Tnpsc

12th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

12th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

12th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. E9 நாடுகளைச் சார்ந்த கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?

அ) இரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்

ஆ) நிர்மலா சீதாராமன்

இ) நரேந்திர மோடி

ஈ) சஞ்சை தோத்ரே

  • மத்திய கல்வி இணையமைச்சர் சஞ்சை தோத்ரே, E9 நாடுகளின் கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித் -துவப்படுத்தினார். “E9 initiative: Scaling up digital learning to accelerate progress towards Sustainable Development Goal 4” என்பது இக்கூட்டத் -தின் கருப்பொருளாகும்.
  • வங்காளதேசம், பிரேசில், சீனா, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, மெக் -ஸிகோ, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை E9 நாடுகளாகும்.

2. மத்திய சுகாதார அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந் -த சுகாதார தகவல் தளத்தின்கீழ், எத்தனை நோய்களை கண்டறிய இயலும்?

அ) 10

ஆ) 15

இ) 22

ஈ) 33

  • மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன் சமீபத்தில் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தை மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்தார். இந்தத் தகவல் தளத்தின் முந்தைய பதிப்பில் 18 நோய்களை கண்டறியும் வசதியை ஒப்பிடும்போது தற்போது 33 நோய்களைக் கண்டறியும் திறனை இந்தத் தளம் கொண்டுள்ளது.
  • இந்தத் தகவல் தளத்தின் புதிய பதிப்பானது இந்தியாவின் நோய் கண்காணிப்பு திட்டத்திற்கான தரவு உள்ளீடு & நிர்வாகத்தை வழங்கும்.

3. இந்தியாவின் நாற்பத்து எட்டாவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) இரஞ்சன் கோகோய்

ஆ) சரத் அரவிந்த் பாப்டே

இ) தீபக் மிஸ்ரா

ஈ) N V இரமணா

  • இந்திய அரசியலமைப்பின் 124ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட அதிகார -ங்களின்படி, இந்தியாவின் 48ஆவது தலைமை நீதியரசராக நீதியரசர் NV இரமணா அவர்களை இந்தியக்குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். அவர் 2021 ஏப்.24 அன்று இந்திய தலைமை நீதியரசராக பொறுப்பேற்றுக்கொள்வார். அவர், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நீதியரசராக இருந்துவருகிறார். அவர் ஓய்வுபெறுவதற்கு இன்னும் 16 மாதகாலங்கள் உள்ளன.

4. உலகின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி நிறுவனமாக கருதப்ப -டும் லாங்கி கிரீன் எனர்ஜி நிறுவனம் சார்ந்த நாடு எது?

அ) இந்தியா

ஆ) ஜப்பான்

இ) சீனா

ஈ) ஜெர்மனி

  • சீனாவின் லாங்கி பசும் ஆற்றல் தொழினுட்ப நிறுவனமானது உலகின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் சமீபத்தில் ஹைட்ரஜன் சந்தையில் நுழைந்தது. இந்த நிறுவனம் ஜியான் லாங்கி ஹைட்ரஜன் தொழினுட்ப நிறுவனம் என்ற பெயரில் ஓர் இணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. லாங்கி கிரீன் எனர்ஜி தொழினுட்ப நிறுவனத்தின் நிறுவனர் லி செங்குவோவின் இப்புதிய நிறுவனத்திற்கு தலைவராக பணியாற்றுவார்.

5. மும்பையில் அக்டோபர் மாதம் நிகழ்ந்த மின்தடைக்குப் பின்னால், எந்தத் தீம்பொருள் இருப்பதாக கூறப்படுகிறது?

அ) Shadow Pad

ஆ) October Shutdown

இ) Shutdown Oct

ஈ) Blackout Oct

  • மும்பையில் கடந்த அக்டோபர் மாதம் நிகழ்ந்த மின்தடைக்குப் பின்னால் ‘ஷேடோபேட்’ எனக்கூறப்படும் தீம்பொருள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது, கடந்த காலத்திய சீன இணையவெளி தாக்குதல்களுடன் இணை -த்து பேசப்படுகிறது. 2017ஆம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தீம்பொருள் முறையான மென்பொருள் வழங்குநரான NetSarang மென்பொருளின் புதுப்பிப்புகளில் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

6. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, ‘தீர்ப்பாய சீர்திருத்த அவசர ஆணை’யி -ன்படி, மேல்முறையீட்டு அதிகாரிகளின் அதிகாரங்கள் எந்த அமைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளன?

