TnpscTnpsc Current Affairs

12th & 13th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

12th & 13th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 12th & 13th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

12th & 13th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘இந்திய உயிரியல் தரவு மையம்’ தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ. உத்தரகாண்ட்

ஆ. ஹரியானா

இ. சிக்கிம்

ஈ. கேரளா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹரியானா

  • நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் வாழ்க்கை அறிவியல் தரவுகளுக்கான இந்தியாவின் முதல் தேசிய களஞ்சியமான, ‘இந்திய உயிரியல் தரவு மையம்’ (IBDC) திறந்து வைத்தார். IBDC ஆனது பரிதாபாத்தில் உள்ள உயிரித்தொழில்நுட்பத்தின் பிராந்திய மையத்திலும், புவனேசுவரத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்தில் தரவு ‘பேரிடர் மீட்பு’த்தளத்திலும் நிறுவப்பட்டது. இது சுமார் 4 பெட்டாபைட் தரவு சேமிப்புத்திறனும், ‘பிரம்’ உயர்செயல்திறன் கணித்தலியல் வசதியும் கொண்டுள்ளது.

2. ஆதார் விதிகளில் திருத்தத்தின்படி, ஆதார ஆவணங்களை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பது கட்டாயமாகும்?

அ. 5

ஆ. 10

இ. 20

ஈ. 25

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 10

  • நடுவண் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் ஆதார் வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு முறையாவது ஆதார ஆவணங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும். நடுவண் அடையாள தரவு களஞ்சியத்தில் (CIDR) ஆதார் தொடர்பான தகவல்களின் துல்லியத்தை உறுதிசெய்யும் விதமாக ஆதார் விதிமுறைகளை இந்திய அரசாங்கம் திருத்தியுள்ளது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பிஹாரி புரஸ்காருடன் தொடர்புடைய துறை எது?

அ. நிர்வாகம்

ஆ. விளையாட்டு

இ. இலக்கியம்

ஈ. கலாச்சாரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இலக்கியம்

  • பிஹாரி புரஸ்காரானது ஒவ்வோர் ஆண்டும் ஒரு இராஜஸ்தானி எழுத்தாளரின் ஹிந்தி அல்லது இராஜஸ்தானியில் கடந்த பத்து ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஒரு சிறந்த படைப்புக்காக வழங்கப்படுகிறது. மூத்த எழுத்தாளர்கள் மது கங்காரியா மற்றும் Dr மாதவ் ஹடா ஆகியோருக்கு முறையே 31ஆவது மற்றும் 32ஆவது பிஹாரி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இது கடந்த 1991இல் கே கே பிர்லா அறக்கட்டளையால் நிறுவப்பட்ட மூன்று இலக்கிய விருதுகளில் ஒன்றாகும். இது பிரபல கவிஞர் பிஹாரியின் பெயரால் வழங்கப்படுகிறது.

4. அகில இந்திய வானொலிக்கு (AIR) எந்தத் தலைவர் வருகை தந்ததை நினைவுகூரும் வகையில் பொது சேவை ஒலிபரப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது?

அ. ‘நேதாஜி’ சுபாஷ் சந்திர போஸ்

ஆ. ‘மகாத்மா’ காந்தியடிகள்

இ. ‘அண்ணல்’ அம்பேத்கர்

ஈ. ஜவஹர்லால் நேரு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ‘மகாத்மா’ காந்தியடிகள்

  • ஒவ்வோர் ஆண்டும் நவ.12 அன்று பொது சேவை ஒலிபரப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1947ஆம் ஆண்டு தில்லியிலுள்ள அகில இந்திய வானொலியின் அரங்கிற்கு ‘மகாத்மா’ காந்தியடிகள் வருகை தந்ததன் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பிரிவினைக்குப் பிறகு ஹரியானாவில் உள்ள குருஷேத்திரத்தில் தற்காலிகமாக குடியேறிய இடம்பெயர்ந்த மக்களுக்காக அப்போது ‘மகாத்மா’ காந்தியடிகள் தனது உரையை நிகழ்த்தினார்.

