Tnpsc

12th & 13th September 2020 Current Affairs in Tamil & English

12th & 13th September 2020 Current Affairs in Tamil & English

12th & 13th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

12th 13th September Tamil Current Affairs 2020

12th 13th September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.இந்தியாவுடன் இணைந்து, ‘இந்தோ-பசிபிக் உத்தி’யை வெளியிட்டுள்ள நாடு எது?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. ஜெர்மனி

இ. இத்தாலி

ஈ. பிரேசில்

 • ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைவராக இருந்துவரும் ஜெர்மனி தனது இந்தோ-பசிபிக் உத்தியை இந்தியாவுடன் இணைந்து வெளியிட்டுள்ளது. ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இவ்வுத்தி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகள் குறித்து, BIMSTEC மற்றும் இந்தியப்பெருங்கடல் விளிம்பில் உள்ள நாடுகளின் கூட்டமைப்பு (IORA) போன்ற அமைப்புகளுடன் உரையாட பரிந்துரைத்துள்ளது.

2.நைனிடாலில் உள்ள ARIES’இன் அறிவியலாளர்கள், பிற நகர்ப்புற பகுதிகளுடன் ஒப்பிடும்போது எந்த நகரத்தின் மீது ஓசோன் படலத்தின் செறிவு மிகவும் குறைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்?

அ. சிம்லா

ஆ. கெளகாத்தி

இ. லே

ஈ. கேங்டோக்

 • நைனிடாலில் அமைந்துள்ள ஆரியபட்டா கூர்நோக்கு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ARIES) அறிவியலாளர்கள், பிற நகர்ப்புற பகுதிகளுடன் ஒப்பிடும்போது கெளகாத்தி நகரத்தின்மீது ஓசோன் (O3) படலத்தின் செறிவு மிகவும் குறைந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ARIES என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்கீழியங்கும் தன்னாட்சிபெற்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனமாகும்.
 • இந்தக்குழு, பிரம்மபுத்திரா ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதிக்கு அருகிலுள்ள மேற்பரப்பு ஓசோனை மதிப்பீடு செய்து, அதனை இந்தியாவின் பிற நகர்ப்புறப்பகுதிகளுடன் ஒப்பிடும்போது, கெளகாத்தியில் ஓசோன் மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளது.

3.இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்படும் எந்த வகை கப்பலை வாங்கவோ / வாடகைக்கு எடுக்கவோ அனைத்து முதன்மை துறைமுகங்களுக்கும், மத்திய கப்பல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது?

அ. நீர்மூழ்கிக்கப்பல்

ஆ. இழுவைப்படகு

இ. எண்ணெய்க்கப்பல்

ஈ. படகு

 • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இழுவைப் படகுகளை மட்டுமே கொள்முதல் செய்ய அல்லது பயன்படுத்த அனைத்து முக்கியத் துறைமுகங்களையும் மத்திய கப்பல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
 • முதன்மை துறைமுகங்களால் செய்யப்படும் அனைத்து கொள்முதல்களும் திருத்தப்பட்ட, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ உத்தரவின்படிதான் இனி இருக்கும். இந்திய கப்பல் கட்டும் தொழிலை ஊக்கப்படுத்துவ -தை நோக்கமாகக்கொண்டுள்ள கப்பல் அமைச்சகம், கப்பல் கட்டுதலை இந்தியாவில் மேற்கொள்ள முன்னணி நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

4. ‘தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. UNEP

ஆ. FAO

இ. UNDP

ஈ. UNESCO

 • ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) ‘தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. உணவு இழப்பு மற்றும் கழிவுப்பிரச்சனைக்கு தீர்வு காண பதினாறு வழிகளை இவ்வறிக்கை அடையாளங்காட்டுகிறது. இவ்வம்சங்கள் தேசிய காலநிலை திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், இதனால் உணவு முறைகளிலிருந்து வரும் ‘தணிப்பு மற்றும் தழுவல் பங்களிப்புகள்’ 25 சதவீதம் மேம்படுத்தப்படலாம் என்றும் அது அறிவுறுத்துகிறது.

5.எதிர்கால வணிகக்குழுவை அறிமுகப்படுத்தியுள்ள இந்திய வர்த்தக சங்கம் எது?

அ. ASSOCHAM

ஆ. CII

இ. CDAC

ஈ. NASSCOM

 • இந்திய தொழிற்துறை கூட்டமைப்பானது (CII) கடந்த சில ஆண்டுகளில் தொடங்கப்பட்ட புதிய வணிக -ங்களுக்கு ஆதரவாக, “எதிர்கால வணிகக்குழு” என்றவொரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இம்முயற்சி தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையுடன் இணைந்து ‘எதிர்கால வணிகங்களுக்கான தேசிய உத்தி’யை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்முயற்சி புதிய வளர்ச்சி வாய்ப்புகளை இனங்கண்டு, பன்னாட்டு உறவுகளை நிறுவ உதவும்.

