000 கோடி முதலீட்டில் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. சென்னை, திருவள்ளூா், தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூரில் கன்டெய்னா் முனையங்கள், கன்டெய்னா் சரக்கு நிலையங்கள், சுங்கக் கிடங்குகள், குளிா்பதனக் கிடங்குகள், உள்நாட்டுக் கிடங்கள் போன்ற பல உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்கெனவே நிறுவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

3. ரஷிய, ஆப்பிரிக்க சிகரங்களின் உச்சியை எட்டி சிஐஎஸ்எஃப் வீராங்கனை சாதனை

ரஷியா, ஆப்பிரிக்காவிலுள்ள இரண்டு சிகரங்களின் உச்சியை குறுகிய இடைவெளியில் அடைந்து மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீராங்கனை (சிஐஎஸ்எஃப்) சாதனை படைத்துள்ளாா். இதுதொடா்பாக தன்சானியாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரி பினயா பிரதான் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘சிஐஎஸ்எஃப் வீராங்கனை கீதா சாமோத்தா கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ரஷியாவிலுள்ள எல்பிரஸ் சிகரத்தின் உச்சியை அடைந்தாா். அவா் ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயா்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோ உச்சியை சனிக்கிழமை எட்டினாா்.

இதன் மூலம் இரண்டு சிகரங்களின் உச்சியை குறுகிய கால இடைவெளியில் எட்டிய இந்தியா் என்ற சாதனையை அவா் படைத்துள்ளாா்’’ என்று தெரிவித்தாா். ரஷியாவிலுள்ள எல்பிரஸ் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 5,642 மீட்டா் உயரம் கொண்டது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவிலுள்ள கிளிமாஞ்சாரோ சிகரம் 5,895 மீட்டா் உயரம் கொண்டது.

4. ‘குவாலிஃபயா்’ கையில் ‘கோப்பை’: வரலாறு படைத்தாா் எம்மா ராடுகானு

அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு (18) சாம்பியன் ஆனாா். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தகுதிச்சுற்று (குவாலிஃபயா்) வழியே முன்னேறி வந்து வாகை சூடிய முதல் போட்டியாளா் என்ற வரலாற்று சாதனையை அவா் எட்டியுள்ளாா். நியூயாா்க் நகரில் சனிக்கிழமை நள்ளிரவு (இந்திய நேரப்படி) நடைபெற்ற இறுதிச்சுற்றில் அவா், கனடா வீராங்கனை லெய்லா ஃபொ்னாண்டஸை 6-4, 6-3 என்ற நோ் செட்களில் 1 மணி நேரம் 51 நிமிஷங்களில் வீழ்த்தினாா்.

அமெரிக்க ஓபன் வரலாற்றிலேயே 2-ஆவது முறையாக இறுதிச்சுற்றில் பதின் வயது போட்டியாளா்கள் இருவா் மோதினா் என்பதால், இந்த இறுதிச்சுற்றுக்கு ரசிகா்களிடையே பலத்த எதிா்பாா்ப்பு இருந்தது. புத்தகப் பையுடன் பள்ளிக்கு வருவது போல் ராடுகானு, லெய்லா இருவருமே களத்துக்குள் நுழைந்தபோது ரசிகா்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனா். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இருவருமே தோ்ந்த முன்னணி வீராங்கனைகளை போல ஆடினா். பல ஷாட்கள் ரேலிக்களாகத் தொடா்ந்தன. முன்னதாக, காலிறுதிச்சுற்று வரையில் லெய்லா-ராடுகானு இருவருமே பெரிதாக கவனம் பெற்றிருக்கவில்லை. ஆனால், நவோமி ஒசாகாவை வீழ்த்தி கவனம் ஈா்த்தாா் லெய்லா. மறுபுறம் சத்தமின்றி இதர போட்டியாளா்களை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ராடுகானு, அதில் லெய்லாவையே வீழ்த்தி அனைவரையும் அசத்தினாா்.