5. 2022 நவ.10ஆம் தேதியை, ‘தினை நாள்’ எனக் கடைப்பிடித்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஒடிஸா

இ. கேரளா

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஒடிஸா

  • ஒடிஸா மாநில அரசானது இந்த ஆண்டு 2022 நவம்பர்.10ஆம் தேதியை, ‘தினை நாள்’ எனக் கடைப்பிடித்தது. தினையை அதிக ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழலுக்குகந்த உணவுப் பொருளாக ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும். ஒடிஸா அரசாங்கம் கடந்த 2017இல் ஒடிஸா மில்லட் மிஷனை (OMM) அறிமுகப்படுத்தியது. ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் 2019–20இல் OMMஇன்கீழ் `100 கோடி நிதி ஆதரவை அறிவித்தார்.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற நல்லமலை வனப்பகுதி அமைந்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. சிக்கிம்

ஈ. கேரளா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆந்திர பிரதேசம்

  • தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தை இணைக்கும் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே வடங்கள் தாங்கும் தொங்கு பாலத்தைக் கட்ட நடுவணரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தின் கிழக்குத்தொடர்ச்சி மலையில் உள்ள அழகிய நல்லமலை வனத்தொடரின் வழியாக இந்தப்பாலம் அமைக்கப்படும். மூன்று கிமீ நீளங்கொண்ட இந்தப்பாலம் ஹைதராபாத் மற்றும் திருப்பதி இடையேயான தூரத்தை 80 கிமீட்டராகக் குறைக்கும்.

7. இந்திய காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர்.21

ஆ. நவம்பர்.21

இ. டிசம்பர்.21

ஈ. ஜனவரி.21

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அக்டோபர்.21

  • ஒவ்வோர் ஆண்டும் அக்.21ஆம் தேதி, ‘காவலர் நினைவு நாள்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், பணியின்போது உயிரிழந்த பத்து CRPF வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக அனுசரிக்கப்படுகிறது. 1959 அக்டோபர்.21 அன்று, லடாக்கிற்கு அருகிலுள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்னும் பகுதியில் சீனப்படைகள் நடத்திய தாக்குதலில் பத்து இந்திய காவலர்கள் கொல்லப்பட்டனர்.

8. FATFஇன் சாம்பல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட இந்தியாவின் அண்டை நாடு எது?

அ. இலங்கை

ஆ. பாகிஸ்தான்

இ. மியான்மர்

ஈ. நேபாளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பாகிஸ்தான்

  • நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவானது (FATF) அண்மையில் பாகிஸ்தானை தனது சாம்பல் பட்டியலில் இருந்து நீக்கும் முடிவை அறிவித்தது. பணச்சலவை மற்றும் நிதிசார் பயங்கரவாதத்தை (AML/CFT) எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தானின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை FATF வரவேற்று பாராட்டியுள்ளது.

9. சீனாவில் மும்முறை பதவி வகித்த முதல் அதிபர் யார்?

அ. மாவோ சேதுங்

ஆ. ஹு ஜிந்தாவோ

இ. ஜீ ஜின்பிங்

ஈ. சின்சோ அபே

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஜீ ஜின்பிங்

  • சீன அதிபர் ஜீ ஜின்பிங், பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக இருந்து சீன அதிபராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்று வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளார். மாவோ சேதுங்கிற்குப் பிறகு நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆட்சியாளராக அவர் உருவாக்கியுள்ளார். சீன பொதுவுடைமைக்கட்சி புரட்சியாளரும் சீன மக்கள் குடியரசின் நிறுவனருமான மாவோ சேதுங் கடந்த 1949 முதல் 1959 வரை இருமுறை சீனத்தை ஆட்சிசெய்துள்ளார். முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவோவும் 2003 முதல் 2013 வரை இருமுறை ஆட்சிசெய்துள்ளார். கடந்த 2012 முதல் சீனத்தின் அதிபராக ஜீ ஜின்பிங் உள்ளார்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அமன் செராவத் என்பாருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. மல்யுத்தம்