அ) உச்ச நீதிமன்றம்

ஆ) உயர்நீதிமன்றங்கள்

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) அமலாக்க இயக்குநரகம்

  • தீர்ப்பாய சீர்திருத்தங்கள் (சீரமைப்பு மற்றும் சேவை விதிகள்) அவசர ஆணை – 2021’ஐ மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த அவசர ஆணையின்படி, தற்போதுள்ள மேல்முறையீட்டு அதிகாரிகள் மாற்றப்பட்டு, அவர்களின் அதிகாரங்கள் உயர்நீதிமன்றங்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒளிப்பதிவு சட்டம்; பதிப்புரிமை சட்டம்; சுங்க சட்டம்; காப்புரிமை சட்டம்; AAI சட்டம்; வர்த்தக குறியீடுகள் சட்டம்; புவிசார் குறியீடு (பதிவு & பாதுகாப்பு) சட்டம்; தாவர வகைகள் மற்றும் உழவர்கள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் NH (நிலம் மற்றும் போக்குவரத்து) கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகிய சட்டங்கள் இதனுள் அடங்கும்.

7. இரசாயன & உர அமைச்சகமானது எந்த அமைப்புடன் சேர்ந்து வேதி உற்பத்தி தொடர்பான தேசிய கருத்தரங்கத்தை நடத்தியது?

அ) ஆசிய வளர்ச்சி வங்கி

ஆ) UNIDO

இ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ) ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி

  • மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகமானது “வேதியியல் உற்பத்தியின் போட்டித்திறன் மற்றும் நீடித்த தன்மைக்கான சிறந்த உற்பத்தி மற்றும் புத்தாக்கம் குறித்த தேசிய உரையாடலை” ஏற்பாடு செய்தது. ஐநா தொழிற்துறை மேம்பாட்டமைப்பானது (UNIDO) வறுமைக் குறைப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக தொழிற்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
  • இந்தத் தேசிய உரையாடலையும், ‘இந்தியாவில் தூய உற்பத்தி’ (ஸ்வச் உத்யோக்)’இன் கீழ் ஓர் உரையாடலையும் UNIDO ஏற்பாடு செய்தது.

8. “வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பன்னாட்டு விளையாட்டு நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல் 4

ஆ) ஏப்ரல் 6

இ) ஏப்ரல் 8

ஈ) ஏப்ரல் 10

  • 2013ஆம் ஆண்டில் ஐநா அவையின் பொது அவையின் தீர்மானத்திற்குப் பிறகு, ஏப்.6 அன்று உலகெங்கிலும் “வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பன்னாட்டு விளையாட்டு நாள்” அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • நீடித்த வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளின் முன்னேற்றத்திற்கு விளையாட்டுகளின் நேர்மறையான பங்களிப்பைக் கொண்டாடுவதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. கொள்ளைநோயிலிருந்து மீள்வது மற்றும் அம்மீட்டெடுப்பில் சமத்துவத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றைச் சுற்றி இந்த ஆண்டின் கருப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.

9. அண்மையில் அதன் வணிக ரீதியிலான நடவடிக்கையைத் தொ -டங்கிய பராகா அணுமின் நிலையம் அமைந்துள்ள நாடு எது?