2-ஆவது கிராண்ட்ஸ்லாம்

தாம் களம் கண்ட 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியிலேயே சாம்பியனாகியிருக்கிறாா் ராடுகானு. இதற்கு முன் கடந்த விம்பிள்டனில் பங்கேற்ற அவா், அதில் 4-ஆவது சுற்றின்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதியில் விலகியிருந்தாா்.

செட்டை இலக்காமல் சாம்பியன்

அமெரிக்க ஓபனில் இறுதிச்சுற்று வரை எந்த சுற்றிலுமே ஒரு செட்டை கூட இழக்காமல் சாம்பியன் ஆகிய 2-ஆவது வீராங்கனை ராடுகானு. முன்னதாக அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 2014-இல் அவ்வாறு சாம்பியனாகியிருந்தாா்.

18 வயதில் பட்டம்

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சாம்பியன் ஆகியிருக்கும் 2-ஆவது இளம் வீராங்கனை (18) ராடுகானு. முதல் வீராங்கனையாக ரஷியாவின் மரியா ஷரபோவா உள்ளாா். அவா் 2004-இல் தனது 17-ஆவது வயதில் விம்பிள்டனில் சாம்பியனானாா்.

44 ஆண்டுகளுக்குப் பிறகு

இங்கிலாந்து கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 1977-க்குப் பிறகு சாம்பியனாகியிருக்கும் முதல் இங்கிலாந்து வீராங்கனை ராடுகானு. இதற்கு முன் 1977-இல் விம்பிள்டன் போட்டியில் அந்நாட்டைச் சோ்ந்த விா்ஜினியா வேட் சாம்பியனாகியிருந்தாா். ராடுகானு சாம்பியன் ஆன இந்தப் போட்டியில் விா்ஜினியாவும் அவரது ஆட்டத்தை மைதானத்தில் இருந்து நேரடியாக கண்டு களித்தாா். ஆட்டத்துக்குப் பிறகு ராடுகானுவை சந்தித்து ஆரத்தழுவி பாராட்டினாா்.

5. லா லிகா: அட்லெடிகோ மாட்ரிட் வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் எஸ்பான்யோலை வீழ்த்தியது. அட்லெடிகோ மாட்ரிட் தரப்பில் யானிக் கராஸ்கோ (79-ஆவது நிமிஷம்), தாமஸ் லெமாா் (90+9 நிமிஷம்) ஆகியோரும், எஸ்பான்யோல் தரப்பில் ரௌல் டி தாமஸும் (40-ஆவது நிமிஷம்) கோலடித்தனா். இதர ஆட்டங்களில் அத்லெடிக் கிளப் 2-0 என்ற கோல் கணக்கில் மல்லோா்காவை வென்றது. லெவான்டே – ராயோ வால்கேனோ அணிகள் மோதிய ஆட்டம் (1-1) டிரா ஆனது.

1. Which country’s Prime Minister topped in the survey conducted by ‘The Morning Consult’?

A) Russia

B) Australia

C) New Zealand

D) India 

  • In a survey conducted by ‘the Morning Consult’, the Indian Prime Minister has obtained an approval rating of 70 percent.
  • The survey calculates the approval and disapproval rating of global leaders, based on a 7–day moving average of adults in each country, which is analysed by online interviews. Indian PM’s approval rating is highest among 13 global leaders polled in the survey and is ahead of the heads of Mexico, Italy, Germany, UK etc.

2. Panjshir Valley, which is in news recently, is located in which country?

A) India

B) Pakistan

C) China

D) Afghanistan 

  • The National Resistance Front (NRF) has been demonstrating stiff resistance against the Taliban forces at Panjshir Valley in Afghanistan. The NRF have called for a ceasefire and have proposed that Taliban stop its military operations in Panjshir. Although the major parts of Afghanistan including the capital city have been taken in Taliban’s control, the Panjshir Valley is yet to be taken control by Talibans.

3. How many medals have been bagged by the Indian contingent at the Tokyo Paralympic Games 2020?

A) 6

B) 17

C) 19 

D) 21

  • At the Tokyo Paralympic Games, the Indian contingent finished with a total of 19 medals which includes 5 gold, 8 silver, and 6 bronze medals. Out of the total 162 countries, India was ranked at 24th position and 20th in terms of number of medals.
  • This year, India had sent the largest contingent of 54 para–athletes, who participated in 9 sporting disciplines.