ஆ. மட்டைப்பந்து

இ. ஹாக்கி

ஈ. பூப்பந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மல்யுத்தம்

  • ஸ்பெயினின் பொன்டெவேத்ராவில் நடைபெற்ற U–23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் என்ற சாதனையை பதின்வயதினர் அமன் செராவத் படைத்தார். U–23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – 2022இல் இந்தியா ஒரு தங்கப்பதக்கமும், ஒரு வெள்ளிப்பதக்கமும் நான்கு வெண்கலமும் என ஆறு பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய-பிரெஞ்சு கூட்டு விமானப்பயிற்சி கருடா-VII ஜோத்பூர் விமானப்படைத்தளத்தில் நிறைவு

ஜோத்பூரில் உள்ள விமானப்படைத்தளத்தில் நடைபெற்று வந்த இந்திய விமானப்படை (IAF) மற்றும் பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப்படை (FASF) ஆகிவற்றின் 7ஆவது கூட்டு விமானப்பயிற்சி, ‘கருடா-VII’ நவம்பர்.12 அன்று நிறைவடைந்தது. பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படையின் ரபேல் போர் விமானம் மற்றும் ஏ-330 பல்திறன் டேங்கர் போக்குவரத்து அம்சங்களுடன் கூடிய விமானம் போன்றவைகள் இந்தக்கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றது,

இந்திய விமானப்படை சார்பாக சுகோய்-30, ரபேல், தேஜாஸ் மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள் கலந்து கொண்டன. ஜாகுவார் போர் விமானம், இராணுவ மி-17 இரக ஹெலிகாப்டர்கள் மற்றும் புதிதாக விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள, ‘பிரசந்தா’ போன்றவைகள் இந்திய வான்படையின் பங்களிப்புகளாகும். கருடா-VII பயிற்சியானது, இருநாட்டு விமானப்படைகளுக்கும் தொழிற்முறையிலான தொடர்பை ஏற்படுத்தவும், செயல்பாட்டுத்திறன் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கியது. இந்தப் பயிற்சியின் விளைவாக இருநாட்டு வான்படை வீரர்களும் வான்வெளிப்போர் நடவடிக்கைகளின் நுட்பங்களை ஆராய்ந்து, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த பயிற்சியானது இரு நாட்டு விமானப்படை வீரர்களுக்கு இடையேயான கலாச்சார பரிமாற்றத்திற்கான சூழ்நிலையையும் ஏற்படுத்தியது.

2. உச்ச அளவில் சர்வதேச கரியமில வாயு வெளியேற்றம்

சர்வதேச அளவிலான கரியமில வாயு (CO2) வெளியேற்றம் நடப்பு 2022ஆம் ஆண்டில் 4,060 டன் என்ற அளவைத் தொடும் என ஐநா ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019ஆம் ஆண்டில் பதிவான 4,090 டன் என்ற உச்ச அளவைவிட சற்றே குறைவாகும்.

ஐநா 27ஆவது பருவநிலை மாநாடு எகிப்தில் நடைபெற்று வரும் நிலையில், ‘சர்வதேச கார்பன் பட்ஜெட்’ என்ற ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில், ‘நடப்பாண்டில் சர்வதேச கரியமில வாயு வெளியேற்றம் 4,060 டன்னாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதே அளவில் கரியமில வாயு வெளியேற்றம் தொடர்ந்தால், பூமியின் வெப்பநிலையானது தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவைவிட 1.5° டிகிரி செல்சியஸ் அளவை இன்னும் 9 ஆண்டுகளில் எட்டிவிட 50 சதவீத வாய்ப்புள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் சர்வதேச கரியமில வாயு வெளியேற்றத்தில் சீனா (31 சதவீதம்), அமெரிக்கா (14 சதவீதம்), ஐரோப்பிய யூனியன் (8 சதவீதம்) ஆகியவை முன்னிலையில் உள்ளன. இந்தியா 7 சதவீத கரியமில வாயுவை வெளியேற்றியது. நடப்பாண்டில் கரியமில வாயு வெளியேற்றம் சீனாவில் 0.9 சதவீதமும், ஐரோப்பிய யூனியனில் 0.8 சதவீதமும் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் 1.5 சதவீதமும், இந்தியாவில் 6 சதவீதமும், சர்வதேச அளவில் 1.7 சதவீதமும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