அ) கத்தார்

ஆ) ஐக்கிய அரபு அமீரகம்

இ) செளதி அரேபியா

ஈ) குவைத்

  • ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள பராகா அணுமின் நிலையம் அரபு உலகின் முதல் அணுமின்னுற்பத்தி நிலையமாகும். அபுதாபியில் அமைந்துள்ள இவ்வணுமின்னுற்பத்தி நிலையம் அண்மையில் அதன் வணிக ரீதியிலான நடவடிக்கைகளைத்தொடங்கியது.
  • இந்த அ ணுமின்னுற்பத்தி நிலையத்தின் முதல் மெகாவாட் தேசிய மின் கட்டமைப்பில் நுழைந்துள்ளது. இது 2019ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

10. 2021 உலக சுகாதார நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Road safety

ஆ) Support Nurses and Midwives

இ) Building a Fairer and Healthier World for Everyone

ஈ) Food safety

  • உலக சுகாதார நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.7 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது, கடந்த 1948ஆம் ஆண்டில் உலக நலவாழ்வு அமைப்பு (WHO) நிறுவப்பட்டதை குறிக்கிறது. இந்தச் சிறப்பு நாள், உலகெங்குமுள்ள மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட சுகாதாரத்தலைப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • “Building a Fairer & Healthier World for Everyone” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு

கரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் பரவலின் 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது.

இந்த மருந்து எளிதில் கிடைக்கும் வகையில், உள்நாட்டில் ரெம்டெசிவர் ஊசி மருந்து தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், ரெம்டெசிவர் இருப்பு நிலவரம், விநியோகிஸ்தர்கள் விவரங்களை தங்கள் இணையதள -த்தில் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த இருப்பு விவரங்களை மருந்து ஆய்வாளர்கள் மற்றும் இதர அதிகாரிகள் சரிபார்த்து, முறைகேடுகள் நடந்ததால் மற்றும் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் இது குறித்து, அந்தந்த மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் மருந்து ஆய்வாளர்களுடன் ஆலோசிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID தொற்றாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ரெம்டெசிவிர் ஊசி மருந்து முக்கிய இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2. தமிழகத்தில் தடுப்பூசி சிறப்பு செயல் திட்டம் தொடக்கம்

தமிழ்நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையிலான சிறப்பு செயல் திட்டம் ஏப்.11 அன்று தொடங்கியது. அதன்படி, நாள்தோறும் இரண்டு இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 5000’க்கு மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.

முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என, 5 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவர்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இதுவரை 37 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. புதுமை தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முதலிடம்

மத்திய அரசு உதவியுடன் உயர்கல்வி நிறுவனங்களில் செயல்பட்டுவரும் புதுமை கண்டுபிடிப்புத் தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என சென்னை IIT புதுமை தொழில் ஊக்குவிப்பு மைய இணைத்தலைவர் பேராசிரியர் அசோக் சூஞ்சூன்வாலா கூறினார்.

4. வங்கதேசத்தில் ராணுவத் தளபதிகள் மாநாடு: எம் எம் நரவணே பங்கேற்பு

வங்கதேசத்தில் நடைபெற்ற இராணுவத் தளபதிகள் மாநாட்டில் இந்திய இராணுவத் தலைமைத்தளபதி எம் எம் நரவணே பங்கேற்றார். பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெற்றதன் ஐம்பதாவது ஆண்டு விழா, வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு பிறந்தநாள்விழா ஆகியவை வங்கதேசத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாக்களில் பங்கேற்பதற்காக, வங்கதேச இராணுவத் தலைமைத் தளபதி அஜீஸ் அகமதுவின் அழைப்பின்பேரில் எம் எம் நரவணே 5 நாள் அரசு முறைப் பயணமாக அந்நாட்டுக்குச் சென்றுள்ளார்.

விழாவின் ஒருபகுதியாக நடைபெற்ற மாநாட்டில் ‘சர்வதேச மோதல்களின் மாறும் தன்மை: ஐநா அமைதிகாப்புப்படையின் பங்கு’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். விழாவின் மற்றொரு பகுதியாக, இந்தியா, வங்க தேசம், இலங்கை, பூடான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, சவூதி அரேபியா, குவைத், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்றுள்ளனர். அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்காக நடத்தப்படும் இந்த கூட்டு இராணுவப்பயிற்சி திங்கள் கிழமை நிறைவடைகிறது.