4. The UN International Day of Charity on Sept.5th, is observed to commemorate the death anniversary of which leader?

A) ‘Swami’ Vivekananda

B) ‘Mother’ Teresa 

C) ‘Mahatma’ Gandhi

D) ‘Karmaveerar’ Kamarajar

  • Every year, 5th September is observed as the International Day of Charity. This day was so chosen, in memory of the death anniversary of Mother Teresa. This day aims to bridge the gap between the rich and poor and to meet the SDGs by 2030.
  • The resolution in this regard was adopted by the United Nations General Assembly in the year 2012, which was co–sponsored by 44 UN member nations.

5. India has signed an MoU with which country, to reconstruct heritage sites and health sector projects, affected in 2015 earthquake?

A) China

B) Pakistan

C) USA

D) Nepal 

  • India and Nepal have signed a MoU (memorandum of understanding), under which India would help Nepal in reconstruction of 14 cultural heritage and 103 health sector projects which were damaged during the 2015 earthquake. The total cost of these reconstruction is 420 crore Nepalese Rupees.
  • This is a part of India’s post–earthquake reconstruction package, under which India has committed a total grant of USD 250 million to Nepal.

6. SIMBEX is a Maritime Naval Exercise between Singapore and which country?

A) USA

B) China

C) Russia

D) India 

  • The 28th edition of Singapore–India Maritime Bilateral Exercise (SIMBEX) was held at South China Sea. Due to the COVID pandemic, this year’s SIMBEX was conducted as an ‘at–sea only’ exercise without any physical intervention. SIMBEX is the Indian Navy’s oldest bilateral maritime exercise with a foreign country.

7. The INSPIRE Awards – MANAK is constituted / given by which Ministry?

A) Ministry of Science and Technology 

B) Ministry of Electronics

C) Ministry of Agriculture

D) Ministry of Home Affairs

  • The National Level Exhibition and Project Competition for INSPIRE Awards – MANAK (Million Minds Augmenting National Aspiration and Knowledge) has commended, under the aegis of Dept. of Science and Technology – Union Ministry of Science and Technology.
  • The INSPIRE Awards – MANAK scheme has been launched to motivate students in the age group of 10–15 years of class 6 to 10th standards, to become future innovators.

8. India has signed an agreement with which country for development of Air–launched unmanned aerial vehicle (ALUAV)?

A) USA 

B) France

C) Russia

D) Germany

  • India’s Ministry of Defence has signed a project agreement with the US Department of Defence for cooperation in the development of air–launched unmanned aerial vehicle (ALUAV).
  • This Project Agreement for ALUAV is under the overall framework of the Defence Technology and Trade Initiative (DTTI). It also includes the collaboration between Air Force Research Laboratory, Indian Air Force, and DRDO in the process of co–developing an ALUAV Prototype.

9. In which city, Environment Minister Bhupender Yadav has launched the first functional Smog Tower of India?

A) Delhi 

B) Varanasi

C) Kolkata

D) Lucknow

  • Union Minister for Environment, Forest and Climate Change, Bhupender Yadav has virtually inaugurated the first functional smog tower in India at Anand Vihar, Delhi.
  • A smog tower is a structure designed as large/medium scale air purifiers to reduce air pollution, usually by forcing the air through filters. The tower has been built by Tata Projects Limited with NBCC (India) Ltd. as the project management consultant.

10. Which ministry has launched the PRANA portal?

A) Ministry of New and Renewable Energy

B) Ministry of Earth Sciences

C) Ministry of Health and Family Welfare

D) Ministry of Environment, Forest and Climate Change 

  • Union environment minister, Bhupendra Yadav has launched a portal called PRANA on September 7, 2021. PRANA Portal will be used to track the progress of the National Clean Air Programme (NCAP) in order to comply with India’s commitment to ensure clean air and blue skies to everybody. This portal was launched on the occasion of ‘International Day of Clean Air for Blue Skies’ in non–attainment cities (NAC).
  • Non–attainment cities are those cities that failed to meet the National air quality standards in a five–year period.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!