COVID தொற்றுப் பரவலைத் தடுக்க கடுமையான பொதுமுடக்க கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருவதால், அங்கு CO2 வெளியேற்றம் குறையும் எனத் தெரிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கரோனா கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதால், மக்களின் போக்குவரத்து அதிகரித்து கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நிலக்கரி, கச்சா எண்ணெய் பயன்பாடு இந்தியாவில் அதிக அளவில் உள்ளதால், கரியமில வாயு வெளியேற்றமும் அதிகரிக்கவுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீத்தேன் வெளியேற்றம்: பைங்குடில் வாயுவான மீத்தேன் வெளியேற்ற அளவைக் கண்டறிவதற்காகப் புதிய தளத்தை ஐநா சுற்றுச்சூழல் திட்ட முகமை அறிமுகப்படுத்தவுள்ளது. அதில், வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் மீத்தேன் வாயுவை செயற்கைக்கோள் அளவீடுகள் வாயிலாகக் கணக்கிட வழிவகுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி, இத்தாலி ஆகியவற்றின் விண்வெளி ஆய்வு மையங்கள் சார்பில் செயல்படும் செயற்கைக் கோள்கள் வாயிலாக மீத்தேன் வெளியேற்றம் கணக்கிடப்படவுள்ளது. தனியார் விண்வெளி ஆய்வு மையங்களின் தரவும் இதற்காகப் பயன்படுத்தப்படும். அதன்மூலம் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசும், தொழில் நிறுவனங்களும் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. ICC தலைவராக மீண்டும் கிரேக் பார்க்லே: ஜெய் ஷாவுக்கு முக்கிய பொறுப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைவராக நியூஸிலாந்தின் கிரேக் பார்க்லே தொடர்ந்து 2ஆவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2020 நவம்பர் முதல் அந்தப் பொறுப்பில் இருந்த பார்க்லே, தற்போது 2024 நவம்பர் வரை மீண்டும் அந்தப் பதவியில் இருப்பார். இதனிடையே, ICCஇன் மிக முக்கியமான பிரிவாக இருக்கும் நிதி மற்றும் வர்த்தக விவகாரங்கள் குழு தலைவராக, BCCI செயலர் ஜெய் ஷா தேர்வாகியுள்ளார். ICCஇன் நிதிரீதியிலான முடிவுகள் அனைத்தும் இக்குழுவால் மேற்கொள்ளப்பட்டு, வாரியத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. ICCஇன் கிரிக்கெட் கமிட்டி தலைவராக, BCCI முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி தொடர்கிறார்.

4. தனிநபர் வருமானம் 33.4% அதிகரிப்பு: நடுவணரசு

‘தேசிய உணவுப்பாதுகாப்புச்சட்டமானது கடந்த 2013-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது முதல் இந்திய மக்கள்தொகையின் தனிநபர் வருமானம் 33.4 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது’ என்று உச்சநீதிமன்றத்தில் நடுவணரசு தெரிவித்தது.

12th & 13th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. ‘Indian Biological Data Center’ (IBDC) has been inaugurated in which state?

A. Uttarakhand

B. Haryana

C. Sikkim

D. Kerala

Answer & Explanation

Answer: B. Haryana

  • Union Minister of state for Science and Technology, Jitendra Singh inaugurated India’s first national repository for life science data ‘Indian Biological Data Center’ (IBDC) at Faridabad, Haryana. IBDC is established at Regional Centre of Biotechnology (RCB), Faridabad with a data ‘Disaster Recovery’ site at National Informatics Centre (NIC), Bhubaneshwar. It has a data storage capacity of about 4 petabytes and the ‘Brahm’ High Performance Computing (HPC) facility.

2. As per the Amendment in Aadhar Rules, supporting documents need to be updated once in how many years?

A. 5

B. 10

C. 20

D. 25

Answer & Explanation

Answer: B. 10

  • As per a recent notification by the Ministry of Electronics and IT, supporting documents need to be updated at least once by Aadhaar holders on completion 10 years from enrolment date. The government has amended Aadhaar regulations and the updation would ensure accuracy of Aadhaar–related information in the Central Identities Data Repository (CIDR).