5. நாடு முழுவதும் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் – 4 நாள் கரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கியது: தகுதியுள்ள அனைவரும் போட்டுக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

நாடு முழுவதும் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், 4 நாள் கரோனா தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கியது. தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதாரம், மருத்துவ துறையில் பணியாற்றுபவர் களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிப்.2 முதல் மக்கள் சேவையில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டது. மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கும், 45 வயது மேற்பட்டவர்களில் நோய் பாதிப்புகள் உள்ளவர்களுக்கும், அதைத் தொடர்ந்து ஏப்.1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

சமூக ஆர்வலர் ஜோதிபா புலே பிறந்தநாளான ஏப்ரல் 11 முதல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்.14 வரை கரோனா தடுப்பூசி திருவிழா நடக்கும் எனவும் பிரதமர் தெரிவித்திருந்தார். நாட்டு மக்களிடையே தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.

மேலும் 5 மருந்துகள்

இந்தியாவில் இப்போது சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய 2 கரோனா தடுப்பூசிகள் கடந்த ஜனவரி முதல் பயன்பாட்டில் உள்ளன. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. வரும் அக்டோபர் மாதத்துக்குள் மேலும் 5 தடுப்பு மருந்து களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ரஷ்யாவின், ஸ்புட்னிக் – வி, பயோ – இ, நோவேக்ஸ், ஜைடஸ் கடிலா, இன்ட்ராநேசல் ஆகிய 5 கரோனா தடுப்பு மருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரவித்துள்ளன. குறிப்பாக ஸ்புட்னிக்-வி மருந்துக்கு அடுத்த 10 நாட்களில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

ஸ்புட்னிக்-வி வரும் ஜூன் மாதத்திலும், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பயோ-இ மற்றும் ஜைடஸ் கடிலா ஆகியவை ஆகஸ்ட் மாதத்திலும், நோவாவேக்ஸ் செப்டம்பரிலும், இன்ட்ராநேசல் அக்டோபரிலும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாளில் வழங்கப்படும் தடுப்பூசி எண்ணிக்கை அளவிலும் இந் தியா முன்னிலை வகிக்கிறது. இந்தியா வில் ஒரு நாளைக்கு 38 லட்சத்து 93,288 டோஸ் தடுப்பூசி விநியோகம் செய்யப்படு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெம்டெசிவர் ஏற்றுமதிக்கு தடை

கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ரெம்டெசிவர் ஆக்டிவ் பார்மசூடிகல்ஸ் மூலப்பொருள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு நேற்று தடை விதித்துள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ரெம்டெசிவர் மருத்து செலுத்தப்படுகிறது. தற்போது தொற்று அதிகரித்து வரும் சூழலில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் இருப்பில் வைத்திருக்கும் நோக்கில் இம்மருந்து ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள் ளது. இந்தியாவில் ஏழு நிறுவனங்கள் ரெம்டெசிவர் ஊசி மருந்தை தயாரிப்பதற்கு அமெரிக்க நிறுவனமான கிலீட் சர்வீசஸ் நிறுவனத்திடம் அனுமதி பெற்று ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

இந்நிறுவனங்கள் மாதத்துக்கு 38.80 லட்சம் தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் திறன்கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

6. முதியோர், மனநலம் பாதித்தவர்கள், ஆதரவற்ற சிறுவர், சிறுமிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ‘காவல் கரங்கள்’ திட்டம்: சென்னை காவல் துறை விரைவில் தொடக்கம்

சாலையோரம் சுற்றித்திரியும் முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், யாசகம் வாங்கும் சிறுவர், சிறுமிகள் என ஆதரவற்ற நிலைமையில் உள்ளவர்களை தேடிக்கண்டுபிடித்து மறுவாழ்வளிக்கும் ‘காவல் கரங்கள்’ திட்டத்தை சென்னை காவல் துறை விரைவில் தொடங்க உள்ளது.