6.தில்லி IIT’இன் அடைவிலுள்ள, ‘சக்ர்’ என்ற துளிர் நிறுவனம் உருவாக்கியுள்ள, N95 தூய்மையாக்கும் கருவியின் பெயர் என்ன?

அ. Chakr DeCoV

ஆ. Chakr DeCold

இ. Chakr Disinfect

ஈ. Chakr Clean

 • தில்லி IIT’இன் அடைவிலுள்ள, ‘சக்ர்’ என்ற துளிர் நிறுவனம், N95 முகமறைப்புகளை தூய்மையாக்க, ‘Chakr DeCoV’ என்ற கருவியை உருவாக்கியுள்ளது. இக்கருவி ஒரு பேழை வடிவத்தில் வடிவமைக்க -ப்பட்டுள்ளது. இது, N95 முகமறைப்புகளின் துளைகளை தூய்மையாக்குவதற்கு ஓசோன் வளியைப் பயன்படுத்துகிறது, இதனால் முகமறைப்பின் அனைத்து அடுக்குகளின் முழுமையான தூய்மைப்படுத்த -லை இந்தக் கருவி உறுதி செய்கிறது.

7. 2020-25ஆம் ஆண்டிற்கான தனது புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மகாராஷ்டிரா

இ. கர்நாடகா

ஈ. ஆந்திர பிரதேசம்

 • கர்நாடக மாநில அரசு, 2020-25ஆம் ஆண்டுக்கான தனது புதிய தகவல் தொழினுட்ப கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இப்புதிய கொள்கை, தகவல் தொழினுட்பத்துறையில் மாநிலத்தின் நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய கொள்கையின்மூலம், 1 டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை அடைவதற்கும் 6 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் கர்நாடக மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது.

8.இரண்டாம் உலகப்போரின் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்ட வில்மிங்டன் அமைந்துள்ள நாடு எது?

அ. ஐக்கியப் பேரரசு

ஆ. பிரான்ஸ்

இ. இத்தாலி

ஈ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

 • அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள, ‘வில்மிங்டன்’ – இரண்டாம் உலகப்போரின் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு நகரம் இவ்வாறு அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இரண்டாம் உலகப்போர் முடிவின் 75ஆம் ஆண்டு நிறைவைக்குறிக்கும் விழாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இரண்டாம் உலகப் போரின்போது, வில்மிங்டனில் அமைந்துள்ள வடகரோலினா கப்பல்கட்டும் நிறுவனம், 5 ஆண்டுகளில் 243 கப்பல்களை அமெரிக்காவின் அவசர கப்பல்கட்டும் திட்டத்தின் ஒருபகுதியாக கட்டியது.

9.அண்மையில் வடகொரியாவைத் தாக்கிய சூறாவளியின் பெயரென்ன?

அ. மேசக்

ஆ. காம்பீன்

இ. ஹைஷென்

ஈ. லிசா

 • “மேசக்” (கம்போடியச்சொல்) என்ற ஆற்றல்மிக்க சூறாவளியானது வட கொரியாவைத் தாக்கியதுடன், அப்பகுதியில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கும் காரணமாகியுள்ளது. ஒரு வாரத்திற்குள்ளாக கொரிய தீபகற்பத்தைத் தாக்கிய இரண்டாவது சூறாவளியாகும் இந்த மேசக். பவி என்ற மற்றொரு சக்திவாய்ந்த சூறாவளி, ஆகஸ்ட் கடைசி வாரத்தில், அந்நாட்டில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. தென் கொரியாவின் பிற பிராந்தியங்களிலும் இந்தச் சூறாவளி தாக்கியது.

10. இம்மாதம் நடைபெற்ற BIMSTEC கூட்டம், எந்த நாட்டின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது?

அ. இந்தியா

ஆ. வங்கதேசம்

இ. இலங்கை

ஈ. மியான்மர்

 • இலங்கையின் தலைமையில், BMISTEC’இன் (Bay of Bengal Initiative for Multi-sectoral Technical and Economic Cooperation) ஒரு முக்கிய கூட்டம் மெய்நிகராக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போதான விவாதங்கள், COVID-19 தொற்றின் பல்வேறு சவால்களைக் கையாள அதன் உறுப்புநாடுகளிடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து தனது கவனத்தைச் செலுத்தின. BIMSTEC என்பது இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான் & நேபாளம் ஆகியவற்றின் ஒரு பன்னாட்டுக் குழுமமாகும்.