3. Bihari Puraskar, which was seen in the news, is associated with which field?

A. Administration

B. Sports

C. Literature

D. Culture

Answer & Explanation

Answer: C. Literature

  • The Bihari Puraskar is given every year for an outstanding work published in the last 10 years by a Rajasthani author in Hindi or Rajasthani. Veteran writers Madhu Kankariya and Dr Madhav Hada were awarded the 31st and 32nd Bihari Puraskar. It is one of the three literary awards instituted by KK Birla Foundation in 1991 and is named after the famous poet Bihari.

4. Public Service Broadcasting Day is observed to commemorate the visit of which leader to All India Radio?

A. ‘Netaji’ Subhash Chandra Bose

B. ‘Mahatma’ Gandhiji

C. ‘Annal’ Ambedkar

D. Jawaharlal Nehru

Answer & Explanation

Answer: C. ‘Annal’ Ambedkar

  • Public Service Broadcasting Day is being observed on November 12 every year. The day is celebrated to commemorate the only visit of Mahatma Gandhi to the studio of All India Radio, Delhi in the year 1947. Mahatma Gandhi delivered an address to the displaced people, who had temporarily settled at Kurukshetra in Haryana after partition.

5. Which Indian state observed 10th November 2022 as ‘Millet Day’?

A. Tamil Nadu

B. Odisha

C. Kerala

D. Karnataka

Answer & Explanation

Answer: B. Odisha

  • The Odisha government observed 10th November this year as ‘Millet Day’ in the state. The primary aim of celebrating the day is to promote millets as a highly nutritive and eco–friendly food product. The Odisha government launched the Odisha Millet Mission (OMM) in 2017 and the Chief Minister of Odisha Naveen Patnaik announced Rs.100 crore government support under OMM in 2019–20.

6. Nallamala forest range, which was seen in the news, is located in which state?

A. Gujarat

B. Andhra Pradesh

C. Sikkim

D. Kerala

Answer & Explanation

Answer: B. Andhra Pradesh

  • The central government has approved construction of an iconic cable stayed–cum–suspension bridge across Krishna River connecting Telangana and Andhra Pradesh. The bridge is set to pass through the picturesque Nallamala forest range, in the Eastern Ghats in Andhra Pradesh. The three–km long bridge will reduce the distance between Hyderabad and Tirupati by 80 km.

7. When is the ‘Police Commemoration Day’ observed in India?

A. October.21

B. November.21

C. December.21

D. January.21

Answer & Explanation

Answer: A. October.21

  • ‘Police Commemoration Day’ is observed on October 21 every year, which commemorates the sacrifices of ten CRPF personnel who lost their lives in the line of duty. On October 21, 1959, ten Indian policemen were killed during an attack by Chinese troops in the Hot Springs region close to Ladakh.

8. Which neighbouring country of India has been removed from FATF Grey List?

A. Sri Lanka

B. Pakistan

C. Myanmar

D. Nepal

Answer & Explanation

Answer: B. Pakistan

  • Financial Action Task Force (FATF) recently announced its decision to remove Pakistan from its Grey list. FATF welcomed Pakistan’s significant progress in improving its anti–money laundering and combating financial terrorism (AML/CFT) regime.

9. Who is the first President to serve for three terms in China?

A. Mao Zedong

B. Hu Jintao

C. Xi Jinping

D. Shinzo Abe

Answer & Explanation

Answer: C. Xi Jinping

  • China’s President Xi Jinping has secured a historic third term as the Communist Party’s leader, creating his place as the country’s most influential ruler since Mao Zedong. Chinese communist revolutionary and founder of the People’s Republic of China, Mao Zedong ruled the country from 1949 to 1959 for two terms. The former President Hu Jintao also ruled for two terms from 2003 to 2013. Xi has been the paramount leader of China since 2012.

10. Aman Sehrawat, who was seen in the news, plays which sports?

A. Wrestling

B. Cricket

C. Hockey

D. Badminton

Answer & Explanation

Answer: A. Wrestling

  • Teenager Aman Sehrawat made history as he became the first Indian wrestler to win a gold medal at the U–23 World Wrestling Championships in Pontevedra, Spain. India finished with six medals – one gold, one silver, and four bronze at the U–23 World Wrestling Championships 2022.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!