பொதுவாக, சட்டம், ஒழுங்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தவிர சமூக நலன் சார்ந்த சேவைகளிலும் போலீஸார் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, தேர்தலுக்கு பிறகு முதல் கட்டமாக ‘காவல் கரங்கள்’ எனும் திட்டத்தை சென்னை போலீஸார் தொடங்கவுள்ளனர். இத்திட்டத்தின்படி, சாலையோ -ரம் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவுள்ளனர். உடல் நலிவுற்று சாலையோரம் சுற்றித் திரியும் முதியவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது அல்லது காப்பகத்தில் பாதுகாப்பாக சேர்த்துவிடுவது போன்ற பணிகளையும் மேற்கொள்ளவுள்ளனர். உடல் நலிவுற்று படுத்த படுக்கையாக சாலையோரம் அல்லது வீடுகளில் இருப்பவர்களை மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

7. மின்தடை ஏற்படுவதை தடுக்க மின் கம்பங்களில் புதிய கருவி பொருத்த மின்வாரியம் திட்டம்

அதிக மின்-இணைப்பு உள்ள மின்கம்பங்களில் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்படுவதைத் தடுக்க, “அலுமினியம் பஸ்பர்” என்ற புதிய கருவியை பொருத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2 கோடி வீட்டு மின் இணைப்புகள், 35 லட்சம் வணிக நிறுவன மின் இணைப்புகள், 7 லட்சம் தொழிற்சாலை மின்-இணைப்புகள், 24 லட்சம் விவசாய மின் இணைப்புக -ள், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள் என மொத்தம் 2.90 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் உள்ளன.

இதன்மூலம், மின்கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதை உடனடி யாக சரிசெய்ய முடிவதோடு, மின்தடை ஏற்படுவதும் குறையும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

8. இந்திய தொழிலதிபர் யூசுப் அலிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபரும் லூலூ குழுமத்தின் தலைவருமான யூசுப் அலிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவுயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டுள்ளது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இவ்விருதை நேற்று முன்தினம் வழங்கி கெளரவித்தார். கேரளாவைச் சார்ந்த தொழிலதிபரான யூசுப் அலி (65), அபுதாபியில் வர்த்தகம் சார்ந்த பணிகள் மற்றும் தொழில்துறையில் மிக முக்கியமான பங்களிப்பை ஏற்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

9. 2 மணி நேரத்துக்குள் 36 புத்தகங்கள் படித்து 5 வயது சிறுமி உலக சாதனை

அபுதாபியில் வசித்து வரும் 5 வயதான இந்திய-அமெரிக்க சிறுமி 2 மணி நேரத்துக்குள் 36 புத்தகங்களை படித்து உலக சாதனை படைத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்த இந்திய -அமெரிக்க சிறுமி கியாரா கவுர். 5 வயதான இச்சிறுமி தற்போது பெற்றோருடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார்.

இந்த சிறுவயதில் 36 புத்தகங்களை 1 மணி 45 நிமிடங்களில் படித்து முடித்து உலக சாதனை செய்துள்ளார். இந்த சாதனைக்காக லண்டன் உலக சாதனை புத்தகத்திலும் ஆசியா சாதனைப் புத்தகத்திலும் கியாரா கவுர் இடம் பிடித்துள்ளார். கடந்த பிப்.13ஆம் தேதியன்று 36 புத்தகங்களை இடைவிடாமல் 105 நிமிடங்களில் படித்ததற்காக ‘குழந்தை மேதை’ என்று இலண்டன் உலக சாதனை நூல் கியாரா கவுரை பாராட்டி உள்ளது.

1. Who represented India in the consultation meeting of Education Ministers of E9 countries?

A) Ramesh Pokhriyal ‘Nishank’

B) Nirmala Sitharaman

C) Narendra Modi

D) Sanjay Dhotre

  • The Union Minister of state for Education – Sanjay Dhotre represented India in the consultation meeting of Education Ministers of E9 countries. The theme of the meeting was “E9 initiative: Scaling up digital learning to accelerate progress towards Sustainable Development Goal 4”.
  • E9 countries consist of Bangladesh, Brazil, China, Egypt, India, Indonesia, Mexico, Nigeria, and Pakistan.

2. Under the Integrated Health Information Platform launched by the Health Ministry, how many diseases can be tracked?

A) 10

B) 15

C) 20

D) 33

  • The Union Minister of Health and Family Welfare – Dr Harsh Vardhan has launched the Integrated Health Information Platform (IHIP) in a virtual mode, recently. This platform is capable of tracking 33 diseases as compared to 18 diseases in the earlier version of the platform.
  • The new version of IHIP will house the data entry and management for India’s disease surveillance program.