1. Which country has launched the ‘Indo–Pacific strategy’ with India?

[A] UAE

[B] Germany

[C] Italy

[D] Brazil

 • The current President of the European Union, Germany has launched its Indo–Pacific strategy with India. The strategy launched by the Germany’s Foreign Ministry suggested dialogue with institutions such as Bay of Bengal Initiative for Multi–Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC), and Indian Ocean Rim Association (IORA), in the fields of maritime safety and disaster risk management.

2. The Shipping Ministry has directed all major ports to procure or hire which type of ship, that are only made in India?

[A] Submarine

[B] Tug Boat

[C] Tanker

[D] Ferry

 • The Union Ministry of Shipping has directed all major ports to procure or hire tug boats, that are only made in India. All procurements that are being done by major ports will have to be carried out as per the revised ‘Make in India’ Order. Various initiatives are being taken to promote shipbuilding in India and improve self–reliance.

3. Which organisation has released a report titled ‘Enhancing Nationally Determined Contributions (NDCs)’?

[A] UNEP

[B] FAO

[C] UNDP

[D] UNESCO

 • The United Nations Environment Programme (UNEP) published a report titled ‘Enhancing Nationally Determined Contributions (NDCs)’. The report identifies 16 ways to address the issue of Food loss and waste.
 • It also suggests that these aspects are to be added in National climate plans, so that the ‘Mitigation and adaptation contributions’ from food systems can be improved by 25 percent.

4. Which trade association of India has launched “Future Business Group”?

[A] ASSOCHAM

[B] CII

[C] CDAC

[D] NASSCOM

 • Confederation of Indian Industry (CII) has launched “Future Business Group” initiative to support new businesses launched during the past few years. This initiative aims at creating a ‘National strategy for future businesses’, together with Department for Promotion of Industry and Internal Trade (DPIIT). The initiative will also identify new growth options and help to establish international relations.

5. What is the name of the N 95 decontaminating equipment developed by IIT Delhi incubated start–up “Chakr”?

[A] Chakr DeCoV

[B] Chakr DeCold

[C] Chakr Disinfect

[D] Chakr Clean

 • “Chakr”, an IIT Delhi incubated start–up has developed an equipment named ‘Chakr DeCoV’ to decontaminate N95 masks. The equipment is designed in the shape of a cabinet. It uses ozone gas for cleaning the pores of N95 masks, thus ensuring complete decontamination of all layers of the mask.

6. Which state has approved its new Information Technology Policy for 2020–25?

[A] Uttar Pradesh

[B] Maharashtra

[C] Karnataka

[D] Andhra Pradesh

 • The state Government of Karnataka has approved a new Information Technology (IT) policy 2020–25. The new policy is expected to help the state in retaining and leveraging its position in Information Technology segment.
 • Through the policy, the state aims to achieve 1 trillion–dollar digital economy and create 6 million job opportunities.

7. “Wilmington” which has been declared as World War 2 Heritage City, is located in which country?

[A] UK

[B] France

[C] Italy

[D] USA

 • “Wilmington” in the US state of North Carolina has been declared as the World War 2 Heritage City. It is first of such cities to be announced. This announcement was made by the US President Donald Trump during a ceremony held to mark the 75th anniversary of the end of World War 2. During the WW2, North Carolina Shipbuilding Company situated in Wilmington built 243 ships in 5 years as a part of the USA’s emergency ship building programme.

8. What is the name of the typhoon that hit North Korea recently?

[A] Maysak

[B] Camphene

[C] Haishen

[D] Lisa

 • A powerful Typhoon named “Maysak” (Cambodian word) hit North Korea and has brought heavy rain and floods in the region. Maysak is the second typhoon in a week to hit the Korean peninsula. Another powerful Typhoon named Bavi made a land fall in the country in the last week of August 2020. The typhoon also hit the regions in South Korea.

9. Scientists at ARIES, Nainital have discovered a low concentration of Ozone over which city, compared to other urban regions?

[A] Shimla

[B] Guwahati

[C] Leh

[D] Gangtok

 • A relatively low concentration of Ozone over Guwahati has been discovered by the Scientists at the Aryabhatta Research Institute of Observational Sciences (ARIES), Nainital. ARIES is an autonomous research institute under the Department of Science and Technology (DST).
 • The team has evaluated the near surface ozone in the Brahmaputra River Valley (BRV) and found the Ozone variation in Guwahati, compared to the other urban locations in India.

10. The key BIMSTEC meeting held in September 2020, was organised under the Chairmanship of which country?

[A] India

[B] Bangladesh

[C] Sri Lanka

[D] Myanmar

 • An important meeting of the BIMSTEC (Bay of Bengal Initiative for Multi–sectoral Technical and Economic Cooperation) was held virtually under the chairmanship of Sri Lanka. During the meeting discussions were focussed on ways to expand cooperation among its member nations to deal with various challenges COVID–19. BIMSTEC is a multinational grouping of India, Bangladesh, Myanmar, Sri Lanka, Thailand, Bhutan and Nepal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button