3. Who has been appointed as the 48th Chief Justice of India?

A) Ranjan Gogoi

B) Sharad Arvind Bobde

E) Dipak Mishra

D) N V Ramana

  • The President of India has appointed Justice NV Ramana as the 48th Chief Justice of India, in accordance with the powers conferred under Article 124 of Indian Constitution. He will assume charge as the Chief Justice of India on 24th April 2021.
  • He has been a judge of the Supreme Court since the year 2014. He will have a term of 16 months before his retirement.

4. Longi Green Energy, which is considered to be the world’s biggest solar company, belongs to which country?

A) India

B) Japan

C) China

D) Germany

  • Longi Green Energy Technology Co., of China is the world’s biggest solar energy company. The company has entered into the hydrogen market recently. The company has formed a sister concern named Xi’an Longi Hydrogen Technology Co and the founder of Longi Green Energy Technology Co – Li Zhenguo, will serve as the chairman for the new entity.

5. Which malware is alleged to be behind the October blackout in Mumbai?

A) Shadow Pad B) October Shutdown

C) Shutdown Oct D) Blackout Oct

  • ShadowPad is a malware that is alleged to be behind the October blackout in Mumbai. It has been linked to Chinese cyberattacks in the past too. It was discovered in the year 2017. It was found injected into software updates by NetSarang, a legitimate software provider.

6. As per the ‘Tribunals Reforms Ordinance’ promulgated recently, the powers of Appellate authorities are vested with which body?

A) Supreme Court

B) High Courts

C) Home Affairs Ministry

D) Enforcement Directorate

  • The Centre promulgated the Tribunal Reforms (Rationalisation and Conditions of Service) Ordinance 2021 recently. As per the ordinance, existing appellate authorities are replaced and their powers are vested High Courts.
  • The laws covered are Cinematograph Act; Copyright Act; Customs Act; Patents Act; AAI Act; Trade Marks Act; GI of Goods (registration and protection) Act; Protection of Plant Varieties and Farmers Rights Act and Control of NH (land and traffic) Act.

7. Ministry of Chemicals & Fertilisers organised a National Dialogue on Chemicals Manufacturing along with which organisation?

A) ADB

B) UNIDO

C) IMF

D) AIIB

  • The Union Ministry of Chemicals and Fertilisers organised a “National Dialogue on ‘Manufacturing Excellence and Innovation for Competitiveness & Sustainability of Chemicals Manufacturing’.
  • The United Nations Industrial Development Organization (UNIDO) promotes industrial development for poverty reduction and environmental sustainability. UNIDO jointly organised this national dialogue as well as a dialogue under ‘Clean Manufacturing in India’ (Swachh Udyog).

8. When is the “International Day of Sport for Development and Peace” observed?

A) April 4

B) April 6

C) April 8

D) April 10

  • “International Day of Sport for Development and Peace” is observed across the world on April 6, after the United Nations General Assembly resolution in 2013. It is marked to celebrate the positive contribution of sports towards sustainable development and advancement of human rights. This year’s theme is around recovery from the pandemic and the importance of equity in that recovery.

9. The Barakah nuclear power plant, which started its commercial operation recently, is situated in which country?

A) Qatar

B) UAE

C) Saudi Arabia

D) Kuwait

  • The Barakah nuclear power plant in the United Arab Emirates is the first nuclear power station in the Arab world. The nuclear power plant located in Abu Dhabi started commercial operations recently. As per the country’s leaders, the first megawatt from the nuclear plant has entered the national power grid. It was opened in the year 2019.

10. What is the theme of the World Health Day 2021?

A) Road safety

B) Support Nurses and Midwives

C) Building a Fairer and Healthier World for Everyone

D) Food safety

  • World Health Day is celebrated across the world annually on April 7. It marks the anniversary of the founding of the World Health Organisation (WHO) in 1948. It aims to create awareness on a specific health topic of concern to people all over the world. The theme for this year is “Building a fairer, healthier world”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!